Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Isaiyindri ennaven

இசையின்றி என்னாவேன் 8 (1)

இன்று முதல் தமிழின் கல்லூரியில் இன்டர்னல் தேர்வுகள்.

“டேய் தொண்ட தண்ணி வத்த சொல்லிக் கொடுத்திருக்கேன்.. எப்படியாவது பாஸ் பண்ணீரு..” நேற்றிலிருந்து தமிழுக்கு முக்கிய வினாக்களை விளக்கி விளக்கி வெறுத்து போய் எழில் பேச அவன் தோளில் கைப்போட்ட தமிழ், “ஐ’ல் ட்ரை மை லெவல் பெஸ்ட் மச்சி.. பட் வெறும் பேப்பர்ர சப்மிட் பண்ணீட்டு வர மாட்டேன். எந்த கேள்வி கேட்டாலும் இந்த நாலு கேள்விய எழுதி வைச்சுட்டு வந்திருவேன்” என அசட்டையாக பதிலளித்தான்.



Advertisement

“இவனுக்கு போய் சொல்லிக் குடுத்தேன் பாரு என்ன சொல்லனும்” என மனதில் அவனையே நொந்து கொண்ட எழில் பரிட்சைக்கு நேரம் ஆக தமிழுடன் பரிட்சை ஹாலை நோக்கி நடந்தான்.

“இங்க பாரு கடைசி பதினஞ்சு நிமிஷம் முன்ன பெல் அடிக்கும்ல அப்போ திரும்பி ஒன் வேர்ட்ஸ் சொல்ற; பேப்பர் வாங்கிற வர உற்கார்ந்து எழுதீட்டு சாரி டி டைம் பத்தல அப்படி இப்படினு ஏதாவது காரணம் சொன்ன.. மவளே இன்னிக்கு நடக்கிறதே வேற” பரிட்சை ஹாலுக்கு செல்லும் வழியில் இன்னிசையை மிரட்டிக் கொண்டிருந்தாள் மலர்விழி.

Advertisement

Advertisement

“சரி டி” என இசை சொல்ல, அறிவிப்பு பலகையிடம் வந்தவர்கள் அவர்களுக்கான தேர்வு அறைகளை பார்த்தனர். அதை கண்டதும் இசையின் முகம் வாட மலரின் முகம் மலர்ந்தது.

“ஐ!!! என் பக்கத்துல ஏதோ சீனியர் டி.. ஹம் பிரேமம் நிவின் பாலி.. சில்லுனு ஒரு காதல் சூர்யா மாறி ஹேன்ட்சம்மா இருந்தா நல்லா இருக்கும்..” அந்த ரணகளத்திலும் மலர் குதுகலத்துடன் பேச அவளை எரிச்சலுடன் ஏறிட்ட இசை, “இடியட்.. கண்ண திறந்து பாரு டி நீயும் நானும் வேற வேற எக்ஸாம் ஹால்” என்றாள் கடுப்பாக.

Advertisement

“என்ன?” அதிர்ச்சியுடன் நோட்டீஸ் போர்ட்டை மீண்டும் பார்த்த மலர், “எந்த கீறுக்கன் இப்படி சீட்டிங் போட்டது?” என்றாள் எரிச்சலுடன். “அத அந்த கிறுக்கன் கிட்டயே கேட்டுக்கோ” என்ற இசை தேர்வுக்கு நேரம் ஆவதை உணர்ந்து “ஆல் தி பெஸ்ட்” சொல்லிவிட்டு அவளின் பரிட்சை ஹாலுக்கு சென்றாள்.

“இப்போ ஆல் தி பெஸ்ட் மட்டும் தான் குறைச்சல்” முணுமுணுத்தபடி தேர்வு அறைக்குள் நுழைந்த மலர் அவளின் இருக்கையில் அமர அவளின் அருகே வந்து அமர்ந்தான் அந்த சீனியர்.

அவன் அருகாமையில் அதுவரை இருந்த மனநிலை நீங்க, “ஆண்டவா.. சூர்யா மாறி இல்லனா கூட பரவால்ல கொஞ்ச சூப்பராவாது இருக்கனும்” வேண்டுதலுடன் அவனை ஏறிட்டவள் அங்கு எழிலை எள்ளளவும் எதிர்பார்க்கவில்லை.

“ஐயே இவனா.. ச்சே இந்த மூஞ்சிய போயா சூர்யா, நிவின் பாலி கூடலாம் கம்பேர் பண்ணேன்” என அவளையே கடிந்து கொள்ள அதே சமயம் அவளை கண்ட எழிலும், “அழகா ஏதாவது ஜூனியர் வரும்னு பார்த்தா இந்த அராத்து வந்திருக்கு” என முனங்கினான்‌. மலர் அவனை முறைக்க அவளை அலட்சிய பார்வை பார்த்தான் எழில்.

