Skip to content
Post Views: 2,715
அத்தியாயம்-13
வெளியில் இருந்து பார்க்க சிறிய ஹோட்டலாக இருந்தாலும், உள்ளே விசாலமான புல்வெளியில் ஆங்காங்கு டேபிள் மற்றும் சேர்கள் இடப்பட்டிருக்க, டேபிள் மேல் ஒளி விளக்குகள் அதன் மெல்லிய தங்க நிற ஒளியைப் பாய்ச்சிக் கொண்டிருந்தது.
Advertisement
நந்தன் மற்றும் நேத்ராவின் வருகைக்கு முன்பே அங்கே அவர்களுக்காக காத்திருந்தான் நளன்.
சந்தன நிற டீ ஷர்ட்டும் அதற்க்கு ஏற்றார் போல் பேண்ட்டும் அணிந்து, இடக்கை அவன் அலைபேசியை பிடித்து அவன் காதுக்குக் கொடுத்துக் கொண்டிருக்க, வலக்கையயை அவன் இடுப்பில் ஊன்றியிருந்தவனது முறுக்கேறிய கை புஜங்கள் இரண்டும் அவன் உடல் வலிமையை எடுத்துக்காட்டியது.
Advertisement
Advertisement
நேத்ராவுடன் உள்ளே நுழைந்த நந்தன் நேத்ராவிடம் “எங்க இன்னும் வரலையா” என்பது போல் கண்களால் வினவினான்.
கண்களை சுற்றிலும் சுழற்றி நளனைத் தேடியவளின் கண்களில் பட்டது நளனின் பின்புறத் தோற்றமே. எப்போதும் பார்மல் உடையில் டீக்காக இருக்கும் தன்னவனை, இப்போது கேசுவல் உடையில் கண்டவளின் கண்கள் தானாக விரிந்துகொள்ள, கைகள் தன்னவனை தன் அண்ணனுக்கு சுட்டிக்காட்டியது.
Advertisement
யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தவன் தன் பின்புறம் அரவம் உணர்ந்து திரும்பிப் பார்த்தான்.
அங்கு நேத்ராவைக் கண்டதும் “ஐ வில் டாக் டு யூ லேட்டர்” என்று போனில் கூறியவன், நந்தனைப் பார்த்து புன்னகை முகத்துடன் “ஹாய், ஐ ஆம் நளன், நைஸ் டு மீட் யூ” என்றான் வலக்கையை உயர்த்தி கைகுலுக்கும் பொருட்டு.
நந்தனும் பதிலுக்கு புன்னகை முகத்துடன் “நைஸ் டு மீட் யூ டூ” என்றான்.
நந்தனுக்கு அருகே தாமரை வண்ண சல்வாரில் எளிமையாக ஒப்பனையில் இருந்தவளின் வலக்கையைப் பற்றி தன் புறம் இழுத்தவன், அவள் இடுப்பைச் சுற்றி கை வைத்து நேத்ராவின் காதருகே குனிந்து “ஹனி, யு லுக் காட்ஜியஸ்” என்றான் கிசுகிசுப்பாக.
நளனின் செயலில் திணறியவள் வேகமாக அவன் காலை மிதித்தாள். அவள் மிதித்ததில் ஒரு காலை தூக்கிக் கொண்டு நேத்ராவின் மெல்லிடையைச் சுற்றியிருந்த கையை விலக்கியவன் “ஆ… என்று லேசாகக் கத்திவிட்டு ஹே ஹனி வாட் ஹப்பெண்ட்” என்றான்,
ஆ என்ற மெல்லிய சத்தத்தில் நளனிடமிருந்து வேகமாக விலகியவள் “அது ஒன்னும் இல்லாண்ணா கால் தடுக்கியிருச்சு” என்று ஈ என்று இளித்தபடி நந்தனிடம் பாசாங்கு செய்தாள்.
இவர்கள் அலும்பல் தெரியாத அளவுக்கு நந்தன் ஒன்றும் சிறு குழந்தை அல்லவே.
