Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 38 (Final Episode)

இறுதி அத்தியாயம்-38 

 

  ஆதவன் தன் கதிர்களைப் உலகுக்குப் பரப்பி பூமியை ஆலிங்கனம் செய்ய ஆரம்பிக்கும் நேரம், மணமேடையில் மணப்பெண் கோலத்தில் முகத்தில் வெட்கப் புன்னகையுடன் அமர்ந்திருந்த வனிதாவுக்கு அருகில் மணமகன் கோலத்தில் கம்பீரமாக அமர்ந்து அய்யர் கூறும் மந்திரங்களை வாய்க்கு வந்தபடி முணுமுணுத்துக் கொண்டிருந்தான் வினோத்.

 



Advertisement

வினோத் உளறுவதைப் பார்த்து சிரிப்பை வாய்க்குள் அடக்கிக் கொண்டிருந்த வனிதாவைப் பார்த்தவன், அய்யரிடம் “அய்யரே, அதென்ன மாப்பிள்ளை மட்டும் தான் நீங்க சொல்ற மந்திரங்களை சொல்லனுமா என்ன, பொண்ணு சொல்லக் கூடாதா?” என்றான்.  

 

வினோத்தை முறைத்தவர் திருமாங்கல்யத்தை எடுத்து வினோத்தின் கையில் கொடுத்தார்.

Advertisement

 

Advertisement

“மாங்கல்யம் தந்துனானேன

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

Advertisement

த்வம ஜீவ சரதஸ் சதம்”

 

“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று திருமாங்கல்யத்தை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!” என்பது இதன் பொருள்.

 

என்று மந்திரத்தின் பொருளை விளக்கியவர், இந்த மந்திரத்தின் பொருள் உணர்ந்து ரெண்டு பேரும் ஒற்றுமையாய் வாழுங்கோ” என்றார்.

 

மங்கள நாணை வனிதாவின் கழுத்தில் அணிவித்த வினோத் அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டான்.

 

நேத்ராவின் கைகளைப் பிணைத்து நின்றிருந்த நளன் அய்யர் கூறிய விளக்கத்தில் கைகளை எடுத்து நேத்ராவைத் தோளோடு அணைத்துக் கொண்டான்.

 

திருமணம் முடிந்து அன்றே வினோத்தும் வனிதாவும், நளன்-நேத்ரா சென்ற அதே இடத்திற்கு ஹனிமூன் சென்று அவர்களது வாழ்வைத் துவங்கினர் வினோத்தின் ஆசைப்படியே. 

 

அன்று வினோத்-வனிதா நிச்சயத்தின் போதே நேத்ராவை நளன் அவர்கள் அப்பார்ட்மெண்டிற்கு அழைத்து வந்திருந்தான்.

 

“ஹனி… உன்னோட திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ, நாமளும் கிளம்பலாம்” என்று நளன் கூறவும் சந்தோஷத்தில் வேகமாக அவலறைக்கு ஓடிய நேத்ரா, அங்கு அவளுக்கு எதிரே வேகமாக வந்த நிவேதா, வனிதாவின் தங்கையுடன் மோதிக் கொண்டாள்.

 

“சாரி அண்ணி…” என்ற நிவேதா விலகி ஓடிவிடவும், புருவம் சுருக்கி “அண்ணியா?” என்று யோசித்தவள், நிவேதாவைத் தொடர்ந்து நந்தன் அங்கிருந்து வெளிவரவும் வாயைப் பிளந்தாள்.

 

நேத்ரா அறிந்துகொண்டதை உணர்ந்து அருகில் வந்த நந்தன், “ஹே குட்டி பிசாசு, யாரு கிட்டயும் சொல்லீடாத, நாங்க இன்னும் ரெண்டு மூணு வருஷம் லவ் பண்ணீட்டு அப்புறம் தான் கல்யாணம் பண்ணிப்போம்” என்றான்.

 

“அடப்பாவி அண்ணா, இது எப்போ இருந்து?” என நேத்ரா வினவவும்,

 

“அது மூணு வருஷம் முடியப் போகுது” என்றான் அசால்ட்டாக.

 

“ஓஓ அது தான் நான் எந்த விஷயமும் உன் கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே உனக்கு தெரிஞ்சு போகுதா! அடப்பாவி!” என்றாள் ஆச்சரியமாக. 

 

“ஆமா, என்றவன் சரி நீ போயி உன்னோட திங்ஸ் எல்லாம் எடுத்து வச்சுக்கோ, மச்சான் கூட சந்தோஷமா வாழு” என்றவன் நேத்ராவின் தலை மேல் கைவைத்து நகர்ந்தான்.

