மருத்தவமனையின் வராண்டாவில் குறுக்கும்,நெடுக்கும் நடந்து கொண்டிருந்தான் சத்யா.மனதெங்கும் சொல்ல முடியாத வலி பரவியிருந்தது.நிமிடத்திற்கு ஒருமுறை மூடியிருந்த அறையின் கதவை பார்த்துவிட்டு திரும்பின அவனது கண்கள்.ஒரு நிமிடம் தவறியிருந்தால் என்று நினைக்கவே பயமாக இருந்தது அவனுக்கு.
அங்கு இருக்கும் ஒரு இறுக்கையில் அமர்ந்தவன் கண்களை மூட கயல்விழியின் நினைவு தான் வந்தது.அந்த டிக்கியை தான் சரியாக மூடததின் விளைவு இன்று கயல் தன் முன்னே இல்லை என்றால் நினைக்கவே பயமாக இருந்தது.கயல் தப்பிக்க போகிறாள் என்று தெரிந்து தான் ராபின் வண்டியின் வேகத்தை கூடினான்.அதில் அதிர்ஷ்டவசமாக கயல் வண்டி மோதும் முன்னே கீழே விழுந்துவிட்டாள்.இவன் ஓடி போய் அவளை தாங்கும் நேரம் முகம் முழுவதும் இரத்துடன்,கை,கால்கள் சிராய்த்து கிடந்தவளை பார்க்க,பார்க்க சத்யாவின் உயிர் போயிருந்தது.
ராபினின் கார் முன்புறம் முழுவதும் நசுங்கிவிட அதில் இருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.சற்று நேரத்திற்கு எல்லாம் அந்த இடம் போர்களம் ஆனது.சத்யா கயல்விழியை ஆம்புலன்ஸில் ஏற்றும் நேரம் கயல் அவனின் கைகளை மயக்க நிலையிலும் இறுக்கமாக பிடித்திருக்க,சத்யாவின் இதயம் தொண்டையில் துடித்தது அவளின் நிலை கண்டு.ஆனால் இப்போது உறவாடும் நேரம் இல்லையே என்று உணர்ந்தவன் தனது கைகளை அவளிடம் இருந்து பிரித்தெடுத்தான்.அதை அவள் உணர்ந்தாளோ,
Advertisement
“சத்…சத்யா….”என்று அரை கண்ணை திறக்க முடியாமல் திறந்து திறந்து மூடினாள்.அந்த நிமிடம் அனைத்தையும் மறந்து அவளின் அருகே சென்று தலையில் கை வைத்து,
“கயல்….கயல்…..நான் சொல்லுறது கேட்டுகுதா….நீ பத்திரமா இருக்க….பயப்படாத…போ….நான் வருவேன்….என்னை நம்பு….”என்று அவளின் காதுகளில் உரைத்துவிட்டு அவளின் நெற்றியில் அழுத்தமாக தன் அதரத்தை பதித்து எழுந்தவன் ஆம்புலென்ஸை அனுப்பிவிட்டான்.மீண்டும் இரு நொடிகள் தேவைப்பட்டன அவனுக்கு இயல்புக்கு வர பின் தன் பணியை எவ்வளவு வேகமாக செய்யமுடியுமோ அவ்வளவு வேகமாக செய்து முடித்தவிட்டு நேராக கயலை பார்க்க வந்துவிட்டான்.
அவன் தன் கண்களை திறக்கும் நேரம் கயல்விழியின் அறையும் திறக்கப்பட,வேகமாக அதன் அருகே நெருங்கும் நேரம் மருத்துவர் வெளியில் வந்தார்.
