Skip to content
Post Views: 12,263
உன் சுவாசம் என் மூச்சில் 23
மறுநாள் விடியலில் இன்னும் எழில்விழி தனது கோவத்தை தொடர கதிரவனும் அவளின் விலகளில் தனது கோவத்தை தொடர்ந்தான். காலை உணவு முடிந்த பின்னும் வேலைக்கு செல்லாமல் டிவி பார்த்துக்கொண்டிருந்த கணவனை கண்டு,
‘ என்ன இன்னைக்கு வீட்டில இருக்காங்க வேலைக்கு போலையா??….’ என எண்ணிக்கொண்டு அதனை நேரடியாக கதிரவனிடம் கேட்காமல் மகனை தூங்க வைத்துவிட்டு மதிய உணவை தயார் செய்யும் பணியை தொடர,
Advertisement
கதிரவனுக்கோ கடுப்பு,
‘ ஒரு மனுஷன் உட்கார்ந்துருக்கானே என்னன்னு கேட்போம்ன்னு இல்லாம அவவாட்டுக்கு அவ வேலைய பார்குறா….’ என மனதில் மனைவியுடன் சண்டை இட்டுக்கொண்டு சிறுது நேரத்தில் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தவளின் அருகில் சென்றவன்,
“ விழி!!…. ” என சற்றே சத்தமாக அழைக்க அந்த அழைப்பில் உர்ரென்ற முகத்துடன் கணவனை நோக்க அவனோ அவளின் முகத்தை கண்டு
Advertisement
“ இங்க என்ன இழவா விழுந்து போச்சு எப்போ பார்த்தாலும் முகத்தை தூக்கி வச்சு அழுதுகிட்டு இருக்க ” என கத்தினான்.
Advertisement
எப்பொழுதும் அவனின் அதீத வார்த்தைகளில் பதறி கலங்குபவள் இன்று,
‘ நீ இன்னைக்கு என்ன பேசணுமோ பேசிக்கோ. என்ன புதுசாவா பேசப்போற ’ என்ற பாவனையுடன் தனது பணியை தொடர,
இருந்தும் அவளை மீறி கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டு இருக்க அதில் மீண்டும் கடுப்பானவன்,
Advertisement
“ வீடான வீட்டில பொம்பள அழுதுகிட்டே இருந்தா விளங்குமா ” என கத்த,
அதற்கும் எதுவும் ஒன்றும் கூறாது இருந்தவளிடம், “ விழி!!!… ” என கத்த அவனின் சத்தத்தில் மீண்டும் அவனை நிமிர்ந்து பார்க்க,
“ பன்னிரண்டு மணிக்கு ஆஸ்பிடலுக்கு போனும் கிளம்பி இரு. எனக்கு வெளிய கொஞ்சம் வேலை இருக்கு போயிட்டு வந்துடுறேன் ” என கூறிவிட்டு நகர பார்க்க
“ எதுக்கு ஆஸ்பிடலுக்கு??… ” என எழில்விழி வாயை திறந்து கேட்க அதில் கடுப்பானவன்
“ ஏன் சொன்னாதான் வருவியா??… ” என பல்லை கடித்துகொண்டு அவனும் கேட்க
“ இல்ல எனக்கு வேலை இருக்கு….. ”
“ என்ன பெரிய புடலங்கா வேலை. வேலைக்கு போற நானே லீவு போட்டு உட்கார்ந்துருக்கேன். உனக்கு என்ன??… ”
“ அப்போ நான் வேலைக்கு போகாம சும்மா உட்கார்ந்துருக்கேன்னு சொல்றிங்களா??… ” என எழில்விழி கத்த முதல் முறை அவள் குரல் உயர்ந்ததில் தனது புருவத்தை சுருக்கி அவளை கூர்மையாக பார்த்தவன்,
“ இங்க பாரு நீ லூசுத்தனமா யோசிக்கிறதுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது கிளம்பி இருன்னா கிளம்பி இரு சரியா. உனக்கு என்ன பண்ணுதுன்னு பார்த்துட்டு வந்துடுவோம் ” என இல்லாத பொறுமையை இழுத்து பிடித்துக்கொண்டு பேசிய கதிரவனிடம்
“ எனக்கு என்ன நான் நல்லாத்தான் இருக்கேன். நேத்து சும்மா உடம்பு சரி இல்லன்னு ட்ராமா பண்ணுனேன்…. ” என குத்தலாக பேசிய எழில்விழியை கண்டு,
“ நீ ட்ராமா போடுறியா இல்லையான்னு பார்க்கத்தான் கூட்டிட்டுப்போறேன் ரெடியா இரு ” என கூறியவனிடம் எழில்விழிக்கு மீண்டும் விரக்தி மனநிலைத்தான் வந்தது.
