Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 17

“கொஞ்சமா சாப்பிடு டா” என்று அம்முவை கெஞ்சிக் கொண்டிருந்தார் மாதவி .

“ஹ்ம்ம்” என்றவள் மூளை முழுதும் ஏதோ சிந்தனை.

“மாதவி.. மாதவி…” என்று அரக்க பரக்க வந்து சேர்ந்தார் துரை செல்வம், “என்னங்க என்ன ஆச்சு”.

“நம்ம வேலு அண்ணாச்சி பையன் ஜீவா செத்து போய்ட்டானாம்”.



Advertisement

“என்னங்க சொல்றீங்க !! ரொம்ப சின்ன வயசுல” என்றார் மாதவி.

“ஆமாமா முப்பத்தியெட்டு வயசு தான் , என்ன சொல்ல சரி வா நாம போகணும்ல” என்க.

“பூரணி நாங்க போயிட்டு வந்துடறோம் கொஞ்சம் பார்த்துக்கோமா” என்றார் அம்முவை காண்பித்து.

Advertisement

“நீங்க போங்க அண்ணி நான் பாத்துக்குறேன்”.

Advertisement

“ரூபா வா சீக்கிரம்” என்ற மாதவி  “அம்மு கொஞ்ச நேரத்துல வந்துடுறோம் பத்திரமா இறுமா” என்க.

“நாங்க என்ன புலியா சிங்கமா புடிச்சு கடிச்சு தின்னப் போறோமா” என்ற நீலவேணியை பார்த்த மாதவி ஒன்றும் பேசாமல் , சமையல் அம்மாவிடம் கண் காண்பித்து பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு சென்றார்.

தோசையோடு கொடுக்கப்பட்ட சாம்பாரில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த அம்முவின் அருகில் வந்து அமர்ந்த நீலவேணி “ஆமா உன் புருஷன் எங்க” என்க.

Advertisement

அவள் விழிக்க தொடங்கினாள் “சரியாய் போச்சு போ , புருஷன் எங்க போயிருக்கான் கூட தெரியாதா”  என்க.

“வெளில” என்றால் அம்மு.

“வெளில எதுக்கு” என்க சிறிது நேரம் அவரை பார்த்தவள் “வேலைக்கு” என்க.

“அப்படின்னு உன்கிட்ட சொல்லிட்டு போனானா ,  வேலைக்கு போற ஆம்பளைங்க பொழுது சாய வீட்டுக்கு வந்துடுவாங்க , இவன் போய் மூணு நாள் ஆகுது , ஏன் இன்னும்  வரல” என்றவர்.

அவள் அருகில் நெருங்கி  “அவனுக்குனு வேற பொண்ணு , குடும்பம் இருக்கு உன்னையவே தாங்கிட்டு இருக்க முடியுமா , நீ எத கேட்டாலும் ஞாபகம் இல்லனு சொல்ற குடும்பம் நடத்த  கூட உனக்கு சொல்லித்தான் தரணும் போல , அவனுக்கு எப்படி உன்மேல நாட்டம் இருக்கும்” என்க.

அவளுக்கு அதில் பாதி புரியவில்லை அனால் , அவனுக்கு வேறு பெண் அவளை பார்க்க போய் இருக்கிறான் என்று புரிந்தது.

நெஞ்சை அடைத்துக்கொண்டு வந்தது “அத்த என்ன பண்றீங்க நீங்க” என்ற பூரணி  “அம்மு இங்க பாரு ஒன்னும் இல்ல , ஜெகன் வேலைக்கு போயிருக்கான் அவன் வேலை அப்படி கொஞ்ச நாள் கழிச்சுத்தான் விடுவாங்க சரியா , இங்க பாரு”  என்றவர்.

 “இந்த தண்ணி குடி” என்று அவளை ஆசுவாசப்படுத்தினார்.

அம்முவிற்கு இங்கு இருக்கவே பிடிக்கவில்லை , இங்கிருந்து போய் விட வேண்டும்  , அவன் தன்னை எங்கோ கொண்டு வந்து விட்டுவிட்டான் இனி வரப்போவதில்லை , என்று தோன்ற தொடங்கி விட்டது.

பூரணியின் ஆறுதலில் மனது சிறிது சமன் பட்டது , இன்னும் உணவு உண்ணவில்லை , இது காஞ்சு போச்சு நான் வேற எடுத்துட்டு வரேன் என்று பூரணி உள்ளே சென்றார்.

நீலவேணியின் அருகில் அமரவே அவளுக்கு ஏதோ போல இருந்தது,  அவள் இருமியதும் “இந்தா” என்று தண்ணீர் எடுத்து அவர் தர , அவரை பார்த்துக்கொண்டே அதை வாங்கியவள் ஒரே மூச்சில் குடித்தாள்.

