Skip to content
Post Views: 16,604
ஹரே கிருஷ்ணா
நானே உன் சரிபாதி…
காலை ஒன்பதரை மணிக்கே சுட்டெரிக்கும் சென்னை வெயில்… அஷோக் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்… பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு… ஒரே ஓட்டமாக ஓடி உள்ளே வந்து.. சுத்தியும் முத்தியும் பார்த்துக் கொண்டே… acயின் அருகில் போய் நின்றபடி மூச்சை விட்டாள் கன்யா சதாசிவம்.
இந்த வெயிலை பொருக்க முடியாமல்தான் இந்த ஓட்டம்… முக்காடிட்டு… தலையை கட்டி, தன் மூக்கு வரை நன்றாக இழுத்து மூடி, கைகளில் களவுஸ் போட்டு, ஹெமெட் போட்டு எல்லாம் செய்துதான் வந்திருந்தாள் ஆனாலும்… அவளால் அந்த வெயிலை தாங்க முடியவில்லை.
Advertisement
சத்தியம் செய்தாலும் நம்ப மாட்டார்கள் இவளுக்கு திருமணம் ஆகிவிட்டதென… பார்ப்பதற்கு கல்லூரி பெண் போல்தான் இருந்தாள். அதுவும் இவளின் வனப்பான நெடு நெடு உடல்வாகுக்கு அழகான ஆரஞ்சி வண்ண டாப்… டார்க் ரோஸும் பாட்டம், நல்ல ரோஸ் வண்ண எம்ரையீடு ஷால்… என அவளின் கோதுமை நிறத்திற்கு அந்த உடை கச்சிதமாக பொருந்த, ஏனோ அந்து உடுப்பு அவளின் இளமையை மெருகேற்றியே காட்டியது…
தனது கருகரு அடர்த்தியான முடியை… பின்னலாக பின்னி போட்டிருந்தாள். அதில் சின்ன எல்லோ ரோஸ்… எட்டி பார்த்தது, அதற்கு ஈடாக முகமும் இருக்க, கழுத்தில் நீண்ட செயின்… கையில் கனமான வேலைபாடுகள் இல்லாத டெய்லி யூஸ் தங்க வளையல்… அவ்வளவுதான்.
ஆனால் இவள் உள்ளே வந்தவுடன்… ஏதோ ஒரு மணம் வந்தே தீரும்… அது கண்டிப்பாக நல்ல மனநிலையைதான் தரும்… என்னவென சிலர் ஊகிக்கவும் முடியும்… அப்படியோரு சென்ட் பக்ட்ரி இவள்.
Advertisement
அவள் தூர வரும்போது “வந்துட்டாடா கனி” என எல்லோரும் கண்டுகொள்வர், அதில் அவளுக்கு சற்று பெருமிதமே…
Advertisement
இப்போது, இவளின் இந்த திருட்டு முழியை, வாஞ்சையாக பார்த்தபடி… “க்கூம்” என்ற கனைப்பு சத்தத்துடன் வந்தான் யெஸ்வந்த.
கன்யா “வந்துட்டியா… இன்னிக்கும் சீக்கிரமா…
ஒண்டியகட்டையா இருந்துக்கிட்டு நீ படுத்தற பாடு… இருக்கே… “ என்று பெருமூச்சு விட்டாள்.
Advertisement
அவளின் பேச்சையெல்லாம் காதில் வாங்கதவனாக யெஸ்வந்த் தன் புருவத்தை உயர்த்தி அவளை பார்த்து தன் இரு விரல்காலும் எடு எடு எனும் விதமாக சைகை செய்ய…
கன்யா “என்னை மாதிரி குடும்ப இஸ்த்திரிங்க சாபம் உன்னை சும்மா விடாது” என வாய்க்குள் முனகியபடி… அவன் முன் தன் டிபன் பாக்ஸ்சை எடுத்து கொடுத்தாள்.
அதை வாங்கியவன்…. எதுவும் பேசாமல் தன் மூக்கை உறிஞ்சியபடி… “என்ன பெருமாள் கோவில் போயிட்டு வந்தியா” என்றான் கிண்டலாக.