                      

நளனின் காட்ஜியஸ் கிளாத் ஹவுஸ் துவங்குவதற்கு தேவையான அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டிருக்க, திறப்பு விழாவிற்கு இன்னும் ஒரு வாரமே இருந்த சமயமாதலால் நளனுக்கு வேலை இரவும் பகலும் பத்தாது போல் தோன்றியது. 

 

நளனுடன் அவர்கள் வீடு வந்த நேத்ராவிற்கு அவனைப் பார்ப்பதே பெரிதாகத் தோன்ற, இதிலெங்கே அவனுடன் பேசுவது. வேளையிலும் நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்திருந்ததால் அலுவலகத்திலும் நளனுடன் இருக்கும் வாய்ப்பை இழந்திருந்தாள் நேத்ரா.

 

மறுநாள் கடை திறப்பு என்றிருந்த வேளை, இரவு வெகு தாமதமாக வீடு வந்து சேர்ந்தான் நளன்.

 

நளன் காலிங் பெல்லை அழுத்திவிட்டு கண்களில் உறக்கத்துடன் காத்திருந்த வேளை வீட்டின் கதவு திறக்கப்பட, கண்களை மூடிமூடித் திறந்து கொண்டு நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள் நேத்ரா.

 

நேத்ராவைக் கண்ட நளன் அவள் தள்ளாடி அவன் மேல் விழப்போகவும் வேகமா அவளைப் பிடித்தவன் மார்பினில் தலை வைத்தாள் நேத்ரா.

 

இடக்கையயை நேத்ராவின் பின்புறமும் வலக்கை கொண்டு நேத்ராவின் முகம் நிமிர்த்தியவன், அவள் பாதி மூடியிருந்த விழிகளுடன், பற்களைக் காட்டி சிரிக்கவும்,

 

அவள் மேலிருந்து வந்த மது வாடையில் முகத்தை பின்னால் இழுத்தவன், “ஹனி குடிச்சியா?” என்றான்.

 

நளனிடம் இருந்து விலகியவள் தள்ளாட்ட நடையுடன் “ம்ம் எஸ் கொஞ்சமா…” என்று அவளது இரு விரல்களை வைத்து அளவு காட்டியவள் மீண்டும் சொருகிய கண்களுடன் விழப்போக,

 

நேத்ராவை முறைத்துக் கொண்டிருந்த நளன் அவளை தாங்கிப் பிடித்தான். பின் சோஃபாவில் அமர வைத்தவன் அவள் கன்னம் பிடித்து “ஹனி ஏன் இப்படி பண்ணுன?” என்றான்.

 

நளன் நேத்ராவை அவனுடன் அழைத்து வந்து இருபது நாட்கள் கடந்துவிட்டது. நளன் இன்னும் நேத்ராவுடன் பழைய அவளது அம்முவாக இன்னும் நடந்து கொள்ளவில்லை.  

 

இத்தனை நாட்களின் பிரிவை ஈடுகட்டும் முயற்சியில் நேத்ரா அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்திருக்க, நளனோ கடை திறப்பின் நெருக்கடியில் இருந்தான்.

 

எப்போதும் பகலில் சற்று நேரம் உறங்குபவளுக்கு இரவில் உறக்கம் தொலைந்து போக நளனும் வெகு தாமதமாக மிகவும் சோர்வாக வீட்டிற்கு வருபவன் உறங்கியும் போவான்.

 

இன்றும் அப்படித்தான் தூக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுத்தவள், “ச்ச, தூக்கம் வேற வரமாட்டுது என்ன பண்ணலாம், என்று யோசித்தவள்,

 

வினோத் கூறிய ‘நீ இல்லாமல் நளனால் உறங்க முடியவில்லை, அதற்க்காகத்தான் நளன் மதுவை நாடுகிறான்’ என்ற வினோத்தின் குரல் காதில் ஒலிக்க,

 

“ஓ அப்போ சரக்கடிச்சா தூக்கம் வருமா, சரி குடிச்சு தான் பாப்போமே” என்றவள் பிரிஜ்ஜை திறந்தாள். பிரிஜ்ஜில் இருந்த கரும் பச்சை நிற பாட்டிலை எடுத்து வாயில் சரித்தாள்.

 

வாயில் ஒரு மடக்கு சரித்தவள் த்து என்று சிங்கிள் துப்பினாள், “சீ இதென்ன கசக்குது, ச்ச இதெப்படி குடிக்கிறது, பாவம் என்னோட அம்மு, தூக்கம் வராம இதக் குடிக்கும் போது நான் குடிக்க மாட்டேனா?” என்றவள் கண்களை அழுந்த மூடிக் கொண்டு ஒரே மூச்சாகக் குடித்து முடித்தாள்.

