Skip to content
Post Views: 9,520
அவரின் கைகளை அழுத்தமாக பிடித்துக்கொண்டவள் “போக மாட்டேன்” என்றாள் திடமாக , அந்த நேரம் உள்ளே வந்தனர் ஷ்யாமாவும் ராஜீவும்.
அவர்களை பார்த்தவர் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை , ராஜீவ் அவரின் காலை சென்று பிடித்து “மன்னிச்சுடுங்க” என்றான் உண்மையான வருத்தத்தோடு.
அருகில் வர சொல்லி கை காண்பித்தார் ஷ்யாமாவும் கை கூப்பி மன்னிப்பு வேண்ட “வேண்டாம்” என்று தலை அசைத்தார்.
இருவரையும் பார்த்து “பழசை மறந்துடுங்க” என்றார் , மருமகளின் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார் , நிறைவான மனதுடன் வெளியில் வந்தாள் கார்த்தும்பி.
Advertisement
ஜெகனிற்கு தகவல்களை உடனே உடனே மெயிலில் அனுப்பி வைத்தாள் ரூபா , வீட்டிற்கு வந்துவிட்டாள் அவனின் கார்த்தும்பி என்பதே அவனுக்கு அத்தனை நிம்மதியை தந்தது.
அன்று இரவு லேண்ட்லைன் அழைப்பு வர மாதவி தான் எடுத்தார், அனைவரிடமும் பேசினான் , அவளின் குரலை கேட்கத்தான் காத்திருக்கிறான் என்று அனைவருக்கும் தெரியுமே.
அம்முவை அருகில் அழைக்க , ஷ்யாமாவிடம் மறுத்தப்போல இவர்களின் முன் செய்ய முடியாமல் அவரின் அருகில் சென்று வாங்கி கொள்ள அனைவரும் விலகி சென்றனர்.
Advertisement
மறுமுனையில் இப்பொழுது அவள்தான் என்பதை அவனால் உணரமுடிந்தது “தும்பிமா” என்றவனின் அழைப்பு உள் சென்று உயிர்வரை வருடியது.
Advertisement
ஏக்கம் கோபம் வருத்தம் அனைத்தையும் தொண்டையில் இட்டு இறுக்க முகம் எல்லாம் சிவந்துவிட்டது , அப்படியே நின்றிருந்தாள்.
“பேசுடி , ஒரு வார்த்தை பேசு கார்த்தும்பி” என்று அவன் மனதில் சொல்லிக்கொண்டவன் , அவள் அமைதியில் வருந்தினான்.
“லவ் யு…” என்றவன் அழைப்பை துண்டித்தான்.
Advertisement
புல் மேல் வாழும்…
பனி தான் காய்ந்தாலும்…
தலை மேல் தாங்கிய நேரம் கொஞ்சம்…
ஆனால் பொற்காலம்…
உன் அருகாமை…
அதை நான் இழந்தாலும்…
சோ்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு நொடியின்…
நினைவே சந்தோஷம்…
கடல் மூழ்கிய தீவுகளை…
கண் பார்வைகள் அறிவதில்லை…
அது போலே உன்னில் மூழ்கி விட்டேன்…
இளம் வாழை இலை வெட்டி அதை நன்றாக கழுகி அடுப்பில் வாட்டி ரூபா எடுத்துவர , அதை விரித்து வைத்து சூடான சாதம் தேங்காய் இஞ்சி மாங்காய் சேர்த்து அரைத்த துவையல்.
மீன் வறுவல் , ஊறுகாய் கொஞ்சமாக கோவைக்காய் பொரியல் அனைத்தையும் வைத்து நன்றாக கெட்டி , அதை நியூஸ் பேப்பரில் பொதிந்து ஓரமாக வைத்துவிட்டாள் கார்த்தும்பி.
மாமனார் காலை ஆசையாக அவளிடம் கேட்டார் “அம்முக்குட்டி உன் கையாள பொதிச்சோறு சாப்பிடணும்னு ஆசையா இருக்கு” என்க உடனே களத்தில் குதித்து விட்டாள்.
ஆளுக்கு ஒரு வேலைய பட் பட்டென்று செய்ய பதினோரு மணிக்கெல்லாம் பொதிச்சோறு கட்டி வைத்துவிட்டாள் .
உணவு நேரம் அதை திறந்தால் வாட்டிய வாழை இலையோடு உள்ளே இருக்கும் அனைத்தின் மனமும் ஒன்றாக சேர்ந்து தெருவில் போவோரை கூட இழுத்து வந்துவிடும்.
