Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 16

“இன்னும் என்னடா பண்ற ,  எப்போ எங்களை வெளில எடுக்குற வேலை பாக்க போற”.

“ஏன் ரெண்டு பெரும் வெளில வந்து என்ன பண்ண போறீங்க” என்ற மகனை ஆராய்ச்சியாக பார்த்தார் கிருஷ்ணன்.

“சொல்லுங்க என்ன பண்ண போறீங்க”.

“என்ன ராஜீவ் பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு” என்றவுடன் ஒரு நிமிடம் தலை கும்பிட்டு நின்றான்.



Advertisement

“தெரியல …. நீங்க சொன்னீங்கன்னு ஒரு நாள் ஒரு விஷயம் பண்ணேன், அந்த பாவம் இன்னைக்கு வரைக்கும் என்ன தொரத்துது , நீங்க பண்ண பாவம் எல்லாம் குடும்பத்தையே அழிச்சுடும் போல” என்க.

“என்னடா என்ன பிரச்னை வந்ததுல இருந்து எப்படியோ பேசுற” என்றார் கிருஷ்ணன்.

ஆழ மூச்செடுத்தவன் சித்தப்பாவை பார்த்து “ஊர்ல எல்லார்க்கும் போதை மருந்து நீங்க குடுத்தீங்க , எவனோ அத உங்க புள்ளைங்களுக்கே குடுத்துருக்கான் , ரெண்டு பெரும் நெறய ட்ரக்ஸ் எடுக்குறாங்க”.

Advertisement

“சித்தியும் அவங்கள வீட்லயே விட்டுட்டு வெளில பிரண்ட்ஸ் கூட போய்டுறாங்க , நீங்க பணம் சம்பாதிக்கிறீங்க அவங்க ரெண்டு பெரும் உருப்புடாம போறாங்க” என்றான் ஆற்றாமையாக.

Advertisement

“நீங்க எத ரகசியமா கடத்துனீங்களோ அத உங்க பசங்க ரகசியமா எடுத்துட்டு இருந்திருக்காங்க ரெண்டு வருஷமா , அம்முவை முடக்க நீங்க மருந்து குடுத்தீங்க உங்க பசங்க அவங்கள முடக்க அவங்களே எடுத்துக்கிட்டாங்க”.

“எனக்கு தெரியல இது  எல்லாத்தையும் எப்படி சரி செய்ய ,  நீங்க கொஞ்சம் நல்லவங்களா இருந்திருக்கலாம்” என்று கூறி திரும்பி நடந்தான்.

நேரே மருத்துவமனை சென்றுவிட்டான் லக்ஷ்மியம்மாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள் , முதுமையோடு அம்முவின் பிரிவும்  , பேரப்பிள்ளைகள் வாழ்வை பற்றிய பயம், மகன்கள் செய்து வாய்த்த காரியம் அனைத்தும் அந்த முதிய பெண்மணியை தளர்த்தி விட்டது.

Advertisement

காரிடோரில் இருந்த சேரில் ஸ்மிதாவுடன் ஷ்யாமா அமர்ந்திருந்தார், வந்தவன் அவர்களின் அருகில் இருந்த சேரில் அமர்ந்துவிட பக்கத்தில் நிழலாடியது.

நிமிர்ந்து பார்க்க ரெம்யா நின்றிருந்தாள் , அவளையே பார்த்தவனுக்கு இப்பொழுது யார் மீதும் கோபம் வரவில்லை மீண்டும் தலையை கைகளில் தாங்கி அமர்ந்துவிட .

“அம்மா” என்று ஷ்யாமாவின் அருகில் சென்றா ள் அவள் , அவரும் நிமிர்ந்து பார்த்துவிட்டு அமைதியாக அமர்ந்து கொண்டார், சித்தியின் கைபிடித்து அருகில் அமர்ந்தாள் .

“உனக்கு எப்படி தெரியும்” என்ற தமையனிடம்.

“வீட்டுக்கு போனேன் பக்கத்துல சொன்னாங்க” என்க மீண்டும் அமைதி.

