Skip to content
Post Views: 2,812
மகளை பள்ளியில் இறக்கி விட்டவர், “நல்லா படி பாப்பு” என பையை அவளிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்டவள், “அப்பா..” என தயக்கமாக அழைத்தாள்
“என்ன மா ?”
“அப்பா இனிமேல் அண்ணண சாப்பிடும் போது திட்டாதீங்க பா.. அண்ணா பாவம் ப்பா அவன் பசி தாங்க மாட்டான்..” என கூற
அவளை பார்த்து புன்னகைத்தவர், “சரி இனிமேல் திட்ட மாட்டேன்” என கூற
Advertisement
“அப்பா னா அப்பா தான், தேங்க்ஸ் பா” என சிரிப்புடன் கூறியவள் “சாயங்காலம் நானே விது, தியா கூட வந்துறேன்” என உள்ளே சென்றாள் .
போகும் மகளையே பார்த்தவர், “பாப்பா எவ்வளவு பாசமா இருக்கு, அந்த நாய் எங்கயாச்சும் முகம் குடுத்து பேசுதா, எப்ப தான் இந்த பையன் திருந்தப் போறானோ” என நினைத்தவர் தன் கடைக்கு சென்றார்.
Advertisement
Advertisement
முல்லை தன் வகுப்பு போக, “முல்லை, முல்லை..” என சைக்கிளை நிறுத்திவிட்டு கத்திக் கொண்டே ஓடு வந்தான் விது..விதுரன்.
“ஹே.. முல்லை உனக்கு காதே.. கேட்காத” என முச்சிறைக்க அவள் முன் நின்றான் .
Advertisement
“சாரி விது, பார்க்கல..” என்றாள் அசடு சிரிப்புடன்.
அவன் போலியாக முறைக்க ,
“சரி விடு ,டெஸ்ட்க்கு படிச்சியா..?” என கேட்டாள் முல்லை.
“எங்க.. எங்க அண்ணங்காரன் நேத்து இந்தியா ஆஸ்திரேலியா மேட்ச் போட்டுட்டு உட்கார்ந்துட்டான். மேட்சும் இன்டெர்ஸ்டிங்கா போச்சா.. நானும் பார்த்துட்டு.. படிக்கல காலைல கொஞ்சம் படிச்சேன், அந்த எட்டாவது கேள்வி தான் ஒன்னும் புரியல” என உதட்டை பிதுக்கினான்.
“அது ஈசி டா..” என அதை விளங்கியவள், “அவ்ளோ தான்” என தோளைக் குலுக்க
“ஹே எப்புட்ராரா…. டாப்பர் னா டாப்பர்.. தான் பா. டெஸ்ட் எழுதறேன்.. மாஸ் காட்றேன்” என்றான் விதுரன் கெத்தாக.
இவர்களை பார்த்த தியா, வேகமாக ஓடி வர வந்த வேகத்தில் முல்லை மீது நன்றாக மோதி விட்டாள், முல்லை விழுக போக அவளை விழுகாமல் புடித்த விது, “முல்லை ஒன்னும் ஆகலைல” என கேட்டவன்.
“ஏய் மென்டல் எவ்வளவு டைம் சொல்லிருக்கேன் அவளை இப்படி தள்ளாதனு” என தியாவை திட்ட
“விது தியாவ திட்டாத ” என்றாள் முல்லை.
“சாரி முல்லை, நான் தெரியாம தான்.. வேணும் னே பண்ணல” என தியா மண்ணிப்பு கேட்க
“பரவாயில்லை டி , எனக்கு அடி எதுவும் படல, இவன்தான் ஓவர் ரியேக்ட் பண்றான்” என்றாள் முல்லை.
“நான் ஓவர் ரியேக்ட்டா , இரு நான் அங்கிள் கிட்ட சொல்றேன்” என்றான் விதுரன் முறைப்புடன். முல்லையும் பதிலுக்கு முறைத்தாள்.
விதுரனும் முல்லையும் பள்ளியில் சேருவதற்கு முன்பே நண்பர்கள், இவர்கள் ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் சேர்ந்த பிறகு அன்பரசன் ஒரு நாள் விதுரனிடம், “விது குட்டி , நீயும் முல்லையும் ஒரே கிளாஸ் தான, மத்த பசங்க யாரும் முல்லைய அடிக்காம, தள்ளி விடாம பத்திரமா நீ தான் பார்த்துக்கனம்” என்றார்.
