Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கடல் சேர்ந்த நாணல்

நாணல் – 1.2

“இல்ல வேணாம்” உணவை கூட முழுதாக உண்ணாமல் உண்டது வரை போதுமென எழுந்துவிட்டான். ஆரபிக்கு தான் முகம் சோர்ந்துவிட்டது.

வர மாட்டேன் என்றவனை உண்ண கூறி பிறகு தானே அவன் சரியாக உண்ணாததற்கு காரணமாகி போனது வேறு மனதை வறுத்த அவன் முகம் பார்த்தே அவன் பின்னாலே நடந்தாள்.

“என்னடி?” என்றான் அவளை அறிந்து சிரிப்போடு.

“சாரி, நான் வேணா வெளிய நிக்கவா நீங்க சாப்பிட்டு வர்றேளா?”



Advertisement

“ஏன் இப்போ நல்லா தானே சாப்பிட்டேன். பாரு தொப்பை கூட தெரிய ஆரமிக்கிது” அவள் கை அவன் வயிற்றினை மெல்ல கோவமாக குத்தியது.

“ஒன்னும் கானம். நேக்கு கில்டியா இருக்கு”

“அதெல்லாம் ஒன்னுமில்ல ஆராம்மா. உன் முகம் பாக்க எனக்கு தான் கஷ்டமா இருக்கு. எந்நேரமும் வாந்தி எடுக்குற போல இருக்கு. அத்தான் வேலையே செய்யாம நீ வாந்தி எடுத்தா அப்றம் அத்தானுக்கு என்ன மரியாதை சொல்லு?”

Advertisement

அவளிடம் சில பல அடிகளை வாங்கி இருவரும் ஒரு நல்ல சைவ உணவகத்திற்கு வர ஆரபியின் அன்னையும் சகோதரனும் பூர்வியோடு வந்தனர். குழந்தையை வாங்கி மூவரும் உண்ணட்டும் என மகளை அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.

Advertisement

மறக்காமல் ஆரபி அருகில் அவன் பணப்பை வந்து சேர்த்துவிட்டது. மருமகன் வெளியேறியதும் மகளையும் அவள் முகத்தில் இருந்த வற்றாத சிரிப்பையும் பார்த்து மனம் நிறைந்து போனது அன்னைக்கு.

“மாப்பிள்ளை தங்கம்டி ம்மா” என்றார் பெருமையாக.

அன்னை இதை இன்றோடு குறைந்தது ஆயிரம் முறையாவது கூறியிருப்பார். ஆனாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் கூறிடுவார். அப்பொழுது தான் அவருக்கு நிம்மதியாக இருக்கும்.

Advertisement

“ஆயிரத்தி எழுபத்தி ஒன்னு” அவளுக்கு பதில் சகோதரன் கணக்கை சரியாக நினைவில் வைத்து கூறினான். ஆரபி சிரித்து தலை ஆட்டினாள் அமைதியாக.

“ஒரு குறை குணத்துலையோ உன்னையும் குழந்தையும் பாத்துக்குறதுல சொல்லிட முடியாது” அவர் குரல் இறங்கியது, “குடும்பம் குடும்பம்னு சொல்றத தவற” அதுவரை சிரித்த முகமாய் இருந்த ஆரம்பியின் முகம் வாடியது.

“ம்மா இப்போ எதுக்கு அதெல்லாம்?”

“இல்லடி ம்மா… உன்கிட்ட மனம் விட்டு பேசவே நேரம் நேக்கு அமைய மாட்டிங்குது. பேசிடுறேனே மனசுல தோணுறத”

அமைதியின் உருவமாய் நிற்கும் ஆரபியால் அவரை தடுக்கவும் முடியவில்லை பேசட்டும் எனவும் விட முடியவில்லை.

அக்காவின் தர்மசங்கடத்தை உணர்ந்த ஸ்ரீனிவாசன், “ம்மா, அக்காவை விடேன். அவா பண்றது என்னனு அவாளுக்கே தெரியும். நீ வேற எதுக்கு கிளாஸ் எடுக்குற?”

“புள்ளைங்க தப்பு செஞ்சா பெத்தவா பாத்துட்டே இருக்க முடியாது ஸ்ரீனிவாசா. நீ செத்த சைலண்டா இரு” மகனை அடக்கி மீண்டும் மகளிடமே வந்தார்.

