Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரு விழி காதல் பேச

இரு விழி காதல் பேச

இரு விழி காதல் பேச

 

Teaser

‘பவிக்குட்டி உனக்காக தான்டா இதெல்லாம், உனக்கு அம்மா வேணும் அதுக்காக தான் அப்பா கல்யாணம் பண்றேன். என் குட்டிம்மாக்கு எல்லாரும் வேணும் அதுக்காக தான்’



Advertisement

 

தன் மூன்று மாத மகள் பவமொழி யிடம் தன் மனம் விட்டு பேசி கொண்டு இருந்தான் இளம்பரிதி.

 

Advertisement

‘அண்ணா, ரெடியா? பவிய குடு நான் பாத்துக்றேன். நீ வா பொண்ணு வீட்ல கிளம்பிட்டாங்களாம் கோவிலுக்கு, நாமும் சீக்கரம் போகனும் வா’ என்றாள் சிவரஞ்சனி.

Advertisement

 

‘சரி ரஞ்சனி, வா போகலாம்’ ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பினான் இளம்பரிதி.

 

Advertisement

****************************************************

கண்ணாடி முன் உட்கார்ந்து இறுகிய முகத்துடன் தனக்கு செய்யப்பட்ட அலங்காரத்தை பார்த்துத் கொண்டிருந்தாள் நிறைமதி. அவளை அறியாமல் மனது பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. தலையை குலுக்கி அவற்றை விரட்டினாள்.

 

‘ நோ, இனி பழச எதையும் நினைக்க கூடாது. அதுவும் சூர்யதேவ் என் வாழ்க்கையோட முடிஞ்சு போன அத்தியாயம். இனி என் வாழ்க்கை இதோ இவன கொண்டே ஆரம்பிக்கனும்’ என்று மெல்லிய புன்னகையோடு தன் மூன்று மாத வயிற்றை வருடினாள் நிறைமதி.

 

‘மதி ரெடியா? கிளம்பலாமா? ‘ என்று அழைத்தபடி வந்தாள வைஷ்ணவி.

 

‘ஹம் போகலாம் அண்ணி’

 

‘ இனியாவது புத்தியோடு நடந்துக்க… உன்ன பெத்தவங்களுக்கும் அண்ணனுக்கும் இனி ஒரு அவமானத்த தேடி தராத’ என்று இடித்துரைத்தாள் வைஷ்ணவி.

 

‘ம்ம்’

தன் அண்ணியின் வார்த்தைகளால் வெளிவர துடித்த கண்ணீரை அடக்கி கொண்டு அவளுடன் புறப்பட்டாள் நிறைமதி.

******************************************************

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!