அவன் தேர்வு அறைக்குள் நுழைந்த இன்னிசையை கண்டதும் தமிழின் முகம் மலர்ந்தது.

அவளுக்கும் மலருக்கும் வெவ்வேறு தேர்வு அறைகள் வந்த கடுப்புடன் இருக்கையில் வந்து அமர்ந்த இசை நிமிடங்கள் கடந்தும் தமிழை கவனிக்கவில்லை, தேர்வு குறித்த சிந்தனையில் இருந்தாள்‌.

“என்ன.. கண்டுக்கவே மாட்டிங்கிறா..” என யோசித்தவன் அவள் கவனத்தை ஈர்க்க நினைத்து சத்தமாக இரும பரிட்சையின் பதட்டத்தில் இருந்தவளின் செவிகளை அது எட்டவே இல்லை. தமிழ் மேலும் இருமுறை சத்தமாக இரும, வினாத்தாள் வழங்க அவன் அருகே வந்த எக்ஸாமினர், “ரொம்ப இருமல் வந்தா போய் தண்ணி குடி” என்றார்.

தண்ணீர் குடிக்க இசையை கடந்து செல்ல வேண்டியிருக்க குஷியாக எழுந்து வந்தவன் அவளை கடக்கையில் ஷூ சத்தம் கேட்கும்படி நடக்க அப்போதும் இசை அவனை பார்க்கவில்லை. வினாத்தாள் வழங்கியிருக்க அதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடுப்பாகிவிட்டான் தமிழ். “கல்நெஞ்சுக்காரி, ஒரு மனுஷன் இத்தனை பெர்ஃபார்மென்ஸ் பண்றானேன்னு கர்டசிக்கு திரும்பி ஒரு லுக் விடுறாளா பாரு” மனதில் அவளை வறுத்தவன் தண்ணீர் குடித்துவிட்டு கடுப்பில் டம்ளரை அலட்சியமாக வைக்க, அது கிழே விழுந்து சத்தமிட அனைவரின் பார்வையும் அவனிடம் திரும்பியது.

அந்த சத்தத்தில் நிமர்ந்த இசை தமிழை கண்டதும் புருவம் உயர்த்தி புன்னகைத்தாள். அவ்ளோதான் அவள் பார்வையில் அந்த சிரிப்பில் அதுவரை இருந்த கடுப்பெல்லாம் கலைந்து போனது. இசையிடம் பதிலுக்கு புன்னகைத்தவன் அங்கேயே நிற்க, “எவ்ளோ நேரம் டா தண்ணி குடிப்ப” என்று அதட்டினார் எக்ஸாமினர். அதற்கு இசை சிரிக்க அசடு வழிந்தவன் அவன் இருக்கையில் சென்று அமர்ந்தான்.

தமிழ் புறம் திரும்பிய இசை, “நீங்களும் இதே எக்ஸாம் ஹால்லா?” சைகையில் சிரிப்புடன் கேட்க ஆம் என தலையாட்டி புன்னகைத்தான். சிரித்தவள், “ஆல் தி பெஸ்ட்” சைகையில் வாழ்த்திவிட்டு திரும்பிவிட “இவ்ளோ தான் இவ ரியேக்ஷனா.. இதுக்கா இவ்ளோ பண்ணேன்” கடுப்பான தமிழ் பெல் அடிக்கவும் பரிட்சையை எழுத தொடங்கினான்.

வினாத்தாள் வாங்கிய மலருக்கு ‘ஏன்டா வந்தோம்’ என்ற எண்ணமே. அவள் படித்ததில் பாதி கேள்விகள் கூட கேட்கவில்லை. எதோ தெரிந்த ஒன்றிரண்டு பதில்களை வைத்து பக்கங்களை நிரப்பிக் கொண்டிருந்தாள்.

தேர்வு நேரத்தில் அவ்வப்போது எழில் மலரின் பேனா பென்சில் போன்ற பொருட்களை பயன்படுத்த, அப்போது தான் அவனிடம் ஒரு மூடியில்லாத ப்ளூ பேனாவை தவிர வேறேதும் இல்லை என்பதை கவனித்தாள்.

