Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என் மன ஆழியில் – 36.1

அன்று இரவு அந்த வீட்டிலே இருவரும் விடியும் வரை பேசி, சிறிது, சீண்டி விளையாட அடுத்த நாள் மாலையில் தான் ஜான்வியை அவன் வீட்டிற்கு மீண்டும் அழைத்து வந்தான்.

மாலையில் அவர்களுக்கு முன்பே ஜான்வி மற்றும் அதித் வரவை ஆர்வமாக எதிர் பார்த்து ராகுல், மைதிலி, தேவ் மூவரும் வரவேற்பறையில் காத்திருக்க அதித்திற்கு தான் ஜான்வியை தாமதமாக அழைத்து வந்ததற்குப் பாராட்டுக்கள் மூவரிடமும் குவிந்தது. அவன் வாங்கிய சொற்பொழிவை ஜான்வி சிரிப்பை அடக்கி கேட்டுக்கொண்டே இருக்க அதித் எச்சரிக்கை பார்வை அடிக்கடி ஜான்வியிடம் வந்துகொண்டே தான் இருந்தது.

“என்னையே தாளிச்சு கொட்டுனது போதும், கிபிட் எல்லாம் குடுத்துட்டு கிளம்புங்க மூணுபேரும்… புதுசா கல்யாணம் ஆனவங்கள சும்மா விடுறாங்களா பாரு… நச்சு நச்சுன்னு மொக்க போட்டுட்டு”

“பேசுவடா நீ பேசுவ… கொஞ்ச நாள் முன்னாடி பச்சை கொழந்தை மாதிரி என்கிட்டே தான் வந்து அழுதுட்டு இருந்த அப்ப தெரியலையா நான் நச்சு நச்சுனு பேசுவேன்னு…” வாயைக் கொடுத்து வம்பை வளர்த்தான் ராகுல்.



Advertisement

‘இருடி உனக்கு ஆப்பு வைக்கிறேன்’ பார்வையாலே நண்பனுக்கு அபாய சங்கை ஊதியவன், “மா என்ன விடுங்க தோ நிக்கிறான் பாருங்க நீங்க பாத்தா பொண்ணுக்கு சரின்னு சொல்லிட்டான்… என்னால ஒரு பொண்ணு அழுது லவ் ப்பைய்லியர் ஆகி கஷ்ட பட கூடாது சோ நீ அம்மாகிட்ட சரினு சொல்லிடுனு சொன்னான்… நாளைக்கு ஒரு டேட் கூட அரேஞ் பண்ண சொன்னான்” அந்த கூட்டம் மொத்தமும் இப்பொழுது ராகுல் புறம் திரும்பினர்.

“அடிங்… கோ… டேய் வாயில வருது நல்லா. மாம் சாத்தியமா நான் எதுவும் சொல்லல. இவனா பொய் சொல்றான்”

“எங்க என் மேல சத்தியம் பண்ணி சொல்லு உனக்கு அந்த பொண்ணு மேல ஒரு இது இருந்ததே இல்லனு…”

Advertisement

“ஆமா இருந்தது ஆனா…”

Advertisement

அவனை முழுதாய் பேச விடவில்லை, “இந்தா சொல்லிட்டான் மாம். பொண்ணு வீட்டுக்கு போய் பேசி முடிச்சிடுங்க”

“அதி சொல்றத கேளுடா…” கோவத்தில் கண்களை மூடி தன்னுடைய ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தியவன் பொறுமையாகப் பேச முயன்றான்.

“என் மேல சத்தியம் ராகுல் இதுக்கு மேல நீ பேச கூடாது. மாம் பிக்ஸ்ட்” அந்த சத்தியம் என்ற வார்த்தை அவன் வாயை அடைத்தது.

