என்னவனின் மௌனங்களும் எனது காதலும்..❤02
அனைவருக்கும் வணக்கம் சொல்லி நிமிர்ந்தவளுக்கு சற்று ஆச்சரியமாய் இருந்தது! இவர் நாம் அந்த பாட்டியோடு பார்த்தவர் தானே என்று தனது ஆச்சரியத்தை மறைத்தவளாய் அனைவருக்கும் வணக்கம் சொன்னால்..
மாப்பிள்ளையின் பெயர் சித்தார்த் இவன் எனது மூத்த மகன் எனக்கு மூன்று மகன்கள் உள்ளனர் இரண்டாவது மகன் ஊரில் சொந்தமாக ரைஸ்மில் வைத்திருக்கிறான் மூன்றாவது மகன் வெளிநாட்டில் இருக்கிறான். இது எனது மனைவி சுமதி அவர்கள் சித்தார்த்தின் பாட்டி சுமதியின் அம்மா என்று வந்த அனைவரையும் அறிமுகப்படுத்தினார் சித்தார்த்தின் தந்தை செல்வம்.
சித்தார்த் பார்ப்பதற்கு மிகவும் கலராக அதுவும் சுண்டி விட்டால் ரத்தம் வந்துவிடும் போல் அப்படி இருந்தான். மதுரா தனது மனதுக்குள் இவர் என்னடா இப்படி இருக்கிறாரு இவ்வளவு ஹைட்டா வெயிட்டா அப்படியே ஐயர் வீட்டு பையன் மாதிரி இருக்கிறாரே என்ற அவளின் மனதில் திடீரென்று ஒரு பாடலின் வரி தோன்றியது “ஆறடி உயரம் அழகிய உருவம் ஆப்பிள் போல இருப்பானே” என்ற பாடல் வரிக்கு உயிர் கொடுத்தவனாய் அமர்ந்திருந்தான்.
சித்தார்தின் தந்தை செல்வம் சித்தார்த்தை பற்றி சொன்னார் இவர் உதவி பேராசிரியராக தொழில்நுட்பக் கல்லூரியில் பணியாற்றுகிறார் மெக்கானிக்கல் டிபார்ட்மெண்டில் முதுகலை பட்டம் பெற்றவர் இவருடைய மாத வருமானம் 20 ஆயிரம் ரூபாய் என்றார்.
Advertisement
மதுராவின் மாமா இவள் எனது தங்கையின் மகள் சிவில் டிபார்ட்மெண்டில் முதுகலை பட்டம் பெற்றவள் உதவி பேராசிரியராக தொழில்நுட்பக் கல்லூரியில் பணி புரிகிறாள் . இவளுக்கு தந்தை இல்லை குடி போதைக்கு அடிமையாகி இவர்களை விட்டு சென்று விட்டார். நாங்கள் தான் எல்லாம் என்று வெளிப்படையாக சொன்னார் மேலும் இவர்களுக்கு சொந்த வீடு நிலம் என்று ஏதுமில்லை என அனைத்தையும் சொன்னார்.
இதைக் கேட்ட செல்வம் இம்ம்ம் எல்லாம் தெரியுங்க உங்க அக்கா பேசும் போதே எல்லாத்தையும் ரொம்ப வெளிப்படையா மறைக்காம சொன்னாங்க அதுவே எங்களுக்கு ரொம்ப திருப்தி சரி நேரில் ஒரு தடவை பார்த்துக் கொள்ளலாமேனு வந்தோம்.
ரொம்ப நல்லதுங்க அப்பதான் நம்மளுக்கு ஒரு பயம் இல்லாம தெளிவா இருக்கும் என்றார் மதுராவின் மாமா.
Advertisement
சரி நாங்கள் வீட்டுக்கு சென்று மற்ற விவரங்கள் கலந்து பேசி சொல்கிறோம் என்று கிளம்பினர்.
Advertisement
சாப்பிட்டு விட்டு செல்லலாமே என்றார்.. மதுராவின் மாமா அதற்கு சித்தார்த்தின் தந்தை இல்லை அண்ணா நேரமாகிவிடும் ஆடு மாடு எல்லாம் இருக்கிறது அதுங்கள போய் பாக்கணும் என்றார்.
சரி காப்பி டீ மட்டுமாவது குடிக்கலாமா என்றார் கிருஷ்ணா அனைவரும் அருகில் உள்ள ஹோட்டலுக்கு சென்றனர் அங்கு யாருக்கு காப்பி டீ என்று சொல்லிவிட்டு ஒவ்வொருவரும் ஆளுக்கொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டனர் மதுராவிற்கு டீ காபி குடிக்கும் பழக்கம் கிடையாது.
