kadhal enbadhu kanavu allava-3
அத்தியாயம் -3
அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மாற்று துணி எடுத்துக்கொண்டு பைக்கை கிளப்பிக்கொண்டு வந்தான். தந்தை அட்மிட் ஆகியிருக்கும் வார்டில் கனகா இருப்பதை கண்டவன்.
Advertisement
“ஹேய் கனகா நீ இங்க தான்….”என்று கத்த ஆரம்பிக்கும் போது.
“ஷ்ஷ் ” என்று சத்தம் போடாமல் இருக்குமாறு அறிவுறுத்தினாள் பிறகு அவருக்கு போட வேண்டிய ட்ரிப்ஸை போட்டுவிட்டு எதிரில் இருக்கும் கார்த்திக்கை பார்த்தபடி
Advertisement
Advertisement
“கார்த்திக் சாயந்தரம் ஆஞ்சோக்ராம் பண்ணனும் உங்க அப்பாவுக்கு. கவுண்டர்ல அதுக்கான பணம் கட்டிடு ஓகேவா. அவர் என்னென்ன டெஸ்ட் எடுக்கனும்னு டாக்டர் சொன்னவுடனே எடுத்தடலாம் அப்றம்….” என்று எதையோ சொல்ல வந்து நிறுத்தியவள் வெளியே வா சொல்றேன் என்று அழைத்து வந்தாள்.
“ஹேய் என்னடி “
Advertisement
“என்ன டி யா ஹலோ இது ஹாஸ்பிடல் இங்க சிஸ்டர்னு கூப்பிடனும் என்ன புரியுதா ” என்றாள் கனகா பொய்யான கோபத்தை வரவழைத்தபடி .
“ச்சீ போடி” என்று அவள் கன்னத்தில் தட்டினான்.
அவளும் சிரித்துக்கொண்டே நகர்ந்தாள். எதிரே நிறைமாத கர்ப்பிணி ஒருவர் வருவதை கண்டு வழிவிட்ட கார்த்திக்…
‘இன்னும் கொஞ்ச வருஷத்துல என் செல்லக்குட்டி கனகாவும் இப்படி தானே வருவா வயித்தை அசைச்சிட்டு ச்சீ கார்த்தி ஏன் டா உன் புத்தி இப்படி இருக்கு ‘ என்று தனக்கு தானே கூறினான்.
வந்து அவன் தலையை தட்டிய கனகா
“ஏய் லூசு என்னத்த நினைச்சு சிரிக்கிற இந்த ரணகலத்துல கூட உனக்கு கிலுகிலுப்பா இருக்கா” என்றதும்.
“அடியேய் உன் வேலையை பாரேன் என்கிட்ட ஏன் டி மறுபடியும் வர? இந்த நர்ஸ் காஸ்டியூம்ல வேற கும்முன்னு இருக்க அச்சோ…” என்று அவன் கூறுகையில்..
“டேய் கம்முன்னு இரு ,மவனே ஊசி இருக்கு கையில” என்று சொல்லிவிட்டு நமட்டு சிரிப்பு உதிர்த்துவிட்டு சென்றாள்.
தாய் மீனாட்சி ஒரு ஓரத்தில் வந்து அமர்ந்தாள், அருகில் கார்த்திக் வந்து நின்று..
“மா எல்லாம் சரியாகிவிடும் மா ” என்றதும்.
“தெரியும் டா , ஆனால் எப்பவுமே கம்பீரமா மீசையை முறுக்கி சுத்திட்டு இருந்த உன் அப்பா இப்படி கிடக்கிறதை பாக்குறப்ப ஒரு மாதிரி மனசுக்கு கஷ்டமா இருக்கு.
“விடு மா இன்னும் இரண்டு மூன்று நாள்ல அனுப்பிருவாங்க வீட்டுக்கு. மைல்ட் அட்டாக் வரதுக்கு அப்படி என்னம்மா காரணம் ” என்றான் கார்த்திக்.