நேத்ரா கண்களை உருட்டி நந்தனை காண்பித்த பின்பு சுதாரித்த நளன், நேத்ராவின் மீது காதலன் பார்வையைப் பதித்துவிட்டு “சாரி வாங்க உக்காரலாம்” என்றவன் இருவரையும் அழைத்துச்சென்று அவன் ரிசர்வ் செய்திருந்த டேபிளில் அமர வைத்தான்.
அங்கே அமர்ந்திருந்த மூவரும் அமைதியாக இருக்க அந்த அமைதியை முதலில் குலைத்தது நளன். “ஹாய் நந்தன் நான் என்னை பத்தி சொல்லீடுறேன், என் பேரு நளன்…” என்று ஆரம்பித்தவன், அவனைப் பற்றி அனைத்தையும் நந்தனிடம் கூறி முடித்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் அந்த புல்வெளி மேல் அமைக்கப்பட்டிருந்த உணவகத்தில், ஒரு சிறு மேடை அமைத்து அதில் நாட்டியக் கச்சேரி நடந்து கொண்டிருக்க அதை காண்பதற்காக நேத்ரா எழுந்து சென்றிருந்தாள்.
நளன் கூறுவதை சிரித்த முகத்துடன் கேட்டுக் கொண்டிருந்த நந்தன் ஏதோ கேட்க வருவது போல் தோன்றவும் பேச்சை நிறுத்தி “நந்தன் நீங்க எது கேக்குறதா இருந்தாலும் வெளிப்படையா என் கிட்ட கேட்கலாம், நான் எதுவும் தப்பா நினைக்க மாட்டேன்” என்றான் நளன்.
“அது, நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது இவ்வளவு சொத்து இருக்க நீங்க, அதுவும் வெளிநாட்ல படிப்பை முடிச்ச நீங்க எப்படி நேத்ராவ… இதுக்கு முன்னாடி உங்களுக்கு…” என்று நந்தன் தயங்கவும்,
“இட்ஸ் ஓகே, நீங்க கேக்க வரது எனக்கு புரியுது, எனக்கு, என்கிட்ட இப்போதைக்கு எந்த சொத்தும் இல்ல” என்ற நளனிடம் புருவத்தை யோசனையாக சுருக்கினான் நந்தன்.
“ஐ மீன் எனக்கு என்னோட சொந்த உழைப்புல நானா எவ்வளவு உயரத்துக்கு போறேனோ அது தான் என்னோட சொத்து, அதை முதல்ல உங்க கிட்ட நான் சொல்லீடுறேன்”.
“அண்ட் உண்மை தான் வெளிநாட்ல படிச்ச எனக்கு எப்படி நேத்ராவ… எனக்கு தெரியலை பட் ஒன்னு மட்டும் என்னால உறுதியா சொல்ல முடியும், ஷி இஸ் மை பஸ்ட் லவ், அண்ட் ஷி வில் பீ மை லவ் பாறேவேர்.
என்னோட முதல் காதலும் நேத்ரா தான், என்னோட வாழ்க்கை முழுமைக்கும் நான் காதலிக்கப் போற பொண்ணும் என்னோட ஹனி மட்டும் தான்” என்றான். அங்கே நின்று மேடையில் நடக்கும் நிகழ்ச்சியை கண்டு ரசித்துக் கொண்டிருந்த நேத்ராவை காதல் பார்வை பார்த்துக் கொண்டே…
நளனின் காதலை அவன் வார்த்தை மற்றும் கண்களின் கண்ட நந்தனுக்கு மிகுந்த மகிழ்ச்சி, தன் தங்கைக்கு ஏற்ற கணவன் இவன் என்று முடிவு செய்தவன்
“ரொம்ப தேங்க்ஸ் மச்சான், நான் கூட பயந்துட்டு இருந்தேன், நீங்க எப்படி இருப்பீங்களோன்னு, நேத்ரா பாக்க தான் பெரிய பொண்ணு ஆனா மனசால ரொம்ப சின்ன பொண்ணு, சில நேரம் நான் சொல்றதை கூட கேக்க மாட்டா, அம்மா சொல்றதை தான் அப்படியே கேப்பா”
இது நாள் வரைக்கும் அம்மாவோட முடிவு தான் அவளோட வாழ்க்கையில நடந்த எல்லாமே, ஈவன் அவ போட்ருக்க டிரஸ் முதல்கொண்டு இப்போ அவள் வேலை பாக்குற துறை வரை அம்மா செலக்ட் பண்ணுனது தான்,
சுருக்கமா சொல்லப்போனா நேத்ரா அப்படியே உங்களுக்கு ஆப்போசிட், இப்போ அவளா அவள் செலக்ட் பண்ணியிருக்குறது உங்களை மட்டும் தான், நீங்க கண்டிப்பா நேத்ராவுக்கு இன்னொரு அம்மாவா இருப்பீங்கன்னு எனக்கு முழு நம்பிக்கை இருக்கு” என்று தன் முழுநீள பேச்சை முடித்திருந்தான் நந்தன்.
