Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் சுவாசம் என் மூச்சில்

உன் சுவாசம் என் மூச்சில் …..11

உன் சுவாசம் என் மூச்சில் …..11

 

       வீட்டிற்கு சென்ற கதிரவனையும் எழில்விழியையும் கண்ட ஸ்வாமிநாதன்,

“ வா கதிரு, வாத்தா. விருந்து எல்லாம் நல்லபடியா முடிஞ்சுச்சா ” என கேட்க கதிரவன் தலையை அசைத்து பையுடன் தனது அறைக்கு செல்ல எழிலோ,



Advertisement

“ ஹ்ம்ம் முடிஞ்சுச்சசு மாமா ” என கூற

“ வாணியும் ஜெயாவும் நேத்துதான் அவுங்க குடும்பத்தோட கிளம்புனாங்க. நேரம் கிடைக்குறப்போ  வரேன்னு சொன்னாங்க ”

“ ஹ்ம்ம் நேத்து எங்களுக்கும் போன்ல சொன்னாங்க மாமா ”

Advertisement

“ சரித்தா  போய் ஓய்வெடுங்க ” என கூறி நகர சாரதாவோ தெய்வானையிடம்,

Advertisement

“ பார்த்தீங்களா அத்தை. உங்க நடு மகன்  ஒரு நாளாவது உங்களுக்கு பையை தூக்கிருப்பாரா. பொண்டாட்டி பை தூக்க கூடாதுன்னு எவ்வளவு கரிசனமா தூக்குறாரு” என கிசுகிசுக்க,

   தெய்வானையும் அதில் எழில்விழியை  கண்டு முகத்தை திருப்ப சாரதாவின் வார்த்தைகள் எழலின் காதுகளிலும் விழுந்துருக்க,

‘ அட யாரும்மா நீ??…. நானே புருஷன்ட எதுக்கு  திட்டுவாங்குறேன்னு தெரியாமா சுத்திகிட்டு இருக்கேன். இதுல நீ வேற மாமியாரை ஏத்திவிடுற என்னமோ அவரு உதவுனதை பக்கத்துல இருந்து பார்த்தமாதிரி ’  என மனதில் சாரதாவை திட்டிக்கொண்டு தெய்வானையின் அருகில் சென்று,

Advertisement

“ அத்தை ” என மெதுவாக எழில்விழி அழைக்க

“ என்ன அத்தை???…. அத்தைக்கு என்ன வச்சுருக்க???” என சாரதா பதில் கூற

‘ அட இது ஒரு கிறுக்கு ஊட ஊட பேசிகிட்டு ’ என எண்ணி மீண்டும் தெய்வானையிடம்,

“ அத்தை நான் எதுவும் செய்யணுமா??… ” என கேட்க இப்பொழுது தெய்வானை

“ போ போய் உடுப்பை  மாத்திட்டு வந்து எல்லாருக்கும் டீ போடு ”  என கூறிவிட்டு நகர்ந்துவிட எழிலும் அனைவருக்கும் டீ போட்டு குடுத்துவிட்டு அவளுக்கும் எடுத்துக்கொண்டு அவளின் அறைக்கு சென்றாள்.

    அங்கு கட்டிலில் அமர்ந்து டீ குடிக்க கதிரவன் மறுநாள் வேலைக்கு கிளம்ப தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டிருந்தான். எழிலும் வேகமா டீ யை குடித்துவிட்டு,

“ என்னங்க நான் எதுவும் எடுத்து வைக்கவா??” என கேட்க

“ அது எல்லாம் வேணாம் நான் எடுத்து  வச்சுட்டேன் ” என கூறிக்கொண்டே

“ விழி ” என திடீரென  அழைக்க

“ என்னங்க ”

“ இல்ல உன்கிட்ட போன் இல்லைல. எதாவது முக்கியமா பேசணும்ன்னா அப்பா போன்ல இருந்து பேசு. நானும் அவரு போனுக்கு பேசுறேன் சரியா ”

“ ஹ்ம்ம் சரிங்க ”

“ உங்க வீட்க்கு பேசணும்ன்னாலும் அப்பா போன்ல இருந்து பேசு ”

“ ஹ்ம்ம் சரிங்க ” என சிறுது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கதிரவன் வெளியே சென்றுவிட எழிலும் இரவு உணவு தயாரிக்க தெய்வானையுடன் நின்றுகொண்டாள்.