மொத்தமாக அனைத்தும் எரிவதை  போல , அவளுக்கு புரை ஏறி முகம் எல்லாம் சிவந்து , குடல் வெளியில் வந்துவிடும் அளவு இருமினாள்.

சத்தம் கேட்டு வெளியில் வந்த பூரணி “என்ன ஆச்சு அம்மு , என்னமா” என்று அருகில் வர , நீலவேணிக்கு பதட்டம் வந்தது ஏதோ ஒரு கோபத்தில் செய்துவிட்டார் , இப்பொழுது அவளை பார்க்க அவருக்கே பயம் வந்தது.

“என்ன பண்ணீங்க” என்ற பூரணியின் அதட்டலில்  “நான் ஒன்னும் பண்ணல தண்ணி தான் குடுத்தேன்” என்று உளறினார்.

“என்ன கலந்தீங்க தண்ணீல” என்று டம்பளரை பார்க்க அடியில் கொஞ்சமாக கிடந்தது பெப்பர் பொடி , எப்பொழுதும் டேபிளில் இருக்கும் அந்த பாட்டிலை பார்க்க அது காலியாக இருந்தது மொத்தமாக கொட்டி இருக்கிறார்.

“என்ன பொம்பள நீங்க சீ”  என்றவர் .

“கொஞ்சம் சக்கரை எடுத்துட்டு வாங்க” என்ற பூரணியின் குரலில் சமையல் செய்பவர் ஓடிப் போய் எடுத்து வர அவளுக்கு கொடுத்தார்.

ஆனால் அவள் வாயை திறக்க வில்லை பயம்.. பயம்…  அனைவரையும் பார்த்து பயந்து அழுதாள் , அவளை அப்படி பார்க்கவே முடியவில்லை பூரணியால் , ஜெகன் இருந்திருந்தால் அவரால் யோசிக்கவே முடியவில்லை.

“என்ன நடக்குது இந்த வீட்ல” என்ற சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்க்க பெண் ஒருவள் நின்றிருந்தாள்  “அம்மு என்னாச்சு உனக்கு” என்றவள் அருகில் வர.

அனைவரையும் பார்த்து பதறியவள் பக்கத்தில் இருந்த பிரகாஷின் அறைக்குள் நுழைந்துவிட்டாள் , சமயல் அம்மாவும் பூரணியும் பதறி அடித்து உள்ளே நுழைய கீழே மயங்கி கிடந்தாள் அம்மு .

அனைவரும் பிடித்து அவளை வேறு அறைக்கு மாற்ற டாக்டரை அழைத்தார் பூரணி  “நீ யாருமா” என்று வந்தவளிடம் கேட்க.

“நான் ரெம்யா , அம்முவோட அக்கா இங்க என்ன நடக்குது”.

“நல்லா பாத்துப்பேன்னு சொல்லி கூட்டிட்டு வந்தவன் எங்க” என்று அவர்களிடம் கோவப்பட்டவள் , யாருக்கோ அழைக்க அடுத்த பத்து நிமிடத்தில் வாசலில் நின்றது ஒரு வண்டி.

ஒரே போல இருந்த இரு ஆன் பிள்ளைகள் வந்து அம்முவை தூக்க “ஏய் யார் நீங்க என்ன பண்றீங்க” என்று பதறினார் பூரணி.

“அவங்க எங்க தம்பிங்க , எங்க சித்தப்பா பசங்க நீங்க பாத்துக்கறத விட நாங்க நல்லா பாத்துப்போம் , அவளை முதல்ல ஹாஸ்பிடல் கொண்டு போகணும் நகருங்க” என்றவர்கள் அவளை தூக்கி கொண்டு வண்டிக்கு செல்ல.

“அப்படிலாம் கொண்டு போக முடியாது அவ ஜெகனோட பொண்டாட்டி, அவன் கேட்டா என்ன பதில் சொல்றது , உங்க கூட அனுப்ப முடியாது”  என்றார் பூரணி.

ரெம்யா ஆளே மாறி போய்விட்டாள் வெளிநாட்டு வாழ்வு அவளில் பல புதிய மாற்றங்களை வருத்தியிருந்தது .

அதோடு சங்கரனின் இரட்டைகள் நன்றாக வளர்ந்திருக்க ஒரு முறை மட்டுமே பார்த்திருந்த அவர்களை அடையாளம் தெரியவில்லை பூரணிக்கும் நீலவேணிக்கும்.

“இங்க நடந்தது என்கிட்டே விடியோவா இருக்கு , நீங்க இவளை என்ன பண்றீங்கன்னு நான் எல்லார்க்கும் போட்டு காமிப்பேன் , அவ புருஷன்  வந்து கூட்டிட்டு போகட்டும் உடம்பு சரி இல்லாத பொண்ண உங்கள நம்பி விட முடியாது “.

