Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Un Sari Paathi

Un Sari Paathi 13

அத்தியாயம்       13

மறுநாளே மேலே தனதறைக்கு ஒரு வாஷிங் மெஷினும்,                 LED டீவியும் வாங்கியிருந்தான். வீட்டில் எல்லோரும்         கன்யாவைதான் கிண்டல் செய்தனர்.

கல்யாணி தன் சம்பந்திக்கு போன் செய்து “உங்க மாப்பிள்ளை…         தனியா டிவி.. வாஷிங் மெஷின் எல்லாம் வாங்கி வைச்சுட்டான்…        போக போக பாருங்க… எல்லாம் சரியா போகும்” என இங்கு        இருவரும் நல்லவிதமாக பேசிகொள்வதையும் சொன்னார்.



Advertisement

அதை கேட்ட மைதிலிக்குதான் “அப்பாடா..” என நிம்மதி வந்தது.      கல்யாணி “நீங்க ஒரு தடவ வந்துட்டுதான் போங்களேன்…             கன்யா சந்தோஷ படுவா” என்றார் ஆற்றாமையாக.

மைதிலி “வரேன் அண்ணி, வரேன்.. இன்னும் கொஞ்ச நாள் ஆகட்டும் கண்டிப்பா வரோம்” என்றார் கரகரப்பான குரலில்.

அன்று கன்யாவின் வீடு, சென்றபிறகு..  வெங்கட்டும் கல்யாணியும்     சென்று கன்யாவின் வீட்டில் பேசிவிட்டே வந்தனர் ஆறுதலாக.        எனவே சம்ந்திகளுக்கிடையே பேச்சு இயல்பாய் சென்றது.

Advertisement

அதானல் இங்கு நடக்கும் ஒவ்வரு விஷயமும் பெரியவர்கள்        இயல்பாய் பரிமாறிக் கொண்டனர்.

Advertisement

கன்யாவும், சதாவும் அந்த வாரம் முழுவதும் நல்ல மனநிலை       யிலேயே இருந்தனர். கன்யா தனது இயர் எண்டிங் வேளையில்         சற்று பிசியானதால்… சத்தமில்லை அந்த அறையில்…

ஆனால், ஒருவரோடு ஒருவர் தங்கள் முகத்தை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க பழகினர். கன்யா வரும் நேரமறிந்து, சதா        ஹாலில் காத்திருக்க தொடங்கினான். எப்படி இந்த மாற்றம் என    அவனிற்கே புரியவில்லை… ஆனால் எதிர்பார்க்க தொடங்கினான்.

அதை கன்யா கவனித்தாலோ இல்லையோ வீடு மொத்தமும்         கவனிக்க தொடங்கியது. சதா தனி சோபாவில் அமர்ந்தபடி            வாசலை பார்த்தபடி இருப்பான்… கல்யாணி ஏதாவது கொறிக்க கொடுத்தாலும்.. அதை துச்சமாக பார்த்து மறுத்துவிட்டு, கடமையே   கண்ணாக இருப்பான்.

Advertisement

சம்மு வரும்போதே “என்ன ண்ணா… அண்ணி இன்னும் வரலையா”     என்க.

“ம்… என்ன கேட்ட” என்பான், போனை பார்த்தபடி.

சம்மு சிரித்தபடி “ம்மா… எனக்கு காபி” என்றபடி உள்ளே சென்று     விடுவான்.

கன்யா வரும்போது முகம் மலர அவளை பார்த்துக் கொண்டே அமர்ந்திருப்பான். பேச்சுகள் இருக்காது. ஆக, மேலே சென்று            அவள் உடை மாற்றி கீழே வரும் வரை சதா, தன் தந்தையுடன்      பேசியபடி அமர்ந்திருப்பான், இல்லை சம்முவுடன் அரட்டையில்     இருப்பான்.

ஆக இந்த ஒரு மணி நேரம் அந்த குடும்பத்திற்கே தேவையாக      இருந்தது. இப்போது குடும்ப நிகழ்வுகள் தெரிய தொடங்கியது      சதாவிற்கு.

அப்படிதான் கீர்த்தி-கார்த்தி திருமணத்தை கன்யா எப்படி நடத்தினாள்      என கல்யாணியும், வெங்கட்டும் தன் மகனிடம் சொல்லி       பெருமைபட்டுக் கொண்டனர்.

நீ போன உடனே… அப்பாக்கு உடம்பு முடியாம போச்சே.. அப்போ, அவதாம்ப்பா… வந்தா… நாங்க வான்னு சொல்லவேயில்ல… சமத்து பொண்ணுப்பா… நீ போன் கூட செய்து கேட்கல… என குறைபடவும்  செய்தார்..

