வண்ணம் 12
அதிகாலை நாலரை மணிக்கு அருண் எழுந்து வெளியே கிளம்பினான். சத்தம் கேட்டு எழுந்த சிரஞ்சீவி “மச்சான் எங்க போற. திரும்ப வாக்கிங் நாடகம் போட போறியா தொல்ல தாங்கலடா உன்னோட” என்றவன் அருண் பதில் பேசுவதற்கு முன்பே திரும்பவும் தூங்க சென்றுவிட்டான். “மச்சான் நான் இன்னைக்கு வரல எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இன்னமும் முடியல நீங்க காலேஜ் போங்க ” என்று தகவலை மெசேஜ் செய்திருந்தான்.
சிரஞ்சீவி கல்லூரிக்கு வந்து தமயந்தியிடம் பேசிய போதுதான் தெரிந்தது அருண் அவளை பார்க்க செல்லவில்லை. சிரஞ்சீவி புவனிடம் “அப்படி யாருடா இவன் பார்க்க போயிருப்பான் விடியகாலை நாலு மணிக்கு” என்று சந்தேகமாக கேட்க
புவன் “ஏதாவது சொந்தக்காரங்களை பார்க்க போயிருப்பானா இருக்கும்டா” என்று சொல்ல சிரஞ்சீவி மதியம் வந்துவிடுவானாக இருக்கும் என்றே எண்ணினான்.
Advertisement
மதியமும் அருண் வராமல் இருக்கவும் அவனுக்கு கைபேசியில் அழைத்தால் அருண் பேசும்போது எங்கேயோ பாட்டு இரைச்சல்களுக்கு நடுவில் இருக்கிறான் என்று தெரிந்தது.
சிரஞ்சீவி “என்ன மச்சான் எங்க இருக்க காலேஜுக்கு வரல” கேட்டான்
அருண் “லஞ்சுக்கு வெளியில வந்தோம் இன்னும் சாப்பிட்டு முடியல நீங்க என் ஆபீஸ்க்கு வந்துருங்க சாயந்திரம் என்ன சரியா” அருண் பேச பேசவே பின்னாடி இரைச்சல்களுக்கு நடுவே பெண் குரல் ‘அருண் அண்ணா’ என்று சிரித்து பேசும் சத்தம் கேட்டது. குரலின் அடையாளம் உணர்ந்ததும் இவனுக்குள் எரிமலை வெடிப்பு.
Advertisement
சிரஞ்சீவி “மச்சான் எங்க இருக்க”
Advertisement
அருண் “அதுதான் சொன்னேனேடா லஞ்சுக்கு வெளியில வந்து இருக்கேன்”
சிரஞ்சீவி”நாங்க இங்க இருக்க,யார் கூட லஞ்சுக்கு போன”
அருண் “அதுவா டெல்லியில இருந்து ஷிவானி வந்துருக்காடா அதான்”
Advertisement
“ஓஹோ” என்றவன் “எப்போ கிளம்புறா” என்று பரபரப்பை அடக்கி கொண்டு கேட்டான்
அருண் “இதோ அடுத்து ஒரு டூ ஹவர்ஸ்ல”
“எதே ஏன்டா சொல்லல அப்போ” கேட்டவன் அதிவேகமாக பார்க்கிங் சென்று வண்டி எடுத்துக்கொண்டு ஏர்போர்ட் விரைந்தான்.