மலையாள மக்களின் ஆஸ்தான உணவு , பயணம் போகையில் முக்கியமாக ரெயில் பயணங்களில் இது இல்லாமல் போகும் மலையாளி குறைவு.
பிள்ளைகள் பள்ளிக்கு கூட இதை கொண்டு செல்வார்கள் , ஆளுக்கு ஒரு பொட்டலமாக எடுத்து வைத்துவிட்டாள்.
ஆயிற்று அவர்கள் வந்து இரண்டு மாதம் ஓடி விட்டது , மெல்ல வீட்டை பழகிக் கொண்டாள் இவர்கள் வந்த அடுத்த நாளே ராஜீவ் மற்றும் ஷ்யாமாவிடம் துரைசெல்வம் தம்பதியர் பேசி விட்டனர்.
“நாங்கள் எங்கள் வீட்டிற்கு போகிறோம் இங்கே இருந்தால் அம்மு அனைத்திற்கும் மாதவியை நாடுவாள் , அவளுடைய வீடு அவள் பொறுப்புகளை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் வராது , பழைய விஷயங்களை யோசித்து அப்படியே இருப்பாள்”.
“அவளை முழு நேரமும் வேறு வேளைகளில் மூழ்கவைக்க வேண்டும், உங்களை பார்த்துக் கொள்ள வேண்டும் , அவள் மாமாவை பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தால் மட்டுமே மற்றதை மறப்பாள் , அதனால் நாங்கள் போகிறோம் என்ன தேவை என்றாலும் ஒரு போன் போடுங்கள் உடனே வந்துவிடுகிறேன்” என்ற மாதவி.
“ரூபாவை அனுப்பி வைக்கிறேன் தினமும் , அவள் இருப்பது அம்முவிற்கு ஒரு துணையாகும்” என்றார்.
அவர்கள் சொல்லுவதும் சரி என்று தோன்ற ஷ்யாமாவும் ஒத்துக்கொண்டார் , இரு தினங்களுக்கு பிறகு அணைத்து பொறுப்புகளையும் அம்முவிடம் ஒப்படைத்து துரைசெல்வம் தம்பதி அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
முதலில் ஒருவாரம் கொஞ்சம் ஏனோ தானோ என்று இருந்த அம்மு மெல்ல மெல்ல தன்னுடைய பழைய சுறுசுறுப்பை பெற்றுவிட்டாள், வீட்டின் தேவைகளை கவனிக்க தொடங்கினாள் பெரியம்மாவையும் அண்ணனையும் கவனிக்க தொடங்கினாள்.
ராஜீவுக்கு முதலில் வேலைகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது, துரைசெல்வத்தின் வழி காட்டுதலில் மெல்ல மெல்ல படித்துக் கொண்டான்.
கிஷோர் இப்பொழுது எல்லாம் முழு நேரமும் இங்கேயே ஏதாவது வேலை செய்துகொண்டிருந்தான் , ராஜீவ் முழு நேரமும் தோப்பிலே இருந்தான்.
மதியம் உனவு கூட பாதி நாள் ரூபா எடுத்து வருவாள் , சில சமயங்களில் அவளுடன் அம்முவும் வருவதுண்டு , ரெம்யா தினமும் அலைபேசி வழி தாயுடன் பேசுவாள் இடையில் அம்முவுடனும் பேசுவதுண்டு.
எல்லோரும் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டு நாட்களை கடத்தினர் , இடையில் ஒரு நாள் தகவல் வந்து சேர்ந்தது பல நாட்களாக அதிகமான மன அழுத்தத்தில் இருந்த சங்கரன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று.
அந்த தகவல் வந்த இரண்டாம் நாள் அச்சுதன் கை கால் வராமல் தளர்ந்து விழுந்ததாக தகவல் வந்து சேர்ந்தது , ராஜீவ் மட்டும் தகவல் அறிந்ததும் சென்றவன் அவரை ஒரு ஹோமில் சேர்த்துவிட்டான்,
உடன் அழைத்து வரவோ பார்த்துக்கொள்ளவோ முடியாது, தன்னால் முடிந்ததை செய்து விட்டு வந்துவிட்டான்.
வீடு புது அழகில் ஜொலித்துக் கொண்டிருந்தது ,எங்கும் பெயிண்ட் மனம் வீட்டையே மாற்றிவிட்டாள் இந்த ஆறு மாதத்தில், அவன் மீது கோபம் பேசுவதில்லை என்று காட்டிக்கொண்டாலும் அவன் வருவதற்குள் ஒவ்வென்றையும் பார்த்து பார்த்து செய்தாள்.