இப்படி நிறைய பழைய கதைகள்… இதில் எல்லா இடத்திலும்          கன்யா இல்லாமல் இல்லை. தான் இட்டு நிரப்பவேண்டிய          இடங்களில் எல்லாம் கன்யா..

ஆக, சதா… தான் நினைத்ததுபோல் இல்லை தன் மனைவி என      எண்ணம் வந்தது அவனுள்… என்னை யாரும் மதிக்கவில்லை..,   மனைவியும் மதிக்கவில்லை என எண்ணியிருந்த எண்ணம், இந்த வார்த்தைகளில் தவிடு பொடியானது.

கல்யாணி சொல்லுவார்.. ‘உன் முகத்தை பார்க்காமல் பேசாமல்..         இந்த ஐந்து வருடம் எப்படியிருந்தாள் என எங்களுக்குத்தான்         தெரியும் என்பார்.

மேலும் ‘நீ அங்க இருக்க சதா… சொந்தம் என்ன பேசும்ன்னு          உனக்கு தெரியாது… எல்லாத்துக்கும் பொறுமையா பதில்            சொல்லி.. எங்க முன்னாடியும் சிரிச்சு பேசின்னு… நிரம்ப             பொறுமை டா, என் மருமக” என்பார்.

ஏற்கனவே விட்டு சென்றேன், என்ற குற்ற உணர்வில் இருந்தவன்…  இப்போது இன்னும் தலை தாழ்ந்தான். ஆனால் கன்யாவை          நினைத்து பெருமைதான் வந்தது. ஆனால் அதை அவளுக்கு            காட்ட தெரியவில்லை டாக்டருக்கு.

கன்யா, சதாவை கவனித்தாலும் முகத்தில்… எந்த மாற்றமும்  இருப்பதில்லை. அவளிற்கு இன்னும் சதாவை புரியவில்லை..          எனவே, பயம் எந்த நேரத்தில் எப்படி வேண்டுமானாலும் அவன்    மாறக்கூடும் என்ற பயம். எனவே, அமைதியாக இருந்து பழகிக்     கொண்டாள்.

இன்றுதான் யசோதா கிளம்புகிறார் மலேசியாவிற்கு… கன்யா,            இன்று வீட்டில் இருந்தாள் லீவ் எடுத்து… கூடவே யசோதா      கிளம்புவதால் உதவுவதற்காகவும்.

இந்த ஒருவார காத்திருப்பில் ஏதும் பெண் அமையவில்லை    சண்முகத்திற்கு. எனவே அந்த கவலையுடன், எப்போதும் போல்     இப்போதும் சதா தன்னுடன் பேசாத கவலையும் சேர்ந்து கொள்ள…

யசோதா, கன்யாவிடம் “ எப்போ நீங்க அங்க வரீங்க.. “ என      தொடங்கினார் பாக் செய்தபடியே.

கன்யா “தெரியலையே க்கா… வரோம் “ என்றாள் சலிப்பான           குரலில். உங்களுக்கு சதாவை பற்றி தெரியாத என்ற த்வனி       இருந்ததோ.

யசோ “பார்த்துக்கோ கனி அவனை… எங்க எல்லோரிடத்திலிருந்தும்    ரொம்ப நாள், தள்ளி இருந்துட்டான்… எங்கள போல எந்த         சந்தோஷமும் விளையாட்டும் அவன் கண்டதேயில்லை…

நீதான் பார்த்துக்கணும்… அவனுக்கு கோவம் வரும் என்பதே…           உங்க கல்யாணம் முடிஞ்சி என்கிட்ட பேசாத போதுதான் தெரியும்….        ப்ச்சு… எல்லாம் கனவு மாதிரி நடந்திடுச்சி… நீ.. நீங்க ச…,      சரியாகிட்டீங்களா” என்றார் திக்கி திக்கி.

என்ன சொல்லுவாள் கன்யா தன் நாத்தானாரிடம்.. “ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க க்கா… தெரியலை… நம்பறோம்” என்றாள் மறையாது.

யசோதாவிற்கு கண்ணில் நீர் திரண்டது.. எல்லோரும் சேர்ந்து          செய்த பிழையை… ம்… பிழைதானோ… இவர்கள் இருவர் மட்டும்           சரி செய்ய போராடுகிறார்கள்.. நாங்கள் கைகட்டி வேடிக்கை     பார்க்கிறோம்..” எனதான் தோன்றியது.

யசோதா “கனி… அவன் ரொம்ப நல்லவன்ம்மா..” என்றார்.

