Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தட்றோம் தூக்றோம்

தகிக்கும் சுடர்கள் சுடர்_8

சுடர் -8

கனகவள்ளி,” நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா .நீங்க செய்தது மிகப்பெரிய தவறு. உங்க பெண்ணை பற்றி உங்களுக்கு தெரியாதா? இப்படி அவளோட மனசை கஷ்டப்படுத்தி இருக்கீங்களே?உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா என் பையன் சங்கவி கிட்ட காதலை சொன்னதும் அவளுக்கு அவனை பிடித்து இருந்தாலும் அவ்வளவு சுலபத்தில் ஓகே சொல்லலையாம். காரணம் நீங்கதான் அம்மா, அப்பா ,தம்பிக்காக அவள் ரொம்ப யோசிச்சா. ஆனால் நீங்க மூணு பேருமே அந்த பொண்ணுக்காக யோசிக்கல அதை நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு “என்றார்.

“நாங்க செய்தது தவறுதான் மா .எங்களை மன்னிச்சிடுங்க என்ற தக்ஷிணாமூர்த்தி எல்லாம் இவளால் தான். நான் அவசரப்படாத நம்ம பொண்ணு கிட்ட நேரடியா கேட்கலாம் சொன்னேன் .இவள் தான் வேலைக்கு போறவ அவளை கேட்க யாரும் இல்லை என்று இந்த மாதிரி ஒரு காரியத்தை செய்தாளோ என்னவோ ?அவகிட்ட மாற்றம் இருக்குங்க அதனால அந்த பையன் சொல்றது உண்மையா தான் இருக்கும் சொல்லி என் வாயை அடைச்சுட்டாள். நான் தான் தப்பு பண்ணிட்டேன் .என் பொண்ணுகிட்ட நான் கேட்டு இருக்கனும் “என்று கலங்கினார் தட்சிணாமூர்த்தி.

“ஆமாங்க அண்ணி தவறு முழுக்க என் மீது தான் அவர் அப்போதே நான் கேட்கிறேன் சொன்னார். நான் தான் வேண்டாம்னு சொன்னேன். ஒரு பெத்தவளா என் பொண்ணை நல்ல இடத்தில் கட்டி கொடுக்கனும் .அவள் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டா அதன்பிறகு அவள் வாழ்க்கையை அவளே முடிவு பண்ணிட்டா என்ன பண்றது சொல்லி எனக்கு பயம் இருந்துச்சு .ஊர் உலகத்துல நடக்குற ஒரு சில விஷயம் என்னை குழப்பி விட்ருச்சு.. ஒரு சில பெண்கள் செய்யும் தவறை இவளும் செய்து விடுவாளோன்னு நினைச்சேன்.இவகிட்ட இருந்த மாற்றம் என்னை அப்படி யோசிக்க வைத்தது.ஆனால் உங்க பையனை விரும்பியதால் தான் இவள் அப்படி இருந்திருக்காள். அது எங்களுக்கு தெரியாம போச்சே. அவள் தனியா ஃபோன் பேசிட்டு இருப்பாள். நாங்க யாராவது போனா ஃபோனை வச்சிடுவா. இந்த மாதிரி சந்தேகம் படும்படி ஒரு சில விஷயங்களை செய்தா. ஒரு பெத்தவளா என்னுடைய மனநிலையை நீங்க யோசிச்சு பாருங்களேன்” என்றவரை சமாதானம் செய்தார் கனகவள்ளி.



