என் மன ஆழியில் – 36.2
ஆகையால் இப்பொழுது அவனுக்கு அவள் முத்துக்குப்பகுதி நிச்சயம் நன்றாகத் தெரிந்திருக்கும். அந்த எண்ணமே ஜான்விக்கு ஒரு வித சிலிர்ப்பைக் கொடுக்க அவன் சூடான மூச்சுக்காற்று அவள் காதோரம் வீசி கிறங்கடித்தது.
“நீ ஏன் ஜான் இவ்ளோ அழகா இருந்து என்ன கொல்ற?” உறைந்து போனாள் பெண்.
“நீ இத கட்டிருக்குறது எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு. ஆனா தெரியாம கூட இனி இது மாதிரி வெளிய போட்டுட்டு வராத” தனக்குச் சொந்தமான பொருள் மேல் இருக்கும் உரிமையைப் போல் கூறினான்.
“ஏன்?” அவன் பொறாமை கூட மனைக்கு ரசனையாகத் தான் இருந்தது, அவளும் ரசித்தாள்.
Advertisement
அவன் அருகாமையில் அவளை என்னமோ செய்தான் அவன், அவளைச் சுற்றி உள்ள அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து அவனை மட்டுமே அவள் இதமும் சரி அவள் உடலும் நாடுவது போல் முற்றிலும் அவன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான் அந்த காந்த பார்வையில்.
இதுவரை பல கதைகளில் பெண்களின் பார்வை ஆணின் உலகத்தை ஆண்டு பார்த்துள்ளாள் ஆனால் இவனோ அதற்கு நேர் மாறாக தன்னுடைய பார்வையாலேயே அவளுக்குக் கூற வேண்டிய அனைத்தையும், ஏன் அவள் உடலையே அவன் கண்ணசைவில் வைத்திருப்பது போன்ற பிரமை. அவன் நா பேசியதை விட அதிகம் அவன் காந்த பார்வை பேசியுள்ளது மனைவியிடம்.
“இந்த சாரீல நீ ரொம்ப அழகா இருக்க ஜான் அதுவும் அங்க அங்க தெரியிற உன்னோட ஸ்கின், உன்னோட இந்த அழகான குட்டி பால் இடுப்பு” பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் கைகள் அங்கே.
Advertisement
அவள் ஆடையைத் தாண்டி அவள் வெற்று இடையில் பூனையைப் போல் மெதுவாக உலாவிக்கொண்டிருந்தது. அவள் மூச்சே நின்றது, அது மட்டுமல்லாமல் அவள் வயிற்றில் ஏதோ ஒன்று வித்தியாசமாக உணர ஆரமித்தாள் கண்களை மூடி, அவன் கை மேல் தன் கையை வைத்து.
Advertisement
“உன் ஃகர்வ்ஸ் எல்லாம் அப்பட்டமா தெரியாது… ப்ச் சொல்ல முடியல. இப்டி அழகா இருக்குறது எல்லாம் பெரிய சின் ஜான்”
அவள் காதருகே இவ்வளவு நேரம் கேட்ட அவன் ஹஸ்கி குரல் இப்பொழுது அவன் கழுத்து வளைவில் கேட்க அவன் மூச்சுக்காற்றும் அவள் கழுத்தையும் தோளையும் இணைக்கும் இடத்தில் பட்டு ஜான்வியின் கைகள் நடுங்கத் துவங்கின.
அவன் இதழ்கள் அங்குப் பூவை விடவும் மென்மையாய் பட, வானில் பறக்க வேண்டிய பட்டாம்பூச்சிகள் அனைத்தும் அவள் வயிற்றில் பறந்து, கால்களை ஜெல்லி போல் ஆக்கி எந்த நேரமும் அதன் நிலைத்தன்மையை இழக்கத் தயாராக இருக்க அதைத் தடுத்துப் பிடித்திருந்தது அவள் வயிற்றைச் சுற்றிப் பிடித்திருந்த அவன் கைகள் மட்டுமே, இல்லையெனில் ஜான்வி இந்நேரம் தரையில் தான் இருந்திருப்பாள்.
