Skip to content
Post Views: 10,358
“நவம்பர் மாதம் மழை இல்லாமல் ஒரு நாளா” என்று முகத்தை சுருக்கி வானத்தை பார்த்திருந்தாள் அவள்.
அடுக்கலையின் பின் வராண்டாவில் புத்தகத்தில் கண் வைத்து, கவனம் முழுவதையும் காரிகையின் மேல் வைத்திருந்த ஜெகன்நாதன், அவள் வதனத்தில் வந்து போன உணர்வுகளை ரசித்திருந்தான்.
“அம்மு” என்ற வாஞ்சிநாதனின் அழைப்பில் அவனை திரும்பிப் பார்த்தாள், “உன்னோட நிஜப் பேரே அம்முவா, இல்ல வேற பேரு இருக்கா” என்க, புன்னகைத்தவள் “ஏன் அம்மூன்ற பேரு நல்லா இல்லையா, உனக்கு பிடிக்கலையா” என்க.
Advertisement
“எனக்கு அம்மூன்ற பேரும் பிடிக்கும், அம்முவயும் பிடிக்கும்” என்றவனை யோசனையோடு பார்த்தான் ஜெகன், தம்பியின் மனதில் என்ன இருக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை.
சாரலாய் இறங்கத்தொடங்கிய மழையை பார்த்துக்கொண்டே படிகளில் இறங்கினாள் அவள் , மங்கையை நனைத்து மண்ணை நனைத்தது மழை.
“தும்பி…. மழையை நேசிக்கிற கார்தும்பி” அது தான் என் பெயர் என்ற பாவையின் பார்வை வாஞ்சிநாதனை கடந்து வருண் ஜெகன்நாதனில் பதிந்தது, உண்மையில் மழையை சொன்னாளா இல்லை தன்னை சொன்னாளா!!.
Advertisement
***************************************************************************************
Advertisement
உத்தமப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருக்க, பாதி வழியில் வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்தனர் அனைவரும், ரூபாவுடன் ரெஸ்ட் ரூம் சென்று வந்த அம்மு பச்சை நிற தும்பி ஒன்றை கையில் பிடித்து துள்ளிக்கொண்டு வந்தாள் அவனிடம் .
“தும்பி” என்ற அவளின் மழிச்சி ததும்பிய குரலில் அவளை திரும்பி பார்த்தான் “இங்க பச்சை தும்பி” என்றவள்.
Advertisement
“இது பச்சை தும்பி, நான் நீலத் தும்பி” என்றாள் அவள் உடையை காட்டி, அவன் மனது நின்று துடித்தது.
பல முறை தும்பி என்று அழைத்தும் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை என்று அவள் பெரியம்மா சொல்லிக் கேட்டிருந்தான்.
அவள் கையில் இருந்த தும்பியை விடுவித்தவன் “நீ யாரு” என்க “தும்பி, கார்தும்பி” என்றாள் யோசிக்காமல்.
அவளின் நெற்றி முட்டி நின்றவன் முகம் முழுதும் சந்தோஷ சாரல், இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது.
எங்கிருக்கிறோம் , என்ன , ஒன்றும் யோசிக்கவில்லை அவளை நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான்.
அங்கிருந்து அவனே வண்டியை ஒட்டி சென்றான்.
வீட்டின் வாயிலில் ஆரத்தி தட்டுடன் அவகர்களை காத்து நின்றிருந்தார் துறைசெல்வத்தின் மனைவி, இவனின் அத்தை மாதவி “வாய்யா சேந்து நில்லுங்க ரெண்டு பெரும்” என்க அவருடன் நெருங்கிய சில உறவுகள் மட்டும் நின்றனர்.
அங்கே புதிய மனிதர்களை கண்டவுடன் அவனின் பின்னால் ஒளிந்துகொண்டாள் அம்மு.
“இங்க யாரும் உன்ன ஒன்னும் பண்ண மாட்டாங்க வா” என்று அவளின் கையை அழுத்தமாக பிடித்து தன் அருகில் நிறுத்தினான்.
ஆரத்தி எடுத்தவுடன் உள்ளே அழைத்து செல்ல, “என்ன தம்பி இப்படி சொல்லாம கொள்ளாம கல்யாணம் முடிச்சுட்டு வந்துட்ட, அதும் வேற ஊரு பொண்ண” என்ற ஒருவர், அவன் பார்த்த பார்வையில் மெல்ல பின் வாங்கினார்.
“அதில்ல தம்பி உங்க பாட்டிகிட்ட கூட சொல்லாம பண்ணலாமா” என்ற பெரியப்பா முறை உள்ளவரின் கேள்வியில் அவனின் பார்வை பாட்டி நீலவேணி மீது பதிந்தது, அவரின் தூண்டுதலில் தான் பேசுகிறார் என்று புரிந்தது.