Advertisement

அதித்தை தீயாய் முறைத்தவன் எதுவும் பேசாமல் ஜான்வியிடம் சென்று ஒரு சிறு அட்டையைக் கொடுத்தவன், “ஹாப்பி பர்த்டே. நான் கிளம்புறேன்”

அதோடு வீட்டை விட்டு வெளியில் நடக்க அதித், “டேய் பிரியாணி ஆர்டர் பண்ணிருக்கேன் இரு சாப்டுட்டு போகலாம்”

திரும்பாமலே, “நீயே கொட்டிக்கோ” அவன் கோவம் அவன் குரலிலே தெரிய அமைதியாகினான் அதித். ராகுல் சென்று விட்டான் என்று தெரிந்ததும் மைதிலி ஓடி வந்து அதித்தை கட்டிக்கொண்டார்.

“மகனே பின்னிட்டடா… நல்லா நடிக்கிறியே”

“எல்லாம் என் பொண்டாட்டி குடுத்த பிளான் தான் மாம்… அறிவாளி அவ தான் ஐயா வெறும் ஆக்ட்டிங் தான்… எனக்கு என் ராகுல் சந்தோசமா இருக்கனும் மா. அந்த பொண்ண பத்தியும் நல்லா விசாரிச்சிட்டேன், ராகுலுக்கு அந்த பொண்ண தவற வேற யாரும் வாழ்க்கைய அழகா மாத்த முடியாது, அவன் பேமிலில இனி தான் கலர்ஸ் வரும் அந்த பொண்ணோட பேமிலிய வச்சு. இன்னும் கரெக்ட்டா ஒன் மந்தல கல்யாணம் நடக்கணும் மாம் இல்லனா இவன் ஏதாவது நடுல பண்ணி விட்ருவான்”

“அதெலாம் நான் பாத்துக்குறேன் மொதல்ல அவனை எப்படி சமாதானம்படுத்துவ”

சட்டை காலரைத் தூக்கி விட்டவன், “அய்யாக்கு அதெலாம் ஜூஜூபி… ரெண்டு சரக்கு பாட்டில்ல அவன் முன்னாடி நீட்டுனா சிரிச்சிடுவான்”

“அதி…” இடிப்பில் கை வைத்து ஜான்வி அதித்தை முறைக்க, அவனோ விவரமாக மைதிலியைப் பார்த்து, “மாம் ஜான்க்கு கிபிட் கொடுக்கல?” பேச்சை மாற்றினான்.

“கிபிட் என்ன கேக் கூட இருக்கே” அவனிடம் ஒரு கேக்கை காண்பிக்க அதில் வேண்டும் என்றே அவன் கை வைக்கச் சென்ற நேரம் அவன் அலைபேசி சிணுங்கியது.

எரிச்சலுடன் எடுத்து காதில் வைத்தவன் எதிர் புறம் கேட்ட செய்தியைக் கேட்டு தனியாகச் சென்று பேசி வந்தவன், “மாம் நீங்க எல்லா ஏற்பாட்டையும் பண்ணுங்க நான் வர்றேன். டாட் நீங்க மாம் கூடயே இருங்க நான் ஆபீஸ்க்கு தான் போறேன் நான் பாத்துக்குறேன்” என்று சட்டையைக் கூட மாற்றாமல் சென்றுவிட்டான்.

அவன் சென்ற பிறகு மைத்திரியும் ஜான்வியும் ராகுலின் திருமணத்திற்கான பேச்சைப் பற்றி ஆரம்பிக்க நேரம் பறந்ததை எவரும் பார்க்கவில்லை. பசிக்கும் பொழுது தான் நேரத்தைப் பார்க்க மணி இரவு ஒன்பதை நெருங்கி இருந்தது.

“மா அதி இன்னும் வரல அவன் வந்ததும் கேக் கட் பண்ணிக்கலாம்” என்று சமைப்பதில் மும்முரமானாள்.

“யு ஹிப்நோடைஸ்ட் மீ அதி (You hypnotized me Adi)” சிரிப்புடன் அவள் இதழ்கள் அவன் பெயரை மட்டும் தான் உச்சரித்தது.