அருணும் ஷிவானியும் ஏர்போர்ட் வந்து சேருவதற்கு முன் வந்து சேர்ந்திருந்தான் சிரஞ்சீவி. ஷிவானி சிரஞ்சீவியை பார்த்ததும் “ஹப்பப்பா பிரெண்ட்ட விட்டுட்டு இருக்க முடியாதே” கிண்டலாக கேட்டாள்
சிரஞ்சீவி “ஹான் மச்சானை விட்டுட்டு இருக்க முடியல…” கோபத்தை அடக்கிக்கொண்டு பேசிவிட்டு வம்பிழுத்தான் “ஊசி எல்லாம் போட நல்லா கத்துக்கிட்டியா”
ஷிவானி “நல்லாவே தெரியும், போட்டு காட்டவா”
சிரஞ்சீவி “அப்போ இந்தா இன்ஜெக்ஷன் போட்டு விடு, மசில் ஏறணும் எனக்கு இன்னும்” என்று அவன் பைசெப்ஸ் கட்டினான்
ஷிவானி அவன் கைகளை தட்டி விட்டு “ஏற்கனவே மலமாடு மாதிரிதான் இருக்க இதுல ஹார்மோன் இன்ஜெக்ஷன் வேறயா. அதெல்லாம் போடாத நல்லதில்ல ”
சிரஞ்சீவி “சரி சரி போடல நான் எக்ஸைஸ் பண்ணியே உடம்ப ஏத்திக்குறேன்” என்றான் அவள் தொட்டு தட்டிவிட்ட இடத்தை தடவிக்கொண்டே
ஷிவானி “இப்பவே நல்லாத்தான் இருக்க. மிஸ்டர் மெட்ராஸ் ஆகிடலாம்” என்றாள் காதில் தொங்கும் தொங்கட்டான் ஆட, அருணை திரும்பி பார்த்து “ சரி அருண் அண்ணா நான் கிளம்புறேன் பை பை நல்லபடியா யாருக்கும் கெடுதல் பண்ணாம பிஸ்னஸ் பண்ணு ” என்று வாழ்த்தினாள்
சிரஞ்சீவி “ஆகிடலாம் சொல்றியா.ஆகிடவா” ஆர்வம் மறைக்காமல் கேட்டான்.
ஷிவானி சிரித்துக்கொண்டே “ஒரு சுமோ கார் இருந்தா பிரகாஷ்ராஜ் படத்துல அடி ஆளா போகலாம்” சொல்லி சிரித்துவிட்டு “ பை பை வரேன்” என்றாள்
சலித்து போனான் சிரஞ்சீவி ஆனாலும் வழியனுப்பி வைக்க “பை பை நல்லா சாப்பிடு. ரொம்ப ஒல்லியாகிட்டே போறே” அக்கறையாக பேசினான்
ஷிவானி “அதான் எனக்கும் சேர்த்து நீ சாப்பிடுறியே” பதில் சொல்லிவிட்டு ஏர்போர்ட்க்குள் நுழைந்துவிட்டாள்.
சிரஞ்சீவி ஸ்தம்பித்து நின்றுவிட்டான். அருண் “அவ நீ திங்குறத பத்தி மட்டுதான் பேசுனா நீயா ஏதாச்சும் கற்பனை பண்ணிக்காத அது என் மொற பொண்ணு”
சிரஞ்சீவி “செருப்பு பிஞ்சி போவும்ரா ” என்றான் க்ரோதம் நிறைந்து
அருண் சிரித்துக்கொண்டே “சரி வா வா வந்து வண்டி எடு பணத்த கட்டி படத்த வாங்கி கொடுத்தாகனும்”
சிரஞ்சீவி “இல்ல அது உன் தங்கச்சின்னு சொல்லு அப்ப தான் நான் வண்டி எடுப்பேன்” அடம்பிடித்தான்
அருண் கிண்டலாக “புரிஞ்சிக்க மச்சான் நான் அவளை தங்கச்சின்னு சொல்லலாம் அவ அம்மாவோ என் அம்மாவோ அத ஒத்துக்கமாட்டாங்க”
சிரஞ்சீவி அருண் முகத்தில் ஓங்கி ஒரு குத்த விட , அருண் “டேய் வலிக்குதுரா”
சிரஞ்சீவி “வலிக்கட்டும் நல்லா வலிக்கட்டும்”
அருண் சொன்னது போல பணம் கட்டிவிட்டு வேலைகளை முடித்துக்கொண்டு கல்லூரிக்கு சென்றனர்.
அருண் சிரஞ்சீவி புவன் மூன்று பேரும் கார் பார்க்கிங்கில் பேசிக்கொண்டு நின்றிருக்க தேவ், தேவநாராயணன் குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ் வாரிசு அவர்களின் சீனியர் பதற்றமாக வந்தான்.
“அருண், தம்பிகளா எப்படிடா இருக்கீங்க” சம்பிரதாயமாக கேட்டுவிட்டு “நான் இப்படி கேட்டேன்னு சொல்லிடாதீங்க சுஷ்மாவை பார்த்தீர்களா” என்று கேட்டான்.
மூவருக்குமே சுஷ்மா மேடம் வராதது அவரை இவர்கள் பார்க்காதது அப்போதுதான் நினைவுக்கு வந்தது.