அதனால் அவள் இளநீர் வாங்கி கொண்டாள் . வாங்கியவள் ஒரு ஓரமாக நின்று யாருக்கும் தெரியாமல் சித்தார்த் தன்னை பார்க்கிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தால் ஆனால் சித்தார்த் அவனுடைய காப்பியை மட்டுமே பருகிக்கொண்டு அமர்ந்திருந்தான். இவங்க என்ன நம்மள பாக்கவே மாட்டேங்கிறாங்க என்று நினைத்தவாறு நின்று கொண்டிருந்தாள்.
Advertisement
மதுராவின் மனதுக்குள் ஒருவேளை நம்மை பிடிக்கலையோ என்னவோ இவருக்கு இருக்கும் அவர் நிலவு மாதிரி இருக்கிறார் நான் அவரை சுத்தி இருக்கிற இரவு மாதிரி இருக்கேன் இருந்தாலும் நான் கலர் கம்மினாலும் லட்சணமான அழகா தான் இருக்கேன். அவங்க என்ன சொன்னாலும் ஓகே சரின்னு சொன்னா இரவும் நிலவும் மாதிரி சேர்ந்து சந்தோஷமா வாழலாம். இல்லைன்னு சொன்னா களைந்து போகிற மேகம் மாதிரி போக வேண்டியது தான் என்று நினைத்துக் கொண்டாள்.
அனைவரும் விடைபெற்று சென்றனர் மதுரா வீட்டுக்கு வந்ததும் வருணாவிடம் அனைத்தையும் சொல்லிக் கொண்டிருந்தால் .
அதற்குள் மதுராவின் தாய் ஜானகி வருணா மாப்பிள்ளை அப்படி ஒரு கலரா இருக்காருடி அது மட்டும் இல்ல பார்க்க ரொம்ப நல்ல பையனா முகமே ஒரு அமைதியா இருக்கு என்றால் அவர்களின் குடும்பமே நல்ல மனிதர்கள் போல் தெரிகிறது என் மனசுக்கு ரொம்ப திருப்தியா இருக்கு என்றால் ஜானகி.
உடனே வருணா மதுரா உனக்கு பிடிச்சிருக்கா இம்ம்ம் பிடிச்சிருக்கு தான். என்ன பிடிச்சிருக்கு தான்… இழுக்குற இல்லடி அவங்களுக்கு என்ன புடிச்சிருக்கா என்று தெரியவில்லையே பிடிக்காமையா இவ்வளவு தூரம் வந்து பொண்ணு பாத்துட்டு போய் இருப்பாங்க சரி எதுவா இருந்தாலும் நாளைக்கு தெரிஞ்சிரும்ல அப்புறம் என்ன உனக்கு ஓகே தானே ஓகே தான் என்றால் மதுரா.
அன்று இரவு மதுராவின் வீட்டில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து வந்தவர்கள் அனைவரும் நல்ல மனிதர்களாக தெரிகின்றனர். மாப்பிள்ளையும் நல்ல குணம் உள்ளவராக இருக்கிறார் ஆனால் என்ன சம்பளம் மட்டும்தான் குறைவு என்றார் மதுராவின் மாமா.
இருக்கட்டும் தம்பி நல்ல பையன் நல்ல குடும்பம் ஜாதக பொருத்தம் சரியாக உள்ளது பார்த்துக்கொள்ளலாம் என்றால் கலா .
மதுராவும் திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்லலாம் என்று மாப்பிள்ளை வீட்டார் சொன்னார்கள் தானே இருவரும் வேலைக்கு செல்லட்டும் சமாளித்துக் கொள்வார்கள் என்றால் ஜானகி. சரிமா என்றார் கிருஷ்ணா .
மறுநாள் காலை கலாவின் அலை பேசி ஒலித்தது அதை எடுத்தவள் சொல்லுங்கள் தம்பி என்றால் வணக்கம் அக்கா நான் செல்வம் பேசுகிறேன் சொல்லுங்கள் தம்பி நாளை மறுநாள் நாங்கள் பெண் வீடு பார்க்க வருகிறோம். எங்களுக்கு பெண்ணை பிடித்திருக்கிறது என்றார்.
சரி தம்பி ரொம்ப சந்தோசம் வாருங்கள் என்று சொல்லிவிட்டு அலைபேசியை வைத்தவள் கிருஷ்ணா ஜானகி அனைவரும் ஒரு நிமிடம் வாருங்கள் நாளை மறுநாள் பெண் வீடு பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வருகின்றனர். அவர்களுக்கு மதுராவை பிடித்திருக்கிறதாம் இதைக்கேட்ட ஜானகிக்கு மிகுந்த மகிழ்ச்சி உடனே அந்த கடவுளுக்கு நன்றி சொல்லிவிட்டு வந்தாள்.
