Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அன்பில் இணைந்த இதயங்கள்

அன்பில் இணைந்த இதயங்கள்…17

அன்பில் இணைந்த இதயங்கள்….17

ரஞ்சனி கயல்விழியிடம் கீழே ஏதோ பிரச்சனை என்று கூறி செல்ல அவளின் பின்னே கயலும் சென்றாள்.கீழே ஒரு அறையில் லிங்கம் ஒரு பக்கம் சத்தம் போட மறுபக்கம் சத்யா கத்திக் கொண்டிருந்தான்.

“ஏன்டா நாங்க சொல்லறதை கேட்க கூடாதுனே இருக்கியா….நீ….”என்று லிங்கம் ஆதங்கமாக கேட்க,

“நான் ஒண்ணும் தப்பா சொல்லலையே….எனக்கு இப்ப வேலை அதிகாமா இருக்கு…அதனால என் முடிவுல மாற்றம் இல்லை….”என்றான்.



Advertisement

“ப்பா….கொஞ்சம் பொறுமையா இருங்க….”என்றபடி ரஞ்சனி வர அவளின் பின்னே கயலும் வந்தாள்.

“என்னமா பொறுமையா இருக்குறது…இவனால  இப்ப லீவ் போட முடியாதாம் முக்கியமான வேலையிருக்காம் அதனால இப்பவே சென்னைக்கு போறேன்னு சொல்லுறான்….இங்க வீட்ல எவ்வளவு சடங்கு சம்ரதாயம் எல்லாம் இருக்கு….நாளைக்கு மருமக வீட்டுலேந்து மறுவீட்டுக்கு வேற அழைக்க வருவாங்க….இவன் என்னடான இவன் இஷ்டத்துக்கு முடிவு எடுக்குறான்….”என்று லிங்கம் இம்முறை சற்று கோபமாகவே கத்திவிட்டார்.

“என்னங்க…நீங்க அவன் கிட்ட என்ன சொன்னாலும் அவன் காதுல ஏறப்போறது இல்லை….அப்புறம் எதுக்கு கத்தி உங்க உடம்பை கெடுத்துக்கிறீங்க….”என்று அமிர்தா கணவனை சாந்தப்படுத்த முயன்றார்.

Advertisement

“எல்லாம் இவனை சொல்லனும்……அவன் செஞ்சா எல்லாம் சரியா இருக்கும்னு சொல்லி சொல்லி தான் அவன் இப்படி எல்லாம் பண்ணுறான்….”என்று அங்கு அமர்ந்திருந்த கலைவாணனை லிங்கம் திட்ட,அவரோ பரிதாபமாக சத்யாவை பார்த்தார்.

Advertisement

“ப்ச்…ப்பா….இப்ப எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுறீங்க….விடுங்க….நான் பார்த்துக்குறேன்….”என்று சத்யா அமர்க்கையாக கூற,

“என்ன என்ன பார்த்துப நீ …நாளைக்கு மருமக அப்பா வருவாங்க…நான் என்ன பதில் சொல்லட்டும்….”என்று லிங்கம் கேட்க,

“நான் மாமா கிட்ட பேசிக்கிறேன்…….”என்று கூற லிங்கம் வேறு பேச முடியாமல் அமர்ந்துவிட்டார்.கயல்விழி நடப்பதை ஊமை போல பார்த்துக் கொண்டிருந்தாள்.

Advertisement

“உன்னால பாருடா என் மருமக பயந்து போயிட்டா….”என்று அமிர்தா கயலின் அருகே வந்து அவளின் கையை பிடித்துக் கொண்டார்.

“இவளா பயப்படுறுவ….இவ பத்து பேரை பயமுறுத்துவா….உனக்கு தான் தெரியலை மீ….”என்று தனக்குள் கூறிக் கொண்டவன் கயலை பார்த்து கண்ண்டிக்க,அவளோ அவனின் அதிரடியில் தலையை வேகமாக குனிந்து கொண்டாள்.