தினமும் ப்ரகாஷிற்கு உணவு ஊட்டுவதை விரும்பியே செய்தாள், பழைய அம்முவாக அவரிடம் கதை பேசி அவரின் மனநிலையைக்கூட மாற்றி விட்டாள்
“மாமா சீதா அம்மாயிக்கு இருட்டு புடிக்கவே புடிக்காது , ஆனா நீங்க இந்த இருட்டுக்குள்ளயே இத்தனை வருஷமா இருக்கீங்க , இங்க அம்மாயி நிச்சயமா இருக்க மாட்டாங்க உங்கள நான் கட்டயாப்படுத்துல”.
“இந்த ரூம்ல ஜன்னல் மட்டுமாவது திறந்து வைக்க நீங்க ஒத்துக்கனும்” என்றபோது அவர் ஒன்றும் பேசவில்லை , அவளும் சென்றுவிட்டாள்.
எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு வாரம் கடந்து செல்ல , ஒரு நாள் காலை உணவோடு அவள் சென்றபோது அறையே வெளிச்சமாக இருந்தது.
“மாமா” என்று அவள் ஆச்சார்யப்பட “என்ன வெளில அழைச்சுட்டு போறியாமா” என்றார் அவளிடம்.
அவரால் நேரே அமர முடியாது கொஞ்சம் படுத்த நிலையில் மட்டுமே இருக்க முடியும் , அதற்க்கு ஏதுவான வண்டி கூட வாங்கி வைத்திருந்தான் ஜெகன்.
பிரகாஷ் அதில் எதிலும் ஆர்வம் காட்டவில்லை , இன்று அவரே கேட்க அவரை பார்த்துக் கொள்ளும் ஆண் நர்ஸ் உதவியுடன் வெளியில் அழைத்து சென்றாள்.
மெல்ல மெல்ல வீட்டின் சூழல் மாற தொடங்கியது மகிழ்ச்சியையும் நிம்மதியையும் தொலைத்து நின்றவர்கள் முகங்களில் இப்பொழுது ஆனந்தம் நிறைந்து நின்றது.
ஜெகனின் வருகையை அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்க்க, ஒரு நாள் காலை துரைசெல்வம் வந்து நின்றார் வீட்டிற்கு , அனைவரும் கூடி நிற்க ஷ்யாமாவை பார்த்தவர் “உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்றார்.
“சொல்லுங்க” என்று அவர் வந்து அமர “ராஜீவோட கல்யாணம் பத்தி பேச வந்திருக்கேன்” என்றார்.
அப்பொழுது வயலுக்கு செல்ல தயாராகி வந்தவன் “அதெல்லாம் எதுவும் வேண்டாம் , கல்யாணம் பண்ண எனக்கு விருப்பம் இல்லை, எனக்கெல்லாம் யாரும் பொன்னும் தர மாட்டாங்க” என்றான் வேகமாக.
“நாம முதல்ல உறவு முறையில ஒரு முடிவுக்கு வருவோம் , அம்மு என்ன அப்பான்னு உரிமையா கூப்புடுறா , உங்களால என்ன உறவா ஏத்துக்க முடியலைன்னா” என்று அவர் முடிக்கும் முன்.
“சொல்லுங்க பெரியப்பா” என்றான் நெகிழ்ச்சியாக.
அனைவர் முகமும் மலர்ந்தது “இப்போ சரி” என்று புன்னகைத்தவர், “இங்க பாருயா உன் கல்யாண விஷயம் பேசுனது நான் இல்லை உன் மச்சான் , நீ வேண்டாம்னு சொல்றதா இருந்தா அவர் கிட்ட பேசிக்கோ” என்க.
அனைவருக்குமே அது ஆச்சர்யமாக இருந்தது “பொண்டாட்டிய தவிர எல்லாரையும் பத்தி ஞாபகம் இருக்கும்” என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டிருந்தாள் அவன் ஆசை மனைவி.
“கல்யாணம் பண்ணாம இருக்க முடியாது , நாங்க யாரும் விடமாட்டோம் , இல்ல… நீங்க என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுனு நெனச்சினா சொல்லிடுப்பா நான் இப்படியே கிளம்புறேன்” என்று அவர் எழுந்துகொள்ள.
“ஐயோ பெரியப்பா கொஞ்சம் இருங்க” என்றவன்.