“மாப்பிள்ளை நல்லவர் தான் ஆரபி. ஆனா அவரோட அந்த நல்ல குணம் உங்க வீட்டுல உள்ளவாளுக்கு உண்டானு தான் நான் கேக்குறேன். குடும்பத்துக்காக வாழ்ந்துட்டு இருக்கா மாப்பிள்ளை.

குழந்தை இருக்கு, நீ இருக்க, நாளைக்கு இன்னொரு கொழந்தை ஜனிக்கும். அதுக்கு சேமிப்பு? நல்ல காலேஜ்ல டிகிரி படிக்க வைக்கணுமோ இல்லையோ? கை நிறைய நிறைய காச எடுத்து வீட்டுல உன் மாமிக்கு குடுத்தா சரியா சொல்லு?”

ஆரபியிடம் நிறைந்த அமைதி தான். எதுவும் பேசவில்லை. உணவை உண்பதையே கருத்தாக இருந்தாள்.

மகளின் அமைதியில் அவள் யோசிக்கிறாள் என உணர்ந்த க்ரிஷ்ணாம்பாள் மேலும், “உன்னோட ஆம்படையான் கைல இருப்பு இல்லாம ஆத்துல கொடுத்துடுறா, அதே மாதிரி உன் ஆத்துல உள்ளவா எல்லாரும் பண்ணுவாளா? ஸ்ரீனிவாசன் கூட உன் பெரிய மச்சானையும் ஓர்ப்படியையும் ஒரு நாள் நகை கடைல பாத்தானாம். எப்போ ஸ்ரீனிவாசா பாத்த?”

“போன வாரம் க்கா”

“ம்ம்… வீட்டுல சொன்னாளா?”

ஆரபி இல்லை என தலையை ஆட்டினாள், “சொல்ல மாட்டா ஆரபி. அவா அவா தான் அவா அவாளோட வயித்த நிரப்ப போஜனம் எடுக்கணும். நீங்க என்ன பண்ணாலும் ஒடனே ஆத்துல சொல்லிடுறேள்.

ஆம்பளைங்க சில நாள் எதுவும் தெரியாம இருப்பா. நீ தான் உன்னோட ஆம்படையாளுக்கு எடுத்து புரிய வச்சு குடும்பத்தை வளைவு சுளிவு தெருஞ்சு நடத்தணும். ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்டி ம்மா”

உணவை சரியாக உண்டு முடித்து தான் ஆரபி தலையை உயர்த்தியதே, “ம்மா நீ சொல்ற எல்லாமே வாஸ்தவம் தான். அதே சமயம் ஆத்துல அளந்து போடலாம், வீட்டு மனுசாளுக்கு அளந்து போட கூடாது.

அதுக்கு அவா ஆறும் இல்ல, தானம் போட நாங்க பெரியவாளும் இல்ல. அடுத்தவா தப்பு செஞ்சா அதை செய்யாதனு சொல்லி குடுத்த நீயாம்மா இப்போ அதே தப்ப செய்னு சொல்றிங்கோ?”

“இது தப்பு இல்லடி, எதிர்காலத்துக்கு சுதாரிக்கிறது, நீயே புரிஞ்சுக்கலைனா உன் ஆத்துகாருக்கு யார் சொல்லி புரியவப்பா?”

“என் வீட்டாளுக்கு இதை செய்ன்னு சொல்ற உரிமையை எனக்கு கொடுத்தவர், அவரோட ஆத்துக்கு இது செய்யாதனு சொல்ற உரிமையை ஒரு நாளும் கொடுக்கல ம்மா. அவாளே குடுத்தாலும் நான் வாங்கிக்க மாட்டேன்.

தோப்பனார் உன்னக்கு இதுவரை ஒரு நாள் ஹாலிடே குடுத்துருப்பாரா? ஆனா இவா அப்டி இல்ல ம்மா, நேக்கு முழு ப்ரீடம் இருக்கு. அதை நான் க்ராண்ட்டா எடுத்து அவாளை தூண்டிவிட்டா நல்லாவா ம்மா இருக்கும்?

அவாளுக்கு என்ன தோணுதோ அதை செய்யட்டும் ம்மா. நேக்கோ இல்ல பூர்விக்கோ அதால எந்த பிரச்னையும் வராத மாதிரி அவா பாத்துக்குவான்ற நம்பிக்கை நேக்கிருக்கு. இனி தெரியாம கூட இப்டிலாம் பேசாதே ம்மா தெரிஞ்சா பூர்வி அப்பா ரொம்ப கஷ்டப்படுவா”

அவ்வளவு தான் பேச்சு என்று மகள் எழுந்து சென்றிட அடுத்து பேச்சு தடைபட்டு போனது.

இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து பூர்வி செய்யும் அழகு சேட்டைகளை பார்த்து ரசித்துக்கொண்டிருக்க, “அத்தை நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” மருமகன் தன்னிடம் குறிப்பாக பேசவும் க்ரிஷ்ணாம்பாள் சற்று அதிர்ந்து தான் போனார்.

தான் மகளிடம் பேசியதை எதையும் கேட்டுவிட்டாரோ என்ற பயம் மனதினில் வியாபிக்க மகளை திரும்பி பார்த்து பிறகு மீண்டும் மருமகனிடம் வந்தார், “சொல்லுங்கோ மாப்பிள்ளை” என்று.

“ஒரு குடவுன் பாத்துருக்கேன் அத்தை. ஆடிட்டர் ஆபீஸ் அப்றம் மறுபடியும் பார்ட்டி பிளானர் ஆபீஸ்க்கு போறதுக்குன்னு டைம் வேஸ்ட் ஆகுது. அதான் ரெண்டையும் ஒரே இடத்துல வச்சு சமாளிக்கலாம்னு அந்த குடவுன வாங்கலாம்னு யோசிக்கிறேன்”

மாமியாரிடம் கூறிவிட்டு மனைவியை பார்த்தான் எதிர்பார்ப்போடு அவள் எண்ணம் அறிய. மனைவியிடமே கூறியிருக்கலாம், ஆனால் பெரியவர் அவர் இருக்கும் பொழுது மனைவியிடம் மட்டும் தனியாக சென்று இந்த நல்ல முடிவை பகிர மனம் வரவில்லை. அவனுக்கு அவன் சந்தோசம் ரெட்டிப்பாக வேண்டும்.

ஆரபி சிரிப்போடு முகம் பிரகாசிக்க தலை அசைக்க, கணவனுக்கும் அந்த மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டது.

“ரொம்ப நல்லது மாப்பிள்ளை”

ஸ்ரீனிவாசன், “சூப்பர் அத்திம்பேர்… கங்ராட்ஸ்”

மாமனிடம் இரவு மணி பத்தை கடந்திருந்ததையும் கவனிக்காமல் மருமகளின் பிடிவாதத்தோடு ஸ்னாக்ஸ் சிலவற்றை வாங்கி, மறக்காமல் அனைத்தும் முடிந்ததும் ஒரு பெரிய விருந்தே வைக்க வேண்டும் என்ற உத்தரவையும் வைத்துவிட்டான்.

மகளுக்கு என்ன ஏதென்றே தெரியவில்லை, மாமன் மகிழ்ச்சியில் அவளுக்கும் ஆனந்தம் தொற்றிக்கொள்ள ஆனந்தமாக வளைய வந்தாள் சிரிப்புகளோடு.

பூர்வியை தன்னோடு இரவு அழைத்து செல்வதாய் ஸ்ரீனிவாசன் புறப்பட்டிருக்க அன்னைக்கு எதுவும் தேவையா என விசாரித்து ஆரபி தங்கள் அறைக்குள் வந்து கதவை தாழிட்டாள்.

கணவன் அங்கிருந்த பால்கனியிலிருந்து தீவிரமாக ஏதோ பேசிக்கொண்டிருப்பது தெரிய தன்னுடைய உடையை எடுத்து குளியலறை புகுந்தவள், கதவு தட்டும் சத்தம் தொடர்ந்து கேட்க கணவன் என்ன செய்கிறான் என்று பார்க்க கதவை திறந்தாள்.

திறந்த நொடியில் உள்ளே புகுந்து மனைவியை அங்கிருந்த சுவற்றோடு அணையிட்டு பிடித்து வைத்தான். கணவன் செயலில் நொடியில் இதயம் படபடக்க மூச்சு வாங்க நின்றவளை குறும்பு சிரிப்போடு விழுங்கும் பார்வை பார்த்து அவளை நெருங்கி வந்தான் பார்த்திபன்.

அவனது நெஞ்சில் கை வைத்து அவர் முயற்சியை தடுத்தாள் ஆரபி, “இப்படியா பயம் காட்டுவேள், நேக்கு இதயமே படபடக்குது”

“எங்க பாக்கலாம்” அவள் மீதிருந்த அதீத உரிமையில் அவன் கையை அவள் இதயத்தின் மீது வைக்க போக, அவன் கையை தட்டிவிட்டு முறைத்தாள் பெண்.

