Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரு விழி காதல் பேச

இரு விழி காதல் பேச-01

இரு விழி காதல் பேச

EPI -1



Advertisement


உருவாய் அருவாய், உளதாய் இலதாய் மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய், அருள்வாய் குகனே !!

என்று மனமுருக அந்த வேலவனை காலை வேளையில் வேண்டிக் கொண்டிருந்தார் கோமளவள்ளி. பின்பு தீபாரதனை காண்பித்து குங்குமம் சூடி பூஜையறையிலிருந்து வெளியில் வந்தார். அங்கு அவர் கணவர் மணிமாறன் காபியுடன் இவருக்காக காத்திருந்தார்.

Advertisement

Advertisement

” கோமு! வந்து காபி குடி”

” பரிதி வந்துட்டானா? இன்னைக்கு சாய்ங்காலம் பொண்ணு பாக்க வருவான்ல ?”

Advertisement

“கோமு… இப்ப தான் காலை 6 மணி. நீ அதுக்குள்ள சாயந்திரத்துக்கு போய்ட்டே”

“என்ன பண்ண எல்லாம் பரிதி ய நினைச்சு வர கவலை தாங்க. அவன் வாழ்க்கை ஒரு நல்ல நிலைக்கு வந்துட்டா எனக்கு வேறென்ன வேணும்?”

“அதான் பரிதிட்ட நேத்திக்கே இத பத்தி பேசிட்டோமே. அவனும் சரின்னு சொல்லிட்டானே. பின்ன என்ன? கண்டிப்பா வருவான். நீ போ அவன் காலேஜ் கிளம்புறத்து குள்ள டிபன் ரெடி பண்ணு. நான் கடைக்கு கிளம்புறேன்”

“சரிங்க… அப்படியே ரஞ்சனிட்டயும் மாப்பிள்ளைட்டயும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க”

“சரிம்மா நான் பாத்துகறேன்”

********************************************

“அம்மா! டிபன் ரெடியா? காலேஜக்கு டைம் ஆகுது”

“எல்லாம் ரெடி பரிதி நீ வா”

அங்கு அந்த சாப்பாட்டு மேசைக்கு அருகில் உள்ள தொட்டிலில் தன் மூன்று மாத மகள் பவ மொழி யை கிடத்தி விட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தான் இளம்பரிதி.

******************************

மணிமாறன் கோமளவள்ளி தம்பதியினர்க்கு இரு பிள்ளைகள். மூத்தவன் இளம்பரிதி. கல்லூரி பேராசிரியன். தனது முப்பத்தி இரண்டாவது வயதிலேயே மனைவியை இழந்து மூன்று மாதமேயான மகளுடனும் தன் பெற்றோருடனும் வசிக்கிறான்.

இளையவள் சிவரஞ்சனி. கணவன் பிரபாகரனுடன் சேர்ந்து இரு கிளைகள் கொண்ட பழ அங்காடி நடத்தி வருகிறாள். இத்தம்பதிக்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் அமிழ்தா என்ற மகள் இருக்காள். மணிமாறன் பள்ளி தலைமையாசிரியராக ஓய்வு பெற்றவர். கோமளவள்ளி அவ்வில்லத்தின் அரசி.

**********************************

“பரிதி… இன்னைக்கு சீக்கிரம் வந்துடுவல்ல பா? “

“ம்ம்… “என்று சொல்லி விட்டு அமைதியாக சாப்பிட்டு எழுந்தான்.

“அம்மா… பவிக்கு இப்போ தான் பால் கலந்து குடுத்தேன். நீங்க பாத்துகோங்க… ஏதும்னா ஃபோன் பண்ணுங்க. நான் கிளம்புறேன்”

“சரிப்பா… பத்திரமா போய்ட்டு வா”

தன் மகள் உறங்கும் தொட்டிலின் அருகே சென்று அவள் உறங்கும் அழகினை கண்களில் நிரப்பிக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டான் இளம்பரிதி.

‘முருகா! இனியும் சோதிக்காம பரிதிக்கு நல்ல வாழ்க்கை அமைச்சுக்குடுப்பா’

என்று செல்லும மகனை வேதனையுடன் பார்த்தபடி வேண்டிக் கொண்டார் கோமளவள்ளி.

***********************************************

“மதி! மதி! கதவ திற”

“இதோ வர்றேன் மா..” என்றபடி வந்து கதவை திறந்தாள் நிறைமதி.

பெயருக்கேற்ற பூரண சந்திரனைப் போன்ற அழகான முகம் ஆனால் சோர்ந்து வாடிப்போய் இருந்தது.

” என்ன மதி? ரொம்ப முடியலயா?”

“ஆமா மா… வாமிட் வந்துட்டேருக்கு… ஏதும் மாத்திர குடும்மா என்னால முடியல” என்றபடி போய் கட்டிலில் சுருண்டு படுத்தாள்.

“அதுவா சரியாகிடும் மதி… மாத்திரலாம் போடக்கூடாது. மூணு மாசம் முடியபோதில்ல இனி வாமிட் படி படியா குறைந்திடும். நீ வெளில வா அம்மா உனக்கு பால் ஆத்தி தரேன்”

“நீ போ மா நா வரேன்”

செல்லும் தன் தாயை கண்ணீர் மல்க பார்த்துக் கொண்டிருந்தாள் நிறைமதி. இந்நிலைமையிலும் தன் மேல் நம்பிக்கை கொண்டு பாசத்துடன் பார்த்துக்கொள்ளும் பெற்றோரை எண்ணி நிறைமதிக்கு மனம் நெகிழ்ந்தது.

