Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 7 

சாரல் – 7

ஞாற்றுக்கிழமை காலை எட்டு மணியளவில் வீட்டின் காலிங் பெல் விடாமல்  அடிக்க, தூங்கி கொண்டிருந்த நந்தா, எவன்டா அது காலையிலே இப்படி அழுத்துறான் கால்லிங் பெல்லை, யாரும் வீடு தெரியாம வந்து அழுத்தி தொலைக்கிராங்களா என்று திட்டிக் கொண்டே சென்று கதவைத் திறக்க, அங்கு பிரசன்னம் தந்தார்கள் அவனுடைய நண்பர்கள் அரவிந்த் மற்றும் நவீன்.

நவீன், “ஹப்பாடா! இப்போவாது கதவைத் திறந்தியே…”

அரவிந்த், “நாங்க வந்துட்டோம்” என்று குத்திட்டுக் கொண்டே வீட்டினுள் நுழைந்தனர்.



Advertisement

முதலில் தூக்கம் கலைந்த எரிச்சலில் ஒன்றும் புரியாமல் நின்ற நந்தா, பின்பு அவர்களை முறைத்தவாறே கதவை சாத்திவிட்டு அவர்களிடம் வந்து நின்றான். “உங்கள யாரு, இப்போ இங்க வரச்சொன்னது, கிளம்புங்க முதல்ல ரெண்டு பேரும்…”

அரவிந்த், “என்ன்ன்ன?.. நீ எங்ககிட்டயா சொல்ற?…”

“இங்க நீங்க ரெண்டு பேருத் தானே இருக்கீங்க..”

Advertisement

“ஒய்?.. ஒய்?..ஒய்?… நாங்க ஏன் கிளம்பனும்?..”

Advertisement

“நீங்க எதுக்கு இங்க வரணும்..”

“இது என்ன நான்சென்ஸ்த் ( non -sense )தனமான கேள்வி… என் நண்பன் வீட்டுக்கு வர உரிமை, எங்களுக்கு இல்லாம வேற எவனுக்கு இருக்கு…”

“நான் உங்கள நண்பன்னு சொல்லவே இல்லையே..”

Advertisement

“அடப்பாவி.. ஒழுங்கா தூங்கிட்டு இருந்த என்னை, நந்தா அவன் வீட்டுக்கு சீக்கிரமா வரச்சொன்னான், அங்கேயே இன்னைக்கு இருந்துட்டு ஈவினிங் வெளில சாப்பிடலாம்னு சொன்னான்னு சொன்ன?… இவன் என்னனா இப்படி சொல்றான்… உன்னை” என்று நவீன், அரவிந்த்தைப் போட்டு மொத்த, 

“அடேய் அடேய் இருடா… நான் அவன்ட பேசி முடிச்சிட்டு வரேன்.” என்று அவன் அடிப்பதை தடுத்துக் கொண்டே “இப்போ என்னடா எங்களை வீட்டை விட்டு வெளில போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா அப்படினு சொல்லறீயா…”

“அதான் தெரியுதுல கிளம்பு…”

“அடேய்! வாடா போலாம்… இனிமேல் இவன்கிட்ட நமக்கு பேச்சே கிடையாது…”

“நீயேன் அவனை பேசிக் கூடாது சொல்ற… அவன் என்ட பேசுவான், அவன் இருக்கட்டும். நீ மட்டும் கிளம்பு…”

 “நாந்தான் அவனையும் கூட்டிட்டு வந்தேன். டேய் நவீன், ஒழுங்கா எழுந்து வா.”

“போடா… நான் உன்னோட வரமாட்டேன்… தூங்குன என்னை அடிச்சி எழுப்புனல்ல… “

“அடேய் நவீன்… அவன் நம்பள நண்பனே இல்லனு சொல்லிட்டான். ஒழுங்கா எழுந்து வா.”

நந்தா,” ஆமாடா… அவன் என் நண்பன் இல்ல பிரெண்ட்…  அப்படித் தானே நவீன்” என்று அவனிடம் கேட்க,

“அதேத்  தான்..” என்று நந்தாவிடம் ஹை-பை (hi -fi ) அடித்தான்.

அரவிந்த், “யு டூ புரூட்டஸ்..”

“சரி நல்லா இருந்துக்கோங்க… நான் கிளம்புறேன் ஹிம் ஹிம்…” என்று சோகமாக தன் இருக்கையிலிருந்து எழ,

“கிளம்பு வா… நான் வந்து வழியனுப்பி வைக்கிறேன்…”

கதவு வரை வந்துவிட்டு திரும்பித் திரும்பிப் பார்க்க,

“அதான் கிளம்ப சொல்லியாச்சுள்ள, அப்பறம் என்ன திரும்பி பாக்குற… போடா சீக்கரம், எங்களுக்கு வேலை நிறைய இருக்கு.”

