Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இரு விழி காதல் பேச

இரு விழி காதல் பேச 05

Epi – 05

இரு விழி காதல் பேச – 05



Advertisement

கண்ணாடி முன் உட்கார்ந்து இறுகிய முகத்துடன் தனக்கு செய்யப்பட்ட அலங்காரத்தை பார்த்துத் கொண்டிருந்தாள் நிறைமதி. அவளை அறியாமல் மனது பழைய நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருந்தது. 

Advertisement

‘ எப்படி எல்லாம் மறந்து இந்த புதிய வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள முடியும்? என்னால் சூர்யதேவ் பற்றி இளம்பரிதிட்ட எப்போ எல்லாம் சொல்ல முடியும்?? முதலிலே சொல்லிருக்கனுமோ? ஆனால் இளம்பரிதி தான் சொல்லவே விடல… முருகா இந்த திருமண வாழ்க்கையை எதிர்கொள்ள நீ தான் துணை நிற்கனும்’

Advertisement

‘ நோ, இனி பழச எதையும் நினைக்க கூடாது. அதுவும் சூர்யதேவ் என் வாழ்க்கையோட முடிஞ்சு போன அத்தியாயம். இனி என் வாழ்க்கை இதோ இவன கொண்டே ஆரம்பிக்கனும்’ என்று தலையை குலுக்கி பழைய நினைவுகளை விரட்டினாள். பின் 

மெல்லிய புன்னகையோடு தன் மூன்று மாத வயிற்றை வருடினாள் நிறைமதி.

Advertisement

‘ செல்லக்குட்டி இன்னைக்கு நாம ரெண்டு பேரும் வேற வீட்டுக்கு போறோம். அங்க உனக்கு அப்பா அக்கா எல்லாம் இருக்காங்க தெரியுமா? நாம் எல்லோரும் இனி ஒன்னா இருப்போம்… அம்மா உனக்கும் அக்காக்கும் தினம் பாட்டு பாடுறேன் சரியா?’  

தன் வயிற்றில் இருக்கும் பிள்ளையிடம் மனதிற்குள் பேசி கொண்டிருந்தாள் நிறைமதி. இப்போது தினமும் தன் பாடலை அலைபேசியில் கேட்கும் பவமொழி யின் நினைவு வந்து அவள் புன்னகைத்து கொண்டாள்.

“மதி ரெடியா? கிளம்பலாமா? ” என்று அழைத்தபடி வந்தாள் வைஷ்ணவி.

“ஹம்ம் போகலாம் அண்ணி”

” இனியாவது புத்தியோடு நடந்துக்க… உன்ன பெத்தவங்களுக்கும் அண்ணனுக்கும் இனி ஒரு அவமானத்த தேடி தராத. உன்னால் இதுவரை பட்டதே போதும். நான் கல்யாணம் பண்ணி வந்த இந்த நாலு மாசத்துல பாதி நாள் உன் பிரச்சினையிலே போச்சு… இனி போற இடத்துலே நல்லபடியா பிழச்சுக்கோ.. இங்க பெட்டிய கட்டிட்டு வராம இருந்தா போதும். எங்கள இனியாவது நிம்மதியா இருக்க விடு” என்று இடித்துரைத்தாள் வைஷ்ணவி.

“ம்ம்”

“சரி வா… கோவிலுக்கு நேரமாச்சு… மாப்பிள்ளை விட்டுல வந்துடுவாங்க”

தன் அண்ணியின் வார்த்தைகளால் வெளிவர துடித்த கண்ணீரை அடக்கி கொண்டு அவளுடன் புறப்பட்டாள் நிறைமதி.

******************************************

“பவிக்குட்டி இன்னைக்கு அழகா இருக்காளே! என்னடா குட்டி என்ன வேணும் உங்களுக்கு?” என்று தன் மகளிடம் பேசியபடியே தயாராகி கொண்டிருந்தான் இளம்பரிதி.

பின்பு தன் அறையில் மாட்டியிருந்த தன் மனைவி மகிழினி – யின் புகைப்படத்திற்கு அருகே சென்று அதை தன் கைகளில் எடுத்து மெதுவாக வருடினான்.