Advertisement

“நடந்தது நடந்து போச்சு விடுங்க. இனி நடக்கப் போவதை பார்க்கலாம் என்ற ஷியாம் அவன் நல்ல நடிச்சு உங்களை ஏமாற்றி இருக்கான் அத்தை .அவன்  வேலைக்கு போகாம ஊர் சுத்திட்டு இருப்பவன் .இவள் நல்லா சம்பாதிக்கிறது தெரிஞ்சு இவளை கட்டிக்கிட்டா உட்கார்ந்து இடத்திலேயே சாப்பிடலாம் என்று நினைத்து தான் இவள் பின்னாடி சுத்தி இருக்கான் இவளிடம் காதலை சொல்லியும் சங்கவி அதற்கு சம்மதம் சொல்லவே இல்ல.அதனால நேரடியா உங்க கிட்ட வந்து அப்படி பொய் சொல்லி இருக்கான். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி சங்கவி உங்ககிட்ட அவன் என் பின்னாடி சுத்துறான் என்று சொல்லியும் நீங்க அவளை நம்பவே இல்ல பாருங்க அதுதான் வேதனையான விஷயம்.ஒரு பொண்ணு வீட்ல வந்து இந்த மாதிரி நடக்குதுன்னு சொல்லி ஒரு விஷயத்தை சொன்னா அதை கொஞ்சமாவது சீரியஸா எடுத்துக்கிட்டு அவள் சொல்றத நம்பி அடுத்து நடக்க வேண்டியதை பார்க்கனுமே தவிர இப்படி அவள் மீதே பழியை போடக்கூடாது .எவனோ ஒருத்தன் சொல்றதை நம்புவீங்க . ஆனால் உங்க சொந்த பொண்ணு சொல்றதை நம்ப மாட்டீங்க அப்படித்தானே?இதனால்தான் நிறைய பெண் பிள்ளைகள் தன் பெற்றவர்களிடத்தில் உண்மையை சொல்லாம இருக்காங்க. காரணம் உங்களை மாதிரி பெத்தவங்க தன் பெண்ணை நம்பாமல் அவனை மாதிரி பொறுக்கிகளை நம்புவதால தான். வெளியே விஷயம் தெரிந்தால் எங்கே அக்கம் ,பக்கத்தினர் தன் பெண்ணை ஏதாவது தவறாக கூறி விடுவார்களோ என்ற பயம்”என்றான் ஷியாம்.

“நீங்க சொல்றது எங்களுக்கு புரியுது தம்பி .இருந்தாலும் ஒரு பெத்தவங்களா எங்க மனநிலையை கொஞ்சம் யோசிச்சு பாருங்க. தவறு செய்தவன் ஆண் பிள்ளையாகவே இருந்தாலும் இந்த சமூகம் பெண் பிள்ளைகளை தான் குறை சொல்லும். அப்படி இருக்கும் பொழுது இந்த விஷயம் வெளியே தெரியக்கூடாதுன்னு  தானே நாங்க நினைப்போம்” என்று கேட்டார் லட்சுமி.

ஷியாம் லட்சுமி சொல்வதை பொறுமையாக கேட்டவன்
,”நீங்க சொல்றது சரிதான் அத்தை இருந்தாலும் யோசிச்சு பாருங்க . இன்னைக்கு நம்ம சங்கவிக்கு நடந்தது நாளைக்கு ஒரு சின்ன பொண்ணுக்கு நடந்துச்சுன்னா .அவள் உங்கள மாதிரி பெற்றவர்களை நம்பி எப்படி விஷயத்தை சொல்வாள்.பெரிய பொண்ணு இவள் சொல்றதையே நீங்க நம்பல. சின்ன பொண்ணுங்க சொன்னா என்ன சொல்வீங்க.
நீ கொஞ்சம் அமைதியா இரு .
அவன் என்ன பண்ணாலும் பொறுத்துக்கிட்டு போ
நீ அவனை நிமிர்ந்து பார்க்காத . அப்படி பார்த்தா அவனும் உன்னை பார்ப்பான்.சாக்கடை மீது கல் எறிஞ்சா நம்ம மீதுதான் தெறிக்கும் .
இப்படி எதையாவது சொல்லி அந்த பெண்ணை பயமுறுத்துவீங்க இதுதான் நடக்கும்.சின்ன பொண்ணுங்க இதை சொல்லாமல் மறைத்து அவன் மிரட்டலுக்கு பயந்து அவன் சொல்வதை எல்லாம் கேட்கும் படி ஆகும். இப்படியே பயந்து பயந்து அவனை மாதிரி ஆட்களுக்கு போதை பொருளா மாறி போறாங்க . இதனால அந்தச் சின்ன பெண்களோட வாழ்க்கையே நாசமாகி போகுது .‌இதற்கு முக்கிய காரணம் உங்களைப்போன்ற பெற்றவர்கள் தான்.பெண்கள் தன் அம்மா, அப்பா ,அண்ணன் ,தம்பி நமக்கு பாதுகாப்பா இருப்பாங்க .நம்மை நம்புவாங்க என்று நினைத்து தான் உங்ககிட்ட சொல்றாங்க ஆனால் நீங்க அவங்கள நம்பாமல் பண்ற தவறு தான் அவங்க வாழ்க்கையை சீரழிக்கிறது .அவனைப் போன்ற கேடு கெட்டவங்களுக்கு உங்களைப் போன்ற பெற்றவர்கள் மறைமுகமாக உதவி செய்றீங்க . நாம என்ன பண்ணாலும் அவங்க பெற்றவங்க அவளை மட்டுமே குறை சொல்லுவாங்க என்பதை அவனுங்க தெரிஞ்சுகிட்டா .மேலும் மேலும் நிறைய பெண்களை மிரட்டி அவங்களோட வாழ்க்கையை சீரழிக்க தான் செய்வாங்க.

