Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 32

அத்தியாயம்-32

பத்து நாட்கள் கடந்திருந்த வேளையில் ஒரு நாள் மாலை நேரம் கடந்து ஆபீசில் இருந்தாள் நேத்ரா, ப்ராஜெக்ட் சம்மந்தமான சிறு வேலையை முடித்துவிட்டுப் போக எண்ணி அருணுடன் அமர்ந்திருந்தவள், வெளியில் இருட்டியதை உணரவில்லை.

 

திடீரென்று நிமிர்ந்து பார்த்தவள், அங்கே ஒரு சிலர் மட்டும் அமர்ந்திருக்க கைக்கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தாள்.



Advertisement

 

பார்த்தவள் மணி எட்டு என்று காட்டவும் “ஓ ஷிட், இவ்வளவு நேரம் ஆயிடுச்சா? ஐ ஹவ் டு கோ” என்றவள் வேகமாக கணினியை அணைத்துவிட்டு எழுந்தாள்.

 

Advertisement

தன் உடைமைகளை எடுத்துக் கொண்டே நளனின் அறையை ஒரு பார்வை பார்த்தவள் அங்கு அவன் அறை காலியாக இருக்கவும், லிப்ட்டை அடைந்து கீழ் தளத்தை அடைந்தாள்.

Advertisement

 

அங்கு கேபுகள் அதனதன் வேலைக்குச் சென்றிருக்க, “சரி வெளிய போயி ஆட்டோ புடிச்சு போகலாம்” என்று எண்ணியவள் வெளியில் செல்ல எத்தனிக்க அதற்குள் அருண் அவன் இருசக்கர வாகனத்தில் நேத்ராவின் முன் வந்து நின்றான்.

 

Advertisement

“வாங்க நேத்ரா நான் உங்களை ட்ரோப் பண்றேன்” என்று அவள் முன்னே வந்து நின்றான் அருண்.

 

அவன் முன்னே வந்து நின்றதும் “இல்லை அருண் நான் ஆட்டோல போயிக்கிறேன்” என்று நகர்ந்தவளை “இல்ல நேத்ரா வாங்க லேட் ஆயிடுச்சு நானே உங்களை ட்ராப் பண்ணீடுறேன் ” என்று விடாமல் துரத்திக் கொண்டிருந்தான் அந்த நல்லவன்.

 

“ப்ளீஸ் அருண்…” என்று முன்னே நடந்தவள் முன் ஒரு கார் வேகமாக வந்து நின்றது. அதில் இருந்த சைடு மிர்ரர் மெதுவாக கீழே இறங்கவும் உள்ளே இருந்த நளனைக் கண்டு அவள் புன்னகை மலர்ந்தது.

 

எப்போதும் ஏழு மணிக்கு மேல் வீட்டிற்க்குக் கிளம்பிவிடும் நேத்ரா இன்று வேளை சற்று ஆர்வமாக செல்லவும் அதில் மூழ்கி விட்டாள். வனிதா இன்று தலை வலி காரணமாக விடுப்பு எடுத்துக் கொண்டு மதியமே வீடு சென்றிருக்க, நேத்ரா வீட்டிற்க்கு கிளம்பாமல் இருப்பதைப் பார்த்த நளன் சற்று தாமதித்தான்.

 

பின்பு கீழே சென்று அவன் காரில் காத்திருந்தவன் நேத்ராவின் வரவுக்காகக் காத்திருந்தான். சற்று நேரத்தில் நேத்ரா வரவும் என்ன செய்கிறாள் என்று பார்த்தவன், அவள் அருகில் அருண் இருசக்கர வாகனத்துடன் வந்து பேசிக் கொண்டிருக்கவும், பற்களைக் கடித்து தாடையை இறுக்கியவன் காரை வேகமாக ஸ்டார்ட் செய்து நேத்ரா முன் நிறுத்தினான்.

