Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல் – 6

சாரல் – 6.1

“அண்ணா… இந்த வாரம் நான் ஹாஸ்டெல்லே இருக்கிறேன். என் பிரண்ட்க்கு பர்த்டே, சண்டே ட்ரீட். சோ, மால்க்கு போறோம். நான் அங்கேயிருந்து கிளம்புற டைம் சொல்றேன். நீ வரியா ண்ணா?… எனக்கு கொஞ்சம் திங்ஸ் வாங்கணும்…” என்று வைஷாலி போனை மறுபுறம் எடுத்ததும் தொடர்ச்சியாக பேச,

அப்பொழுதுதான் கவனித்தாள், எதுவும் பதில் வராமல் தான் மட்டும் பேசிக்கொண்டு இருப்பதை, “ண்ணா…” என்று திரும்ப  அழைக்க,

அரவிந்த், “ஹப்பா! காது வலிக்குது… இப்படியா கத்திக்கத்தி பேசுவ…”



Advertisement

“டேய் அரவிந்த் அண்ணா… நீயா, உன்கிட்ட எப்படி? அண்ணா போன் வந்துச்சி…”

“என்னாது! டேய் ஆஹ் சொல்ற… இரு இரு நந்தாட்ட சொல்றேன்…”

“அண்ணா.. என்ன ண்ணா..இப்படி பண்றீங்களே ண்ணா..” என்று ஒவ்வொன்றுக்கும் அண்ணா போட,

Advertisement

“சரி பொழைச்சிப்போ… எந்த பிரண்ட்க்கு பர்த்டே… பையனா இல்ல பொண்ணா…”

Advertisement

“பொண்ணு தான் ண்ணா..”

“உண்மையா தான சொல்ற?…”

“ஆமா… ஆமா… எப்படி அண்ணா போன் உங்ககிட்ட… குடுக்கமாட்டாரே…”

Advertisement

“அவன் எங்க குடுத்தான்… நானே எடுத்துட்டேன்…”

“அதானப் பாத்தேன்..”

“அதே தான்…” என்று பேச.

அன்றைய தின டூயட்டியை முடித்துவிட்டு, கதவைத் திறந்துக்கொண்டு நந்தா உள்ளே வர… அவன் தன்னுடைய போனில் பேசுவதைப் பார்த்து முறைக்க,

“வந்துட்டான் பாரு, முறைக்குறதுக்குனே பொறந்தவன்” என்று போனில் கூற

“அண்ணா..” என்று சிரிக்க,

“என்னடா முறைப்பு… போன் வந்துச்சி எடுத்தேன்… இந்தாப் பேசு, தங்கச்சித் தான் பேசுறா…” என்று போனைக் கையில் திணிக்க,

அவனை முறைத்துக் கொண்டே, தங்கையிடம் நலம் விசாரித்து, அவள் கேட்டதற்கு பதில் கூறிவிட்டு, “சரிடா! சண்டே பார்க்கலாம்…” என்று பேசிவிட்டு போனை வைத்தான்.

“டேய் உன்ன…” என்று அடிக்க வர

“டேய் டேய்.. நான் ஒரு டாக்டர்டா…” என்று ஓட,

“அப்படி, அப்பப்ப நீயே சொல்லி நியாபகப்படுத்திக்க உனக்கே…” என்று அடிக்க,

“போதும்… நிறுத்துடா…” என்று சொல்லிக்கொண்டே இருக்கையில் அமர,

“இனிமே என்னோட போனை எடுத்த, உன் கையை உடைச்சி மாவுக்கட்டு போட்டுவிட்ருவேன்.”

“போடுவடா நீ… இன்னைக்கு நவீன்க்கு நைட் டியூட்டி ஆஹ் போயிடுச்சி..z. அதனால நீ இன்னைக்கு தப்பிச்சிட்ட…”

“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து அப்பறம் கிழிங்க.. .hநான் இப்போ கிளம்புறேன்.”

“உன் போனை ஒருநாள், உனக்கு தெரியாம எடுத்துக் பார்க்கல, நான் அரவிந்த் இல்லடா…”

“அன்னைக்கு சொல்றேன் நான் யாருனு…”

“போடா போடா..டேய்! தங்கச்சி என்னையும் மாலுக்கு வரச் சொன்னுச்சி..ஒழுங்கா என்னையும் கூட்டிட்டு போ..”