Advertisement
ஆனால் இது போன்ற அவன் நெருக்கமும், உணர்வும் அவளையும் அறியாமல் அவள் ரசிக்கத் துவங்கினாள். அவன் இதழ்கள் தந்த சுகமும், கதகதப்பும் அவள் தன்னையே மறந்திருந்த நேரம் அவன் திடீரென ஜான்வியை விட்டு மெதுவாய் தன் இதழ்களையும் கையையும் விலகிக்கொள்ளக் கண்களை மூடி இருந்த ஜான்விக்கு ஏதோ ஏமாற்றம்.
‘அவனுக்குத் தன்னை பிடிக்க வில்லையோ?
இல்லை இன்னும் தன்னை முழுதாய் அவன் மனம் ஏற்கவில்லையா?
இல்லை அன்று அவள் கூறிய வார்த்தைகளை இன்னும் மனதில் நினைத்து இந்த விலகலா?’
கண்கள் கலங்கி குளியலறைக்குள் செல்லப் போக அவள் கையை பிடித்து தன் பக்கம் இழுக்க, அதித் நெஞ்சில் வந்து விழுந்தாள். அவள் நாடியைப் பிடித்து தன்னை பார்க்க வைத்தவன், “ஏன் இந்த கண்ணு கலங்கிருக்கு?”
இல்லை என்று அவள் தலையை ஆட்டினாலும் கண்கள் இன்னும் கலங்கிய நிலையில் தான் இருந்தது.
“அப்ப அது ஏன் க்ளாஸியா இருக்கு?” புருவத்தை உயர்த்தி உண்மையை மட்டும் கூறுமாறு கேட்டான்.
“ஒண்ணுமில்ல” வாய் வார்த்தையாய் கூறினாலும் கண்ணீர் ஒன்று வழிய தன் செய்தது. ‘ஆஆ எப்ப இருந்து ஜான்வி இந்த விசயத்துக்கு எல்லாம் அழுக ஆரமிச்ச’ தன்னையே கடிந்துகொண்டாள்.
குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன் அவளைப் பார்த்துச் சிரிக்க, ‘ பண்றது எல்லாத்தையும் பண்ணிட்டு சிரிச்சு ஏமாத்துறான்’
“உன்கிட்ட வந்தாலே என்னோட கண்ட்ரோல் மிஸ் ஆகுதுடி பொண்டாட்டி. அப்றம் என்னால என்ன கண்ட்ரோல் பண்ணவே முடியாது. இந்த குட்டி மூளையை வச்சு தேவையில்லாத எல்லாத்தையும் யோசிக்காம இரு. அது எல்லாம் இன்னொரு நாள் பாத்துக்கலாம்” அவளை இன்னும் தன்னோடு நெருங்கி இழுத்தான்.
“அதி, நம்ம ஆபீஸ் பயர் ஆனதுல உனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லையா?”
“அதை டிஸ்கஸ் பண்ற நேரம் இது இல்ல ஜான், வா பெட் என்ன ரொம்ப நேரமா கூப்டுட்டே இருக்கு” கிளோஸ்ட் சென்று ஒரு டீ-ஷர்ட், ஷார்ட்ஸ் அணைந்து வெளியில் வந்தான்.
“ஜான் இந்த சாரீலயே நீ படுக்க முடியாதா?” ஆர்வமாகக் கேட்டான்.
“எனக்கு இது அங்க அங்க குத்துது அதி, வெயிட் பண்ணு” என்றவள் தானும் ஒரு டீ-ஷர்ட், நைட் பாண்ட் அணிந்து வந்து அவன் அருகில் படுக்க, அதித் அவளை தனக்கு நெருக்கமாக இழுத்தான்.
“ஜான் நான் உன்கிட்ட ஒன்னு கேக்கவா?”
“ம்ம்ம்” மும்முரமாக இருவருக்கும் அந்த அடர்ந்த போர்வையைப் போர்த்துவதிலிருந்தாள்.
“எனக்கு உண்மை மட்டும் தான் வரணும்” என்றான் உண்மையில் அழுத்தம் கூட்டி. ஒரு நிமிடம் அவன் பிடிவாதத்தால் யோசித்தவள் பிறகுச் சரி என்றாள்.