Advertisement
“டாக்டர்….எப்படி இருக்கா???அவ….அவ நல்லா இருக்காள்ல…”வார்த்தைகள் வர மறுத்தது சத்யாவிற்கு,
Advertisement
“பயப்படுற மாதிரி ஒண்ணுமில்ல,ஆனா ரொம்ப வீக்கா இருக்காங்க…கன்னத்தில ரொம்ப பலமா அடிச்சிருக்காங்க அதுல அவங்களுக்கு கொஞ்சம் செவிபறையும் பாதிச்சிருக்கு….அதுக்கான டிரிட்மென்ட் கொடுத்திக்கிட்டு இருக்கோம்….இன்னைக்கு ஒன்டே அப்ஷர்வேஷன்லேயே இருக்கட்டும்….”என்றுவிட்டு மருத்துவர் செல்ல,சத்யா மெல்ல கதவை திறந்து உள்ளே சென்றான்.
தலையில் கட்டு,கன்னங்கள் இரண்டிலும் கை தடம் நன்கு பதிந்து இருந்தது.கை,கால்களில் சிராய்ப்பால் ஆங்காங்கே கட்டு போட்டு வைத்திருந்தனர்.அவளின் அருகே நெருங்கியவன் தன் நடுங்கும் கைகலால் அவளின் காயம் பட்ட இடங்களை தொட்டு,தொட்டு பார்த்து அவள் கொண்ட வலியை தானும் உணர்ந்தான்.மனது முழுவதும் ரணங்கள் சூழ்ந்து கொள்ள அவளின் அருகே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அவளின் கைகளை தன் கைகளுக்குள் பொத்திக் கொண்டு அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்.
%%%%%%%%%%%%%%%
Advertisement
மறுநாள் காலை,
குருமூர்த்தியும்,பார்வதியும் கயல்விழியை காண வந்திருந்தனர்.அவளின் வீட்டின் அழைப்பு மணியை வெகு நேரமாக அழுத்தி பார்த்துவிட்டு நின்று கொண்டிருக்க,அந்த நேரம் எதிர் வீட்டில் இருந்து வெளி வந்தான் ராஜேஷ்.
“நீ போன் பண்ணியா….”என்று குரு பார்வதியிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.
“போட்டுட்டு தான் இருக்கேன்….நேத்திலேந்து சூவிட்ச் ஆப்னு வருது….”என்று கலங்கியவாரு கூற,
“ஆமாம்….தம்பி….இங்க தான் என் பொண்ணு தங்கியிருக்கா….அவ இன்னும் வீட்டுக்கு வரலையா தம்பி….போன் போட்டாலும் எடுக்கலை….”என்று பார்வதி பதட்டமாக கேட்க,
“நேத்துக் கூட பார்த்தேனே….இருங்க நான் டிரை பண்ணி பார்க்குறேன்….”என்றுவிட்டு அவன் கயல்விழிக்கு அழைக்க சூவிட்ச் ஆப் என்று தான் வந்தது.அப்போது ராஜேஷிற்கு சத்யாவிடம் இருந்து கால்வர,
“ஹலோ….சார்….”என்றவன் கூறுயதும்,சத்யா அனுவின் நிலையை பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டவன்,பின் நேற்று நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறி கயல்விழியின் நிலையை கூற,
“அச்சோ….கயலுக்கு என்ன ஆச்சு????”என்று ராஜேஷ் தன்னையும் மீறி கத்திவிட,பக்கத்தில் நின்றிருந்த பார்வதி,
“கயலா…என் பொண்ணை தான் சொல்லுரீங்களா தம்பி….அவளுக்கு என்ன அவளுக்கு என்ன???”என்று பதற,குரு அவரை அதட்டினார்,
“இல்லை சார் உங்க பொண்ணு கயலுக்கு தான் ஆக்ஸிடென்ட்….”என்று கூற,பெற்றவர்கள் இருவரும் பயந்துவிட்டனர்.
“ஹலோ….ஹலோ….”என்று சத்யா பேசியில் அழைக்க அவனிடமும் கயலின் பெற்றோர்கள் வந்திருக்கின்றனர் என்று கூறியவன்,கயல் இருக்கும் மருத்துவமனை முகவரி கேட்டறிந்து கொண்டான்.
