Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ennavalin Innisai

Ennavalin Innisai 11 1

அத்தியாயம் 11 

மல்லியோ முல்லையோ

ரோஜாவோ அனைத்திலும்

என்னவளின் வாசம் மட்டுமே!!!



Advertisement

அதற்கு மேல் அங்கே நிற்க அவமானமாக இருக்க அமைதியாக திரும்பி நடந்தாள் ஸ்ருதி. “வாங்கிட்டு வந்துட்டேன் டி, வா சாப்பிடலாம்”, என்று அழைத்தாள் வைஷ்ணவி.

Advertisement

“வைஷு நாம இங்க இருந்து போகலாமா? பிளீஸ்”, என்று கேட்க அவளது கசங்கிய முகமும் கலங்கிய கண்களையும் கண்ட வைஷ்ணவி “சரி வா, பஸ் நிக்குற இடத்துக்கு போகலாம்”, என்று சொல்லி அவளை அழைத்துச் சென்றாள். 

Advertisement

போகும் அவளையே பார்த்த படி ராகவன் இருக்க மற்ற அனைவரும் அமைதியாக இருந்தார்கள். “ஏன் டா இப்படி பேசின? நீ வெண்ணிலாவை லவ் பண்ணுறியா?”, என்று கேட்டான் அருண். வெண்ணிலா அவனை முறைக்க “சே அப்படி எல்லாம் இல்லை டா. அது கோபத்துல சொன்னது. சாரி வெண்ணிலா”, என்றான்.

Advertisement

“நமக்குள்ள காதல் எல்லாம் வராதுன்னு எனக்கு தெரியும். ஆனா எனக்கு உன் மேல வேற கோபம் இருக்கு டா”

“என்ன வெண்ணிலா?”

“ஏன் அந்த பொண்ணைத் திட்டின? எனக்கு காரணம் தெரியணும்”

“அது….”

“சொல்லு டா, அவ பாவம் தெரியுமா? அழுகையை அடக்கிட்டு போறா. நீயா டா இப்படி பேசுறது?”

“இந்த பேச்சை இதோட விடு. அவளைப் பத்தி இனி பேசாத வெண்ணிலா”

“அது எப்படி பேசாம இருக்க? அவளும் என்னை மாதிரி ஒரு பொண்ணு. அவளுக்காக நான் பேச தான் செய்வேன். அது மட்டுமில்லாம நீ என்னோட ஃபிரண்ட். நீ தப்பு செஞ்சா நான் கண்டிக்க தான் செய்வேன்”

“வெண்ணிலா விடேன், அண்ணாக்கு தான் அந்த பொண்ணைப் பிடிக்கலைல? எதுக்கு திருப்பி திருப்பி அதையே கேட்டு அண்ணாவை டென்ஷன் பண்ணுற? அவ எதுக்கு முதல்ல அண்ணா கிட்ட பேச வரணும். அண்ணன் கூட சேந்து ஒரு பாட்டு பாடிட்டா அவ அண்ணனுக்கு ஜோடியா ஆகிருவாளா? அவளும் அவ மூஞ்சியும்”, என்று ஜனனி பேசிக் கொண்டே இருக்க “வாயை மூடு”, என்று கத்தினான் ராகவன்.

ஜனனி அவனைக் கண்டு அதிர்ந்து விழிக்க “என்ன சாதாரணமா அவளும் அவ மூஞ்சியும்னு சொல்ற? அவ முகத்துக்கு என்ன குறைச்சல்? என்னைப் பொறுத்த வரைக்கும் அவ தான் இந்த உலகத்துல அழகு. இனி அவளை ஏதாவது சொன்ன நான் மனுசனா இருக்க மாட்டேன்”, என்று கத்தினான். அதில் ஜனனி கண்கள் கலங்கி விட்டது. 

“டேய் ராகவா உனக்கு என்ன தான் டா ஆச்சு? எல்லாரையும் கண்ட படி திட்டுற? நீயும் தான் அந்த பொண்ணைத் திட்டின? ஜனனி உனக்காக தானே டா என் கிட்ட பேசினா?”, என்று கேட்டாள் வெண்ணிலா. 

“நான் அவளைப் பேசலாம். ஆனா வேற யாரும் அவளை பேசக் கூடாது. வேற யாருக்கும் அந்த அதிகாரம் இல்லை. அப்படி அவளை ஏதாவது சொன்னா அவங்க கிட்ட நான் பேசுறது அது தான் கடைசி நாளா இருக்கும். எனக்கு தலை வலிக்குது. நீங்க சாப்பிடுங்க. நான் ஹாஸ்டல் போறேன்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். 