அவள் அலைபேசி சிணுங்கத் திரையைப் பார்த்தவளுக்குப் பயம் தான் வந்தது. பயத்துடன் அழைப்பை ஏற்க, “ஹலோ ஜான்வி…” என்றான் சிரித்த முகத்துடன்.

“ஹலோ…”

“ஐயோ பாரேன் குரலே சொல்லுது உன் பயத்த… இது தான் எனக்கு வேணும்”

மைதிலி வரவில்லை என்று உறுதிப்படுத்தியவள், “உனக்கு என்ன தான் விஹான் வேணும்? ஒரு நாள் கூட என்ன நிம்மதியா விட மாட்டியா?”

“அட விட்டா அழுதுடுவ போல, நான் உனக்கு ஹாப்பி பர்த்டே விஷ் பண்ண தான் கால் பண்ணேன் ஜான்வி. நீ பேசுறத பாத்தா லண்டன்ல உனக்கு கவர் அனுப்புவது நான் தான்ற மாதிரியும், இப்ப உன் புருசனுக்கு பிரச்னையும் என்னால தான்ற மாதிரியும் சொல்றியே… சரி விடு நீ மூட் அவுட்ல இருக்க நான் வச்சிர்றேன்… ஆஹ் சொல்ல மறந்துட்டேன். விஷிங் யூ எ வெரி வெரி ஹாப்பி பர்த்டே பில்ட் வித் ஹப்பின்ஸ் அண்ட் ஜாய் (Wishing you a very very happy birthday filled with happiness and joy)”

“விஹான் அதிக்கு என்ன…” அவள் கதறலைக் கேட்க அவன் இணைப்பில் இருந்தால் தானே…

சமைத்துக்கொண்டிருந்தவை அனைத்தையும் அப்படியே விட்டு வீட்டை விட்டு ஓடியவள் கண்களுக்குத் தெரிந்த முதல் வாகனத்தை எடுத்துக்கொண்டு அவர்கள் அலுவலகம் நோக்கிப் பறந்தாள், மைதிலி பேச்சோ, தேவ் பேச்சோ அவள் காதிலே விழவே இல்லை.

‘என் அதிக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது’

‘ஆகியிருக்க கூடாது, அதி கால்ல எடு அதி’

பல முறை அவன் அலைபேசிக்கு அழைத்தும் அழைப்பு எடுக்கப் படாமலே இருக்க ஜான்வியின் பயம் அதிகமாகிக்கொண்டே சென்றது. அவன் அலுவலகம் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக வாகனத்தைப் பின்னும் எடுக்க முடியாமல், முன்னும் செலுத்த முடியாமல் தவித்த நிலையில் மனம் தான் தவித்தது கணவனைப் பார்க்க எண்ணி.

வாகனத்தை விட்டு வெளிவந்தவள் கண்களுக்குக் கரு வானில் புகை மண்டலமே தூரத்தில் தெரிய வாகனத்தைக் கூட பொருட்படுத்தாமல் சில மீட்டார்கள் தூரம் இருந்த அவர்கள் அலுவலகத்திற்கு விரைந்து ஓடினாள். அருகில் செல்ல செல்ல பயமும் அழுகையும் அதிகமாகியது.

புகை அனைத்தும் அந்த இடத்தை ஆக்கிரமிக்க காவல்துறையும், தீயணைப்புத் துறையும் ஆங்காங்கு பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர்.

அலுவலகம் நெருங்கி வரும் பொழுதே அவளுக்குத் தெரிந்துவிட்டது அது அவர்கள் அலுவலகம் தான் என்று. தேவ் குழுமத்தின் முதல் கட்டிடம் அது. நான்கு தளங்களைக் கொண்ட அந்த தளம் அடிக்கடி புதுப்பிக்கப்பட்டிருந்த கட்டிடம். அதன் பின்னர் தான் அவர்கள் 29 மாடிக் கட்டிடம் இருந்தது.