கடுப்பான மலர் நடுவில் இருந்த பொருட்களை எடுத்து அவளின் மறுபுறம் வைத்துக் கொள்ள பென்சில் எடுக்க திரும்பியவன் அது அவள் புறம் இருப்பதை கவனித்துவிட்டு,

“ஏய் பென்சில்ல குடு” என கேட்க அவன் பேச்சில் கடுப்பாகி ‘வாங்குறது ஓசி இதுல என்ன அதட்டுறான்’ என முறைத்தவள், “முடியாது” என்றாள்.

“ஏய் என்ன பழிவாங்குறியா?”

“அப்படியே வச்சுக்கோங்க”

“திமிரு பிடிச்சவ..” எழில் முணுமுணுக்க ஒரு கட்டத்தில் இருவரின் கிசுகிசுப்புகளும் சண்டையாக மாற அவர்களின் அருகே வந்த தேர்வு கண்காணிப்பாளர், “ஸ்டாப் மர்மரிங் (murmuring)” என இருவரையும் அதட்டிவிட்டு சென்றார்.

எழில் அவள் புறம் இருந்த பென்சிலை எடுக்க முயற்சிக்க அதற்குள் அதை கைப்பற்றியிருந்தாள் மலர். எழில் பென்சில்லை மலரிடம் இருந்து பிடுங்க; மலரும் அவளின் முழுபலத்துடன் இழுக்க இருவரும் இழுத்த இழுப்பில் அந்த பென்சில் ‘பட்’ என்ற சத்தத்துடன் உடைய மொத்த கிளாசும் அவர்களை திரும்பி பார்த்தது‌.

“இதுக்கு மேலையும் ரெண்டு பேரும் சத்தம் போட்டா வெளியே அனுப்பிருவேன்” எக்ஸாமினரின் மிரட்டலில் அமைதியாகி தேர்வு எழுத தொடங்கியவர்கள் அதற்கு முன் மாறி மாறி முறைத்துக் கொள்ள மட்டும் மறக்கவே இல்லை.

அன்று அதிசயமாக தமிழ் படித்த நான்கில் மூன்று கேள்விகள் கேட்டிருக்க எப்படியும் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்ற எண்ணத்தில் மகிழ்ச்சியாக இருந்தவன் அவ்வப்போது இன்னிசையை சைட் அடித்தபடி தேர்வு எழுதிக்கொண்டிருந்தான்.

இந்த பார்வை வீச்சுக்கள் எல்லாம் இவன் புறமிருந்து மட்டும் தான், தமிழை வாழ்த்தியவள் அதன் பிறகு அவன் பக்கம் கூட திரும்பவில்லை. எழுதவே நேரம் போதாது இன்னிசைக்கு இவனை பார்க்க எங்கு நேரம்? பரிட்சையோடு ஒன்றிவிட்டாள். அவள் பார்வைக்காக ஏங்கிய தமிழின் க்ரஷ்ஷு கொண்ட மனமோ அவள் செயலில் கடுப்பானது.

தெரிந்த கேள்விகளை எல்லாம் எழுதி முடித்துவிட்டு மீதமிருந்த பக்கங்களை எப்படி நிரப்புவது என்ற யோசனையுடன் அமர்ந்திருந்த மலர்விழி எதேர்ச்சையாக திரும்ப அவளுக்கு அருகே இருந்த வரிசையில் அமர்ந்திருந்த அவள் வகுப்பு மாணவன் ஒருவன் பிட்டு பேப்பர்களை வைத்து பரிட்சை எழுதிக் கொண்டிருந்தான்.

அதை பார்த்தவள் அவனிடம் பிட்டு கேட்க, அவனோ அவளுக்கு உதவாமல் உபத்திரவம் செய்யும் விதமாக அதை எழிலிடம் வீசிவிட்டான்.

ஏற்கனவே மலரின் செயலில் கடுப்பில் இருந்தான் எழில். அவளின் சேட்டைகளை எல்லாம் கவனித்து கொண்டே அவளை கடுப்பேற்ற காத்துக் கொண்டிருந்தவனுக்கு கசக்குமா இந்த சந்தர்ப்பம்? “மாட்டுனடி மவளே” என மனதில் ஒரு முடிவோடு தான் இருந்தான்.

மலர் அவன் பக்கமிருந்த பிட்டை எடுக்க முயற்சிக்க அதற்கு வழி வகுக்காமல் அந்த பிட்டு பேப்பர்கள் மேல் அவனின் பரிட்சை பேப்பரை வைத்து எழுத தொடங்கிவிட்டான் எழில்.

அவன் செயலில் மலரின் கோவமும் எரிச்சலும் எல்லையில்லாமல் எகிறியது. அவனை முறைத்தவள், “எதுக்கு இப்படி பண்றீங்க?” என அடி குரலில் சீற “பார்த்தா தெரியல.. ரிவெஞ்ச்” என்று வில்லத்தனமாக சிரித்தான் எழில்.

