Skip to content
Post Views: 10,431
அத்தியாயம் 18
“நீ என்ன சொல்ற ஜேக்?” பிரியா கேட்க, ஜனனி இன்னும் யோசித்தபடி தான் இருந்தாள்.
“உன்கிட்ட தான் டி கேட்குறேன் சொல்லு!” பிரியா மீண்டும் கேட்க,
“அவளும் கொஞ்சம் யோசிக்கட்டும் பிரியா.. கேட்டதும் சரினு தூக்கி குடுக்க இது என்ன பொருளா?” என்றார் மீனாட்சியும்.
கதிரவன் கைகளில் இருந்து விளையாடிக் கொண்டு இருந்தாள் மகிழினி.
“உடனே சொல்லணும்னு எல்லாம் இல்லை ஜனனி.. நீயும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கோ.. நானும் வேணா விசாரிச்சுட்டு சொல்றேன்” என்றான் கதிரவனும்.
“என்னங்க இப்படி சொல்றிங்க?” பிரியா கேட்க,
“வேற எப்படி சொல்ல? அவளுக்கு யோசிக்க நேரம் வேண்டாமா? உனக்கு புடிச்சிருந்தா மட்டும் போதுமா?” என்றான் அவள் கணவன்.
“ஆனா நல்ல சம்மந்தம் ஆச்சே! அதான்!” என்ற பிரியாவிற்கு அத்தனை ஆசை ஜனனியை அந்த வீட்டில் அவனுக்கு மனைவியாக்க.
“இது நல்லாருக்கு டி! நான் உன் பின்னாடி அலைஞ்சப்போ என்னை கண்டுக்காம போனவ தானே நீ? உன் தங்கச்சி மட்டும் உடனே பதில் சொல்லனுமா?” கதிரவன் கிண்டல் செய்ய,
“அதுவும் இதுவும் ஒன்னா?” என்றாள் பிரியா. மீனாட்சி இருவரையும் பார்த்து சிரிக்க,
“என்ன பேச்சு இது!” என கணவனை கண்டிக்கவும் செய்ய,
“ஒன்னான்னா? நீ என்னை மட்டம் தட்டுறியா? இல்ல இப்ப வந்தவங்களை மட்டம் தட்டுறியா?” என்று கேட்க,
“ஆளை விடுங்க.. நான் பேசவே இல்லை” என வாயில் கை வைத்து விட்டாள் பிரியா.
இவர்களின் இவ்வளவு பேச்சிலும் கலந்து கொள்ளாத ஜனனி இன்னும் நடந்ததை நம்ப முடியாமல் முடிவெடுக்க தெரியாமல் அமர்ந்திருந்தாள்.
“நீ என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்கு சம்மதம் தான் ஜனனி.. இல்ல அத்தை?” என்று கதிரவன் கேட்கவும்,
“ஆமா மா! ரொம்ப போட்டு குழப்பிக்காத” என்றார் அவரும்.
“எடுத்து சொல்ல சொன்னா! என்ன பண்ணுதுங்க பாரு!” என முணுமுணுத்துக் கொண்டாள் பிரியா.
“சரி சரி! அதை அப்புறம் பேசிக்கலாம்.. எல்லாரும் இந்த காபியை எடுத்துக்கோங்க.. மகிம்மா! நீங்க பிஸ்கட் எடுத்துக்கோங்க” என்று வைத்துவிட்டு சென்றார் மீனாட்சி.
தீவிர யோசனையில் அமர்ந்திருந்த ஜனனிக்கு என்ன முடிவிற்கு வருவது என்பது அத்தனை குழப்பமானதாய் இருந்தது.
அஞ்சலியை அழைத்து வருவதாக வீட்டில் இருந்து கிளம்பிய சூர்யா செல்லும் வழியில் ஜனனிக்கு அழைத்து அவள் எங்கிருக்கிறாள் என கேட்க, மதியத்தின் பின் தான் வேலை என்று அவள் கூறவும் அவளை வீட்டில் இருக்க கூறிவிட்டு, ப்ரியாவையும் வர கூறும்படி சொல்லிவிட்டு தான் அஞ்சலி வீட்டிற்கு சென்றான்.