இப்பொழுதாவது தான் சொன்னதற்கு ஒரு மன்னிப்பாவது கேட்பான் என எண்ணி இருக்க சந்தேகத்திற்காக அழைத்து செல்வதாக கூறியவனிடம் ஒன்றும் பேச தோணாது தனது வேலையை செய்ய அவனும் கடுப்புடன் வெளியே கிளம்பிவிட்டான். ஆனால் மனதில் சூறாவளியாக அவனின் கோவம் சுற்றிக்கொண்டிருந்தது.
‘ ஒரு மனுஷன் கோவமா ஒரு வார்த்தை சொல்லிடகூடாது அதையே பிடிடுச்சு தொங்கிட்டு இருக்குறது. என்ன இப்போ ட்ராமான்னு சொன்னது மகாராணிக்கு கோவம் வந்துடுச்சாக்கும். வரட்டுமே எனக்கு என்ன??… உன் கோவம் ஒன்னும் செய்யாது என்னைய ’ என மனதில் அவளை வறுத்துக்கொண்டிருந்தவன் உணரவில்லை,
யாருடைய கோவம் தன்னைய பாதிக்காது என எண்ணிக்கொண்டிருக்கிறானோ அவளுடைய கோவம்தான் காலையில் இருந்து அவனை வேற எதிலும் சிந்தனையை செலுத்த விடாது செய்துக்கொண்டிருக்கிறது என.
கதிரவன் சொன்னது போல இருவரும் தங்கள் மகனுடன் மருத்துவமனைக்கு செல்ல அங்கு அவளுடைய உடல் நிலை பற்றி சொல்ல, மருத்துவர் சில தகவல்களை பெற்றுக்கொண்டு சில டெஸ்ட் செய்து பார்த்துவிட்டு அவள் ரெண்டாவது முறையாக கரு தரித்திருப்பத்தை கூற கதிரவனும் எழில்விழியும் ஒரு நிமிடம் சந்தோஷத்தில் அதிர்ந்துவிட்டனர்.
காரணம் இருவரும் ரெண்டாவது வரவை எதிர்பார்க்கவில்லை. மேலும் மருத்துவர் இரு மாதம் கரு என கூறி ஸ்கேன் செய்து பார்த்து குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் சில மருந்துகளையும் எழுத்திகொடுத்து விட,
கதிரவன் எழில்விழியிடம் எதுவும் பேசாது மருத்துவாங்க சென்றுவிட எழில்விழி மகனுடன் அமைதியாக அங்கு வெளியில் இருந்த நாற்காலியில் அமர சிறுது நேரத்தில் மருந்துடன் வந்தவன்,
“ விழி வெளிய பக்கத்துல ஒரு சைவ ஹோட்டல் இருக்கு சாப்பிட்டு போலாம் ” என கூற ஏற்கனவே யோசனையில் இருந்தவள்
“ இல்லங்க வீட்டுலதான் சமைச்சுட்டேன்ல அங்கையே சாப்டுக்கலாம் ” என எழில்விழி மறுக்க
“ ம்ப்ச் விழி இப்போவே மணி மூணு கண்ணாவுக்கும் பசிக்கும் சாப்பிட்டு போலாம். ராத்திரிக்கு அதை சூடுபடுத்தி சாப்டுக்கலாம் வா ” என கதிரவன் எழில்விழியை ஹோட்டலுக்கு அழைத்து சென்றான்.