அவன் சென்றதும் அங்கே மயான அமைதி நிலவியது. ஜனனி அழுது கொண்டிருக்க வெண்ணிலாவும் அருணும் அதிர்ச்சியில் இருந்தார்கள். விஷ்ணுவோ போதி மரத்தடியில் அமர்ந்திருப்பது போல அமைதியாக இருந்தான்.  

“டேய் நீ என்ன இவ்வளவு அமைதியா இருக்க? இங்க என்ன நடக்குதுன்னு பாத்துட்டு தானே இருந்த?”, என்று கேட்டான் அருண். 

“ஆமா பாத்துட்டு தான் இருந்தேன். அதுக்கென்ன இப்ப?”, என்று விஷ்ணு நக்கலாக கேட்க “என்ன டா இப்படி சொல்ற? அவன் பேசினதை கவனிச்ச தானே?”, என்று குழப்பமாக கேட்டான்.

“ஆமா கவனிச்சேன். இப்ப அதுக்கு என்ன இப்ப?”

“என்ன டா இப்படிச் சொல்ற?”

“என்னை என்ன பண்ணச் சொல்ற? குழப்புறது ராகவன் தான். அந்த பொண்ணைக் கண்டா எறிஞ்சு தான் விழுவான். ஆனா அவன்னா அவனுக்கு அவ்வளவு பிடிக்கும்”

“என்ன டா சொல்ற?”

“அந்த அளவுக்கு தான் எனக்கு புரிஞ்சது. அதுக்கு மேல அவன் ஒண்ணுமே சொல்லலை. அதனால அவன் அப்படி தான்னு பழகிக்கிட்டேன். அந்த பொண்ணுக்கு இவன் மேல பைத்தியம். அது இவனுக்கு தெரியும். அவளை ஆசையா பாப்பான். ஆனா அவளை திட்டுவான். அதுக்கு மேல ஒண்ணும் எனக்கு தெரியாது”

“அவன் கிட்ட கேப்போமா?”

“அது தப்பு ஜனனி. அவன் நம்மளை மாதிரி எல்லாம் சாதாரணமானவன் இல்லை. இவ்வளவு பேரும் புகழும் இருந்தும் நம்ம கூட சாதாரணமா பழகுறான். அதுக்காக நாம ஓவர் அட்வான்டேஜ் எடுக்க கூடாது. அவன் பெர்சனல் வாழ்க்கைல நாம மூக்கை நுழைக்க கூடாது. இதை இதோட விடுங்க”, என்று சொல்ல அவர்களுக்கும் அதைச் செய்வதை தவிர வேறு வழி இருக்க வில்லை. 

அதற்கு அடுத்த வாரத்தில் ஒரு நாள் ஸ்ருதியைப் பார்த்தான் ராகவன். ஆனால் அவளுக்கு தன்னைக் காட்டிக் கொள்ளாமல் ஒழிந்து நின்று கொண்டிருந்தான். 

ஸ்ருதியும் வைஷ்ணவியும் ஒரு மரத்தடியில் வந்து அமர்ந்தார்கள். இவன் அவர்களையே பார்த்துக் கொண்டிருக்க அவளது முகத்திலே பார்வையை பதித்திருந்தான். 

யாரோ தன்னைப் பார்ப்பதாக தோன்ற ஸ்ருதி தலையை திருப்பி திருப்பி பார்த்தாள். ஆனால் அவன் அவள் கண்ணில் படவில்லை. அவளால் தன்னை உணர முடிவது எப்படி என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. 

அப்போது “அம்மா ஸ்ருதி, எப்படி இருக்க டா”, என்ற படி அவர்கள் அருகில் வந்து பேசினாள் அந்த கல்லூரியில் பெருக்கித் துடைக்கும் ஆயா. 

“சுமதிக்கா நீங்களா? நான் நல்லா இருக்கேன் கா”, என்று சொல்லி புன்னகைத்தாள் ஸ்ருதி. வைஷ்ணவியும் தூரத்தில் நின்ற ராகவனும் அவர்கள் பேச்சைக் கவனித்தான். 

“ரொம்ப நன்றி மா”, என்று ஸ்ருதியிடம் சொன்னாள் அந்த பெண். 