“சரிடா நீ போயிட்டு உன் வேலையை சீக்கிரம் முடிச்சிட்டு வா….நாங்க கயலை பார்த்துக்குறோம்….”என்றவர் கயலின் புறம் திரும்பி,

“நீ ஒண்ணும் வேசனபடாதமா….அவனுக்கு ஏதோ முக்கியமான வேலை போல அதனால அவன் போவட்டும்….”என்று அவர் முடிபதற்குள்,அவரின் தோள்களை பற்றி திருப்பி சத்யா,

“அம்மு மம்மி….என் பொண்டாட்டியை நான் எப்ப விட்டுட்டு போவேன்னு சொன்னேன்…அவளும் என்கூட தான்  வரா….”என்றுவிட்டு,

“கயல்…போ…பிரஷ்ஷப் ஆகிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு…ஈவீனிங் கிளம்பனும்….க்கா…..கூட்டிட்டு போ….”என்று கூற கயல் அவனை வாயை பிளந்து பார்த்தபடி ரஞ்சனியுடன் சென்றாள்.அங்கு கூடியிருந்த மற்றவர்கள் எல்லாரும் நமட்டு சிரிப்புடன் அமர்ந்திருந்தனர்.அதிலும் கலைவாணனிற்கோ சிரிப்பை அடக்க முடியவில்லை அவரின் உடல் வெளியில் குலுங்க,அவரை முறைத்த லிங்கம்.

“உன் வளர்ப்பு தான எப்படி இருக்கான் பாரு…..”என்ற கேட்க,

“மச்சான் நான் என்ன செஞ்சேன்…உன் பிள்ளை உன்னை போல தான் இருக்கான்…நீயும் இப்படி தான கல்யாணமான புதுசுல செஞ்ச….”என்று கூற லிங்கா முகத்திலும் புன்னைகை எட்டி பார்த்தது அவர் தன் மீசை திருகி கொண்டு மனைவியை பார்க்க அமிர்தாவோ தலையில் அடித்துக் கொண்டார்.சத்யாவின் விருப்படியே கயலும்,சத்யாவும் சென்னை செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.குருவிடம் சத்யா பேசிவிட அவரும் மருமகன் விருப்படியே விட்டுவிட்டார்.

இதோ சென்னையில் சத்யாவின் வீட்டில் இருந்தனர் சத்யாவும்,கயல்வழியும்.இரவு மணி எட்டை நெருங்கி கொண்டிருந்தது.இப்போது தான் வந்திறங்கி இருந்தனர் இருவரும்.

“நீ எதுவும் சமைக்க வேண்டாம் நான் வாங்கிட்டு வரேன்….நீ கதவை அடைச்சிட்டு இரு புரியுதா….”என்றவன்.வீட்டிற்குள் நுழைந்து தங்கள் பயண பொதிகளை வைத்துவிட்டு.

“நீ இரு நான் போய் வாங்கிட்டு வரேன்….”என்று கூறிவிட்டு வெளியேறினான்.போகும் அவனையே இயலாமையோடு பார்த்துக் கொண்டிருந்த கயல் தலையை பிடித்துக் கொண்டு அங்கு ஒரு இறுக்கையில் அமர்ந்துவிட்டாள்.மனதெங்கும் கோபம் கோபம் சத்யாவின் மேல் இருந்து காட்டும் எண்ணம் தான் இல்லை அவளுக்கு.

கயல்விழியின் பேசி இசைந்து ஒலி எழுப்ப,அமிர்தா தான் அழைத்திருந்தார்.தொண்டை அடைத்தது மாலை அவரின் கலங்கிய முகம் பார்த்துவிட்டு தானே வந்தாள்.தன்னை வரவேற்கும் போது எத்தனை மகி்ச்சியோடு மலர்ந்திருந்த அவரின் முகம் மாலை எப்படி வாடி வதங்கி போயிருந்தது.பேசியை எடுத்து அவள் பேசும் முன் அமிர்தாவின் குரல் தான் கேட்டது,

“கயல்….வீட்டுக்கு நல்லபடியா போயிட்டீங்களாமா…”என்று கேட்டார்,குரல் கரகரத்து ஒலித்திலேயே தெரிந்தது அவர் அழுதிருக்கிறார் என்று.

