Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ambodu Vaa Nila

Ambodu Vaa Nila 7 1

அத்தியாயம்                7

அதிகாலை, கதிரவன் எப்போதும் போல் நேற்றைய சோர்வுகள், தயக்கங்கள், கலக்கங்கள் என அனனைத்துக் கெடுதலையும் தனக்குள் ஈர்த்து கொண்டு. புது நம்பிக்கை என்னும் தனது பொன் ஒலியால் பூமியை நிறைத்துக் கொண்டிருந்தான்.

மகி இப்போது, அந்த மாய சக்தியின் முன் தான் நின்றிருந்தான். சூர்ய நமஸ்காரம் செய்துக் கொண்டிருந்தான்.  எந்த சலனமும் இல்லை…. அவனிடம்.



Advertisement

நேற்று இரவு உறக்கம் என்பதே இல்லைதான் அவனிடம், ஏதோ யோசனை. தன் மனையாள் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தான். என் தந்தை போல், நான் இல்லையோ என தான் நினைத்திருந்தான், மற்றவை எல்லாம் அவன் நினைத்தேப் பார்க்கவில்லை.

என் மகனிற்கு நான் எதுவுமே செய்யவில்லையோ… என் தந்தை என்னை வளர்த்தது போல் நான் அவனை பார்க்கவில்லையோ, இப்படி அவள் சொல்லும் படி ஆகிவிட்டதே என தான் தோன்றியது.

யோசனை, யோசனை மட்டுமே அவனிடம். விடியல் காலை முன்று மணி வரை, ‘புகையும், சிந்தனையுமாக’ மொட்ட மாடியில் நடையாக நடந்தான்.

Advertisement

அதன் பின் தான், உறக்கம் என்பதே வந்தது அவனிற்கு. இதோ இப்போது 5:30க்கெல்லாம் எழுந்து கொண்டான்.

Advertisement

துர்கா… இப்போதெல்லாம் தூக்கம் என்பது ஏதோ வருகிறது என்னும் நிலை. எனவே அவளும் எழுந்துவிட்டாள் அதிகாலையிலேயே, மேலும் அனைவரும் இப்போது இங்கு தான் இருப்பதால் தான், முன்பே எழுந்துவிட்டாள்.

குளித்து பூஜை அறை சென்று விளக்கேற்றி தனக்கு தெரிந்த மகாலக்ஷ்மி அஷ்டகம் மட்டும் சொல்லி கை கூப்பி நின்றிருந்தாள். எவ்வளவு நேரம் என தெரியவில்லை.

பின் தானே சுயநிலைக்கு வந்தவள், வேலாத்தாவை பார்த்து, என்ன செய்வது காலை உணவுக்கு… என சொல்லி விட்டு தனக்கென ஒரு காப்பியை எடுத்துக் கொண்டு, டைனிங் டேபிலில் வந்து அமர்ந்து கொண்டாள்.

Advertisement

பிள்ளைகள் நித்யாவுடன் வரும் அரவம் கேட்டது. மூன்று பேரும் சேர்ந்து நித்யாவை, கெஞ்சிக் கொண்டே வந்தனர். கடைசிக் குட்டி சர்வேஷ் மட்டும் அவளின் இடுப்பில் அமர்ந்து மற்றவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மற்ற இருவரும் மேட்டூரில் ஸ்கூல் செல்வதால், இன்று சேலத்தில் இருப்பதால் இன்று லீவ், எனவே கமலேஷையும் லீவ் எடுக்க வைக்க தான் இந்த கெஞ்சல், நித்யாவிடம்.

நித்யா குழந்தைகளை டைனிங் டேபிள் அழைத்து வந்து அமர வைத்து “ஷ்…. சத்தம் வரக் கூடாது. எல்லோருக்கும் காம்ப்ளான் கொண்டு வருவேன். அதுவரை மூச்சு வெளியே வரக் கூடாது…” என மிரட்டி விட்டு தனது இடுப்பில் இருந்த சர்வேஷையும் டேபிள் மேல் அமரவைத்து விட்டு கிட்சென்னுள் சென்றாள்.