புவன் “இல்லையேண்ணா”
சிரஞ்சீவி “ஏதாச்சும் பிரச்சனையாண்னா? சொல்லு பசங்கள விசாரிக்க சொல்லவா” என்று கேட்க
அருண் “என்ன பண்ண தேவ் ஏன் இவ்வளவு பதட்டமா இருக்க” என்று கேட்டான்
தேவ் “ஐயோ ஒரு வாரமா சுஷ்மா என்கிட்ட பேசவே இல்ல எல்லா பக்கமும் ட்ரை பண்ணிட்டேன். காட்!! தப்பு பண்ணிட்டேன்” என்று புலம்பினான்.
அருண் “கான்ஃபரன்ஸ் இல்ல டூர் ஏதாச்சும் போயிருக்க போறாங்க. நாங்களும் அவங்கள பார்த்து ரொம்ப நாள் ஆன மாதிரிதான் இருக்கு”
தேவ் “இல்ல… அவளுக்கு கோவம் வந்தா பத்து நாள் கூட பேசாம சைலன்ட்டா இருப்பா அப்புறம் அவளே சமாதானமாகி பேசிருவா இந்த மால் ப்ராஜெக்ட்ல பிஸியா இருக்கேன் பாரு… கண்டுக்கவே முடியல என்னால” அவனை அவனே குறைகூறி பேசினான்
சிரஞ்சீவி “சரிண்ணா விசாரிக்க சொல்றேன் நீ டென்ஷன் ஆகாத கூல் டவுன் ஆகு” சமாதானமாக பேச
தேவ் உடனே உணர்ச்சிவசப்பட்டு “அதெல்லாம் செய்ய போகாதே. என் அம்மாக்கு தெரிஞ்சா கஷ்டம்”
அருண் “ஏன்? ஏன் கஷ்டம்”
தேவ் “அது… அது… நான் அவளை ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணது அம்மா கண்டுபிடிச்சிட்டாங்கன்னு நினைக்கிறேன்” என்றான் முன்நெற்றியை தேய்த்து கொண்டே
அருண் உள்ளுணர்வு தேவ்வின் உடல் மொழி பார்த்து விஷயம் பெரியது என்று கணித்தது அது பொய்யாகவில்லை.
புவன் “ண்ணா எதையும் புரியுற மாதிரி சொல்லுண்ணா. நீ சோத்துல பூசணிக்காய் மறைச்சா பரவால்ல ரைஸ்மில்லையே மறைக்க பார்க்கிற எனக்கு எதுவும் புரியல”
அருண், புவன் குடும்பம் போலவே தேவ் குடும்பமும் செல்வ செழிப்பான குடும்பம். தேவ், அவன் பெற்றோர்களுக்கு ஒரே பிள்ளை. அவன் அம்மா அவர்கள் சொத்தை நிர்வகிக்க அவன் அப்பா கிரேட் பிசினஸ் ஸ்கூல் டைரக்டராக இருக்கிறார். சுஷ்மாவின் அப்பா தேவின் அம்மாவுக்கு பி.ஏவாக இருந்தவர். அவர் இறந்து போகவும் சுஷ்மாவிற்கு படிக்க இவர்கள் உதவி செய்திருக்கிறார்கள். அவள் படித்து முடிக்கவும் அவர்கள் கல்லூரியிலேயே வேலையும் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். சுஷ்மா மீது தேவ்க்கு அதிரடி காதல். நியாயம்,நேர்மை, தர்மம் என்று கல்வியிலேயே மூழ்கி இருக்கும் தந்தையின் சப்போர்ட் இருக்கிறது என்கிற தைரியத்தில் தேவ் சுஷ்மாவை வற்புறுத்திஅவன் அம்மாவுக்கு தெரியாமல் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து இருக்கிறான். விஷயம் அவன் அம்மாவுக்கு தெரிய வந்திருக்கிறது போலும், ஒரு வாரமாக எந்த வகையிலும் சுஷ்மாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. சுஷ்மா எங்கு போனாள் என்றும் தெரியவில்லை. தேவ் ஒரு பக்கம் அம்மா ஏதாவது செய்திருப்பார்களா? அம்மா செய்திருக்க முடியுமா? அம்மா செய்திருக்கமாட்டாங்கதானே! என்று பல சிந்தனைகள் ஓட கூடவே அடிக்கடி சுஷ்மா பிரேக்கப் செய்து கொள்ளலாம் என்று பேசுவதும் நினைவுக்கு வரும்போது அவளே எங்கேயும் காணாமல் போயிருப்பாளோ என்பதும் சந்தேகமாக இருந்தது. இன்னொரு பக்கம் சுஷ்மா அப்படி செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவள் மீது இருக்கும் காதல் அவனை துன்புறுத்தியது. அவனுக்கு தெரியும் அவன் அம்மா அவர்களுக்கு நிகரான குடும்ப பிண்ணனி இருக்கும் பெண்ணைத்தான் அவனுக்கு பார்ப்பார்களென. அந்த வகையில் மகனால் தாயை சந்தேகிக்காமல் இருக்க முடியவில்லை.அதே போல கணவர் ஏதேனும் சுஷ்மாவிற்கு உதவி செய்ய போனால் அவரை அசிங்கமாக திட்டுவார். கௌரவம் பார்க்கும் அம்மா சுஷ்மாவை துரத்திவிட்டிருக்ககூடும் என்பது மூளைக்கு உரைத்தாலும் மனம் ஏற்க மறுத்தது.