கன்யாவும் அவனுடன் உள்ளே நடந்தபடி “இல்லையே “ என தன் நெற்றியை தொட்டு பார்த்துக் கொண்டாள்.
யெஸ்வந்த இப்போது சத்தமாக சிரித்தபடி “என்ன புது பெர்ப்யூமா..” என்றான் தனது சிரிப்புக்கு நடுவே…
கன்யா முகத்தை திருப்பிக் கொண்டே “எவ்வளோ கஷ்ட்டப்பட்டு பிர்பர் பண்ணேன்… இப்படி சொல்லிடியே… போ.. பையா, சாரி ஜி…” என்றாள் இறங்கிய குரலில்.
யெஸ்வந்த்க்கு அண்ணா என்று கூப்பிட்டால் பிடிக்காது அதனால் ஜி எனதான் அழைக்க சொல்லியிருந்தான்.
யெஸ்வந்த “ நாலு ப்ளேவர்… இதுல… புதுசாமா… எங்களுக்கெல்லாம் மூக்கு நல்லாத்தான் இருக்கு… “ என்றான்.. தனது பயிற்சி தமிழில், தொடந்து
“போ போ என்னோட டிபன் பாக்ஸ்… அங்கதான் இருக்கு.. எடுத்து வா” என அவர்களின் டைனீங் ஹாலுக்கு சென்றனர் இருவரும்.
கன்யாவும் “என்ன சொல்லு வாழ்க்கையில, தனியா தங்கியிருக்கற பேச்சிலருக்கு மட்டும் கேள் பிரின்டா இருக்கவே கூடாது… எல்லாத்தையும் அவனே முழுங்கிக்கிறான்… “ என அவன் முன் செல்ல இவள் பின் புலம்பியபடி சென்றாள்.
இருவரும் அமர்ந்து பாக்ஸ்சை ஓபன் செய்ய… அவனின் டிபன் பாக்ஸ்சில்… ஏதோ தீஞ்சி போயி… வட்ட வட்டமாக இருக்கவும் பொருக்க முடியாம, கன்யா “என்ன பா இது… சொன்ன தெரிஞ்சிகிட்டு… அதோட பேர் சொல்லி சாப்பிடுவேன்ல்ல..” என்றாள் அழாத குறையாக.
யெஸ்வந்த “பூரிம்மா… உருளை கிழங்கு கூட இருக்கு… அந்த சின்ன டப்பாவ பாரு “ என தனது அதிகார குரலில் சொல்லியபடி, அவள் கொண்டு வந்த ஊத்தப்பத்தையும் வெங்காய சட்டினியயும் பாதி முடித்திருந்தான்.
கன்யா “என்ன பா இது… தாளிக்க வச்ச எண்ணையில… பொரிச்சியா பூரிய…
பூரிய யாரு செஞ்சாலும் நல்லா வரும்டா.. ஆனா பிசுநாறி… நீ செஞ்ச மட்டும்தான் இப்படி… என்ன வஸ்துனே கண்டுபிடிக்க முடியாம இருக்கும்” என்றாள் சின்ன குரலில்…
அதெல்லாம் யெஸ்வந்த காதில் விழவில்லை… விழுந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டான்… அவன் அந்த நாலு தோசையையும் விழுங்கிவிட்டு… மீதமிருந்த சட்னியையும் முடித்துவிட்டு எழுந்து சென்றேவிட்டான்.
அவனை வெறித்து பார்த்தபடி… அந்த கொடுமையை சத்தம் போடாமல் உண்டாள் கன்யா.. “இதெல்லாம் நமக்கென்ன.. புதுசா…” என மனதில் சொல்லியபடி.
அதன்பின் நேரம் வேளையில் கரைய… நண்பர்கள் இருவரும் பேசவே நேரமில்லை… லாவண்யா அவர்தான் கன்யாவின்… பக்கத்து சீட்டு, நடுத்தர வயது… பக்கா ஹவுஸ் ஒயிப்… கொஞ்சம் மூக்கு நீளம்.