நித்யா உள்ளே சென்றதும் மூவரும் அங்கு இருந்த துர்காவிடம் தங்களது கோரிக்கைகை வைக்க. துர்கா… “சரி போக வேண்டாம்” என ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டாள்.

“ஹே……… ஹே “என ஒரே சத்தம் அங்கு, அண்ணன்களின் சந்தோஷம் பார்த்து, என்னவோ தன் அம்மா சொன்னதால் தான், அண்ணன்கள் சிரிக்கிறார்கள் என புரிந்து சர்வேஷ் தன் அன்னையின் கழுத்தை சுற்றி வளைத்து முத்தம் ஒன்று வைத்தான்.

துர்காவிற்கு கொஞ்சம் மனது லேசானது போல் இருந்தது. டேபிள் மேல் அமர்ந்திருந்த சர்வேஷ் மடியில் தலை வைத்துக் கொண்டாள். அவனிற்கு அப்படி ஒரு சிரிப்பு.

நித்யா வந்ததும் எல்லா வண்டுகளும்…”பெரியம்மா சொல்லிட்டாங்க…. அம்மா சொல்லிட்டாங்க. இன்னைக்கு லீவ் தான்…” என திரும்பவும் சத்தம்.

நித்யா, துர்காவை பார்த்திருந்தாள்… துர்கா “விடு நித்யாக்கா… மத்தியானமா மேட்டூர் கிளம்புங்க, நைட்டும் லேட்டா தானே படுத்தீங்க…” என சோம்பலாக சொல்ல,

ஒன்றும் சொல்ல முடியவில்லை நித்யாவால், குழந்தைகள் காம்பளான் குடித்து… விளையாட செல்லவும், நித்யாவிற்கு காப்பி கலக்க சென்றாள் துர்கா.

வைதேகி குளித்து வெளியே வந்து பூஜை அறையில் அமர்ந்தார். பார்த்திருந்த நித்யா எழுந்து குளிக்க சென்றாள். துர்கா “இரு க்கா, காப்பி குடிச்சிட்டு போ…” என அவசரமாக அவளிடம் காப்பி கப்பை நீட்டினாள்.

சிரித்துக் கொண்டே வாங்கி குடித்தவள், வேகமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். வைதேகி பார்த்தால், அவ்வளவுதான் குளிக்காமல் கிட்செனுள் சென்றதற்கு ஒருபாடு புலம்பி தீர்த்தது விடுவார்.

மேட்டூர் என்றால் நித்யா தான் முதலில் குளித்து எல்லாம் செய்வது, இங்கு துர்க்கா வீடு தானே பொறுமையாக குளிக்காலாம் என நினைத்தாள் விடுவதில்லை வைதேகி.

துர்கா இப்போது சற்று பரவாயில்லை, சமையலறையில் எது எங்கு இருக்கிறது என்று தெரியும் அளவிற்கு, கிட்செனில் பழகி இருந்தாள். ஏதாவது எளிமையாக செய்யவும் கற்றிருந்தாள்.

நித்யா அந்தபக்கம் செல்லவும், வைதேகி வரவும் சரியாக இருந்தது, வைதேகிக்கு காப்பி கொடுத்து, உள்ளே செல்ல போக, தாயாய் வைதேகி… “மகிக்கு காப்பி கொண்டு போ” என்றார் ஏதோ புதிதாக திருமணமானவளிடம் சொல்வதுப் போல்.

எப்போதும் மகி வாரத்தில் இரண்டு நாள்தான் இங்கு வருவது. அதிலும் எப்போது எழுகிறான் என தெரியாது. அவனே கீழே வந்துதான் குடித்தது பழக்கம். அதனால் துர்கா தயங்க.

வைதேகி அதற்கும் புலம்பினார் “என் புள்ளைய இப்படி கவனிக்காமல் விட்டு தான், இதில் வந்து நிற்கிறது. முன்பு எப்படியோ, இனி நீதான் செய்ய வேண்டும் பழகிக் கொள்….” என மாமியாராக மிரட்டினார்.

காப்பி கலந்துக் கொண்டிருந்தவளுக்குத் தொண்டை அடைத்தது. ‘எதற்கெடுத்தாலும் இந்த வார்த்தை தான் இனி வரும்’ என தான் இந்த கண்ணீர்.