“என்னடி?”

“என்ன என்ன? நான் எவ்வளவு சீரியஸா பேசிட்ருக்கேன் நீங்க விளையாடுறேள்”

“உன்கிட்ட விளையாடாம வேற யார் கூட விளையாட முடியும்?”

“இந்த வாய்க்கு மட்டும் இம்மியளவும் குறைச்சல் இல்ல. வெளிய போங்கோ நான் உடை மாத்திட்டு வந்துர்றேன்”

பார்த்திபன் பார்வை கணவன் பார்வையாக எல்லை தாண்டி உரிமையாய் அவள் மேல் விழ, புடவையை அவிழ்த்து ரவிக்கையோடு மட்டும் நின்ற ஆரபி உடல் தளர துவங்கியது.

“நான் பாக்காததாடி மாமி. சும்மா மாத்தேன்” என்றான் அவளை நோக்கி மெல்ல நகர்ந்து.

“வேணாமே”

பார்த்திபன், “எனக்கு உடனே வேணுமே”

ஆரபி, “பாப்பாவுக்கு மூணு வயசாகட்டும் நீங்க தானே சொன்னேள்?”

கணவன் பார்வை தன்னுடைய கண்களில் இருந்து எப்பொழுதோ தடம் மாறியிருக்க அவள் பார்வையும் தன்னை ருசி பார்க்க துடிக்கும் அவன் அதரங்களில் நிலைக்கொண்டது.

“இன்னும் பத்து மாசத்துல மூணாகிடுமே மாமி” அவள் இடையோடு வளைத்து தன்னோடு நிறுத்தினான்.

அவனது பிடியும் பார்வையும் அவனது ஏக்கத்தை கூற மனைவிக்குள்ளும் துளிர்விட்டிருந்த ஆசை வளர்ந்து அவன் வசம் மெல்ல மெல்ல இழக்கலானாள்.

“என்ன திடீர்னு?” அவன் கையில்லா பனியன் பிடித்து கேட்டாள் ஆரபி.

“திடீர்னு யார் சொன்னா, இந்த ட்ரிப் ப்ளானே இதுக்கு தான்”

“அட பாவி மனுஷா, எல்லாருக்காகவும் அழைச்சிட்டு வந்தேலோனு தப்பு கணக்கு போட்டுட்டேன் போல”

“உன்ன யாருடி அப்டி நினைக்க சொன்னது. நான் ரொம்ப ரொம்ப கெட்டவன் தான். இதோ நம்ம புள்ளைய பாத்துக்க ஒண்ணுக்கு ரெண்டு ஆள் இருக்காங்க” தன்னை கேலி செய்ய பேசும் கணவன் எண்ணம் அறிந்தும் அவளுக்கு அவனிடம் வம்பு வளர்க்க தான் ஆசை.

“விடுங்கோ என்ன” அவன் பிடியிலிருந்து திமிர முயல மட்டுமே அவளால் முடிந்தது.

“ஆமா பெட்க்கு போய்டலாம். அதான் வசதியா இருக்கும்” குறும்பு அவனிடம். அதே நேரம் பிடிவாதமும் உடல்மொழியில்.

“நான் அங்க வர மாட்டேன்”

“இங்க இருந்தாலும் எனக்கும் ஓகே தான்”

தலையில் அடித்தாள், “ஒர்ஸ்ட் நீங்க, தப்பு தப்பா பேசுறேள்”

“பேசுனா மட்டும் போதுமா, பாப்பா இன்னைக்கு ஒரு குழந்தைய காட்டி அவனை தூக்கணும்னு ஒரே அடம். சரினு பக்கம் போனா அந்த கொழந்தை புது ஆள்னு அழுது தீத்துடுச்சு. இதுவே நம்ம குழந்தையா இருந்தா இப்டி எல்லாம் பண்ணுமா சொல்லு?”