அப்படியே எழிலை குனிய வைத்து நங்கு நங்கென்று நாலு குட்டு வைக்க பரபரத்த கைகளை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தியவள், “இப்போ குடுக்க போறீங்களா இல்லையா?” என கேட்க “குடுக்கிறேன்.. குடுக்க வேண்டிய இடத்தில குடுக்கிறேன்” என்றவன் “சார்” என்றபடி எழுந்து நிற்க, அதுவரை இருந்த மலரின் தைரியமெல்லாம் தடமில்லாமல் போனது. எழில் அவளை மாட்டிவிடுவானோ என பயந்தவள் தலையை குனிந்து எழுத தொடங்கிவிட்டாள்.

மலரை சீண்டியதில் அகத்தில் ஓர் அளவில்லா அல்ப ஆனந்தம் எழிலுக்கு. எக்ஸாமினர் அருகே வர, “சார் அடிஷ்னல்” என்றான். அவர் அடிஷ்னல் குடுத்துவிட்டு செல்ல, அவனை கண்களாலேயே பொசுக்கிக் கொண்டிருந்தாள் மலர்.

அவளை பார்த்து நமட்டு சிரிப்புடன் அமர்ந்தவன் “ரொம்ப பொசுக்காத உன் முட்ட கண்ணு அவிஞ்சிற போகுது” என்க அவனை மேலும் முறைத்தவள், “இப்போ எதுக்கு தேவையில்லாம பிரச்சனை பண்றீங்க?”

“ஓ நான் தான் பிரச்சனை பண்றேன்ல?”

“பின்ன நானா..”

“ஓகே ஃபைன்.. நீ சாரி கேளு நான் பிரச்சனை பண்றத நிறுத்திக்கிறேன்” அவர்கள் சண்டையிட்ட அன்று மலர் பேசிய அதே தொனியில் அவன் சொல்ல “நான் ஏன் சாரி கேட்கணும்?” என்று எகிறினாள்.

“அப்போ சரி” என்றவன் எழ போக, ‘அடியே மலரு இப்போ இவன் கூட மல்லுக்கட்டுறத விட மார்க்கு தான் முக்கியம்.. ஃபெயில் மட்டும் ஆனா அம்மா சோறு போடாது’ என யோசித்தவள் அவசரமாக “சாரி… பிட்ட குடுங்க” என்றாள் எரிச்சலாக.

எழில் அமைதியாகவே இருக்க, “ஒன் ஹார் மோர்” என்றார் எக்ஸாமினர்.

“சீக்கிரம் குடுங்க” அவள் அவசரப்படுத்த எழிலின் பார்வையோ அவளின் மறுப்பக்கமிருந்த பென்சில் மேல் இருந்தது. அவனை பார்த்து “ஃபைன்..” பல்லை கடித்தவள் அவளிடம் இருந்த பென்சில், மற்ற பொருட்களை எல்லாம் எடுத்து நடுவில் வைத்தாள்.

‘குட் கேர்ள்’ என்றவன் அவளிடம் பிட்டுகளை நீட்ட அவனை முறைத்தவிட்டு வெடுக்கென பிடுங்கினாள்.

“ச்சே ஒரு மனுஷி நிம்மதியா பிட் அடிக்க முடியுதா.. எனக்குனே வருவானுங்க” மனத்தில் புலம்பியவள், “ஒரு நாள் உனக்கு இருக்கு டா, அப்போ காட்டுறேன் இந்த மலர் யாருனு” என மனதில் கருவிக் கொண்டு பரிட்சையை எழுதினாள்.

பரிட்சை முடிந்ததும் தமிழுடன் பேசிவிட்டு இன்னிசை அவளின் வகுப்பிற்கு வர முகத்தை தூக்கி வைத்தபடி அமர்ந்திருந்தாள் மலர்விழி.

“என்னடி சென்டம்மா?” என்றபடி மலரின் அருகே இன்னிசை அமர “நான் பாட்டுக்கு அமைதியா இருக்கேன்.. தேவையில்லாம என் வாய புடுங்காத” எரிந்து விழுந்தாள் மலர்.

“ஏன் நல்லா எழுதுலையா?”

“ம்ச் அதெல்லாம் பிட் அடிச்சு எழுதீட்டேன்”

“அடிப்பாவி.. அதான் எழுதிட்டல அப்புறமென்ன?”