“வேற என்ன எல்லாம் உன் சித்தப்பன் பண்ற கடுப்பு தான். உங்க அப்பாவுக்கு வர வேண்டிய பங்கை தராமல் இழுத்தடிக்கிறாருல அதை நினைச்சு உங்க அப்பா அடிக்கடி ஃபீல் பண்றார்”.
“ஓ…இதான் காரணமா நான் அப்பா கிட்ட பொறுமையா பேசி புரியவச்சிக்கிறேன் “என்றான் கார்த்திக். இங்கு கவலையில் ஒரு புறம் இவர்கள் அங்கு ஆனந்தத்தில் ஒருபுறம் அவர்கள் கோவாவில் உள்ள கேசினோவில் கோபியும் லதாவும் ஆனந்தம் குலிகளித்துக் கொண்டிருந்தனர்.
“ஹே லதா வா டான்ஸ் ஆடலாம்”என்றான் கோபி.
“என்னது டான்ஸ் அய்யய்யோ எனக்கு அதெல்லாம் வராதுப்பா” என்று ஒதுங்கினாள் லதா.
“காலேஜ் படிக்கும் போதெல்லாம் கல்சுரல்ஸ்ல ஆடி இருக்கேன் சொல்லி இருக்கேன் இல்ல இப்ப மட்டும் என்ன உனக்கு” என்றான் கோபி.
“அதுவும் இதுவும் ஒண்ணா அட போங்க இங்கே எல்லாரும் ஜோடி ஜோடியா ஆடிட்டு இருக்காங்க ஒரு மாதிரியா இருக்கு” என்று கூச்சத்துடன் சொல்லினாள் லதா.
ஒரு பக்கம் கேரட் கார்ட் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தனர் இன்னொரு பக்கம் மதுபானங்கள் அருந்தியவாறு ஜோடி ஜோடியாக மக்கள் கூட்டம் இன்னொரு பக்கம் பாட்டு கச்சேரி என்று குதூகலமாய் இருந்தது கேசினோவில்.
இவ்வளவு ஆரவாரத்துடன் இருக்கும் இந்த கேசினுவில் அவள் மட்டும் தனித்து இருப்பது போல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்திருந்தால் அந்த இளம் வயது பெண். அந்த இளம் பெண்ணை தூரத்தில் இருந்து பார்த்த லதா வித்தியாசமாக எண்ணினாள்.
‘என்னது இது இவ்வளவு சந்தோஷமா ஜாலியா இருக்குற இடத்துல இந்த பொண்ணு என்னமோ உம்முன்னு உக்காந்துட்டு இருக்கே என்னவா இருக்கும்’ என்று யோசித்தபடியே அவள் அருகில் சென்றாள் லதா.
“எக்ஸ்க்யூஸ் மீ “என்று அவள் அருகே சென்று அமர்ந்தாள் லதா.
“எஸ் ப்ளீஸ் உட்காருங்க” என்றாள் அந்த இளம்பெண்.
“யுவர் குட் நேம் ப்ளீஸ்” என்றாள் லதா.
“ஐ அம் யுவராணி உங்க பேரு”
“என் பேரு லதா. நான் உங்களை ரொம்ப நேரமா கவனிச்சுட்டு இருக்கேன் இவ்ளோ சந்தோஷமா இருக்கிற இடத்துல கொஞ்சம் கூட உங்க முகத்துல அந்த மலர்ச்சியே தெரியலையே. எனி ப்ராப்ளம், உங்களுக்கு ஷேர் பண்ணிக்கனும்னு தோணுச்சுன்னா ஷேர் பண்ணிக்கலாம் இல்லன்னா பரவால்ல விடுங்க” என்றாள் லதா.
