Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 7 2

கீழே வந்த துர்காவிற்கு வேலைகள் சரியாக இருந்தது. அவளின் போன் ரூம் உள்ளிருந்து அழைக்கவும், எடுக்க சென்றால். கீர்த்தி தான் அழைத்திருந்தான்.

“அக்கா ரெடியா இரு ஹோஸ்பிட்டல் போலாம், 10 மணிக்கு நான் வரேன்” என்றான்.

“ம்…. சரி” என சொல்லி போனை வைத்தவள். வெளியே சென்றுவிட்டாள்

எல்லோரும் காலை உணவு உண்டு முடித்து. அகில் நித்யா பாமிலி மேட்டூர் கிளம்ப, வைதேகி, தான் இங்கேயே இருப்பதாக சொல்லிவிட.



Advertisement

ராஜேஷ் மதியம் போல் ஹைதராபாத் கிளம்புவதாக ஏற்பாடு. கீர்த்தி வந்தான் சரியான டைமிற்கு.

“வாப்பா, சாப்பிடு” என்றார் வைதேகி.

“இல்லத்தை, சாப்பிட்டு தான் வந்தேன்.” என்றான் அமைதியாக.

Advertisement

என்ன என வைதேகி பார்த்திருந்தார். ஒன்றும் கேட்கவில்லை அவனிடம், அவர் பார்வையை உணர்ந்தவன் தானாகவே “அக்காவா ஹோஸ்பிட்டல் கூட்டிட்டி போக வந்தேன். ரெடி யாக்கா போலாமா… அப்பா தான், கடைக்கு போய் இருக்கார். பத்திரிக்கை வைக்கப் போகணும், சீக்கிரம் வான்னு சொன்னார்” என்றான். வைதேகியிடம் ஆரம்பித்து துர்க்காவிடம் முடித்தான்.

Advertisement

“இருடா வரேன் “ என கூறி துர்கா கிளம்பச் செல்ல.

வைதேகி “இரும்மா, உம் புருஷனோட போ துர்கா, எதுக்கு தம்பிய தொந்தரவு செய்யற, நான் சொல்றேன் அவன்கிட்ட” என்க.

அக்கா, தம்பி இருவருக்கும் வேர்த்தது. அமைதியாக அமர்ந்திருந்தனர். மகி இறங்கி வரவும். துர்கா உள்ளே சென்றுவிட்டாள்.

Advertisement

மகி “வா கீர்த்தி, சாப்பிட்டியா…” என்றான்.

“ஆச்சி, பாவா” என்றான் ஒட்டாத குரலில்.

மகியை பார்த்த வைதேகி “போப்பா, போய் சாப்பிடு” என்றார். மகி இன்னும் கீர்த்தியையே பார்த்துக் கொண்டிருக்க.

அவன் என்ன செய்வது என தெரியாமல் அமர்ந்திருந்தான். துர்கா தான் “அத்தை, நீங்க இவருக்கு பரிமாறுங்க, நாங்க சீக்கிரமா போயிட்டு வந்திடறோம்.” என சொல்லியவாறே உள்ளே செல்ல போக.

வைதேகி “அதென்ன, நான் சொல்ல சொல்ல கேட்கறதில்லை, கீர்த்தி நீ கிளம்புப்பா…. மகி நீ, உன் பொண்டாட்டிய கூட்டிட்டு ஹோஸ்பிட்டல் போய்ட்டு வா” என்றார்.

அங்கு சிறு அமைதி.

மகி, துர்காவை முறைத்துக் கொண்டிருந்தான். தன்னிடம் இப்படி தன் அம்மா சொல்லியதே இல்லை இதுவரை, என மகி பார்த்திருக்க. துர்காவிற்கு ‘அய்யோ இவர் என்ன சொல்வாரோ’ என பார்த்திருக்க.

வைதேகியே திரும்பவும் “துர்கா, காபி போடு கீர்த்திக்கு” என கூற அதற்கு மேல் அங்கு இருக்க விரும்பாதவனாக கீர்த்தி கிளம்பினான்.

மகி எதுவும் பேசாமல் உணவு உண்ண செல்ல. துர்கா பின்னோடு சென்றாள்.

