Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Viswakarma

Viswakarma 15

15

 

காலையில் திருமணம் முடிந்து மாலையில் ரிசப்ஷனில் நின்றிருந்தனர் அமுதனும் ரேகாவும்.

 



Advertisement

ரேகா புது மணப்பெண்ணுக்கு உரிய எந்த பொலிவும் இல்லாமல் கடமையாய் நின்றிருந்தாள். மனதை அடைக்கும் உணர்வு அவளுக்கு. கண்கள் எந்நேரமும் கசிந்துவிடுவேன் என்றிருந்தது அவளுக்கு.

 

“எதுக்கு இப்படி இருக்கே?? முகத்தை ஒழுங்கா வைச்சுக்கோ??” என்றான் அமுதன்.

Advertisement

 

Advertisement

“என்னால அப்படிலாம் இருக்க முடியாது…”

 

“இப்போ என்ன பிரச்சனை உனக்கு??”

Advertisement

 

“எப்படி உங்களால இப்படி பேச முடியுது?? எனக்கு எவ்வளோ அசிங்கமா இருக்கு தெரியுமா… உலகத்திலேயே அவங்க தம்பி தான் ரொம்ப நல்லவர் அப்படிங்கற மாதிரி உங்கக்கா பில்டப் கொடுக்கறாங்க…”

 

“உங்களுக்கு வேற பொண்ணு பார்க்கறேன்னு சொல்றாங்க, எதுக்கு இந்த நடிப்பெல்லாம்??”

 

“எங்க அக்கா தான் நடிச்சா சரி. உங்க வீட்டில என்ன செஞ்சாங்க??” என்று அவன் திருப்பிக் கொடுக்க கூனிக்குறுகிப் போனாள் அவள். அவள் தடுத்து நிறுத்த முயன்றும் கண்ணீர் வழிந்தே விட்டது கண்ணில் இருந்து.

“எப்போ எதுக்கு அழறே??”

 

“எல்லாம் உங்களால் தான்… நான் இந்த கல்யாணத்துக்கு சரின்னே சொல்லியிருக்க கூடாது…”

 

“நமக்கு இதெல்லாம் முன்னாடியே தெரியும் தானே…”

 

“அதுக்குன்னு நான் தான் அசிங்கப்படணுமா??”

 

“நீ மட்டுமா அசிங்கப்பட்டே??”

 

“உங்களை யாரு கேள்வி கேட்டாங்க??”

 

“பார்க்கப் போனா உன்னைக் கூடத்தான் யாரும் கேள்வி கேட்கலை… என்னையாச்சும் மாமா அவ்வளோ திட்டினாங்க… உன்னை யாரு என்ன சொன்னாங்க…”

 

“உங்க அக்கா தான், வார்த்தையால சொல்லலனாலும் அவங்க பார்வையே சொல்லுதே… இதுல பில்டப் வேற தம்பிக்கு…”

 

“மறுபடியும் அதே கதைக்கு வராதே… எங்கக்கா சொன்னா உங்க வீட்டு ஆளுங்க ஏன் உன்னை எனக்கு கட்டிக் கொடுக்கணும்ன்னு பிரியப்படுறாங்க…”

 

இந்த முறை அவளுக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. ஊரில் அவளுக்கு எந்த மாப்பிள்ளையுமே கிடைக்க மாட்டான் என்பது போல அவள் வீட்டினரும் தான் அவ்வளவு அவசரம் காட்டியிருக்க தேவையில்லை தானே.

கண்ணீர் நிற்காமல் வழிந்தோட அதை அவள் துடைக்க துடைக்க வந்துக் கொண்டேயிருந்தது.

 

“ப்ளீஸ் கண்ணைத் துடை”

 

“முடியலை…” என்றாள் இன்னும் தொண்டையடைக்க.

 

“நான் ஒண்ணும் உன்னைக் கட்டாயப்படுத்தி தாலி கட்டலை. ஒரே காரணத்துக்காக தான் நான் உன்னைக் கட்டிக்கிட்டேன். எதுக்கு இப்படி சீன் கிரியேட் பண்றே??”

 

“நானும் அந்த ஒருத்தரோட சந்தோசத்துக்காக தான் உங்களை கட்டிக்கவே சம்மதிச்சேன்”

 

“எனக்கும் தான்…”

 

ரேகா கண் கலங்குவதை பார்த்து சகுந்தலா மேடையேறி வந்தார். “ரேகா என்னாச்சு??”

