Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன்

கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன் 2

2

    ஹீத்ரோ விமான நிலையம் வெவ்வேறு நாட்டு மக்கள் நிரம்பிய இடமாக காட்சி தந்தது., சிறு விமான பயணங்கள் சென்றிருந்தாலும்., இதுவே முதல் முறை நீண்ட பயணமாக செல்வது.,

     திருவிழா கூட்டத்தை பார்க்கும் சிறுபிள்ளையாக வேடிக்கை பார்த்து நின்றாள்.

  அத்தனை கூட்டத்தை பார்த்தபோது அவளுக்கு விசித்திரமாக இங்கிருந்து தப்பி ஓடிவிட்டால்  என்ன என்ற எண்ணம் கூட தோன்றியது.   போய் விட்டால் என்ன என்று மனதில் பலவிதமாக தோன்றினாலும் அவளால் அங்கிருந்து செல்ல முடியாது என்பது அவளுக்கே நன்றாக தெரியும்.,



Advertisement

   பாஸ்போர்ட் இன்னும் அவள் கைக்கு வரவில்லை அவள் அப்பா அவளிடம் கொடுக்கவில்லை.,  நிச்சயமாக  ஏர்போர்ட்டில் மாறும் போது கூட அவள் கைக்கு கிடைக்காது என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.,

  ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அவருடன் கிளம்பி விட்டாலும் மனம் என்னவோ இன்னும் பதட்டத்தோடு தான் இருந்தது.

     இரு நாட்களுக்கு முன்பு தோழிகளிடம் போனில் பேசும் போது கூட அம்மா அருகில் தான் இருந்தார். இவளால் வாய் திறந்து எதுவும் பேச முடியாமல், பதில் சொன்ன விதத்திலேயே புரிந்து கொண்ட தோழிகள் “எல்லாம் நல்லபடியா நடக்கும் தைரியமா இரு” என்று மட்டும் சொல்ல., ஏதோ நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் அவள் மனதில் ஆழமாக இருந்தது

Advertisement

எப்படியும் திருமணம் என்ற ஒரு விஷயத்தில் மட்டும் தன் மனதிற்கு பிடித்தது போல் நடந்தால் போதும் மற்றதை விதித்த படி இருக்கட்டும் என்று நினைத்தவளுக்கு மனம் கொஞ்சம் நிதானப்பட்டது போல தோன்றியது.

Advertisement

மூச்சை இழுத்து விட்டவன்  ‘இங்கிருக்கும் மக்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக ஒவ்வொரு பிரச்சினை இருக்கக்கூடும்.,  ஆனால் அனைவரும் அவரவர் பிரச்சினைகளை தூக்கிக் கொண்டு தான் அலைகிறார்கள்., மனதில் நம்பிக்கையோடு ஓடிக்கொண்டு தானே இருக்கிறார்கள்.,  நிச்சயம் நமக்கும் ஒரு வழி கிடைக்கும்’ என்ற எண்ணத்தோடு அமைதியாக அமர்ந்தாள்.

விமானத்திற்கான அறிவிப்பு வந்து அவர்களுக்கான விமானத்தில் அவர்களுடைய இடத்தில் அமரும் வரை அமைதியாக இருந்தவள் அதன் பின்பு பாட்டு கேட்பது போல கண்ணை மூடி., ஹெட் போனை மாட்டிக் கொண்டு அமைதியாக சாய்ந்து விட்டாள்., மீண்டும் மனம் கடவுளிடம் வேண்டுதல் வைக்க மட்டும் தவறவில்லை.

     கிட்டத்தட்ட லண்டனில் இருந்து சென்னைக்கு வரும் விமான பயணத்தின் பயண நேரமாக கிட்டத்தட்ட 12 மணி நேரங்களுக்கு மேலாக ஆனாலும் சாப்பிடவும் ஏதேனும் வேண்டுமென்றால் வாங்கவும் மட்டும் வாய் திறந்தவள் மற்றபடி எதுவுமே கண்டுகொள்ளாமல் அமைதியாக பாட்டு கேட்பதையும்  அவளுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் படம் பார்ப்பதுமாக நேரத்தை போக்கிக் கொண்டிருந்தாள்.