 

நளன் நேத்ராவிடம் ‘ஏன் இப்படி பண்ணுன?’ என்று கேட்கவும் அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் நிமிர்த்து அவன் முகம் பார்த்து சிரித்தாள்.

 

பின்பு குளறிய மொழியில் “வினோத் அண்ணா தான், நீங்க நைட் தூக்கம் வராம இதை குடிக்கிறீங்கன்னு சொன்னாங்க, அதான் எனக்கும் தூக்கமே வரலையா…. அதான் கொஞ்சமா குடிச்சேன்” என்றாள் கண்களை சுருக்கி,

 

“அம்மு, என் மேல உங்களுக்கு இன்னும் கோபம் போகலையா? ஏன் என்னை அவொய்ட் பண்றீங்க? நான் சத்தியமா இனிமே தப்பு பண்ண மாட்டேன், என்னை நம்புங்க அம்மு,

 

நான் குடிச்சிட்டு பேசுறேன்னு நினைக்காதீங்க, நீங்க காலையில கேட்டாலும் இதையே தான் சொல்லுவேன், நீங்க என்னைய நம்புறதுக்கு நான் என்ன பண்ணனும்? சொல்லுங்க எதுவா இருந்தாலும் பண்றேன்” என்றவள் உதட்டை பிதுக்கி அழ முற்படவும்,

 

 கண்களில் பெருகிய கண்ணீரோடு இறுக அணைத்துக் கொண்டான் நளன்.

 

“ஹே ஹனி நிஜமா உம்மேல எனக்கு கோபமெல்லாம் இல்லை டா, நிஜம்மா வேலை டென்ஷன்ல தான் உன்னைய கண்டுக்காம விட்டுட்டேன் ” என்று இறுக அணைத்தவனின் மார்பிலிருந்து விலகி நளனின் கண்களை நோக்கியவள்,

 

“அப்போ… நான் நம்ம குழந்தையை திரும்பவும் சுமக்கணும், ப்ளீஸ்” என்றாள் கெஞ்சுதலாக.

 

தன் ஒட்டு மொத்த ஏக்கத்தையும் கண்களில் தேக்கி சிறு குழந்தை போல் யாசிப்பவளிடம் பேச நா எழாது நேத்ராவின் கழுத்தில் முகம் புதைத்த நளன் கதறி அழுதான். 

 

 

“வார்த்தையால் கடத்த முடியாத வலிகளை

 

வரிகளில் கடத்திடலாம்

 

வரிகளில் கடத்த முடியாத வலிகளை

 

கண்கள் கடத்துகிறது,

 

கண்ணீராக!”

முகிலினங்கள் வான் மேகத்திற்குள் தங்களை மறைத்து ஒளிந்து விளையாடிக் கொண்டிருக்க, சுற்றிலும் டூலிப் மலர்கள் தங்கள் வண்ண வண்ண இதழ்களால் நிலத்தை வண்ணமயமாக்க, அந்த டூலிப் மலர்களுக்கு நடுவே அவள் உடுத்தியிருந்த ஸ்லீவ் லஸ் மேக்ஸி உடையை காற்று அதன் போக்கில் இழுக்க,

 

சில்லென்ற காற்று உடலுக்குள் ஊடுருவி மேனியில் நடுக்கத்தை விளைவிக்க, கைகளை விரித்து, சிப்பி இமைகளை மூடி, விரித்துவிட்ட கூந்தல் காற்றில் தவழ நின்றிருந்தவள், குளிர் காற்றினால் நடுங்கிய கைகளை மடக்கி மார்பின் குறுக்கே கட்டியவளை, பின்னிருந்து அவன் அணிந்திருந்த ஜெர்க்கினுள் சேர்த்து அணைத்திருந்தான் ஒருவன்.

 

ஆறடி உயரமும், காற்றில் ஆடும் சிகையும், உடற்பயிற்சி செய்து முறுக்கேறிய உடம்பும் அவன் அவளை அணைத்ததில் அவனுடன் ஒன்றிய அவளது முதுகுப்புரமும், அவன் அளவாக திருத்தப்பட்ட மீசை அவள் கழுத்தில் குறுகுறுப்பூட்ட, குளிர் காற்றில் சில்லிட்டிருந்த அவள் மேனி அவனின் செயலால் சூடேறியது.

 

ம்ம்ம் என்று முனகியவள் முன்னே திரும்பி அவன் அகன்ற மார்பில் தன் மலர் கைகளால் குத்தினாள். பின் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்…

 

இதழ் விரித்த புன்னகையுடன் வரிசைப் பற்கள் தெரிய சிரித்த நளனின் அழகில் எப்போதும் போல் இப்போதும் தன்னைத் தொலைத்த நேத்ரா, தன்னவனைக் கட்டியணைக்க அவள் கைகளை மாலையாகக் கோர்த்து நளனின் கழுத்தில் கோர்த்தவள் நளனை அவள் புறம் இழுத்தாள்.