“தம்பி….என் பொண்ணு…என் பொண்ணுக்கு என்ன ஆச்சு….சொல்லுங்க….”என்று பார்வதி கைகள் நடுங்க கேட்க,குருவோ மகளுக்கு ஆக்ஸிடென்ட் என்ற செய்தியிலேயே சுவற்றை பிடித்துக் கொண்டு நின்றார்.ராஜேஷிற்கு இருவரையும் பார்க்கவே மனதிற்கு கஷ்டமாக இருந்தது.
“சார்…சார் ப்ளீஸ்….கொஞ்சம் அமைதியாகுங்க…ப்ளீஸ்….வாங்க நான் கூட்டிக்கிட்டு போறேன்….வாங்க….”என்று ராஜேஷ் இருவரையும் கயல்விழி இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றான்.
சத்யாவிற்கு கயல்விழியை விட்டு பார்வையை அகற்ற முடியவில்லை அவளின் ஆழ்ந்த உறக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.இன்னும் கண்விழிக்கவில்லை அவள். மருத்துவர்கள் அவளுக்கு ஓய்வு தேவை என்று மயக்க மருந்து கொடுத்திருந்தனர் அதனால் கண்விழிக்க நேரம் ஆகும்.
பிணைந்திருந்த இருவரின் கரங்களையும் பார்த்தவனுக்கு மனதில் சொல்ல முடியாத வலி உணர்வு.இதோ இப்போது வரை நடந்த சம்பவங்களில் கயல்விழியின் மீது தனக்கு கோபம் குறைந்துவிட்டது என்றெல்லாம் சொல்லமாட்டான்.ஆனால் அவள் முன்பு போல் இல்லை என்பதை மட்டும் உணர்ந்திருந்தான்.ஒரு மனது அவளுடனே செல்ல துடிக்க மற்றொரு மனதோ மீண்டும் காயம் கொள்ளவோ காயப்படுத்தவோ வேண்டாம் என்று கூறியது.ஆக இரு வேறு மனசுழலில் மீள தெரியாமல் சிக்கிக் கொண்டான்.
கயல்விழியின் அருகே இருக்க இருக்க ஏதோ மூச்சு முட்டுவது போல இருக்க எழுந்து வெளியில் வந்துவிட்டான்.அப்போது தான் மருத்துவமனையின் உள்நுழைந்தனர் ராஜேஷும்,கயலின் பெற்றோரும்.அவர்கள் கயல் இருக்கும் அறையை கேட்டு வர,சத்யா அப்போது தான் அறையை விட்டு வெளியில் வந்தான்.சத்யாவைக் கண்டவுடன் அவனின் அருகே வேகமாக ராஜேஷ் செல்ல அவனின் பின்னே பார்வதியும்,குருமூர்த்தியும் சென்றனர்.
“சார்….”என்று ராஜேஷ் அழைக்க,
“ஆங்….”என்ற சத்யாவின் பார்வையில் ராஜேஷின் பின்னால் பரிதவிப்புடன் நின்ற கயலின் பெற்றோர்கள் விழ,
“இந்த ரூம் தான் போய் பாருங்க….”என்று கூறினான்.பார்வதி சத்யா கை காட்டியவுடன் புயல் என உள்ளே நுழைந்துவிட்டார்.ஆனால் குருவால் முடியவில்லை வரும் வழியில் தானே ராஜேஷ் அனைத்தையும் கூறியிருக்க பெற்றவராக அவருக்கு மகளின் எதிர்காலத்தை எண்ணி அத்தனை பயம்.அவர் வெளியில் இருந்தே மகளை காண நினைக்க மகளின் கால்கள் மட்டுமே தெரிந்தது அதுவும் கட்டுடன் இருக்க,
“அய்யோ கயலம்மா…..”என்று அவர் உடைந்து அந்த கதவின் மேலேயே சாய சற்று என்று அவரை தாங்கி பிடித்த சத்யா,
“எப்படி தம்பி சொல்லுறீங்க….அவள பார்த்தீங்களா…கால் எல்லாம் கட்டு…அய்யோ….”என்று தன் தலையில் அடித்துக் கொண்டவர்,
“சின்ன காயம் வந்தாலே தாங்கமாட்டா….இப்ப….இப்ப…”என்று அவர் விம்ம பார்த்துக் கொண்டிருந்த இருவருக்குமே மனதிற்கு கஷ்டமாக இருந்தது.என்ன தான் மகள் வளர்ந்துவிட்டாளும் பெற்றவருக்கு அவள் எப்போதும் குழந்தை தான்.