“எதுக்காக அந்த ஸ்லீப்பிங் பில்ஸ் சாப்புடுற அதுவும் டெய்லி?” இவ்வளவு நேரம் இருந்த அந்த கனிவு அவன் கண்ணில் இல்லை.
“டெய்லி இல்ல அதி, எப்பயாவது சாப்புடுவேன் அதுவும் சாதாரண ஸ்லீப்பிங் பில்ஸ் தானே அது”
“உனக்குத் தெரியுமா ஜான், உனக்குப் பொய் சொல்ல வரவே இல்ல” கூர்மையாய் பார்த்துக் கூறினான். ஆனால் ஜான்வி அமைதியாய் இருந்தாள்.
“ரெண்டாவது கேள்வி, ஆபீஸ்ல உன் வயித்துல ஏற்கனவே அடி பட்டது கீழ விழுந்தன்னு சொன்னது பொய், எனக்கு உண்மை வேணும்” அனைத்தையும் கவனித்துள்ளான் என்ற பயம் ஜான்விக்கு வந்தது.
“இல்ல” கடினமாகக் கூறினாள்.
“பொய் மேல பொய் சொன்னா என்கிட்டே இருந்து தப்பிக்க முடியாது ஜான்வி” அவள் முழு பெயரைக் கூறும் பொழுதே அவன் கோவத்தில் அளவு தெரிந்தது.
“என்ன கம்பெல் பண்ணாத அதி” மேலும் பேச்சை வளர்க்காமல் அவனுக்கு முதுகை காட்டி போர்வையைக் கழுத்து வரை மூடி படுத்தாள் அழுகை வெளியில் வரக் கூடாது என்ற வேண்டுதலுடன்.
அவன் பக்கம் மெதுவாய் அசைவு தெரிந்தது ஆனாலும் அவனை பார்க்கும் தைரியம் இல்லாமல் ஜான்வி படுத்திருக்க சில நிமிடங்கள் கடந்தும் அவனை அருகில் உணராதவன் அவன் புறம் திரும்பினாள்.
ஆனால் அவனோ படுக்கைக்கு அருகில் உள்ளே சோபாவில் அமர்ந்து ஜான்வியை மட்டுமே பார்த்திருந்தான் கண்கள் கூட சிமிட்டாமல்.
“என்ன?” என்றாள் சற்று கோபமாக.
“நீ எதுக்காக கோவ படனும்? கோவ பட வேண்டியது நான். உண்மை எனக்கு தெரியிற வரைக்கும் நான் தூங்குற ஐடியால இல்ல” என்றான் அழுத்தமாக. அவன் கூறியதில் ஜான்விக்கு சீராக மூச்சை விட முடியவில்லை ஏதோ அவள் கடந்த காலம் அவளுள் விடுவாய் மாறி அவளுக்கு வலியை மட்டுமே தந்தது.
“ஜான் எனக்கு ஏன் உன்னோட எல்லா கஷ்டத்துக்கும் நான் மட்டும் தான் காரணம்னு தோணுது?”
வேதனையும், குற்றஉணர்ச்சியும் நிறைந்திருந்தது அவன் குரலில். கண்கள் போர்வையுடன் விளையாடிக்கொண்டிருந்த கைகளில் பட்டு எரிந்துகொண்டிருந்த கண்ணீர் துளிகள் வெளியில் சிந்தாமல் பார்த்துக்கொண்டாள். அவள் அமைதியின் செய்தியை உணர்ந்தவன் அவன் முன் வந்து மண்டியிட்டு அமர்ந்தான்.
“வெறும் பேச்சுல உன்னோட வலிய எடுத்து சந்தோசத்தை மட்டுமே கொடுக்கணும்னு சொல்றதுல எந்த அர்த்தமும் இல்ல ஜான். உன்னோட கடந்த காலத்தை நினைச்சு நீ அழுகை கூடாதுன்னு என்னோட ஆசை. உன் மனச படிச்சு அதுல இருக்குற வலிய எடுக்க என்ன விடு ஜான்”
கெஞ்சலோடு கேட்டான். தன்னுடைய கடந்த காலம், நிகழ் காலம் என அனைத்தையும் தெரிந்துகொள்ள உரிமை உள்ளவன் இவன் மட்டுமே என்று புரிய தன் மனதை திறந்தாள் ஜான்வி.
