அத்தியாயம் 5
அத்தியாயம் 5
ப்ளூ ரோஸ் ஹோட்டல்.. நந்தவனத்திற்கும் கானகத்திற்கும் நடுவில் அமைந்துள்ள அரண்மனை போல் தோற்றமளிக்கும்.. பகலில் பார்ப்போர் விழிகளுக்கு அருமையான நந்தவனமாக தெரியும் இவை.. இரவில் அச்சுறுத்தும் கானகமாக தெரியும்..
Advertisement
யாரேனும் இரவு நேரத்தில்.. இதன் மத்தியில் தொலைந்து.. மீண்டும் தன் இடத்தை வந்தடைவதற்க்கு குறைந்தது ஒரு மணிநேரமாவது ஆகும்.. அப்படிப்பட்ட இடத்தில் இருள் போர்வைகளுக்கிடையே.. கேட்பாரின்றி வீழ்ந்து கிடந்தாள் சிற்பிகா..
விழா அரங்கில் மயக்கம் வருவது போல் தோன்றிய நொடி.. ராஜாங்கத்தின் முகத்தினைக் கண்டு.. அவர் வேலையென அறிந்தவள்.. செய்வதறியாது திகைத்தாள்.. அந்நிலையிலும் இனி இங்கிருந்தால் அது தனக்கு ஆபத்து என புரிந்து.. எப்படி இங்கிருந்து செல்வது என யோசித்துக் கொண்டிருந்தாள்..
Advertisement
அப்பொழுது மேடையில் பரதம் ஆடிய சிறுவர்கள் அனைவரும் சிற்பிகாவிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினர்.. அதை தனக்கு சாதகமாக்கிய சிற்பிகா.. தடுமாறிய கால்களை முயன்று சரிப்படுத்திக்கொண்டு.. அவர்களுடன் வெளியேறினாள்..
Advertisement
தடுக்க முயன்ற ராஜாங்கத்தை ஒருவர் பேச்சில் பிடித்துக்கொள்ள.. அவரால் சிற்பிகாவை பின்தொடர முடியவில்லை.. அதிலும் அவர் பசையுள்ள பார்டியாதலால் சட்டென்று மூஞ்சில் அடித்த மாதிரி பேச்சை முடித்துக் கொள்ளமுடியாமல் நின்றுக்கொண்டிருந்தார்..
அம்பிகா சிற்பிகாவின் நடை மாற்றத்தை உணர்ந்து அவள் பின்னால் செல்லப்போனார்.. ஆனால் அவர் சீமந்தபுத்திரியோ அம்பிகாவை செல்ல விடவில்லை..
Advertisement
சிறுவர்களுடன் ஒரு புகைப்படம் மட்டும் எடுத்தவள்.. மெல்ல தன்னறைக்கு செல்ல முயன்றாள்.. ஆனால் அவளுள் சென்றிருந்த மயக்கமருந்து தன்னுடைய முழு சுயரூபத்தையும் காட்ட ஆரம்பித்தது… விழிகள் சொருகி.. நடை தள்ளாடி செல்லும் வழி அறியாது.. கால் போன போக்கில் சென்றுக் கொண்டிருந்தாள்.. ஒரு நிலைக்கு மேல் அவள் உடலின் ஒவ்வொரு பாகமும் தன்நிலை இழக்க.. பற்றில்லா கொடியாய் தரையில் வீழ்ந்தாள்.. சிற்பிகா.
இருள் சூழ்ந்திருக்கும் வேளை பூஞ்செடிகள் மத்தியில் கிடந்தவளை யாரும் பார்க்கவில்லை.. ஆனால் தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்த ராஜாங்கத்திற்கு.. தான் கொடுத்த மருந்தின் வீரியம் தெரியுமென்பதால்.. மிகவும் பொறுமையாக ஒவ்வொரு இடத்தையும் அலசி ஆராய்ந்தார்.. அவரின் நரிப்பார்வைக்கு சிற்பிகா கீழே விழுந்திருப்பது தெரிய.. அவர் முகம் வெற்றிக்களிப்பில் மின்னியது.. பின்னே இன்று அவர் கரங்களுக்கு முழுதாக ஐந்து கோடிகள் வரும் அதிர்ஷ்டமான நாள் அல்லவா..
