ராகம் -15.2
மகேஷ் அதிரிடம் அன்றைய நிலவரத்தை விளக்க பொறுமையாக கேட்டு முடித்தவன் அவன் எதிரே நின்றிருந்த விஷ்ணுவிடம்,
‘தினமும் நைட் எத்தனை மணிக்கு தூங்குவ..??’ என்றான்.
‘ரெண்டு மணிக்கு சார்’ என்று அவனும் ஏதோ நியாபகத்தில் உளற,
‘அவ்ளோ நேரம் படிப்பியா..??’ என்று அதிர் ஆச்சர்யமாக புருவம் உயர்த்திட,
Advertisement
‘ச்சை சை அதெல்லாம் யார்..’ என்று ஆரம்பித்தவன் யாழி சின்ஷான் டோரிமான் பார்க்கும் நேரம் இவன் அவள் வீடியோக்களை எடிட் செய்வான் என்ற உண்மையை எப்படி அவனிடம் கூற முடியும் அதனால் சுதாரித்து, ‘அய்யோ அப்படி இல்ல சார் நா.. நா…’
‘ஹ்ம்ம் நீ.. அடுத்து என்ன சொல்லு..??’ என்றவனின் பார்வையே அவனை துளையிட விஷ்ணு பதிலளிக்காமல் நின்றான்.
‘பைன்’ என்று ஒரு பார்வையை அவன் மீது வீசியவன் தன் எதிரே அமர்ந்திருந்த மகேஷிடம், ‘சரி நீங்க ஒன்னு பண்ணுங்க மாமா நாளையில இருந்து இல்லல இன்னையில இருந்து ஐ மீன் இப்போ இருந்தே இவனையும் நம்ம பேக்டரில சேர்த்துடுங்க…” என்று கூற,
Advertisement
‘மாப்..பிள்..ளை’
Advertisement
‘காலேஜ் போயிட்டு வந்து நைட் ஷிப்ட் பார்க்கட்டும்’ என்றவன் விஷ்ணுவிடம்,
“இனி காலேஜ் முடிஞ்சு சாயங்காலம் 5 மணில இருந்து நைட் 12 மணி வரை உனக்கு வேலை அதுக்கு அப்புறம் இங்கேயே லேபர்ஸ்க்கு படுக்க ரூம் இருக்கும் தூங்கிட்டு காலைல ஆறு மணிக்கெலாம் எந்திரிச்சி வீட்டுக்கு போய் ரெப்ரெஷ் ஆகிட்டு அப்புறம் காலேஜ் போகணும் புரிஞ்சதா..??” என்றவன் மகேஷ் புறம் திரும்பி,
“இனி லோடிங் அன்லோடிங் எத்தனை டன் கணக்கு பார்த்து சரக்கை ஏற்றி சேர்ந்துடுச்சான்னு பாலோ அப் பண்ணி, பணம் ஜிபே, கேஷ், நெட்பான்கிங்ன்னு மோட் ஆப் ட்ரான்சாக்ஷன் பிரிச்சி கணக்கு எழுதறது எப்படின்னு கத்து கொடுங்க மாமா அதுக்கு முன்ன ரெண்டு வாரம் கிரவுண்ட் வெர்க்ல விடுங்க” என்றான்.
Advertisement
திகைப்புடன் ‘மாப்பி..ள்ளை’ என்றவருக்கு அடிமட்ட வேலைகளை தன் மகன் தாங்குவானா..?? என்ற அச்சத்தில் பதறி போனது.
“ஆமா மாமா ரெண்டு வாரம் பாலிஷிங்ல விடுங்க அப்புறம் ட்ரெயின் பண்ணி எப்படி பண்றான்னு பார்த்துட்டு ஜெகன் இடத்துக்கு இவனை பிளேஸ் பண்ணிடலாம்” என்றிட,
அது நேரம் வரை அமைதியாக நின்றிருந்த விஷ்ணு, ” நீங்க சொல்லி நான் செய்வேன்னு எப்படி சார் எதிர்பார்க்கிறீங்க.., என்னால முடியாது” என்று கூற அதிரனின் புருவம் ஏறி இறங்கியது.