“அப்போ நீயேப் போ.. நான் ஏன் கூட்டிட்டு போனும்.”

“டேய் டேய்..என்னடா..”

“என்னடா..”

“சரி சரி… சண்டே பாக்கலாம். நீ இப்போ கிளம்பு, லேட் ஆகிட்டுப் பாரு. டிராபிக் நிறைய இருக்கும். சீக்கரம் வீட்டுக்கு கிளம்பு..”

நக்கலாக சிரித்துக்கொண்டே, “பை… ட்ரை பண்றேன்” என்று விடைப் பெற்றான்.

வீட்டுக்குச் சென்று தன்னை ரெப்பிரேஷ் செய்துக்கொண்டு, பாலில்லாத ஒரு கருப்பு டீயை போட்டுக் கொண்டு தனது போனுடன் வந்து ஹாலில் அமர்ந்தான். போனில் உள்ள தன்னவளுடைய புகைப்படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான், நேரம் போவதுக் கூட தெரியாமல்.

மணி ஏழாக, பத்து நிமிடமிருக்க… அவன் அன்னையிடமிருந்து அழைப்பு வர, அப்பொழுது தான் தன்னிலை அடைந்து அழைப்பை பார்க்க, ஒரு சிரிப்புடன் அதனை ஏற்று “சொல்லுங்க ம்மா…” என்றான்

அவனின் பேசும் தொனியிலிருந்து, “நீங்க தான் டாக்டர் சொல்லணும்” என்றார் தானும் இலகுவாக,

“என்னம்மா!.. உங்க புருஷன் வீட்ல இல்லையா..”

“அவர்தாண்டா உனக்கு அப்பா..”

“உங்களுக்கு தான் முதல் உரிமைத் தாய்..”

“அவரைப் பேச்சுல இழுக்கலனா உனக்கு தூக்கமே வராதே..”

“உங்க புருஷனை நீங்க வீட்டுக் கொடுப்பீங்களா..”

“நந்தா… நீ பேச்சை மாத்தாத… உனக்கு என்ன பிரச்சனை சொல்லு…”

இவர் பேசுவதைப் பார்த்துபடியே வந்த காவியா, “என்னக் கொழுந்தனாரே ஒரேடியா தனிக்குடுத்தனம் போயிட்டீங்க போலவே, பொண்ணும் நீங்களே பாத்துட்டீங்களா… எனக்கு மட்டும் சொல்லுங்க, நான் யார்ட்டயும் சொல்லவே மாட்டேன்” என்று போனை மாமியாரிடமிருந்து வாங்கி பேச,

“ஹாங்… அண்ணி! எப்படி இருக்கீங்க, என் அண்ணனையும் கொஞ்சம் இப்படி உங்களப் போல பேசவைங்க” என்று பேச,

“அதுலாம் இருக்கட்டும்.. நான் கேட்டதுக்கு இன்னும் பதில் வரலையே..”

“வரேன் அண்ணி. வந்துப் பேசிக்கலாம்.”

“அப்போ சரி… இருங்க அத்தைட்ட தரேன்.”

“ம்.. குடுங்க.”

“சொல்லு நந்தா…”

“நீங்க சொல்லுங்க ம்மா… சுரேஷ் என்ன பண்றான்.”

“அவனுக்கு லீவாம்.. எதோ கொஞ்ச நேரம் பிரண்ட் வீட்டுக்கு போய்ட்டுவரேன்னு போனான்.”

“ஓகே ம்மா..”

“நீ இன்னும் எதுவும் சொல்லலையே நந்தா..”

“என்னமா சொல்லணும்..” என்றான் சலிப்பாக,

“நந்தா… நீ என்ன நினைக்கிற…”

“ம்மா.. நான் என்னம்மா சொல்ல… எனக்கு டாக்டர் பொண்ணு வேணாம். எப்பவும் நான் டாக்டர் ஆகவே இருக்க முடியாது. நானும் டாக்டர், எனக்கு வரபோறப் பொண்ணும் அப்படி வேணாம். என்னோட வாழ்க்கையை, நான் தான் ம்மா வாழனும். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க ம்மா..”

“ம்.. சரி விடு.. நான் பாத்துக்குறேன்..”

“நீங்க தான் பண்ணனும்.. நான் சொல்றப் பொண்ண கட்டிவைங்க..”