Advertisement

ஏற்கனவே லண்டனுக்குள்ளே சில சிறிய விமான பயணங்கள் மேற்கொண்டதால் அவளுக்கு இது புதிதாக தோன்றவில்லை.

அவளுடைய அம்மாவும் அப்பாவும் அப்போது அவளை பார்த்து விட்டு ஜாலியாக பேசிக்கொள்வதும்.,  தங்களுக்குள் மெதுவாக பேசிக்கொள்வதையும் கண்டவள் அமைதியாகவே அமர்ந்து கொண்டாள்.,  ஹெட்போன் மாட்டியிருந்ததால் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றாலும்.,  தன்னை பற்றி தான் பேசுகிறார்கள் என்பது அவளுக்கும் புரிந்தது.

   பார்ப்போம் தப்பிக்க ஏதாவது உதவி கிடைக்கும் என்று அவளுக்கு அவளே சமாதானம் கூறிக்கொண்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

சென்னை வந்து சேர்ந்த பிறகு அங்கிருந்த சூழ்நிலையும் பார்க்கும் இடங்களும், அவள் வளர்ந்த லண்டனுக்கு முற்றிலும் வித்தியாசமாக தெரிந்தாலும்.,  மனதில் இதுதான் என் தாய் நாடு.,  அது பிழைக்க போன இடம் எப்படி என்றாலும் தான் ஒரு இந்தியன் என்பதில் பெருமை தான் என்பதை மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.

       வேடிக்கை பார்த்தபடி தாய் தந்தை பின்னே செல்ல தொடங்கினாள். சென்னையில் இருந்து திருச்சி செல்லும் விமானத்தில் ஏறி திருச்சிக்கு வந்து இறங்கினர்.  திருச்சி அவர்களின் சொந்த ஊர்.

   வீட்டிற்கு வந்து சேர்ந்தவர்களை அருகில் இருந்த உறவினர்களோடு தெரிந்தவர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

   அவர்களையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி வந்த துளசிக்கு தான் மனநிலையில் பல மாற்றங்கள் தோன்றியது.,  ‘அப்பாவிற்கு தங்கையை தவிர வேறு உறவு கிடையாது என்று சொன்னாரே., ஆனால் இங்கு இத்தனை பேர் உறவு முறை சொல்லி பேசுகிறார்களே’ என்ற எண்ணத்தோடு அமைதியாக அமர்ந்து அவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள்.

      அதில் வேறு யாரும் எந்த பேச்சை எடுத்து விடக்கூடாது என்று நினைத்தாரோ என்னவோ.,

     துளசியின் அப்பா பொதுப்படையாக பேசியபடி “இன்னும் ஒரு வாரத்தில் மாப்பிள்ளை வீட்டில் வந்து சேர்ந்து விடுவார்கள்., அதன் பிறகு நிச்சயதார்த்த வேலைகள் தொடங்கும்.,  இப்போது மற்றவற்றை நாம் பேசுவோம்” என்று சொல்லி உறவுகளோடு பேசிக் கொண்டிருந்தார்.

     துளசியை அவள் அம்மா அறைக்கு அழைத்துச் சென்றார்.

       அங்கு பாட்டி தாத்தாவும் அவளோடு சென்றனர்.,  பின்னாடியே வந்த துளசியின் அப்பா அவருடைய அம்மா அப்பாவை பார்த்து “நீங்க  அங்க உட்காருங்க எல்லாரும் சொந்தக்காரங்க இருக்காங்க தானே வந்து பேசிட்டு இருங்க.,  நீங்க எதுக்கு எந்திருச்சு இவ பின்னாடி வரீங்க”.,  என்று கேட்டார்.

     துளசியின் பாட்டியோ.,  “ஏன்டா எங்க பேத்தி கிட்ட நாங்க பேசக்கூடாது நினைக்கிறாயா”.,  என்று கேட்டார்.

        “இல்லமா நான் என்ன சொல்ல வரேன்னா” என்று தயங்கி சொல்லவும்.,

      “நீ என்ன சொல்லுவ ன்னு எங்களுக்கு தெரியும்., நாங்க சாதாரணமா தான் பேசிட்டு இருக்க போறோம்., நீ போய் உன் வேலையை பாரு” என்று சத்தமாக சொன்னார்.