“என்னை காப்பாத்தினதாலயோ இல்ல எங்க வீட்டு மாப்பிள்ளையா வரபோறதாலயோ நீங்க சொல்லி நான் கேட்கணும்ன்னு எந்த அவசியமும் இல்ல.., அதோட நான் என்ன பண்ணனும்ன்னு எனக்கு தெரியும் அதை நீங்க முடிவு பண்ண கூடாது ” என்றான்.
மகனின் அதிக பிரசங்கித்தனமான பேச்சில் ‘விஷ்ணு’ என்ற அதட்டல் மகேஷிடம்.
விஷ்ணு குறையாத ஆதங்கத்தோடு நிற்க,
‘அவர் நம்ம வீட்டு மாப்பிள்ளை இப்படி தான் மரியாதை இல்லாம பேசுவியா..?? முதல்ல சாரி கேளு’
‘ப்பா என்னப்பா இது..?? யாழியை காப்பாத்தினதுக்கு தேங்க்ஸ் சொல்ல வந்த இடத்துல இவரா என் வாழ்க்கையை முடிவு பண்ணுவாரா..??’
‘விஷ்ணு இங்க ஆள் பற்றாக்குறை ஆர்டர்ஸ் குறிச்ச தேதியில் அனுப்ப வேண்டிய கட்டாயம் நீ காலேஜ் முடிச்சிட்டு ப்ரீ டைம்ல தானே செய்ய போற அப்புறம் என்ன..??’
‘முடியாதுப்பா’ என்று உறுதியாக மறுத்தவன் அதே கோபத்தோடு அங்கிருந்து கிளம்ப,
‘மாப்பிள்ளை.. அவனுக்கு நான் புரியவைக்கிறேன்’ என்று அதிரனை பார்க்க,
அவனோ வசீகர புன்னகையுடன் செல்லும் விஷ்ணுவையே பார்த்து கொண்டிருந்தவன், ‘நீங்க கஷ்டப்பட வேண்டாம் இதை நான் டீல் பண்ணிக்கிறேன் மாமா’ என்று கண் மூடி திறந்தான்.
************************************************
அடுத்த நாள் நிச்சயத்திற்கு மகேஸ்வரனின் வீடே சொந்தங்களால் நிறைந்திருக்க நல்ல நேரத்தில் சுந்தரலிங்கத்தின் குடும்பம் வந்து சேர்ந்தது.
தன் அறையில் இருந்து ஹாலை பார்த்தவாறு ஒரு செல்போனை பிக்ஸ் செய்து விஷ்ணு, அதியும் யாழியும் முதல் முறை நிச்சயத்தில் சந்திக்கும் தருணத்தை காண்டிட் புகைப்படமாக மாற்ற காத்திருந்தான்.
ஆனால் அதியின் மொத்த சொந்தமும் வந்து விட்ட நிலையில் மாப்பிள்ளையை மட்டும் காணவில்லை…
‘டேய் விஷ்ணு எங்கடா அவர்..??’ என்று அலங்காரத்தை திருத்தி கொண்டே யாழி வெளியில் எட்டி பார்க்க,
‘தெரியலையேடி எல்லாரும் இருக்காங்க அவரை மட்டும் காணோம்’ என்று கூற யாழியின் முகம் சுணங்கியது..,
பின்னே அதிக்கு தெரியாமல் அவள் நிச்சயத்தை அவள் சேனலில் லைவ் டெலிகாஸ்ட் செய்ய வேண்டும், இருவருக்குமான தருணங்களை இயல்பாக (candid pictures)படம் பிடித்து அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றி லைக்ஸ் குவிக்க வேண்டும், இருவரின் ஜோடி பொருத்தத்தை ஊரே வியந்து பாராட்ட வேண்டும் .., அவர்கள் தான் ட்ரெண்டிங்கில் இருக்க வேண்டும் என்று இன்றைய நாளை குறித்து எத்தனை கனவு கண்டு கொண்டிருந்தாள்..,
அதற்காக நேற்று பலரது நிச்சய வீடியோக்களை எடுத்து கண்ணாடி முன் நின்று ப்ராக்டிஸ் செய்து கொண்டிருந்தாள் ஆனால் இப்போது மாப்பிள்ளையே இல்லை என்றால் அவள் எதை எடுப்பது..?? எதை போடுவது..??