“தெரியும் அண்ணி… அத விடுங்க, நீங்க எப்போ பசங்கள கூட்டி        வரீங்க” என்றாள் பேச்சை மாற்றும் விதமாக.

யசோதவிற்கு புரிகிறதுதான், கன்யா பேச்சை மாற்றுவது எனவே       அவரும் “சம்முக்கு நிச்சையம்னு சொல்லு எல்லோரும் வரோம்”       என்றார் லேசாக சிரித்தபடி.

இன்று மதியம் சம்மு ஆபிசிலிருந்து லீவ் போட்டு வந்து கூட்டி         போக வேண்டும்.. சதா வீட்டிலதான் இருக்கிறான்… சதாவே        செல்லலாம் எனதான் தோன்றியது கன்யாவிற்கு…

எனவே இப்போது வீடே பரபரப்பானது, யசோ கிளம்புவதால்.. சம்மு   இன்னும் வந்தபாடில்லை… தன் மகளுக்கு தேவையானதை எடுத்து வைத்தபடி கல்யாணி, அலைந்து கொண்டிருக்க.. சதா உணவு         உண்ண வந்தான்.

வந்து டைநீங் ஹாலில் அமர்ந்தான். எல்லோரும் யசோவை             சுற்றி நின்று கொண்டிருந்தனர். வெங்கட் ஷண்முகத்திற்கு போன்       செய்து கொண்டிருந்தார்.

சதா “ம்மா..” என்றான்.

கல்யாணி “நீ சாப்பிடுப்பா…” என்றார்.

சதா அலட்டிக் கொள்ளவில்லை… தானே தட்டெடுத்து வந்து          அமர்ந்து கொண்டான்… ஏதோ வேடிக்கை பார்ப்பவன் போல           அமர்ந்து, உணவினை தனக்கு பரிமாற தொடங்க…

இப்போது கன்யாவிற்கு கோவம் தான் வந்தது… அப்படியென்ன        கோவம் தன் அக்காவின் மீது… அதுவும் இத்தனை வருடங்கள்.         இப்படி, நேரத்திற்கு கூட உதவி செய்ய தோன்றாமல் என்ற           எண்ணம் வர, கன்யா ஹாலில் இருந்தபடியே சதாவை பார்த்து      “என்னங்க… சீக்கிரம் கிளம்புங்க… அக்காவ ஏர்போர்ட்ல ட்ராப்       பண்ணீட்டு வாங்க… உங்க தம்பிய இன்னும் காணம்… போனும்      அவருக்கு எடுக்கல… இனி வெயிட் செய்ய முடியாது கிளம்புங்க…”    என்றாள் எல்லா உரிமையும் கொண்ட திடமான குரலில்.

கன்யா, இப்படி பொதுவில் சதாவிடம் பேசியதே இல்லையெனலாம்..  எல்லாம் அவர்களின் அறையில் மட்டுமே பேச்சு. அதுவும் இப்போது      அந்த கோவமான பேச்சுகளும் இல்லை… அமைதிதான். இன்று இவள்    இப்படி எல்லோர் எதிரில் பேசவும் சதாக்கு குஷிதான்.

யசோ “ஏய்… ஏ..ய்.. கனி அவன் கத்துவான்” என்றார் அவசரமாக.

இதை கேட்டு சதா, எழாமல் அமர்ந்து கொண்டான். கனி பேசவும்        வாய் பிளந்து பார்த்திருந்தவன் இப்போது அவள் தன்னை,           அக்காவை அழைத்து செல்ல கூப்பிடுகிறாள் என்பது தெரிய          அமர்ந்து கொண்டான்.

கன்யா “கிளம்புங்க” என்றாள் மறுபடியும்.

சதாக்கு சிரிப்புதான் வந்தது… பாருடா என்னம்மா சத்தம்           வருதுன்னு… ப்பா எவ்வளோ நாளாச்சு இத கேட்டு என        எண்ணியபடியே சதா “எனக்கு வேலையிருக்கு, நான் கால்             டாக்ஸி புக் பண்றேன்” என்றான் அலட்டாத குரலில்.

“பரவாயில்லை… உங்க அக்காவ ட்ராப் செய்துட்டுவந்து பாருங்க,       உங்கக வேலைய” என்றாள் அவளும் அசால்ட்டாக..

“சாரி எனக்கு…” என்று சதா ஏதோ சொல்லவர..

கன்யா கார் சாவியுடன் “நீங்க போறீங்களா… இல்ல, நான் போகவா”   என்றாள்.