“என்னடா! சொல்ற” என்று அலற,

வாய்ப்பிருக்கு ம்மா.. நீங்க பண்ணுவீங்க எனக்குத் தெரியும் .”

“நந்தா.. என்ன இருந்தாலும் சொல்லிடுடா. நான் இப்பவே எல்லாத்துக்கும் தயாரா இருந்துக்குறேன்.”

“அட என்னமா.. எனக்கு பிடிச்சப் போல பொண்ணுப் பாருங்க, கட்டிக்குறேன்னு சொல்றேன்.”

“இப்போ இப்படியா சொன்ன?…”

“ஆமா… அதான் சொன்னேன்.”

“நந்தா… உண்மையை தானடா சொல்ற?…”

“வேணும்னா உங்க புருஷன் மேல சத்தியம் பண்ணவா..”

“அடேய்.. அவரை ஏன்டா இழு..” என்று சொல்லவர,

“கோமதி… “என்று குரல்க் கொடுத்துக்கொண்டே உள்ளே நுழைந்தார் வீரபாண்டியன்.

“ம்மா… யானை வருமுன்னே, மணியோசை வருமாம்… உங்க புருஷன் வராரு போல… சத்தம் வருது பாருங்க…”

“அடேய்… உன்ன…”

“நீங்க போயிட்டு உங்க புருஷன கவனிங்க… நான் வைக்கிறேன்.” என்று அவருக்கு பேச இடம் கொடுக்காமல் போனை வைத்துவிட்டான்.

“எனக்கு வாய்ச்சதும் சரியில்ல, எனக்கு பொறந்ததும் சரியில்ல” என்று முணுமுணுத்துக்கொண்டே, ‘என்னங்க’ என்று கணவரை நோக்கிச் சென்றார்.

“என்ன சொன்னான் உன் மவன்..”

“உடம்பு பூரா காது இருக்கும் போல…” என்று நினைத்து பெருமூச்சினை வெளியேற்ற,

“என்னடி… சொல்லு, அவன்ட டாக்டர் பொண்ணுக்கு பேசுனியா?…”

“அவனுக்கு டாக்டர் பொண்ணு வேணாம் சொல்லிட்டான்.”

“நான் பாக்குற பொண்ணைதான் தான் அவன் கட்டிக்கணும். சொல்லிடு அவன்ட…”

“அப்படினா, உங்களையே கட்டிக்க சொல்லுறான்” என்றார் மெதுவாக,

“அடங்கவேமாட்டானா உன் மவன்..”

“ஆமா.. இவரு அப்படியே அடங்கிட்டாரு.. அவனைச் சொல்லவேண்டியது.. நல்ல பொருத்தம் இதுல ரெண்டுத்துக்கும்” என்றார் பொறுமையாக,

“என்ன அங்க சொல்ற..”

“அவன்ட பேசிக்கோங்க இனிமேல்..” என முடித்துவிட்டு, வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என்று நழுவி சமயலறைக்கு  சென்றார்.

காவியா, அத்தை என்னாச்சி.. “வெற்றிகரமா பேச்சுவார்த்தை முடிச்சிட்டீங்களா..”

“எங்கத்த முடிச்சாங்க… இனிமே தான் இருக்கு.”

“சாப்பாடு சாப்பிட்டு உள்ள போகட்டும் முதல்ல..அப்பறம் பேசலாம்.”

பெரியவனையும் சாப்புடக் கூப்புடு, சின்னவன் இன்னும் காணும் பாரு. அவனுக்கு ஒரு கால்ப்  பண்ணி வர சொல்லு. நான் சாப்பாடுக் கொண்டு வைக்கிறேன்  என்று எடுத்துச் சென்றார்.

அனைவரும் ஒருவழியாக அன்றையத் தினத்தை முடித்துக்கொண்டு இரவுத் தூக்கத்திற்குச் சென்றனர்.

———-

மறுநாள் காலை அழகாக விடிய, தன்னுடைய அலாரத்தை நிறுத்திவிட்டு, எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, தர்ஷி என்று கூப்பிட்டுக் கொண்டே அவளின் அறைக்குச் சென்று அவளின் தோளில் தட்டி, எழுந்திரு தர்ஷி, நான் போயிட்டு சமைக்க ஆரம்பிக்கிறேன் என்று கூறிவிட்டு சென்றாள், அவந்தி.

முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் ஏற்றிவிட்டு, பின்பு கதவைத் திறக்க பால் பாக்கெட் வெளியில் கிடந்தது. தனக்கு முதலில் கட்டக் காபியை கலந்துவிட்டு, அதே பாத்திரத்தில் பாலைக் காய்ச்சினாள்.

தன்னுடைய கருப்பு காபியை ஒரு சிப் சிப்பாக ரசித்து பருகிக்கொண்டே, நேற்று இரவு முடிவுச் செய்ததுப் போல், லெமன் சாதம் செய்வதற்கு ஒரு கப் அரிசியை கழுவி குக்கரில் வைத்துவிட்டு, உருளைக்கிழங்கை சின்னச் சின்னக் கட்டமாக வெட்டி அதனை தண்ணீரில் போட்டு முடித்துவிட்டு வெளியில் பார்க்க, தர்ஷி வந்த பாடில்லை.

இவளை என்ன பண்றதுனே தெரியல என்று திட்டிக்கொண்டே அவளின் ரூமிற்க்கு செல்ல, அவள் கும்பகர்ணியா இன்னும் உறங்க, “தர்ஷி இப்போ நீ எழலைன்னு வை, உனக்கு பால் போட்டக் காப்பி கிடையாது சொல்லிட்டேன்.”

“அடித்துப்பிடித்து எழுந்த தர்ஷி, அடியேய் நல்லவளே! அதை மட்டும் பண்ணிடாதம்மா, உனக்கு புண்ணியமா போகும். இந்தா எழுந்துட்டேன் பாரு…” என்று கட்டிலிருந்து எழுந்துக்கொண்டே, “நீ காப்பி போட்டுட்டே இரு. அந்த வாசத்துக்கு எப்படி மயங்கி ஓடி வரேன் மட்டும் பாரு” என்று சொல்லிக் கொண்டே பாத்ரூமை நோக்கி சென்றாள்.

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை”

காப்பியை பருகிக்கொண்டே, “இனிமே காப்பி போட்டுட்டு என்ன எழுப்புடி, நான் சமைத்த எழுந்திருவேன். உனக்கும் மோர்னிங் எனர்ஜி சேவ் ஆகும்.”

“அப்போ கட்டக் காப்பி தான் பரவாலயா..”

“உனக்கு ஒரு நல்ல ஐடியா கொடுத்தேன்.. நீ கேக்கல.. சரி விடு.. எனக்கு ஒரு டவுட் அவந்தி.”

“என்ன டவுட் சொல்லு…”

“அது எப்படி வெறும் காப்பி குடிக்கிற, பால்ப் போட்டு மட்டும் நோ… ஒய் ?…”

“தெரியலடி எனக்கே… அம்மா மோர்னிங் டிகாஷன் போடுற ஸ்மெல் எனக்கு ரொம்பப்  பிடிக்கும். அப்போ அந்த பில்டர் திறந்து ஸ்மெல் பண்ணி கொஞ்சம் டேஸ்ட் பண்ணுவேன். அப்பறம் அப்படியே குடிக்க பழகிட்டேன். ஒரு தடவை பால் மிக்ஸ் பண்ணிக் குடிச்சி வொமிட் பண்ணிட்டேன்… அப்பறம் விட்டுட்டேன்.”

“இன்னொரு தடவை இப்படி குடிக்கும் பொது சொல்லதடி..”

“நீதானா கேட்ட..பெருசா பால் வித் காபி என்னைய அட்டராக்ட் பண்ணல..”

“அடபோடி! டேஸ்ட் லெஸ் பெல்லொவ்..”

“ஓகே.. நான் ரைஸ் வச்சிட்டேன், நீ லெமன் ரைஸ் பண்ணுறியா.. நான் போயிட்டு குளிச்சிட்டு வந்திருறேன்.”

“அது ஓகே.. உருளைக்கிழங்கு, உன்னோட ஸ்பெஷல் தான் வேணும்..”

” அதுவே தான எப்போதும் சாப்புடுற..”

“அது எப்ப வேணும்னாலும் சாப்புடுலாம் டி .. அப்படியே எண்ணெய்ல சோம்பு, பூண்டு தட்டி வாசத்துக்கு கருவேப்பிலை போட்டு  தாளிச்சி, அப்பறம் உறுக்கிழங்கை அதுல போட்டு, கொஞ்சம் மஞ்சத் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேத்து முருக வறுத்து சாப்புட செமயா இருக்கும்டி.. அப்படியே சப்புடலாம்..”