எத்தனை கனவுகளோடு இருந்த யாழியின் முகத்தை கண்ட விஷ்ணுவிற்கு மனம் நைந்து போனது..,
“இருடி என்னன்னு பார்த்துட்டு வரேன்” என்று வெளியில் குழந்தையோடு நின்று கொண்டிருந்த ப்ரித்வியிடம் சென்று, ‘பாஸ் எங்க மாப்பிள்ளையை காணோம் உங்க அண்ணா எப்போ வருவார்..??’ என்று கேட்க,
‘அண்ணா வரல விஷ்ணு’
‘என்னது ..??’
‘ஆமா முக்கியமான வேலையா வெளியூர் போயிருக்கார்’
‘என்ன சொல்றீங்க..??’ என்று விஷ்ணு அதிர்ந்து நிற்க ப்ரித்வியோ அவன் தந்தை அழைக்கவும் அவரிடம் சென்றான்.
“என்ன இது..?? எதனால் வரவில்லை” என்று அதிர்ச்சியில் இருந்து மீண்ட விஷ்ணுவிற்கு ஒருவேளை நேற்று அவனை எடுத்தெறிந்து பேசியதால் வரவில்லையோ என்ற எண்ணம் எழுந்து யோசனையில் ஆழ்ந்திட,
இறுதியில் அவனை பற்றி நன்கு அறிந்திருந்தவன் ‘அப்படி தான் இருக்க வேண்டும்’ என்ற முடிவிற்கு வந்திருந்தான்.
பின்னே அன்று கோவிலில் விஷ்ணு அவனை மரியாதை இல்லாமல் பேசியதற்கு தானே மூக்கை உடைத்தான் ஆனால் நேற்று ஒரு வேகத்தில் கோபத்தில் அத்தனை தூரம் எடுத்தெறிந்து பேசியும் அமைதியாக ஏன் இருந்தான்..? என்று இப்போது புரிந்தது..,
‘கூடவே இரவு முழுக்க யாழியின் நிச்சயம் மற்றும் கல்யாண கனவுகளை கேட்டவனுக்கு எங்கே அன்று அவள் உயிருக்கு அவனே எமனாகியது போல இன்று அவள் ஆசைக்கும் அவனே தடையாகி போவானோ..??’ என்ற அச்சம் எழ உடனே அதிர்துடியனுக்கு அழைத்து விட்டான்.
‘சார் ஏன் நிச்சயத்துக்கு வரலை’
‘நிச்சயமா யாருக்கு..??’ என்றான் அதிர்.
என்ன கேள்வி இது..?? என்று நினைத்தவன், ‘என்ன சார் பேசுறீங்க உங்க நிச்சயத்துக்கு நீங்களே வரலைன்னா எப்படி..??’
சில நொடிகளுக்கு பின், “அப்படியா..?? நான் எதுவும் சொல்லலையே அப்புறம் யாரை கேட்டு நிச்சயம் பண்றாங்க முதல்ல நிறுத்த சொல்லு” என்று அதிர் அவனுக்கு கட்டளையிட,
‘என்ன சார் விளையாடுறீங்களா..?? உங்களுக்கு தெரியாம எப்படி இருக்கும்..??’
‘சரி எனக்கு தெரிஞ்சே தான் வந்திருக்காங்க.., இப்போ அதுக்கு என்ன பண்ணலாம்..??’ என்றான் விட்டேர்த்தியான குரலில்.
‘என்ன பண்ணலாமா..??’ என்று திகைத்தவனுக்கு ‘என்ன பதில் சொல்வது’ என்று புரியாத அளவு மூளை ஸ்தம்பித்து போனது.
**********************************