“நீ என்னோட போட்டோவ நெட்ல போட்ட அன்னைக்கு தான். உன்கிட்ட இதெல்லாம் நெஜமாவே நீ தான் பண்ணுவியா இல்ல உன்னோட மொபைல்ல வேற யாராவது பண்ணுனாங்களானு கேக்க வந்தேன். ஏன்னு எனக்கே தெரியல அவ்ளோ நம்பிக்கை உன் மேல அது வரைக்கும் ஒரே ஒரு தடவ பேசுனவன்கிட்ட என்ன நான் நம்புற அளவுக்கு நம்பிக்கை வச்சேன். ஆனா இது எல்லாமே எனக்கு தேவை தான்னு நீ சொன்ன பாத்தியா?
முழுசா ஒடஞ்சிட்டேன் அதி, ஏதோ என் வாழ்க்கைல இருக்குற ஒரே ஒரு ஆறுதல், நம்பிக்கை என்ன விட்டு போன மாதிரி இருந்துச்சு அந்த உணர்வு. என்னால அதுக்கு அப்றம் நடக்க கூட முடியல, அந்த பப் விட்டு பார்க்கிங் லாட்ல ஒரு இடத்துல ஒக்காந்து நான் அழுதுட்டு இருந்தேன் சுத்தி நடக்குற எதையும் பாக்குற மைண்ட் செட்ல அப்போ இல்ல. அங்க தான் எல்லாமே ஸ்டார்ட் ஆச்… ஆச்சு”
அவள் உடல் மொத்தமும் அந்த நினைவில் நடுங்க ஜான்விக்கு அருகில் அமர்ந்து அவளை பக்கவாட்டில் இருந்து அணைத்துக்கொண்டான் அதித் மனைவியை தேற்றும் பொறுத்து. அனைத்தையும் இன்றுடன் முடித்து வைக்க நினைத்து மீண்டும் தொடர்ந்தாள்.
“ஒரு நாலு… நாலு பேர் வந்து அவங்க கூட என்ன வர சொல்லி ரொம்ப அசிங்க அசிங்கமா பேசுனாங்க அதி. அவனை எவ்ளோவோ தள்ளி விட்டுட்டு நான் ஓட ட்ரை பண்ணேன் ஆனா என்ன அவங்க விடவே இல்ல அதி, என்னால என்ன என்ன பண்ண முடியுமோ எல்லாத்தையும் பண்ணேன், எல்லாமே வேஸ்ட் தான். தெரு தெருவா நாய் மாதிரி துரத்துனாங்க, ஹெல்ப்ன்னு கேக்க கூட அந்த நேரத்துல அங்க யாரும் இல்ல.
என்னோட அப்பாக்கு கால் பண்ண ட்ரை பண்ணேன் அதி… ஒரு… ஒரு அப்பாவா அவரு என்ன சொல்லிருக்கணும்? என் மேல தப்பு இருக்கோ இல்லையோ வீட்டுக்கு வா பாத்துக்கலாம்னு சொல்லனும் இல்லனா நான் ஏன் கால் பன்னேனு கேக்கணும். ஆனா அவரு என்ன சொன்னாரு தெரியுமா?
இப்ப எவன்… எவன் கூட நான் இருக்கேன்னு கேட்டாரு. செத்துட்டேன் அதி. எனக்கு அவரு எவ்ளோவோ பண்ணிருக்காரு, பேசிருக்காரு ஆனா நான் வெறுத்த முதல் ஆள் அவரு தான். தப்பே இல்லாம ஒரு பொண்ணோட கேரக்டர் பத்தி இவ்ளோ அசிங்கமா பேசுனா அது அந்த பொண்ணுக்கு நரகத்தை விட வலிய குடுக்கும். எங்கையாவது போய் செத்துடலாமான்னு கூட தோணுச்சு ஆனா என்ன தான் நாலு அரக்கன்கள் தேடிட்டு இருந்தார்களே, அடுத்து மிலா, அவளோட பிரண்ட்ஸ்-னு எல்லாருக்கும் கால் பண்ணேன் யாரும் என்னோட கால் எடுக்கல.