Advertisement

யாராவது ஒரு பெற்றோர்களாவது தன் பெண்ணை முழுவதுமாக நம்பி அவர்களை எதிர்த்து கேள்வி கேட்கனும்.இல்ல போலீஸ் ஸ்டேஷன்ல தைரியமாக போய் கம்ப்ளைய்ன்ட் கொடுக்கனும்.
இது நடந்தால் மட்டுமே இந்த சமுதாயத்தில் குற்றங்கள் குறையும் .பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கும். போலீஸ் ஸ்டேஷன் போனால் வீட்டு கௌரவம் போயிடும்னு சொல்லி வீட்டிலேயே இருந்தால் இன்னைக்கு நம்ம வீட்டு பொண்ணுக்கு நடந்தது நாளைக்கு அடுத்தவங்க வீட்டு பொண்ணுக்கு நடக்கும்.இதற்கு நாமே காரணமாக கூடாது இல்லையா?முதல்ல பெற்ற பெண்களை நம்புங்க..அவங்களுக்கு அனைத்து விஷயத்திலையும் உறுதுணையா இருங்க .
அவங்க உங்க கிட்ட எல்லா விஷயத்தையும் மறைக்காம சொல்லுவாங்க.”என்றான் ஷியாம்.

Advertisement

வருண் ,”மாமா நீங்க சொல்றத வைத்து பார்க்கும் போது எனக்கு நிறைய விஷயம் புரியுது. நேற்று கூட ஒரு பொண்ணை ஐந்து பேர் ஃபாலோ பண்ணிட்டு போனாங்க. அந்த பொண்ணு என்னை பார்த்து என்னமோ சொல்ல வரான்னு தெரியுது . எனக்கு மனசு அடிச்சுகிச்சு தான்.என்ன விஷயம் என்று கேட்கலாம் பார்த்தேன்.ஆனாலும் எனக்கு அவங்களைப் பார்த்ததும் பயமா இருந்துச்சு.அவனுங்க பார்க்கிறதுக்கு ரௌடி மாதிரி இருந்தானுங்க.நான் அப்போதே அந்த பொண்ணு கிட்ட போய் என்னன்னு கேட்டு இருக்கனும் .இதே போல பெற்றோர்கள் மட்டுமல்ல சமூகத்தில் இருக்கிறவங்க கூட என்ன நடந்தாலும் வேடிக்கை பார்த்துட்டு போகாம தவறு செய்பவர்களை தட்டிக் கேட்கனும்.பெண் பிள்ளைகளுக்கு நாங்க உங்களுக்கு பாதுகாப்பா இருக்கோம் என்ற நம்பிக்கையை கொடுத்தால் பெண் பிள்ளைகள் எது நடந்தாலும் உடனடியாக நம்ம கிட்ட சொல்லுவாங்க . ஆனால் நான் இதை எதையும் செய்யாமல் தப்பு பண்ணிட்டேன் மாமா”

“சரிடா அந்த பொண்ணுக்கு எதுவும் நடந்திருக்காது என்று நம்புவோம் இனி அந்த பெண்ணை பார்த்தா அவளுக்கு என்ன நடந்தது என்று கேட்டு உன்னால் முடிந்த உதவியை செய்”

“சரிங்க மாமா “என்றவனுக்கு அந்த பெண்ணின் முகமே ஞாபகத்தில் வந்து அவனைக் கொல்லாமல் கொன்றது .அவளின் மருண்ட விழியும் தன்னை காப்பாற்றேன் என்பது போல் இறஞ்சியதும் அவனுக்குள் சுழன்று கொண்டே இருந்தது.