ஹோட்டலில் மகனுக்கு சாப்பாட்டை ஊட்டிவிட்டு அவளும் சாப்பிட மெதுவாக கதிரவன்,
“ விழி இந்த குழந்தையை சேர்த்து வளர்த்துடலாம்ல. உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே. அதுவும் கண்ணாவுக்கு ரெண்டு வயசு தான் ஆகுது…. ” என தயங்கிய கணவனின் குரலில் அதிர்ந்து,
‘ என்னடா இவருக்கு இப்படி எல்லாம் தயக்கமா கூட பேச வருமா ’ என எண்ணிகொண்டு
“ என்ன பிரச்சனை வர போகுது அது எல்லாம் ஒன்னும் இல்லைங்க. கண்ணாதான் நல்லா பேச நடக்க ஆரம்பிச்சுட்டான்ல அது எல்லாம் வளர்த்துடலாம் ” என எழில்விழி கூற
“ வேணும்ன்னா துணைக்கு உங்க அம்மாவை கூப்டுக்கோ. ஹ்ம்ம் அடுத்த குழந்தைபத்தி யோசிக்கவே இல்ல. நீயாவாது உனக்கு இப்படி இருக்குமான்னு சொல்லிருக்கலாம்ல. அத விட்டுட்டு உடம்பு முடியல என்னமோ பண்ணுதுன்னு சொல்லிக்கிட்டு இருந்த ” என கதிரவன் லேசாக கடிய
“ நான் என்ன சொன்னா என்ன??… ட்ராமான்னு தான் சொல்லிட்டீங்கல்ல. இதே குழந்தையா இல்லாட்டா நீங்க நம்பிருப்பிங்களா??… ” என மனதில் அவன் மீது இருந்த கோவத்தில் கேட்டுவிட
“ உன்னைய நம்பாம்மா யாரை நம்ப போறேன் உனக்கு முடியலைன்னு சொன்னதாலதானே ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டுவந்தேன் ” என கதிரவன் அலட்டிக்கொள்ளாமல் பேச
“ என் மேல நம்பிக்கையா இருக்குறவங்கதான் முடியலன்னு சொன்னா ட்ராமான்னு சொல்லுவாங்களா??… ” என ஆதங்கமாக பேச
“ ஆமா சொன்னே கோவத்துல தான் சொன்னேனே தவிர்த்து மனசார சொல்லல நான் ”
“ சரி அதுக்காக ஒரு மன்னிப்பாது கேட்டிங்களா??… ”
“ மன்னிப்பா??…. எதுக்கு மன்னிப்பு??… ஆமா அது என்ன எப்போ நான் சண்டை போட்டாலும் மன்னிப்பு கேட்டியா மன்னிப்பு கேட்டியான்னு கேட்குற நமக்குள்ள எதுக்கு மன்னிப்பு நன்றி எல்லாம் ” என கதிரவன் கேட்க
இந்த கேள்விக்கு என்ன பதில் பேசுவது என தெரியாது எழில்விழி முழித்துக்கொண்டிருக்க,
“ ஹ்ம்ம் சொல்லு விழி நான் எதுக்கு மன்னிப்பு கேட்கணும். ஆமா நேத்து உன்னைய நோகடிக்குறமாதிரி பேசுனேன்னு எனக்கு தெரியும். அதுக்கு உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்கணுமா??… நீ யாரு எனக்கு???… என் பொண்டாட்டிதானே. என் கண்ணு காது மாதிரி நீ எனக்கு ஒரு அங்கம் அப்படி இருக்கிறப்போ நான் எதுக்கு உன்கிட்ட மன்னிப்பு கேட்கணும் ” என கதிரவன் கேட்டுக்கொண்டே சாப்பிட
