Skip to content
Post Views: 10,231
அத்தியாயம் 4
கதவை திறந்து கொண்டு அதிகமாய் அழுது கொண்டிருந்த குழந்தையுடன் உள்ளே நுழைந்திருந்தாள் ஜனனி.
“வாங்க!” என்ற ஜெய்,
“சொல்லுங்க!” என்று கேட்க,
“பிவேர் டாக்டர்! மூணு நாளா இருக்கு.. குறையவே இல்லை..கூடவே கான்ஸ்டிபேஷன் ப்ரோப்லேம் வேற இருக்கு.. இப்ப தான் ரெண்டு நாள் முன்னாடி காது வலிக்குதுன்னு சொன்னான்னு அதுக்கும் பார்த்தோம்.. ஒரே ப்ரோப்லேமா இருக்கு டாக்டர்” என்றாள் ஜனனி அழுத குழந்தையை ஆட்டிக் கொண்டே.
“ஓஹ்!” என்றவன் காய்ச்சலின் அளவைப் பார்த்துவிட்டு அவள் கூறிய ஒவ்வொன்றுக்குமான மருந்து சீட்டினையும் பார்த்தான்.
“ட்ரோப்ஸ் ஏதாவது குடுத்தீங்களா?”
“ஆமா!” என்று தான் கொண்டு வந்திருந்த மருந்தைக் காட்டினாள்.
“ஓகே! இது நார்மல் பிவேர் தான்.. இந்த சிரப் வேண்டாம்.. இதை கொடுங்க.. பசில அழுறாங்களா?” என்று கேட்க,
“இல்லை டாக்டர்!” என்றவள் குழந்தையை சமாதானப்படுத்த,
“அப்ப இப்பவே அந்த சிரப் கொடுக்கலாம்.. நீங்க திரும்பி போறதுக்குள்ள அழுகை நின்னுடும்” என்றவன்,
“நாளைக்கு பிவேர் இருந்தா கூட்டிட்டு வாங்க.. டெஸ்ட் எடுத்து பார்த்துடலாம்” என்று கூற,
“மூணு நாளா இருக்கே டாக்டர்! இன்னைக்கே டேஸ்ட் எடுத்து பார்த்துடலாமே! சாப்பிடவே மாட்றா! பயமா இருக்கு” ஜனனி அழும் குழந்தையைப் பார்த்து கூறவும்,
“அதுக்கு அவசியம் இருக்காது.. வேற வேற மருந்து எடுத்துட்டே இருக்காங்க.. கான்ஸ்டிபேஷன் வேற இருக்குன்னு சொல்றிங்க இல்ல.. அதனால வந்த பிவேர் தான்..” என்று கூறி முடிக்கவும் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள் பிரியா.
“எஸ்!” என்று கேள்வியாய் ஜெய் பார்க்க,
“குழந்தை!” என்றவள் ஜனனியிடம் இருந்த குழந்தையை கையில் வாங்கிக் கொண்டாள். அதுவும் அழுகையை நிறுத்தி இருந்தது பிரியா கைகளுக்கு சென்ற உடன்.
“உங்களோட குழந்தையா?” ப்ரியாவைப் பார்த்து ஜெய் கேட்கவும் ஆமாம் என அவள் தலையசைக்க,
“கொஞ்சம் ரெஸ்பான்ஸபிளா இருங்க மேம்! இவ்ளோ பிவேர் இருக்கு.. அப்பவும் இப்படி யார்கிட்டயோ குழந்தையை கொடுத்துட்டு போயிருக்கீங்க.. அழுது அழுது காய்ச்சல் கூட தான் செய்யுமே தவிர குறையாது” என்று ஜெய் சத்தம் போட,
“நான் ஒன்னும் யாரோ இல்ல.. குழந்தைக்கு சித்தி.. என்கிட்ட தான் அதிக நேரம் இருப்பா.. அதனால தான் நானும் கூட்டிட்டு வந்தேன்” வேகமாய் ஜனனி கூற,
“ஓஹ்! சரி தான்.. ஆனா உடம்பு சரி இல்லைனா குழந்தைங்க அம்மாவை தான் தேடும்.. சொல்ல தெரியாது.. அதை நாம தான் புரிஞ்சிக்கணும்” என்றான் ஜெய்.