 

காரின் ஸ்டேரிங் வீலைப் பற்றியிருந்த நளனின் கைகள் மேலும் இறுக, காருக்கு முன்னே வெறித்த அவனது பார்வை நேத்ராவின் புறம் திரும்பியது,

 

அவனது விழி மொழியில் அவன் கூற வருவதைப் புரிந்து கொண்டவள் “வாயை தொறந்து கூப்பிட்டா தான் என்னவாம்” என்று மனதினுள் சலித்துக்கொண்டு, வேகமாக காரின் கதவைத் திறந்து அதில் ஏறினாள்.

 

நேத்ரா காரில் ஏறுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அருண் தோள்களைக் குலுக்கி விட்டு அவன் போக்கில் கிளம்பிவிட்டான். 

 

காரை வேகமாக செலுத்தி நேத்ராவின் தெரு முன்பு நிறுத்தினான். அலுவலகத்திலிருந்து இங்கு வரும்வரை நேத்ராவிடம் எதுவும் பேசாதவன், ஏன் அவள் புறம் கூடத் திரும்பாதவன், இப்போது நேத்ரா இறங்கப் போகும் வேளையில் அவள் முகம் பார்க்காமல் “ஒரு நிமிஷம்” என்றான். 

இறங்கப் போனவள் காரை அடைத்துவிட்டு நளனின் பக்கம் திரும்பவும் “யாரு அவன்?” என்றான் நளன்.

 

“யாரைக் கேக்குறீங்க? புரியாது விழித்துவிட்டு பின்பு அருணா? அவன் என்னோட கொலீக், ஏன் உங்களுக்கும் தான்?” என்றாள் நேத்ரா.

 

நேத்ராவின் முகம் பார்க்காமல் காரின் முன்னே வெறித்த பார்வையுடன் “கொலீக்னா எப்போ பாத்தாலும் ஒன்னாவே இருக்கணும்ங்கிற அவசியம் கிடையாது, இப்போ மட்டும் நான் வரலைன்னா அவன் கூட பைக்ல போயிருப்பல்ல?” என்றவனை தீயாகத் முறைத்தவள், அவனுக்கு பதில் எதுவும் கூறாமல் காரிலிருந்து இறங்கி நடந்தாள்.

 

வீட்டிற்குச் சென்றவள் முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே “பெரிய இவரு, அவ்வளவு அக்கறை இருந்தா என்னை அவரோடவே வச்சுக்க வேண்டியது தானே, எப்போ பாத்தாலும் முகத்தை கொரங்கு மாதிரி உர்ர்னு வச்சுக்கிட்டு, என் முகத்தைக் கூட பாத்துப் பேசுறது இல்லை” என்று ஏகத்துக்கும் திட்டினாள் அவள் அம்முவை.

 

அவள் கட்டிலில் அமர்ந்து புலம்பிக் கொண்டிருந்தவள் போனை எடுத்து வனிதாவுக்கு அழைத்தாள். வனிதா மறுபுறம் போனை எடுத்தவுடன் “ஹே வனிதா, அவரு ரொம்பதான் பண்றாரு டி” என்றாள் எதுவும் கூறாமல் மொட்டையாக.

 

நேத்ரா நளனைப் பற்றித்தான் கூற வருகிறாள் என்பது புரிந்த வனிதாவோ “ஹே நேத்ரா ஒரு நிமிஷம் இரு டி, நான் வினோத் சாருக்கு கான்பெரென்ஸ் கால் போட்டுக்கிறேன்” எனவும், ஒரு நோடி அமைதி காத்தவளின் கோபத்தை உணர்ந்தவள்,

 

“ஹே அப்படி இல்லை நேத்ரா, சார் தான் கேப்பாங்க அதான்…” என்றாள். ஆம் வனிதாவை சந்திக்கும் வேளைகளில் நேத்ரா, நளனைப் பற்றியும், அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றியும் கேட்பான் வினோத். ஏனென்றால் நளன் தான் வினோத்திடம் நேத்ராவைப் பற்றி எதுவும் கூறுவதில்லையே.