“நீங்களே இப்படி உடைஞ்சு அழுதா….எப்படி சார்….அவங்களுக்கு ஒண்ணுமில்ல…நல்லா இருக்காங்க….”என்று சத்யா எவ்வளவு கூறியும் குருமூர்த்தியின் காதில் அது சென்றதாக தெரியவில்லை அவரின் பார்வை முழுவதும் மகள் இருந்த அறையை மட்டுமே வெறித்த வண்ணம் இருந்தன.
அப்போது அறையில் இருந்து வெளி வந்த பார்வதியை கண்டு வேகமாக எழுந்த குரு அவரின் அருகில் சென்று,
“பாரூ….எப்படி இருக்கா????பேசுனாளா….”என்று கேட்க,அவரோ தன் புடவை முந்தானையால் வாயை மூடிக் கொண்டு அழ,
“ஏய் எதுக்குடீ….இப்ப அழுது என் உயிரை எடுக்குற….சொல்லு…அவ…அவ…என் பொண்ணுக்கு ஒண்ணுமில்லல….சொல்லு…”என்று மனைவியின் தோள்களை உலுக்க,அவரோ மேலும் குலுங்கி அழுதாரே தவிர பதில் சொல்லவில்லை.
“ச்சை….யாரும் சொல்ல வேண்டாம் நான் போறேன்….நான் பேசுனா உடனே அவ முழிச்சுப்பா…..எனக்கு தெரியும் என் பொண்ணை….போங்க…”என்று கத்திவிட்டு மகளின் அறையின் உள்ளே நுழைந்தார்.
அறையின் உள்ளே வந்தவருக்கு கை,கால்கள் எல்லாம் பிண்ணிக் கொண்டது போல் ஒரு உணர்வு.மனது தாளம் தப்பி ஒலித்தது.
இன்னும் மகளின் முகத்தை பார்க்கவில்லை திரைச்சீலை மறைத்திருந்தது.மெல்ல நடந்து திரைசீலைக்கு மறுபக்கம் சென்றவர் மகள் இருந்த நிலைக் கண்டு அப்படியே மடங்கி அமர்ந்துவிட்டார்.தலையில் பெரிய கட்டு,இரு கன்னங்களும் கன்னிப்போய் இருந்தது.அதில் அடித்தற்கான தடம் இருக்க தாங்க முடியவில்லை பெற்றவரால்.
தனது வாய் பொத்திய படி கதறிவிட்டார் குருமூர்த்தி.தன்னை பட்டாம்பூச்சி போல் சுற்றி வந்த மகள் இன்று இருக்கும் நிலை கண்டு குருமூர்த்திக்கு நெஞ்சமெல்லாம் வலி எடுத்தது.மூச்சு விடமுடியாமல் அவர் தடுமாற அந்த நேரம் உள்ளே வந்த சத்யா அவரின் நிலைக் கண்டு வேகமாக வந்து அவரை எழுப்பி பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர வைத்தவன்,
“சார்….கொஞ்சம் மூச்சை இழுத்துவிடுங்க…..ராஜேஷ் கொஞ்சம் தண்ணி கொண்டு வாங்க….” என்று தன் பின்னே வந்த ராஜேஷிடம் கூற அவன் வேகமாக அவருக்கு தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க,சத்யா தான் அவருக்கு புகட்டினான்.அவருக்கு சில நிமிடங்கள் எடுத்தது நிதானத்திற்கு வர,அவர் நிதானத்திற்கு வந்தவுடன்,
“சார்…நீங்க இப்படி உடைஞ்சா எப்படி சார்….”என்றவன் பார்வை கயல்விழியை தீண்டி மீண்டது.