எனவே அவர்தான் “என்ன இன்னிக்கும் அவன் முழுங்கிட்டானா உன் சாப்பாட.. செலவே இல்லாமல் உடம்ப வளக்கறான்… உன்ன சொல்லணும்… உனக்கு அவன் மேல சாப்ட் கார்னர்…. அதான் கொடுக்கிற” என்றார் வினயமாய்.
கன்யாவும் “போங்கக்கா… உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி..” என்றபடி அவரிடம் பேச்சை குறைத்து தன் வேளையில் மூழ்கினாள்.
ஆண் பெண் நட்பு அப்படிதான்… அவரவர் மனதை பொறுத்தது… அடுத்தவற்கு… விளக்கவோ, புரியவைக்கவோ முயற்சி செய்ய கூடாது.
ஏனோ கன்யாவிற்கு இது புரிந்து இருந்தது. மதியம் சரியாக ஒரு மணிக்கு லஞ்ச் டைம்… வந்து நின்றான்.. யெஸ்வந்து இவளின் கேபின் அருகில்… அவளின் பேகை திறந்து லஞ்ச் பாக்ஸ் எடுத்து சென்றுவிட்டான்.
அனுமதியும் கேட்கவில்லை… எடுப்பதற்கு அவனிற்கு தயக்கமும் இல்லை… இயல்பாய் எடுத்து சென்றான், முழு சாப்பாடு கன்யாவினுடையது எப்போதும்…
அவளின் அம்மா, அவளின் அண்ணன் கார்த்திக்கும், கன்யாவிற்கும்… அப்படிதான் லஞ்ச் கட்டுவார். சாம்பார், சரம், பொரியல், மோர் என… சரவணபவன் மீள் போலவே இருக்கும்…
அன்று வெள்ளிகிழமை என்பதால் சாம்பார்தான் கன்யா வீட்டில். எனவே யெஸ்வந்து பொறுமையாக உண்டான். விரல்கலில் எங்கேனும் உணவு தங்கிவிடுமோ என விரல்களை தன் நாவால் சுவைத்துக் கொண்டிருந்தான்.
கணக்கை முடித்து… அரைமணி நேரம் கழித்து… அந்த நேரம் சரியாக கன்யா வந்தாள் லஞ்ச் ஹாலலுக்கு… அவன் சாப்பிடும் அழகில், அவனருகில் வந்தவள் “முடிச்சாச்சா…” என்றாள் வெட்டவா குத்தவா என்ற பார்வையோடு.
இவளின் நிலை பார்த்து தன் எதிரில் இருந்த உணவை கண்ணால் காட்டினான் யெஸ்வந்த்… அங்கு இவளுக்காக… காத்திருந்தது பிரியாணி… கூடவே மசாலா மோர்…
காலையில் வேறு சரியாக சாப்பிடாததால்… யெஸ்வந்தை நிமிர்ந்து கூட பார்க்காது…. அவனுக்கு பங்கு கூட தராது எல்லாவற்றையும் விழுங்கிய பிறகே நிமிர்ந்தாள்… கையில் மசாலா மோர்ருடன்.
இருவரும் இப்படிதான். அலுவல் என வந்துவிட்டால் இருவரும் சரியாக இருப்பார். இப்படி ப்ரீ டைமில் மரியாதை எப்போவாது வரும் கன்யாவிற்கு… அதை பெரிதாக எதிர்பார்க்கவும் மாட்டான் யெஸ்வந்த.
அவள் வந்த புதிதில்… இவளின் ரிப்போர்ட் ஆபீசர் அவன். முதலில் கடுமைதான் அவன்… இப்போது பேசுவது போல் தமிழிலும் பேசமாட்டான்… ஆங்கிலமும் ஹிந்தியும்தான் கலந்து கத்துவான்..
வேலை சொல்லி தருவான்தான் ஆனால், ஒருமுறைக்கு மேல், கடித்து துப்பிவிடுவான். முகம் எப்போதும் சீரியசாகவே இருக்கும் அப்போது.