அருண் தேவ்வின் பேச்சை எல்லாம் இடைமறிக்காது கேட்டவன் “சரி வா சுஷ்மா மேடம் பிளேஸ் போய் பார்ப்போம்” என்றவன் அவனை கைபிடித்து தரதரவென இழுத்து சென்றான்.
சுஷ்மாவின் டேபிள் நிறைய புத்தகங்கள், அட்டடென்ஸ் குறிப்புகள் மற்ற மாணவர்களின் அசைன்ட்மென்ட் என டீச்சர் மேஜை எப்படி இருக்குமோ அப்படி இருந்தது. அருண் யோசிக்காமல் அவளுக்கென கொடுக்கப்பட்டிருந்த கம்ப்யூட்டரை ஆன் செய்தான்.
தேவ் “ப்ச் அதுல துபாய்க்கு போக டிக்கெட் ஒன்னு கெடச்சது தேதி நாங்க ரெஜிஸ்ட்டெர் மேரேஜ் பண்ண அன்னிக்கு தேதி இருக்கு” என்றான். ஏற்கனவே அவனால் முடிந்தவரை தேடி பார்த்திருக்கிறான்!
அருண் “கடைசியா அவங்க உனக்கு எப்போ மெசேஜ் பண்ணாங்க” என்று கேட்டு அவன் போன் வாங்கி பரர்தான்.
சுஷ்மா தேவ் அனுப்பி இருந்த குட்மார்னிங் மெசேஜுக்கு வெரி குட் மார்னிங் என்றே பதில் சொல்லி இருக்கிறாள். அதன்பின் அந்த நாளே ‘மதியம் கொஞ்சம் பிசியா இருக்கேன் நைட் பேசுறேன்’ என்று பதில் அனுப்பியிருக்கிறாள். அருண் விசாரிக்க “அவ பி.எச்.டி வேலை இருக்கு அப்பறம் பேசுறேன் சொன்னா அப்பறம் பேசவே இல்லை” என்றான்.
சுஷ்மாவின் கம்ப்யூட்டரை அருண் தீவிரமாக அலசி ஆராய்ந்தான். தேவ் குழப்பத்திலேயே இருக்க, புவன் “அருண் என்னடா செய்ற” கேட்டான்
அருண் “தெரியல,சுஷ்மா மேல தப்பு இருக்கும் தோணல. தேவ்க்கு உண்மை என்னனு தெரியுது ஆனா அதை நம்ப முடியாம இருக்கான். அதான் ஏதாச்சும் கிடைக்குமா பார்க்குறேன்”
தேவ் “என் அம்மாதான் ஏதாச்சும் செய்திருப்பாங்க நினைக்கிறியா மச்சி” கேட்டவன் அருணை குழப்பமாக பார்த்தான்.
அருணுக்கு அவன் உள்ளுணர்வு தேவ்க்கு அவன் அம்மா பாசம் அவனை உண்மையை பார்க்கவிடாமல் செய்கிறது என்றது. என்னமோ தேவ் பித்து பிடித்தது போல இருப்பதை பார்க்க உண்மையை தேட இவனுக்கு வெறி பிடித்தது.