   தெய்வானை எழில்விழியை கண்டுகொள்ளாது சப்பாத்தியை தேய்த்து சுட்டு எடுத்துக்கொண்டிருந்தார். அதனை கண்டு,

“ அத்தை குருமா வைக்கவா??… ” என கேட்க

“ வேணாம் இங்க எல்லாரும் தேங்கா சட்னி வச்சு சாப்பிடுவாங்க. உன் மாமா பால் வச்சு சாப்பிடுவாரு. உன் புருஷன் மட்டும் ராத்திரிக்கு சோறுதான் சாப்பிடுவான். அதனால நீ ஒன்னும் பண்ண வேணாம் எல்லாத்தையும் எடுத்து மட்டும் வை போதும்” என சப்பாத்தியை சுட்டு அடுக்க அனைவருக்கும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

  விஜயன் கணேஷ் சாரதா  என அனைவரும் சாப்பிட கதிரவனும் சாதத்தை சாப்பிட்டுக்கொண்டிருக்க ஸ்வாமிநாதன் மட்டும் பாலில் இரு சப்பாத்திகளை ஊற வைத்துக்கொண்டிருந்தார். அதனை பார்த்த எழிலிடம்,

“ இந்த வயசுலகூட நல்லி எலும்பை அசால்ட்டா கடிச்சுடுவேன். ஆனா உன் அத்தை சுட்ட   சப்பாத்தியை  மென்னு திங்க முடியல பல்லு எல்லாம் வலில சுளிக்கிக்கும் போல அதான் பாலுல ஊற வச்சு திங்குறேன் ” என கூறி சாப்புட எழில்விழி வந்த சிரிப்பை மறைக்க பெரும்பாடுபட்டாள். அனைவரும் இரு சப்பாத்திகளுடன் எழுந்துவிட,

      எழில்விழியோ சாப்பிட ஆரம்பித்தவுடன்  புரிந்துகொண்டாள்  மாமனார் கூறியதன் பொருளை. ஒரு சப்பாத்திக்கு மேல் உண்ணமுடியாது எழுந்து விட,

‘ இப்போ புரியுது எதுக்கு நம்மாளு  ராத்திரிகூட சோறு ஏன் சாப்பிடுறாருன்னு ’ என எண்ணிக்கொண்டு பாத்திரத்தை கழுவி வைத்துவிட்டு அறைக்கு சென்றாள்.

   அங்கு கதிரவனின் பயண பொதிகளை பார்த்து அதுவரை இருந்த மனநிலை மாறி ஒரு வித  அழுத்தம் ஏற்பட அமைதியாக கட்டிலில் அமர்ந்தாள்.

 என்ன ஒரு மாதிரி இருக்க விழி??… இன்னும் உங்க அம்மா வீடு நியாபகமா??….” என கேட்க

“ இல்லங்க ”

“ அப்புறம் என்ன??? ”

“ இல்ல நீங்க ஊருக்கு போறிங்களா அதான் மனசு ஒரு மாதிரி கலக்கமா இருக்கு ”

“ ஓ!!… அப்போ நாவேணா வேலையை விட்டுட்டு வீட்டுல உன் முந்தானையை பிடிச்சுட்டு சுத்தட்டுமா?? ” என கடுப்புடன் கேட்ட  கதிரவனை வெறித்து பார்த்தவள் மனதிலோ,

‘ இது உனக்கு தேவையா??…. பேசாம படுத்துருக்கலாம்ல. பேசுவியா….. பேசுவியா…..’ என தன்னையே அடித்துக்கொள்வது போல கற்பனை பண்ணி கொள்ள