“ஷேர் பண்ணிக்க கூடாது அப்படின்னு எல்லாம் இல்ல ஆனா எப்படி சொல்றதுன்னு தான் தெரியல. இன் பேஃக்ட் நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது, ஆனா என் மனசுல இருக்குற சோகத்தை கண்டுபிடித்து வந்து கேக்குறீங்க பாத்தீங்களா இதுதாங்க மனிஷனுக்கு தேவை. இன்னைக்கு பணம் காசு எல்லார்கிட்டயும் இருக்கு ஆனால் மனசு விட்டு பேசத்தான் ஆளு இல்லை. அப்படி பேச ஆளு கிடைச்சாலும் அவங்க சுயநலத்திற்காக நம்ம கிட்ட பேச வராங்களே தவிர உண்மையான பாசத்துக்கு வருவதில்லை.. ” என்று அந்த இளம்பெண் யுவராணி சொன்னவுடன் லதாவுக்கு ஒருமாதிரி ஆயிற்று.
“யுவராணி, நீங்க சொல்றது எல்லாம் சரி தான். இப்ப உலகம் அப்படி தான் இருக்கு என்ன பண்றது. கவலை படாதீங்க, நீங்க எனக்கு சிஸ்டர் மாதிரி தான் தெரியுறீங்க. இதான் என் நம்பர் இன்னும் இரண்டு நாட்கள் இங்க தான் இருப்பேன் எப்ப வேணாலும் கால் பண்ணுங்க ” என்று சொல்லிவிட்டு அவளுக்கும் இவளுக்கும் சேர்த்து ஜுஸ் எடுத்து வந்து இருவரும் பகிர்ந்தபடி குடித்தனர்.
“இந்த லூசு நம்ம கிட்ட டைம் ஸ்பென்ட் பண்ணாம அங்கே என்ன பண்ணிட்டு இருக்கு” என்று எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் கோபி.
கோபி கவனிப்பதை பார்த்த லதா யுவராணி இடம் விடை பெற்றுக்கொண்டு கோபியின் அருகே சென்றாள்.
“என்ன மேடம் இப்பதான் என் ஞாபகம் வந்துச்சா” என்றான் கோபி.
“இவ்வளவு நேரம் உங்க கூட தான் இருந்தேன். ஏதோ கொஞ்ச நேரம் அந்த பொண்ணு கிட்ட பேசிட்டு இருந்தேன் அது கூட உங்களுக்கு பொறுக்கலையா”என்று சிரித்தாள் லதா.
“சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் அந்த பொண்ணு யாரு உனக்கு தெரிஞ்சவங்களா”
“இல்லை இன்னைல இருந்து தான் ப்ரண்டு”
“ஓஹோ சரி சரி…வா அந்த பக்கம் போய் கொஞ்ச நேரம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம். என்று இருவரும் நகர்ந்தனர்.
லதாவும் கோபியும் சில விஷயங்களை கதைத்துக் கொண்டே கப்பலில் இருந்தபடி கடற்கரையை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். கோவா முழுவதும் கடற்கரை தான் அதுவே அந்த ஊருக்கு ஒரு அழகு தான். கோவா என்றாலே ஆண்கள் மட்டும் தான் கூட்டம் கூட்டமாக நண்பர்களாக வந்து தங்கி விட்டு செல்ல வேண்டும் என்ற ஒரு பொய்யான கூற்று இருந்து வருகிறது. ஆனால் உண்மையில் கோவா ஒரு அழகான சுற்றுலா தளம். தேன்நிலவு வருவதற்கு ஒரு அருமையான இடம். அன்றாட வாழ்க்கை முறையில் இருந்து சற்று வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு கோவா ஒரு சிறந்த இடமாகும்.
கேசினோவில் நேரம் போய்க் கொண்டே இருந்தது இரவு நேரம் வரவர மற்ற கப்பல்களில் இருந்து வரும் வெளிச்சம் நிலவின் வெளிச்சம் என அந்த இருட்டை அழகாக்கி கொண்டிருந்தது. இருட்டில் இருக்கும் போது தண்ணீரை வேடிக்கை பார்க்க சற்று பயமாக தான் இருக்கும் ஆனால் கப்பலில் இருந்த படி கடற்கரையை பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும்.