      துளசி யோசனையோடு அப்பாவையும் பாட்டியும் மாத்தி மாத்தி பார்த்தபடி  அருகே இருந்த சேரில் அமர்ந்தால்.,

அவள் அப்பாவோ “உனக்கு ரூம் அங்க ஒதுக்கி இருக்கு.,  போய் அந்த ரூம்ல ரெஸ்ட் எடுத்துக்கோ” என்று சொன்னார்.

         “நான் கொஞ்ச நேரம் கழிச்சு ரெஸ்ட் எடுக்கிறேன்.,  இப்ப எதுக்கு பாட்டி தாத்தா கூட  பேசக்கூடாது ன்றீங்க.,  நான் கொஞ்ச நேரம் பேசிட்டு போறேனே”., என்று வேண்டுமென்றே சொன்னாள்.

      துளசியின் அப்பாவோ ‘எங்கே பிரச்சனை எதுவும் கிளம்பி விடுமோ’ என்ற பயத்தோடு “துளசி ரெஸ்ட் எடு.,  ஹெல்த் இஷ்யூ ஆகிறக்கூடாது.,  இப்பதான் ரொம்ப வருஷங்களுக்கு அப்புறம் வந்திருக்க., ஜெட்லக் இருக்கும்”., என்று சொன்னார்.

         துளசியோ “ரொம்ப இல்லப்பா., ரொம்ப ரொம்ப வருஷம் கழிச்சு வந்து இருக்கேன்”., என்று சொன்னாள்.

      துளசியின் பாட்டியின் தாத்தாவும் விவாதம் செய்து  அவர்களை வினோதமாக பார்த்தனர்., ஏனெனில் இருவருமே சற்று கோபமாக பேசுவது போல தோன்றியது.,

      அதே நேரம் அவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த துளசி அம்மாதான்., “போங்க நீங்க போய் பேசிட்டு இருங்க, நான் வாரேன்” என்று சொன்னார்.

      துளசியின் தாத்தாவிடம்  “மாமா போய் அங்க பேசிட்டு இருங்க, அத்த தான் இங்க இருக்காங்க இல்ல., நானும் இங்கே இருக்கிறேன்” என்று சொன்னார்.

          துளசியின் அப்பா மெச்சுதலான பார்வையோடு அவர்களை அங்கே விட்டுவிட்டு நகர்ந்து சென்றார்.

    துளசியோ யோசனையான மனநிலைக்கு சென்றாள். ‘இவர்கள் ஏதோ நம்மிடம் மறைக்கிறார்கள், அது மட்டுமல்லாமல் நாம் தனியே யாரிடமும் பேசி விடக்கூடாது என்று நினைக்கிறார்களா.,  அல்லது தான் யாரிடமும் உதவி கேட்டு விடுவேனோ என்ற பயத்தில் கூட இப்படி பேசுகிறார்களா’ என்ற எண்ணம் துளசிக்கு தோன்றியது.

யோசனையான மனநிலையில் இருந்தவளுக்கு மனதிற்குள் சிரிப்பும் வந்தது., ‘ கடவுள் தனக்கு தப்பிக்க ஒரு துணை கொடுத்திருக்கிறான் இவர்களை வைத்து எப்படியாவது தப்பித்து விட வேண்டும்’., என்று தோன்றினாலும் சற்றே சந்தேகமும் வந்தது.

     ‘இவர்களுக்குள் வேறு ஏதாவது பிரச்சனையில் நம்மிடம் பேசிவிடக்கூடாது’ அப்பா என்று நினைக்கிறார்களா.,

      தாத்தா பாட்டி ‘இல்லை ஒருவேளை மகனெடுத்த முடிவு தான் சரி என்று நினைத்து தன்னை திருமணத்திற்கு கட்டாயப்படுத்துவார்களா’ என்ற எண்ணமும் தோன்றியது.

    ஆனாலும் இதையெல்லாம் யோசித்துக் கொண்டே பாட்டி இடம் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தாள்.

     பாட்டியின் கைபிடித்தபடி பேசிக் கொண்டிருந்தவளுக்கு பாட்டியின் கையின் அழுத்தமான பிடி அவளுக்கு பாட்டி தனக்கு உதவுவார் என்ற எண்ணம் தோன்றியத

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!