“என் தங்கச்சி அவ மகனுக்காக பார்த்து வெச்ச பொண்ணுப்பா, இந்த கல்யாணத்துல தங்கச்சிக்கும் மச்சானுக்கும் நிச்சயம் சந்தோசம் தான் இருக்கும்” என்றார் துறை செல்வம்.
“உன் தங்கச்சி பவுசு தான் ஊருக்கே தெரிஞ்சிடுச்சே” என்ற நீலவேணியின் நக்கலில் அனைவரும் பதற.
கை முஷ்டிகள் இறுக அவரை நோக்கி திரும்பியவனை தடுத்தார் துறைசெல்வம்.
“உங்க சொந்தகாரங்க முன்னாடி மரியாதையை காப்பாத்திக்கோங்க” என்று பற்களுக்கிடையில் வார்த்தையை கடித்து துப்பியவன் “பாத்துக்கோங்க அத்தை” என்று அம்முவை அவரிடம் விட்டு கீழே இருந்த அறையில் நுழைந்துக் கொண்டான்.
அங்கு நின்ற சொந்தங்கள் அனைவரையும் பார்த்த துறை செல்வம் “யாரையும் கூப்பிட முடியாத சூழ்நிலை, கொஞ்சம் புரிஞ்சுக்கோங்கப்பா”.
“யாரோ என்னமோ சொன்னாங்கனு வாய்க்கு வந்தத பேசிட்டு அப்புறம் வருத்தப் பட கூடாது, ரெண்டு நாள் கழிச்சு முறையா வந்து எல்லாரையும் அழைக்கிறோம், குடும்பமா எல்லாரும் விருந்துக்கு வந்து பிள்ளைங்களை ஆசிர்வதிங்க”.
“எங்க உறவு வேணும்னு நினைக்கிறவங்க வந்தா போதும்” என்றவர் அவன் சென்ற அறைக்குள் நுழைந்தார்.
“வாடா” என்று அம்முவை அழைத்துக் கொண்டு உணவு மேசை இருந்த பக்கம் சென்றார் மாதவி.
அவன் சென்ற அறைக்குள் நுழைந்த துரை செல்வம் கண்டது தந்தையின் கையில் முகத்தை புதைத்து அமர்ந்திருக்கும் ஜெகனை தான் “மாப்ள அப்பாகிட்ட சொல்லிட்டியா?” என்க “இல்லை” என்று தலை ஆட்டினான்.
“என்ன விஷயம்” என்ற கேள்வியோடு அவரை நிமிர்ந்து பார்த்தார் பிரகாஷ்.
முகத்தில் இருந்து இடை வரை ஒரு பக்கம் முழுதும் எரிந்து, முதல் முறை பார்ப்பவர்கள் பயந்து பின்வாங்கும் தோற்றத்தில் இருந்தார்.
பேச்சு சரியாக வரவில்லை, மிகவும் அருகில் சென்று கேட்டால் மெல்லிய காற்று போல வரும் சத்தம்.
அவரின் அருகில் சென்ற துறை செல்வம் “அம்முவை கூட்டிட்டு வந்துட்டோம்! உங்க மருமகளா… சந்தோஷமா” என்க அவர் விழிகள் நிறைந்தது, சிரிக்க முயன்றார் போல.
“இங்க கூட்டிட்டு வரவா” என்க.
“வேண்டாம்” என்று தலை ஆட்டினார்.
“ஏன்” என்று கேட்ட மகனை அருகில் அழைத்தார்.
அருகில் சென்று கூர்ந்து கவனிக்க “அம்மு என்ன பார்த்தா பயந்துடுவா, இப்போ வேண்டாம்” என்றார்.
“அப்பா” என்றான் ஜெகன் வேதனையோடு, “நல்லா பாத்துக்கோ பிள்ளையை” என்றார் நிறைவாக.
“இவங்க என்னடி இப்படி குறு குறுன்னு பாக்குறாங்க, இந்த புள்ளய ஏதாவது சொல்லிட்டாங்கன்னா… அவன் இவங்கள உசுரோட பொதச்சுருவான்” என்ற மாதவி.
“ரூபா நீ அம்முவை ரூமுக்கு கூட்டிட்டு போ” என்க.
“என்னமா,… இது இனி அக்காவோட வீடு இந்த கெழவிக்கு பயந்து உள்ள போய் ஒளிஞ்சுக்கணுமா” என்றாள்.
“ஏய் என்னடி இது பெரியவங்கள மரியாதை இல்லாம, நீ அவளை உள்ள கூட்டிட்டு போ” என்றார்.
அதே நேரம் அறையில் இருந்து வெளியில் வந்தான் ஜெகன்நாதன், அவனை பார்த்த அம்மு வேகமாக சென்று அவனின் கைகளை பிடித்துக் கொண்டாள்.