லக்ஷ்மியம்மாவின் விழிகள் அறையின் வாயிலில் நிலைத்திருந்தது, அவர் யாரை தேடுகிறார் என்று அனைவரும் அறிவர் அவரின் அம்முவை, ஒருமுறை அவள் வந்து பார்த்துவிட்டால் அவர் உயிர் கூட பிரிந்துவிடும் என்று தோன்றியது ஷ்யாமாவிற்கு.

திருமணம் முடிந்து வந்த நாள் முதல் மாமியாராக அல்லாமல் ஒரு தாயாக தன்னை தாங்கியவர் , அம்மு ஜெகனுடன் போனபோதே மனதால் தளர்ந்துவிட்டார் ஷ்யாமா.

சொந்த மகள் ரெம்யா போனபோது கூட அவருக்கு இத்தனை வருத்தம் இல்லை, இப்பொழுது படுக்கையில் கிடக்கும் மாமியாரை பார்க்க பார்க்க மனதை பிசைந்தது.

“இனி தனக்கு யார் இருக்கிறார்கள்” என்று மாமியாரின் கையை பிடித்துக்கொண்டு அவரின் அருகிலேயே அமர்ந்துவிட்டார்.

“உள்ளே வந்த ரெம்யா அம்மா கொஞ்சம் பேசணும்” என்க அவர் ஒன்றும் கேட்கவில்லை அவளே “என் கூட வேலைப் பார்க்குறவரை   விரும்புறேன் அவங்க வீட்ல ஒகே சொல்லிட்டாங்க , அவங்க ஒண்ணுமே கேக்கல , ஒரே ஒரு கண்டிஷன் கல்யாணத்துக்கு நீங்க அப்பா அண்ணா இருக்கணும்” என்க.

“எத்தனை சுயநலம் , திருமணம் வேண்டாம் என்று ஓடிப்போனாள் இன்று அதே திருமணத்திற்கு தங்களை தேடி வந்திருக்கிறாள்”.

“உன் அப்பா ஜெயில்ல சுகவாசத்துக்கு போயிருக்காருன்னு சொன்னியா அவங்க கிட்ட” என்றான் ராஜீவ்.

அவள் “இல்லை” என்று தலை ஆட்ட.

“அப்புறம் என்ன தைரியத்துல  இங்க வந்த , உன் லைப் எப்படி வேணா வாழ்ந்துக்கோ ஆனா நாங்க வரது  நடக்காது , அதுக்கு வாய்ப்பில்லை” என்க.

“நாம கோர்ட்ல நிரூபிக்க முடியாதா”.

“ஆதாரம் எல்லாம் பக்காவா வெச்சுருக்கான் யாரையும் விட மாட்டான்”.

“அம்மு நினச்சா நடக்காதா , அவ சொன்ன கேக்க மாட்டானா” என்க.

“அவ எதுக்கு சொல்லணும் அதும் உனக்காக , சொல்லுவானு எப்படி எதிர் பார்க்குற”.

“அண்ணா நான் பண்ணினது தப்பு தான் எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுனா , என் கல்யாணம் உன் கைல தான் பிலீஸ்ன்னா” என்று அவன் காலில் விழ வந்தவளை தடுத்தவன் ஒன்றும் சொல்லாமல் வெளியேறினான்.

 

அலைபேசி அழைப்பை ஏற்ற ரூபா “மாமா எப்படி இருக்கீங்க” என்க சிரித்தவன் “நேத்து தான் வந்தேன் எப்படி இருக்கீங்களா , அது சரி நல்லா இருக்கேன் , அங்க எல்லாரும்….”

“உங்களுக்கு யாரை பத்தி தெரியணும்” என்றாள் நமட்டு சிரிப்புடன்

“நீங்க வீடியோ கால் வாங்க நான் அக்காகிட்ட கொடுக்குறேன்” என்றவள் அவர்களின் அறைக்குள் நுழைந்து “அம்முக்கா” என்க.