 

“ஒண்ணுமில்லைம்மா…”

 

“கண்ணை துடைச்சுக்கோம்மா எல்லாரும் பார்க்கறாங்க…”

 

“ஹ்ம்ம் சரிம்மா…”

 

“இங்க பாருடா எல்லாமே நல்லதுக்கு தான் புரிஞ்சுக்கோ…”

 

“ஹ்ம்ம் சரி…”

அவர் சென்றுவிட ஏற்கனவே இந்த திருமணம் பிடிக்காமல் சுத்திக்கொண்டிருந்த விஸ்வா தங்கையின் முகத்தை கண்டு வந்திருந்தான் அங்கு.

 

“என்னாச்சு??” என்றவனின் கேள்வி தங்கையிடம் இருந்தாலும் முறைப்பு அமுதனிடம் இருந்தது.

 

“கஷ்டமா இருக்கு அண்ணா…”

 

“எதுக்குடா??” என்றான் இப்போது அவள் தலைத்தடவி.

 

அருகில் இருந்தவன் விஸ்வா அறியாதவாறு அவள் கையில் லேசாய் இடித்தான்.

 

“உங்களை எல்லாம் விட்டு பிரிஞ்சுப் போறேன்ல அதான்” என்றவள் விஸ்வாவின் மீது சாய்ந்து அழற ஆரம்பித்தாள்.

 

இம்முறை மொத்த கூட்டமும் மேடையேறிவிட்டது என்னவோ ஏதோவென்று. அனைவரையும் சமாளித்து தங்கையை சமாதானம் செய்து அமுதனை பார்வையாலே எரித்து கீழே சென்றான் விஸ்வா.

 

“என்னாவாம் உங்க தங்கச்சிக்கு எதுக்கு இந்த ஓவர் சீன்லாம்??” என்ற தன் மனைவியை முறைத்தான் விஸ்வா.

 

“ஏன்னு தெரியாதா?? எல்லாம் உன் தம்பியால தான். அவன் பண்றதெல்லாம் பண்ணிட்டு கஷ்டப்படுறது யாரு அவ தானே…”

“அவனை மட்டும் ஏன் சொல்றீங்க?? உங்க தங்கச்சியும் சேர்ந்து தானே தப்பு பண்ணியிருக்கா??” என்று சொன்னதும் பொது இடம் என்றும் பாராமல் அவள் கழுத்தை பற்றிவிட்டான்.

 

அந்த இடத்தில் யாருமில்லாததால் அதை அவர்கள் கவனித்திருக்கவில்லை. “கொன்னுட வேண்டியது தானே…” என்று அவள் சொல்லவும் அவன் கரம் பிடித்திருந்த பிடியை விட்டது.

 

“ச்சே… நீயெல்லாம் எப்படிடி பொண்ணா பிறந்தே?? அவளும் உன்னை மாதிரி பொண்ணு தானே, எவ்வளவு ஈசியா பேசறே??”

 

“உண்மையை தானே சொன்னேன்…”

 

“வேணாம் என்னை பேச வைக்காதே… இந்த கல்யாணம் நடந்திருக்கவே கூடாது. நான் சரின்னு சொல்லியிருக்கக் கூடாது… எல்லாம் என்னால தான்…”

 

“வெறுமே லவ்ன்னு மட்டும் சொல்லியிருந்தா நான் அவளை அடிச்சி பிடிச்சி அவனை மறக்க வைச்சிருப்பேன். உன் தம்பி செஞ்ச வேலையால என்னால வேற எதையும் யோசிக்க முடியலை…”

 

“என்னை பழிவாங்க தானே நீயும் அவனும் கங்கணம் கட்டிட்டு திரியறீங்க… நான் தானே உங்க இலக்கு எதுக்கு ரேகாவை இதுல சிக்க வைச்சீங்க…”

 

“நான் உங்களுக்கு என்ன பாவம் செஞ்சேன். தெரியாம கூட நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்யலையே, அப்புறம் ஏன் என் உயிரை எப்படி எடுக்கறீங்க, கொஞ்சம் கொஞ்சமா…” என்றவனின் குரலில் வேதனையின் சாயல்.

 

அவன் வேதனை அவளையும் வருத்தியது. அதற்கு மேல் எதையும் பேசி அவனை வருத்தவில்லை.

 

மேடையில் அமுதன் ரேகாவை முறைத்திருந்தான். “என்னை கடைசியில வில்லன் ரேஞ்சுக்கு ஆக்கிட்டேல்ல…” என்றான்.

 

“அப்போ நீங்க ஹீரோவா??”