“ப்ச் ஜேக்! என்ன பண்ற நீ?” என்ற பிரியா,
“தேங்க் யூ டாக்டர்!” என்று விட்டு தங்கையை அழைத்துக் கொண்டு வெளியே செல்ல,
“விடு என்னை! என்னை யாரோனு சொல்றான்.. ஏன் மகிம்மா நான் யாரோவா உனக்கு?” என்று குழந்தையிடம் கேட்க, அது திரும்பிக் கொண்டது.
ஜனனி முகத்தை சுருக்க, “விடு டி! அவளே காய்ச்சல்ல இருக்குறா.. அவளைப் போய் கேட்டுட்டு” என்று பேசிக் கொண்டிருக்க,
நர்ஸ் வந்து மாற்று சிரப்பைக் கொடுத்துவிட்டு செல்ல, ஐந்து நிமிடத்தில் எல்லாம் குழந்தை தூங்க ஆரம்பித்துவிட்டது.
“என்ன டி சொன்னாங்க டாக்டர்?” பிரியா கேட்க,
“நார்மல் பிவேர் தானாம்.. பயப்பட வேண்டாம்னு சொன்னாங்க.. நாளைக்கும் பிவேர் இருந்தா டெஸ்ட் பார்க்கணுமாம்”
“உன்னை வெயிட் பண்ண தானே சொன்னேன்.. நீ ஏன் டி உள்ள ஓடின?” பிரியா கேட்க,
“உன் குழந்தை எப்ப என்ன செய்வா.. அவளுக்கு என்ன பண்ணுதுன்ணு எனக்கு தெரியாதா? அந்த டாக்டர் தான் அறிவில்லாம சொல்லிட்டு போறான்னா நீயும் அதையே கேட்குற..” என்ற நேரம் அவர்களை கடந்து வெளியே சென்றான் ஜெய்.
“மெதுவா பேசு டி!” பிரியா கூற,
“ப்ச் போ க்கா! பாப்பா தூங்கிட்டா! வா போலாம்” என்ற ஜனனி ஆட்டோவை அழைக்க, வீட்டில் வந்து சேர்ந்தனர் குழந்தையுடன்.
அன்று முழுவதுமே குழந்தை ஜனனியிடம் செல்லவில்லை. பிரியாவை விட்டு அகலவும் இல்லை.
“டாக்டர் சரியா தான் சொல்லி இருக்கார் டி..” என்று பிரியா கூற,
“நேத்தும் தான் அவளுக்கு காய்ச்சல் இருந்துச்சு.. என்கிட்ட தானே இருந்தா?” என்று ஜனனி திருப்பிக் கேட்க,
“ஆனா நேத்தெல்லாம் ரொம்ப அழுதா தானே? நான் தூக்கி வச்சிருந்தா நேத்தே சரியா போயிருக்கும் போல” என்றாள் பிரியாவும்.
“மகி பாப்பா! இப்ப ஜேக் கிட்ட வருவீங்களா மாட்டிங்களா?” என்று மிரட்டலாய் ஜனனி கேட்க, அன்னையை ஒட்டிக் கொண்டது குழந்தை.
“அவளை ஏன் டி தொல்லை பண்ற? நாளைக்கு ஆபீஸ் இல்ல உனக்கு! போய் துணியை அயன் பண்ணு!” என்று அன்னை மீனாட்சி கூறவும்,
“அதெல்லாம் அக்கா பார்த்துப்பா.. நான் மகியைப் பார்த்துப்பேனாம்” என்று மகிழினியை தூக்க வர, வீறு கொண்டு அழுதது குழந்தை.
“யாரு மா அது என் செல்லத்தை அழ வச்சது?” என்று வந்தான் கதிரவன். பிரியாவின் கணவன்.
“வாங்க மாப்பிள்ளை!” என்று மீனாட்சி வரவேற்க,
“உங்க பொண்ணு ஓவரா சீன் போடுறா மாமா! சொல்லி வையுங்க” என்று ஜனனி கூற, மருத்துவர் கூறியதை கணவனிடம் கூறினாள் பிரியா.