“எங்க குடும்பத்துல பொண்ண குடுக்க யாரு ஒத்துப்பாங்க , இதுக்கு மேல ஒரு குடும்பம் கேவலப் பட முடியுமா , வேண்டாம் பெரியப்பா நீங்க என் மேல உள்ள அக்கறைல சொல்றீங்க தெரியுது , ஆனா சரியா வராது வேண்டாம்” என்றான் பிடிவாதமாக.
“சரிப்பா எல்லா விஷயமும் தெரிஞ்சு உன்னையும் அனுசரிச்சு போற பொண்ணு கிடைச்சா உனக்கு சம்மதமா” என்க , அனைவரையும் திரும்பி பார்த்தான்.
அவன் தாயின் முகத்தில் பரிதவிப்பு , மகள் கண்காணா தேசத்தில் தனிமையில் கழிக்கிறாள் , மகன் வாழ்வாவது நல்ல முறையில் அமைந்து விடாதா என்ற ஏக்கம் நிறைந்து நின்றது.
அம்முவும் எதிர்பார்ப்போடு அவனை பார்த்திருக்க “அய்ய உங்கள கல்யாணம் தான பண்ண சொன்னாரு அப்பா , என்னமோ நாட்டை காப்பாத்த யுத்தத்துக்கு போக சொன்ன மாதிரி இவ்ளோ யோசிக்கிறீங்க”.
“சம்மதம் சொல்லுங்கண்ணே பட்டு புடவை எல்லாம் வேற எடுக்கணும், மாமா கல்யாணத்துக்கே புடவை எடுத்து குடுக்கமா ஏமாத்திட்டாரு” என்று அவன் அருகில் வந்து நின்றாள் ரூபா.
ராஜீவிடம் சரிக்கு சரி வாயாடினாள் ரூபா , அவன் இங்கு வந்த சில நாட்களிலே அண்ணா அண்ணா என்று நன்றாக ஒட்டிக்கொண்டாள்.
“சரி” என்று சொல்லிவிட்டான் , பெண் கிடைப்பது கஷ்டம் என்று அவன் நினைத்திருக்க அதை விட திருமணம் அவனுக்கு ஒரு வித பயத்தை தந்தது.
மூன்று முறை தோற்றுவிட்ட இடத்தில இனியும் அப்படியே நடந்தால் என்று மனம் சஞ்சலம் கொண்டது , துறைசெல்வம் தீவிரமாக இறங்கிவிட்டார் , கிஷோர் ஒருபக்கம் அவர் ஒரு பக்கம் என்று அறிந்தவர் தெரிந்தவர் அனைவரிடமும் சொல்லி வைத்தனர்.
இடையில் குடும்பத்தோடு வந்து இறங்கினார் ஜெகனின் சித்தப்பா நீலவேணியை ஆசிரமத்தில் சேர்த்துவிட்டதாக சொன்னார்.
“அவங்கள வீட்ல வெச்சுக்க முடியல இப்போ இன்னும் ரொம்ப மோசமா ஆயிட்டாங்க , எப்போவும் எல்லாருக்கும் சாபம் கொடுத்துக்கிட்டு அவங்க சொன்னதை பூரணி செய்யலன்னு அவ மேல ரொம்ப வெறுப்பு”.
“வார்த்தையால எல்லாரையும் கொல்றாங்க , பொறுமையா இருந்து பார்த்தேன் , இதனால எனக்கு பாவம் சேர்ந்தாலும் பரவாயில்ல என் பொண்டாட்டி மன அழுத்தத்துல ஏதாவது பண்ணிப்பாளோணு பயமா இருந்தது , அதனால ஆசிரமத்துல சேர்த்துட்டேன்” என்றார்.
“ஒன்னும் தப்பில்ல வருத்தப்படாத மாப்பிள” என்றார் துரைசெல்வம்.
அப்பொழுதுதான் அங்கிருந்தவர்களுக்கு நீலவேணி அம்முவிற்கு மீண்டும் மருந்து கொடுக்க நினைத்தது தெரிந்தது , ஆனால் அதை அவர் ராஜீவிடம் இருந்து பெற்றார் என்பதை பூரணி யாரிடமும் சொல்லவில்லை.
அவன் நன்றியோடு அவரை பார்த்தான் விழிகள் கலங்கியது , அவர் ஆறுதலாக தலை அசைத்தார் , சித்தப்பாவின் கடனை அடைக்க ஜெகன் ஏற்பாடு செய்திருந்தான் அதற்கான வேலைகளை கிஷோர் பார்த்துக்கொண்டான் பிள்ளைகளும் இருக்க வீடு ஆனந்தத்தில் அதிர்ந்தது.
error: Content is protected !!