“ஏன் அங்கிள் ?”, என அவன் சந்தேகம் கேட்க
“அது நம்ம முல்லைக்கு ஹார்ட் ஆப்ரேஷன் பண்ணிருக்கோம்ல, யாராவது அவளை அடிச்சாலோ, தள்ளிவிட்டாலோ அவளுக்கு நம்மல விட ரொம்ப வலிக்கும் அதான்”
“பாவம் ல முல்லைக்கு வலிக்கும் ல .. நான் பாத்துக்கிறேன் அங்கிள் நீங்க பயப்படாதீங்க” என்றான் பெரிய மனிதனை போல் அப்போதே.
இப்போது எல்லாம் எவ்வளவோ பரவாயில்லை, சிறு வயதில் ஒருவரையும் அவளை தொடக்கூட விட மாட்டான் தோழியை பாதுக்காக்கிறேன் என்ற பெயரில். சில நேரங்களில் அவனின் அதீத பாதுகாப்பு முல்லைக்கு எரிச்சலை கூட தரும்.
“அது ஏதோ அப்போ ஆப்ரேஷன் பண்ண புதுசுல அப்பா உங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லீட்டாரு .. இப்ப வர நீ அதை ஃபாலோ பண்ணுவியா ?” என முல்லை கடுப்பாக கேட்க.
“அப்போ இப்போ எப்பவும் ஃபாலோ பண்ணுவேன், அங்கிள் என்ன நம்பி தான் உன்ன ஸ்கூலுக்கு அனுப்புராரு” என்றான் அவளை முறைத்தபடி . பதிலுக்கு அவளும் முறைக்க இருவரும் சண்யிட்டுக் கொண்டனர்.
“டேய் போதும் நிறுத்துங்க.. காலையிலே சண்ட போட்டுட்டு” என இருவரையும் கடித்துக் கொண்ட தியாவின் அண்ணன் தீபக், “ஹே சோத்து மூட்ட லன்ச் பேக் எடுத்துட்டு வந்த இல்லை ஸ்கூல் பேக் எடுத்துட்டு வரனும்னு அறிவு இல்லையா” என பேகை அவளிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்ட தியா, “அது அண்ணானு நீ எதுக்கு இருக்க அதான் வேணும்னே வெச்சுட்டு வந்தேன்” என்றாள் அலட்டலுடன்.
“ம்ம்..பேசுவ இதுவும் பேசுவ இன்னமும் பேசுவ.. அண்ணா பேல் பூரி வேண்டா.. பானிபூரி வாங்குனு வருவ இல்ல அப்போ இருக்கு உனக்கு” என தீபக் மிரட்ட பானிபூரி என்றவுடன் கட்சி மாறியவள், “ஐயோ அண்ணா நான் சும்மா ஃபன் பண்ணேன்” என சிரிக்க “ஐய நல்லா சிரிச்சே காரியத்தை சாதிசிக்க குட்டிச்சாத்தான்”
“ஹே குட்டிச்சாத்தான் னு சொன்ன டேடி கிட்ட சொல்லிடுவேன்”
“ஹே தியா பிளீஸ் பீளீஸ் டேடி கிட்ட சொல்லாத…” என பயந்ததை போல பாவனை காட்டியவன், “ஐய உங்க டேடி கிட்ட சொன்னா பயந்திருவோம் பாரு .. போ போய் எக்ஸாம்ல பாஸ் ஆகுற வழிய பாரு” என அவள் தலையில் தட்ட “எல்லாம் எங்களுக்கு தெரியும் நீ மொதல்ல கிளம்பு” என அவனை துரத்தினாள் தலையை தேய்த்துக் கொண்டே.
“ஹே இது என் ஸ்கூல் நீ என்ன துரத்துரது ?” என அவன் சண்டைக்கு வர “அதெல்லாம் நீ பாஸ்டு அவுட் ஆகுறதுக்கு முன்னாடி, இப்போ இது எங்க ஸ்கூல் இடத்த காலி பண்ணு” என்றவளிடம், “நீ வீட்டுக்கு வா இந்த வாய தைக்கிறேன்” என அவள் மண்டையில் தட்டிவிட்டு போனான் தீபக்.
இத்தனை நேரம் அண்ணனும் தங்கையும் அடித்த லூட்டியை ஏக்கம் கொண்ட புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் முல்லை. தோழியின் ஏக்கம் நிறைந்த புன்னகையை பார்த்த விதுரனுக்கு கஷ்டமாக இருந்தது. தன்னையே பார்த்த விதுரனின் புறம் திரும்பி புன்னகைத்தவள், “சரி வாங்க கிளாசுக்கு போலாம்..” என்க மூவரும் வகுப்பிற்கு சென்றனர் .