 

“ம்ம்…” என்று மட்டும் கூறிய நேத்ரா அமைதியாக இருக்கவும் வினோத்தும் காலில் வந்தான். அவள் காத்துக்கொண்டிருந்த வேளையில், நந்தனும் நேத்ராவின் அறையில் நுழைந்து அவள் அருகில் அமர்ந்தான்.

 

போனைக் காதில் வைத்துக் கொண்டே நந்தனை ஒரு பார்வை பார்த்தவள், அவன் பேசு என்பது போல் சைகை செய்யவும் பேசத் துவங்கினாள்.

 

மறுபுறம் காலில் ஜாயின் செய்த வினோத், “நேத்ரா என்னம்மா உன்னோட புருஷன் என்ன சொல்றான்?” எனவும்,

 

“நீங்க எல்லாரும் தான் புருஷன் புருஷன்னு சொல்லீட்டு இருக்கீங்க, ஆனா அவங்க என்னோட முகத்தை கூட பாக்குறது இல்லை தெரியுமா? இன்னைக்கு என்ன நடந்தது தெரியுமா?” என்றவள் நளன் பேசிய அனைத்தையும் கூறவும், 

 

“ஓ சாரு பாக்கமாட்டாராம் பேசமாட்டாராம் ஆனா பாத்துக்க மட்டும் செய்வாராக்கும், அவனை ஒரு வழிக்கு கொண்டு வர்ரது என்னோட பொறுப்பு, சார எப்படி வழிக்கு கொண்டு வர்ரது எனக்கு இப்போ நல்லா தெரிஞ்சு போச்சு, நீ நான் சொல்றதை மட்டும் கேளும்மா” என்றவன் அவன் திட்டத்தை விளக்கினான்.

 

அவன் திட்டத்தைக் கேட்டவள் “அண்ணா இது சரியா வருமாண்ணா எனக்கு என்னவோ பயமா இருக்கு, ஏற்கனவே கோபத்துல இருக்குறவரு, திரும்பவும்….” எனவும்,

 

வனிதாவோ “ரெண்டு பேரும் இப்படியே இருந்தா ஒன்னும் வேலைக்கு ஆகாது, பேசாம சார் சொல்றதை கேளு நேத்ரா” என்று வனிதாவும் கூறினாள்.

 

அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த நந்தன் நேத்ராவிடமிருந்து போனை வாங்கி, “வினோத் நீங்க சொல்றது தான் சரியா வரும், நீங்க சொல்ற மாதிரியே செஞ்சிடலாம் நான் நேத்ரா கிட்ட பேசிக்கிறேன், நீங்க பிளானை மட்டும் நேத்ராவுக்கு அப்டேட் பண்ணுங்க” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

 

நந்தனும் நேத்ராவிடம் பேசி சம்மதிக்க வைத்தான். மறுநாளிலிருந்து அவர்கள் நடத்தப்போகும் நாடகத்திற்குத் தயாரானாள் நேத்ரா.

 

கதிரவன் முகிலுரித்து தன்னை உலகுக்கு வெளிக்காட்டிய அதிகாலைப் பொழுது அழகாய்ப் புலர, எப்போதும் காணும் சொப்பனத்திலிருந்து கண்விழித்த நேத்ரா, அவள் அலுவலகத்திற்குச் செல்லக் கிளம்பினாள்.

 

பிங்க் வண்ண காட்டன் புடவையில், அதற்க்கு ஏற்றார் போல் அணிமணிகளுடன் அலுவலகம் வந்தவள் வனிதாவுடன் கேபிலிருந்து இறங்கி லிபிட்டினுள் நுழைந்து லிப்ட்டின் கதவு மூடும் போது ” ஹே வெயிட் டோன்ட் க்ளோஸ் தி டோர் ” என்ற குரலுடன் வந்து சேர்ந்தான் அருண் நளனுடன்.