கடைசியா எனக்கு இருந்த ஒரே ஆறுதல் ஆரவ், பழகுனது கொஞ்ச நாள் இருந்தாலும் உண்மையான நட்பு அவன்கிட்ட இருந்துச்சு. ஆனா அவனும் என் கால்ல வேணும் என்றே எடுக்காம சுவிட்ச் ஆப் பண்ணிட்டான். வேற வழியே இல்லாம நானே என்ன காப்பதாக ஓடுனேன் அப்பையும் என்ன ஒருத்தன் புடிச்சிட்டான். அவன் என்ன பண்ணுனான் தெரியுமா அதி?
என்ன அசிங்கமா தொட ஆரமிச்சிட்டான் அதி… இங்க” அவள் இடையை சுட்டி காட்டினாள், “இங்க தொட்டான்…” தன் தொடையை காட்டினாள் வழியும் கண்ணீருடன், “அப்ற… அப்றம் இங்க கூட தொட வந்தான்… நெருப்புல நின்ன மாதிரி இருந்துச்சு, எனக்கே என் மேல அருவருப்பா இருந்துச்சு.
கெஞ்சுனேன் அதி, விட்டுடு எவ்ளோ பணம் வேணாலும் தர்றேன்னு ஆனா அவன் காதுல எதுவுமே விழுகல கண்ணுல அப்டி ஒரு கேட்ட பார்வை… இப்ப நெனச்சாலும் எனக்கு நைட் தூக்கம் வராது”
அவள் மார்பை காட்ட அதித் அவளை பேச விடாமல் தன் நெஞ்சோடு அணைத்து தானும் அமைதியாக கண்ணீர் சிந்தினான்.
“எனக்கு உன்னோட பாஸ்ட் எதுவுமே வேணாம் ஜான். தெரியாம கேட்டுட்டேன். என்னால இவ்ளோ கஷ்டத்தை நீ அனுப்பிச்சிருக்குற ஆனா நான் எவ்ளோ ஈஸியா எல்லாத்தையும் பண்ணி வச்சிருக்கேன்”
“இல்ல அதி நான் சொல்லனும். என் கைக்கு கெடச்ச ஒரு கல்ல வச்சு அவனை அடிச்சிட்டு ஓட பாத்தேன், மறுபடியும் என்ன இழுத்து கீழ தள்ளி கோவத்துல என் வயித்துலயே அத்தனை தடவ மிதிச்சான், அதே கல்ல வச்சு என் காலையும் அடிச்சான். எப்டியோ அவங்ககிட்ட இருந்து எஸ்கேப் ஆகி வண்டி வந்த பக்கம் ஓடுனேன்”
திடீரென நிறுத்தியவள் அவன் முகம் பார்த்து பதட்டமாய், “சாத்தியமா சொல்றேன் அதி அவங்க யாரையும் என்ன தொட விடல, கடவுள் மேல சாத்தியமா சொல்றேன் அன்னைக்கு எனக்கு எதுவுமே தப்பா நடக்கல”
அவள் முகத்தை பிடித்து உலுக்கியவன், “போதும்டி விடு ஒரு தடவ உன் மேல சந்தேகப்பட்டு அதுக்காக நீ அனுபவிச்ச வலி எல்லாம் போதும், உனக்கு என்ன நடந்திருந்தாலும் எனக்கு கவலை இல்லடி எனக்கு நீ தான். நீ மட்டும் தான்” உரிமையான கோபத்துடன் கூறினான்.
தலை அசைத்து கண்ணீரை துடைத்து, “பயத்துல வேகமா ஓடுன நான் தெரு கோடில போய் அவங்க என்ன துரத்துறாங்களானு பயத்துலயே பாத்துட்டு போனதுல எந்த மாதிரி ரோடுன்னு பாக்க மறந்துட்டேன் என்ன நடந்துச்சுனே தெரியல அடுத்த செகண்ட் ஒரு லாரி டயர் கீழ இருந்தேன் என் கண்ணுல பட்டது அந்த லாரி டயர் அப்றம் என் தலைக்கு கீழ தெரிஞ்ச ரத்தம் மட்டும் தான்.