வைதேகி “நீ போய் கிளம்பு, நான் அவனிற்கு பார்க்கிறேன் “ என்றார்.

மகி, துர்காவை திரும்பவும் முறைக்க… என்ன செய்வது என தெரியாமல் துர்கா நின்று கொண்டிருந்தாள்.

துர்காவிற்கு தன்னை நினைத்தே சங்கடமானது. இப்படி ஒவ்வொருவரும் சொல்லி அவன் செய்வதென்றால் என்ன நிலை என்னுடையது என கண்ணில் நீர் வர. அதை உள்ளிழுத்துக் கொண்டிருந்தாள் அவள்.

“அம்மா நீங்க போய்ட்டு வாங்க, இல்ல ராஜேஷ் இங்கு தானே இருக்கிறான். அவனை போக சொல்லுங்க. அவ தானே கிழிச்சிக்கிட்டா, என்ன கேட்டா செஞ்சா…. எனக்கு வேலை இருக்கு, நானெல்லாம் போக முடியாது.” என்றான்.

“அதென்ன, உன்னால முடியாது. அடிக்க மட்டும் முடியுதோ. நீ, உன் பொண்டாட்டிய கூட்டி போனா போ, இல்லைனா விடு, எங்களுகென்ன…. “ என சொல்லியவர், பரிமாறக் கொண்டிருந்தவர் அப்படியே ஹாலில் சென்று அமர்ந்து கொண்டார். துர்காதான் மீதி பார்க்கும் படி ஆயிற்று.

அதற்கும் காய்ந்தான் “என்ன எல்லோரையும் பேச வைக்கிறியா, இத்தனை நாள், நானா கூட வந்தேன். புதுசா எல்லாம் நடந்துக்கிறீங்க.” என பேசிக் கொண்டே உண்டவன். கிளம்பிவிட்டான். யாரையும் திரும்பி கூட பார்க்கவில்லை.

கண்ணின் ஓரத்தில் நின்ற கண்ணீர் விழி தாண்டியது துர்காவிற்கு. காரணங்கள் எதுவானாலும், அவனிற்கு தன்னைப் பிடிக்கவில்லை என்பதை இப்படி ஒவ்வொரு செயலிலும் உணர்த்தும் அவனை என்ன செய்வது என புரியவில்லை அவளிற்கு.

வைதேகியும் அவளின் நிலை பார்த்து அமைதியாகவே இருந்தார். மதியம் போல் ராஜேஷ் கிளம்பினான். அப்போது வரை மகியும் வீடு வரவில்லை.

குழந்தைகள் இருவரும் இருந்ததால், நேரம் சென்றது. அவர்களும் 8:30 மணிக்கு உறங்கவும், வைதேகியும் உறங்கிவிட்டார். மகி 10 மணிக்கு தான் வந்தான்.

மகி ரெப்ரஷ் செய்து வந்து தானே உணவு போட்டுக் கொண்டு உண்ண தொடங்கினான். துர்கா அருகில் வந்து நின்றாள், போன் பேசிக்கொண்டே உண்டு விட்டு எழுந்தான்.

அவன் சென்றதும், துர்கா உண்ண தொடங்கினாள், இறங்கவில்லை உணவு… அப்போது தான் வெளியே சென்றவன் போன் பேசி முடித்து வர, துர்காவை பார்த்து “ஹோஸ்பிட்டல் போயிட்டு வந்திட்டியா” என்றான்.

ஒன்றும் புரியவில்லை அவளிற்கு, ஈஷ்வரா தன்னிடம் கேட்பது, என அவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே “இல்ல நாளைக்கு தான் போகணும்” என்றாள்.

“இப்போ போலாமா….. டாக்டர் இருப்பாங்களா…” என்றான். ஏதோ இவளிடம் கேட்டு தான் எல்லாம் செய்வது போல்.

துர்காவிற்கு, இல்லையென்றாலும் போன் செய்தாவது வர சொல்லலாம் என தான் தோன்றியது.  ஆனாலும், “தெரியல, டியூட்டி டாக்டர் யாராவது இருப்பாங்க…” என்க.

“சரி கிளம்பு, போய் பார்த்துக்கலாம்.” என்றான்.