‘மகி! ஏன் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமையனும்? அவ்வளவு அவசரமா என்ன விட்டு எங்க போன? உங்க அம்மா வீட்டுக்கு போகும் போது இரண்டு மாசத்துல வரேன்னு சொன்னில ஏன் வரல? இப்போ நானும் பவியும் இந்த நிலைமைல இருக்கோம். மகி! உனக்கு என் மேல் கோவம் வருதா? அதுக்குள்ள நம்ம அத்தான் அடுத்த கல்யாணத்துக்கு ரெடி ஆகிட்டான் அப்படினு ? ஆனா எனக்கு வேற வழி தெரியலை… ரொம்ப பயமா இருக்கு மகி…. என்னால நம்ம பவிக்குட்டிய தனியா வளர்க்க முடியுமான்னு பயமா இருக்கு… நாளைக்கு எனக்கு ஏதும் ஆச்சுன்னா பவிக்கு யாரு இருப்பா? ஒரே குழப்பமா இருக்கு மகி! அதான் நான் இந்த திருமணத்துக்கு சரின்னு சொன்னேன். நிறைமதி கண்டிப்பா நம்ம பவிக்கு நல்ல அம்மாவா இருப்பா மகி.. ஏனோ முதல் தடவை அவங்கள பாக்கும் போது அப்படி தான் தோனுச்சு… நம்ம பவியும் நிறைமதிட்ட நல்லா ஓட்டிகிட்டா பாத்தியா? நீ தான் மகி எங்களுக்கு வழி காட்டணும்… இப்போ உன் ஃபோட்டோ எல்லாம் உள்ளே வைக்கிறேன். சரியான சமயம் வரப்போ பவிக்கிட்ட காட்டி எல்லாம் சொல்லுவேன் மகி… ‘

மகிழினியின் புகைப்படத்தயும் பின் அவனும் மகிழினியும் சேர்ந்து எடுத்த புகைப்படங்களையும் எடுத்து ஒரு பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தி பரண் மேல் வைத்தான். 

பவமொழியை கையில் ஏந்தி கொண்டு,

” பவிக் குட்டி!! உனக்காக தான்டா இதெல்லாம், உனக்கு அம்மா வேணும் அதுக்காக தான் அப்பா எல்லாம் பண்றேன். என் குட்டிம்மாக்கு பெரிய பொண்ணு ஆனதும் அப்பாவ புரிஞ்சிப்ப தானே? தப்பா நினைக்க மாட்டியே?”

என்று கண்ணில் நீர் திரையிட தன் மகளிடம் கேட்டான். அதுவும் தன் தந்தையின் வருத்தத்தை போக்குவது போல் அவனைப் பார்த்து தன் மழலை சிரிப்பை உதிர்த்தாள். தன் மகள் கொடுத்த பதிலில் தன் கண்ணீரை துடைத்துக் கொண்டு தானும் புன்னகைத்தான் இளம்பரிதி.

“அண்ணா, ரெடியா? பவிய குடு நான் பாத்துக்றேன். நீ வா பொண்ணு வீட்ல கிளம்பிட்டாங்களாம் கோவிலுக்கு, நாமும் சீக்கரம் போகனும் வா” என்றாள் சிவரஞ்சனி.

“சரி ரஞ்சனி, வா போகலாம்”ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து கிளம்பினான் இளம்பரிதி.

*********************************************

மாங்கல்யம் தந்துனானே மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே த்வம் சஞ்சீவ சரத சதம்”

என்று ஐயர் மந்திரம் ஓத பெற்றோரும் உற்றோரும் அட்சதை தூவி வாழ்த்த அந்த வேலவன் சாட்சியாக நிறைமதி – யின் கழுத்தில் திருமாங்கல்யம் சூடினான் இளம்பரிதி.

இரு பெற்றோரும் முகத்தில் சந்தோஷமும் கண்ணில் கண்ணீரும் ஒருங்கே படற நின்றனர். திருமணத்திற்கு யாரையும் அழைக்கவில்லை. இரு குடும்பத்தாரும் கூடுதலாக சிவரஞ்சனி-யின் மாமியார் பின் வைஷணவியின் பெற்றோரும் வந்திருந்தனர். அனைவரும் மணமக்களை வாழ்த்திய பின், 

“பரிதி! நீயும் நிறைமதியும் பிரகாரத்த சுத்தி வந்துடுங்க… நாங்க இங்க எல்லாம் எடுத்து வைக்கிறோம்… பின்ன நாம கிளம்பலாம்…” 

” சரிம்மா… ரஞ்சனி பாப்பாவ குடு” என்று பிள்ளையை வாங்கியவன் நிறைமதியை பார்த்து தலையசைத்து விட்டு முன்னே நடந்தான். நிறைமதி அவனை பின் தொடர்ந்தாள்.

