Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலென்பது கனவு அல்லவா

kadhal enbadhu kanavu allava-2

அத்தியாயம் -2

“லதா இதான் பேலோலம் பீச்,பாரேன் ரொம்ப அழகா இருக்குதுல ” என்ற கோபியிடம்..



Advertisement

“எங்க ஊர்ல மொத்தமே நாலு தெரு தான். ஊர் முக்கில் ஒரு குலசாமி கோவில். இதை தவிர எதையும் பார்க்காத எனக்கு இந்த இடம் சொர்க்கம் மாதிரி இருக்கு கோபி”என்றாள் முகத்தில் ஒரு சின்ன புன்னகையை உதிர்த்தப்படி.

“ஏன் லதா நீ படிச்சது எல்லாம் சிட்டி தானே ? ” என்றான் கேள்வி எழுப்பியப்படி.

Advertisement

Advertisement

“ஆங் ஆமாங்க ஆனால் ஹாஸ்டல் காலேஜ் இதோடவே முடிஞ்சு போச்சுங்க என்னுடைய படிப்பு காலமும். நீங்க கோவா கூட்டிட்டு வந்ததே எனக்கு ஏதோ வெளிநாட்டுக்கு வந்த மாதிரி இருக்கு ரொம்ப தேங்க்ஸ்ங்க இவ்வளவு அழகான ஒரு இடத்தை என் கண்ணு முன்னாடி நீங்க காட்சியா கொண்டு வந்ததுக்கு” என்று கணவனின் தோள் மீது தன் தலை சாய்த்தாள்.

அவளுடைய உணர்வுகளை ஓரளவு அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. வாழ்க்கையில் எதையுமே பார்க்காதவர்களுக்கு ஒரு சின்ன அனுபவமே அவ்வளவு பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் என்று அப்போதுதான் உணர்ந்தான்.

Advertisement

இவர்கள் நின்று கொண்டிருக்கும்போது தூரத்தில் ஒரு வெளிநாட்டு பயணியர். மனைவியானவள் அரைகுறை ஆடையோடு தன் கணவன் பக்கத்தில் அமர்ந்து சன் பாத் எடுத்துக் கொண்டிருந்தாள்.

“லதா அங்க பாரு” என்று காண்பித்தான் கோபி.

“என்ன கோபி எதையோ ஆச்சரியமா காட்டுறீங்க”என்றாள் அவள்.

“இல்ல லதா அவங்கள பார்க்கும்போது உனக்கு என்ன தோணுது”

“புருஷன் பொண்டாட்டின்னு தோணுது வேற என்ன தோணும்”என்றாள் தன் புருவத்தை உயர்த்தியபடி. 

“இல்ல அந்தம்மா  போட்டு இருக்க டிரஸ்…”என்று இழுத்தான் ஜவ்வு மிட்டாய் போல.

“ஹாஹா.. இதுல என்னங்க இருக்கு அவங்கள பொறுத்த வரைக்கும் அவங்க எதார்த்தமா தான் இருக்காங்க அவங்க நாட்டுல இந்த டிரஸ் ரொம்ப சகஜமானது தான் தன்னை எந்த ஆம்பளையும் தப்பா பார்க்க மாட்டாங்க அப்படிங்கற ஒரு நம்பிக்கை அவங்களுக்குள்ள இருக்கு இதுல ஆச்சரியமா பார்க்க என்ன இருக்கு” என்று மீண்டும் சாதாரணமாக பதிலளித்தாள்.

“அதுக்கு இல்ல லதா நம்ம ஊருக்கு இதெல்லாம் செட் ஆகுமா சொல்லு”

“ஹாஹா.. எந்த ஊரா இருந்தாலும் ஆண்கள் பாக்குற பார்வையில் தாங்க இருக்கு. தவறா பார்த்தா தவறா தான் தெரியும் எதார்த்தமா பார்த்தால் எதார்த்தமா தான் தெரியும். சரி உங்க வழிக்கே வரேன் இப்ப நான் புடவை கட்டி இருக்கேன் அப்படிங்கறதுனால  எத்தனை பேர் என்னை சைட் அடிக்காம இருந்திருக்காங்க சொல்லுங்க பார்க்கலாம்?” என்றாள் சிரித்துக்கொண்டே..

