Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஆனந்தபைரவி

ஆனந்தபைரவி – Teaser

முதல் தளத்தை தாண்டி இரண்டாவது தளத்திற்கு செல்ல எத்தனித்த பொழுது எதிர் பாரா விதமாக பைரவி கீழே இறங்கி வர யூ டர்ன் எடுத்த பொழுது அவள் மேல் தேவா மோதிவிட, அவள் கால்கள் தடுமாறி கீழே விழ இருந்த சமயம் உடனே சுதாரித்த தேவாவின் கைகள் அவள் இடையோடு அழுத்தமாய் பிடித்து நிறுத்தியது.

இரண்டு நொடிகளே இருக்கும், தன்னுடைய பிடியை தளர்த்தி, “ஹே பாத்து…” அவன் பேசி முடிக்கும் முன்பே தன்னை பற்றியிருந்த அவன் கையை உதறி தேவாவின் நெஞ்சில் கை வைத்து தள்ளிய பைரவி அடுத்த நொடி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள்.

“ச்சீ பொறுக்கி” உடல் கூசியது போல் முகத்தை ரௌத்திரமாக வைத்து அருவருப்புடன் அவன் முகம் பார்த்து அவள் பேசியதை பார்த்த தேவாவின் ஆத்திரமும் இமாலயத்தின் உச்சியை அடைந்தது.

எந்த தொடுகையை அவள் வெறுத்தலோ அதே கை கொண்டு அவள் கழுத்தை சுவற்றோடு இறுக்கி பிடிக்க அவள் மற்றொரு கையை முதுகிற்கு பின்னால் கொண்டு வந்து நிறுத்தி அவள் கண்கள் பார்த்து தீயாய் முறைத்தான்.



Advertisement

“என்னடி ஓவரா துள்ளுற?”

“பொம்பள புள்ள மேல கை வக்கிர அளவு வக்கிர புத்தி எனக்கில்லை, என்ன பேச்சுடி பேசுற நீ? பொறுக்கியாக்கோம்? ஆஹ்? இன்னொரு தடவ என்கிட்ட இந்த மாதிரி பேசுறதோ, கை ஓங்குற வேலையோ வச்சிக்கிட்ட…”

முதுகிற்கு பின்னால் கட்டியிருந்த அவள் கைகளை இன்னும் முறுக்க, ஒரு விசும்பல் அவள் இதழிலிருந்து வெளிப்பட்டு அவள் உடலை சற்று உலுக்கியது. பெண்ணின் வேதனையை உணர்ந்தவன் உடனே அவள் கைகளுக்கு விடுதலை கொடுத்து விலகி நின்று,

Advertisement

“கைய ஒடச்சிடுவேன் ஜாக்கிரதை” அடங்காத சினத்தோடு அவன் படியை ஏறி வேகமாக சென்றுவிட்டான்.

Advertisement

********************************************

பைரவி அழுவதிலே குறியாய் இருக்க அவளோடு நெருங்கி அமர்ந்து அவள் முகத்தை பற்றி தன்னை பார்க்க வைத்தான். கண்கள் சிவப்பேறி குளம்கட்டி நின்றது விழிகள்.

“நான் ஒன்னு கேப்பேன் நேர்மையா பதில் சொல்லுவியா?” சுவரோடு ஒட்டி சாய்ந்த பைரவி மௌனமாய் விழிகளை தாழ்த்த அவள் முகத்தை மேலும் தூக்கி, “சொல்லுடி உண்மைய சொல்லுவியா?” தழைந்து வந்த அவன் குரலுக்கு ஆம் என தலையை ஆட்டினாள்.

Advertisement

“யாரையாவது லவ் பண்றியா?”

அவன் கேள்வியில் விழுக்கென ஒரு சொட்டு கண்ணீர் பைரவியின் கன்னத்தை நனைக்க, “அழுதாக பைரவி” கெஞ்சலாய் அவன் குரல் பெண்ணின் இதயத்தை பெரிதும் ஆட்டியது.