“ம்ம்… ம்ம்… போறேன்…” வெளியே சென்று கதவை இவனே அடித்துச் சாற்ற,

“ஹா ஹா ஹா…” என்று இருவரும் வாய்விட்டு சிரித்துக்கொண்டிருக்க,

மேலும் பத்து வினாடி சென்று, கதவு திறக்கும் சத்தத்தில் இருவரும் திரும்பிப் பார்க்க,

அங்கே அரவிந்த் இருவரையும் கொலைவெறியுடன் நோக்க,

நந்தா, “இன்னும் போலையா நீ…” என்று நக்கலடிக்க,

நவீன், “வண்டிச் சாவி எடுக்க மறந்துட்டியா?…”

“உங்கள என்ன பன்றேன்னு பாருங்கடா…” என்று இருவரையும் அடிக்க வர, அவனிடமிருந்து தப்பிக்க, இருவரும் ஓட ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் அங்கே கலவரம் சிறப்பாக நடந்து முடிந்து இருந்தது.

நவீன் மூச்சுவாங்கிக் கொண்டே, “வெளில போயிட்டு எவனும் டாக்டர்னு சொல்லிடாதீங்க. நம்மள காறித்துப்ப போறாங்க..”

“அடபோடா.. எல்லா நேரத்திலும் டாக்டர் ஆஹ் இருக்க முடியாது… டாக்டர்க்கு மெண்டல் ஹெல்த் ரொம்ப முக்கியம். மைண்ட் ரிலாக்ஸா இருந்தாத்  தான் வர பேஷண்டை நல்லா பாக்கமுடியும்…”

“அதுவும் சரிதான்…”

அர்வி, “போதும் உங்க டிஸ்கஷன்…”

நவீன், “உனக்கு என்னடா..”

“பசிக்குது… எதுவாது சாப்பிடணும்.” என்றான் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு,

“அங்க ஹாஸ்டெலே சாப்பிட்டு வந்திருக்க வேண்டியது தானே..”

டேய் நந்தா.. உனக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்காடா.. தினமும் அதேத் தான சாப்புடுறோம்.. ஒரு நாள் நீ சாப்பாடு போட மாட்டியா..”

“நான் இன்னும் பிரஷ் கூட பண்ணல…”

“டேய்… நான் ஏதாது சொல்லிடப்போறேன்… ஒழுங்கா போயிடு…”

“சரி சரி… வரேன் இருங்க..”

“நவீன் நீ சொல்லுடா, என்ன பண்ணலாம்னு… நாம இன்னைக்கு குக்கிங் ட்ரை பண்ணி பாக்கலாம்” என்றான் அரவிந்த் ஆர்வமாக,

“நீ ஒரு ஆணியும் … “என்று ஆரம்பிக்க,

“ஏன்டா ஏன்… புதுசா ஒரு திறமையை கத்துக்க விடுறியா…”

“அப்படியே எழுந்து ஓடிப் போயிடு.. அவன் இந்த வீட்டுக்கு வந்து ஒரு வருஷம் ஆகப்போது,  அவன் வீட்டுக்கு வரும் போதுலாம் இதேத் தான் சொல்ற டா எருமை..”

“ரைட்டு விடு…” எனக்கு வரப்போற பொண்ணுக்கு அந்தக் கொடுப்பனை இல்லப்போல..”

“என்னக் கொடுப்பனை அது சொல்லு.. என்று கேட்டுக்கொண்டே நந்தா வர.

“அது ஒன்னும் இல்லடா, நான் சமைச்சி குடுத்துச் சாப்புடுறது தான்..”

“அந்தப் பொண்ணு உன்னையக் காறித் துப்பும் பரவாலையா, நீ சமைச்சிக் குடுத்தா…”

“ம்ம்… பாசிபிலிட்டிஸ் இருக்கு…”

நவீன், “அப்போ… வாய மூடிட்டு இரு…”

“உனக்கும் அதே தான் டா…” என்றான் ரோஷமாக,

“நான் அந்த ரிஸ்க் எடுக்குறேன்னு சொல்லவே இல்லையேடா…”

“ஹிம்… பேச்சிலர்ஸ் வாழ்க்கை வர வர ரொம்ப போரடிக்குது… சீக்கரம் கல்யாணம் பண்ணனும். உங்கள விட ஒரு வயசு மூத்தவன் வேற” என்று பெருமூச்சினை விட.