“ என்ன முழிக்குற??…. சும்மா வீட்டு பொம்பள கண்ணா கசக்குன விளங்குமா??…..  கல்யாணம்  ஆகி புருஷன் வேலைக்கு போறானே நல்லபடியா வேலைக்கு போயிட்டுவாங்க. நான் பத்திரமா இருந்துக்குறேன் சிரிச்சமுகமா  அனுப்பி வைக்கணும். என்னமோ தெரியாத காட்டுல விட்டுட்டு போற மாதிரி மூஞ்சில எபெக்ட் குடுக்குற ” என கத்திய கதிரவனுக்கு பதில் கூறாது அமைதியாக இருந்தவளிடம்

“ இவ்வளவு நேரம் நல்லாத்தான் இருந்த இப்போ என்ன மூஞ்சிய தூக்கி வச்சுருக்க. எங்க அப்பா அம்மா கூட இருக்க உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு ” என கேட்டவனிடம்

     எதுவும்  கூறாது மெதுவாக எழுந்தவள் அவனின் அருகில் சென்று தனது அத்தனை தைரியத்தையும்  திரட்டி கதிரவனிடம்,

“ உங்க அப்பா அம்மாகூட இருக்குறதுனால  இல்ல உங்க கூட இருக்க பிரியப்பட்டதால இந்த கண்ணீர். ஆனா இனிமே உங்க முன்னாடி இந்த கண்ணீர் வராது ” என கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு உறங்கிவிட   

   ஏனோ எழில்விழியின் ‘ உங்ககூட பிரியப்பட்டதால ’ என்ற வார்த்தை ஒரு வித  உணர்வை குடுக்க அது என்னவென்று புரியாது,

“ அது என்ன பேசிகிட்டு இருக்குறப்போ எனக்கென்னன்னு மரியாதை இல்லாம தூங்குறது ” என கத்திவிட்டு  அவனும் உறங்கிவிட  

        காலையில் ஆறுமணிக்கு கிளம்ப ஐந்து மணிக்கே எழுந்து கிளப்பிக்கொண்டிருந்தான்.  இந்த ஒருவார பழக்கத்தில் ஓரளவுக்கு கதிரவனை பற்றி தெரிந்து கொண்டவள்  காலையில் குடிக்க அவனுக்கு நீராகாரம் கொண்டுவந்து குடுக்க அதையும் குடித்துவிட்டு ஸ்வாமிநாதனிடமும் தெய்வானையிடமும் கூறிவிட்டு எழில்விழியிடம் ஓர் தலை அசைப்பில் விடைபெற்றான்.

     பேருந்தில் ஏறி அமர்ந்த கதிரவனின் மனதிலோ இதுவரை இல்லாத ஓர் சலனம்,  பாரமேறிய உணர்வு என்னவென்று உணராது கண்ணை மூடி அமர,

    மன கண்ணில் இரவு கலங்கிய விழியின் முகம் காலையில் இறுக்கத்துடன் இருந்த விழியின்  முகம் என மாறி மாறி வர,

“ ச்ச…. அழாத அழாதன்னு சொன்னா கேட்கமாட்டா. சும்மா சும்மா கண்ணு கலங்கி எனக்கு அதேதான் நியாபகம் வருது ” எரிச்சல் அடைந்தான்.

    எழில்விழியின் கலக்கம் ஏனோ தனது மனதை சலனப்படுத்துவதை உணராது அவனின் விழியை திட்டிக்கொண்டிருந்தான் இந்த விழியின் காவலன்.