“இல்லப்பா….என் காலையே சுத்தி சுத்தி வருவா….எப்ப பார்த்தாலும் துருதுருனுதான் இருப்பா….இப்படி ஒரு இடத்தில அதுவும் படுக்கையில என்னால பார்க்க முடியலையே….நான் கோபபட்டு இருக்க கூடாது….அவளை இப்படி தனியா விட்டுருக்க கூடாது….எல்லாம் என் தப்பு தான்…..”என்று அவர் பாட்டிற்கு புலம்ப,கேட்டு கொண்டிருந்த சத்யாவிற்கு புரிந்தும் புரியாத நிலை.அப்போது கயலிடம் அசைவு தெரிய,
“கயல்…கயல்….”என்று தன்னை மீறி சத்யா அவளின் அருகே செல்ல நினைத்தவன் பின் நிதானித்து,
“சார்….கயல் கண்ணு முழிச்சிட்டா பாருங்க….”என்றுவிட்டு ராஜேஷை கூட்டிக் கொண்டு வெளியில் சென்றுவிட்டான்.
குருமூர்த்தி மகளின் அருகே செல்ல,கயல்விழிக்கு விழிப்பு வந்து கொண்டிருந்தது.மெல்ல கண்களை திறப்பதும் மூடுவதுமாக இருந்தாள்.தன் முன்னே யாரோ இருப்பது போல் மங்கலாக தெரிந்தது ஆனால் யார் என்று தெரியவில்லை.
குரு மகளின் அருகே வந்து அவளின் தலையில் கை வைக்க,கண்களை திறக்க முடியாமல் நன்கு திறந்து பார்க்க தன் தந்தையின் உருவம் தெளிவாக தெரிந்தது.
“ப்பா….ப்பா….”என்று அவள் கைகளை ஓங்கியவள் பின் வேகமாக தன் கையை இழுத்துக் கொண்டு,
“நான் தொட்டா நீ மறைஞ்சுடுவ….ப்பா….ஐ ம் சாரிப்பா….நான் தப்பு பண்ணிட்டேன் தான் அதுக்காக என்கிட்ட பேசமாட்டியா….நான் உன் கயல் இல்லையாப்பா….”என்று கயல் பாட்டிற்கு பேசிக் கொண்டிருக்க,
“கயலம்மா….இங்க பாருடா…ப்பா வந்துட்டேன் டா….என்னை பாரு….”என்று மகளின் கன்னம் தொட,அப்போது தான் காண்பது பொய்யல்ல,நிஜம் என்பது புரிய,
“ப்பா…..ப்பா….நீ நிஜமாப்பா….நீ வந்துட்டியா….”என்று கேட்டபடி அவள் எழுந்துவிட,
“கயல்…நான் தான்டா….அப்பா தான் பதட்டப்படாதடா….இப்ப உடம்புக்கு முடியலைல….கொஞ்சம் அமைதியா இருடா….”என்றவரின் குரல் வெளியில் இருப்பவர்களுக்கும் கேட்க,அனைவரும் உள்ளே வந்துவிட்டனர்.பார்வதி மகள் விழித்துவிட்டதைக் கண்டு அவளிடம் விரைய சத்யாவின் பார்வை முழுவதும் கயலிடம் தான்.அவள் நலமாக உள்ளால் என்பதே சத்யாவிற்கு அத்தனை நிம்மதியைக் கொடுத்தது.
“இங்க ஒருத்தன் இருக்கேன் பார்க்குறாளா பாரு….திமிரு பிடிச்சவ….இவளுக்கு நான் எப்போதும் இரண்டாம் பட்சம் தான் போல…..”என்று மனதில் சுணக்கம் பிறந்தது.தன் மனது இவளுக்காக துடிக்கிறதே ஏன் அவளுக்கு அது புரியவில்லை.ஆனால் கயலிற்கு அதெல்லாம் இல்லை அவளுக்கு தன் தாய்,தந்தை பக்கத்தில் உள்ளனர் அதுவே ஏதோ பெரிய சாதனை போல அவர்களை கட்டிக் கொண்டு சந்தோஷித்தாள்.