**************************************

“என்ன விஜீ மதி எழுந்துட்டாளா?”

“ம்ம் எழுந்துட்டாங்க… இதோ வருவா”

“சரத்தும் வைஷ்ணவியும் எங்க?”

“சரத் ஜிம் போயிருக்கான் வைஷூ இன்னும் எழல போல”

“சரி விஜீ நீ போய் மதிக்கு பால் கலந்து எடுத்து வா” என்றபடி தன் மகனின் அறையை பெருமூச்சுடன் பார்த்தார் சுந்தர்.

***************************************

சுந்தர்-விஜயா தம்பதியினர்க்கு திருமணமாகி முப்பத்து மூன்று வருடங்கள் ஆகிறது. சுந்தர் பத்திரப்பதிவுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விஜயா சென்ற வருடம் வரை தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். இவர்களுக்கு இரு பிள்ளைகள். மூத்தவன் சரத்சந்திரன் புகழ் பெற்ற பண்ணாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறான். அவன் மனைவி வைஷ்ணவி. நடன பள்ளியில் பாரம்பரிய நடனங்கள் பயிற்றுவிக்கும் ஆசிரியர். திருமணமாகி நான்கு மாதங்கள் ஆகிறது. இளைய மகள் நிறைமதி 24 வயது நிரம்பிய அழகிய மங்கை. அவள் வாழ்வில் நான்கு மாதங்களுக்கு முன்பு வீசிய புயலால் பாதிக்கப்பட்டு இப்போது மூன்று மாத கருவை சுமந்து கொண்டுருக்கிறாள்.

********************************************

“வா மதி .. உட்காரு… விஜீ!! மதி வந்துட்டா பாரு”

“அம்மா வருவாங்க விடுங்கப்பா”

“இதோ வந்துட்டேன் மதி இந்தா பால் எடுத்துக்கோ! ஏங்க நீங்க காபி எடுத்து கோங்க”

சுந்தரும் நிறைமதியும் அமைதியாக தங்கள் பாணங்களை பருகினர். விஜயா கண்களாலே சுந்தரிடம் பேச சொல்லி சைகை செய்தார். ஆமோதித்த சுந்தர் தன் மகளிடம் பேச தொடங்கினார்.

“அப்புறம் மதி இப்போ பரவால்லயாம்மா? இல்ல டாக்டர் கிட்ட போகலாமா?”

“இல்லப்பா இப்போ பரவால்ல “

“சரிம்மா…. ம்ம்… நான் சொல்லிருந்தேனே ஒரு பையன பத்தி அவுங்க இன்னைக்கு சாயந்திரம் உன்ன பாக்க வராங்க மா… உனக்கு ஓகே தான”

“……”

“என்னம்மா மதி என்ன யோசனை?”

“ஒன்னுமில்ல பா… வரவங்களுக்கு என்ன பத்தி எல்லாம் சொல்லிடிங்களா? அவங்களுக்கு ஏதும் பிரச்சனையில்லயா?”

“எல்லாம் சொல்லிட்டேன் மா…. எதும் பிரச்சினையில்ல. அந்த பையனுக்கு மூணு மாச பொண்ணு இருக்கு.. அவர் மனைவி இறந்து இப்போ இரண்டு மாசம் தான் ஆகுது. தன் பொண்ணு அம்மா இல்லாம வளர கூடாதுன்னு கல்யாணம் பண்ண ஓத்து கிட்டார்”

“ம்ம்”

“சரி மதி… நீ கொஞ்ச நேரம் தோட்டத்துல போய் உட்கார் அம்மா டிபன் செஞ்சுட்டு கூப்பிட்றேன்.”

“ம்ம்” என்று தலையசைத்தபடி அங்கிருந்து செல்லும் மகளை கண்ணில் நீர் ததும்ப பார்த்தார் விஜயா

“விஜீ!!!”

கணவரின் அதட்டலான குரலில் கண்களை துடைத்து கொண்டு

”இவளுக்கு இப்படி ஒரு நிலைமையாங்க… இவ வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சா தான் என்னால நிம்மதியா இருக்க முடியும்”

”விஜி…. நம்ம மதி யாருக்கும் தீங்கு நினைச்சதில்ல…. ஏதோ போதாத காலம் இப்படி ஒரு நிலைல நிக்க வச்சுருக்கு. ஆனா இனி அவ கண்டிப்பா நல்லா இருப்பா…. பையன் வீட்டுல நம்ம எல்லா உண்மையும் சொல்லியும் சரின்னு சொல்லிருக்காங்கன்னா ரொம்ப நல்ல மனுஷங்களா நம்ம மதிக்கு ஏத்த அவள புரிஞ்சுகிற ஆளுங்களா தான் இருப்பாங்க”

“ஆமாங்க… எல்லாம் நல்லபடியா நடந்து முடிஞ்சா பழனிக்கு போய் அந்த வேலவன பார்த்துட்டு வரணும்”

“ஹம்ம் கண்டிப்பா… வா போய் ஏதும் சமைக்கலாம்…. நான் ஏதும் உதவி பண்றேன்”

என்றவாறு தன் மனைவியுடன் சமையலறைக்கு சென்றார் சுந்தர்.

இவர்களின் வேண்டுதலை அந்த வேலவன் நிறைவேற்றுவானா?

-பேசும்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!