முன் (பின்) கதை
யூட்யூப் சேனல் ஒன்றின் நேர்காணல் ரெக்கார்டிங் மற்றும் அவர்களது எஃப் எம் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி அது.
இருவரும் அவரவர் சிரித்த முகத்துடன் உள்ளுக்குள் இருக்கும் ஆரவாரம், ஆர்ப்பரிப்பு அனைத்தையும் மறைத்துக்கொண்டு பக்கம் பக்கம் அமர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சி தொகுப்பாளினி இருவரையும் கிண்டல் செய்துகொண்டும் சிரித்துக்கொண்டும் கலகலவென நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார்.
நிகழ்ச்சி ஆடியோ வீடியோ ரிக்கார்டிங், நிகழ்ச்சி தயாரிப்பாளர்,இயக்குனர், மானேஜர் என்று ஒரு கூட்டமே காமெராக்கு இந்த பக்கம் அவர்கள் பேசுவதை கிண்டல் செய்துகொண்டும், ரசித்துக்கொண்டும் அவரவர் வேலைகளை செய்துகொண்டிருந்தனர்.
Advertisement
ஒவ்வொரு கேள்வியும் அவளை நோக்கி அம்பென பாய 300 பருத்திவீரர்கள் படம் ஹீரோ லியோனிடாசு போல அவைகளை எதிர்கொண்டாள்.
செலிபிரிட்டி என்றால் சும்மாவா? இவர்கள் முரண்பாடான கேள்விகளுக்கு சிக்காமல் பதில் சொல்லியாகவேண்டுமே!
தொகுப்பாளினி “மேம் நீங்க சொல்லுங்க இந்த ஃபீல்டுல ஜெயிக்க எந்தெந்த குணம், அம்சம் ,ரொம்ப முக்கியம் நினைக்கறீங்க”
Advertisement
எப்போதுமான உள்ளார்ந்த ஊக்கமளிக்கும் தொனியில் “ம்ம்ம்… ரசனை அந்த ரசனையில ஒரு தெளிவு, கிரியேட்டிவிட்டி அதிலும் நேர்மையான கிரியேட்டிவிட்டி, கூடவே கொஞ்சம் தைரியம் இருந்தா போதும்..ன்னு நினைக்கிறேன்” என்றாள்.
Advertisement
கேட்ட நொடி கைதட்டல் கொடுக்காமல் இருக்க முடியவில்லை.
தொகுப்பாளினி “சார் நீங்க” அவனை நோக்கி கேட்க
அவன் “ம் எது வேணும் எது வேணாம் என்கிற தெளிவு.இங்க நம்ம எல்லோருக்கும் புகழ் வேணும் நமக்குன்னு ஒரு இடம் வேணும்ங்குறது ஆசை இருக்கும் அதுல கூடவே பீஸ் ஆஃப் மைண்ட் ரொம்ப முக்கியம் இல்லையா. அப்படியான ஒரு தெளிவு ஒருத்தங்ககிட்டே இருக்கணும் நினைக்கிறேன்”
Advertisement
“ச்சச….சூப்பர் சார் கலக்கிட்டிங்க” என்றவள்
மக்களே வழக்கம் போல சார் இந்த முறையும் மேடத்தோட கொஞ்சம் கூட முரண்படவே இல்லை. நீங்க பாட்டு கேட்டு வாங்க நான் சார் கிட்ட காண்ட்ராவா கேட்க கேள்வியோட வரேன்.
இணைந்திருங்கள் இது உங்களது பண்பலை…
உன்னாலே… எந்நாளும்… என் ஜீவன் வாழுதே… பாடல் ஒலிக்க தொடங்கியது.
அவன் “ஏங்க அது என் கருத்து மட்டும் தான் நீங்க என்னங்க நீங்க…” சிரித்துக்கொண்டே விசாரிக்க
தொகுப்பளினி “அதான் சார் உங்க கருத்தை மட்டும் தான் சொன்னீங்க ஆனா பாருங்க ப்ரோக்ராம் ஆரம்பிச்சதுல இருந்து நீங்க மேடமோட கருத்துக்கு கொஞ்சம் கூட எதிர்ப்பே காட்டல”
“ஏங்க எங்க ரெண்டு பேர் கருத்தும் எப்பவுமே ஒரே மாதிரி தான் இருக்கும்” சிரித்துக் கொண்டே பதில் சொன்னனான்…
தொகுப்பாளினி இம்முறை கண்களில் ஹார்ட் பறக்க விட்டுக்கொண்டு அவனையே ரசனையாக பார்த்துக்கொண்டு இருந்தாள்.