“போதும்.. நீ குடுத்த எஸ்பிளனேஷன்.. அப்படிதான் பண்ணப் போறேன்… கட் பண்ணிட்டேன்… தாளிக்கணும். வா போவோம்” என்று எழுந்து சென்றாள்.

காலைக்கு சத்துமாவு கஞ்சி வைத்துக் குடித்துவிட்டு, மதியச் சாப்பாட்டைக்  பேக் செய்துக் கொண்டு இருவரும் ஒருவழியாக காலேஜ்க்கு புறப்பட்டனர்.

தர்ஷி, “முதல்ல இட்லி மாவு அரைக்கணும்டி, இல்லனா நீ ஏதாது கஞ்சினு மோர்னிங் சாப்பிட கொடுப்ப, அது கொஞ்ச நேரம் கழிச்சு பசிக்க ஆரம்பிக்குது,” என்று வண்டியில் போகும் போது புலம்ப,

அவந்தி பதில் கூறாமல் வர,

“நான் மட்டும் பேசிட்டு வரேன், ஏதாது சொல்லுடி..”

“ஐயம் எ குட் கேர்ள்..”

“என்னடி என்னமோ உளறுற..”

“நீதானா ஏதாவது சொல்லச் சொன்ன… அதுதான் சொன்னேன்…”

“ஐயோ ஆண்டவா… அவந்தி ஒன்னோட முடியலடி… ரொம்ப தேறிட்ட…”

“ஹா ஹா..எப்புடிஇஇ…”

காலேஜ் சென்று கைரேகை வைத்துவிட்டு, அவரவர் டிபார்ட்மெண்ட் சென்றனர்.

காலை இடைவேளை நேரத்தில், அவந்தி அவளுடைய இடத்தில், ப்ரீப்பர் செய்துகொண்டு இருக்க, எதிரில் எதோ நிழலாட, நிமிர்ந்து பார்த்தாள். பிரபாகர் ஒரு ‘ஸ்வீட் பாக்ஸ்’ வைத்துக் கொண்டு நிற்க,

இவள் தன்னை நிலைப் படுத்திக் கொண்டு, “சொல்லுங்க சார்…”

“எனக்கு இன்னைக்கு பர்த்டே மேம் அதான்… உங்களுக்கு ஸ்வீட் தரலாம்னு வந்தேன்…”

“ஓஹ்… நோ போர்மாலிட்டீஸ் (formalities ) சார்… தேங்க் யு… ஹாப்பி பர்த்டே…” என்று கூறி ஒரு ஸ்வீட் எடுக்க போக,

” எல்லாமே உங்களுக்கு தான் மேம்..”

“நோ தேங்க்ஸ் சார்… இவ்வளோலாம் வேணாம்…”

“இல்ல மேம் உங்களுக்காக…”

“சார்… ப்ளீஸ் தேங்க்யூ… எனக்கு கிளாஸ் இருக்கு” என்று கொஞ்சம் கடினமாகச் சொல்ல,

“ஓகே மேம்… அப்பறம் பாக்கலாம்..”

“என்ன அவந்திகா மேம், மெக்கானிக்கல் ஸ்டாப்லாம் வருகைத் தராங்க…” என்றார் நக்கலாக,

“அதை அவங்ககிட்ட தான் கேக்கணும் மேம்…” என்று கூறிவிட்டு, அதற்கு மேல் பேச இடம் கொடுக்காமல் எழுந்துச் சென்றுவிட்டாள்.

“ம்ம்.. பாக்கலாம், இன்னும் எவ்வளோ நாளைக்குன்னு…” என்று முணுமுணுத்துவிட்டு தன்னுடைய வேலையை தொடர்ந்தார்.

“இந்த விஷயம் காட்டுத்தீப் போல அடுத்த இடைவேளையில் பரவ, அது அவளுக்கு தெரிந்தாலும், ஒன்றும் கண்டுக்கவில்லை.”

ஈவினிங் காலேஜ் முடிந்து, தன் வண்டியில் தர்ஷிக்காக காத்திருக்க,

பிரபாகர் வந்து இவள்முன் நின்று, மேம் ஒரு பத்து நிமிஷம் காலேஜ் வெளில உள்ள பேக்கரிக்கு வரீங்களா என்று கேட்க,

“என்ன விஷயம் சார், எதுனாலும் இங்கயே சொல்லுங்க..”