 

எவ்வளவு இழுத்தும் அருகில் வரதவனை முறைத்தவளிடம் சிரிப்பை உதித்தவன், கண்களை கீழே செலுத்தி பார்க்கச் சொன்னான் நளன். குனிந்து அவர்கள் இருவருக்கு இடையில் பார்த்தவள் தன் ஐந்து மாதத்தில் பெருத்திருந்த வயிற்றைப் பார்த்து கன்னக்குழியுடன் சிரித்தவளை, முன்புறம் திருப்பி வயிற்றோடு கட்டியணைத்த நளன் அவளது கன்னக்குழியில் அழுந்த முத்தமிட்டான்.

 

ஆம், நேத்ரா நளனின் இரட்டைக் குழந்தைகளைத் தாங்கி ஐந்து மாதங்கள் முடிவடையப் போகிறது.

 

நேத்ராவின் கர்பத்தை உறுதி செய்த டாக்டர் நேத்ரா வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதாகக் கூறவும், முதலில் களிப்புற்ற நளன், பின்பு அதில் இருக்கும் சிக்கல்கள் கருதி சிறிது தொய்வுற்றான். 

 

ஆனால் நேத்ராவோ, தன்னால் அளிக்கப்பட்ட கரு தனக்காகவே தன்னுள் மீண்டும் உயிர் பெற்றிருப்பதாகக் கருதியவள், சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தாள்.

 

பின்பு ஒரு முடிவுக்கு வந்த நளன் “ஹனி நாம நம்ம குழந்தைகளை பெத்துக்கலாம், ஆனா இங்க இல்லை” என்றவன் நேத்ராவை கனடா அழைத்து வந்து விட்டான்.

 

வனிதாவும் எட்டு மாதங்கள் மேடிட்டிருந்த வயிற்றுடன் வினோத் அருகில் நின்றிருந்தாள்.

 

வினோத்தோ “டேய் நளா இப்போல்லாம் ரெண்டு குழந்தை பெத்துகிறது சாதாரணமா போச்சு டா, நீ பயப்படாத உனக்கு சிஸ்டர கனடா கூட்டீட்டு போகனுன்னு தோணுச்சுன்னா உனக்கு தோணுறத பண்ணு” என்றான் என்றும் உற்ற நண்பனாக. 

 

“நானும் வரேன் மாப்பிள்ளை, டேய் நாங்களும் வரோம்” என்ற ரேணுகாவின் பேச்சையோ, கார்த்திகேயன்-நந்தினியின் பேச்சையோ கேட்காதவன்,

 

“கண்டிப்பா வாங்க, ஆனா குழந்தைங்க பொறந்ததுக்கு அப்புறம், இப்போ இல்லை” என்றவன்,

 

“என்னோட பொண்டாட்டிய நான் பாத்துப்பேன், நான் மட்டும் தான்” என்றான் அழுத்தமாக நேத்ராவின் கண்களை ஊடுருவி. நளனின் கண்களில் தெரிந்த காதலில் கட்டுண்டவளாக அவளது கன்னக்குழியை நளனின் நெஞ்சக்குழியில் பதித்தாள் நேத்ரா…..

 

 

                                                                                            முற்றும்

 

பின்னுரை

 

 

“வாழ்க்கை மிகவும்

அழகாய் காட்சியளிக்கிறது;

ஒருவரை/அவளை

மிகவும் நேசிக்கும்போது…

அழகான வாழ்க்கை

பண்படுகிறது – அவளு(னு)ம்

நேசிக்கும்போது,

பண்பட்ட அன்பு

பயனடைகிறது – அவளு(னு)டன்

வாழும்போது! …

வாழ்க்கையோ

அன்பின்

வரலாறாகிறது –   அவளு(னு)டன்

கொண்ட என் தூய நட்பு

நிலைக்கும் போது

-அவளு(னு)டன் என்றென்றும்

நான்…”

                                                                                                                                            – Kamali Maduraiveeeran

Link👉வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே

Link👉மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)

Link 👉நாணலே நங்கையானால்?(முழுநாவல்)

Link – முற்றும் முதல் நீ எனக்கு (முழுநாவல்)

Link 👉நிலவே நின்னை சரண் அடைந்தேன் (முழுநாவல்)

Link 👉கடைவிழியின் காதலில் (முழுநாவல்)

Link 👉Amazon Kindle

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!