மெல்ல அவளிடத்தில் நெருங்கியவர்.. கன்னத்தை பிடித்து திருப்பி பார்த்தார்.. விழிகள் சொருகியிருந்தது.. கை கால் அசைவிருந்தது.. ஆனால் வேறு உணர்ச்சிகள் யாவும் இல்லை.. அதைக் கண்டு திரும்பதியடைந்தவர்.. வேறு ஒரு எண்ணிற்கு அழைத்தார்..
” ஹலோ.. தம்பி எங்கயிருக்கிங்க..”
…
” ஹ்ம்ம்.. வேலை முடிஞ்சுடுச்சு தம்பி.. நீங்க கொடுத்த மருந்து நல்லா வேலை செஞ்சுயிருக்கு.. ”
…
” இங்கதான் பங்க்ஷன் நடக்குற இடத்துல இருந்து அரைகிலோமீட்டர் உள்ளாரா உள்ள தோட்டத்துல இருக்கோம் வாங்க… என்று பேசி முடித்து போனை வைத்தவரின் விழிகள் ஆசைவெறியில் மின்னியது.. ”
இந்த பேச்சு வார்த்தைகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த சிற்பிகாவின் உள்ளம் நடுங்கியது.. அவளின் புறஉணர்வுகள் தான் மட்டுப்பட்டிருந்தது.. ஆனால் அகஉணர்வுகள் அனைத்தும் தெளிவாகத்தான் இருந்தது..
தனக்கு நேரப்போகும் கொடுமையை எண்ணி.. உள்ளுக்குள் கதறிக்கொண்டிருந்தவளின் ஓலக்குரல்.. யாரும் கேட்டறியமுடியாது என தெரிந்தாலும்.. யாராவது தன்னை ரட்சிக்க மாட்டார்களா என ஏங்கித்தவித்துக்கொண்டிருந்தள் பெண்ணவள்…
கருப்பு உடையணிந்த இருவர் ராஜாங்கத்தின் அருகே வந்தனர்.. ஒருவன் சிற்பிகாவை தூக்கிக்கொண்டு ஹோட்டலின் கார் பார்க்கிங்கிற்குள் நுழைய மற்ற இருவரும் சுற்றுப்புறத்தை அலசிக்கொண்டே அவனின் பின் சென்றனர்..
சிறிது நேரத்திலேயே சிற்பிகாவை சுமந்துக்கொண்ட.. அந்த ஆடிக்கார்.. ப்ளூ ரோஸ் ஹோட்டலை விட்டு வெளியேறியது..
ஒருமணிநேரம் கழித்து.. மனிதநடமாட்டமில்லாத இடத்தில் அமைந்துள்ள அந்த கெஸ்ட் ஹௌஸின் முன்னே நின்றது…
********************************************
அபய் புருவம் நெரிய.. ஒருபுறம் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தான்.. மறுபுறம் இப்பொழுது தான் செய்யப்போகும் செயலால்.. ஏற்படும் விபரீதங்களை பற்றி எண்ணிக்கொண்டிருந்தான்.. ஆனால் அதே சமயம் பழிவாங்குவதால் ஏற்படும் சந்தோஷத்தையும் விட அவனுக்கு மனமில்லை.. அதனால் ஒரு முடிவுடன்.. பெங்களூரின் ஒதுக்குப்புறத்தில்.. சிற்பிகாவை கொண்டு சென்றுள்ள கெஸ்ட் ஹௌசை நோக்கி தன் காரை பயணித்தான்.. அபயசிம்ஹா சக்சேனா..
********************************************
ஓர் பெரிய அறையின் மையத்தில்.. ஆறுபேர் தாராளமாக புரளக்கூடிய மெத்தையில் வீழ்ந்துக் கிடந்தாள்.. சிற்பிகா. அதுவும் அந்த மெத்தை கட்டிலோடு சுழன்றுக் கொண்டிருந்தது.. ஏற்கனவே மயக்கத்தில் இருந்தவளை மேலும் சுழற்றி வதைத்தது இக்கட்டில்.. ஆனால் இவையனைத்தையும்விட அந்த அறையின் ஓரத்தில்.. இவள் காதுபடும் தூரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தவர்களின் வார்த்தைகள் யாவும் அவளை உயிருடன் கொன்று புதைத்து..