அவ்ளோ தான் சேந்துடுவேன்னு ஒரு பக்கம் சந்தோசம், இனி கஷ்டம் இருக்காதுலன்னு இன்னொரு பக்கம் என்ன பாத்து ஒரே ஒரு தடவ ஒருத்தர் முழுசாக அன்போட முழுசா ஒரு நாள் பாத்துக்கணும்னு ஆசை நிறைவேறாமையே போய்டுமோனு வருத்தம். ஆனா விதி என் வாழ்க்கைல நீ அனுபவிச்ச கஷ்டம் போதாதுன்னு இருக்க சொல்லி மறுபடியும் என்ன உயிரோட கொண்டு வந்துச்சு. ஹாஸ்பிடல்ல நான் கண்ண திறந்து பாதப்ப ஒருத்தர் இல்ல அதி என் பக்கத்துல.”
“இது எல்லாம் விட என்ன கொடும தெரியுமா அதி, நான் கோமால இருந்தேன். பதினோரு மாசம் அந்த பதினோரு மாசத்துல தெரியாம கூட என்ன என் வீட்டுல இருந்து வந்து பாக்கல. ரெண்டே நாள்ல லண்டன் போய்ட்டேன். எல்லாத்தையும் தூக்கி போட்டு போயிருந்தாலும் அங்கையும் லைப் அவ்ளோ ஈஸியா அமையல, டெய்லி அன்னைக்கு நடந்த எல்லாமே சிகுவன்ஸ்ஸா என் மண்டைல ஓடிட்டே என்னோட தூக்கம் மொத்தத்தையும் டேக் ஓவர் பண்ணிக்கும்.
கண்ண மூடுனாவே ஏதேதோ தப்பான சம்பவம் தான் வரும். எனக்கே தெரிஞ்சது நான் ரொம்ப டீப் டிப்ரஷன்ல இருக்கேன்னு. ஒரு செகண்ட் கூட என்னால ஒரு விசயத்துல காண்சென்ட்ரேட் பண்ண முடியல. யாராச்சும் ஹெல்ப் பண்ண மாடங்களான்னு டெய்லி அழுவேன் ஆனா கண்ண தொடச்சு விட கூட ஆள் தான் இல்லையே. நம்பிக்கை போச்சு, மனுசங்க மேல இருக்க நம்பிக்கை மொத்தமா போய்டுச்சு.
பைத்தியம் புடிச்ச மாதிரி இருந்துச்சு. டாக்டர் கிட்ட போனேன், ஹாஸ்பிடல்ல மூணு தடவ சூசைட் அட்டம்ப்ட். அப்றம் தான் இந்த பில்ஸ் தூக்கத்துக்காக எடுக்க ஆரமிச்சேன். அது இல்லாம ஒரு நாள் கூட என்னால இருக்க முடியல” அவன் பிடி ஜான்வியின் தோளில் இருந்தாலும் இருவருக்கும் இடையில் கனத்த அமைதி மட்டுமே சில நிமிடங்கள் இருந்தது.
“உன்னோட வலி எல்லாத்துக்குமே நான் மட்டும் தானே ஜான் காரணம்? நான் மட்டும் உன் வாழ்க்கைல வராம இருந்தா இவ்ளோ கஷ்டம் உனக்கு இல்ல. நான் இந்த கல்யாணத்துக்கு ஆக்ஸப்ட் பண்ணிருக்கவே கூடாது, ப்ச் நீயாவது என்ன வேணாம்னு சொல்லிருக்கலாம்ல ஜான்”
தன் மீது மட்டுமே அவன் கோவம் படிந்தது. தன்னை விட்டு சற்று தள்ளி அமர்ந்த கணவனை பார்த்து உள்ளுக்குள் சிரித்தவள் அவனுக்கு நெருக்கமாக அமர்ந்தாள்.