தேவ் அவனுக்கு தோன்றியதை எல்லாம் பேசினான் “அவளுக்கு எப்பவும் பயம்டா எங்கம்மா ஏதாச்சும் செஞ்சு பிரிச்சிடுவாங்கன்னு. அதுதான் நடந்திருச்சு போல. இல்ல பிஎச்டி ஒர்க் முடிக்க எங்கயாச்சும் போயிட்டாளா தெரியல. அப்படி போயிருந்தா ஏன் வீட்டை நடுராத்திரியில காலி பண்ணிட்டு போகணும். அவளுக்கு இந்தியா விட்டு வெளிநாட்டுக்கு போகத்தான் ஆசை. அதான் போயிட்டா போல. என்கிட்ட சொல்லிட்டு போயிருக்கலாம். என் கிட்ட சொல்லியிருந்தா நான் போக விட்டிருக்க மாட்டேன். நான் என்னடா பண்ணட்டும்,எனக்கு அவளை ரொம்ப புடிக்கும். ஊருக்கே நான் செலவு செய்வேன்.எனக்கு அவதான் செலவு செய்வா தெரியுமா. குட்டியா என் கைக்குள்ள அடங்கி போவா. சிலநேரம் சில விஷயத்துல நல்லது கெட்டது எல்லாம் கரெக்ட்டா பிரிச்சு பார்த்து சொல்லுவா. அவ சொன்ன ஸ்ட்ராட்டஜில தான் இப்போ என் ரியல் எஸ்டேட் பிஸ்னஸ் ஓடுது. ஐயோ உங்கள பத்தியெல்லாம் சொல்லுவா.அவங்க என் ஸ்டுடென்ட்ஸ் நீ நம்மள பத்தி சொல்லக்கூடாதுன்னு மிரட்டி வெச்சிருந்தாடா இல்லன்னா உங்களுக்கு சொல்லிருப்பேன். கல்யாணத்துக்கே கூப்பிட்டுருப்பேன்” என்றவன் அவன் கழுத்தில் போட்டிருக்கும் செயின் காட்டி “நான் அவளுக்கு தாலி கட்டுனேன். பதிலுக்கு அவ எனக்கு தாலி கட்டுன்னா” சொல்லி அழுதான்.
சிரஞ்சீவியும் புவனும் தேவ்வை சமாதானம் செய்ய, அருண் சுஷ்மாவின் கம்ப்யூட்டரை அலசி அவள் டெலீட் செய்துவிட்டு போன டாகுமெண்ட்ஸ் எல்லாம் ‘ரிக்வர்’ செய்து பார்த்துக்கொண்டிருந்தான். இன்னொரு பக்கம் கல்லூரி சிசிடிவி கேமராக்களை ஹேக் செய்து பார்த்துக்கொண்டிருந்தான்.
தேவ் “ப்ச், நான் பெருசா சாதிச்சு யாரும் தொடமுடியாத பவர்ல போய் உட்கார்ந்துட்டா என்னை யாரும் எதுவும் கேள்வி கேட்க முடியாது நெனச்சேன். அதுவரை அவ என்கூட இருப்பான்னு நெனச்சேன். இப்போ என்னமோ பவரும் இல்ல, அவளும் இல்ல எதுக்கு வாழனும் தோணுது”
அருண் மூன்று மணிநேர தேடலுக்குபின் “சுஷ்மா லண்டன் போயிருக்கணும் இல்ல ஆம்ஸ்டெர்டேம் போயிருக்கலாம்” என்றான்
துள்ளி எழுந்தவன் தேவ் “அப்போ இந்தியால இல்லைதானே” கேட்டவன் “எனக்கு தெரியும் எனக்கு தெரியும். மச்சான் எங்கன்னு பார்த்து சொல்லுடா நான் கெளம்பி போய் கூட்டிட்டு வந்துர்றேன்” என்றான் வெறி பிடித்தவன் போல்…
எரிச்சலானான் அருண். அவன் கவனித்த சிசிடிவி காட்சிகளை காட்டினான். எது உண்மையோ அது கண்களுக்கு முன் விரிந்தது. சுஷ்மா அவன் தாயாருடன் காரில் வந்து இறங்கி கார் பார்த்து தலையை ஆட்டுகிறாள். அதன் பின் காரிடர் காமெரா பார்த்தால் முகத்தை பொத்திக்கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறாள். அதன்பின் கல்லூரிக்கு சுஷ்மா வரவேயில்லை. அந்த நாளிலேயே நெதர்லாந்தில் இருக்கும் பல்கலைகழகம் பற்றியெல்லாம் கூகுளில் தேடி பார்த்திருக்கிறாள்.