” தம்பி.. நீங்க கொடுத்த மருந்து லேட்டானாலும் நல்லா வேலை செய்யுது.. நான் கூட பயந்தேன்.. என்னடா தண்ணில கலந்து கொடுக்க சொல்றாங்களே.. கலர் மாறிடாதுன்னு.. ஆனா தண்ணில போட்ட அடுத்த நிமிஷம் கரைஞ்சு ஒண்ணுமில்லாம போச்சு.. நான் எதுக்கும் ஜூஸ்லயும் கலந்துவச்சேன்னா பார்த்துக்கோங்களேன் ” என நாராசமாய் இளிக்க.. எதிரில் உள்ள மூவரும் அக்கட்டிடமே அதிரும் வண்ணம் சிரித்தனர்..
“அப்புறம் தம்பி அந்த அஞ்சுக்கோடி என ராஜாங்கம் ஒருமாதிரி நெளிந்துக் கொண்டே தலையை சொரிய.. மூவரில் நடுவில் அமர்ந்திருந்தவன்.. அவரிடம் இரண்டு கோடிக்கான செக்கை நீட்டினான்.. வேக வேகமாக அதனை வாங்கியவர் அதில் இரண்டு கோடி மட்டுமே குறிப்பிட்டுருப்பதைக் கண்டு அவர்களை குழப்பமாக பார்த்தார்.. ”
” என்ன பார்க்கிறிங்க ராஜாங்கம்.. இப்போவே உங்ககிட்ட முழுசா அஞ்சுகோடிய தூக்கிகொடுக்க நான் என்ன பைத்தியமா.. ஆறுமாசம் இவ எங்ககூடத்தான் இருக்கனும்.. நாங்க சொல்றதையெல்லாம் இவ செய்யனும்.. அதுக்குத்தான் அஞ்சுகோடி பேசுனோம்.. ஆனா இங்க நடந்ததுக்காக இவ நாளைக்கே தூக்கு போட்டோ இல்லை கையறுத்துக்கிட்டோ செத்து போனா.. நாங்க என்ன பண்றது.. அதுனால இப்போ இவள எங்ககிட்ட சேர்த்ததுக்காக ரெண்டு கோடி கொடுத்திருக்கோம்.. அப்புறம் இவ நாங்க சொல்றதையெல்லாம் செஞ்சா மூனு மாசத்துக்கு அப்புறம் ரெண்டு கோடி கொடுப்போம்.. ஆறு மாசம் முடியும் போது பேலன்ஸ் ஒரு கோடியும் கொடுத்துடுவோம்.. ” என சிற்பிகாவின் பெண்மையை வைத்து பேரம் பேசினான்.. அக்கயவன்..
” தம்பி பாப்பா கொஞ்சம் முரண்டு பிடிக்கும்.. நீங்க அப்படி இப்படி போட்டோ எடுத்து வச்சுக்கிட்டு.. வெளில விட்ருவேன்னு மிரட்டுனா.. தானா உங்க வழிக்கு வந்துடுவா.. அப்படியும் முரண்டு பிடிச்சா.. ரெண்டு போடு போட்டு உங்க வழிக்கு கொண்டு வர உங்களுக்கெல்லாம் தெரியாதா என்ன ” என கேவலமாய் இளித்தவர்.. சிற்பிகாவை திரும்பி கூட பாராது வெளியேறினார்..
சிற்பிகாவைச் சுற்றி நின்ற மூவரும்.. அவளின் பெண்மையை வர்ணிக்க தொடங்கினர்.. ” செம்மையா இருக்காள்ல நான் போன தடவை கோயம்பத்தூர் போன போதுதான் இவ டான்ஸை பார்த்தேன்.. சும்மா சொல்லக்கூடாது அந்த ட்ரடிஷனல் லுக்லையும்.. என்னை டெம்ப்ட் பண்ணிட்டா.. சரி நம்மளோட இந்த வருஷ டார்கெட் இவதான்னு பிக்ஸ் பண்ணி விசாரிச்சா.. மேடம் ஆர்தொடெக்ஸ் டைப்.. சரி தூக்கலாம்னு பார்த்தா.. அதுவும் முடில.. அப்போதான் இவ மாமன பத்தி தெரிஞ்சது.. நானும் லைட்டா நூலு விட்டு பார்த்தேன்.. அஞ்சுகோடில மடங்கிட்டான்.. ”
” இதுவரைக்கும் நாம இவ்ளோ பெரிய அமவுண்ட எவளுக்கும் கொடுத்ததில்லை.. ”
” ஆமா.. ஆனா அந்த பணத்துக்குரிய ஒர்த் இவளுக்கு இருக்கு.. ”அதை மற்ற இருவரும் ஒத்துக்கொண்டனர்..