“நான் ஒதுக்குறேன் அன்னைக்கு நைட் நான் அங்க வரலைனா இது எல்லாம் நடந்துருக்காது ஆனா நீ இன்னொரு ஆங்கில்ல யோசிக்க மறந்துட்ட அதி. நான் சாக கிடக்குற நிலமைலையும் தான் பெத்த பொண்ண பாக்காம தன்னோட பிசினஸ் தான் முக்கியம்ன்னு சொல்ற மனுசங்க அவங்க அதி. இது நாள் வரைக்கும் என்கிட்டே அவங்க வரல, ஒருவேளை என்ன பாசமா, தான் செஞ்ச தப்ப உணர்ந்து வந்தா அவங்கள கூட நான் மன்னிக்க தான் செய்வேன்.
இதுல என் மேல பாசத்தை கொட்டுற உன்ன என் லைப்ல என்னால எப்படி போடான்னு சொல்ல முடியும்? இதெல்லாம் நடந்தது கூட ஒரு வகைல நல்லது தான். எனக்கு ஆடம் கெடச்சிருக்க மாட்டான். ஆறு வருஷம் அதே தனிமை, எதிர்பார்ப்புன்னு இல்லாம நான் லண்டன்ல ஏதோ நிம்மதியா இருந்தேன். ஆனா இப்ப எனக்கு எனக்கு ஒரு அழகான பேமிலி அதுக்கு மேல ஒரு க்யூட், ஹாண்ட்ஷம் ஹஸ்பன்ட் என்ன கொழந்த மாதிரி பாத்துக்குறேன். இதுக்கு மேல எனக்கு அந்த ஆண்டவன் குடுப்பான்”
அரை மனதாய் தலையை ஆட்டினான். ஜான்வி அதித்தை நெற்றியில் முத்தமிட்டு அவன் நெற்றியில் தன் நெற்றி முட்டி தன்னுடைய ஆழமான அன்பை அழகாய் ஒரு சிரிப்பில் கூறினாள்.
“ஐ அம் சாரி ஜான்”
அவனை படுக்கையில் தள்ளி அவன் நெஞ்சில் சாய்ந்து, “மூடிட்டு தூங்கு விடிய இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு” மனைவியின் அதிரடியில் தன்னை மறந்து சிரித்தவன் அவள் அன்னைப்பிலே உறங்கியும் போனான்.
கிறீன் கஃபே என்னும் கடையில் விஹானின் வரவிற்காக கடந்த அரை மணி நேரமாக வாசலையே பார்த்திருந்தாள் ஜான்வி. சரியாக அவன் கூறிய நேரத்திற்கு அரை மணி நேரம் பிறகு வந்தவன் உலகிலே தான் தான் மிகவும் நல்ல மனிதன் தோரணையில் வந்து அவளை பார்த்து சிரித்தான்.
“எதுக்கு விஹான் அப்டி பண்ண?”
“நான் என்ன பண்ணேன்?”
“எங்க ஆபீஸ்ல நடந்த பயர் பத்தி கேக்குறேன் நான்”
“அது நான் இல்லப்பா” வேகமாக வந்தது பதில்.
“என்கிட்டே பொய் சொல்லாத விஹான். எனக்கு தெரியும் அது நீ தான்”
“நான் உன் மேல ரிவென்ஜ் எடுக்குறது உண்மை தான் ஆனா நான் பொய் சொன்னது இல்ல”
அது உண்மை தான், அவன் விஹான் கன்னியமானவன் அதே நேரம் அவனிடம் ஜான்வியை பழி வாங்கும் எண்ணம் தவிர வேறு எந்த தீய எண்ணங்களும் இல்லை. இப்பொழுது ஜான்விக்கு குழப்பம் மட்டுமே அதிகம் இருந்தது.
“நீ ஏன் இத பத்தி உன் வீட்டுகார கிட்ட பேச கூடாது?” கழட்டி வைத்திருந்த கூலர்ஸை எடுத்து மீண்டும் அணிந்தவன் ஜான்வியை பார்த்து ஒரு நமட்டு சிரிப்புடன் வெளியில் நடந்தான்.
சந்தேகம் மட்டுமே மூலையில் இருந்த வீட்டிற்கு வந்த ஜான்விக்கு அதிர்ச்சியாய் அவள் பெற்றோர் இருவரும் அவர்கள் வரவேற்பறையில் அமர்ந்திருந்தனர்.