“ம்ம்…அத்தை இப்ப தான் வீட்டுக்குள்ள நுழைஞ்சோம்….நானே உங்களுக்கு கால் பண்ணலாம்னு இருந்தேன் அதுக்குள்ள நீங்க கால் பண்ணிட்டீங்க….”என்றாள்.

“அதனால என்னமா….நீங்க இப்படி திடீர்னு கிளம்பவும் மனசுக்கு என்னவோ போல ஆகிடுச்சு…அதான் நான் கால் பண்ணேன்….”என்று அவர் கூற,

“அத்தை எனக்கு எதுவும் தெரியாது அத்தை இப்படி இவங்க கிளம்பி வருவாங்கனு….என்கிட்ட எதுவும் சொல்லலை….”என்று கயல் தட்டுதடுமாறி கூறிவிட,

“ம்ம்ம்….எனக்கும் தெரியும்மா…..இவன் எப்போதும் இப்படி தான் அவன் என்ன நினைக்கிறானோ அதை தான் செய்வான்….யார் சொல்லையும் கேட்க மாட்டான்….இப்படி தான் காலேஜ் படிக்கும் போது….”என்று அவர் ஆரம்பிக்கும் போது கயலின் கைகளில் இருந்து பேசி பறிக்கபட,அவள் பயந்து திரும்ப அங்கு ருத்ரமூர்த்தியாக நின்றிருந்தான் சத்யா.

“என்ன ஆச்சு….”என்று அவள் கேட்க,

“ம்மா…..நாங்க வந்துட்டோம்….அப்புறம் பேசுறேன்…..”என்று அமிர்தாவிடம் கத்திவிட்டு பேசியை அனைத்து பக்கத்தில் இருந்த சோபாவில் தூக்கி போட்டான்.

“இப்ப எதுக்கு இப்படி கோபடுறீங்க….அத்தை என்கிட்ட பேசிகிட்டு தான இருந்தாங்க….அதுக்குள்ள ஏன் புடுங்குனீங்க….”என்று கயல் எகிற,அவளின் தலையில் வலிக்க கொட்டினான்.

“ஆஆஆஆ…..ஏன் சத்யா கொட்டுறீங்க….என்ன தான் உங்க பிரச்சனை…..”என்ற கயலுக்கு கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது.

“உன்கிட்ட என்ன சொல்லிட்டு போனேன்….நான் வெளியில போறேன் கதவை அடைச்சிட்டு இருனு தானே….நீ என்னடான அப்படியே பேப்பரபேனு முழுசா திறந்து வச்சிகிட்டு உட்கார்ந்து இருக்க….”என்று அவன் கத்த,கயலோ கதவடைக்காது ஒரு குத்தமாயா என்று நினைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீ என்ன நினைக்குறனு எனக்கு தெரியும்…..நாம எப்போதும் சேப்பா தான் இருக்கனும்….அதுவும் நீ போலீஸ்காரன் பொண்டாட்டி…அப்ப….”என்று பத்து நிமிடத்திற்கு பாதுகாப்பை பற்றி அவன் கிளாஸ் நடத்த கயல் கன்னங்களில் கை வைத்து அமர்ந்துவிட்டாள்.

“என்ன புரிஞ்சுதா…..”என்றுவேறு அவன் கேட்க,தலையை வேகமாக ஆட்டினாள்.புரியலை என்று கூறி அவன் மீண்டும் தொடங்கிவிட்டான் என்றால் என்ன செய்வது.