அந்த கட்டிடத்தில் தான் அவர்கள் அலுவலகத்தின் முக்கியமான பல ஆவணங்கள், கோப்புகள், அவர்கள் சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் பல விருதுகளும் இருக்கும், இவை அனைத்திற்கும் மேல் அந்த கட்டிடம் தான் தேவ் காலையில் மிதிக்கும் முதல் கட்டிடம் அதன் பிறகே அந்த சகல வசதிகள் நிறைந்த கட்டிடத்திற்கு வருவார்.

ஜான்வி அலுவலகத்தை மிகவும் அருகில் நெருங்கிய பொழுதே நெருப்பின் உஷ்ணம் அவளைப் பின்னோக்கி செல்ல உத்தரவிட ஒரு நொடி நின்றது அவள் கால்கள் ஆனால் அதித் நினைவு வர…

‘அதி… நான் என்னோட அதிகிட்ட போகணும்’

பித்துப் பிடித்தவள் போல் ஓடி வந்தவளைப் பார்த்த சில காவல்துறையினர் தடுக்க, அவளோ அவர்களை உதறித் தள்ளி தன் கணவனையே தேடி ஓடினாள்.

ஒரு இடத்தில் எரிந்துகொண்டிருந்த கட்டிடத்தைப் பார்த்து தன்னுடைய பாண்ட் பாக்கெட்டில் கையை வைத்துத் தனித்து நின்றிருந்தான். அவனுக்குச் சற்று தள்ளி அதே கட்டிடத்தைப் பார்த்து அமர்ந்திருந்தான் ராகுல்.

“அதி…” அவனுக்கு எந்த காயமும் இருக்கக் கூடாதென்று மனம் எண்ணிக்கொண்டே மெதுவாய் அவன் பெயரை உச்சரித்தாள்.

ஆனால் அவள் தன்னை தன் காதோரம் இருந்து அழைத்தது போல் தோன்ற அதித் திரும்பிப் பார்க்கக் கண்களில் கண்ணீருடன் காலில் செருப்பு கூட அணியாமல், அவன் அன்னை பரிசு அளித்த புடவையில் நின்றவளைப் பார்த்து அதித் பயத்துடன் வேகமாக வர, அவளோ அவன் முழுமையாக நலமாக உள்ளான் என்ற மகிழ்ச்சியில் அவனை நோக்கி வேகமாக ஓடி வந்து அவன் கழுத்தில் முகம் புதைத்து அவனைக் கட்டி அழுதாள்.

மனைவியின் பயத்தை உணர்ந்தவன் அவள் இடையை ஒரு கை தன்னோடு அணைத்துக்கொள்ள அவள் தலையை ஒரு கை வருடியது, “ஹே ஒண்ணுமில்ல ஜான். நீ அழுகாத”

“உனக்கு ஒன்னும் இல்லல அதி?”

“எனக்கு ஒண்ணுமில்ல ஆனா இந்த தொழிலோட மூல பொருள் தான் சாம்பல் ஆகிடுச்சு” உணர்ச்சி துடைத்த குரலில் கூறினான்.

“நீ பீல் பண்ணாத அதி… எல்லாமே சரி ஆகிடும்”

“நான் பீல் பண்ணல ஜான்… நீ அழுகுறத நிறுத்து இது வெறும் செங்கல், சிமெண்ட் மிஞ்சி மிஞ்சி போனா பேப்பர்ஸ் அவ்ளோ தான்” என்றான் மிகவும் சாதாரணமாக.

அந்த பதிலில் ஜான்விக்கு தான் வியப்பாக இருந்தது, அவன் கழுத்திலிருந்த முகத்தைப் பிரித்து அவனைப் பார்க்க அவன் முகத்தில் கோவமோ, வருத்தமோ எதையுமே அவளால் பிரித்துப் பார்க்கமுடியவில்லை.

“இது முழுக்க முழுக்க அப்பாவோட கனவு, உழைப்பு அதி. எப்படி உன்னால இதுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத மாதிரி பேச முடியுது?”