இளகிய குரலில் பேச வந்த அவன் கையை இரு கைகள் கொண்டு இறுக்கமாக பற்றி தேவாவின் கைகளினுள்ளே முகம் புதைத்து நிமிடங்கள் பல அழுக, அவள் மனதின் பாரம் குறையும் வரை அழுக விட்டான்.

ஆறுதல் கூற கூட அவனிடம் வார்த்தைகள் இல்லை, என்ன கூறி சமாதானம் செய்வான் காரணம் தெரியாமல்.

அவள் அழுகை நிற்கப்போவதில்லை என தெரிந்த பின்னர், “கேட்டதுக்கு பதில் சொல்லு. இதுக்கு முன்னாடி யாரை வேணாலும் லவ் பண்ணிருந்தாலும் சரி பண்ணலானாலும் சரி, அத பத்தி எனக்கு கவலை இல்லை. இப்ப, இந்த நிமிஷம் உன் மனசுல யாராவது இருக்காங்களா?”

விழிகளை அவள் கண்களோடு நேர்கோட்டில் நிற்க வைத்து அவன் கேட்டதும் ஸ்திரமாய், “இல்ல” என்ற பதில் வந்தது பெண்ணிடமிருந்து.

தளர்ந்த அவள் கைகளை பார்வையிட்டு முகத்தை பார்த்த தேவா, “நான் சொல்றத தெளிவா கேட்டுக்கோ, பல்லு போனவன் பேச்சையும், நாக்குல வேஷத்தை தடவிட்டு பேசுறவன் பேச்சையும் கேக்குறவன் நான் இல்ல” அவள் கைகளை பிடித்து மோதிரத்தை காட்டி,

“இது தாலிக்கு சமம், பாதி கல்யாணம் முடிஞ்சிடுச்சு நமக்குள்ள. என் பொண்டாட்டிய இனி எவனுக்கும் விட்டு குடுக்க மாட்டேன்”

அவளை விட்டு எழுந்தவன் வேஷ்டியை கட்டி, “கண்ண துடைச்சு நிம்மதியா தூங்கு, நாளைக்கு காலைல மச்சான் கண்ணனுக்கு ஜம்முன்னு மின்னணும் நீ”

ரகசிய புன்னகையோடு படி இறங்க, “நிவேதாக்கு நான் துரோகம் பன்றேனா?” தவிப்போடு அவனை பார்க்க, சிரித்தான் தேவா.

“சக்கரடி நீ” சிரிப்போடு அவளை கொஞ்சியவன் அதே வற்றாத சிரிப்போடு கீழே இறங்கி சென்றிட தவித்து போனது பைரவியின் முறையாயிற்று.

*****************************************************

“உனக்கு நீ பண்ணது தப்புன்னே தெரியலையா பைரவி?” கோவமாக அவள் முகம் பார்த்து கேட்டான்.

சிவந்த அவன் விழிகள் பயம் தந்தாலும் எதிர்த்து நிற்க வேண்டிய சூழல் பெண்ணுக்கு, “தெரியலைங்க. எத்தனை தடவை, எந்த விதத்துல நீங்க கேட்டாலும் நான் பண்ணது தப்புனு நான் சொல்லவே மாட்டேன். உங்க தங்கச்சிக்கு எது நல்லதோ அத மட்டும் தான் நான் செஞ்சேன்” என்றாள் நிமிர்வாக.

“எப்பா, என்ன பெரிய மனசு. உன் அண்ணனுக்காக செஞ்சேன்னு சொல்லுடி. என்ன மயக்க என் தங்கச்சி பேர சொல்லாத” அவள் பேசுவது அவனை மேலும் வெறியேற்றியது.

“என்னது உங்கள மயக்கவா?” புருவங்கள் சுருக்கி அவனை கேள்வியாய் பார்த்தாள்.