பாட்டு முடிந்து நிகழ்ச்சி தொடங்கவும் “வாங்க மக்களே அடுத்த கேள்விக்கு போகலாம். மேடம் பத்தி நிறைய பேசிட்டோம் இப்போ சாரை பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா?
“சார் சொல்லுங்க காதல்னா என்ன” என்று கேட்டுவிட்டு புருவம் உயர்த்தி பார்த்துக்கொண்டு கண்கள் முழுக்க பளீச் பல்பு மின்ன பார்த்தாள்
அவன் சட்டென “காதல்னா காதல் தான் ” என்றான்.
பல்ப் அணைந்தது.
சட்டென பூத்த எரிச்சலில் தொகுப்பாளினியும் “சார் உங்க பார்வையில காதல்னா என்னன்னு சொல்லுங்க சார்” கேட்டாள் தெளிவாக
“ஓ அப்படி வரீங்க… ம்ம்.. கொஞ்சம் க்ரிஞ்சா இருக்கும் பொறுத்துக்கோங்க. அம்மா வயித்துல இருந்து வர்றது ஒரு பிறப்புனா பிடிச்சவங்கள பார்த்து காதல்ல இன்னொரு முறை பிறப்போம்”
அவன் அப்படி சொல்லவும் அங்கிருந்தவர் எல்லாம் அதன் அர்த்தம் வீசிய புயலில் “ஓஒ..” என்று கூச்சலிட தொகுப்பாளினி “சார் ஹீரோ மெட்டீரியல் சார் நீங்க” என்று சிரித்துக்கொண்டே சொல்ல அவன் அவள் புறம் திரும்பி கண்களை பார்த்து சிரித்தான், அவளுக்குள் காதல் பிரவாகம்.
“மெழுகா உருக வெச்சிட்டீங்க சார். மக்களே இதோ இந்த பாட்டு கேட்டுட்டு வாங்க நான் ஸ்டெடி ஆகிட்டு வரேன்”
நீ பார்த்த விழிகள் பாடல் தொடங்கியது
அவன் பார்வையோ அந்த பாடலை அடுத்து ஓட விட பிளான் செய்தவனை பார்த்து ஏன் டா? என்று கேட்டது.
அவள் பார்வையோ விரல்கள் எத்தனை இருக்கிறது என்று தீவிரமாக குனிந்து எண்ண தொடங்கி இருந்தது.
மூவரும் ஒரு வார்த்தை கூட பேசாமல் பாட்டுடன் லயித்திருந்தனர்.
பாட்டு முடிந்து வந்ததும் இம்முறை அவனிடம் ‘உங்க முதல் காதல் அனுபவம் சொல்லுங்க’ என்று கேட்டாள் தொகுப்பாளினி
“அடடா! சிக்குனனா… சொல்லனுமா” என்று கேட்டவன் சிட்டிகை நேரம் யோசித்து “ம்ம்.. ஒரு பொண்ணு பச்ச புடவை கட்டிக்கிட்டு கோயில் செட்டப்ல நின்னு நடந்து சிரிச்சிக்கிட்டு கேமெரா பார்த்துட்டு இருந்தாங்க. அத பார்த்தேன், கவுந்துட்டேன்”
அவள் கண்கள் விரிய வியந்து அவனை பார்க்க
தொகுப்பாளினி “என்னது என்னது என்னது எனக்கு புரியல விவரமா சொல்லுங்க” கேட்டு ஆர்வமாக பார்க்க
“அதெல்லாம் முடியாது. அவ்ளோதான் கதை” என்றான்
எல்லோரும் அங்கே ஆர்வம் கூடி மேலும் ஏதேனும் சொல்வானா என்று அவனை பார்த்துக்கொண்டே இருக்க
யாஞ்சி யாஞ்சி பாடல் ஒலிக்க தொடங்கியது…