“ம்ச்” மலர் சலித்துக் கொள்ள

அவள் மனநிலையை மாற்ற நினைத்த இசை, “சரி அத விடு.. எப்படி இருந்தாரு உன் சீனியர்?” என்று அவளை இடித்து அமர்ந்தவள், “சில்லுனு ஒரு காதல் சூரியாவா.. பிரேமம் நிவின் பாலியா.. மீசைய முறுக்கு ஆதியா.. இல்ல மின்னலே மேடியா..” என பட்டியலிட “ஏய் அந்த மூஞ்சியெல்லாம் மேடியோட கம்பேர் பண்ணே நான் மனுஷியா இருக்க மாட்டேன்” என அதற்கும் எரிந்து விழுந்தாள்.

“அப்படி யாரு டி வந்தா?” இசை கேட்ட

“எல்லா உன் பாசமலர் தான்..” என்றாள் முறைப்புடன். “யாரு அரவிந்த்தா?”.. இசையின் கேள்விக்கு மலர் இல்லையென தலையாட்ட யோசித்தவள், “ஓஓ எழில் அண்ணா வா..” என சிரிப்பை அடக்கிக் கேட்டாள்.

“அந்த இடியட் தான்..”

“பாவம் அவர ஏன் டி திட்டீட்டே இருக்க.. அவரு என்ன பண்ணாரு?”

“என்ன பண்ணான்னா…” என்றவள் பரிட்சை ஹாலில் நடந்ததையெல்லாம் சொல்லி முடிக்க இன்னிசையால் சிரிப்பை கட்டுப்படுத்தமுடியவில்லை.

“சிரிக்காத இசை.. எனக்கு செம கோவம் வருது” மலர் கோவப்பட  “ஓகே.. சாரி.. சாரி..” என அவள் சிரிப்பை அடக்கியவள், “இந்த காலேஜ்ல எத்தனையோ பசங்க இருந்தும் உங்க இரண்டு பேருக்கும் ஏன் சீட்டிங் ஒன்னா வந்திருக்கு தெரியுமா?” என கலாய்க்க

“ம்ம் தலைவிதி.. எல்லாம் என் தலைவிதி..” புலம்பினான் எழில்.

“இருந்தாலும் உங்க ரெண்டு பேர் குள்ள ஏதோ வேவ்லெந்த் இருக்கு டா” தமிழ் கிண்டலடிக்க “மண்ணாங்கட்டி” என்றான் எழில் எரிச்சலுடன்.

பரிட்சை முடிந்து வகுப்புக்கு வந்ததும் தேர்வு அறையில் நடந்ததையெல்லாம் தமிழிடம் பகிர்ந்து கொண்டிருந்தான் எழில்.

“அவ பென்சில் யூஸ் பண்ணதுக்கு ஏதோ அவ சொத்த எழுதி வாங்குன ரேஞ்சுக்கு பில்டப் விடுறா”

“இருந்தாலும் அதுக்காக மலர நீ இவ்ளோ சீண்டியிருக்க கூடாது.. பாவம் புள்ள” தமிழ் சிரிப்புடன் சொல்ல எழிலும் சிரித்துவிட்டான். “அவ அந்த அளவுக்கு என்ன கடுப்பேத்துறா டா.. ஆக்சுவலா அவ இரிட்டேட் பண்ணதுல போட்டுக் குடுக்கலாம்னு தான் நெனச்சேன்.. அப்பறம் பதில் தெரியாம திருதிருனு முழிச்சுட்டே உட்கார்ந்துட்டு இருந்தாளா.. பாவமா இருந்துச்சு அதான் சரினு சும்மா கொஞ்ச நேரம் விளையாடுனேன்”.

“நல்லா ஃபன் பண்ற எக்ஸாம் ஹால்ல” தமிழ் சொல்ல “உனக்கென்னப்பா நீயும் உன் க்ரஷும் ஒரே எக்ஸாம் ஹால்.. உங்களவிடவா பண்ணபோறோம்” என்றான் எழில்.

“டேய் கொஞ்சம் சும்மா இருடா..” என்றவன் அவன் எக்ஸாம் ஹாலில் நடந்ததையெல்லாம் சொல்ல சத்தமாக சிரித்தான் எழில்.

“சிரிக்காத நாயே..” தமிழ் கடுப்பாக சொல்ல “நம்ம குடும்பத்துக்கு இதெல்லாம் தேவையா தமிழு.. க்ரஷ் கேட்குதா டா க்ரஷ்ஷு” என அன்பரசன் போல் பேசி கலாய்த்த எழில் தமிழிடமிருந்து தப்பி ஓட அவனை துரத்தினான் தமிழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!