அவனின் பதிலில் எழில்விழிதான் உணவு வாயில் இறங்காது முழித்துக்கொண்டிருந்தாள். அதனை கண்டு,
“ என்ன சும்மா சும்மா முழிக்குற??… ” என கதிரவன் கேட்க
“ இல்ல நீங்க…. நீங்க…. என்கிட்ட வருத்தமாவது தெரிவிச்சுருக்கலாம் இல்ல. நான் கோவமா இருக்கேன்னு உங்களுக்கு தெரியுதுல. என்கிட்டே சமாதானமாவது பேசினீங்களா??…. உங்களுக்கு இவ எல்லாம் ஒரு ஆளு இவகிட்ட நாம இறங்கி போறதான்னு தானே எண்ணம். அதான் நான் எப்போ கோவப்பட்டாலும் கண்டுக்க மாட்டேங்குறீங்க ” என மனதில் பட்டதை எழில்விழி பேச
“ கிறுக்காடி நீ??… நான் உன்னைய பேசுனதுக்கு வருத்தப்பட்டாலும், நான் எதுக்கு வருத்தப்படுறேன்னு உன்கிட்ட சொல்லணும். அடுத்த முறை நீ வருத்தப்படாத மாதிரி நான் நடந்துக்கணும். அதைவிட்டு உன்கிட்ட மன்னிப்பு வருத்தம் தெரிவிச்சா நீ எனக்கு யாரோ மாதிரி தானே??… ” என கதிரவன் கேட்க அவனின் பதிலில்,
‘ நாமதான் தப்ப யோசிக்குறோமோ??… ’ என எழில்விழி எண்ணிக்கொண்டிருக்க
“ அப்புறம் என்ன சொன்ன சமாதானமா??… எதுக்கு??… ஏன் உனக்கு என்னைய தெரியாதா??.. நான் என்ன உன்னைய அடிச்சு கொடுமை படுத்துறேனா இல்ல தண்ணிய போட்டு தப்பா பேசுறேனா இல்ல உன்னையவிட்டு எவகூடவாது சுத்துறேனா இல்லைதானே.
எப்போ எனக்கு ரெஸ்ட் கிடைச்சாலும் வீட்டுக்குத்தான் வரேன். இல்ல பிரென்ட் வீட்டுக்கு இல்ல வேற எங்கயாவது போறேன்னா??… அப்பிடி இருக்குறப்போ உன் புருஷன் ஒரு ரெண்டுவார்த்தை கூட பேசிட்டா கோச்சுக்குவ. என் அணைப்பில இருந்து என் கையை தள்ளிவிடுவியா??… ” என கேட்ட கணவனை கண்டு,
‘ நாமதான் தப்பு போல ’ என்ற முடிவுக்கே வந்துவிட்டாள் எழில்விழி.
இருந்தாலும் நேற்று இருந்த மனவலி காரணமாக மெதுவாக கதிரவனிடம்,
“ இல்லங்க இருந்தாலும் நீங்க கோவத்துல பேசும்போது மனசு வலிக்குதுங்க ” என கலங்கிய கண்களுடன் பேசியவளை கண்டு
“ என்ன இப்போ வலிக்குதுன்னா நான் உன்கிட்ட பேசாமலே இருந்துடவா??.. ” என கடுப்புடன் கதிரவன் கேட்க
“ எனக்காக கோவத்தை குறைச்சுக்கலாம்லங்க ”
“ எதுக்கு??.. ”
“ என்ன எதுக்குன்னா??… உங்களுக்காக நான் நிறைய விஷயங்களை மாத்திருக்கேனே. ”