“என்னது உன்ன சைட் அடிச்சாங்களா யாரு யாரு” என்று பதறினான் கோபி.

கோபி பதறியதை பார்த்து சிரிப்பு தான் வந்தது லதாவுக்கு. 

“ஏங்க இவ்வளவு பதட்டமாகறீங்க உங்களுக்கு என் மேல அவ்ளோ பொஸஸிவா” என்றாள் லதா

“ஏன் என் பொண்டாட்டி மேல எனக்கு பொசசிவ் இருக்க கூடாதா” என்றான் கோபி.  சிரிப்பை மட்டும் பதிலாக தந்துவிட்டு அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு தண்ணீரில் கால் பதிக்க நடந்தாள் லதா. தூரத்தில் வரும் அலைகளைக் கண்டு இங்கு இருந்தபடியே பயந்தபடி அவனைப் பிடித்துக் கொண்டு நின்றாள் லதா.

எங்கே பிடி விட்டு விடுவோமோ என்ற பயத்தில் அவளை மிக அழுத்தமாக பிடித்துக் கொண்டு நின்றான் கோபி. அதே நேரம் மணி மூன்றரை,சென்னை மெரினா கடற்கரையில் கார்த்திக்கும் கனகாவும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி தண்ணீரில் கால் பதித்து கொண்டிருந்தனர். அலைகள் இருவரின் கால்களையும் மெதுவாக தழுவிக் கொண்டிருந்தது. வெகு நேரமாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி கண்களால் பேசியபடி நின்றிருந்தனர். 

இதற்கு மேல் காத்திருக்க வேண்டாம் என்பது போல் கார்த்திக் அந்த மௌனத்தை உடைத்தான்.

“என்ன கனகா எதுவுமே பேச மாட்டேங்குற” என்றான் அவன்.

“நிறைய பேசணும்னு நினைப்பேன் கார்த்திக் ஆனா உங்க முகத்தை பார்த்த அப்புறம் பேச்சே வரமாட்டேங்குது” என்றாள் கனகா.

“ஏன் பார்க்க அவ்வளவு பயங்கரமா இருக்கேனா?” என்று கிண்டல் அடித்தபடி சிரித்தான் கார்த்திக்.

“உங்களுக்கு இந்த பீல் எல்லாம் புரியாது கார்த்தி “என்றாள் கனகா ,காதோரம் தன் கூந்தலை ஒதுக்கியபடி

“புரியிற மாதிரி சொன்னா நாங்களும் புரிந்து கொள்வோமே” என்றான் கார்த்திக் தன் தோள்களை குலுக்கியபடி.

“அது வந்து…..” என்று நிறுத்தினாள் கனகா.

“என்ன சொல்லு..”

“ஆங் அது வந்து….”என்று அவள் சொல்ல வரும்போது தான் அண்ணே சுண்டல் வேணுமா என்று சுண்டல் வியாபாரம் செய்யும் சிறுவன் குறுக்கிட்டான்.

‘எங்கிருந்துதான் எனக்கென்று வருகிறார்களோ தெரியவில்லை என்பது போல் தலையில் அடித்துக் கொண்டான்’

“அண்ணே இதுக்கு எதுக்கு தலையில அடிச்சிக்கிறீங்க ஏன் உங்களுக்கு சுண்டல் பிடிக்காதா”என்றான் சிறுவன் நக்கலாக.

“பிடிக்காது”என்று தலையசைத்தான் கார்த்திக்.

“சரி உங்களுக்கு பிடிக்காதுன்னா அண்ணிக்கு வாங்கி கொடுக்க வேண்டியது தானே” என்றதும் முகம் மலர்ச்சி அடைந்தது கார்த்திக்கிற்கு. 

“என்னடா சொன்ன தம்பி”என்றான் கார்த்திக் 

“அண்ணின்னு சொன்னே அண்ணே “

“இன்னொரு வாட்டி சொல்லு “

“ஆங் அண்ணி போதுமா! இப்போவாச்சு சுண்டல் வாங்கிக்கிறீங்களா ” என்றான் சிறுவன்.

“இந்தா பத்துரூபா…சுண்டல் கொடு ” என்றான் கார்த்திக் பர்ஸில் இருந்த காசு எடுத்தவனாக. 