அதை அதிர்ப்ப்தியோடு பார்த்தார் நீலவேணி, அவரை சட்டை செய்யாமல் அவளுடன் படியேறினான்.
அவன் காதின் அருகில் சென்று “இவங்க எல்லாம் யாரு” என்று ஹஸ்கி வாய்ஸில் கேட்டாள் அம்மு, அவளை பார்த்து சிரித்தவன் “எல்லாரும் நம்ம சொந்தகாரங்க” என்க.
“எனக்கு யாரையும் தெரியலையே” என்றாள்.
அதற்குள் அவன் அறைக்கு வந்திருந்தனர், அவளை தன் கைவளைவில் நிறுத்தியவன் “அவங்கள தெரியல சரி , நான் யாருன்னு தெரியுமா” என்றான் விழிகளில் எதிர்பார்ப்போடு.
“ம்ம்” என்று எல்லா பக்கமும் தலை ஆட்ட “யாரு சொல்லு” என்றான் ஆர்வமாக.
“புருஷ்… புருஷ்….” யோசனை செய்தவளிடம் “என்ன” என்றான் கேள்வியாக.
“இதை கட்டினீங்களா அதனால புருஷ்….” என்று மீண்டும் யோசித்தாள் தாலியை கையில் பிடித்துக் கொண்டு.
பெரிதாக சிரித்தவன் “புருஷனா” என்க “ஹ்ம்ம் ஹ்ம்ம்” என்று மண்டையை நன்றாக ஆட்டினாள்.
“அது சரி, யாரு சொன்னா அப்படி” என்க “ஆண்ட்டி” என்றாள் கீழே கை காண்பித்து.
அவன் இதழில் அழகான புன்னகை “புருஷ்! இதும் நல்லா இருக்கு, இப்படியே இருக்கட்டும் கொஞ்ச நாளைக்கு”.
தாலியை கையில் எடுத்தவன் “இதை எப்பவும் கழட்டக் கூடாது சரியா, கொஞ்ச நாள் அப்புறம் தங்கத்துல தாலி மாத்திக்கலாம்” என்க என்ன புரிந்ததோ “சரி சரி” என்றாள்.
அவள் பிறை நெற்றியில் கிடந்த முடியை ஒதுக்கியவன் அவளின் வலது இமையில் இதழ் பதித்தான், விலக முடியவில்லை அப்படியே இருக்க, மெல்ல அவனின் மார்பில் சுரண்டினாள்.
சிரித்துவிட்டான் “என்னடி” என்க இடது இமையை காட்டி முத்தம் கேட்டாள், அங்கும் இதழ் பதித்தவன் அவளை தன்னில் புதைத்துக் கொண்டான்.
மனதில் பெரிய சஞ்சலம், எப்பொழுது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம், அவனுடைய லீவு முடியப்போகிறது அதிகம் போனால் ஒரு வாரம், அவளை விட்டு மாதக்கணக்கில் பிரிந்திருக்க வேண்டும்.
உடன் அழைத்து செல்வதும் முடியாது, நான்கு வருடங்கள் அவளை பிரிந்து இருந்தவனால் இனி இருக்க முடியும் என்று தோன்றவில்லை.
அலைபேசி அடிக்க எடுத்துப் பார்த்தான், உடனே எடுத்து காதில் வைத்தவன் “சொல்லுங்க கிஷோர்” என்க “நியூஸ் பாருங்க சார்” என்றான் அவன்.
அவளுடன் டிவியின் அருகில் சென்று ரிமோட் எடுத்தவன் நியூஸ் சேனல் வைத்தான் “கேரளாவை உலுக்குகிறது தங்கம் மற்றும் போதை மருந்து கடத்தல்”.
“கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக கோழிக்கோடு விமானநிலையத்தில் பணிபுரிந்த கஸ்டம்ஸ் அதிகாரி சங்கரன் நாயர் மற்றும் அவருக்கு துணை நின்ற அண்ணன் கிருஷ்ணன் நாயர் கைது”.
“சந்தேகத்தின் பெயரில் கிருஷ்ணன் நாயரின் மகன் ராஜீவ் கிருஷ்ணாவும் கைது” என்று அவர்களின் புகைப் படத்துடன் ஓடிக் கொண்டிருந்தது.
கண்களில் புதிய ஒளி, முதல் வெற்றி தந்த சந்தோஷமோ நிறைவோ ஏதோ ஒன்று.
டீவியை அனைத்தவன் அவள் முகத்தை கைகளில் ஏந்தி “அம்மு ஒரு முத்தம் கொடுக்கவா!” என்க கன்னத்தை காட்டினாள், அவன் அவளின் இதழ்களை சுவைத்தான். (Phentermine)
error: Content is protected !!