இவள் தயங்கி தயங்கி “இல்ல இப்போ, எப்படி பசங்க தூங்கறாங்க, நான் காலையில் போய்க்கிறேன்.” என்க.

ஏதோ யோசித்தவன் “இல்ல, இப்போ கிளம்பு, பெரியம்மா எங்க” என்றவன். அவர், அவரின் ரூமில் அமர்ந்து டிவி பாத்த்துக் கொண்டிருந்தார்.

அவரிடம் சொல்லி, பிள்ளைகள் அறையில் வந்து படுக்க செய்தவன். துர்க்காவுடன் கிளம்பினான்.

அவன் பெரியம்மா “நீயா ப்பா, போற” என கிட்ட தட்ட 10 தரம் கேட்டிருப்பார்… துர்காவிற்கு கேட்கவே வேண்டாம். இன்னும் 10 அடி கூட வாங்கும் தெம்பு வந்தது அவளிடம்.

அமைதியாக காரில் சென்றனர். அங்கிருந்த டியூட்டி டாக்டர், நர்ஸ் எல்லோருக்கும் இவர்களை தெரியும் ஆதலால், பார்த்து டிரெஸ்ஸிங் செய்து அனுப்பினார்.

வரும் வழி முழுவதும் அவனையே திரும்பி, திரும்பி பார்த்து வந்தாள். நிலை கொள்ளவில்லை துர்காவிற்கு. எனக்காக வந்தானா, என்னையா அழைத்து சென்றான் என மிதந்து கொண்டே வந்தாள் துர்கா.

தன் வீட்டின் அருகே வரவும், ஒரு மரத்தின் அருகே நிறுத்தியவன், “ஸ்ரீ “ என்றான். இவன் இங்கு நிறுத்தவும் என்ன என பார்க்க, இலகுவாக இருந்தான் மகி….. எப்போதும் அணியும் வேட்டி இல்லாமல், நைட் பண்ட அண்ட் காலரில்லா பனியனில் அமர்ந்திருந்தான்.

துர்காவிற்கு அவன் அப்படி அழைக்கவும்.. இதமாக இருந்தது.. சொர்க்கத்தின் பக்கத்தில் இருப்பதாக தோன்றியது அவளுக்கு. சும்மா சும்மாவெல்லாம் அப்படி அழைக்கமாட்டான். எப்போதாவது, மிகவும் அரிதான் அழைப்பு அது.

அந்த அழைப்பில் மயங்கி இவளும் ஒரு மையலுடன் அவனையே பார்த்திருக்க., மகியால் அவளை பார்க்கவே முடியவில்லை.

காலை போல் இப்போதும் முகத்தை திருப்பிக் கொண்டான்.

வீழ்ந்தே போனது துர்காவின் பெண்மை. அவன் முக திருப்புதலில், அந்த ஒரு நொடியில் எல்லாம் நினைவு வந்தது அவளிற்கு. இவன் என்னிடம் நேசம் யாசிக்கவில்லை, விளகளை தான் யாசிக்கிறான், என தெளிந்தது.

கணவன், என்ற கண்கொண்டு அவன் ‘தன்னை பார்க்க விரும்பவில்லை’ என தனது மனதிற்கு தானே சொல்லிக் கொண்டாள்.

பிறகு குரலில் வரவழைத்துக் கொண்ட உறுதியுடன் “என்னங்க” என்றாள்.

இப்போது இவனிற்கு தான் பேச சற்று நேரம் எடுத்தது. “இல்ல, துர்கா நீ கொஞ்சம் தள்ளி இரேன். இந்த வருஷம் மட்டும். நான் சொல்றத ஏன் புரிஞ்சிக்க மாட்டேன்கிறாய். கொஞ்ச நாள்…” என ஏதோ சொல்ல வர இறங்கி விட்டாள் துர்கா. கிடு கிடுவென நடந்தே விட்டாள் அவள், தன் வீடு நோக்கி.

மகியும் கோவம் கொண்டு காரை கிளப்பிக் கொண்டு அவளிற்கு முன்னாள் சென்று விட்டிருந்தான். நிர்கவெல்லாம் இல்லை அவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!