  கதிரவன் ஊருக்கு சென்றவுடன் மன அழுத்தத்தில் இருந்தவள் ஒரு வாரத்தை ஒரு நாளைக்கு ஒருமுறை என கதிருடன் அலைபேசியில் பேசி கடந்தவள் அன்று ஏனோ கதிரின் நினைவும் பிறந்தவீட்டு  நினைவும் அதிகமாக கவனத்தை திசை திருப்ப காலை உணவு சமைக்க தெய்வானையுடன் சென்று நிற்க அவளை கண்ட தெய்வானை,

“ எழிலு ” என அழைக்க

“ அத்தை ”

“ காலை சமையலை நான் பார்த்துக்கறேன் மதியத்துக்கு நீ சமையல் செய் ”

“ சரிங்கத்தை ”

“ இப்போ போய்  வீட்டுக்கு குடிதண்ணி குடத்துல பிடிச்சுட்டுவா ”

“ ஹ்ம்ம்  பைப் எங்க அத்தை இருக்கு ”

“ இங்க இருந்து நேர போனா குடிதண்ணி தொட்டி ஒன்னு வரும். அங்க இருந்து பிடிச்சுட்டுவா. இங்க வீட்டுக்குள்ள வர தண்ணி எல்லா உப்பு தண்ணி. புழக்கத்துக்கும் சமையலுக்கும் குடத்துல தான்  பிடிச்சுட்டு வரணும் ”

“ சரிங்க அத்தை ”

“ அதோட நான் காலை சமையலை முடிச்சுட்டு வயலுக்கு போனும் மதியானதுக்கு மேல உங்க மாமா போவாரு அதான் உன்னைய  சமைக்க சொன்னே மதியத்துக்கு ”

“ சரிங்க அத்தை. நான் போய் தண்ணி பிடிச்சுட்டு வரேன் ” என ஒரு குடத்தை எடுத்துக்கொண்டு சென்ற சிறுது நேரத்தில்  எழில்விழியோ,

“ என்னடா இது இந்தா வந்திரும் இந்தா வந்திரும்ன்னு நானும் நெருக்கி அரை கிலோமீட்டர் நடந்துருப்பேன் போல ஆனா இந்த தண்ணி தொட்டிய மட்டும் காணோமே ”  என புலம்பிக்கொண்டு செல்ல

   இன்னும் சிறுது தூரத்தில் பெரிய சிமெண்ட் தண்ணீர் தொட்டி ஒன்று இருக்க அதற்கு கீழ் இருந்த பைபில் குடங்கள் வரிசையாக அடுக்கி வைத்து ஒன்னுரெண்டு  பெண்கள் நிற்க,

    அங்கே சென்று ஒரு குட தண்ணியைப் பிடித்து இடுப்பில் வைத்து தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்து அடுப்படியில் வைத்துவிட்டு இன்னொரு குடத்தை எடுத்துக்கொண்டு நகர, அதனை கண்டு சாரதா

“ என்ன எழிலு நீ இப்படி ஒவ்வொரு  குடமா தூக்கிட்டு வந்து எப்போ  மதியம் சமைக்க போற ” என கேட்க அவள் கேட்பது புரியாது விழிக்க

“ என்ன முழிக்குற ரெண்டு நடைல ரெட்டை குடத்தை தூக்கிட்டுவருவியா அதைவிட்டு சும்மா ஒன்னொன்னா தூக்கிட்டு வர ” என சாரதா  கேட்க

“ ரெட்டை கூடமா எனக்கு இடுப்புல ரெண்டுபக்கமும் வச்சு தூக்க தெரியாதுக்கா ” என பாவமாக கூறியவளிடம்

“ ஏய்!!… என்ன  நக்கல் பண்ணுறியா. ரெட்டை குடம்னா தலைல ஒன்னு இடுப்புல ஒன்னு தூக்கிட்டு வா ” என சாரதா கூறிக்கொண்டிருக்கையில்

“  ஏன் சொல்லுற நீ ரெண்டு நடை போயிட்டு வரவேண்டியதுதானே ” என ஸ்வாமிநாதன் கேட்க அவரிடம் பேச பிடிக்காது,

“ எனக்கு வேலை இருக்கு மாமா ”

“ அப்பிடி என்ன வேலை மூத்த மருமகளே ” என நக்கலுடன் கேட்டவரிடம்

“ என் பிள்ளை சாப்டனும்ல ”