ஆம் அப்படிதான் தோன்றும் அவளிற்கு. ஒரு முறை, ஒரு அக்கவுண்டில்… மாறுதலாக பணம் அனுப்பியதாக இவள் மேல் புகார் மேலிடத்திலிருந்து.
இவதான் புதிதாக வந்ததால் இவள்தான் செய்திருப்பாள் என எண்ணம் எனவே அப்படி மெமோ வந்தது. இவள் பார்த்துவிட்டு… தான் இல்லை என பதிலும் சொல்லிவிட்டால்… ஆனால் பேச்சை கேட்கவில்லை மேலிடம்.
அதை எப்படி விளக்குவது என கன்யாவிற்கு தெரியாத நிலையில்… அன்று மதியம்.. ஒரே அப்செட்… லஞ்ச் உண்ணாமல் யாரிடம் கேக்கலாம் என சிந்தனையில் இருக்க…
யெஸ்வந்திடம் கேட்கவும் தயக்கம்… பெரிய பிரான்ச் அது. எல்லோரும் எப்போதும் பிஸி… நிமிர்ந்து கூட பார்க்க நேரம் இருக்காது. இதில் யார் இவளுக்கு உதவி செய்வார்கள். எனவே ஒரே யோசனை.
அன்று தானே வந்து பேசினான்… யெஸ்வந்த. எப்படி விளக்க வேண்டும் என சொல்லி அதற்கான செய்கைகளையும் செய்து கொடுத்தான். இப்போது அதெல்லாம் பெரிதான விஷயமாக தெரியவில்லை.
ஆனால் சேர்ந்த புதிதில் எல்லாம் மிரட்டியதில்… சற்று கவனிக்க நேரமில்லை அவளிற்கு அவ்வளவுதான். அதற்கு ஈடாக… தன் உணவை கொடுத்து நட்பை வளர்க்க தொடங்கினாள் கன்யா… அதன் தாக்கம்தான் இப்போது வரை தொடர்கிறது இருவரிடமும்.
என்றாவது ஒருநாள் இப்படிதான் அவள் உணவுகளை முழுவதுமாக விழுங்குவான். மற்றபடி அவனிற்கு மேனேஜர் உடன்தான் லஞ்ச். பேங்க் விஷயங்களை பேசியபடியே இருவரும் உணவை முடிப்பார்.
இன்று மேனேஜர் வெளியே சென்றதால் இவள் லஞ்ச் ஸ்வாக அவ்வளவுதான். ஆனால் காலை இவள் உணவுதான் எப்போதும்.
யெஸ்வந்த ஆபீஸ் பிரின்ட்… நல்லவனா கெட்டவான தெரியாது. அவளிடம் தப்பான பார்வை கூட இருக்காது. தேவையில்லாமல் அருகில் வர மாட்டான்.
ஆனால், அவளை முடிந்த மட்டும் கிண்டல் செய்வான். அவளின் சோதனை எலி இவன். எந்த பெர்ப்யூம் செய்தாலும்… இவனுக்கும் ஒரு சின்ன விரல் நீல பாட்டில் வந்துவிடும்…
யெஸ்வந்தும் கொஞ்சம் கூட சங்கடபடாமல் அதை யூஸ் செய்வான். அளவான அழகான நட்பு…
இந்த இயற்கை முறையில் பெர்ப்யூம் செய்வதுதான் கன்யாவின் யோகா.. ஹாபி, டென்ஷன் ரிலீவர் எல்லாம்… அவளின் சொந்த முயற்சி… எதையாவது பார்த்து கெமிக்கல்.. இல்லாமால் இயற்கை முறையில் பெர்ப்யூம் தயாரிப்பது.
வாசனை என்பது அவளுக்கு பிடித்த விஷயம்…. எதிலும் ஒரு குட் ஸ்மெல் வேண்டும் என நினைப்பாள். முன்பெல்லாம் கல்லூரியில் படிக்கும் போது… வகை வகையாக பெர்ப்யூம் இருக்கும் அவளிடம்.