” ஹ்ம்ம் இந்த வீட்டு ரோஜாவ மடக்குன மாதிரி அந்த காட்டு ரோஜாவையும் எப்படியாவது மடக்கிடனும்டா.. ”
” ஹ்ம்ம் அதுக்கும் நான் ஒரு பிளான் போட்டுட்டேன்.. இன்னும் பத்துநாளுல அந்த காட்டு ரோஜா.. நம்ம படுக்கையை அலங்கரிக்கும் பாரு.. ” என விஷமமாய் சிரிக்க.. மற்ற இருவரும் அந்நாளை எண்ணி கனவு காண ஆரம்பித்தனர்..
அமர், ராஜு, வினித் மூவரும் கல்லூரி நண்பர்கள்.. பெரிய அளவிலான பின்னணி கொண்டவர்கள்.. கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும் பொழுது உடன் படித்த பெண்ணை சீரழித்தனர்.. அப்பெண் கோர்ட் கேஸ் என்று போனதும்.. கொஞ்சம் நடுங்கியவர்கள்.. பெற்றோரின் பணத்தில் அந்த கேஸ் ஒன்றுமில்லாமல் போக.. இவர்கள் சுதந்திரமாக தங்களின் சித்து விளையாட்டுக்களை ஆடத்தொடங்கினர்.. கண்டிக்க வேண்டிய பெற்றோர்கள்.. பெரிய இடத்தில் இதெல்லாம் சகஜம் என தோளை குலுக்கினர்.. அதுவே அவர்களின் அழிவுப்பாதைக்கு வித்திட்டது..
படிப்பு முடிந்ததும்.. மூவரும் ஒன்றாக தொழில் தொடங்கினர்.. தங்களுக்கு மிகவும் பிடித்த பெண்ணை ஆறுமாதம் இருமாதம் என்ற ஒப்பந்தத்தில் கூட்டிக்கொண்டு வேர்ல்டு டூர் செல்வார்கள்.. அதுமட்டுமில்லாது தன் தொழில்முறை நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள், முக்கிய பொறுப்பில் உள்ள அரசு ஊழியர்கள் என அனைவரிடத்திலும் அப்பெண்ணை பங்கு வைத்து.. தனக்கு வேண்டியதை வாங்கிக்கொள்ளும் கீழ்த்தர எண்ணம் உடையவர்கள்..
ஒருமுறை எந்த குடும்ப பெண்ணாவது இவர்களின் விழிகளில் பட்டால்.. அன்றே அவள் வாழ்க்கையின் கடைசி நாளாக அமையும் இல்லையேல்.. நரகத்தின் முதல் நாளாக அமையும்..
சிற்பிகாவின் போதாத நேரம்.. தொழில்முறை மீட்டிங் வந்த வினீத்தின் விழிகளில் பட்டு.. இப்பொழுது இந்நிலையில் வந்து நிற்கிறாள்..
தங்களின் ஆடைகளை களைந்த அக்கயவர்கள் மூவரும் சிற்பிகாவை சுற்றி நின்றனர்.. அமர் ” இந்த அழகு தேவதைய கண்டுபிடிச்ச நம்ம வினித்துக்குத்தான் பர்ஸ்ட் சான்ஸ் என சிரிப்புடன் கூறவும்.. அவன் முகம் சந்தோஷத்தில் மின்னியது..
இவர்கள் சம்பாதனைகள் அனைத்தும் கேட்டுக் கொண்டு மரக்கட்டை போல் படுத்திருந்த சிற்பிகாவின் உள்ளம் தன் மாமனை எண்ணி அருவருத்து போனது… விழிகள் சொருகி வாய் பேச முடியாத நிலையிலும்.. அவர்களிடம் தன்னை விட்டுவிடுமாறு மனதோடு கதறிக்கொண்டிருந்தாள் சிற்பிகா..