கிளாசுக்கு வந்து தமிழ் எழிலை காணாமல் அவனைத் தேடி கேண்டினுக்கு சென்றான்.
அப்போது தான் சுட சுட இரண்டு சமோசா ஜூஸுடன் வந்த அமர்ந்த எழில் அவன் எதிரே கன்னத்தில் கை வைத்தபடி அமர்ந்திருந்த தமிழை பார்த்து திருட்டு முழி முழித்தான்.
“வணக்கம்.. என்னைய தெரியுதுங்களா?” என தமிழ் நக்கலாக கேட்க
“நம்ம கேன்டீன் பக்கம் வந்தாலே இவனுக்கு மூக்கு வேர்த்துரும்” என வாய்க்குள் முனங்கியவன், “யாரு..? அன்பரசு மவனா?” என்றவன் கண்களை சுருக்கி கிழவிகளை போல் பார்க்க
“ம்ம் கோபால் மவன்..” என அவன் முதுகில் ஒரு அடி போட்ட தமிழ் அவனிடம் இருந்த சமோசாவை பிடிங்கி அவன் வாய்க்குள் தள்ளினான்.
“டேய் நாயே.. எவ்வளவு கஷ்டப்பட்டு லைன்ல நின்னு வாங்குனேன் தெரியுமா” என எழில் கத்த
“டேய் காலைல சாப்பிடல டா” என
சாப்பிட்டுக்கொண்டே சொன்னவன் இன்னொரு சமோசாவையும் சாப்பிட்டான்.
“ஏன் மிஸ்டர் அன்பரசன் உனக்கு சோறு போட மாட்டேன்னு சொல்லிட்டாரா?”
“அவரை பத்தி பேசாத எனக்கு எரிச்சலா வருது..” என்றான் எரிச்சலா
“ஏன் இன்னிக்கு என்ன சம்பவம் நடந்துச்சு?
“வழக்கம் போல தான்” என்றதும் அவனைப் பார்த்து கிண்டலாக சிரித்தவன், “இது என்ன புதுசா? தினம் உங்க அப்பன் கிட்ட நீ திட்டுவாங்கிறது வழக்கம் தான. அப்புறம் என்ன புதுசா ஃபீலிங்குகு..”
“சீ சீ.. நான் ஃபீல் எல்லாம் பண்ணல.. இது எப்பவும் நடக்கிறது தான.. சும்மா மூஞ்சிய அப்படி வச்சிக்கிட்டேன்” என்றவன் ஜூஸையும் எடுத்து குடித்து விட
“டேய் கிரைண்டர் வாயா.. எல்லாத்தையும் நீயே திண்ணுட்டா நான் என்ன சாப்பிடுறது?”
“சாரி டா செம பசி அதான்..” என்றவன், “சரி வா கிளாசுக்கு போலாம்” என எழுந்து நிற்க, “ஏதே கிளாசுக்கா.. நீ மட்டும் சாப்பிட்ட இல்ல எனக்கு சமோசா வாங்கி கொடு.. அப்போதான் நான் கிளாசுக்கு வருவேன்” என அங்கேயே அமர்ந்துக் கொண்டான் எழில்.
“சைல்டிஷ்ஷா பிஹேவ் பண்ணாத பக்கி.. ஜூனியர் பசங்க எல்லாம் பாக்குறாங்க. அடுத்த பிரேக்ல வாங்கித் தரேன்.. இப்போ கிளாசிக்கு வா பெல் அடிக்க போகுது டைம் ஆச்சு” என தமிழ் அவன் கையை பிடித்து இழுக்க
“உன்னயெல்லாம் நம்பவே மாட்டேன்பா.. ஒழுங்கா இப்பவே வாங்கி கொடு” என்ற எழிலை முறைத்துக் கொண்டே எழுந்து சென்றவன் கவுண்டரில் சமோசா கேட்க இவனின் நல்ல நேரமோ இல்லை எழிலின் கெட்ட நேரமோ, “தம்பி சமோசா முடிஞ்சுது பா இனி அடுத்த பிரேக் ல தான்” என்றார் அந்த கேண்டீன் அண்ணா.
எழில் தமிழை முறைக்க, “டேய் வடை, கேக் ஏதாவது சாப்பிடுறியா” என பேச்சை மாற்றினான் தமிழ். சரியாக பெல் அடிக்க, “அடுத்த பிரேக்ல வாங்கி தரேன் டா.. இப்போ ஹெச்.ஓ.டி ஹவர்.. லேட்டா போனா அந்த ஆளு ஆப்ஸெண்ட் போட்டிருவான்” என தமிழ் அழைக்க அட்டென்டனஸ் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் முரண்டு பிடிக்காமல் அவனுடன் வகுப்பிற்கு சென்றான் எழில்.