Advertisement

சங்கவி,”ஷியாம் நான் இதையெல்லாம் உன்கிட்ட சொல்லவே இல்லையே உனக்கு எப்படி தெரிஞ்சது “

“சொல்றேன்டி நமக்கு கல்யாணம் ஆன புதுசுல நம்ம இரண்டு பேரும் பீச்சுக்கு போயிருந்தோம் இல்லையா? அப்போ அந்த பையன் உன்னையே பாத்துட்டு இருந்தான். நீயும் அவனை பார்த்துட்டு என்னையும் பார்த்தவளின் முகம் பயத்தை காட்டுச்சு. அப்பவே எனக்கு சந்தேகம் இருந்துச்சு .
நானும் வேண்டுமென்றே மறு நாள் அதே பீச்சுக்கு உன்னை அழிச்சிட்டு போனேன் .அப்பவும் அந்த பையன் நம்மை ஃபாலோ செய்து வந்திருந்தான்.அதிலிருந்து அவன் உன்னை ஃபாலோ செய்கிறான் என்பதை தெரிந்துகொண்டேன்.

நம்மை இரண்டு பேரையும் செல்ஃபி எடுப்பது போல அவனையும் சேர்த்து போட்டோ எடுத்துட்டேன் .
அந்த போட்டோவை  என் ஃப்ரெண்ட் டிடெக்டிவ் ஆபிசர் ஒருத்தர் கிட்ட கொடுத்து அவனைப் பற்றி முழு விபரமும் கேட்டு தெரிஞ்சுகிட்டேன்.
அதன் பிறகு ஒரு நாள் அவனை அவனுக்கே தெரியாமல் ஃபாலோ செய்து அவனிடம் பேசினேன்.

“எதுக்காக என் பொண்டாட்டிய ஃபாலோ பண்ற”

“ஏதே உன் பொண்டாட்டியா இங்க பாருங்க மிஸ்டர் உங்க பொண்டாட்டி ஆகுறதுக்கு முன் அவள் என்னுடைய காதலி”

“அடச்சே வாய மூடு அவள் காதலித்தது என்னை மட்டும் தான் டா .உன்னை பற்றி எல்லா விஷயமும் தெரிஞ்சுக்கிட்டு தான் வந்திருக்கேன் வீணா அவள் மீது பழி போடாத”

“என்ன பழி போட்டாங்க. நீங்க அவங்க அம்மா ,அப்பாவை போய் கேளுங்க. நானும் ,அவளும் காதலிச்சது அவங்களுக்கு தெரியும். என்னை ஏமாத்திட்டு உங்களை கல்யாணம் பண்ணி இருக்கா .காரணம் உங்ககிட்ட இருக்கும் பணம் தான் .அவளை நம்பாதீங்க ப்ரோ .அவளுக்கு பணம் தான் முக்கியம் “என்ற அடுத்த நொடி ஷியாம் அவனை அறைந்திருந்தான்.

ஷியாம்,”என்னடா நானும் பாக்கறேன் ஓவரா பேசிட்டே போற.
இனி ஒரு வார்த்தை அவளை பத்தி ஏதாவது சொல்லி பாரு கொன்னுடுவேன் உன்னை பார்த்துக்கோ”

“யோவ் இப்போ எதுக்கு பேசிட்டு இருக்கும்போதே கை நீட்ற . அவள் மேல அவ்ளோ நம்பிக்கையா .ஒரு நாள் ஏமாந்து நிற்கும் போது உனக்கு தெரியும் .”