“ம்ம்….போ…போய் முதல்ல பிரஷ் ஆகிட்டு வா…..சாப்பிடலாம்…..”என்று கூற,கயலும் சென்று தன் சுத்தப்படுத்திக் கொண்டு வர,சத்யாவும் தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வந்திருந்தான்.

“வா….சாப்பிடு….”என்று அவளை அழைக்க,அவளும் அவனுடன் அமர்ந்து உண்டாள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை அமைதியாக உண்டனர்.சாப்பிட்டதும் சத்யா அனைத்தையும் சுத்தப்படுத்த கயல் அவனுக்கு உதவினாள்.அனைத்தும் முடிந்ததும் கயல் அமைதியாக வரவேற்பறையில் இருந்த சோபாவில் அமர்ந்தவள் அப்போது தான் வீட்டை சுற்றி பார்த்தாள்.இரு படுக்கை அறைகள் கொண்ட வீடு.மிகவும் சுத்தமாக இருந்தது.அனைத்து பொருட்களும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தது.

“அடியே கயல் வீடு இருக்க சுத்தத்த பார்த்தா….நீ தினமும் வீட்டை துடைக்கனும் போல….அதோட எடுத்த பொருளை கரெட்டா அந்த இடத்துல வைக்கனும்….”என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.ஏனென்றால் கயலிற்கு பொருட்களை இடம் மாற்றி வைத்துவிட்டு தேடுவதே வேலை அதற்காக பார்வதியை பாடாய் தான் படுத்தி வைப்பாள்.

“என்ன பாரூ இது இப்படி நீ விட்ட சாபம் எல்லாம் என்னை விதவிதமா தாக்குது….”என்று கயல் வாய்விட்டே புலம்ப,

“யார் கிட்ட பேசிக்கிட்டு இருக்க….”என்றபடி சத்யா எதிரில் இருந்த சோபாவில் அமர,

“நல்லவேளை முழுசா கேட்கலை….இல்ல நான் மாட்டியிருப்பேன்….”என்று நினைத்தவள்,ஒண்ணுமில்ல என்று தலையை ஆட்ட,அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“வீடு எல்லாம் பார்த்தியா….எப்படி இருக்கு…”

“ரொம்ப சுத்தமா இருக்கு….”என்று கூறிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள்.

“ம்ம்…எனக்கு சுத்தமா இருந்து பழகிடுச்சு இனியும் அப்படி தான் இருக்கனும்….அந்த ரூம் என்னோட ஆபிஸ் ரூம்….அங்க நீ போக வேண்டாம்…..”என்று படுக்கை அறைக்கு பக்கத்தில் இருந்த ஒரு அறையை அவன் காட்ட,

“சரி….”என்றாள் கயல்.

“ம்ம்…அப்புறம்….”என்றுவிட்டு அவளை பார்க்க,அவளும் அவனை தான் பார்த்தாள்.இருவரும் சில நிமிடங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.கயலுக்கு சத்யாவின் பார்வை ஏதோ ஒருவித அசௌகரியத்தை தர பார்வை அவனிடம் இருந்து திருப்பிக் கொண்டவள்,

“என்ன ஆச்சு….”

“என்ன….”

“ஏதோ கேட்க வந்தீங்க….”

“ம்ம்ம்….கயலம்மாக்கு மரியாதை எல்லாம் வருமா….”என்று கேட்க கயல் அவனின் குரல் வேறுபாட்டில் நிமிர்ந்து அவனை பார்க்க,அவனோ எப்போதும் போல் தான் இருந்தான்.