 

“உன்னை நான் என்ன பண்ணேன் இப்போ?? யாருக்காக உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் அப்புறம் எதுக்கு இப்படி பண்றே??”

 

“ஊரை கூட்டி வைச்சு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியாச்சு…”

 

“உங்களுக்கு சொன்னா புரியாது…”

 

“புரியவே வேண்டாம்… எதுவா இருந்தாலும் நாம அப்புறம் பேசிக்கலாம், எல்லாரும் நம்மளையே பார்க்கறாங்க… மாமா என்னை குற்றவாளி மாதிரி பார்க்கறார்…”

 

“தப்பு செஞ்சா பார்க்க தானே செய்வாங்க…”

 

அமுதன் அவளை முறைத்துவிட்டு அதற்கு மேல் எந்த பேச்சும் கொடுக்கவில்லை. அங்கிருந்து கிளம்பும் வரையில் மட்டுமல்ல அதற்கு பின்னும் எதுவும் பேசவில்லை அவன்.

 

திருமணம் முடித்து இருவருமே அன்றே இருவரும் சென்னை வந்துவிட்டனர் உடன் காஞ்சனாவும் விஸ்வாவும் வந்தனர்.

 

ரேகா அமுதன் அறைக்குள் இருந்தாள். எந்த அலங்காரமும் செய்யப்படாமல் அறை சாதாரணமாய் இருந்தது.

 

ரேகா தனித்து கட்டிலில் அமர்ந்திருக்க அமுதன் உள்ளே நுழைந்து கதவடைத்து அவள் அருகில் வந்து அமர்ந்தான் இப்போது.

 

“இப்போ சந்தோசமா உங்களுக்கு??”

 

“ரேகா…”

 

“என்னை பாரு ரேகா…”

 

“என்ன??” என்றாள் வெடுக்கென்று.

 

“நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு…”

 

“அதனால…”

“ஓ!! சார்க்கு ஹஸ்பன்ட் உரிமையை எடுத்துக்க ஆசை வந்திருச்சு போல…”

 

“ஆமா ஆசை நிறைய தான் இருக்கு, இப்போ என்னாங்குறே… இப்போ என்னை கேட்க எவனுமே இல்லை…”

 

அவள் பயம் கலந்த பார்வை பார்த்தாள். “இங்க பாரு உன்னை நான் எதுவும் செய்ய மாட்டேன். ஏட்டிக்கு போட்டியா பேசாம இருந்தா உனக்கும் நல்லது எனக்கும் நல்லது…”

 

“நீ பேசி பேசி என்னை வெறி ஏத்துவன்னு சொன்னா என்னை ரொம்ப மோசமானவனா தான் பார்க்க முடியும்…”

 

“உனக்கு என்னை பிடிச்சிருக்கா இல்லையான்னு எனக்கு தெரியலை… ஆனா நான் உன்னை பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…”

 

“ஒரு நல்லதுக்காக தான் இதெல்லாம் நடந்துச்சு ரேகா புரிஞ்சுக்கோ. உனக்கு சில விஷயங்கள் எல்லாம் முழுசா தெரியாது. அதெல்லாம் இப்போ என்னால சொல்லவும் முடியாது…”

 

“கொஞ்ச நாள் போகட்டும், நானே சொல்றேன்… ப்ளீஸ் ரேகா…” என்றவன் எப்போது அவள் கரத்தை பற்றினான் என்பதை அவளும் அறியவில்லை அவனும் அறியவில்லை.

 

ரேகாவின் கையை இதமாய் பற்றியிருந்தான் அமுதன். “உன்னை நான் நல்லா பார்த்துக்குவேன்னு முதல்ல நீ நம்பணும். மேடையில அத்தனை பேர் முன்னால நீ அழறே??”

 

“எனக்கு அது எவ்வளவு அசிங்கமா இருந்துச்சு தெரியுமா…”

 

“எனக்கு மட்டும் என்ன வேண்டுதலா அழணும்ன்னு, சாதாரணமா பார்த்து பேசி இந்த கல்யாணம் நடந்திருந்தா எனக்கும் எதுவும் தெரிஞ்சிருக்காது…”

 

“அண்ணி எங்க வீட்டு ஆளுங்களை எல்லாம் கிட்டத்தட்ட ஏமாத்தி தானே இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சாங்க…”

 

“ஏமாத்தின்னு நீ ஏன் நினைக்கிறே. ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்ன்னு சொல்லியிருக்காங்க தானே…”

 

“அது ஆயிரம் பொய் இல்லை. ஆயிரம் முறை போய் சொல்லி கல்யாணம் பண்ணலாம்ன்னு அர்த்தம்…”

 

“இப்போ அதெல்லாம் எதுக்கு நமக்கு… அப்போ பழமொழியை தப்பா சொல்லாதீங்க…”

 

“சொல்லலை தாயே…”

 

“நான் தாயா உங்களுக்கு…”

 

“தாயில்லாத எனக்கு நீ தானே தாய்…” என்று அவன் சொல்லிட அதுவரை ஏதோவொரு கோபத்தில் ஆற்றாமையில் இருந்தவளுக்கு அவனின் இந்த வார்த்தை மொத்தமாய் உருகச் செய்திருந்தது.