“உன் தங்கச்சி கண்ணே என் புள்ளைக்கு பட்ருக்கும்.. அதான் காய்ச்சல் குறையாம இருக்கும்.. நாளைக்கு அவ வேலைக்கு போகட்டும்.. அப்புறம் பாரு மகி எப்படி ஓடி ஆடி விளையாடுறானு” என ஜனனியை கிண்டல் செய்தான் கதிரவன்.
மீனாட்சி சுந்தரம் இவர்களுக்கு இரண்டு மகள்கள். சுந்தரம் விபத்து ஒன்றில் உயிரிழந்து விட, மீனாட்சி தான் மகள்களை வளர்த்தது.
மூத்தவள் பிரியா கல்லூரி முடித்த ஒரு வருடத்தில் கதிரவன் வேண்டி வந்து கேட்டு திருமணம் செய்து கொண்டான்.
கதிரவன் ஐடியில் வேலை பார்க்கிறான். பக்கத்து தெருவில் தான் அவர்கள் வீடும் கூட. மகிழினி என ஒன்றரை வயதில் மகள்.
இரண்டாவதாய் ஜனனி.. அவளும் கல்லூரி முடித்து ஆறு மாதங்களாய் கதிரவன் கூறிய அலுவலகத்தில் வேலையில் இருக்கிறாள்.
மகிழினியும் ஜனனியுடன் தான் அதிக நேரம் செலவழிப்பது. ஜனனி வீட்டிற்கு வந்த பின் தான் கதிரவன் வந்து குழந்தையை தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்வான்.
“மாப்பிள்ளை வீடு ஜனனிக்கு வந்ததா சொன்னிங்களே அத்தை! என்னாச்சு?” என மீனாட்சியிடம் கதிரவன் கேட்க,
“மாப்பிள்ளையை இவளுக்கு பிடிக்கலையாம்.. நெடுமரம் மாதிரி இருக்கான்னு காரணம் சொல்றா” என்றாள் பிரியா.
“அவளுக்கு எப்படி வேணும்னு கேட்க வேண்டியது தானே?” என்று கதிரவன் கேட்க,
“அப்படியும் எதுவும் சொல்ல மாட்றாளே!” என்றார் மீனாட்சி.
“என்ன ஜனனி! ஏன் வேண்டாம்னு சொல்ற.. உனக்கு யாரையாவது புடிச்சிருந்தா சொல்லு” என்று கதிரவன் கேட்க,
“அட போங்க மாமா! என் பின்னாடியும் எவனும் வர மாட்றான்.. எவன் பின்னாடியும் நான் போற மாதிரியும் இல்லை..” என்றாள் ஜனனி.
“வேற என்ன பிரச்சனை உனக்கு?” என்று கதிரவன் கேட்க,
“அவளை விடாதீங்கங்க.. கல்யாணம் பண்ணிட்டு போய்ட்டா அம்மா தனியா இருப்பாங்கன்னு ஒவ்வொரு காரணம் சொல்றா” என்றாள் ப்ரியா.
“க்கா! அதுவும் ஒரு காரணம் தான்.. ஆனா எனக்கும் பிடிக்கணும் இல்ல?”
“அது சரி! நான் மட்டும் என்ன பிடிச்சா கல்யாணம் பண்ணிக்கிட்டேன்?” என்று பிரியா கூறிவிட்டு கணவனைப் பார்க்க,
“அடிங்!” என்ற கதிரவன்,
“வீட்டுக்கு வா டி! உனக்கு இருக்கு” என்றான்.
“பார்த்திங்களா? இந்த மாதிரி அண்டர்ஸ்டாண்டிங் தான் எனக்கு வேணும் மாமா” என்றாள் ஜனனி.
“அது சரி! அப்ப ஔவையார் தான் ஆக போற நீ! ஒழுங்கா ஒருத்தனை கட்டிட்டு போற வழியைப் பாரு!” என்று மீனாட்சி கூற,
“சின்ன புள்ள தானே அத்தை! மெதுவாவே நல்ல இடமா பார்ப்போம்” என்றான் கதிரவன்.
சாப்பிட்டு கொண்டிருந்த ஜெய் ஏதோ சிந்தனையிலேயே இருக்க, “என்ன ஜெய்! என்ன யோசனை?” என்றார் பிரேமா.