இப்பொழுது மட்டும் தன் தாய் உயிரோடு இருந்திருந்தால்.. இந்த இழிநிலை தனக்கு வந்திருக்காதே என மருகியவள்… தெய்வமாகிவிட்ட தாயிடம் தன்னை மட்டும் தனியாக விட்டுச்சென்றதை எண்ணி மனதோடு சண்டையிட்டுக் கண்ணீர் விட்டாள்..
அப்பொழுது அக்கயவனின் கரங்கள் அவள் புடவை விலக்கப்பார்க்க.. அவள் மனம் அய்யோவென அலறியது.. தன் மனதினுள் புதைந்திருந்த மன்னவனுக்காக மாற்றானின் முகம் கூட பார்க்காமல்.. அல்லும் பகலும் தன்னவனையே நினைத்திருந்தவளின் பெண்மையை மற்றவன் தீண்ட முற்படுகிறான்.. அதை தடுக்க இயலா நிலையில் பெண்ணவள் இருக்கிறாள்..
அமர் ” டேய் சீக்கிரம்டா.. எவ்வளவு நேரம் வெயிட் பண்றது என அலுத்துக்கொண்டவன் ” தன் கேமராவின் மூலம் சிற்பிகாவை வீடியோ எடுக்க தொடங்கினான்..
” நான் வேணா ஹெல்ப் பண்ணவா ” என்ற கணீர்குரலில் மூவரும் திடுக்கிட்டு திரும்ப.. முழு ராட்சனாய் நின்றிருந்தான் அபயசிம்ஹா சக்சேனா..
இந்நேரத்தில் இவனை இங்கு எதிர்பாராமல் ஒரு நொடி திடுக்கிட்ட மூவரும் அடுத்த நொடி.. தங்களின் துப்பாக்கிகளை எடுக்க முற்பட்டனர்..
ஆனால் அபயோ அதற்க்கு கூட அவர்களுக்கு அவகாசம் கொடுக்காமல் அருகிலிருந்த பூஞ்சாடியை ஒருவன் தலையில் அடித்து.. அவனை வீழ்த்தியவன் மற்ற இருவரின் முகத்திலும் இரு குத்துதான் விட்டிருப்பான்.. அதற்கே அவர்கள் மூவரும் சுருண்டு கீழே விழுந்தனர்.. இவையெல்லாம் கண் இமைக்கும் நொடியில் நடந்து முடிந்துவிட்டது…
ட்ரக்ஸ் ட்ரிங்க்ஸ் போன்றவற்றிற்கு அடிமையாகிருந்த அவர்கள் மூவரும்.. அபயின் ஒரு அடிக்கு சாகாமல் இருப்பதே ஆச்சரியம் தான்.. அபயின் எதிரியாய் இருக்ககூட இவர்கள் மூவரும் தகுதியற்றவர்கள்.. ஒரு போன் காலில் இவர்கள் கதையை முடிக்க முடிந்தாலும்.. அதில் விருப்பமில்லாமல் அபயே நேரில் வந்து இவர்களை தண்டிக்க நினைத்தான்.. ஏனெனில் இவர்கள் தொட்ட இடம் அப்படி.. ஆழம் தெரியாமல் காலைவிட்டு… அபயின் கோபத்திற்கு ஆளாகினர்..
ரத்தம் சொட்ட சொட்ட வீழ்ந்துக் கிடந்தவர்களை கவனியாமல் நின்றுக்கொண்டிருந்தவனின் பார்வை முழுதும் சுழன்றுக் கொண்டிருந்த சிற்பிகாவின் மேலையே நிலைத்தது..
பின்னால் ஒலித்த காலடியோசையை கேட்டாலும் அவள் மேலிருந்த பார்வையை விலக்காமல் பார்த்திருந்தவன்.. மூவரையும் தன் இடத்திற்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டான்.. அவர்களும் தரையில் கிடந்தவர்களை அள்ளிக்கொண்டு சென்றிவிட.. அபய் சிற்பிகாவை தூக்கிக்கொண்டு தன்னுடைய கெஸ்ட் ஹௌஸிற்கு சென்றான்..
சிற்பிகா இப்பொழுது தப்பித்தாளா.. இல்லை நரியின் பிடியிலிருந்து.. சிங்கத்தின் பிடிக்கு சென்றுவிட்டாளா..? இது நன்மைக்கா இல்லை தீமைக்கா என்பது விதியின்வசம்..