அங்கேயும் பேச வேண்டியதை பேசி விட்டு அஞ்சலியை அழைத்து செல்ல திரும்ப வருவதாக கூறிவிட்டு ஜனனி வீட்டிற்கு வந்து சேர்ந்தான் சூர்யா.
“என்ன சூர்யா? திடிர்னு போன் பண்ணி எங்க இருக்கன்னு எல்லாம் கேட்குற? அக்காவை ஏன் வர சொன்ன?” என்று வந்தவனை ஜனனி கேட்க,
“வீட்டுக்கு வந்தவங்களை வாசல்ல நிற்க வச்சு இப்படி தான் பேசுவியா ஜனனி?” என்று கதிரவன் கேட்க,
“ஹாய் ப்ரோ! நீங்களும் இருக்கீங்களா? சூப்பர் சூப்பர்!” என்ற சூர்யா,
“அவளுக்கு அந்த அளவுக்கு எல்லாம் மூளை வேலை செய்யாது.. இல்லைனா சும்மா போன என் மேல கல்லடி விழுந்திருக்குமா?” என்று கேட்டபடி உள்ளே வந்திருக்க,
“ஆரம்பிச்சுட்டியா?” என்றாள் சன்னமான முறைப்போடு ஜனனி.
“வாப்பா சூர்யா!” என்று வரவேற்றார் மீனாட்சியும்.
“என்னையும் நீங்க வர சொன்னதா ஜேக் சொன்னா” பிரியா கேட்க,
“அக்கா, தங்கச்சி ரெண்டு பேருமே இப்படி தான்..” என்ற கதிரவன், சூர்யா புன்னகைக்கவும்,
“வந்தவங்களுக்கு எதாவது சாப்பிட குடு பிரியா முதல்ல!” என்று கூற,
“ப்ச்! என்னவோ பேச போறாங்கன்ற ஆர்வத்துல எதுவுமே நியாபகம் இல்லைங்க..” என்று தலையில் தட்டிக் கொண்ட பிரியா,
“சாரி சூர்யா!” என்று விட்டு உள்ளே செல்ல, “வாட்டர் போதுமே!” என்ற சூர்யாவிற்கு நீர் எடுத்து வந்தாள்.
“ஆண்ட்டி! எனக்கு சுத்தி வளைச்சு எல்லாம் பேச தெரியாது.. நேராவே சொல்லிடுறேன்..” என்ற சூர்யா,
“மேரேஜ் நடந்தது உங்களுக்கு தெரியும் நினைக்குறேன்” என்றதும்,
“ம்ம் தெரியும் சூர்யா.. அதான் நேத்து மண்டபம் வந்துட்டு நான் உனக்கு போன் பண்ணினேனே!” என்று ஜனனி கூறவும்,
“எப்போ?” என்று அவன் கேட்க,
“அதான் நேத்து பேசினேன் இல்ல?” என்று ஜனனி கூறவும் அண்ணன் கூறியது நியாபகம் வர சிரித்தவன்,
“நீ என்கிட்ட பேசல.. ஜெய்கிட்ட பேசி இருக்க” என்றதும் பக்கென்று ஆனது ஜனனிக்கு.
அவள் முகம் பார்த்து பிரியா சிரிக்க, “ரெண்டும் என்னவோ பண்ணி வச்சிருக்குங்க” என்றான் கதிரவன்.
“அது ஒன்னும் இல்ல! நீங்க விஷயத்துக்கு வாங்க” என பாயிண்ட்டில் வந்து நின்றாள் பிரியா.
“அது தான்! அது ஒரு அச்சிடேன்ட்! அன்எக்ஸ்பெக்ட்டட்!” என்றவன் நடந்ததை கூற,
“அம்மாடி! அவ்வளவு கொழுப்பா அந்த பொண்ணுக்கு?” என்றாள் வாய் கொள்ளாமல் பிரியா.
“பிரியா!” என்று கதிரவன் அதட்டி, ‘அவள் கணவன் சூர்யா!’ என்பதைப் போல கண்ணைக் காட்ட,
“சாரி சாரி! அது ஒரு புளோல வந்துடுச்சி” என்றாள் சூர்யாவிடம்.
“நிஜத்தை தானே சொன்னிங்க” என்றான் சூர்யாவும். ஜனனி எதுவும் பேசாமல் நிற்க,
“ஆமா நீங்க ஏன் ஓகே சொன்னிங்க?” இப்பொழுதும் பிரியாவே கேட்க, கணவன் முறைத்ததை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை அவள்.