“அண்ணே ஒரு ஆழாக்கு 20ரூபாண்ணே “என்றான் சிறுவன் தலையை சொரிந்தபடி. 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கனகாவிற்கு சிரிப்பு தான் வந்தது. அண்ணி என்ற அந்த ஒரு வார்த்தை தான்.  அந்த ஒரு வார்த்தையில் எப்படி விழுந்தார் பாரு அந்த சிறுவனிடம். அந்த சிறுவனும் வியாபாரம் யுக்தி தெரிந்தவன் தான். என்று நினைத்து சிரித்துக்கொண்டாள் கனகா. சரி சரி இதற்கு மேல் அவரை காக்க வைக்க வேண்டாம் உண்மையை வெளிப்படையாக சொல்லிவிடுவோம் என்றபடி..

“கார்த்திக்…”

“சொல்லு கனகா…”என்றான் அவளை எதிர்நோக்கியபடி.

“ஐ…லவ் யூ ” என்றதும் கடற்கரையை தலைக்கீழாக கவிழ்த்து போட்டது போல இருந்தது அவனுக்கு.

“என்ன சொன்ன “

“ஐ…..”என்று மறுபடியும் அவள் ஆரம்பிக்கும் போதே உற்சாகத்தில் துள்ளினான் கார்த்திக். சுற்றி யார் இருக்கிறார்கள் என்பதை கூட யோசிக்காமல் அவளை தன் தலைக்கு மேல் தூக்கி சுற்றினான்.

“வாவ் ஐ ஃபீல் ஸோ ஹேப்பி ” என்று தன்னை மறந்து உற்சாகமாய் சொன்னான் கார்த்திக். அவ்ளோ வெட்கத்தில் தன் பார்வையை வேறெங்கோ சுழற்றிக் கொண்டிருந்தாள். 

“லவ் யூ டூ கனகா” என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி கூறியவன் அவளை மெதுவாக கீழே இறக்கும்போது அவள் நெற்றியில் முத்தமிட்டான். இதுவே அவன் அவளுக்கு தரும் முதல் முத்தம். யார் முதலில் காதலை சொல்வது என்ற போட்டி இன்று முடிவுக்கு வந்தது. அவள் வாயால் முதலில் காதலை வெளிப்படுத்தியது அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி. 

அன்றைய பொழுது இனிதே கடந்தது. இரவு மணி 12. உறக்கம் அனைவரையும் தழுவிக்கொண்டு இருக்க கோபி லதாவை மட்டும் ஏனோ உறக்கம் நெருங்க மறுத்தது. அவர்கள் இருவருக்கும் இடையே இடைவேளி அதிகம் இல்லை. இருவரின் கைகளும் கோர்த்தபடி கண்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தது. கோர்க்கப்பட்ட கைகளை விலக்கி அவள் கன்னத்தை வருடிக் கொண்டிருந்தான். (https://sharonsteelerealestate.com/)  

“லதா யூ லுக் ஸோ ப்யூட்டிபூல்” என்றான் அவள் அழகை ரசித்தபடி.

“இதுவரைக்கும் அழகா இருக்க பொண்ணுங்கள நீங்க பார்த்ததே இல்லையா கோபி”என்றாள் லதா.

“பார்க்க ஆசைதான் ஆனா நீ விட மாட்டியே” என்று சிரித்தான் கோபி.

“ஓ இது வேற ஆசை இருக்கா உங்களுக்கு”என்று பதிலுக்கு அவளும் சிரித்தாள்.

“அழகு எங்கிருந்தாலும் ரசிக்க வேண்டியது தானே” என்றான் கோபி.

“ரசிக்கலாம் ரசிக்கலாம் ஆனா…”என்று இழுத்தாள் லதா.

“என்ன ஆனால்”

“உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சு அப்படிங்கறது மறந்துட்டீங்களா கோபி”

“அப்படியெல்லாம் இல்ல லதா என் கண்களுக்கு நீ மட்டும் தான் அழகா தெரியுற ஓகேவா? போதுமா”என்றான் தன் கண்ணை சிமிட்டியபடி.

“சும்மா பேச்சுக்காக சொல்லாதீங்க நான் நம்ப மாட்டேன்”இன்று சிணுங்கினாள் லதா.

“சரி சரி பேசுனது போதும் ஆக வேண்டிய வேலையை பார்ப்போம்” என்று விளக்கை அனைத்து விட்டு அவளை இருக அணைத்துக்கொண்டான். 