நந்தன் நேத்ராவைப் பற்றிக் கூறியதை புன்சிரிப்பு, புருவச்சுளிப்பு என்று மாறுபட்ட உணர்ச்சிகளுடன் கேட்டுக் கொண்டிருந்த நளன் “ரொம்ப தேங்க்ஸ் நந்தன் எங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சதுக்கு, எனக்கு சீக்கிரம் நேத்ராவ கல்யாணம் பண்ணிக்கணும், ஏன்னா…” என்று சற்று நிறுத்தவும்,
கேலி செய்யும் புன்னகையுடன் “ம்ம் பாத்தேன் மச்சான் வந்த உடனே உங்க அவசரத்த” என்று நளன் நேத்ராவிடம் நடந்துகொண்ட விதத்தைக் குறிப்பிடவும்,
சிரித்தவன் “அதுவும் தான் அப்புறம், இன்னும் சிக்ஸ் மந்த் ல எனக்கு ஆன்சைட் போற மாதிரி இருக்கு, சோ அதுக்குள்ள நேத்ராவுக்கும் விசா ப்ரோசஸ் எல்லாம் முடிச்சு என் கூடவே கூட்டிட்டு போகணும், நேத்ராவ இங்க விட்டுட்டு என்னால மட்டும் கண்டிப்பா போக முடியாது, நீங்க தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்” என்றவன் மேலும்,
“நந்தன்… அப்புறம் அது உண்மையிலேயே நேத்ரா கால் தடுக்கி தான் விழுந்தா…” என்று அவன் மழுப்ப முயல அது புரிந்த இருவரும் ஒன்றாக நகைத்தனர்.
நளன் மற்றும் நந்தனின் சம்பாஷணையை ஒரக் கண்ணில் நோட்டம் விட்டுக் கொண்டிருந்த நேத்ரா இருவரும் சிரித்துப் பேசவும் வேகமாக அவர்கள் அருகில் வந்து நந்தனின் முகம் நோக்கினாள்.
நந்தன் அவன் இரு கைகளின் கட்டை விரல்களை உயர்திக்காட்டவும், “தேங்க்ஸ் அண்ணா” என்றவள் நளனை பார்க்கவும் கால் மேல் கால் போட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருந்த அவனின் ஒற்றைக் கண் சிமிட்டலில் நாணி தலை கவிழ்ந்தாள்.
பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு பதார்த்தங்களை பேசி சிரித்துக் கொண்டே ருசி பார்த்தவர்கள்,
இறுதியாக கிளம்பும்போது அவன் காரில் அமர்ந்துகொண்டு நந்தனிடம் கை குலுக்கிய நளன்,”நந்தன் நான் சொன்னதை ஞாபகம் வச்சிகோங்க, ஐ வில் கால் யூ டுமாரோ” என்றான்.
நேத்ராவிடம் அவள் முகத்தை பெருத்த ஏக்கத்துடன் பார்த்தவன் “ஐ மிஸ் யூ ஹனி” என்றுவிட்டு அவளுக்கு ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பியவன், அவன் காரில் பறந்திருந்தான்.
Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,


Please Subscribe & Support
error: Content is protected !!