அப்போது தான் துர்காவின் முகத்தைப் பார்த்தவர் “என்ன இது, இப்படி சிவந்து இருக்கு, அடிச்சானா..” என்றார் அதிர்ச்சியாக.

“அது… அது நான் தான், கொஞ்சம் எச்சா பேசிட்டேன் அதான்” என்க.

அவர்க்கு மனம் உருகியேப் போயிற்று, தன் மகனை பற்றி முழுவதும் தெரிந்தும், ஆனால் அதை பற்றி துளிக் கூட தன்னிடம் குறையாக  சொல்லாத தன் மருமகளை கண்டு என்ன சொல்வது என தெரியாது நின்றார்.

துர்கா, அவரை கடந்து காபியுடன் மகி அறைக்குச் சென்றாள். அங்கு, கதவு சாற்றி இருந்தது. இவள் தட்ட திறந்தது. அங்கு ஏதோ பத்திரங்கள் எல்லாம் பரப்பி வைக்கபட்டிருந்தது.

ஒரு சார்ட்ஸ், டி-ஷர்டில் நின்று கொண்டிருந்தான். காபியுடன் அவளை பார்த்த மகி “என்ன புதுசா, காப்பியெல்லாம் மேலே வருது.” என்றான். கையில் எதையோ பார்த்துக் கொண்டே.

என்ன சொல்வது, ‘உங்க அம்மாதான் கொடுக்க சொன்னார்கள்’ என சொல்வதா என தயங்கியவாறே நிற்க.

மகியே தொடர்ந்து “இல்ல நான் என்ன செய்கிறேன் பார்க்க வந்தியா?” என ஒரு மாதிரி குரலில் கேட்க. நிமிர்ந்து அவனை பார்த்தாள் துர்கா, எதுவும் பேசாமல், காபியை அங்கு இருந்த டேபிள்லில் வைத்து விட்டு கிளம்ப நினைக்க.

அவனிற்கு கோவம் தன்னை எல்லோர் எதிரிலும் பேசிவிட்டாளே என, மேலும் தன்னை எதிர்த்து எப்படிப் பேசலாம் என்ற எண்ணமும் எழ, அவன் தனது இயல்பாக அப்படி ஒரு கேள்வி கேட்டான்.

பதில் இல்லாததால், மகி திரும்பி பார்க்க, இவள் செல்வது தெரிந்தது. உடனே அவளின் தையல் போட்ட கையை பிடித்தான். மணிகட்டிற்கும் மேலே தான், சிறிய பிளாஸ்டர் மட்டும் தெரிந்தது, அதுவும் காய்ந்து பிரிந்து தான் இருந்தது.

மகி அழுத்தி பற்றியதில் வலி வர, இவள் “விடுங்க “ என சற்று கத்தியே விட்டாள் துர்கா. இவள் கத்தியதும் கொஞ்சம் கோவம் வர பெற்றவன் அவளை அப்படியே சுண்டி இழுக்க.

எதிர்பாராத இந்த நிகழ்வால், சுதாரித்த துர்கா, அவன் மேல் மோதாமல் அருகிலேயே நிற்க, இப்போது அவள் முகம் பார்த்த மகியால் தன்னையே மன்னிக்க முடியவில்லை.

அவளின் கன்னம் கன்றி சிவந்திருந்தது. அதுவும் அவளின் பால் நிறத்திருக்கு, அது எடுப்பாக தெரிய, அப்படியே கையை விட்டவன், திரும்பி நின்று கொண்டான்.

ஏதும் பேசவில்லை. ஒரு சின்ன குற்ற உணர்ச்சி வந்தது போல் முதல் முதலாக, அமைதியானான் மகி. இவன் திரும்பிக் கொள்ளவும், துர்கா எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்.

மகி என்ன செய்வது என தெரியாமல், திரும்பி பார்க்க அவள் சென்றிருந்தாள். அதுவே அவனிற்கு மிகுந்த நிம்மதியாக இருந்தது. ஒரு பெருமூச்சை விட்டு தன்னை நிலைக்கு கொண்டு வந்தான் மகி. பிறகு தன் வேலைகளை கவனித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!