Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 31

அத்தியாயம்-31

 

வனிதாவுடன் முதல் நாள் அலுவலகத்திற்கு வந்த நேத்ரா மனதினுள் பலவிதமான எதிர் பார்ப்புகளை நிரப்பி வந்தாள்.

 



Advertisement

அலுவலகத்தினுள் நுழைந்த உடன் வனிதாவோ “நேத்ரா நீ அங்க எச்.ஆர போயி மொதல்ல பாரு, அவங்க பார்மாலிட்டீஸ் எல்லாம் சொல்லுவாங்க, நான் என்னோட கேபினுக்கு போறேன் சரியா, என்ன ப்ரோப்ளம்னாலும் எனக்கு கால் பண்ணு” என்ற வனிதா அவள் வேலையைப் பார்க்கச் சென்றாள்.

 

எச்.ஆர் ரேகாவைச் சென்று பார்த்தவள் அவர் “வாங்க நேத்ரா, இப்போ இன்னும் டென் மினிட்ஸ்ல மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகுது, நீங்க அங்க கார்னர்ல இருக்க காண்பேரென்ஸ் ரூமுக்குப் போங்க, இதோ இது உங்க ஐடி, குட் லக்” என்றவர் அவர் வேலையைத் தொடரவும்,

Advertisement

 

Advertisement

ரேகாவிற்கு நன்றி உரைத்தவள் காண்பேரென்ஸ் ரூமை நோக்கி நடந்தாள். காண்பேரென்ஸ் ரூமை அடைந்தவள் எக்ஸ் கியூஸ் உரைத்துவிட்டு கதவைத் திறக்கவும், அங்கே அவளுக்கு முன்பே அவளுடன் இன்டெர்வியூவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் அமர்ந்து இருந்தனர்.

 

நேத்ராவைக் கண்டதும் அங்கிருந்த இன்டெர்வியூக்கு வந்தவர்கள் அடையாளம் கண்டு கொண்டு ஹாய் எனவும் பதிலுக்கு ஹாய் என்றவள், காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தாள்.

Advertisement

 

நேத்ரா உள்ளே வந்த சில வினாடிகளில் அந்த அறையின் கதவுகள் திறக்கப்படவும் அனைவரும் எழுந்து நின்றனர்,

 

வெள்ளை வண்ண முழுக்கை சட்டையின் மேல் கிரே வண்ண கோட் சூட் அணிந்திருந்தவன், தன் வலக்கையை பேண்ட் பாக்கெட்டில் விட்ட படி இடக்கையால் கதவைத் திறந்தான். உள்ளே நுளைந்ததும் “குட் மோர்னிங் கைஸ்…” என்றவன் இடக்கையால் அவன் அணிந்திருந்த குளிர் கண்ணாடியை கழற்றி அவன் இருக்கைக்கு முன்னிருந்த மேஜையில் வைத்தான்.

 

மீண்டும் ஒரு முறை, குட் மோர்னிங் கைஸ், என்றவன் அனைவரையும் தன் கூர் பார்வையால் ஒரு சுற்று வலம் வந்தவன், நேத்ராவைக் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

 

“ஓகே உங்களை பத்தின இன்ட்ரோடக்ஷன் தேவையில்லை, ஏன்னா நான் தான் உங்களை எல்லாம் இன்டெர்வியூ பண்ணினது, அண்ட் பைனலிஸ் பண்ணுனது சோ இப்போ டைரெக்ட்டா ப்ரொஜெக்ட் டீடைல்ஸுக்கு போயிடலாம், என்றவன்,

 

திஸ் இஸ் காட்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ப்ரொஜெக்ட், இந்த கம்பெனி பல நாடுகள்ல அவங்க பிரான்சை தொடங்கீருக்காங்க, இப்போ இந்தியால முதன் முறையா தொடங்க போறாங்க, சோ அவங்களுக்கு எல்லாமே பக்காவா நாம செஞ்சு கொடுக்கணும்.

 

அண்ட் இந்தியால அந்த பிரான்சுக்கு டீலர்ஷிப் எடுத்திருக்கிறது நானும் வினோத்தும், அதுனால எல்லாமே எங்களோட நேரடி பார்வையில இருக்கணும்னு தான் உங்கள நாங்களே செலக்ட் பண்ணுனோம், அண்ட் இந்த ப்ரொஜெக்ட நாங்களே ஹண்ட்ல் பண்ண போறோம்.