“டாட் உழைப்பு தான் ஜான் நான் இல்லனு சொல்லல ஆனா பாரு இந்த பில்டிங் எவ்ளோ பழசா இருக்குன்னு. டாட் கிட்ட இத பத்தி பல தடவ நான் பேசிட்டேன் டாட் கொஞ்சம் கூட எனக்கு ரெஸ்பான்ஸ் பண்ணவே இல்ல. நவ் ஐ ஹவ் எ சான்ஸ்”

அவன் இதழ் கடையில் தோன்றியது புன்னகையா? இவன் நிச்சியமாக அதித் தானா? இல்லை தனக்குத் தான் அவன் பேசியது தவறாகக் கேட்டதா? அவன் பேச்சும் செயலும் எதையோ மனதில் வைத்துச் செய்வது போல் தோன்றியது. இங்கு நடந்தவை எதற்கும் தனக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பது போல் அல்லவா இருக்கிறான்…

மறுபுறம் இதை வைத்து ஏதோ புதிதாகச் செய்யவும் திட்டமிட்டுள்ளன போல் தெரிகின்றது. எத்தனை எத்தனை முக்கிய ஆவணங்கள் உள்ளே இருந்தது அவை அனைத்தும் தீயில் இருக்க அவர்கள் அலுவலகத்தின் மதிப்பும் குறைய நிறைய வாய்ப்பு இருக்கின்றது.

“அதி நீ எதையாவது என்கிட்டே இருந்து மறக்கிறியா?” சந்தேகத்துடன் தான் இப்பொழுதும் அவன் பார்வை அவன் மேல் விழுந்தது.

கட்டிடத்தின் மீது இருந்த அவன் பார்வை ராகுல் மீது பட்டு பிறகு ஜான்வியிடம் வந்து, “ஒண்ணுமில்ல ஜான். எல்லாத்தையும் சிக்கிரமாவே உன்கிட்ட சொல்றேன்” என்றான் உறுதியாக.

ஆனால் இவை அனைத்தையும் அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, விஹான் செய்தவை அனைத்தும் தவறு மட்டுமே. இந்த செயலில் எவரேனும் உயிர் இழந்திருந்தால்? நினைத்துப் பார்க்கவே அவள் உடல் நடுங்கியது. ஆனால் ஒன்று நிச்சயம் அவன் ஜான்வி மீது பழி தீர்க்க நினைப்பது அவள் வேலை செய்த அந்த ஹேக்கிங்ல் தான்.

அதில் தான் ஜான்வியின் பெயர் வைட் டீர். அங்கு எவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தது இல்லை அவர்கள் உரையாடல் நிகழ்பவை அனைத்தும் இது போன்ற புனை பெயர்கள் கொண்டு தான். குழப்பமும் கோபமும் ஒருங்கே வந்து சேர செய்வதறியாமல் ஜான்வி கண்களை மூடி அமர்ந்திருந்தாள். தன்னை தண்டிக்க எண்ணி இத்தனை உயிர்களின் வாழ்க்கையில் விளையாடுவதா?

விஹான் மீது கோவம் தான் அதிகம் வந்தது. அதன் பிறகு அதித்தின் பெற்றோர் வர தேவ் மிகவும் கலங்கித் தான் இருந்தார். தீயை அணைத்து, காவல்துறையினரிடம் சில நிமிட உரையாடல்களுக்குப் பிறகு அனைவரும் வீடு திரும்ப இரவு இரண்டானது. வீட்டிற்கு வந்ததும் இருவரும் அவர்கள் அறைக்குச் செல்ல ஜான்வியின் மனமும், உடலும் சோர்வில் ஆழ்ந்திருந்தது. கனவிலும் இப்படி ஒரு மகிழ்ச்சியான அதே சமயம் சோகமான பிறந்தநாளான இருக்கும் என்று அவள் எதிர் பார்க்கவே இல்லை. ஆனந்த நீரில் துவங்கி வேதனையின் கண்ணீரில் முடிந்தது.