“ ஹ்ம்ம் மாத்திருக்க. உன்னோட பழக்கவழக்கங்களைத்தானே. ஆனா நீ என்னைய என் குணத்தை மாத்த சொல்லுற அது எப்பிடி மாத்த முடியும். நான் நானா இருந்தாதானே இந்த கல்யாண வாழ்க்கைல சந்தோசமா இருக்க முடியும். நீ எனக்காக உன் விருப்பு வெறுப்ப விட்டுறப்ப உன் குணத்தை மாத்திக்கிட்டியா??… ஏன் உன்னோட இந்த கண்ணீரை மாத்த முடியுமா?… இல்ல எதுக்குன்னே தெரியாம எதுக்காவது கவலை படுவியே அதை மாத்த முடியுமா??… அது மாதிரித்தான் என்னோட கோவமும் ” என கதிரவன் கூறி நிறுத்தி எழில்விழியின் விழிகளை காண,
அதுவரை கணவனின் பேச்சில் இருந்து,
‘ இந்த ஜென்மத்துல நாம ஒன்னும் செய்யமுடியாது. இவரை பேசி ஜெய்க்கவும் முடியாது ’ என புரிந்துகொண்டவள் கதிரவனிடம்
“ என்னங்க கண்ணாவுக்கு தூக்கம் வருது வீட்டுக்கு போவோம்ங்க ” என எழில்விழி கூற அடுத்து பணத்தை கட்டிவிட்டு வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டிற்கு வந்து வண்டியை கதிரவன் நிறுத்தி வண்டியின் முன் அமர்ந்து உறங்கிக்கொண்டிருந்த கண்ணாவையும் எழில்விழியிடம் குடுத்து,
“ தூங்கிட்டு இருக்கான் பிடி இவனை ” என கதிரவன் கூற எழில்விழியும் மகனை தூக்கிக்கொண்டு வீட்டிற்குள் செல்ல வாசலில் அங்கு தெய்வானை பெரிய பையை வைத்துக்கொண்டு கதிரவனையும் எழில்விழியையும் முறைத்துக்கொண்டிருந்தார்.
அவரை கண்டு அதிர்ந்து,
“ அத்தை!!.. வாங்க அத்தை. எப்போ வந்திங்க??… ” என கேட்டுக்கொண்டு கதவை சாவி கொண்டு திறக்க
“ ஹ்ம்ம் ஆமா வந்தவளை வாசல்லயே உட்காரவச்சுட்டு இப்போ வந்து கேளு எப்போ வந்திங்க எதுக்கு வந்திங்கன்னு ” என தெய்வானை கடுகடுக்க
“ ஹ்ம்ம் நீ வரேன்னு சொல்லிட்டு வந்திருந்தா எதுக்கு வாசல்ல காவல் காக்க போற. ஒரு போன் போட்டு இன்னைக்கு வரேன்னு சொல்லவேண்டியதுதானே ” என தெய்வானையை கதிரவன் கூறிக்கொண்டே தெய்வானையின் பையை தூக்கிக்கொண்டு எழில்விழியிடம்,
“ என்ன நிக்குற போ போய் அவனை தூங்க வை ” என கூறிக்கொண்டே தெய்வானையிடம்,
“ உள்ள வாம்மா ” என வீட்டினுள் நுழைந்தான்.
எழில்விழிக்கு மனதோ மிகவும் சந்தோசமாக இருந்தது. மறுமுறை கருத்தரித்திருப்பது அதுவும் இம்முறை பெண் குழந்தை வேணும்ன்ற ஆசையும், நேற்றைய சண்டை முடிந்து கணவனுடன் சமாதானம் ஆனதும் அவனை பற்றிய புரிதலும் பெண்ணிற்கு மனம் முழுதும் மகிழ்ச்சியே!!….