“நிறைமதி!! ஆர் யு ஓகே? டயர்டா இருக்க மாதிரி தெரியுது… உன்னால பிரகாரம் ஃபுல்லா வர முடியுமா?”

” ஐ அம் ஓகே!! காலை கொஞ்சம் நேரமே எழுந்தது டயர்டா இருக்கு… வேற ஏதும் இல்லை… “

“ஐ பிராமிஸ் யு நிறைமதி… கண்டிப்பா இந்த வாழ்க்கைய ஏன்டா ஏத்துகிட்டோம்னு ஒரு நாளும் உன்ன நினைக்க வைக்க மாட்டேன். நீ எந்த டென்ஷனும் இல்லாம ரிலாக்ஸா இரு… என்ன உன் நண்பனா நினைச்சுக்கோ…. உனக்கு என் கூட பேச சுலபமா இருக்கும் சரியா?”

“ஹிம்ம் சரி… பாப்பாவ தாங்களேன்”

“இல்ல நிறைமதி… உனக்கு தூக்கிட்டு நடக்க சிரமம்…. நான் கார்ல பாப்பாவ தரேன். ஓகே?”

“சரிங்க”

பின் இருவரும் பிரகாரம் சுற்றி வந்தவுடன் பிரபாகரனும் சிவரஞ்சனியும் தம்பதியினை அழைத்துக் கொண்டு நிறைமதியின் வீட்டுக்கு சென்றனர். அங்கே வைஷ்ணவி ஆலம் சுற்ற நிறைமதி தன் கணவன் மற்றும் மகளுடன உள்ளே சென்றாள். அங்கே பால் பழம் சாப்பிட்டு சில சம்பிரதாயங்கள் முடிந்தவுடன் நிறைமதி தன் கணவன் வீடு செல்ல தயார் ஆனாள்.

“மதி!! நேரத்துக்கு சாப்பிட்டு மாத்திர போடனும். அடுத்த செக்கப் அப்ப அம்மா வரேன்… நீ உடம்ப பாத்துக்க…. அதோட பவி பாப்பாவயும் இனி நல்ல பாத்துக்கனும் சரியா?” என்று கண்ணீருடன் விஜயா சொல்ல அவரை கட்டிக் கொண்டு அழுதாள் நிறைமதி.

“விஜீ!! நேரமாகுது பாரு”

விஜயா நிறைமதியின் கண்ணீரை துடைத்து விட்டு நெற்றியில் முத்தமிட்டார்.

நிறைமதி தன் தந்தையிடம் வந்தாள்.

“அப்பா!!! வரேன் பா!” என்று குரல் தழுதழுக்க கூறினாள்.

சுந்தரும் தன் குரலைச் செறுமி கொண்டு

” சரிடா மதி!! போய்ட்டு வாடாமா… இனி எப்போதும் நீ சந்தோஷமா இருப்ப” என்றார்.

பின்னர் தன் அண்ணன் சரத்சந்திரனிடமும் அண்ணி வைஷ்ணவியிடமும் விடைப்பெற்று தான் வாழப்போகும் வீட்டுக்கு புறப்பட்டாள் நிறைமதி.

*********************************

“வாம்மா நிறைமதி” 

சிவரஞ்சனி ஆலம் சுற்ற தன் மருமகளை மனதாற மகிழ்ச்சியுடன் வரவேற்றார் கோமளவள்ளி.

” இங்க சாமியறைக்கு வந்து விளக்கேற்று நிறைமதி”

நிறைமதி விளக்கேற்ற அருகில் இளம்பரிதி பவமொழியுடன் நின்று குடும்பமாய் கடவுளை வணங்கினர்.இங்கும் பால் பழம் கொடுத்து பிற சடங்குகளை முடித்த பின்

” பரிதி நீ பவியயும் நிறைமதியயும் உன் ரூமுக்கு அழைச்சுட்டு போ… நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்து வரேன். அங்கே சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க… ” 

” சரிம்மா அப்படியே பவிக்கு பால் கலந்து எடுத்து வாங்க “

” சரிப்பா”

“நிறைமதி வா போகலாம் “

“ஹ்ம்ம் ” 

பவமொழி யை தூக்கி கொண்டு இளம்பரிதியும் அவனுடன் நிறைமதியும் அவர்கள் அறைக்கு சென்றனர்.

பேசும் –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!