Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -7

அத்தியாயம் -7

அனுவிடம் நன்றி சொல்லாமல் வந்தது கதிரவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. நாளைக்கு அவளை பார்த்து நன்றி சொல்லவேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தான்.

மறுநாள் காலையில் அனுவை பார்க்க பஸ் ஸ்டாப்க்கு சென்றான். அங்கு அனு இல்லாமல் போகவே அனுவின் தோழி ரேணுகாவிடம் அந்த பொண்ணு எங்கே என்று கேட்டான்.

“எந்த பொண்ண கேக்குறீங்க அண்ணா ” என்றாள் ரேணுகா



Advertisement

“நேத்து என்ன காப்பாத்துனால அந்த பொண்ணு “

“ரஞ்சனியா அவளுக்கு காய்ச்சல் அண்ணா,நேத்து அவ கையில அடி பட்டுச்சுல, அந்த வலிலையே அவளுக்கு காய்ச்சல் வந்துருச்சி நாளைக்கு வந்துருவா “என்றாள் ரேணுகா.

“அடி பட்டுசா எப்போமா எங்கம்மா அடி பட்டுச்சி “

Advertisement

“உங்கள காப்பாத்த பிடிச்சி இழுத்தால அப்போ கிழ விழுந்து கைல அடி பட்டு ரத்தம் வந்துருச்சி ” என்றாள்

Advertisement

“ரொம்ப அடி பட்டுருச்சா அந்த பொண்ணுக்கு “

“சின்ன அடி தான் அண்ணா, அவளுக்கு சின்ன அடிப்பட்டா கூட வலி தாங்கிக்க முடியாது அண்ணா, உடனே காய்ச்சல் வந்துரும் “

“நேத்து தேங்க்ஸ் கூட சொல்லாம போய்ட்டேன்மா அதான் அந்த பொண்ணு ரஞ்சனிய பார்த்து தேங்க்ஸ் சொல்லலாம்னு வந்தேன் ” என்றான் கதிரவன்.

Advertisement

“நாளைக்கு வந்துருவா அண்ணா நான் கிளம்புறேன் “என்றாள் ரேணுகா.

கதிரவனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அன்று முழுவதும் அவள் நியாபகமாகவே இருந்தது அவனுக்கு.

மறுநாள் காலையிலும் அவளை பார்க்க சென்றான். கதிரவனை பார்த்ததும் ரேணுகாவே அவனிடம் வந்து ” ரஞ்சனிக்கு இன்னும் பிவர் சரி ஆகல அண்ணா, நாளைக்கு கண்டிப்பா வந்துருவா அண்ணா ” என்றாள்.

கதிரவன் மிகவும் சோர்ந்து போனான், அவளை எப்பொழுது பார்ப்பேன் என்று ஏங்க ஆரம்பித்தான், அவனை அறியாமலே அவன் ரஞ்சனியை விரும்ப ஆரம்பித்தான்.

இரண்டு நாட்கள் கழித்து ரஞ்சனி கல்லூரிக்கு வந்தால். கதிரவனுக்கு அவளை பார்த்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. அவளிடம் பேச சென்றான்.

” ஹாய் ரஞ்சனி, ரொம்ப தேங்க்ஸ் அன்னைக்கு என்ன காப்பாத்துனதுக்கு, உனக்கு காய்ச்சல் சரி ஆகிருச்சா, சாரி என்னால தான் உனக்கு அடிபட்டுருச்சி” என்றான் கதிரவன்.

” கதிர் நீங்க வருத்தப்படுற அளவுக்கு பெரிய அடிலாம் இல்ல, அன்னைக்கு நீங்க ரொம்ப சோர்வா தெரிஞ்சிங்க உடம்பு எதும் சரி இல்லையா என்றாள் “அனு.

” அப்படிலாம் எதும் இல்ல, மனசு கொஞ்சம் சரி இல்ல அதான் மத்தபடி வேற எதும் இல்லை என்றான் “

“கதிர் எனக்கு காலேஜ்க்கு டைம் ஆச்சு நான் கிளம்புறேன். நீங்க பார்த்து போங்க” என்றாள் அனு.