 

அவனே தொடர்ந்தான் “சாரி ரேகா… நடக்கற பிரச்சனையில உன்னை இழுத்திருக்க கூடாது தான். நீ சொன்ன மாதிரி நம்ம கல்யாணம் இயல்பா நடந்திருக்கலாம் தான்…”

 

“வேற வழியில்லைடா அதனால தான் உன்னை…”

 

“வேணாம் விட்டுடுங்க… யாருக்காக நான் இதை செஞ்சனோ அதை மனசார தான் செஞ்சேன்…”

 

“இடையில நடந்த விஷயங்கள் தான் எனக்கு உறுத்தலா வருத்தமா இருந்துச்சு, இப்பவும் இருக்கு… எல்லாம் சரியாகிடும்ன்னு நம்புறேன்…”

 

“எங்க அண்ணன் பாவம்…”

 

“ஹ்ம்ம்…”

 

“உங்க அக்காகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கறாங்க…”

 

அவள் சொல்லிவிட்டு அவன் அவளை முறைப்பான் என்று எதிர்பார்த்திருக்க அவனோ “ஹ்ம்ம் சரி தான்…”

 

“ஆச்சரியம் தான்…”

 

“எது??”

 

“உங்க அக்காவை விட்டு கொடுத்தீட்டீங்களே??”

 

“வேணாம் நாம எதுவும் பேச வேணாம். மாமா எப்படி பாவமோ அதே மாதிரி தான் அக்காவும். மாமாவை பிடிச்சிருந்தாலும் அதை சொல்லாமலே இருக்கா…”

 

“சும்மா சொல்லாதீங்க…”

 

“உன்கிட்ட எனக்கு எந்த பொய்யும் சொல்ல வேண்டிய அவசியமில்லை ரேகா…”

 

“நம்புற மாதிரி இல்லையே…”

 

“நீ நம்பலை அப்படிங்கறதுக்காக நான் பொய்யா சொல்ல முடியும். மறைஞ்சு இருக்கற உண்மை எல்லாம் ஒரு நாள் வெளிய வரும், காயங்கள் மருந்து போடாம போனதால தான் இவ்வளவு வேதனையும்…”

 

“அதை எங்க அக்காவே கீறிவிட்டிருக்கா மருந்தும் அவளே போட்டுப்பா, சீக்கிரமே எல்லாம் ஆறிடும்…” என்றான் எங்கோ பார்த்து.

 

“என்னன்னு என்கிட்ட சொல்லக் கூடாதா…” என்றாள் அவன் வேதனை பார்த்து.

 

“சீக்கிரமே சொல்றேன், இப்போ வேணாம்… நீ ரொம்ப ஓய்ஞ்சு போயிருக்க படுத்துக்கோ…”

 

அவள் படுக்காமல் தயங்கிக் கொண்டு இருந்தாள்.

 

“வேற எதுவும் கேட்கணுமா என்கிட்ட” என்றான்.

 

“ஹ்ம்ம்…”

 

“என்ன??”

 

“இல்லை அது… அது வந்து… நம்ம அண்ணாகிட்ட ஓ… ஒரு விஷயம் சொன்னோம்ல… கொஞ்ச நாள் போனா உண்மை தெரிஞ்சிடாதா…”

 

“நாம சொன்ன பொய்யை வேணா உண்மையாக்கிடலாம் ரேகா…” என்றான் அவன் குறும்பாய்.

 

“என்னது??”

 

“பின்னே நாம என்ன இப்படியேவா காலத்துக்கும் இருக்க போறோம். பிள்ளைக்குட்டி எல்லாம் பெத்துக்க தானே வேணும்…”

 

“ஒரு ரெண்டு நாள் கழிச்சு நம்ம வேலையை தொடங்கலாம்டா டார்லிங், நீ படுத்துக்கோடா” என்று சொல்லி அவளுக்கு இன்னமும் பீதியை கிளப்பிவிட்டான் அவன்.