“என்ன….”என்று எச்சில் வழிங்கியபடி கேட்க,நீண்ட மூச்சொன்றை இழுத்துவிட்டவன்,

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி நீ இருக்க போற….”என்று கேட்க கயலுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன சொல்லுறீங்க….எனக்கு புரியலை….நான் என்ன செஞ்சேன்….”என்று  பதட்டத்துடன் கேட்க,

“இதோ….இது தான்….இந்த பதட்டம் எதுக்கு கயல்….உன் மனசுல நீ என்ன தான் நினைச்சுக்கிட்டு இருக்க….எப்படி எப்படி நீ அந்த….முதல்ல அந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட….ஒருதடவை கூட என்னை பத்தி நினைக்கலையா…..ஆங்….சொல்லு…”என்று ஆவேசமாக அவளின் அருகே வர,அவனை தீர்க்கமாக பார்த்தவள்,

“என்ன நினைக்கனும் உங்களை பத்தி…ஆங்….சொல்லுங்க….நீங்க தான எனக்கு நிச்சயமாச்சுனு சொல்லிட்டு போனீங்க….அப்புறம் எப்படி உங்களை பத்தி நினைக்க முடியும்…..அதோட நான்….நான்….ப்ச்….விடுங்க…அதை ஏன் இப்ப பேசுறீங்க….”என்று கயல்விழி கேட்க,தான் கூறிய பொய்யை மெய் என்று நம்பி தான் தன்னை விட்டு விலக முடிவு எடுத்திருக்கிறாள் என்று புரிந்து கொண்டவனுக்கு மனது ஆசுவாசம் ஆனாலும் அவனுக்கு தெரிய வேண்டியது சிலது உள்ளது அதனால் அவளின் தோள்களை பற்றி,

“ஏன்னா நீ நீயா இல்லை….அதுக்கு தான் கேட்குறேன்….”

“நான்….எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்குறேன்…..”என்றவளை கூர்ந்து பார்த்தவன்,

“நீ நல்லா இருக்க…இதை என்ன நம்ப சொல்லுற…ம்ம்…உன்னை பத்தி உன்னை விட நல்ல தெரிஞ்சு வச்சிருக்குறவன் நான்….என்கிட்ட திரும்பியும் திரும்பியும் பொய் சொல்லாத கயல்….எரிச்சலா வருது….”என்றவன் அவளை உதறிவிட்டு அறைக்குள் சென்றுவிட,கயல்விழி மனது எங்கும் சத்யா கூறிய என்னை ஏமாற்றதே என்ற வார்த்தைகளே ரீங்காரமிட,

“இப்ப இவனை எங்க நான் ஏமாத்தினேன்….விட்டா ரொம்ப பேசிக்கிட்டே போறான்….இவனை இன்னைக்கு விடுறதா இல்லை….”என்று தனக்குள் கூறிக் கொண்டு அவளும் அவன் சென்ற அறைக்குள் செல்ல அங்கு ஜன்னலின் அருகே வானத்தை வெறித்தபடி இருந்தான் சத்யா.கோபமாக அவனை நெருங்கும் முன் தான் கவனித்தாள் சத்யாவின் கை விரல்கள் நடுக்கத்துடன் இருப்பதை.மனதில் அலாரம் அடித்தது கலைவாணன் கயலை நிச்சயம் முடிந்தவுடன் தனியாக சந்தித்து சத்யாவின் உடல் நிலை பற்றி அனைத்தையும் கூறிவிட்டார்.கூடவே அவர் இதற்கான மருந்து நீ மட்டும் தான் என்றும் கூறியிருந்தார்.

கயல்விழிக்கே சத்யா தன்னை இந்தளவிற்கு நேசித்தை நினைத்து பிரமிப்பு தான்.கலைவாணன் கேட்டது போல தான் அவளும் தனக்குள் கேட்டுக் கொண்டாள் என்ன செஞ்சிட்டேன் நான் இவனுக்கு இவ்வளவு அன்பு வச்சிருக்கான்.எப்படி எப்படி நான் இதை சரி செய்ய போகிறேன் நான் என்று நினைத்தவளுக்கு மனதில் பாரம் ஏறியது.