அவன் அறையின் பின்பக்கம் இருக்கும் சிறு மாடியில் செடிகளுக்கு இடையில் இருக்கும் ஊஞ்சலில் அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்  ரூபாவை.

“உங்களுக்கு தான் போன் பேசுங்க” என்றவள் வெளியேற , முகத்தின் நேரே கொண்டுவர திரையில் முழுதாக நிறைந்து நின்றான் அவன்.

பார்த்தவுடனே விழிகள் மீண்டும் நிறைந்துவிட கை கொண்டு அவனை வருட முயன்றாள் அம்மு , அவனுக்கு அப்படியே உயிர் வரை உருகி விட்டது.

“அம்மு” என்றவனுக்கு அதற்குமேல் வார்த்தை வரவில்லை அவள் விழிகள் நிலம் நோக்கி இருக்க கண்ணீர் கோடுகள் இறங்கிக் கொண்டிருந்தது.

“அம்முடா என்ன பாரு” என்க.

“மாட்டேன்” என்று தலை ஆட்டினாள்.

“என் அம்முக்கு பிடிவாதம் பிடிக்க தெரியுமா” என்றவன் குரலில் மீண்டும் அழுகை , முகம் எல்லாம் சிவந்து விட்டது .

“அம்மு ப்ளீஸ் அழாதடி , ஒரு முத்தம் கொடுக்கவா” என்க விழியை நிமிர்த்தாமல் கன்னத்தை மட்டும் காட்டியவளை பார்த்தவன் இதயம் இந்த நொடி அவள் அருகில் சென்று அள்ளிக்கொள்ள தவித்தது.

அப்படியே இதழ்களை திரையில் பதித்தவன் அவளையே பார்த்திருக்க திரை இயக்கத்தை நிறுத்திக்கொண்டது.

எங்கும் இருள் கடல் ஆர்ப்பரிக்கும் சத்தம் தவிர எதுவும் இல்லை, குளிர்காற்று மேனியை தழுவ அவளின் அருகாமைக்கு உடலும் உள்ளமும் ஏங்கியது.

கப்பலின் மேல் தளத்தின் பிடியில்  விழிமூடி சாய்ந்து நின்றவன் தலையை பின்னால் சாய்த்து “அம்மு” என்றான் உணர்ச்சிக்குவியலாக.

விறு விறு என்று கீழிறங்கினான் , அவனின் போன் சமர்ப்பிக்கப்பட்டது.

கப்பலில் எறியபின் அங்கிருக்கும் லேண்ட் லைன் மற்றும் மெயில் சேவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் , ராணுவ ரகசியங்கள் இன்றைய ஸ்மார்ட்போன் வழி கடத்தப்படுவதால் அதை உபயோகிக்க தடை உண்டு இந்தியன் நேவியில்.

கடலின் உள்ளே பல இடங்களில்  நெட்ஒர்க் பிரச்சனைகள் நிறைய இருக்கும் , ராணுவ தலைமையோடு தகவல் பரிமாற சில வழிகள் பயன்படுத்துவார்கள் ஆனால் குடும்பத்தை பல சமயங்களில் மாதக் கணக்கில் கூட தொடர்பு கொள்ள முடியாது.

அப்படியே என்றாலும் லேண்ட் லைன் மட்டுமே , “நம்பி வந்தவளை என்ன தைரியத்தில் இப்படி தனியாக விட்டு வந்தேன்” என்று நூறாவது முறையாக தன்னையே சபித்துக் கொண்டான்.

இன்று பாதி இரவுக்கு மேல் தான் அவர்கள் பயணம் தொடங்கும், அறைக்கு சென்றவன் ஷவரின் அடியில் நின்றுவிட்டான் விழிகள் மூடி.

 

இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
சிறகு நீட்டுக்கின்ற நேரம் பார்த்து
வான் எல்லாம் மழை
வரைந்து காட்டுகின்ற வண்ணம் என்ன
செய்ததோ பிழை

அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!