சதாவிற்கு ஏதும் பிடிபடவில்லை என்ன குரல் அவளின் குரல்…       என்னை யாரும் கேள்வியே கேட்காத இந்த இடத்தில்… இப்போது     அவளின் குரல் மட்டுமே ஒலிக்க… சதா என்ன உணர்ந்தான் என்றே தெரியவில்லை.. கன்யா, கார் சாவியுடன் வெளியே சென்றாள்.       லக்கேஜ்ஜை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

சதாவிற்கு “தெரிந்தே வேண்டுமென்ற செய்கிறாள்… நான்தான்          ட்ரோப்  செய்ய வேனும்ன்னு தெரிந்தே செய்கிறாள்… ப்பா.. திமிர்…      திமிர்…” என உண்டபடி அவள் லக்கேஜ் எடுத்து வைப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் லேசான சிரிப்புடன்.

யசோ, இபோதும் தன் தம்பியை பாவமாக பார்த்தபடி திரும்பி        வெளியே சென்றார். கன்யா எல்லவற்றையும் எடுத்து வைத்து   வண்டியெடுக்க செல்ல.. சாத வந்து கார் சாவியை பிடிங்கிக்      கொண்டான் “அந்த பக்கம் ஏறு..” என வார்த்தையை கடித்து        துப்பினான்.

‘நீ என்னையே கடித்து துப்பினாலும் சரி, என்ற பார்வை பார்த்து,    கன்யாவும் ஏதும் சொல்லாமல்… தனது பின்னல் தன் தோளில்          துள்ளி விழ, தன் அண்ணியை பார்த்து கண் சிமிட்டியபடி,             மறுபுறம் அவள் ஏற, வண்டி வேகமெடுத்தது… பெற்றோருக்கு         சிரிப்பும், ஆனந்துமும் சேர்ந்தே வந்தது.

படிப்பு, வேலை, அறிவு, குணம், தன்னம்பிக்கை என எல்லாவற்றிலும்      சரி பாதிதான் இருவரும்… எனவேதான் எல்லா இடத்திலும் முட்டிக் கொண்டது போல.. ஆனால் அழகாவே இருந்தது.

ஏதும் பேசவில்லை சதா. ஆனால், கன்யா தன் அண்ணியுடன்          சேர்ந்து நிறைய பேசினாள் அந்த பயணத்தில் “என்ன அண்ணி,          உங்க தம்பிகிட்ட இவ்வளோ பயமா… கேளுங்க எப்போ என்னை         அங்க கூட்டிட்டு வராருன்னு” என்று தொடங்கினாள்.

யசோதா “பேசாம இரு கனி, அவனே ஏதோ போனா போகுதுன்னு    உனக்காக, என்னை ட்ராப் செய்ய வந்திருக்கான்.. நீ வேற ஏதாவது    சொல்லி பாதில, வண்டிய நிறுத்திட போறான்” என்றார் சின்ன        குரலில்.

சதாவிற்கு ஏதோ போல் ஆனது. தன் அக்கா சின்ன குரலில்        பேசுவதும் தன்னை கண்டால் இந்த பத்து நாளும் ஒதுங்கி           போவதும், அவன் கவனித்தே இருந்தான்….

இப்போது இவர்கள் இருவரும் அவ்வளவு உரிமையாக பேசிக்       கொள்வது அவனை சற்று அசைத்ததோ… லேசாக பக்கவாட்டில்       திரும்பி கன்யாவை பார்க்க, அவள் பின்புறம் திரும்பி “அப்படி        எல்லாம் இல்ல க்கா… உங்க தம்பிக்கு பேசணும்னு ஆசைதான்…     ஈகோதான் தடுக்குது” என அதிராமல் அவனின் நிலை சொல்ல      இப்போது சதாக்கு லேசான சிரிப்புடன்தான் வண்டியை          செலுத்தினான்.

யசோ “சதா, எப்போதும் அப்படிதான் கனி, அவனிற்கு அவ்வளவா..         பேச தெரியாது, ஏன் எங்ககிட்ட பேச்சு பழக்கமே கம்மிதான்” என          தன் தம்பியை கண்ணால் அளந்த படி வருத்தமாக குரலில்          சொல்ல..

சதாவிற்கு இன்னும் இன்னும் சங்கடமானது “தப்பு பண்ணிட்டனோ,    என்னை சுற்றி உள்ளவர்களை கூட கவனிக்கவில்லையோ” என        மெல்ல மெல்ல ஒரு தாக்கம் அவனுள் இறங்க…

யசோ, இப்போது அவனின் உடல் மொழி பார்த்து “கனி எனக்கு         அவன் பழையபடி வேண்டாம், புதுசா அவன் வாழனும்.. சின்ன         சின்ன விஷயமும்… அவன் உணர்ந்து ரசிச்சு அனுபவிக்கனும்…      பார்த்துக்க கனி” என்றார்.