அனுரஞ்சனி சென்றதும் கதிரவனுக்கு ஒரு மாதிரியாக இருந்தது. அவளை பார்த்துக் கொண்டே பேசி கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்தது. தன்னுடைய இந்த எண்ணம் அவனுக்கே பிடிக்க வில்லை அனுவை பார்க்காமல் இருக்க வேண்டும் என்று உறுதி எடுத்தான்.

ஒரு வாரம் அனுவை பார்க்காமல் இருந்து விட்டான். அதற்கு மேல் அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை அவனால் மாலை பஸ் ஸ்டாப்க்கு சென்று அவள் அறியவண்ணம் தொலைவில் இருந்து பார்த்து விட்டு வந்துவிட்டான்.

தினமும் இரவு கதிரவன் சென்னையில் தாங்கி வேளை செய்யும் நண்பன் குருநாதனிடம் போனில் பேசுவான். “டேய் மச்சான் ஒரு வாரம் அவளை பாக்கமா இருந்துட்டேன் அதுக்கு மேல முடியலடா “

“உனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்குனா, அந்த பொண்ணு கிட்ட போய் உன் லவ்வ சொல்லுடா ” என்றான் குரு.

“எனக்கு என்னடா தகுதி இருக்கு லவ் பண்ணுறதுக்கு, நானே வேண்டாம்னு இருந்தாலும் எனக்கே தெரியாம அவ மேல லவ் வந்துருச்சே இப்போ நான் என்னடா பண்ணுறது “என்று புலம்பினான் கதிரவன்.

” கதிரவா நீ எவளோ பெரிய டான், உன்னையே அந்த பொண்ணு இப்படி புலம்ப வச்சிட்டாலேடா “என்று கூறி சிரித்தான் குரு.

“மகனே வந்தேன், மண்டைய ஒடச்சிருவேன் பாத்துக்கோ, என் புலம்பல் உனக்கு கிண்டல் இருக்கா”.

“போய் அந்த பொண்ணு கிட்ட உன் லவ்வ சொல்லுடா “.

“அந்த சுதா பேசுனா மாதிரி இவளும் ஏதாவது பேசிருவளோ”.

சுதா கனிமொழியின் கணவர் மகேஷின் தங்கை. கனி மகேஷ் நிச்சயத்தன்று தான் சுதா கதிரவனை பார்த்தால்.

கதிரவன் அவளை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை, சுதா இவனை பார்த்துக் கொண்டே இருப்பாள். இவனிடம் வந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள்.

கதிரவன் எதற்கு பிடிக்கொடுக்க வில்லை. கல்யாணத்தின் போதும் அவள் தோழிகளிடம் இவனை கட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருப்பால்.
கதிரவன் சுதா என்ற ஒருத்தி அங்கு இருப்பது போலவே கட்டிக் கொள்ளவில்லை.

திருமணம் முடிந்து இரண்டு நாள் கழித்து சுதா விட்டுக்கு சென்றான் கதிரவன்.

“சுதா அங்க பாருடி உன் ஆளு வராங்க என்றாள் சுதா உடைய தோழி “

“யாருடி என் ஆளு அவனே வேலைக்கு கூட போகாம, குடிச்சிட்டு வெட்டியா ஊரை சுத்திட்டு இருக்குறான்,இனிமேல் அவனை என் ஆளுன்னு சொல்லதடி “

“நீ தானா சுதா அவர காட்டி உன் ஆளுன்னு சொன்ன “

” சொன்னே தான்டி, அவன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிச்சிட்டு வேலை பாத்துட்டு இருக்குறானு நெனச்சேன், அவன் வேற பாக்க சுமாரா இருக்கானா அதுனால லவ் பண்ணுனே இப்போ தானா தெரியுது இவன் லச்சனம் “.

கதிரவன் அவள் பேசியதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்து விட்டு கடைசியாக அவளை பார்த்து நக்கலா சிரித்து விட்டு வந்து விட்டான், அவள் முகம் கருத்து விட்டது.

“இப்போ ஏன்டா சுதாவ பத்தி பேசுற, எல்லாப் பொண்ணுகளும் அவள மாதிரி இருக்க மாட்டாங்க, தைரியமா போய் ரஞ்சனி கிட்ட லவ்வ சொல்லுடா “.

“சரி மச்சான் நாளைக்கே போய் சொல்லுறேன் “.