“என்ன சுமதிக்கா நீங்க? எனக்குல்லாம் நன்றி சொல்லணுமா? அனிதா நல்லா இருக்காளா? அவ சந்தோஷமா இருந்தா போதும்”, என்று சொல்லி புன்னகைத்தாள் ஸ்ருதி.

“நல்லா இருக்கா மா. உனக்கு வெறும் நன்றி சொன்னா கூட பத்தாது மா. இப்போதைக்கு என் குடும்பத்துக்கு குல தெய்வம் மா நீ. என் பொண்ணு கல்யாணம் நடக்கவே நீ தான் காரணம். நீ நல்லா இருக்கணும் தாயி”, என்று அவள் கண் கலங்க அவளது கண்ணீரைத் துடைத்து விட்டாள் ஸ்ருதி. 

அக்கா, இன்னைக்கு இருக்குறவங்க நாளைக்கு இருக்கப் போறது இல்லை. அதே மாதிரி நாம போகும் போது எதையும் எடுத்துட்டு போகப் போறதில்லை. உங்களுக்கு என்னால உதவ முடிஞ்சது. அதனால செஞ்சேன். இது பெரிய விஷயமா? போங்க கா”

“அது உன்னோட பெருந்தன்மை மா. நீ நல்லா இருக்கணும் தாயி. சரி மா, எனக்கு வேலை கிடக்கு. நான் போகட்டா?”

“சரிங்கக்கா”, என்று சொன்னதும் அங்கிருந்து சென்றாள் சுமதி. அப்போது ராகவன் நின்றிருக்கும் இடத்தில் அந்த சுமதியிடம் மற்றொரு ஆயா “என்ன சுமதி அந்த பிள்ளைங்க கிட்ட போய் பேசிட்டு வர?”, என்று கேட்டாள். 

“அந்த ரோஸ் கலர் சுடிதார் போட்டுருக்கே. அவ தான் கா என்னோட குலதெய்வம்”

“அப்படி என்ன பண்ணினா?”, என்று யோசனையில் இருந்த ராகவன் அவர்கள் பேச்சைக் கேட்டான். ஸ்ருதி என்ன செய்திருப்பாள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தது அவனுக்கு. 

“எதுக்கு அப்படிச் சொல்ற சுமதி?”

“அன்னைக்கு அந்த பொண்ணு மட்டும் அவ கையில கிடக்குற நாலு சவரன் வளையலை கழட்டிக் கொடுக்கலைன்னா என் பொண்ணோட மாமியாகாரி என் பொண்ணு கல்யாணத்தையே நிறுத்திருப்பா. யார் இந்த காலத்துல இப்படி செய்வாங்க? நான் இந்த காலேஜ்ல கக்கூஸ் கழுவுறவன்னு கூட பாக்காம இவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்கு. நல்ல பிள்ளைக்கா”, என்றாள் சுமதி. 

“பரவால்லயே?”, என்று ஆச்சரியமாக எண்ணிக் கொண்டான் ராகவன். ராகவன் ஸ்ருதியை இமைக்காமல் பார்த்தான். ஏனோ இன்று அவன் பார்வையில் அவள் புதிதாக தெரிந்தாள். அந்த நொடி எதுவுமே அவன் மனதில் இல்லை. ஸ்ருதியே அவன் மனதில் நிறைந்திருந்தாள். ஆனால் அது காதல் தான் என்று உணரத் தவறினான் ராகவன். 

இப்படியே நாட்கள் நகர்ந்து அந்த ஒரு வருடம் வெற்றிகரமாக முடிந்தது. ராகவன் படிப்பை முடித்து விட்டான். இனி ராகவனை எப்படி பார்க்க என்ற கவலையில் இருந்தாள் ஸ்ருதி. 

அதை தேன்மொழியிடம் புலம்ப “நீ தானே சொன்ன, அவங்க கூட இருக்குற ஒரு வருஷம் போதும்னு. இப்ப எதுக்கு புலம்புற?”, என்று கேட்டாள் தேன்மொழி. 

“என்ன பண்ண? ஆசை விடவே மாட்டிக்குது டி”

“அவன் அங்க இருந்தா மட்டும் என்னவாம்? உன்னைத் திட்டிட்டு தான் இருப்பான்?”

“திட்டவாது பேசுவாங்களே?”

“நீ திருந்தவே மாட்டியா டி?”

“திருந்த நான் என்ன தப்பு செஞ்சேனாம்?”

“ஒண்ணா ரெண்டா? அது எல்லாம் தப்புன்னு உனக்கு புரிஞ்சா தானே? சரி அவன் கிட்ட உன் காதலையாவது சொல்லித் தொலைக்க வேண்டியது தானே டி?”