“இல்லையா பின்ன? உன் வியாகாணமான பேச்சுல நீ சொல்றதெல்லாம் நம்பி இருந்தவன செருப்புல அடிச்ச மாதிரில புரியவச்சிட” – தேவா

கண்கள் கலங்கி நின்றாள் பைரவி, “பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுறீங்க ஆனந்த். இந்த பிரச்சனை பெருசா மாற வேணாம்னு தான் பேச்சு வந்தப்பயே முடிச்சு வச்சேன். ரெண்டு நாள் இஷா அழுவா, அதுக்கு அப்றம் மறந்துடுவா”

“ஏது உன் அண்ணன் சந்தோசமா இருப்பான், என் தங்கச்சி அழுகணுமா? இல்ல தெரியாம தான் கேக்குறேன் இந்த விசியம் எல்லாம் நம்ம கல்யாணம் முன்னாடியே உனக்கு தெரியும் தானே? அப்போ தடுத்திருக்கலாமே” – தேவா

“இல்லங்க எனக்கு…” – பைரவி

அவளை பேசிவிடவில்லை அவன் வார்த்தைகளை அள்ளி கொட்டினான், “நீ நல்லவளா இருந்தா கண்டிப்பா அப்ப தான்டி தடுத்திருக்கனும். அப்போ தடுத்திருந்தா இந்த இளிச்சவாயன் உனக்கு சிக்கிருக்க மாட்டானே. நல்லா பிளான் போட்டு வளைச்சிட்டீங்க அண்ணனும் தங்கச்சியும்”

“இதுக்கு மேல பேசாதீங்க அப்றம்…” அவன் பேசிய வார்த்தைகள் மனதை சுட்டு கொல்ல மனம் பொறுக்காமல் கோவத்தை காட்டியவள் மீதே மீண்டும் திருப்பினான்,

“மிரட்டு மிரட்டு. உன் இஷ்டத்துக்கெல்லாம் மிரட்டு. உன்னோட பொய்யான கண்ணீரை பாத்தும் என் குற்ற உணர்ச்சிக்காகவும் உன்ன கல்யாணம் பண்ணது எவ்ளோ பெரிய கிறுக்குத்தனம்னு இப்ப தோணுதுடி”

தலையில் அடித்து அவளுக்கு முதுகு காட்டி நின்ற அந்த தேவா அந்நியமாய் போனான். இத்தனை நாள் திகட்ட திகட்ட அன்பை மட்டுமே கொட்டியவன் இன்று விஷத்தை கொட்டுகிறான். மனம் நெருப்பில் சுட்டது போல் வலித்தது பைரவிக்கு.

“குற்ற உணர்ச்சியா ஆனந்த்?” தடுமாறி உடைந்து வந்த அவள் குரலில் இறுக்கமாக கண்களை மூடினான்,

“குற்ற உணர்ச்சில தான் என்ன கல்யாணம் பண்ணிங்களா ஆனந்த்?” கை வரை மடித்துவிட்டிருந்த அவன் சட்டையை பிடித்து தன்னை நோக்கி திரும்பியவள் முயற்சியை தடுக்கும் விதமாக கையை தட்டிவிட்டான் ஆனந்த்.

கண்ணீர் பெருகி வர முகம் காட்டாமல் திரும்பி நிற்பவனை பார்த்து இன்னும் வேதனை அடைந்தது மனம். அவன் அறையை விட்டு வெளியேற சென்ற கால்கள் திரும்பி அவன் முகம் பார்த்தாள் விசும்பலை கட்டுப்படுத்தி.

“நீங்களும் எல்லாரையும் போல பாவப்பட்டு தான் என் கூட இருக்கீங்களா?”

பேச்சில் இறுதியில் வாயை பொத்தி அழுதவள் மெல்லிய அழுகை அவன் காதை அடைய தலையை மட்டும் திரும்பி பார்த்தான். நிற்கவே தெம்பில்லை அந்த மெல்லிய உடலில், கண்ணீரை துடைத்து அவனை ஏறிட்டு,

“ரொம்ப கஷ்டமா இருக்குங்க. ரொம்ப…” என்றவள் மேலும்,

“இப்டி எல்லார் கண்ணுளையும் பரிதாபத்தை பாக்குறதுக்கு அன்னைக்கே நான் செத்துருக்கணும்” முள்ளாய் குத்திய அவள் வார்த்தைகள் அவனை சென்று சேரும் முன்பு அவன் மனைவி அவ்வறையை விட்டு வெளியேறியிருந்தாள்.

“ஹே சக்கரை” அவன் அழைப்பு காற்றோடு காற்றானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!