அறைக்கு சென்று பிள்ளையை உறங்க வைத்தவள் கண்ணாடியில்,
“ அடியே எழிலு இப்படி பேசி பேசி உன் புருஷனை புருச்சுக்குற வழிய பாரு ” என கூற அவளின் மனசாட்சியோ
“ ஆமா நீ அப்டியே அவரை புரிஞ்சுக்கிட்டாலும். அவரு என்ன பண்ணுனாலும் மண்டைய ஆட்டிட்டு போனும் அதானே நீ உன் புருஷனை புருஞ்சுகிட்ட லட்சணம் ” என அவளை பேச
“ உன் வேலைய பாரு. அவரு என்னையதானே பேசுறாரு உனக்கு என்ன. காதல்ல மானம் சூடு சொரணையே இருக்ககூடாது. அவரு என்னையதானே பேசுவாரு. பேசிட்டு போறாரு போ. அவரு சொல்லறதும் நியாம்தானே திடீர்ன்னு போய் உங்க கோவத்தை குறைங்கன்னா என்ன செய்வாரு ” என கணவனுக்காக தனது மனசாட்சியிடமே வக்காலத்து வாங்கியவளை கண்டு அவளின் மனசாட்சியோ,
உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
உன்னைச் சொல்லி குற்றமில்லை
என்னைச் சொல்லி குற்றமில்லை
காலம் செய்த கோலமடி
கடவுள் செய்த குற்றமடி
கடவுள் செய்த குற்றமடி
பாடிக்கொண்டு மறைந்துவிட தெய்வானைக்கு குடிக்க ஜூஸ் தயாரிக்க சென்றுவிட்டாள் எழில்விழி.
சிறுது நேரத்தில் எழில்விழியும் ஜூஸ் கொண்டு வந்து கூடத்தில் அமர்ந்திருந்த தெய்வானையிடம் குடுக்க அவரும் குடித்துவிட்டு,
“ நீ ஒன்னும் பன்றது சரி இல்லடா உன் பொண்டாட்டிய ஒன்னு சொல்ல விட மாட்டேங்குற ” என தெய்வானை கத்த
“ ஏம்மா அவ கையாலேயே ஜுஸை குடிச்சுட்டு அவளையே தெம்பா திட்டுறபார்த்தியா அங்க நிக்குற நீ ” என கதிரவன் கூற
அதில் தெய்வானை கதிரவனை முறைத்துக்கொண்டு,
“ ஆமா எங்க போய் ஊரை சுத்திட்டு வரீங்க புருசனும் பொண்டாட்டியும் ” என கேட்க
“ இதை கேட்கத்தான் ஊருல இருந்து கிளம்பி வந்து வாசலையே இருந்தியாக்கும் ” என கதிரவன் கேட்க
“ சும்மா என்னைய மழுப்பாம எங்க போயிட்டு வந்திங்க சொல்லுங்க??… ” என தெய்வானை மீண்டும் கேட்க
“ நீ சொல்லுமா முதல்ல என்ன விஷயமா வந்துருக்கன்னு ”
“ ஏன் என் மகன் வீட்டுக்கு எதாவது விஷயம் இருந்தாதான் வரணுமா??… ” என தெய்வானை கேட்க
“ நீ அப்படித்தானே வருவ. இல்லைனா உன் மூத்த மருமகளை விட்டு உன்னால நகர முடியுமா??… ” என கதிரவனும் நக்கலாக பேச,
அதில் கடுப்படைந்தவர் ஒன்றும் கூறாது மிச்சம் இருந்த ஜூஸை குடித்துவிட்டு,
“ உன் மாமா இருக்காருல…. ” என தெய்வானை ஆரம்பிக்க
“ யாரு??…. ” என கதிரவன் இடையில் கேள்வி கேட்க
“ டேய்!!!… நீ பன்றது ஒன்னும் சரி இல்லடா ”
“ என்னம்மா யாருன்னு தானே கேட்டேன் ”
“ ஏன் உனக்கு மாமான்னா யாருன்னு தெரியாதா??.. என் அண்ணன் காளிங்கன் உனக்கு மாமாதான இல்ல மறந்துடுச்சா??… ” என கோவமாக தெய்வானை பேச
“ ஹ்ம்ம் நியாபகம் இருக்கு சொல்லுமா என்ன அவருக்கு??… ”