 

வனிதாவும் நேத்ராவும் கேபிள் இருந்து இறங்கிய நேரம் நளனும் வருவதைப் பார்த்த அருண் அவன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு நளனிடம் விரைந்தவன் “ஹாய் சார் குட் மார்னிங்” என்றுவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு லிப்டை அடைந்தான்.

 

லிப்ட்டினுள் நேத்ராவைக் கண்ட நளன் பார்வையைத் திருப்பிக் கொள்ள, அருணோ “ஹே நேத்ரா பிங்க் டால் மாதிரி க்யூட்டா இருக்கீங்க” என்றான்.

 

நளன் புறம் திரும்பாமல் “தேங்ஸ் அருண்” என்றவள் மிடுக்காக திரும்பிக்கொள்ள வனிதாவோ நளனை நோட்டமிட்டாள். நளன் முகம் எதையும் பிரதிபலிக்காமல் இருக்கவும் பெருமூச்சொன்றை வெளிவிட்டவள் லிப்ட் திறந்ததும் நேத்ராவிடம் சொல்லிவிட்டு அவள் கேபினுக்கு சென்றாள்.

 

அடுத்து வந்த நாட்களில் அருண் நேத்ராவிடம் சிரித்துப் பேசிப் பழக நேத்ராவும் அவனிடம் அதே போல் பழகினாள்.

 

ப்ராஜெக்ட் வேலைகள் அனைத்தும் மளமளவென்று நடந்தேற ஒரு நாள் காட்ஜியஸ் கிளாத் ஹவுஸ் அமையப்போகும் இடத்திற்கு நளன் அவர்கள் டீம் மேட்டில் சிலரை அழைத்துக்கொண்டு சென்றான். அதில் ப்ரீத்தி, அருண், நேத்ராவும் அடக்கம்.

 

ப்ரீத்தியோ நளனை சைட் அடிக்கும் வேலையை செவ்வனே செய்ய, அருணும் நேத்ராவும் நளனுக்கு அடிவயிற்றில் நெருப்பை மூட்டிக் கொண்டிருந்தனர். 

 

கடையின் மேல் தளத்திற்குச் செல்லும் வழியில் க்ரானைட் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, மேல் தளத்திற்குச் செல்வதற்கு ஒரு பலகை போல் வைத்திருந்தனர்.

 

அதில் ஏறி அனைவரும் சென்றுவிட நேத்ராவுடன் வளவளத்துக் கொண்டு வந்த அருண் “கம் ஆன் நேத்ரா, நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன், உங்க கையை குடுங்க” என்ற அருண் மேலே நின்று பயந்து கொண்டிருந்த நேத்ராவை அழைத்தான்.

 

நளனை ஒரு பார்வை பார்த்தவள் அவன் அவளைக் கண்டு கொள்ளாமல் வேறு புறம் திரும்பி நிற்கவும், தன் வலக்கையயை அருணிடம் கொடுத்தாள்.

 

நேத்ரா அருணின் கைபிடித்து மேலே ஏறியவுடன், நேத்ராவை பார்த்தும் பார்க்காதது போல் இருந்த நளன் நேத்ரா அருகில் வந்து அவளது முழங்கையைப் பிடித்து தன்புறம் இழுத்தான், நேத்ராவை முறைத்துவிட்டு “ஸ்டே வித் மீ” என்றான் அழுத்தமான பார்வையை அவள் முகத்தில் பதித்து.

 

நளன் கையைப் பிடித்து அழுத்தியதில் “ஸ்ஸ் ஆ…” என்று முகத்தை சுருக்கியவள் அவன் மறுபுறம் திரும்பவும் சிரித்துக் கொண்டாள் நேத்ரா.

Link👉வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே

Link👉மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)

Link 👉நாணலே நங்கையானால்?(முழுநாவல்)

Link – முற்றும் முதல் நீ எனக்கு (முழுநாவல்)

Link 👉நிலவே நின்னை சரண் அடைந்தேன் (முழுநாவல்)

Link 👉கடைவிழியின் காதலில் (முழுநாவல்)

Link 👉Amazon Kindle

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!