“அடி செருப்பால நாயே .எனக்கு என் பொண்டாட்டி பத்தி தெரியும்டா உண்மையை சொல்லு இல்லன்னா .நீ உயிரோட போக மாட்ட”

“சரி சொல்றேன் ப்ரோ அடிக்காதீங்க என்றவன் நான் அவங்க அம்மா அப்பா கிட்ட சொன்னதை அவங்க அப்படியே நம்பிட்டாங்க .
உங்களை மாதிரி அவங்க விசாரிச்சு இருந்தா அவங்களுக்கு உண்மை தெரிய வந்திருக்கும்‌ .இப்பவும் நான் போய் நீலிக்கண்ணீர் வடித்தால் அவங்க என்னை மட்டும் தான் நம்புவாங்க”

“என்னடா உளர்ற அவங்க அம்மா, அப்பா கிட்ட அப்படி என்ன சொல்லி தொலைஞ்ச நீ”

“என்ன சொல்லி இருப்பேன். இவ்வளவு கண்டுபிடிச்ச நீ அதையும் கண்டுபிடி”

“டேய் இப்போ நீ சொல்றியா இல்ல உன்னை ஸ்டேஷன்ல ஒப்படைக்கட்டுமா?”

“அடச்சே தள்ளிப்போடா நான் அவனை டீல் பண்ணிக்கிறேன் என்ற சுடர்விழி அவனை ஓங்கி அறைந்தவள் டேய் இப்போ நீ  உண்மைய சொல்றியா .இல்ல என் கையால் அடி வாங்கி சாகப் போறியா டா பொறுக்கி”

“ஏய் என்னடி கை நீட்ற .பெண்பிள்ள  உனக்கு இவ்வளவு திமிரா .அவள் என் கண்ல படுறதுக்கு முன்னாடி நீ படாம போயிட்டியே?”என்றவனை ஷியாம் மீண்டும் அறைய சுடர்விழி அவனை தடுத்தவள்

“அட பாரேன் செய்றது எல்லாம் பொறுக்கித்தனம்.இதில் அடிச்சா கோபம் வருதா? அட நாயே அவளா இருக்கவே உன்னை சும்மா விட்டாள்.நானா இருந்தா உன்னை என்றைக்கோ ஸ்டேஷனுக்கு அனுப்பி இருப்பேன் .நாங்க யாருன்னு நினைச்ச” என்று தனது ஐடீயை காட்ட அதில் கொஞ்சம் பயந்தவன்,” “இப்போ உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க “என்றான் தப்பிக்கும் எண்ணத்தில்…

ஷியாம்,”அடேய் அவங்க அம்மா ,அப்பா கிட்ட என்ன சொன்ன சொல்லித்தொலை

“உங்க பொண்ணு தான் என்னை விரும்பறா எனக்கும் அவளை பிடிச்சிருக்கு , எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைங்க என்று தான் சொன்னேன்”

“ஏன்டா உண்மையாவே அவளை நீ விரும்பி இருந்தா எதுக்காக இப்படி ஒரு பொய் சொல்லனும் .
நீ விரும்பியதா சொல்ல வேண்டியது தானே?”

“அதெல்லாம் உனக்கு எதுக்கு சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன் இல்ல என்னை விட்ரு”

” சர்வ சாதாரணமா ஒரு பெண்ணோட வாழ்க்கையை நாசமாக்க நினைப்ப‌ நீ
. ஆனால் நாங்க எதுவும் கேட்கக்கூடாது அப்படித்தானே? எத்தனையோ பெண்கள் இருக்கும் பொழுது நீ ஏன் சங்கவியை தேர்ந்தெடுத்த சொல்லுடா”

“எனக்கு வேலைக்கு போறது பிடிக்காது .எனக்கு அவளை பார்த்ததும் பிடிச்சு போச்சு. அதே நேரம் அவள் நல்லா சம்பாதிக்கிறா சொல்லி கேள்விப்பட்டேன் .அதனால அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டா . வேலைக்கு போகாம வீட்டோட மாப்பிள்ளையா இருக்கலாம் .அதனாலதான் அப்படி சொன்னேன்”

ஷியாம்,” இப்படி சொன்னா அவங்க அம்மா ,அப்பா உடனே ஓகே சொல்லிடுவாங்க .கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்டோட மாப்பிள்ளையா செட்டில் ஆகலாம் .அவளுடைய சம்பளத்துல உட்கார்ந்து சாப்பிடலாம் முடிவு பண்ணிட்ட அப்படித்தானே? உனக்கெல்லாம் கொஞ்சம் கூட வெட்கமா இல்லையாடா?”