 

இந்த காட்ஜியஸ் கிளாத் ஹவுஸுக்கு தேவையான பில்டிங் ரெடியா இருக்கு, இப்போ இந்த கம்பெனிக்கு இந்தியால ஒரு ஆன்லைன் பார்சேசிங் ஆப் ப்ரோக்ராம், தென் ஸ்டோர் அரேஞ்சுமென்ட் ஐடியாஸ், கேஷ் ட்ரன்ஷாக்ஷன் ப்ரோக்ராம், அண்ட் ஸெல்ப் பேமெண்ட் கெளன்டர் எவ்ரிதிங் நாம பண்ண போறோம்,

 

இந்த பிரஜேக்டோட டீம் லீடர நான் செலக்ட் பண்றேன், யாரு யாருக்கு என்ன என்ன டியூட்டின்னு அவங்க சொல்வாங்க” என்றவன்,

 

“இந்த பிரஜேக்டோட டீம் லீடர் நேத்ரா” என்றுவிட்டு அவள் புறம் திரும்பினான். நேத்ரா எழுந்து நிற்கவும்,

 

“உங்களுக்கெல்லாம் நான் ஏன் அவங்களை மட்டும் லீடரா செலக்ட் பண்ணேன்னு தோணலாம், பிகாஸ் ஷி ஹவ் அன் எக்ஸ்பீரியன்ஸ் லைக் திஸ் ப்ராஜெக்ட், சோ இந்த ப்ரொஜெக்ட்ல உங்களோட கோஆப்பரேசன் ரொம்ப முக்கியம், என்றவன் மேலும் சில விவரங்களைக் கூறிவிட்டு அனைவரையும் அனுப்பிவிட்டு நேத்ராவை மட்டும் அவன் அறைக்கு அழைத்தான்.

 

ஓகே சார் என்றவள் நளன் சென்ற சில வினாடிகளுக்குப் பிறகு அவன் அறைக்குள் எக்ஸ்கியூஸ் கேட்டுவிட்டு நுழைந்தாள்.

 

உள்ளே நுளைந்தவள் அறை காலியாக இருக்கவும், கதவின் ஓரத்தில் நின்றுகொண்டு கண்களால் துழாவினாள்.

 

எங்கும் நளன் இல்லாமல் போகவும் ” என்ன ரூம் எம்டி இல்லாம எம்ட்டியா இருக்கு என்று நினைத்தவள் இன்னும் ரூமுக்கு வரலை போல, சரி இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வருவோம்” என்று திரும்பியவள்,

 

அறைக்கதவு திடீரென்று திறக்கப்பட்டதில் தடுமாறி விழப்போனவளை, சேலை மறைக்காத வெற்றிடையில் கைகொடுத்து தாங்கிப் பிடித்திருந்தான் நளன்.

 

மீட்டிங்கிலிருந்து விடை பெற்ற நளன், வினோத் அறைக்குச் சென்று அவனிடம் பேசிவிட்டு வர சற்று நேரம் தாமதமானது, தன்னவனைக் காணப் போகும் ஆசையில் வேகமாக வந்தவள் ஏமாற்றமடைந்து திரும்ப, அங்கே தன் மன்னவனின் கைகளுக்குள் சிறைப்பட்டிருந்தாள் பெண்ணவள்.

 

தான் நேத்ராவிற்கு வாங்கிக் கொடுத்த புடவையில் தன்னவளைக் காண்பேரென்ஸ் அறையில் கண்டவனுக்கு ஒரு நொடி மூச்சடைத்தது, தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியவன், மீட்டிங்கில் பேசி முடித்தான்.

 

இப்போது நேத்ராவை மிக நெருக்கத்தில் கண்டவனின் மனமோ தடுமாற அவள் கண்களைக் கண்டவனுக்கு திடீரென்று என்ன தோன்றியதோ, நேத்ராவை விடுவித்து நேராக நிற்க வைத்தவன், அவன் இருக்கைக்குச் சென்று அமர்ந்தான்.

 

அமர்ந்தவன் ஒரு பைலை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டு, “இந்த பைல்ல இந்த ப்ராஜெக்ட் டீடெயில்ஸ் எல்லாம் இருக்கு, நீங்க ஸ்டார்ட் பண்ணீடுங்க, எனக்கு டெய்லி ஈவினிங் ரிப்போர்ட் சப்மிட் பண்ணியாகணும், யூ மே லீவ் நவ்” என்றவன் அவன் முன் இருக்கும் கணினியில் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

 

பைலை வாங்கிக் கொண்டு திரும்பிச் சென்றவளின் முதுகை வெறித்தவனின் மனநிலை என்ன என்பதை அவனாலேயே கணிக்க முடியவில்லை.

 

இங்கு நேத்ராவுக்கோ நளன் தன்னைக் காண்பேரென்ஸ் அறையில் கண்டுகொள்ளாமல் இருக்கவும் பாதி உயிர் போய்விட்டது, அப்பார்ட்மெண்ட்டில் அவன் கோபத்தைக் கண்டவளுக்கு, இப்போது அவளைத் தாங்கியவன் அடித்து விடுவானோ என்ற பயமே மேலெழுந்து இருந்தது.