மதுரா கல்லூரி முடித்து வந்ததும் அவளிடம் ஜானகி மதுரா நாளை மறுநாள் நீ வீட்டில் இருக்கணும் டி விடுமுறை சொல்லிவிட்டு வா என்றால் மாப்பிள்ளைதம்பி வந்தாலும் வருவார் அதனால் நீ வீட்டில் கண்டிப்பாக இருக்கணும்..
சரி அம்மா என்றால் நேராக தனது இரு சக்கர வண்டியை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்றவள் சிவனிடம் இந்த வாழ்க்கை நீங்கள் அமைத்து தருவது அதனால எனக்கு முழு நம்பிக்கை உள்ளது எல்லாம் நல்லதாகவே அமையும் என்று அவருக்கு நன்றி கூறிவிட்டு வழக்கம்போல் அர்த்தஜாம பூஜையை பார்த்துவிட்டு வந்தாள்.
வீட்டிற்கு வந்தவுடன் வருணா மதுராவை பார்த்து என்னடி மதுரா நாளை மறுநாள் உன் ஆள் வராரு போல என்றாள். ஆளா ! என்னடி இப்படி எல்லாம் பேசுற இந்த வார்த்தையை எல்லாம் என்கிட்ட ஒருத்தவங்க சொல்லி கேட்டு இருக்கேன். எனக்கே இன்னிக்கு சொல்லும் போது ஒரு மாதிரி இருக்குடி. அது சரி கல்யாண பொண்ணா ஆகப்போற மதுரா வாழ்த்துக்கள் என்றால் வருணா அட போடி என்றவள் வெட்கத்துடன் கீழே குனிந்தால்.
அய்யய்யோ என்னடி வெட்க மட்டும் படாதடி ப்ளீஸ் என்றால் வருணா. இதைக் கேட்ட மதுராவிற்கு சிரிப்பு வந்தது. சரி நேரமாயிடுச்சு போய் தூங்கு நாளைக்கு கல்லூரிக்கு போகணும்ல குட் நைட் வருணா என்று இருவரும் தூங்கச் சென்றனர்.
மறுநாள் காலை கல்லூரிக்கு கிளம்பியவள். அங்கே உள்ள தனது தோழிகளிடம் தன்னைப் பெண் பார்த்ததையும், நாளை பெண் வீடு பார்க்க வருவதையும் சொன்னால் இதைக்கேட்ட தோழிகள் அடிப்பாவி ஒரு வார்த்தை சொன்னியா டி சரி ட்ரீட் எப்ப என்று கேட்க உடனே மதுரா ஓ எப்ப வேணாலும் வைக்கலாம் என்றாள்.
இனிமே உன் காலு தரையில இருக்காது எப்போதும் கனவு உலகத்திலேயே இருப்ப என கிண்டல் செய்தனர். ஏய் கிண்டல் பண்ணாதீங்கடி என்றவாறு அவர்களை செல்லமாக கோபித்து கொண்டாள் அது எப்படி நாங்க அப்படி தான் பண்ணுவோம் பா உனக்கு திருமணம் ஆகுற வரைக்கும்..
சரி என்னமோ பண்ணிக்கோங்க..என்று சொல்லிவிட்டு எனக்கு கடைசி நேர பகுதி வகுப்பு என்னுடையது கல்லூரி பேருந்தில் சந்திக்கலாம் என்று கிளம்பினால்.
அன்று இரவு வீட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தால் ஜானகி ஏன் அம்மா ஒரு ஆளாக இவ்ளோ வேலைய பார்த்துகிட்டே இருக்கீங்க என்றால் மதுரா நாளைக்கு மாப்பிள்ளை வீடு பார்க்க வரும்போது வீடு சுத்தமாக இருக்க வேண்டாமா சரிடி நீ போய் சீக்கிரம் தூங்கு, காலைல சீக்கிரம் எழுந்திருக்கணும் என்றால் ஜானகி
சரிம்மா நீங்களும் சீக்கிரம் தூங்க வாங்க என்று சொல்லிவிட்டு சென்றவள் திரும்பி வந்து ஜானகியை பின்னிருந்து கட்டிக் கொண்டவள் லவ் யூ அம்மா இன்று அவள் கன்னங்களில் முத்தம் தந்தால் சரிமா இப்ப நான் தூங்க போறேன் அம்மா என்று கிளம்பினாள்..
மறுநாள் காலை எழுந்ததும் வீட்டில் உள்ள அனைவரும் பரபரப்பாக அவர்கள் வேலையை செய்து கொண்டிருந்தனர். அதற்குள் ஜானகி மாப்பிள்ளை வீட்டாருக்கு கேசரி பஜ்ஜி மற்றும் கடையிலிருந்து வாங்கி வந்த இனிப்பு காரம் அத்தனையும் தயாராக வைத்திருந்தால்.