கயல்விழி விழித்துவிட்டாள் என்றவுடன் மருத்துவர் வந்து அவளை பரிசோதித்து இனி எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறிய பின்பு தான் குருவிற்கும்,பார்வதிக்கும் மனது சமன்பட்டது.ராஜேஷும்,சத்யாவும் சிறிது நேரம் இருந்து கயலை பார்த்து பேசிவிட்டு கிளம்பிவிட்டனர்.அனைவரும் இருந்ததால் சத்யாவிற்கு அவளிடம் பேசும் வாய்ப்பு அமையவில்லை.
கயல்விழி உடல்நலம் தேறி வந்தவுடன் குருமூர்த்தி வற்புற்த்தி அவளை கோவை அழைத்து சென்றுவிட்டார்.அவளுக்கும் தாய்,தந்தையுடன் இருக்க வேண்டும் என்று தோன்ற வீட்டில் இருந்து வேலை பார்க்க அனைத்தும் ஏற்பாடுகளும் செய்துவிட்டு சென்றுவிட்டாள்.இடையில் ஒருமுறை மட்டும் சத்யா அவளைக் பார்த்துவிட்டு போனான்.ஆனால் தனிப்பட்ட பேச்சுக்கள் என்று எதுவும் இல்லை.
இதோ இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன கயல்விழி கோவை வந்து.தாய்,தந்தையுடன் அரட்டை பிடித்த உணவு,நல்ல உறக்கம் என்று இப்போது பழைய கயலாக மாறியிருந்தாள்.பார்வதிக்கு மகளை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அவளுக்கு பார்த்து பார்த்து செய்வார்.கயல்விழி வீட்டிற்கு வந்துவிட்டாள் என்று வனிதாவின் வீட்டில் மீண்டும் பிரச்சனையை தொடங்க,
“என் பெண் என்கூட தான் இருப்பாள்….அவள் தப்பு செய்துவிட்டாள் தான் அதற்காக அவளை விடமுடியாது….”என்று குருமூர்த்தி கடுமையாக பேசிவிட வனிதாவின் மாமியாருக்கு அவமானமாக போனது.அதனால் அவர் வனியை வீட்டில் தொந்தரவு செய்ய,
“ம்மா….கயல் செஞ்ச தப்புக்கு வனி என்ன செய்வா….நீங்க பழசையே பேசிக்கிட்டு இருந்தீங்கனா…..நான் தனிகுடித்தனம் போயிடுவேன்….”என்று ராகவும் இந்த முறை கோபத்தில் பொங்கிவிட எங்கே மகன் தனியாக சென்றவிடுவானோ என்ற பயத்தில் அவர் அப்போதைக்கு அமைதியாகிவிட்டாலும் உள்ளுக்குள் அவருக்கு கோபம் கனன்று கொண்டு தான் இருந்தது.
சத்யா,கயலின் வாழ்வில் பெரிதாக எந்த மாறுதலும் இல்லை.சத்யாவிற்கு கயலின் மனதில் தான் இல்லை அதனால் தான் அவள் தன்னை பெரிதாக கருதவில்லை என்று அவளிடம் இருந்து ஒதுங்கிவிட நினைத்தான்.அவனால் நினைக்க மட்டுமே முடிந்தது அவனின் நினைவுகள் முழுவதும் கயல்விழி தான் ஆக்கரமித்துக் கொண்டிருந்தாள்.கயலும் சத்யா தனக்கு திருமணம் என்று கூறியது உண்மை என்று நம்பி அவனிடம் இருந்து தன்னை தூர நிறுத்திக் கொண்டாள்.ஆக இருவரும் தங்களுக்குள்ளே முடிவுகளை எடுத்துக் கொண்டு விலகி நிற்க.காலம் அவர்களை இணைக்க முடிவு செய்திருந்தது.குருமூர்த்தி கயலிற்கு திருமணம் செய்ய முடிவு செய்திருக்க.கயல்விழியினால் அதை ஏற்கவும் முடியவில்லை அதே சமயம் வேண்டாம் என்றும் மறுத்து கூற முடியாத நிலை.