“இல்ல மேம்.. ப்ளீஸ்.. அது..”

“அதான் என்னனு கேக்குறாளே, சொல்லுங்க சார்..” என்று கேட்டுக்கொண்டே வந்தாள் தர்ஷி .

“நான் அவந்தி மேம் கிட்ட கேட்டேன், மேம்..”

அவந்தி, “அவங்க இருந்தா உங்களுக்கு என்ன சார், நீங்க என்ன சொல்லணுமோ அதை சொல்லுங்க…” என்று அழுத்தமாக,

“இது கூட தெரியலையா அவந்தி உனக்கு, சார் வந்து..”

தர்ஷி,”அமைதியா இரு..”

“வா… அப்போ கிளம்பலாம்… உன் வருங்காலம், உனக்காக வெயிட்டிங்…”

“மேம்..என்ன மேம்..உங்களுக்கு… ஆளு இருக்காங்களா?…” என்றான் அதிர்ச்சியாக,

“உங்களுக்கு என்ன சொல்லணுமோ அதை சொல்லிட்டு போங்க சார்… உங்களுக்கு இது தேவை இல்லாத விஷயம்…”

“உண்மையா தான் சொல்றீங்களா மேம், நீங்க சொல்லுங்க மேம்…” என்றான் தர்ஷியிடம், இன்னும் அதிர்ச்சி விலகாமல்.

“பின்ன, இதுல போயிட்டு யாராவது பொய் சொல்லுவாங்களா சார்?…” என்றாள் முகத்தை சீரியஸ் ஆக வைத்துக்கொண்டு,

“எப்போ…” என்று பிரபாகர் அடுத்து கேட்க ஆரம்பிக்க,

“ஓகே சார்… நாங்க கிளம்புறோம்.” என்று அவந்தி வண்டியை ஸ்டார்ட் செய்ய,

“மேம் மேம்.. ஒரு பத்து நிமிஷம் மட்டும் வாங்க ப்ளீஸ்…” என்றான் அவசரமாக  அவளிடம்,

“சரி போங்க… வரோம்…”

“தேங்க்யூ மேம்… நான் முன்னாடி போறேன், நீங்க வாங்க…” என்று முன்னே சென்றான்.

அவந்தி, “என்னடி உளறி வச்சிருக்க, உன் இஷ்டத்துக்கு, இதை காலேஜ் முழுக்க சொல்லப் போறாரு… ஏற்கனவே இன்னைக்கு பர்த்டேனு, ஸ்டாப் ரூம் வரைக்கும் வந்து ஸ்வீட் வேற கொடுத்து, அதை வேற டிபார்ட்மெண்ட்ல பார்த்து, இஷ்டத்துக்கு கதைத் திரிக்குறாங்க…” என்றாள் கோவமாக.

“அடபோடி… அவன் ஒரு ஆளு… என்னத்துக்கு இப்போ அங்க கூப்பிடுறான். ஒருவேளை பெருசா டெகரேஷன்லாம் பண்ணி லவ் சொல்ல போறானோ…”

“என்னனு தெரியலயே…” என்று பேசிக்கொண்டே வண்டியில் புறப்பட்டாள்.

இவர்கள் பேசுவதை தூரத்திலிருந்து பார்த்த இரண்டு கண்கள், இவளுக்கு பெருசா எதையாது பண்ணனும் என்று வன்மமாக சிந்தித்துக்கொண்டே விடுதியை நோக்கி சென்றது.

வண்டியை நிறுத்திவிட்டு, பேக்கரியின் உள்ளேச் செல்ல ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி ‘தர்ஷி’ என்று அவளைப் பார்த்து அந்த இடத்திலே நின்றுவிட்டாள். 

“இவன் நாம நினைக்குறது போல இல்லடி, செம உஷார் பார்ட்டி…”

அங்கே பிரபாகர் அவனின் தாயாருடன் ஒரு டேபிளில் அமர்ந்திருந்தான்.

தன்னை ஒருநிலைப் படுத்தி, முகத்தை கடினமாக மாற்றிக் கொண்டு, தர்ஷ் வா போலாம்.