“சும்மா ஒரு கணக்கு தான்!” என்று சிரித்தான் சூர்யா.
“ஆனா இதை ஏன் நீங்க இங்க வந்து சொல்லணும்?” என்ற கதிரவனுக்கு நிஜமாய் புரியவில்லை.
ஆனால் மீனாட்சிக்கு ஒரு மின்னல் வெட்ட தான் செய்தது.
“இல்ல அண்ணன் மேல தப்பு இல்லைனு உங்களுக்கு புரியனுமே! இந்த மேரேஜ் ஸ்டார்ட் ஆனதே அண்ணன் ஊர்ல இல்லாத நேரத்துல தான்.. அவன் விருப்பம் இல்லாமல் ஆரம்பிச்சு தான் இவ்வளவு தூரம் வந்தது.. இப்ப நான் என்ன சொல்ல வர்றேன்னா… கோவில்ல மல்லி ம்மா ஜனனியைப் பார்த்திருக்காங்க.. அவங்களுக்கு ரொம்ப புடிச்சிருக்கு.. ஜெய்க்கு கேட்கலாமான்னு காலையில என்கிட்ட கேட்டாங்க” என்றதும் ஜனனி கண்களை விரிக்க,
மீனாட்சியும் பிரியாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“நிஜமா என்னை விட ஜெய் ரொம்ப நல்லவன்.. என் அண்ணன்றதுக்காக நான் சொல்லல.. இந்த மேரேஜ் நின்னதை வச்சு நீங்க எதுவும் அவனை நினைச்சுடக் கூடாது” என்று கூறவும், அனைவரும் அமைதியாய் இருந்தனர்.
“நான் சொன்னதுல எந்த பொய்யும் இல்லை.. அண்ட் வீட்டுல இப்ப இதை பேச வேண்டாம்.. கொஞ்ச நாள் போகட்டும்னு தான் சொன்னாங்க.. ஆனா எனக்கு ஜனனி தான் என் அண்ணனுக்கு பொருத்தமான பொண்ணுன்னு மல்லி ம்மா சொன்னதுல இருந்து தோண ஆரம்பிச்சுடுச்சு.. அதனால தான் தோணினதை உடனே கேட்கலாம்னு வந்துட்டேன்..” என்றவன்,
“தப்பா எதுவும் சொல்லலை… நீங்க தப்பா நினைச்சிருக்க மாட்டிங்கணும் நம்புறேன்” என சூர்யா முடிக்க,
‘வக்கீலுக்கு படித்தவன் பேச்சு!’ என்று கணக்கிட்டு இருந்தான் கதிரவன்.
அவன் பேசி முடித்த பின்னும் அங்கே அமைதி நிலவ, மகிழினி மட்டும் கதிரவன் கைகளில் துள்ளிக் கொண்டு இருந்தாள்.
“என்ன பிரியா க்கா! நீங்களே அமைதி ஆகிட்டிங்க? நேத்து கல்யாணம் நின்னவனுக்கு இன்னைக்கு பொண்ணு கேட்டு வந்திருக்கானேன்னு நினைக்குறிங்களா?” என்று கேட்க,
“அச்சச்சோ! அப்படி எல்லாம் இல்லை” என்றாள் பிரியா வேகமாய்.
“நீங்க சொல்லுங்க ஆண்ட்டி! என் அண்ணனுக்கு ஹன்ட்ரேட் பெர்சென்ட் நான் கராண்டி!” சூர்யா கூற, அவன் பேசுவது அத்தனை பிடித்தது மீனாட்சிக்குமே.
“எல்லாம் சரி தான் பா.. எங்க வீட்டுல மூத்த பையன் மாதிரி தான் கதிரவன்.. பிரியா வீட்டுக்காரர்.. அவங்ககிட்ட கேளுங்க” என்றதும், சூர்யா அவன்புறம் திரும்ப,
“இதுல நாங்க சொல்றதை விட ஜனனி முடிவு ரொம்ப முக்கியம்.. ஜனனிக்கு ஒரு வருஷமா மாப்பிள்ளை தேடிட்டு இருக்கோம்.. அன்னைக்கு கோவிலுக்கு வந்தது கூட சீக்கிரம் கல்யாணம் நடக்கணும்னு தான்..” என்று ஜனனி புறம் திரும்பினான் கதிரவன்.