எப்படி எல்லாம் வளைத்து நெளித்து சேர வேண்டிய இடத்திற்கு வந்துவிடுகிறானே என்ற ஆச்சிரியம் மனைவிக்கு, “பாப்பாவே கொழந்தை தான், இதுல அவ சொல்றத நீங்க கேக்குறேளா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாது, என் பிள்ளை கேட்டதை நான் செஞ்சே தீருவேன்”

மயிலிறகை விட மென்மையாக வந்த அவன் குரலில் அவள் குரலும் உள்ளே சென்றது, “பார்த்தி…”

“ம்ம்ம் உன்னோட பார்த்தி தான் ஆரா ம்மா”

அவள் முகம் நோக்கி குனிந்தவன் அவளது மூக்கோடு உரசி அந்த கிளி மூக்கை அலங்கரித்திருந்த அந்த பச்சை கல் மூக்குத்தியில் தன்னுடைய முதல் அச்சாரத்தை பதித்தான்.

அந்த ஒரு முத்தம் அவளுக்கு அடித்து கூறியது இனி அவனை தன்னால் என்ன செய்தும் நிறுத்த முடியாதென்று. பார்த்திபன் தன்னுடைய ஆசையை கூறி துவங்குவதும் முடிப்பதும் அவள் மூக்குத்தியில் தானே.

பார்த்திபனின் அதரங்கள் மனைவியின் கன்னம், நாசு என பயணித்து சீண்டி தான் அவளது இதழ்களை சிறை செய்தது. திக்கி திணறி நின்றவள் பொறுப்பை தன்னுடைய கைகளில் ஏற்றுக்கொண்டான்.

காதலாக துவங்கிய முத்தம் மெல்ல மெல்ல வேகத்தை கடந்து காமத்திற்கு மாறியது. பெண் சித்தம் தலைக்கேற மனைவியை மேலும் மேலும் தன்னோடு இறுக்கிக்கொண்டவன் அவளை மெல்ல கட்டிலில் கடத்தி அவளது ஆடையாக மாறினான்.

பெண்ணுக்கும் கணவனது மார்பு சூடு தேவைப்பட முதலில் வெட்கத்தில் தயங்கியவள் பிறகு கணவனின் ஆசைகளை தேவைகளை தடுக்காமல் அவன் விருப்பத்திற்கேற்ப ஆட, இறுதியாக கணவன் தான் திணறிப்போனான்.

கொள்ளளவு கொள்ளாத அளவிற்கு அவன் ஆசையை கொட்டி ஆனந்த நடனமாட பென்னவளோ அவன் வாரி வழங்கிய அன்பின் துளிகளை எல்லாம் மிச்சம் வைக்காது தன்னுள் சேர்த்து பொக்கிஷமாக்கினாள்.

எத்தனை கொடுத்தும் கணவனுக்கு போதவில்லை போல், அவளும் வாங்கியும், கொடுத்தும் என மூச்சிரைக்கும் நிலையிலும் நின்றபாடில்லை. நேரம் கடந்தும் காதலின் கீதம் மட்டும் இசைத்துக்கொண்டே இருந்தது இருவரின் பெயரையும் வரிகளாய் கொண்டு.

ஆரபி என்னும் இசையை, மணி நேரங்கள் பல வாசித்தும் அதனை முழுதாய் ஆண்டு முடித்தாலும் பிரிந்த நொடி மீண்டும் இசை மீட்ட தான் உடல் பரபரத்தது. ஆனால் அவள் பாவம் என்ற எண்ணத்தில் காமத்தை விடுத்து காதலாய் மனைவியை தாங்கினான்.

சோர்வாக இருவரும் கூடல் முடித்து இளைப்பாறிய நேரம் மனைவியின் மூக்குத்தியை ஆசை பொங்க முத்தமிட்டு அவள் உச்சந்தலையில் நாடி பதித்து இளைப்பாறினான்.

“மாமி நாளுக்கு நாள் அடிச்சு தூள் கெளப்புறடி” கண் சிமிட்டி கணவன் சிரிக்க அவனை வெட்கம் கொண்டு அடித்து வைத்தாள் ஆரபி.

“ஊதாரியா சுத்திட்டு இருந்தவன் இன்னைக்கு ரெண்டு கம்பெனி ஓனர், நீ இல்லனா இதெல்லாம் சாத்தியம் இல்லடி. உனக்காக வேர் போல மண்ணுல அழுத்தமா கால் பதிச்சேன். இப்போ ஆலமரமா என்ன நம்பி பல குடும்பம். மேல மேல போகணும்னு தான் ஆசை வருதே தவற போதும்னு மனசு சொல்ல மாட்டிக்கிது. நான் உன்கிட்ட தொலையிற மாதிரி”

“அது உங்களோட திறமை பார்த்தி”

“திறமை இருந்தாலும் உன்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு தான் ரிஸ்க் எடுத்தேன் இல்லனா இந்நேரம் எங்க இருப்பேனோ தெரியல”

ஆசையாய் காதலாய் தன்னை பார்க்கும் அவன் பார்வைக்கு எதை கொடுத்து ஈடு செய்ய முடியுமென பெண்ணுக்கு தெரியவில்லை.