“ எது அந்த நாலு வயசு பிள்ளை சாப்டுறதை வேடிக்கை பார்க்க போற அந்த வேலை தானே. அதை நான் பார்த்துக்கறேன் ” என கூறியவரிடம் பேச மேலும் பிடிக்காது தெய்வானையை அழைக்க

“ என்னமா?? ” என வந்தவரிடம்

“ அத்தை உங்க சின்ன மருமகளை எதுக்கு ஒவ்வொரு குடமா தூக்கிட்டுவர உனக்கு கஷ்டம் தானே ரெண்டு நடைல ரெட்டை குடம் போட்டு தூக்குன்னு சொன்னா மாமா என்னைய தூக்கிட்டு வர சொல்றாங்க. அவரு பார்த்த மருமக கஷ்டப்பட கூடாது. ஆனா நீங்க பார்த்து உங்க மூத்த பிள்ளைக்கு கட்டி வச்ச  நான் கஷ்டப்படலாம் ” என சாரதா குறை படிக்க

“ என்ன மூத்த மருமகளே நீ  என்னமோ தண்ணி தூக்கிட்டு வந்த மாதிரில கஸ்டப்படுறேன்னு சும்மா நீவாட்டுக்கு  அள்ளிவிட்டுக்கிட்டு இருக்க ” என ஸ்வாமிநாதன் அதற்கும் பதில் கூற தெய்வானையோ,

“ பொம்பளைங்க பேசிகிட்டு இருக்கைல நீங்க ஏங்க ஊடால  போய்  பேசுறீங்க. எங்க இந்த எழிலு??” என கேட்க அப்பொழுதுதான் அங்கு எழில்விழி இல்லாததை உணர்ந்து

“ எங்க காணோம்??? ” என சுவாமிநாதனும் தேட வீட்டில் தண்ணீர் குடம் இல்லாததில் அவள் தண்ணீர் பிடிக்க சென்று இருப்பாள் என உணர்ந்து சிறுது நேரம் வாசலில் ஸ்வாமிநாதன்  காத்திருக்க தெய்வானையும்  சாரதாவும் சிறு சிறு முணுமுணுப்புடன் அவரவர் வேலையை பார்க்க சென்றனர்.    

      சிறுது நேரத்தில் தலையில்  ஒரு குடமும் இடுப்பில் ஒரு குடமும் என தூக்கிக்கொண்டு வந்த எழில்விழியிடம் சென்றவர்,

“ என்னம்மா நீ!!!!……  முதல்ல உள்ளாரா வச்சுட்டுவா ” என இடுப்பில் இருந்த குடத்தை ஒரு கையால் பிடித்து இறக்கி வைக்க எழில்விழியோ ஒவ்வொரு குடமாக வைத்துவிட்டு ஸ்வாமிநாதனிடம் வர,

“ என்ன மாமா கூப்பிட்டீங்களே ”

“ என்னமா பேசிகிட்டு இருக்கும் போது நீவாட்டுக்கு குடத்தை எடுத்துட்டு போயிட்ட உனக்கு பழக்கம் இல்லாத வேலையை செய்ற கஷ்டமா இருக்கும்ல ” என கூற

“ இதுல என்ன மாமா கஷ்டம். இங்க தான் இருக்க போறேன். என்னைக்கா  இருந்தாலும்  நான் செய்றது தானே அதை இப்போவே பழகிக்கலாம்ல அதான். சரி மாமா நான் துணியை அடுக்கி வைக்க வேண்டியது இருக்கு நான் போகவா??… ”

“ ஹ்ம்ம் போமா ” என கூற எழில்விழி தனது அறைக்கு சென்றுவிட ஸ்வாமிநாதன் உடனடியாக கதிருக்கு போன் செய்து இங்கு நடந்ததை கூறி

“ கதிரு பாவம்டா அந்த பிள்ளை. புதுசா செய்யுது உன் அண்ணியும் அம்மாவும் கொஞ்சம் கூட யோசிக்காம சொல்லறாங்க. நீ என்னனு பாரு இல்ல என் மருமகளை உன்கூட கூட்டிட்டுபோ. என்னடா சொல்ற ”