“எங்க அம்மாதான இவ்ளோ வர்ஷம் அவளை பாத்துக்கிட்டாங்க இனிமேலும் பாத்துப்பாங்க , எதா இருந்தாலும் ஜெகன் வரட்டும் “.

“அதோடா ஜெகன் அப்பா உயிரோட இருக்கிறத ஏன் யார்கிட்டயும் சொல்லல எங்க அம்மாவுக்கும் பாட்டிக்கும் கூட சொல்லல , அப்போ அவனும் தப்பானவன் தான் எல்லாரும் சேர்ந்து அவ சொத்துக்கு தான கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கீங்க” என்று கண்டபடி கத்தினாள்.

நிச்சயமாக பிரகாஷை இப்படி எதிர் பார்க்க வில்லை , அவர் இறந்து விட்டதாக தான் நம்பினார்கள் அனைவரும்.

அவர் உயிரோடிருப்பதை எதற்காக மற்றவர்களுக்கு சொல்லவேண்டும், முக்கியமாக அம்முவின் குடும்பத்திற்கு?? ஏதோ ஜெகன் தவறு செய்த போல பதட்டத்தில் இருந்தவர்களை பேசி குழப்பி , அவர்கள் கலங்கி நின்ற நேரம் அம்முவை கொண்டு சென்றுவிட்டாள்.

ஐயோ யாருக்கு அழைக்க , என்ன சொல்ல ஒன்றும் புரியவில்லை அவர்களுக்கு ,  உடனே துறை செல்வதை அழைத்தார் பூரணி “அண்ணே” என்று ஒரு வழியாக அனைத்தையும் சொல்லி முடித்துவிட்டார்.

சாவு வீட்டிற்கு சென்றவர்கள் பதறி அடித்து இங்கு ஓடி வர வீடே கலவரமாக இருந்தது.

“நான் என்ன பண்ணுவேன் என்ன பதில் சொல்லுவேன் , புள்ள எப்படி இருக்கோ தெரியலையே” என்று மாதவி ஒரு பக்கம் அழுது தீர்க்க.

ரூபாவுக்கு கை காலெல்லாம் வெடவெட என்று நடுங்கியது அவளால் நிற்கவே முடியவில்லை , அக்கா இங்கு இல்லை மாமாவிடம் என்ன சொல்ல , ஐயோ நம்மை என்ன நினைப்பார்.

நம்பி விட்டு சென்றாரே , வேறு ஆள் வைக்கிறேன் என்று சொன்னாரே நாம் தானே வேண்டாம் என்றோம் , அக்கா என்ன பண்றாங்களோ தெரியலையே அவங்கள ஏண்டா இப்படி கொடுமை பண்றீங்க, என்று பெரிதாக அழ தொடங்கினாள் .

சில நொடிகள் ஒரு யோசனையும் தோன்றாமல் நின்ற துறை செல்வம், சட்டென்று ஜெகனின் வக்கீல் கிஷோருக்கு அழைத்தார் விவரங்களை சொல்லி “எல்லா இடமும் தேட சொல்லுங்க முக்கியமா அவங்க வீட்ல, சொந்தக்காரங்க வீட்ல எல்லா இடத்துலயும்” என்றவர் அடுத்ததாக ராஜீவை அழைத்தார்.

“அம்மு எங்க” என்ற அவரின் கேள்வியில் ஒரு நிமிடம் குழப்பம் அடைந்தவன்  “என்ன விளையாடுறீங்களா கூட்டிட்டு போனது நீங்க, என்ன பண்ணீங்க அவளை” என்க.

“அத நான் கேக்கணும் , உன் தங்கச்சியும் தம்பிகளும் வந்து அம்முவை இங்க இருந்து கடத்திட்டு போயிருக்காங்க , எங்க பொண்ணுக்கு ஏதும் ஆச்சு மொத்தமா உன் குடும்பத்தை அழிச்சுடுவோம்” என்றவர்  “எங்க இருக்காங்கன்னு கேட்டு சொல்லு” என்று வைத்துவிட்டார்.

ராஜீவுக்கு ஒன்றுமே புரியவில்லை எப்படி அங்கு சென்றார்கள், எதற்க்காக அவளை கடத்தினார்கள் , ஏன் இப்படி தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள் என்று ஆத்திரம் கொண்டவன் உடனே ரெம்யாவிற்கு அழைத்தான்.

அழைப்பை ஏற்கவே இல்லை அவள் மீண்டும் மீண்டும் அடிக்க ஒரு கட்டத்தில் எடுத்தாள் “எங்க இருக்கீங்க”  என்ற அவனின் சீற்றமான குரல் ஒரு நொடி அவளை தடுமாற வைத்தது.

“மூணார்” என்க  “எங்கவேனா போய் தொலைங்க , ஆனா அவளுக்கு  ஏதாவது ஆச்சு , அவன் கையாள சாக நிக்காம நீங்களே செத்து போய்டுங்க” என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!