“ஒன்னும் இல்ல சித்தி! இன்னைக்கு கிளினிக்கு ஒரு பேபி வந்துச்சு..” என்றவன் முழுதாய் சொல்லி முடித்துவிட்டு,
“நான் அறிவில்லாம சொல்றேன்னு நம்ம கிளினிக் உள்ளே இருந்துட்டே பேசுது” என்று கூற,
“சும்மாவா விட்ட அந்த பொண்ணை?” என்று கேட்க,
“பின்ன? புடிச்சி சண்டையா போட முடியும்? குழந்தை மேல அவ்வளவு பாசம் போல.. ஏன் சொல்றாங்கன்னு கூட புரிஞ்சிக்க மாட்றாங்க” என்றான் புரிதல் இல்லையே என்ற எண்ணத்தில்.
“ரொம்ப முக்கியம்! அப்பா உன்னை திட்டிட்டு போயிருக்காரு நீ என்னண்ணா பேசிட்டு இருக்க?” என்றாள் நிவி.
“அவர் திட்றது நான் கேட்குறது இதெல்லாம் என்ன புதுசா?” என்று ஜெய் கேட்க,
“உனக்கு ரெஸ்பான்ஸிபிலிட்டினா என்னன்னே தெரியலையாம்.. அஞ்சலி அப்பா நம்ம அப்பாகிட்ட சொல்லி இருக்காங்க.. இதுல சூர்யா அண்ணாவை வேற அப்பா திட்டிடுச்சு உன்னை யார் போக சொன்னான்னு” என்று நிவி கூற,
“அவன் வாயில என்ன ஆம்ப்லேட் வச்சிருந்தானா? சொல்ல வேண்டியது தானே நான் தான் கூட்டிட்டு போனேன்னு.. ஆமா! அவ அப்பனுக்கு என்ன தான் வேணுமாம்? எதுவா இருந்தாலும் எனக்கு பேச வேண்டியது தானே? சும்மா அந்தாளுக்கு ஏன் சொல்லிகிட்டு இருக்கனும்.. ரெண்டு பேருக்கும் என்னவோ இருக்குன்னு தோணுது” என்று ஜெய் கூற,
“அக்கா உன்னை நினச்சு ரொம்ப கவலைல இருக்காங்க ஜெய்!” என்று பிரேமா கூற,
“அம்மா பாவம் சித்தி! புருஷனை எதிர்த்து இத்தனை வருஷத்துல ஒரு வார்த்தை பேசினது இல்ல.. நான்னா ரொம்ப இஷ்டம்.. ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிட்டு முழிக்கிறாங்க.. ஒரு நேரம் பாவமா இருக்கு.. ஒரு நேரம் அந்தாளு மேல இருக்க கோபம் அம்மா மேலையும் திரும்பிடுது..” என்றான் ஜெய்.
“நீ அந்த அஞ்சலியை கல்யாணம் பண்ற முடிவுல தானே இருக்குற? கடைசி நேரத்துல எதுவும்…” என்று கூறும் போதே,
“அப்படி எல்லாம் பிரச்சனைக்கு பயந்து ஓடுறவனா சித்தி நான்.. என்னவோ எனக்கு இது சரி வராதுன்னு தோணிட்டே இருக்கு.. அதுக்காக பாதில எல்லாம் ஓடிட மாட்டேன்” என்றான்.
“ச்சே! ச்சே! நான் அப்படி சொல்லல டா” என்று பிரேமா கூற,
“புரியுது சித்தி! வர்றது வரட்டும் பார்த்துக்கலாம்னு தான் இருக்கேன்.. ஆனா அப்பனும் பொண்ணும் இந்தாளை வச்சு ஓவரா ஆடுறாங்க.. அது எனக்கு டென்ஷன் ஆகுது.. சூர்யாகிட்ட அந்த குணசீலன் பத்தி விசாரிக்க சொல்லி இருக்கேன்.. பார்க்கலாம்” என்று கூற,
“எனக்கு பிரண்ட்டா இருப்பாங்களா அண்ணா அஞ்சலி அண்ணியா இங்க வந்த அப்புறம்?” என்ற நிவியை கவலையாய் பார்த்தான் ஜெய்.
தொடரும்..
error: Content is protected !!