ஜன்னலை வெறித்த படி யோசனையுடன் அமர்ந்திருந்த இசையிடம்,”என்ன ஆழ்ந்த சிந்தனை?” என்றபடி வந்து அமர்ந்தாள் மலர்.
“ஒன்னுமில்ல..” என அவள் மழுப்ப
“ஐயே.. உன் மூஞ்சிய பாத்தா எனக்கு தெரியாதா? ஒழுங்கா சொல்லு” என மலர் வற்புறுத்தி கேட்க “அது.. அது.. என்ன இருந்தாலும் அந்த சீனியர்ர செலைக்ட் பண்றிருக்கலாம் ல..” என்றவளை கொஞ்சம் திகைப்பாக பார்த்தவள், “அடியே.. இன்னேரம் அவங்களே அத மறந்திருப்பாங்க.. இன்னுமா நீ அத பத்தியே யோசிட்டிருக்க” .
“எனக்கு ஒரு மாதிரி அதுவே மண்டைக் குள்ள ஓடீட்டு இருக்கு டி”
“ஒருத்தங்க ஓவர் திங்க பண்ணலாம்.. அதுக்குனு இப்படியா..” என்றாள் சலிப்பாக
“இல்ல டி என்னால இந்த விஷயத்த டாலரேட் பண்ணிக்கவே முடியல.. அவங்க அழுதுட்டு போனது ஒரு மாதிரி கஷ்டமாவே இருக்கு” என்றாள் வருத்தமாக.
அவளுக்கு பதில் சொல்லாமல் ஏதோ யோசித்த மலர், “எனக்கு தெரிஞ்சு இதுக்கு ஒரே வழிதான் இருக்கு..” என்க “என்ன வழி?” என ஆர்வமாக அவள் முகம் பார்த்தாள் இசை.
“பேசாம நீ இதை நேரா தமிழ் கிட்டயே சொல்லீரு..” என்ற மலரை முறைத்தவள், “ஹே.. இதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. வேற ஏதாவது ஈசியான ஐடியா சொல்லு” என்றாள்.
“எனக்கு தெரிஞ்சு இது ஒன்னு தான் ஒரே வழி.. நீ நேரா அவங்கிட்டயே சொன்ன தான் அவங்க என்ன ஃபீல் பண்றாங்க, இன்னும் ஃபீல் பண்றாங்களா இல்லையானு உனக்கு தெரியும். அவங்க ஃபீல் பண்ணல னு தெரிஞ்சிட்டா நீ இதை பத்தியே யோசிக்க மாட்டனு நினைக்கிறேன்.” என்றாள் மலர் தோளை குலுக்கியபடி.
“அவங்க ஏதாவது தப்பா நினைச்சிட்டா..?” என்றவளை மேலும் கீழும் பார்த்த மலர், “நீ நிஜமாவே லூசா.. இல்லை லூசு மாதிரி நடிக்கிறியா?” என கடுப்பாக கேட்டாள் .
“ஏன் டி..” என இசை முகத்தை சுருக்க
“பின்ன என்ன இதுக்கெல்லாம் யாராவது தப்பா நினைப்பாங்களா? அவரு சந்தோஷம் தான் படுவாரு”
“இருந்தாலும் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு.. நான் சொல்ல மாட்டேன்” என்ற இசையை முறைத்த மலர், “இதுலென்ன பயம்.. அவங்க என்ன உன்ன கடிச்சா திங்க போறாங்க.. அடுத்த பிரேக்ல ஐடி டிபார்ட்மென்ட் போறோம்.. நீ தமிழ் கிட்ட சொல்ற.. புரிஞ்சுதா..” என மலர் கூற
“ஹே அதெல்லாம் வேண்டாம் மலர்..” என மறுத்தாள் இசை.
“என்ன அதெல்லாம் வேண்டாம்.. என்னால இனிமேல் உன்னோட ஆடிஷன் புலம்பல கேட்க முடியாது.. அடுத்த பிரேக்ல போறோம்.. நீ சொல்ற.. நோ மோர் ஆர்கியூமென்ட்ஸ்” என்றதும்
இசை ஏதோ கூற வர அவள் வாய் மீது கை வைத்து மூடியவள், “மலர் போச்சுக்கு மறு பேச்சு இல்ல..” என்றாள் மலர் முடிவாக .
error: Content is protected !!