“ஜான்” ஜான்விக்கு பின்னால் இருந்து அதித் அவளை அழைக்க, கழுத்திலிருந்த காதணியைக் கழட்டியவாறே அதித்தை திரும்பிப் பார்த்தாள்.

“சாரி” என்றான் தொங்கிய முகத்துடன் மிகவும் வருத்தமாக. அவன் எதற்காக மன்னிப்பு கேட்கிறான் என்ற சந்தேகத்துடன் ஜான்வி அவனைப் பார்த்தாள்.

“நீ ஏன் அதி சாரி சொல்ற?” குழப்பத்துடன் கேட்டாள்.

“உன்னோட பர்த்டேவ ஸ்பாயில் பண்ணிட்டேன் ஜான்”

அவன் அருகில் சென்றவள் அவன் கைகளை தன்னோடு கோர்த்து அவன் வசீகரிக்கும் கண்களைப் பார்த்து, “நடக்கவே நடக்காதுன்னு நான் நினைச்ச விசியம் எல்லாத்தையும் எனக்காக நான் ஆசை பட்டத்துக்கு மீறியே நீ செஞ்சிருக்குற அதி. சொந்தம் பந்தம் எதுவுமே இல்லாம தான் என் வாழ்க்கையோட கடைசி நாள் வரைக்கும் நான் இருக்கணும்னு நெனச்சிட்டு இருந்தப்ப, இது தான் உன் குடும்பம்ன்னு அப்பா, அம்மா, அண்ணன்னு எல்லாரையும் என் கண் முன்னாடி வந்து நிறுத்திருக்க.

அந்த ஒரு சதோஷம் போதாதா அதி? இது எல்லாத்தையும் விடு. எந்த பிரச்சனையா இருந்தாலும் இப்டி கடைசில உன் கைய உரிமையா பிடிக்கிற இந்த ஒரு ஹப்பின்ஸ் தவற வேற எதுவும் எனக்கு பெரிசா சந்தோசம் தந்துடாது அதி. நான் சாகுற வரைக்கும் இந்த சந்தோசம் போதும்”

அவன் விரலில் அழுத்தமாய் ஒரு முத்தம் பதித்தவள் மற்றொரு காதிலிருந்த காதணியைக் கழட்டத் திரும்ப அவளை பின்னிருந்து அணைத்தான். அவன் மார்பு தன்னுடைய பாக்லெஸ் மேற்சட்டையில் படும் பொழுது தான் அவள் அணிந்திருந்த சேலையின் நினைவு வந்தது.

அடர் நீல நிறத்தில் முற்றிலும் நெட் துணியில் நூலால் அழகிய பூக்கள் கொண்டு வரையப்பட்ட புடவை அது. மேற்சட்டை அவள் முழங்கை வர இருக்க, முதுகு பகுதியோ ஒரே ஒரு மெல்லிசான கொக்கி வைக்கவே இருக்கும் சிறிய இணைப்பு பகுதி. இது போன்ற உடையை அவள் இது வரை அணிந்து இல்லை ஆனால் வீட்டில் எவரும் இல்லை என்ற நம்பிக்கையில் அணிந்திருந்தாள்.

 இது போன்ற உடையை அவள் இது வரை அணிந்து இல்லை ஆனால் வீட்டில் எவரும் இல்லை என்ற நம்பிக்கையில் அணிந்திருந்தாள்

அவன் அன்னை ஜான்விக்கு வழங்கிய பரிசு அது. அதை அணியக் கூறியவர் அதித் வரவும் கேக் வீடுமாறு கூறி இருக்க, ஆசை ஆசையாக அதை அணிந்து ஜான்வி காத்திருந்த பொழுது தான் வந்தது விஹான் அழைப்பு. அவசரமாக அவன் அலுவலகம் நோக்கி விரைந்த பொழுது விரித்திருந்த தலைமுடியை ஒரு கிளிப் கொண்டு அடக்கியிருந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!