“அது இதைவிட இன்னும் ஜெகஜோதியா இருக்குமே… ஓகேவா…”

“அதுக்குன்னு சன்யாசம் போகவா முடியும்… என்னால முடியாது… நீ வேணும்னா போ…”

இவர்கள் பேசுவதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தா நந்தா, “நான் போயிட்டு காலைல சாப்பாடு என்ன பண்ணலாம்னு பாக்குறேன்.”

நவீன், “டேய் நில்லு, எவ்வளோ பெரிய டாபிக் பேசிட்டு இருக்கோம். ஒன்னும் சொல்லாம போற நீ…”

அர்வி, “ஆமாம்டா… இவன் சரியே இல்ல வர வர… அவனோட போன நான் யூஸ் பண்ணிட்டேன்னு என்னைய அடிச்சிட்டான்டா” என்று நவீனிடம் மாட்டிவிட்டான்.

“என்ன நந்தா… இவன் சொல்றது உண்மையா…”

அர்வி, “டேய் நான் சொன்ன நம்ப மாட்டியா…”

நந்தா மௌனம் சாதிக்க,

“என்ன நந்தா எதுவா இருந்தாலும் சொல்லு..”

அர்வி, “ஆமாம்டா.. “

நந்தா எதுவோக் கூற வர, அவனின் போன் அடித்தது இடையூறாக,

“இருடா வரேன்.. வைஷுவாத் தான் இருப்பா” என்று சொல்லிக் கொண்டே ரூமில் இருக்கும் போனை எடுக்கச் சென்றான்.

அர்வி , “ம்க்கும்.. இவனே இப்போதான் மனசு வந்து, எதோ சொல்ல வந்தான். இந்த வைஷாலி அதுக்குள்ள கால் பண்ணி கெடுத்துவிட்டுடிச்சி..”

ஏன்டா நவீன், அவன்கூட தான எம். எஸ்-ல இருந்து சுத்திட்டு இருக்க, அவன் யாரையாச்சும் ‘லவ் கிவ்’ அப்படினு எந்த பொண்ணுக்கிட்டயாது பேசிருக்கானாடா. அதுக்கு வாய்ப்பில்லைனு எனக்கே தெரியும். இருந்தாலும், அவனை எனக்கு இந்த ஒன்றரை வருசமாத் தெரியும். எனக்கு தெரியாத ஏதாது பாஸ்ட் இருக்காடா?…

“அடப்போடா.. அதான் உனக்கே தெரியுதுல்ல…”

உள்ளிருந்து போனில் பேசிக்கொண்டே வெளியே வந்த நந்தா, “சரிடா நீ பார்த்து, பத்திரம். நான் அங்க நாலு மணிக்கு இருக்குற மாறி அந்த மாலுக்கு வந்துருவேன். அப்பறம் நவீன், அரவிந்த் அண்ணா வருவாங்க என்கூட” என்றான் அறிவிப்பாக,

ஓகே ண்ணா. அப்போ மால்ல பாக்கலாம்.”

“ஓகே வைஷு, பை..”

“டேய், நாலு மணிக்கு மாலுள்ள இருக்குற மாறி போலாமா.. “

அரவி, “சரி போலாம்.. நீ சொல்ல வந்ததை முதல்ல சொல்லு..”

“என்னடா சொல்லணும்… நேரம் வரும் போது கண்டிப்பா சொல்வேன்… இப்போ எதுவும் கேக்காதீங்க…”

“அப்போ அந்த போன்ல என்ன வச்சிருக்க…”

“அதுலாம் ஒன்னும் இல்லடா…”

“அப்போ போன என்கிட்டே குடுத்துட்டு, நீ போயிட்டு உனக்கு தெரிஞ்ச சமையல் பண்ணு…”

“சரி… இந்தா போன், உன்னால முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கோ…”

“நீ குடுறா முதல்ல…”

நந்தா போனை குடுத்துவிட்டு, கிட்சேன் சென்று ஆராய்ந்து, டேய் தயிர் இருக்கு. சாதம் வைக்கிறேன். தயிர் போட்டு சாப்டுக்கலாமா, இல்லனா வெளில போயிட்டு என்னாவது வாங்கிட்டு வந்து தான் சமைக்கணும்.

நவீன், “இதுக்கு நான் ஹாஸ்டெல்லே இருந்திருப்பேன்…”

“ஏன்டா, ஈவினிங் வெளில போறோம் அப்பறம் என்ன?…”

“அதுக்கு என்னடா.. எனக்கு வேற ஏதாது பண்ணித்தா..”

