Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என்னவனின் மௌனங்களும் எனது காதலும்

என்னவனின் மௌனங்களும் எனது காதலும்

வணக்கம் தோழமைகளே,  என்னால இப்பவும் நம்ப முடியல எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த உங்க எல்லாருக்கும் மனமார்ந்த நன்றியை சொல்லிக்கிறேன். இது என்னோட முதல் கதை அங்கங்கே எனது சிறு கவிதைகளும் இடம் பெறும். ரொம்ப பயமா தான் இருக்கு இருந்தாலும் இது என்னோட முதல் முயற்சி இதுல எந்த தவறு இருந்தாலும் நீங்க எனக்கு சொல்லுங்க நான் கத்துக்குறேன் உங்களோட முழு ஆதரவையும் அன்பையும் எனக்கு தாங்க மைடியர் நலவிரும்பிகளே..

ஒரு சின்ன முன்னுரை எப்படி இருக்குன்னு சொல்லுங்க நண்பர்களே….

குடும்ப நல நீதிமன்றத்தில் கணங்கள் நிறைந்த இதயத்தோடு நீதிபதியின் முன் மதுரா நின்று கொண்டிருந்தாள் அவளின் எதிரே சித்தார்த்தும் நின்று கொண்டிருந்தான். நீதிபதி மதுராவிடம் என்ன காரணம் எதற்காக உங்களுக்கு விவாகரத்து வேண்டும் மதுரா என்று கேட்டார்கள். அதற்கு அவள் இவர் எனக்காக எந்த நேரமும் ஒதுக்கவில்லை என்னுடன் இருக்கும் நேரமும் மிகக் குறைவு என்னுடன் மனம் விட்டு பேசுவது கூட இல்லை இவர் என்னுடன் இருந்தும் நான் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறேன். அவருக்கு பிடித்த வாழ்க்கையே அவர் வாழ்ந்து கொள்ளட்டும் என்றாள்.

அங்குள்ள அனைவருக்கும் மதுராவின் பதில் சிரிப்பை தந்தது ஆனால் அவளுக்கு மட்டுமே தெரியும் உணரப்படாமல் நிராகரிக்கப்பட்ட அன்பின் வலியும் வேதனையும். எதிரே இருந்த சித்தார்த் மௌனமாக அவளின் விருப்பம் இதுவென்றால் எனக்கும் சம்மதம் என்றவாறு சொன்னான்.



Advertisement

இதை கவனித்த நீதிபதி அவர்கள் மதுராவும் சித்தார்த்தும் வருகிற ஒரு வருடம் தொடர்ந்து ஒரே இல்லத்தில் சேர்ந்து வாழ வேண்டும். ஒரு வருடம் கழித்தும் இருவரும் சேர்ந்து தாங்கள் பிரிய வேண்டும் என நினைத்தால் அப்பொழுது விவாகரத்து வழங்கப்படும் என்று உத்தரவு விட்டார்.
நீதிபதியின் தீர்ப்பை எண்ணியவாறே தனது நான்கு வயது மகள் ஆராவுடன் நடந்து வந்தால்.

மதுராவுக்கு நன்றாகவே தெரியும் தனக்கான அன்புதான் சித்தார்த்திடமிருந்து கிடைக்கவில்லை ஆனால் ஒரு சிறந்த தந்தையாக அவனின் அன்பு முழுவதும் ஆராவிற்கு தருபவன் என்று. இருந்தாலும் தனக்கான அன்புக்கும் உணர்வுகளுக்கும் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலும் இருந்ததில்லை. ஆனாலும் மதுராவிற்கு சித்தார்த் என்றால் மிகவும் பிடிக்கும் இவர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் அல்ல வீட்டில் உள்ள பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் மதுராவின் மொத்த சந்தோசமும் சித்தார்த் மட்டும்தான் இன்று வரை அப்படித்தான் ஏன் அவள் சாகும் வரை அவன் மட்டுமே அவளுக்கானவன்.

சித்தார்த் மிகவும் நல்லவன் தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவன் ஆனால் மதுராவாக பேசினால் ஏதாவது பேசுவான் ஏதோ கடமைக்கு அவளுடன் வாழ்வது போல் வாழ்வான். இதை மதுராவால் சிறிதும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை ஏனென்றால் அவள் வாழ்வின் மீதி பாதி அத்தியாயம் சித்தார்த் மட்டுமே.
அவளது காதலும் உணர்வும் அவனுக்கு புரிகிறதா இல்லை தெரியவே இல்லையா என்ற குழப்பத்தோடு ஐந்து வருடமாக வாழ்ந்து வந்தவள் இப்பொழுது இவ்வளவு பெரிய முடிவை எடுத்துள்ளால். அதுவும் அவனின் தனிமையே அவனது சந்தோசம் என்று இவள் நினைத்ததால் ..

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!