கன்யா “அண்ணி… உங்க தம்பிகிட்ட சொல்லுங்க அண்ணி, ஏன்       இன்னும் என்கிட்டே” என கனியும் அவர்கள் இருவரையும் சேர்த்து     வைக்க பேச அங்கே அனிச்சையாய் மௌனம்… இப்போது மூவரும் பேசவில்லை.

ஏர்போர்ட்டில் கனியும் யசோவும் இறங்கி லக்கேஜ்சை இறக்கி உள்     செல்ல.. சதா வண்டியை பார்க்க செய்து வந்தான்… அப்போதே     யசோவிற்கு அழைப்பு வர பேச முடியவில்லை சதாவால்…

இப்போது யசோ கிளம்பும் பரபரப்பு… கன்யா, போனில் செல்பி        எடுத்துக் கொண்டிருந்தாள் தன் அண்ணியுடன். சதா இப்போது      அவர்களின் பின்னால் வந்து நின்று கொண்டான், இருவரின்              தோள் மீதும் கை போட்டபடி.. கனியும், யசோவும் திரும்பி           அவனை பார்க்க, எதுமே நடவாதது போல் அவன் போனையே        பார்த்துக் கொண்டிருந்தான்.

கொஞ்சம் எமோஷனலான செல்பி அது. பெண்கள் இருவர்         கண்ணிலும் நீர் இப்பவா அப்பாவா என தளும்பி நிற்க.. எதுவுமே      காட்டாத பாவமாய் சதா நிற்க… அந்த ஷனத்தை உள்வாங்கியது    கன்யாவின் அலைபேசி.

யசோ “சதா..” என அவன் நெஞ்சில் சாய.. “க்கா… விடுக்கா… அழாத…   மாமாவ, வினித்த, விக்ரம.. கூட்டிட்டு வா அடுத்த தடவ” என்றான்.    எதுவுமே நடவாதது போல…

கன்யாவிற்கு, ஏதோ கயாவில் அமர்ந்திருந்த புத்தர் சிலை எழுந்து       வந்து  பேசுவது போலவே தோன்றியது. என்ன முகம் டா இது       லேசான இசைவு கூட இருக்காதா.. அந்த முகத்தில்… அவ்வளவு கண்ட்ரோலா என கன்யா எண்ணிக் கொண்டாள்.

சதா “போன் பண்ணுக்கா.. ரீச் ஆகிட்டு” என்றான் அதிகபட்ச     அக்கறையாக.

யசோ, ஏதோ அருள்வாக்கு கேட்ட நிலையில் பரவசமாக         தலையாட்டி.. இப்போது கன்யாவை இறுக்க கட்டிக் கொண்டார்.     கன்யாதான் தடுமாறினாள். இப்போது மீண்டும் அவரின் பெயர்         சொல்லி அழைப்பே வந்துவிட…

யசோ, கன்யாவிடம் “தேங்க்ஸ்… தேங்க்ஸ் கனி..” என்றவர்           அவளின் கன்னத்தில் முத்தம் வைத்து போர்டினங் நோக்கி கிட்ட         தட்ட ஓடினார்.

சதா.. சிரித்தபடி நிற்கும் கன்யாவையே பார்த்திருந்தான்… இவ கூட சேர்ந்தால்போல் பத்து நாள் இருந்தால் போதும் நான்… ஆபரேட்      செய்யும் போது அழுது விடுவேன். என்தான் நினைத்திருந்தான்.      அவ்வளவு உணர்வு பூர்வமாக இருந்தான் சதா, முகத்தில்     காட்டவில்லை.. அது அவனின் இத்தனை வருட தொழில்         பயிற்சியாக கூட இருக்கலாம்.

சதா “போலாமா..” என்றான். கன்யாவின் தலை தன் போல ஆட… அவளுடனேயே நடந்தான்… ஓவ்வரு அடியாக… தனது இடது          கையை ஷார்ட்ஸ்சில் விட்ட படி… வலது கையால் கன்யாவை   உரசியபடியே நடந்தான்.

அவன் பேன்ட் போடுமளவிற்கு நேரம் தரவில்லை கன்யா.           அதனால் வீட்டில் இருப்பது போல் ஒரு டி ஷர்ட், ஷார்ட்ஸ்சில் வந்திருந்தான் சதா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!