“அடிங்க..நான் என்ன குக் ஆஹ்.. எதோ எனக்கு நேரம் கிடைச்சா புதுசா ட்ரை பண்ணி சாப்புடுவேன்… இல்லனா, மெஸ் சாப்பாடு தான நானும் சாப்புடுறேன்… நீங்க வரும் போது ஒன்னும் வாங்கிட்டு வரலை. நானும் வீட்ல எதுவும் வாங்கி வச்சிரலை. இப்போ என்ன பண்ணனும் சொல்லுங்க..”

“இதுக்கு நீ வீடு எடுத்து தங்கிருக்கவே வேண்டாம் …”

“என்னடா…” என்று கேட்டுக்கொண்டே ஹால்லிற்கு வர,

“டேய் அர்வி, இங்க என்ன பேசிட்டு இருக்கோம். நீ என்னடா அந்த போன்ல இன்னும் பாத்துட்டு இருக்க, நீ எடுத்துப் பாக்குற மாறிலாம் அவன் வச்சிருக்க மாட்டான். போனை வச்சிட்டு இங்க பேசுடா எரும..”

“இந்தாடா நந்தா… கண்டிப்பா இதுல இருக்கு என்னவோ…”

“ஆமா இருக்கு … ” என்று சிரித்துக்கொண்டே போனை வாங்கினான்.

“டேய்! இப்போதைக்கு ஒரு காப்பி இல்லை தண்ணியாது கண்ணுல காமிங்கடா… அப்பறம் பேசலாம்.”

“பால் இல்ல, ப்ளாக் டீ தான் போடலாம்…”

“எதையோ எடுத்து வாடா…”

“இவன் வீட்ல எதுக்கு கிட்சேன் இருக்குமே தெரியலை…”

அர்வி, “வைஷாலி வந்தா எதுவும் பண்ணுமா இருக்கும்… இல்லனா இவனாவது, குக் பண்ணி சாப்புடுவானா?… விடு டா…”

நந்தா டீயுடன் வர, அதனை குடித்துக்கொண்டே, “இப்போ சொல்லு டா… என்ன வேணும் சாப்பிட…”

நவீன், கடிகாரத்தைக் பார்க்க அது பதினொன்று என்ன காட்டியது. “அடப்பாவி  மோர்னிங் எட்டு மணிக்கு வந்தோம் டா. இப்ப மணியை பாத்தியா?…”

“அது உங்க மேலத் தான் தப்பு… நான் காரணம் இல்லை.”

அரவி, “அடப்பாவி… எங்களை வெளிய போக சொன்னல்ல..”

“தூக்கத்துல என்னைய எழுப்பி விடல, அதுக்குதான்..”

“போடா…” என்று ஆரம்பிக்க,

`நவீன், “டேய்! போதும்.. திரும்ப முதலிருந்து ஆரம்பிக்காத.. இப்போ என்ன தயிர் சாதம் தான் சாப்பிடணுமா?…”

நந்தா “வேற போயிட்டு வாங்கிட்டு வந்து பண்ணா லேட் ஆகும், பரவலைனா சொல்லு..”

“வேற வழி… போயிட்டு சாதம் வை… நான் தொட்டுக்க எதையாவது ஆர்டர் பண்றேன்…”

“சரி..டீல்.. அர்வி, வா எனக்கு ஹெல்ப் பண்ணு..”

“டேய் இதுக்கு கூட ஹெல்ப் பண்ணனுமா… ஓவர் ஆஹ் தெரியல உனக்கு…”

“உனக்கு சொல்லித்தரேன்… ஒழுங்கா வந்து கத்துக்கோ… பின்னாடிக்கு யூஸ் ஆகும்.”

“வந்து தொலைக்கிறேன்… நீ கொஞ்சமா பாத்து ஆர்டர் பண்ணு… சிக்கன் மட்டும் போதும். நைட் வெளில தான் எப்படியும் சாப்பிடுவோம்..”

“ஹ்ம்..ஓகே..”

ஒருவழியாக மூவரும் சாப்பிட்டு விட்டு, பின்பு கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு, இரண்டு மணிபோல் மாலுக்கு கிளம்பினார்கள்.

இங்கு இவர்கள் மாலுக்கு செல்ல, அங்கே அவந்தி மாலுக்கு செல்வதற்கு முன்..??

அடுத்த அத்தியாயத்தில்…

சாரல் வருடும்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!