‘கல்யாண தேன் நீலா…. என்ற பாடல் எஃப் எம் இல் எங்கோ ஒலித்துக் கொண்டிருந்தது. ரொம்ப மெல்லிய ஒலியில் இவர்களது செவிக்கு இனிமை தந்துக்கொண்டிருந்தது. வானில் நிலா மங்கையவள் நடனமாடிக் கொண்டிருக்க இனிதே அன்றைய இரவு நேரம் கழிந்தது.

‘இந்த நிமிடம் இந்த நிமிடம் இப்படியே உறையாதா..

இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா ‘ என்ற செல்போன் ரிங் டோன் ஒலிக்க கார்த்திக் எடுத்து பேசினான்.

“ஹலோ ! சொல்லுங்க மா “

 எதிர்முனையில் இருக்கும் அவனுடைய தாய் மீனாட்சி “டேய் கன்னு சீக்கிரம் வா டா வீட்டுக்கு உங்க அப்பாவுக்கு உடம்புக்கு முடியலை திடீர்னு நெஞ்ச பிடிச்சுகிட்டு உக்காந்துட்டாரு பக்கத்து வீட்டு சரோஜாவும் நானும் இப்பதான் ஆட்டோ பிடிச்சு அவரை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போயிட்டு இருக்கோம் நீ சீக்கிரம் வந்துடுடா” என்று சொல்லிவிட்டு போனை வைத்த அடுத்த நிமிடம் இவன் பதறியபடி பைக்கை எடுத்துக் கொண்டு ஹாஸ்பிடட்டலுக்கு விரைந்தான். 

“மா…அப்பாக்கு என்ன ஆச்சு திடிர்னு “

“திடீர்னு நெஞ்ச புடிச்சுக்கிட்டு உட்கார்ந்திட்டாருடா எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல. இங்க கூட்டிட்டு வந்தா ஏதோ மைல்ட் அட்டாக் என்று சொல்றாங்க. டாக்டர் பார்த்துட்டு இருக்காங்க டா.”என்று மகனை கட்டிப்பிடித்து அழுதார் தாய் மீனாட்சி.

“மா… அம்மா அழாதம்மா”இன்று தாயை சமாதானம் செய்தான் கார்த்திக்.

கண்களை துடைத்துக் கொண்டு “டேய் கார்த்தி எந்த காரணத்துக்காகவும் உங்க அண்ணன் கோபிக்கு போன் போட்டு சொல்லிடாதடா. அவன் லதாவோட சந்தோஷமா அங்க ரெண்டு நாளாவது இருக்கட்டும். தேன் நிலவுக்கு போயிருக்காங்க அதனால அவங்க சந்தோஷத்தை நாம கெடுக்க வேண்டாம்” என்றதும்.

“சரி மா நான் சொல்லலை , எனக்கு புரியுது மா. சரி இந்தா பணம் முதல்ல டாக்டர் சொல்ற மெடிசன்ஸ் எல்லாம் வாங்கு என்ன ஏதுன்னு பார்த்து. நான் வீட்டுக்கு போய் உனக்கு அப்பாவுக்கு மாத்து துணி எடுத்துட்டு வரேன். வர அவசரத்தில் நீ எதுவுமே எடுத்துட்டு வந்திருக்க மாட்டேன்னு  எனக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.

அப்போதுதான் சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது தன்னுடைய காதலி கனகா அந்த மருத்துவமனையில் தான் செவிலியராக பணி புரிகிறாள் என்று. உடனே அவள் எந்த வார்டில் இருக்கிறாள் என்பதை பார்த்து நடந்த விஷயத்தை கூறிவிட்டு..

“அப்பாவை கவனமா பார்த்துக்க கனகா ப்ளீஸ் ” என்றான் கண்கலங்கியபடி.

“அதெல்லாம் நான் நல்லா பாத்துப்பேன் நீ எதுக்கும் கவலைப் படாத கார்த்திக்” என்று ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தாள். 

கார்த்திக் – கனகா. ஜோடியின் காதல் திருமணத்தில் முடியுமா? 

லதா – கோபி திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதெல்லாம் இனி வரும் அத்தியாயங்களில் தெரிந்து கொள்வோம். 

தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!