“ நான் சொல்றது இருக்கட்டும் நீங்க சொல்லவேண்டியதை  சொல்லிட்டீங்களா அவ்வளுவுதானே ”

“ டேய்!!!… நான் என்ன பேசிகிட்டு இருக்கேன் நீ என்னனா….. ”

“ அப்பா  இங்க வெட்டு குத்துன்னு கொலை கேசா வந்துகிட்டு இருக்கு. அவன் அவன் அதை காணோம் இதை காணோம் தினம் ஒரு பெட்டி கேசு வேற  வந்துடுது. இதுல CM  பந்தோபஸ்து , PM பந்தோபஸ்து திருவிழா பாதுகாப்புன்னு  வேலைல ஓடிக்கிட்டே இருந்தா நீங்க வேற போனை போட்டு தண்ணி தூக்க சொல்லிட்டாங்க  மருமகளை கூட்டிட்டு போன்னு சொல்லி டார்ச்சர் பண்ணுறீங்க. முத இது  ஒரு பிரச்சனைன்னு உங்க மருமக சொல்லட்டும் அப்புறம் பார்த்துக்குறேன் ”  என கூறி போனை வைத்துவிட,

     ஸ்வாமிநாதனோ இவன்கிட்ட மனுஷன் பேசுனா  பாதிநேரம் கிறுக்காத்தான் அலையணும் என புலம்பிக்கொண்டு  சிறுது யோசனைக்கு பிறகு ஒரு முடிவெத்துவிட்டு நிம்மதியாக அமர்ந்தார். 

     அறைக்குள் வந்த எழில்விழியோ தலையை பிடித்துக்கொண்டு கட்டிலில் சுருண்டுவிட்டாள். தாயின் வீட்டில் தண்ணீர்குடம் தூக்கிய பழக்கம் இருந்தும் தலையில் தூக்கியது இல்லை.

   அதோடு இத்தனை தூரம் நடந்து வருவது அவளுக்கு மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருக்க இருந்தாலும் தன்னால் எங்கே சண்டைவந்துவிடுமோ என்ற பயத்தில் வேகமாக இரு குடத்தை எடுத்து சென்றுவிட்ட்டாள்.

    இப்பொழுது தலை விண்விண் என்று வலிக்க கண்கள் கலங்கி கண்ணீரை சுரந்துகொண்டே இருந்தது. ஒரு வித அநாதரவான நிலையை மனம் உணர மேலும் மேலும் மன அழுத்தத்தில் சென்று கொண்டிருந்தாள் எழில்விழி.

“  என்னங்க உங்கள பார்க்கணும் போல இருக்கு. உங்க மடில படுக்கணும் போல இருக்கு. ஆனா இதை சொன்னாலும் நீங்க திட்டுவீங்க. அதனால பயமா இருக்கு. அம்மா வீட்டுக்கு போகலாம்ன்னா நீங்க சொல்றவரைக்கு போக கூடாதுன்னு சொல்லிட்டீங்க. ரொம்ப விரக்தியா இருக்கு.

   கல்யாண வாழ்கை இப்படித்தான் இருக்குமா??….. உங்களை நான் தேடுற மாதிரி நீங்க என்னைய நினைக்காவது செய்யிறீங்களான்னு தெரியல. ஆனா உங்கள ரொம்ப தேடுது என் மனசு ஆனா அதைகூட உங்ககிட்ட சொல்லமுடியல.

    என்னமோ  பிறந்ததுல இருந்து சந்தோசம் கிடைக்கலைனாலும் எனக்கு நிம்மதி இருந்துருக்கு. ஆனா இப்போ ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. ரொம்ப மூச்சு முட்டுது ” என புலம்பலுடன் கண்ணீருடன்  படுத்திருந்தாள்.

 

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்
தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

தவம்போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டுக் கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை

காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டில் இருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே! பூங்குழலே!
நீயும் நானும் ஒரு ஜாதி

என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரிபாதி…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!