“ரொம்ப அட்வான்டேஜ் எடுத்து இவ்வளவு தூரம் வந்துட்டேன்னு நினைக்காத ஜனனி.. ஜஸ்ட் தோணினதை உடனே பேசிடுறது பெட்டர்னு தான் வந்தேன்.. என் வீட்டுல கூட யாருக்கும் சொல்லல.. அண்ணாவுமே இப்ப எதுவும் வேண்டாம்னு தான் சொன்னான்.. இது என்னோட ஆசை மட்டும் தான்.. உனக்கு புடிக்கலைனா மறுக்க உனக்கு எல்லா ரைட்ஸ்ஸும் இருக்கு.. இது இல்லைனாலும் நீ என் பிரண்ட்டு தான்.. இந்த பிரண்ட்ஷிப் எப்பவும் தொடரனும்னு தான் என்னோட ஆசை..” என்று தெளிவாய் கூறினான் சூர்யா.
“எனக்கு என்ன சொல்லன்னு தெரியல சூர்யா..” என்றவள் மூளை நிச்சயம் வேலை செய்ய மாட்டேன் என்று தான் அடம் பிடித்திருந்தது அந்த கணம்.
பாவமாய் பார்த்தவளைப் பார்த்து பாவமாய் போனது சூர்யாவிற்கே.
“ஓகே ஓகே! கம்பெல் பண்ற மாதிரி உடனே கேட்க கூடாது இல்ல.. ஒன்னும் பிரச்சனை இல்ல.. எவ்வளவு நாள் வேணா டைம் எடுத்துக்கோ.. உன் போன்க்காக நான் வெயிட் பண்றேன்.ம்ம்!” என்று தலையாட்ட, அவளால் புன்னகைக்கவும் முடியவில்லை.
“ஹே வாலு! ஏன் இவ்ளோ டென்ஷன்?” என்றான் எப்போதும் போல.
“நீ இப்படிலாம் இருந்தா என் அண்ணனுக்கு வேணாம்னு நானே சொல்லிடுவேன்!” என்றதும் அவள் முறைக்க,
“தாட்ஸ் குட்!” என்றவன்,
“ஓகே ம்மா! மனசுல உறுத்திட்டு இருக்கறதை நேர்ல கேட்டுட்டா நல்லதுன்னு தோணவும் கிளம்பி வந்துட்டேன்.. உங்க இஷ்டம் எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே தான்.. எதுக்காகவும் வருத்தப்பட வேண்டியது இல்லை..” என்று கூறி கிளம்பி இருந்தான் சூர்யா.
மழை அடித்து ஓய்ந்தது போல இருந்ததது ஜனனி வீட்டினருக்கு.
“ரொம்ப ஈஸி மூவிங் பெர்சனா இருக்காரு சூர்யா!” பிரியா கூற,
“அவர் சொல்றதைப் பார்த்தா எல்லாம் உண்மை மாதிரி தான் இருக்கு.. பிரண்ட்டு தானேன்னு உடனே கேட்ருக்கார்.. நாம தான் பதில் சொல்லணும்” என்ற கதிரவன் பிரியாவைப் பார்க்க, பிரியா ஜனனியைப் பார்த்தாள்.
இப்படி ஆரம்பித்து அன்று முழுவதும் அதே சிந்தனையில் இருந்து வேலைக்கும் செல்லவில்லை ஜனனி.
அஞ்சலியுடன் வீட்டிற்கு வந்த சூர்யாவும் அதைப் பற்றி யாருக்கும் எதுவும் தெரிவிக்கவில்லை.
மல்லிகா கூறவுமே தோன்றிவிட்ட எண்ணம் தான்.. அண்ணனுக்கு ஏற்ற துணை நிச்சயம் என நம்பியவன் தோன்றியதை பேசிவிட்டு முடிவை அவர்கள் கையிலேயே கொடுத்து விட்டு முடிவு தெரிந்த பின் வீட்டில் பேசிக் கொள்ளலாம் என முடிவு செய்திருந்தான்.
தொடரும்..
error: Content is protected !!