 

தன் வெற்றிடையில் நளனின் கை பட்டவுடன் சில்லென்ற உணர்வு மனதினுள் பரவ, நளனின் கண்களில் முதலில் தென்பட்ட காதலைக் கண்டவள், சில நொடிகளில் அவனது முகம் குழப்பம் கொண்டதையும் கண்டு கொண்டது.

 

நளனிடம் பைலை வாங்கிக் கொண்டு நேராக அவளுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்தவள், “அம்மு ப்ளீஸ் நான் செஞ்ச தப்ப மறந்து என்னை மன்னிச்சிடுங்க, என்னை வேற யாரோ மாதிரி பாக்காதீங்க, எனக்கு ரொம்ப வலிக்குது” என்று மனதினுள் பேசியவள் அவளது இருக்கையில் அமர்ந்தாள்.

 

நளனின் சிந்தனையில் இருந்தவள் “ஹாய் நேத்ரா, ஐ ஆம் அருண்” என்ற அவளது டீம் மேட்டின் குரலில் களைந்தாள்.

 

“ஹ…ஹாய்” என்றவள் அருணைப் பார்த்து சிரித்துவைக்க, அவர்கள் டீம் மேட்ஸ் அனைவரும் அவளுக்கு ஹாய் சொல்லி தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். உள்ளே நளன், அவன் அறையில் அமர்ந்துகொண்டு கண்ணாடித் தடுப்புக்கு வெளியே நேத்ரா பேசிக் கொண்டிருப்பதைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மதிய இடைவேளையில் வனிதாவைக் கண்டவள் அவளிடம் நடந்ததைக் கூறிக் கொண்டிருந்தாள். அங்கே அவர்களுடன் நேத்ராவின் டீமில் இருந்த ஒரு பெண் ப்ரீத்தி “கேன் ஐ ஜாயின் வித் யூ” என்ற வாக்கியத்துடன் இணைந்துகொள்ள,

 

ப்ரீத்தி வந்தவுடன் பேச்சை நிறுத்திய நேத்ரா உணவு உண்ண ஆரம்பித்தாள். பின் ப்ரீத்தி அவளாகவே “ஹே நேத்ரா, நளன் சார் செம்ம ஸ்மார்ட் அண்ட் ஹாட்ல?” எனவும்,

 

உணவை வாயில் தள்ளிக் கொண்டிருந்த வனிதாவுக்கு புரை ஏறி லொக் லொக்கென்று இருமினாள், ஒரக்கண்ணில் நேத்ராவைப் பார்த்துக் கொண்டே, ‘லைசென்ஸ் வச்சிருக்கவ கிட்டயே இப்படி ராங்கா பேசுறியேம்மா’ என்று மனதினுள் நினைத்த வனிதாவிடம்,

 

“பாத்து, இந்தாங்க வாட்டர்” என்று வாட்டர் பாட்டிலை வனிதாவின் கைகளில் கொடுத்த ப்ரீத்தி, மீண்டும் தொடர்ந்தாள்.

 

“நளன் சார் செம்ம ஸ்மார்டு, ஹாப்பா எவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்காங்க, இல்லையா நேத்ரா” என்று நேத்ராவைத் துணைக்கு இழுக்கவும்,

 

“ம்ம் ஆமா” என்ற நேத்ரா, ஓகே வனிதா என்னக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் வரேன் என்றவள் எழுந்து சென்றாள்.

 

“ம்ம் மேடம் ரொம்ப சின்சியர் போல” என்று தோள்களைக் குலுக்கிய ப்ரீத்தி அவள் உணவை அவளது போனை நோண்டிக் கொண்டே உண்ண ஆரம்பித்தாள்.

 

அங்கு அவள் கேபின் சென்றவுடன் அருண் அவளைப் பிடித்துக் கொண்டான், அவள் அருகில் உள்ள கேபின் அருணுடையது, அதில் அமர்ந்தவன் நேத்ராவிடம் விடாது எதாவது வளவளத்துக் கொண்டிருந்தான்.

 

நேத்ராவோ அவளது வேலையைப் பார்த்துக் கொண்டே அவனுக்கு உம் கொட்டிக் கொண்டிருந்தாள். உள்ளே நளனோ அவனது அறையில் இருந்து நேத்ராவை ஒரு பார்வையும் அவனது கணிணியை ஒரு பார்வையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

மாலை நளனிடம் அன்றைய நாளுக்கான ரிப்போட் கொடுக்கப் போகையில் அதைத்தவிர்த்து வேறு எதுவும் பேசாதவனிடம் அவளும் அதற்கு மேல் பேசவில்லை.

 

Link👉வஞ்சித்தாய் வஞ்சிக்கொடியே

Link👉மகரந்தம் தாங்கும் மலரவள்(முழுநாவல்)

Link 👉நாணலே நங்கையானால்?(முழுநாவல்)​

Link – முற்றும் முதல் நீ எனக்கு (முழுநாவல்)

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக👇👇👇

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!