சிலை போல நின்றான் தேவ். அருண் “அவங்க அதே ஃபோன் தான் இன்னமும் யூஸ் பண்றாங்கன்ன உன் வாட்ஸ்-அப் வச்சு அவங்க லொகேஷன் ட்ரேஸ் பண்ண முடியும். போன் குடுக்கிறியா” கேட்டான்
தேவ் அவன் போன் கொடுக்கவும், அருண் “ஆனா அவங்கள இந்தியா கூட்டிட்டு வந்தா உன் அம்மாவோ இல்ல அப்பாவோ அவங்கள எதவும் செய்யமாட்டாங்கன்னு என்ன நிச்சயம். வேற நாட்ல இருந்தா உயிரோடவாவது இருப்பாங்கல்ல”
கொடுக்க வந்த கைபேசியை கெட்டியாக பிடித்துக்கொண்ட தேவ் “எனக்கு சொல்லாத அவ எந்த ஊர்ல இருக்கான்னு. ஆனா ப்ளீஸ் அவ நல்லா இருக்காளா பார்த்து சொல்லு. ஜஸ்ட் ஒரு சிரிப்பு உன் நாள அழகாக்கும்ன்னு சொன்னா நம்புவியா ? நான் பார்த்திருக்கேன் அவ சிரிச்சா மண்டைமேல ஏறி உட்கார்ந்திருந்த ஸ்ட்ரெஸ் எல்லாம் காணாம போறத உணர்ந்திருக்கேன். போன வாரம் ஒருத்தி என்கிட்ட கொஞ்சி கொஞ்சி வண்டி வாங்கிக்கொடுக்க சொல்லி கேட்டா, யாருன்னே தெரியாத பொண்ணுக்கு எல்லாம் வண்டி வாங்கி தரேன். ஆனா இவ… இவ… அவ்ளோ கடன் இருந்தும் என்கிட்ட எதுவுமே கேட்டது இல்ல. நான் சாப்பிடாம இருப்பேன்னு ஸ்விக்கில ஜூஸ் ஆர்டர் பண்ணி அனுப்பி வைப்பா. மச்சான் இப்போல்லாம் அம்மா கூட என்கிட்ட லாபம் நஷ்டம் பத்திதான் பேசுறாங்க.ஆனா இவ என் ஸ்கின்,ட்ரெஸ் ஸ்ட்ரெஸ்ஸுன்னு பார்த்து பார்த்து அக்கறையா பேசுவா எப்படி அவ இல்லாம இருப்பேன்” கேட்டு அழுதான்
அருணுக்கு பதில் சொல்ல வார்த்தை வரவில்லை. மனதின் ஓரத்தில் எங்கேயோ சிறு நெருடல் பயங்கரமாக உறுத்துகிறது.
தேவ் தயங்கி தயங்கி “அவ ப்ரெக்னன்ட்டா இருக்காளான்னு எப்படி தெரிஞ்சுப்பேன்” கேட்டு வீரிட்டு அழவும் மற்றவரெல்லாம் அதிர்ந்தனர்.
அருண் “ம்ம் பாக்குறேன். நீ கெளம்பு இன்னும் கொஞ்ச நேரம் நீ இருந்தா உன்ன நானே அடிச்சிருவேனோ தோணுது”
புவனும் சின்ன குரலில் “ஆமாண்ணா கிளம்பு”
தேவ்வும் அவன் தொலைபேசியை வாங்கிக்கொண்டு கண்களை துடைத்துக்கொண்டு “எங்கம்மாக்கு தெரியாம பார்த்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு வெளியேறினான்.
சிரஞ்சீவி “இவ்ளோ சுயநலம் ஆவாதுடா சாமி”
புவன் “அவனை பத்தி மட்டுமே யோசிக்குறான்”
அருண் “ஹ்ம்ம்…இந்த எம்பிஏ படிப்பு முடிஞ்சா எனக்கும் உனக்கும் கூட இதே நிலைமைதான்”