மாதமானால் அதற்கெனவே காசு கேட்பாள் தன் தந்தையிடம். வீட்டிலும் அப்படியே, யாரும் மறுத்ததில்லை… அவள் விருப்பத்திற்கே வாங்கியும் குவிப்பார்கள்.
“லேட்டா வந்தா… அர்ச்சனா ஸ்வீட்டோடதான் வரணும்” அப்படின்னு ஒரு பழைய விளம்பரம், அப்படிதான் இவளும் தன் அண்ணன், அப்பா, தன் அக்கா பிறந்த வீடு வந்தாலும், இப்படி யார் எங்கு வெளியூர் சென்று திரும்பி வந்தாலும், இவளுக்கு வாசனை திரவியம் வாங்காமல் வர கூடாது.. அப்படியொரு… பைத்தியம், ஆனால் எல்லாம் தெளிந்தது அவளது கல்லூரி இரண்டாம் வருடத்துடன்.
ஏதோ இப்போதுதான் கொஞ்ச கொஞ்சமாக அவளின் அண்ணன் இதை தொடங்கி வைத்தான் இந்த ஆறு மாதத்திற்கு முன், அவளை யோசிக்க விடாமல் செய்வதற்காக… அதுதான் இப்போது வரை ஓடுகிறது.
வேளையில் சேர்ந்து இப்போது இரண்டு வருடம் ஆகிறது…. வேலைக்கு வரும் வரை படிப்பு கோச்சிங் என நாட்கள் சென்றது.
படிப்பதற்கும் எளிதில் மசியவில்லை… ஆனால் வீட்டில் நிற்க விடாமல் விரட்டினர் அனைவரும், கையில் குச்சி இல்லாத குறையாக. அவளின் அப்பா இருந்தவரை கட்டுபாடுதான் எல்லாம்.
அதிலும் அவளின் அண்ணன் கார்த்திகேயன், அவளை நிற்க விடமாட்டான், கல்லூரி முடித்து அவள் வருவதற்கு முன் இவன் நிற்பான் வீட்டில்… அவளை கோச்சிங் கிளாஸ்சில் விடுவதற்கு.
அப்போது அவன் ஒரு ப்ரைவேட் கம்பெனியில் hrஆக இருந்தான். எனவே பெரிதாக டைமிங் கிடையாது. இவன் வர போக இருக்கலாம். எனவே வந்துவிடுவான் நேரத்திற்கு.
அப்போதெல்லாம் அழுது கொண்டே செல்வாள் வகுப்பிற்கு “என்னை யாரும் புரிஞ்சிக்க மாட்டேன்கிருங்க… என்னை யாரும் நினைக்கவே மாட்டேங்கிறீங்க” என ஒரு பல்லவியை தினமும் பாடியபடி, கார்த்தியுடம் செல்வாள்.
அப்போது வேண்டுமென்றே யாரும் அவளை புரிந்துகொள்ளவில்லை, அவளின் பேச்சை காதில் கூட போடவில்லை… எல்லாம் அவளின் தந்தையின் சொல்படி நடந்தது.
எல்லாம் முடித்து இரவு எட்டு மணிக்குதான் வருவார்கள் இருவரும் வீட்டிற்கு… வந்தவுடன் கல்லூரி வேலை அவளை இழுக்கும்.. உண்ண கூட முடியாமல் தூக்கம் கண்ணை சுழற்றும்… அப்புறம் எங்கே சண்டை போடுவது… எனவே சாப்பிட்டு உறக்கம்தான்.
அதன்பின் அதிகாலை ஹிந்தி கிளாஸ், அது முடிந்து கல்லூரிக்கு என அவளை கார்த்தியும் சேர்ந்துதான் கொடுமை படுத்தினான். அவளின் கொடுமையில் இறுதி பரிட்சை(nishanth) வரை முடித்துவிட்டாள்.