“சொன்னா கண்டிப்பா முடியாதுன்னு தான் சொல்லுவாங்க”

“உனக்கே தெரியுது தானே? அப்புறம் ஏன் டி அவன் நினைவா உன்னையே நீ கரைச்சிக்கிற?”

“அது அப்படி தான். உன் மனசுலயும் யார் மேலயாவது காதல் வரும். அப்ப உனக்கும் சரியா தூங்க முடியாது, சரியா சாப்பிட முடியாது. அப்ப புரியும் காதலோட வலி”

“எனக்கு அந்த கொடுமை வேண்டாம் பா. நீ படுற வேதனையைப் பாத்த அப்புறமும் நான் அந்த தப்பை செய்வேனா? ஏன் ஸ்ருதி நான் உன் கிட்ட ஒண்ணு கேக்கவா?”

“என்ன டி அனுமதி கேக்குற? கேளு”

“ஒரு வேளை கடைசி வரை என் அண்ணன் உன்னை ஏத்துக்கலைன்னா என்ன பண்ணுவ?”

“கடைசி வரைக்கும் வெயிட் பண்ணுவேன்”

“அது தான் அந்த கடைசி எது?”

“உங்க அண்ணானோட கல்யாணம்”

“ஸ்ருதி”

“ஆமா தேனு, அவங்க இன்னொரு பொண்ணு கழுத்துல தாலியைக் கட்டிட்டா அதுக்கப்புறம் எல்லாத்தையும் முடிச்சிக்குவேன்”

“அப்படின்னா?”

“அது அப்படி தான்”

“என்னவோ? உனக்காகவாது அவன் உன்னை ஏத்துக்கணும் டி”

“சரி அவங்க அடுத்து என்ன பண்ணப் போறாங்க?”

“என்ன வீட்ல தின்னுட்டு தூங்குவான்”

“இல்லை டி, மியூசிக்ல கான்செண்ட்ரேட் பண்ணப் போறாங்களா? இல்லை வேலையா?”

“ஓ அதைக் கேக்குறியா? எனக்கு தெரிஞ்ச வரைக்கும் அவன் சென்னைல ஒரு வீடு தேடிட்டு இருக்கான். மியூசிக் போட அவனுக்கு தனி வீடு தான் தேவையாம். அது மட்டுமில்லாம அவன் ஏற்கனவே செலக்ட் ஆகிருக்குற கம்பெனில இருந்து ஜாயினிங்க் டேட் சொன்ன உடனே அங்க வேலைக்கு போவான் போல? வீட்ல அம்மா அப்பாவும் சென்னைக்கே ஷிப்ட் ஆகிறலாமானு யோசிக்கிறாங்க டி. ஆனா அமர் படிப்புக்காக யோசிக்காங்க. சரி மேடம் நீங்க அடுத்து என்ன பண்ணப் போறீங்க?”

“உங்க அண்ணன் எந்த கம்பெனில செலக்ட் ஆகிருக்காங்களோ அதே கம்பெனில வேலைக்கு சேர சின்ஸியரா படிக்க போறேன்”

“நிஜமாவா டி சொல்ற?”

“சத்தியமா தான் சொல்றேன். எனக்கு இதை விட்டா வேற என்ன முக்கியமாம்?”

“திருத்த முடியாது அண்ணியாரே, உங்களை திருத்தவே முடியாது”

“தேனு”

“என்ன?”

“நீ சொன்னது நடக்குமாடி? நான் உன் அண்ணியாவேனா? அவங்க காலுக்கு கீழ எனக்கு ஒரு இடம் கிடைச்சா போதும் டி”

“நீ என்ன லூசா ஸ்ருதி? காலடில இடம் கிடைக்க அவன் என்ன கடவுளா?”

“எனக்கு அதுக்கும் மேல?”

“இதுக்கு மேல நான் உன் கிட்ட பேசினா மெண்டல் ஆகிருவேன். நாளைக்கு பேசுறேன் வை”

“ஏய் வச்சிறாத டி. சரி இந்த வாரமாவது வீட்டுக்கு வாயேன். எவ்வளவு  நாளா கேக்குறேன்?”

“என்னது வீட்டுக்கா? அங்க போனா நவீன் இருப்பானே?”, என்று எண்ணிக் கொண்டு “நிறைய புராஜெக்ட் வேலை இருக்கு டி. பிளீஸ் புரிஞ்சிக்கோ”, என்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!