கயல்விழி ஒருநிமிடம் தான் நின்றாள் பின் வேகமாக அவனின் அருகே சென்று அவனின் நடுங்கும் விரல்களுடன் தன் விரல்களை கோர்த்துக் கொண்டவள் மற்றொரு கரத்தால் அவனை அணைத்துக் கொண்டு,

“இப்ப எதுக்கு இவ்வளவு கோபம்….”என்று அவனின் முகத்தை பார்த்துக் கேட்க,

“தள்ளி போடி….”என்றான் வலுவற்ற குரலில்.வாய் தான் போ என்று கூறியது ஆனால் அவனது விரல்களோ கயலின் கரத்துடன் இறுக்கமாக பிணைந்து கொண்டது.

“ம்ஹம்….போகமாட்டேன்….ஏன் அப்படி சொன்ன சொல்லு….”என்று பிடிவாதமாக கயல் கேட்க,அவளது முகத்தை பார்த்தான்,

“ஓய்….சொல்லு…..இப்ப சொல்ல போறியா இல்லையா சத்து மாத்திரை….”என்று அவளும் கோபம் போல கூற,அடுத்த நிமிடம் சத்யாவின் இறுகிய அணைப்பில் இருந்தாள் கயல்.எலும்புகள் நொருங்கும் அளவிற்கு இருந்தது அவனின் அணைப்பு.கயல்விழிக்கு அவனின் கோபத்திற்கான காரணம் இப்போது புரிய தொடங்கியது.அவளின் கைகளும் உயர்ந்து அவனை அணைத்து கொண்டது.

“சத்யா….சத்….ஓய் சத்து மாத்திரை….”

“ம்ம்….சொல்லு….”என்றான்.அவனின் குரல் குழைந்துவர,கயலுக்கு அந்த குரலும் அவனின் அணைப்பும் பயம் கலந்த பதட்டத்தை தர,

“ம்ம்…நான்….”என்றவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை அவனின் மீசை கழுத்தில் குறுகுறுக்க உடல் குச்சத்துடன் சிலிர்த்து அடங்கியது.அவளின் அந்த தவிப்பை ரசித்தவாரே அவளது கழுத்தில் தன் அதரத்தை அழுத்தமாக பதித்து கொண்டே,

“ம்ம்….நீ….”

“ம்ம்….நீங்க….நீ….”என்று தடுமாறியவளை திருப்பி அவளின் பூ முகத்தை கையில் ஏந்தி,

“கயலம்மா….எனக்கு என் கயல் கொஞ்சம் கொஞ்சமா திரும்பி வரா….அது போதும்….”என்று கூறிவிட்டு அவளின் நெற்றி,கன்னம் கழுத்து என்று அழுத்தமாக முத்தமிட,கயல்விழி முற்றிலுமாக செயலிழந்து போனாள் தன்னவனின் அதிரடியில்.

“ம்ம்…கயலம்மா….உன்னை….அப்படியே…”என்று அவன் ஏதோ கூறும் முன் கயலின் கைகள் உயர்ந்து அவனின் அதரங்களை மூடியிருந்தது.தன் அதரங்களை மூடிய உள்ளங் கையில் தன் கை கொண்டு அழுத்தியவன் அவள் நெலிந்து விடுபட போராடவும்,

“இன்னைக்கு நீ எங்கேயும் தப்பிக்க முடியாது கயலம்மா….”என்று கூறி அவளை மெல்ல மெல்ல தன் வசமாக்கினான்.சத்யாவின் இந்த அதிரடியில் கயல்விழி முற்றிலுமாக சத்யாவின் கரங்களில் கரைய தொடங்கினாள்.தன் மனதில் தேக்கி வைத்த காதல் அனைத்தையும் அவளிடம் தன் அதரங்களின் முற்றுகையால் சேர்ப்பித்துக் கொண்டிருந்தான்.இருவரும் ஒருவருள் ஒருவர் கலந்து கரைந்து தங்கள் காதலின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக அடியெடுத்து வைத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!