எனவே வீட்டார் அவளை… திசை திருப்பிய விதம் சரியே என இப்போது கன்யா உணர்ந்தாலும். மனதின் உள்ளே… அழுத்தி அழுத்தி… திணித்து… ஒரு முகத்தை இல்லை இல்லை உறவை மறைத்துதான் வைத்திருக்கிறாள்.
அழகான.. படிந்த தலை முடியுடன், நல்ல தீட்சண்யமான விழிகள்… பட்டவர்த்தனமாக தெரியும் படிப்பு கலையுடன் கூடிய.. சாதுவான முகம்தான் அது.
என்ன செய்தும் எங்கு சென்றும் அவன் முகத்தை மட்டும் தொலைக்க முடியவில்லை அவளால். அவன் நினைவிலிருந்து மீளவே இந்த படிப்பு வேலை… பெர்ப்யூம் எல்லாம்.
ஆனால் எங்கே… எப்படியேனும் ஒரு நாளைக்கு ஒருதரமாவது சொல்லி வைத்தாற்போல் வந்து விடுவான் அவளின் மனக்கண்ணில்… அந்த நேரத்தை மட்டும் கடக்க… அவள் மேற்கொள்ளும் எல்லாம்…. தோல்வியே…
அதனாலோ என்னவோ இப்போதெல்லாம் எதற்கும் அலட்டிக் கொள்ளாத ஒரு பாவம் வந்துவிட்டது அவள் முகத்தில்…. போங்கப்பா.. நடக்கறது நடக்கட்டும்… என ஒரு எண்ணம்.
ஏனோ தானோவென ஒரு உடை, கண்களை எட்டா சிரிப்பு… எப்போதும் ஏதோ சிந்தனை என இருந்தவளை சற்று தேற்றியிருந்தான் அவனின் நட்பால் யெஸ்வந்த்…
இப்போதுதெல்லாம் யெஸ்வந்து திட்டி திட்டி கொஞ்சம் உடைகள் விஷயத்தில் கவனம் வைக்க தொடங்கியிருக்கிறாள். அப்படியே… தன்னையும் கவனிக்க தொடங்கி இருக்கிறாள்.
முதலில் இங்கு போஸ்டிங் கிடையாது, ஹைதராபாத்தில்தான்… எனவே ஒரு வருடம் அதில்தான் கவனம்… கன்யாவிற்கு, தெரியாத ஊர், புரியாத மொழி… ஹிந்தி தெரியும் என்பதால் சற்று காப்பாற்றியது.
அதன்பின் மாற்றலாகி சென்னை வந்து சேர்ந்தாள், கொஞ்ச கொஞ்சமாக வேலை பழகவும்… பழைய கேள்வி.. மேலே வந்தது… அடிக்கடி அப்சட்… தனியா போய் உட்காருவது என… எல்லாம் நடக்க தொடங்கியது.
வீட்டில் கொஞ்சம் விலக தொடங்கவும் எப்போதும் போல் அவளின் அண்ணன் கார்த்திதான் கவனித்தான். அதை மாற்ற அவளுக்கு பிடித்ததை செய்ய சொன்னான்… இப்போது அது வேலை செய்ய தொடங்கிவிட்டது.
கார்த்திக்குதான் இன்னும் மூன்று மாதத்தில் திருமணம். அதில் வீடு கொஞ்சம் பரபரப்பாக இவளும் தன்னிலையில் இருந்து வெளியே வந்து சுழல தொடங்கி இருக்கிறாள்.
ஆனால் அவளின் வீட்டில், கன்யாவை… முற்றிலும் இல்லை வெளிக்கொணரும் எண்ணம். அதற்காகத்தான் கார்த்தியின் இந்த திருமணமும் கூட…
இப்போது கன்யாவை முன் வைத்தே இந்த திருமணம்… ஆனால் கன்யா சதாசிவம் அதையெல்லாம் தன் மனதில் வைக்காது… உள்ளே “வருவான்… கண்டிப்பாக வருவான்… கார்த்தி கல்யாணத்திற்கு வந்தே ஆக வேண்டும்… வருவான் அவன்” என கருவிக் கொண்டிருந்தாள்.
error: Content is protected !!