 

அதில் அவள் அரண்டு அவனைப் பார்க்க “நான் எப்போ சீரியஸா பேசறேன், எப்போ சும்மா பேசறேன்னு உனக்கு புரியலையா… இதுக்கு போய் பேயறைஞ்ச மாதிரி பார்க்கறே… உன் விருப்பம் இல்லாம உன்னை தொட மாட்டேன் ரேகா…”

 

“அதுக்காக அதுக்கெல்லாம் ரொம்ப நாளும் எடுத்துக்க மாட்டேன்…” என்றான் அவளை மேலிருந்து கீழாய் பார்த்தவாறே. அந்த பார்வை அவளுக்குள் எதுவோ செய்ய பார்வையை வேறு புறம் திருப்பினாள்.

 

“சரி இப்போ சீரியஸா பேசுவோம்… நீ சொன்னது சரி தான், நம்ம சொன்ன விஷயத்தோட இம்பாக்ட் மத்தவங்களுக்கு தெரியாது ஆனா மாமா கண்டிப்பா எக்ஸ்பெக்ட் பண்ணுவாரு…”

 

“அதை எப்படி சமாளிக்கறதுன்னு பார்க்கணும்… பார்ப்போம், இவ்வளவு தூரம் செஞ்சுட்டோம், அதுக்கும் எதாச்சும் ஒரு வழி கிடைக்காமலா போய்டும்…”

 

“பேசாம அண்ணாகிட்ட உண்மையை சொல்லிடலாமே…”

 

“எந்த உண்மையை??”

 

“இல்லை அது வந்து நான் கர்ப்பம் இல்லைன்னு…”

 

“சொன்னா??”

 

“அவர் என்னை கொன்னுட்டு ஜெயிலுக்கு போய்டுவாரு பரவாயில்லையா…”

 

“எங்கண்ணா அவ்வளவு பெரிய ரவுடி எல்லாம் இல்லை…”

“மாமா அப்படியில்லை தான், ஆனா கோபம் ஒரு மனுஷனை எதுவும் செய்ய வைக்கும்… உனக்கு தெரியாது எனக்கு தெரியும் அதோட விளைவு எப்படியிருக்கும்ன்னு…”

 

“நான் உங்களை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக பொய் சொன்னேன்னு…”

 

“அதோட மாமா உன்னை தலை முழுகிடுவாங்க அது உனக்கு ஓகேவா…”

 

“ஏன்??”

 

“ஏன்னு கேட்கிறே?? நீ என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக இப்படி கூட பொய் சொல்லுவியான்னு மாமா நினைக்க மாட்டாங்க…”

 

“இப்போவாச்சும் மாமாக்கு கோபம் என் மேல தான் இருக்கு. அதைபத்தி எனக்கு கவலையில்லை, உனக்கு மாமாவோட உறவு வேணாமா…”

 

“வேணும்…”

 

“அப்போ அப்படியே விட்டிடு, நடக்கறது நடக்கட்டும்… நானே பழியா இருந்திட்டு போறேன்…”

 

‘ச்சே இவ்வளோ நேரமும் எனக்கு மட்டும் தான் கஷ்டம்ன்னு நினைச்சுட்டு இருந்தேன். இப்போ தானே புரியுது தப்பே செய்யாம இவரும் தான் பழியோட சுத்துறாரு…’ என்று அவனுக்காக பரிந்தது அவள் மனம்.

“எதையும் யோசிக்காதே ரேகா தூங்கு…”

 

“குட் நைட்…”

 

“நீ இப்போ சொன்ன குட் நைட்டா நிஜமாவே குட் நைட் ஆகணும்ன்னு வேண்டிக்கறேன் நமக்காக…” என்றுவிட்டு அவன் படுத்துக் கொண்டான்.

 

அதே வீட்டில் வேறொரு அறையில் விஸ்வா நிம்மதியில்லாமல் இங்குமங்கும் நடந்துக் கொண்டிருந்தான்.

 

அமுதனுக்கு வேறிடத்தில் பெண் பார்க்கிறோம் என்று அவள் என்று ஆரம்பித்தாளோ அன்றிலிருந்தே அவன் இப்படித் தானிருக்கிறான்.

 

இது ஒரு கேவலமான செயல் இப்படித்தான் என் தங்கையை உன் தம்பிக்கு மணமுடிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்று அன்று இரவு அவளை கடிந்திருந்தான் அவன். அவ்வளவு கோபம் அவனுக்கு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!