மதுராவும் தயாராக இருந்தாள் இன்று அவள் நீல நிற பட்டுப்புடவை ஒன்றை கட்டியிருந்தால் எந்தவித ஒப்பனைகளும் இல்லாமல் அழகாக இருந்தால். மாப்பிள்ளை வீட்டார் வந்து விட்டனர் என்று வருணா சொல்ல அனைவரும் வீட்டின் வாயிலுக்கு சென்று அனைவரையும் வணக்கம் கூறி வரவேற்றனர். பாயில் பாதி பேரும் நாற்காலியில் மீதி பேரும் அமர்ந்தனர் அவர்களுடன் சித்தார்த்தும் வந்து இருந்தான்..
மதுராவிடம் காப்பியை கொடுத்து விட்டால் ஜானகி , அங்குள்ள அனைவரையும் வாருங்கள் எனக் கூறிவிட்டு அனைவருக்கும் காபியை கொடுத்தாள்.
அதற்குள் சுமதி தான் வாங்கி வந்த பூவை மதுராவின் தலையில் சூட்டிவிட்டால்.
அனைவரும் அமர்ந்திருக்க மதுரா தனது மனதுக்குள் மாப்பிள்ளை உடன் நம்மை தனியாக பேச விடுவார்களா? என்று எதிர்பார்த்து காத்திருந்தால் இறுதி வரை யாரும் அப்படி சொல்லவும் இல்லை சித்தார்த்தும் எதுவும் கேட்கவும் இல்லை. மதுராவிற்கு அது சற்று ஏமாற்றமே..
பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து நாளை நீங்கள் அனைவரும் மாப்பிள்ளை வீடு பார்க்க வாருங்கள் என்றார் செல்வம் அங்கு வைத்து மற்ற விவரங்களையும் நிச்சயதார்த்த தேதியையும் குறித்துக் கொள்ளலாம் கண்டிப்பாக அண்ணா எல்லோரும் வருகிறோம் என்றார் கிருஷ்ணா.
அப்ப சரி நாங்களும் கிளம்புகிறோம் என்றார் செல்வம்.
சாப்பிட்டு போகலாமே என்றார் கிருஷ்ணா.
இல்ல தம்பி இருக்கட்டும் அடுத்த தடவை வரும்போது கண்டிப்பா சாப்பிடுகிறோம் அதான் இப்ப பஜ்ஜி கேசரி காப்பி இது எல்லாமே சாப்பிட்டோமே சரி சரி அண்ணா என்றவாறு சிரித்துக்கொண்டே தலை அசைத்தார் கிருஷ்ணா.
அனைவரும் விடைபெற்று கிளம்ப மதுரா சித்தார்த்தை எதார்த்தமாக பார்க்க அதே நேரம் சித்தார்த்தும் அவளைப் பார்த்து தனது அழகிய இரு விழிகளையும் விரித்து சற்றே இரு புருவத்தையும் உயர்த்தி தன் கண்களாலே சென்று வருகிறேன் என்றவாறு தலையசைத்தான் அதைப் பார்த்த மதுராவும் தலை அசைத்து வழி அனுப்பினால்.
அனைவரும் சென்ற பிறகு உள்ளே வந்த வருணா என்ன மதுரா அண்ணா கண் ஜாடை எல்லாம் காமிக்கிறாரு நீயும் அதுக்கு தலையெல்லாம் ஆட்டுற என்றால் பாத்தியா வருணா ஊம் பார்த்தேன். உடனே அங்கிருந்து வந்த ஜானகி நானும் பார்த்தேன் என்றாள் இதைக் கேட்ட மதுரா வெட்கப்பட்டு உள்ளே சென்று விட்டாள்.
இரவு தூங்குவதற்கு முன் படுக்கையில் இருந்த மதுராவின் மனதில் ஆயிரம் கேள்வி எழுந்தது சித்தார்த்துடன் நம்மை பேச சொல்வார்கள் என்று நினைத்தேன் யாரும் எதுவும் சொல்லவில்லை அவராக கேட்பார் என்று பார்த்தேன் அவரும் கேட்கவில்லை அவரிடம் நான் சில கேள்விகள் கேட்க வேண்டுமே என்று நினைத்துக் கொண்டே இருந்தாள்…
ஏதாவது கெட்ட பழக்கம் இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது என நினைத்து கவலைப்பட்டால். அவரைப் பார்த்தால் எதுவும் தெரியவில்லை இருந்தாலும் பயமா இருக்கிறதே என நினைத்து கொண்டிருந்தாள்.. அப்பொழுது திடீரென அவன் போய் வருகிறேன் என தனது விழி மொழியால் சொன்னதை நினைத்து ஒருவித சந்தோஷத்தில் உறங்கினாள்.