மனதுக்கு பிடித்தவர்களுடன் அந்த மாதிரி ஒரு சூழலில் அவர்களுடன் நேரம் செலவிடுவது அழகான நிகழ்வு தான்.
“இப்படி பட்ட நேரத்துல இதை உங்க கிட்ட சொல்லலாமானு தெரியலை. சொன்னா நீங்க எப்படி எடுத்துப்பிங்கன்னு தெரியலை ” என்றாள் லதா.
‘அப்படி என்ன சொல்ல போறாள் நம்ம கிட்ட’ என்று யோசித்தான் கோபி.
“என்ன கோபி ரொம்ப ஆழ்ந்த சிந்தனைக்கு போயிட்டீங்க போல இருக்கு” என்று சிரித்தாள் லதா.
“இல்ல நீ எதை பத்தி சொல்ல வரேன்னு எனக்கு தெரியல அதான் யோசிச்சிட்டு இருந்தேன்”
“அது வந்து..”
“என்ன வந்து போய்ன்னு எதுவா இருந்தாலும் சொல்லு”என்றான் கோபி.
“எனக்கு கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு காதல் இருந்துச்சு ஆனால்….” என்று நிறுத்தினாள் லதா.
“வேண்டா லதா இதுக்கு மேல நீ எதுவும் சொல்ல வேண்டாம். அத பத்தி நான் தெரிஞ்சுக்கவும் விருப்ப படல”என்றான் கோபி திரும்பி நின்றபடி.
“ஏன் கோபி என்ன பத்தி எதுவும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டாமா”என்றாள் லதா அவன் தோளை பிடித்தப்படி.
“இல்ல லதா நம்ப ஒரு புது வாழ்க்கையை ஆரம்பித்து இருக்கிறோம். தேவை இல்லாம கண்டதையும் பேசி நம்ம மனச காயப்படுத்தி கொள்ள வேண்டாம். பாஸ்ட் எப்போமே பாஸ்டாவே இருக்கட்டுமே” என்று ஒரு சின்ன புன்னகையை உதிர்த்த படி கூறினான் கோபி.
“நீங்க இவ்ளோ எதார்த்தமா இருப்பீங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கல கோபி”என்றாள் லதா.
“ஹாஹா… நானே ரெண்டு மூணு வருஷமா பொண்ணு தேடி அமையல அமையலன்னு சொல்லி 35 வயசுல உன்னை தேடி கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணி இருக்கேன் நான் உன் கூட வாழ்கிற வாழ்க்கை பத்தி மட்டும் தான் நான் நிறைய பிளான் பண்ணனும். இதுக்கு முன்னாடி நம்ம ரெண்டு பேரு வாழ்க்கையில என்ன நடந்துச்சு அப்படின்னு ஏன் ஆராய்ச்சி பண்ணனும்” என்று அவள் தோள்களை பற்றியபடி கூறினான்.
‘ஆமால ஈரம் படத்துல அவங்க ரெண்டு பேருக்குள்ள பிரச்சனை வந்தது அந்த பாஸ்ட் ஷேர் பண்ணும் போது தான். தேவையில்லாம பாஸ்ட் ஷேர் பண்ணி நல்லவனை கூட எதுக்கு கெட்டவனா மாத்தி நம்ம மனசையும் கஷ்டப்படுத்திக்கிட்டு அவங்க மனசையும் கஷ்டப்படுத்திக்கிட்டு. வாழ்ற கொஞ்ச நாள் வாழ்க்கையை சந்தோஷமாவே வாழ்ந்துட்டு போயிடுவோமே’ என்று நினைத்தாள் லதா.
“நடந்ததை சொல்லி…
நடக்கயிருப்பதை நரகமாக்கி கொள்ளாமல்.
நடந்தது நடந்ததாவே இருக்கட்டும்
என் மறந்து விடுவோம்.
இது காதலில் மட்டுமல்ல
எல்லா உறவுகளுக்கும் தான் “
தொடரும்