“என்ன திடீர்னு அந்த குடவுன் வாங்குற ஐடியா?”

“அந்த ஓனர் அன்னைக்கு வந்து பேசுனார், இடத்தை விலைக்கு வெளிய சொல்லிட்டு இருக்கேன் எப்போ வேணாலும் நீங்க காலி பண்ற மாதிரி இருக்கும்னு. அதான் நானே வாங்கிக்கிறேன்னு சொல்லிட்டேன்”

“பணம் எவ்ளோ சொல்றா?”

“ரெண்டரை சி சொல்றாங்க, ஒரு அஞ்சு லட்சம் கம்மி பண்ண கேட்ருக்கேன்”

“அவ்ளோ பணத்துக்கு என்ன பண்ண போறேள்?”

“பாப்பா பேர்ல லாண்ட் ஒன்னு வாங்கி போடலாம்னு அவ பொறந்தப்பையே ஒரு சீட்டு போட ஆரமிச்சேன், அத தான் எடுக்கணும். ஆனாலும் அம்பது லட்சம் இனிமேல் தான் ஏற்பாடு பண்ணனும்” என்றான்.

“என் நகைமணி எடுத்துகோங்கோ பார்த்தி” உடனே மனைவி கூறினாள்.

“உன் வீட்டுல போட்ட நகை வேணாம், நான் வாங்கி குடுத்த நகை மட்டும் ரெஜிஸ்ட்ரேஷன் முடிவு பண்ணிட்டு அடமானம் வைக்கலாம்”

“ஏன் தோப்பனார் எதுவும் சொல்லுவார்னு யோசிக்கிறேளா?”

“உன் தோப்பனார்க்கு எல்லாம் பாக்கல நான். என்னோட தொழிலுக்கு நான் பண்ற முதலீட்டுல என்னோட பணம் தான் மொத்தம் இருக்கணும்னு ஆசைப்படுறேன்”

“நீங்க தான் நேக்கு நகையை திருப்பி தந்திடுவேளே இது எப்படி தோப்பனார் காசாகும்?”

“ஒடனே திரும்பி தர முடியாதுடி. கடைய கொஞ்சம் ஆல்டர் பண்ணனும், அதுக்கும் அடுத்து நான் காசு சேர்க்கணும். அப்றம் தான் நகை திருப்புற வழிய பாப்பேன். விசேஷம் எதுவும் போனா உனக்கும் பிள்ளைக்கும் நகை வேணாமா?”

“விஷ்ணு அண்ணா எதுவும் பண்ணலயா?”

“அவன்கிட்ட கேக்கல ஆரா, வீடு கட்டுறதுல பணத்தை முடக்கிட்டான். பாத்துக்கலாம். அவன் பொறுமையா தரட்டும்”

ஆரபி, “அப்போ என்ன பண்ற ஐடியால இருக்கேள்?”

யோசித்தான் சில வினாடிகள், “வீட்டுல கேக்க யோசனையா இருக்கு, வட்டிக்கு தான் வாங்கணும் நினைக்கிறன்”

“வட்டியா… ஐயோ வேணாம் ன்னா. ரெண்டு நகையை வச்சுண்டு பாக்கி இருக்கத எடுத்துகோங்கோ”

“ஏய் சும்மா இரேன்டி. எனக்கு அந்த நகை வேண்டாம். அவ்வளவு தான். யோசிக்கிறேன். வர வேண்டிய பணம் கொஞ்சம் வாங்கி, லோன் வாங்கினு ஏதாவது பண்றேன். நீ ரொம்ப யோசிக்காத… ம்?”

அவள் தலை கோதி சிரித்தான்.

ஆரபிக்கு ஐம்பது லட்சத்தை மொத்தமாக வெளியில் அவன் கடன் வாங்குவது பயமல்ல ஆனால் வட்டி அதிகமாகிடுமோ என்கிற பயம் அவளுக்கு. அனைத்தையும் ஒதுக்கி கணவன் மேல் உள்ள நம்பிக்கையில் முகம் தெளிர்ச்சியடைந்தது.

How is the chapter??

Comments please…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!