“ஆமா இதுல வெட்கப்பட என்ன  இருக்கு ,பெண்கள் ஆண்களுக்கு சமம் சொல்றாங்க இல்ல அவங்க சம்பாதித்து போட்டா என்ன குறைந்து போக போறாங்க.”

” அட மானங்கெட்டவனே உத்தியோகம் புருஷ லட்சணம் இதையும் சொல்வாங்க கேள்விப்பட்டிருக்கியா இல்லையா ?அறிவு கெட்ட நாயே இனி ஒரு தடவை என் பொண்டாட்டி பின்னாடி சுத்தி பாரு .
அன்னைக்கு தான் நீ இந்த பூமியில் இருக்கும் கடைசி நாளா இருக்கும் புரியுதா? இங்க இருந்து கிளம்புடா” எனவும் அங்கிருந்து ஓடினான் அவன்.

“டேய் ஷியாம்  என்னடா இவ்ளோ சீக்கிரம் இவனை  விட்றதுக்கா என்னை அழைச்சிட்டு வந்த .அவனை நாம ஏதாவது செய்யனும் டா .
அப்போதான் அவனை போல தப்பு செய்றவனுக்கு எல்லாம் பயம் வரும்”என்றாள் ஸ்ருதி.

“ஏய் நீ சும்மா இரு நாம போட்ட போடுல அவன் திரும்ப வரமாட்டான் . இனி அவன் பிரச்னை பண்ணா அப்புறம் பாத்துக்கலாம்.”

“அட போடா பயந்தா கோலி அவனை சும்மா விடக்கூடாது .எல்லாம் இந்த சங்கவிய சொல்லனும். நம்ம கிட்ட ஏற்கனவே சொல்லி இருந்தா இது எப்பவோ நடந்து இருக்கும்.”

“சொல்லாம விட்டுட்டாளே எங்கிட்ட சொல்லி இருக்கலாம். அதுதான் எனக்கும் கஷ்டமா இருக்கு, சரி நீ எதுவும் அவகிட்ட இதைப் பற்றி கேட்காத. அவ மனசு கஷ்டப்படும் சரியா?”

“அச்சோ சாமி உங்க லவ்ஸ் தாங்க முடியல டா டேய் .நான் கேட்க மாட்டேன் டா .அவள் மனசு பத்தி எனக்கு தெரியாதா?
சரி வா வா அக்கா ரொம்ப டயர்டுல இருக்கேன் . பிரியாணி சாப்பிடலாம் “

“தின்னி பண்டாரம் சாப்பிடறதுலே குறியா இருடி “என்றவன் தான் தங்கையாய் , தோழியாய் நினைக்கும் சுடர்விழியை சாப்பிட வைத்து இருவரும் அலுவலகம் சென்றனர்.

ஷியாம் நடந்த அனைத்தையும் கூற அனைவருக்கும் ஷியாமின் மீது உள்ள மதிப்பு அதிகமாகியது. அதிலும் சங்கவி,” எனக்கு உன்னை நினைச்சா பெருமையா இருக்குடா. நான் என்னவோ புண்ணியம் ண்ணி இருக்கேன் .
அதனால தான் இப்படி ஒரு கணவன் எனக்கு அமைந்திருக்கான்.லவ் யூ டா ஷியாம் லவ் யூ சோ மச் .இனி ஒரு பொழுதும் நான் உன்னை விட்டு பிரிய மாட்டேன் .”என்று அவனை அணைத்துக் கொண்டாள்.

“ஏய் சங்கவி ஒரு சின்ன பையனை வச்சுக்கிட்டு நீங்க ரெண்டு பேரும் இப்படி எல்லாம் பண்ணாதீங்க. மீ பாவம் “என்று உதடு பிதுக்கினான் வருண்.

அவன் சொல்வதைக் கேட்டு பெரியவர்கள் சிரிக்க,” டேய் கொஞ்சம் அமைதியா இருடா” என்ற சங்கவி ஷியாமை விட்டு பிரிய முயற்சி செய்தாள்.

ஷியாம் அவளின் செயல் அறிந்து அவளை மேலும் இறுக்கியவன்,”உன்னை யார் விடப்போறா என் சண்டக்கோழி “என்றவன் பெரியோர்களிடத்தில் ஆசிர்வாதம் வாங்கிய பின் தன் அம்மாவையும் ,மனைவியும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!