இவர்களை பார்த்தவுடன், தன் அம்மாவிடம், அம்மா இவங்க தான் என்று ஆரம்பிக்க,

உடனே அவர், “நீ தானாம்மா.. பரவால்ல! நல்ல தான் இருக்க, இவன் சொல்லிருக்கான் உன்னப் பத்தி…”

அவந்தி, கையைக் கட்டிக்கொண்டு “என்ன சார் இதெல்லாம்?…” என்று பிரபாகரை பார்த்து கேட்க,

“அது… வந்து… மேம்…”

“நான் சொல்றேன் இரும்மா…”

“மேம்… இங்கப்பாருங்க, உங்ககிட்ட நான் கேட்கவே இல்ல… நீங்க அமைதியா இருக்குறது உங்களுக்கு நல்லது..” அவந்திகா.

“என்னம்மா நீ இப்படி பேசற…”

“உங்ககிட்ட தான் கேட்டேன் சார்… காது கேக்குதுல்ல?…”

“டேய் பிரபா, என்னடா இந்த பொண்ணு இவ்வளோ பேசுது…” என்றார் தன் பையனிடம் கோவமாக,

“இங்க பாருங்க மேம், அந்த பொண்ணு, இந்த பொண்ணு சொல்ற வேலைலாம் வச்சிக்காதிங்க.. வயசுக்கு மரியாதை தந்து பொறுமையா பேசுறேன். மறுபடியும் சொல்றேன், நீங்க அமைதியா இருக்குறது உங்களுக்கு நல்லது. உங்க பையன் மட்டும் தான் பேசணும் இங்க. இல்லைனு வைங்க, ஹராஸ்மென்ட் கேஸ்னு சொல்லி உள்ளத் தள்ளிடுவேன்…” என்றாள் காட்டமாக.

“மேம்… ப்ளீஸ்…”

“என்ன சார் ப்ளீஸ்… எந்தத் தைரியத்துல நீங்க  இப்படி உங்க அம்மாவை கூட்டிட்டுவந்து பேசுறீங்க. என்னைப் பத்தி என்ன தெரியும் உங்களுக்கு, நான் வந்து என்னைக்காவது உங்ககிட்ட பேசிருக்கேனா, இல்லநீங்க வந்து பேசும் போது மரியாதையான பேசியிருக்கேன். உங்களுக்கென்ன உங்க அம்மாவை கூட்டிட்டு வந்து பேசுனா, நான் தலையை ஆடிடுவேன்னு நினைப்பா. முதல்ல எப்படி நடந்துக்கணும் தெரிஞ்சிக்கோங்க… இன்னொரு தடவை இதுமாறி, ஏதாவது முட்டாள் தனமா நடந்துக்கிட்டிங்க, காலேஜ்ல கம்பளைண்ட் பண்ணிடுவேன். ஜாக்கிரதை!”

“மேம்… சாரி மேம்… தெரியாம…”

“இங்க பாருங்க சார்… உங்களுக்குலாம் சாரிச் சொல்ல தகுதியே கிடையாது… தெரியாம பண்ணிட்டேன்லாம் சொல்லாதீங்க… எல்லாம் நல்லா பிளான் பண்ணித்தான் கூட்டிட்டு வந்திருக்கீங்க.”

“மேம்..”

“இனி பேசுறதுக்கு ஒன்னும் இல்ல சார்… சொன்னது ஞாபகம் இருக்கட்டும்… தர்ஷி, போலாம் கிளம்பு…” என்று பேக்கரியை விட்டு வெளியேறினாள்.

அவர்கள் போன திசையை இவன் பார்க்க.,

“டேய், இந்த பொண்ணைதான் பாக்க கூப்பிட்டியா… ஒரு மரியாதையும் தெரியல… “

“ம்மா… வா போலாம்… தெரியாம கூட்டிட்டு வந்துட்டேன்…”

“நல்லவேளை… இப்போவாது தெரிஞ்சிக்கிட்டியே… என்னப் பேச்சு பேசுது, இவலாம் நம்மக் குடும்பத்துக்கு ஒத்துவரமாட்டா. நீ வா ராசா, அம்மா உனக்கு நல்ல பொண்ணாப் பார்த்துக் கட்டிவைக்கிறேன்.

“ஆமாம் ம்மா… வா போவோம்…” என்று நல்லபிள்ளையாக மாறி, அங்கிருந்து கிளம்பினான்.

—-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!