“ அவருக்கு ஒன்னும் இல்ல அவரு வீட்டை கட்டிமுடிச்சுட்டாரு. கிரகப்பிரவேசம் வச்சுருக்காரு. அதான் பத்திரிக்கை வைக்க வந்துருக்கேன் ”
“ ஏன் அதை உன் அண்ணன் வைக்க மாட்டாறாமா ”
“ அவருக்கு வேலை அதிகம்டா ”
“ ஓ!!.. அப்போ எனக்கு வேலை இருக்கு நான் வரமுடியாது ” என கதிரவன் கூற
“ டேய்!!… என்ன செஞ்சுபுட்டாருன்னு அவரு உறவையே தள்ளி வைக்குற. நீதான் உன் பொண்டாட்டி வளைகாப்பு பிள்ளை பிறந்ததுன்னு எதுவும் சொல்லல. அவரு கூப்டாலும் வர மாட்டியா??… அப்படி என்னடா பெரிய தப்ப பண்ணிட்டாரு என் அண்ணன் ” என தன் அண்ணனுக்காக தன்னிடம் சண்டைக்கு வந்த அன்னையை கண்டு
“ என் பொண்டாட்டியை என் மாமனார் மாமியாரை பேசுனா தப்புதான். என் பொண்டாட்டிய மதிக்கலைன்னா எனக்கு அந்த சொந்தம் தேவை இல்ல ” என கதிரவன் பேச
“ அப்போ உன் பொண்டாட்டிய நான் பேசுனாலும் என்னைய ஒதுக்கி வச்சுருவியா??… ”
“ உங்களுக்கு உங்க மகன் தேவை இல்லனா தாராளமா எனக்கு பிடிக்காததை பேசலாம் ” என கதிரவன் பேசிக்கொண்டிருக்க
எழில்விழி கதிரவனின் பேச்சில்,
‘ அடியே எழிலு!!… இவரை பார்த்தா உன்னைய புருஞ்சுகள கஷ்டப்படுத்துறாருன்னு சொல்லிக்கிட்டு இருந்த. போடி இவளே இவரை மாதிரி புருஷன் கிடைக்க குடுத்துவச்சுருக்கணும் ’ என மனதில் மகிழ்ந்து கொண்டிருந்தாள்.
கதிரவனின் பேச்சில் ஒன்றும் கூறாது அமைதியாக தெய்வானை பேரனின் அருகில் சென்று படுத்துக்கொள்ள. எழில்விழி மெதுவாக கதிரவனின் அருகில் சென்று,
“ என்னங்க அத்தைக்காக வேணும்ன்னா போய்ட்டுவாங்களே ” என மெதுவாக கூற அவளை உறுத்து விழித்தவன்
“ யாருக்காகவும் என் முடிவை மாத்திக்க மாட்டேன். போ போய் நீயும் கொஞ்சம் நேரம் ஓய்வெடு. உள்ள இருக்குற என் சின்ன மகன் ரொம்ப சோர்வாயிருக்க போறான் ” என கூறி கதிரவன் வெளியே சென்றுவிட
“ என்னது சின்ன மகனா??… ஏன் சின்ன மகளா இருக்காதாமா??.. ” என எண்ணிக்கொண்டிருக்கையில் மனதில் ஏதோ ஒரு படபடப்பு வர என்னது என புரியாது அதனை தள்ளி வைத்துவிட்டு அவளும் உறங்க சென்றுவிட்டாள்.
மனம் முழுதும் கணவனை நினைத்து மகிழ்ச்சியே. மனைவியின் மரியாதையை காப்பவனுக்கு காதல் இல்லாமலா இருக்கும் அவளின் காதல் மனம் குதூகலித்து கணவனின் சொல்லாத காதலை உணர்ந்ததால்.
அவள் அவன் காதல் நெஞ்சில்
கண்டாலே சிறு குற்றம்……
அவன் நெஞ்சம் தாய்பால் போலே
என்னாளும் பரிசுத்தம்
ஆத்திரம் நேத்திரம் மூட
பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள்
ஆக மொத்தம் அவசரக் கோலம் ஓ….
அவளுக்கிதை காட்டிடும் காலம்…
மருதாணி.. மருதாணி..
மருதாணி.. விழியில் ஏன்
அடி போடி.. தீபாளி
error: Content is protected !!