இரவு முழுவதும் தூங்காமல் விழித்துக் கொண்டு இருந்தான் ரஞ்சனி காதலுக்கு ஓகே சொல்லுவாளா மாட்டாளா என்ற பயத்தில் இருந்தான்.

மறுநாள் காலையில் ரஞ்சனியிடம்

“ஹாய் ரஞ்சனி, உங்கிட்ட கொஞ்சம் பேசணும், அந்த பிள்ளையார் கோவிலுக்கு வரைய என்றான் “.

“என்ன விஷயம் இங்கையே சொல்லுங்களேன் என்றாள் ரஞ்சனி”.

“அஞ்சு நிமிஷம் தான் வா ரஞ்சனி ப்ளீஸ்”.

“சரி நீங்க முன்னாடி போங்க நான் வாரேன் “.

கோவிலுக்கு ரஞ்சனி, ரேணுகா இருவரும் சென்றனர்,

ரேணுகாவிடம் ” சிஸ்டர் கொஞ்ச நேரம் இங்க உக்காந்து இருங்க, நான் ரஞ்சனி கூட பேசிட்டு வந்துறேன் ப்ளீஸ் “என்றான் கதிரவன் .

“ஓகே அண்ணா நான் வெயிட் பண்ணுறேன், வேகமா பேசி முடிங்க அண்ணா காலேஜ்க்கு டைம் ஆச்சு” என்றாள் ரேணுகா.

கதிரவன் ரஞ்சனியை முருகன் சன்னதிக்கு அழைத்து சென்றான். பின் அவளிடம்.

” ரஞ்சனி எனக்கு உன்ன பிடிச்சிருக்கு ,நான் உன்ன காதலிக்குறேன், கல்யாணம் பணிக்கனுன்னு ஆசை படுறேன்” என்றான்.

ரஞ்சனிக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

“சாரி கதிர் நமக்குள்ள ஒத்து வராது “

“என் ஒத்து வராது நமக்குள்ள காரணம் சொல்லமுடியுமா “

ரஞ்சனி அமைதியாக இருக்க கதிரவனுக்கு சற்று கோபம் வந்து விட்டது. இவளும் சுதா போல தான் என்று எண்ணிக் கொண்டு.

“நான் படிப்பை ஒழுங்கா முடிக்காம அரியர் வச்சிட்டு, வேலைக்கு போகாம, குடிச்சிட்டு வெடியா ஊரை சுத்திட்டு இருக்கேன் அதுனால நமக்குள்ள ஒத்து வராது அப்படி தானா” என்றான்.

“கதிர் நீங்க அரியர் வச்சிருக்கிறதோ, இல்ல ஸ்டார்வாட்ச்ல வேலை பாக்குறதோ எனக்கு பிரச்சனை இல்ல, காதல் படிப்பையோ, பணத்தையோ பார்த்து வராது “.

“எனக்கு என் அப்பானா ரொம்ப பிடிக்கும், அவருக்கு எந்த தப்பான பழக்கமும் இல்ல, வெத்தலைப் பாக்கு கூட போட மாட்டாரு, என் அண்ணாவையும் அப்படி தான் வளத்துருகாங்க “

“எனக்கும் என் அப்பா, அண்ணா வா மாதிரி எந்த தீயப்பழக்கம் இல்லாத பையனா பாத்து கல்யாணம் பணிக்கணும்னு எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆசை “.

“எனக்கு உங்க கேரக்டர் ரொம்ப பிடிக்கும் கதிர், எல்லா பொண்ணையும் மதிக்கிற குணமும் தான் “.

“நான் உங்கள லவ் பண்ணுறேன், கல்யாணமும் பண்ணிக்கிறேன் ஆனால் எனக்காக ஒரே ஒரு விஷயம் மட்டும் உங்க நாளா பண்ண முடியுமா” என்றாள் அனு.

“என்ன பண்ணனும் சொல்லுமா” என்றான் கதிர்.

“உங்க குடிப்பழக்கத்தை விட முடியுமா, இனிமேல் குடிக்கவே மாட்டேன்னு என் தலைல கை வச்சி சாத்தியம் பண்ண முடியுமா” என்றாள்.

கதிரவன் அதிர்ச்சி அடைந்தான் அப்பா, அம்மா சொல்லியே நாம கேக்கல இவ யாரு எனக்கு இவ சொல்லி நான் கேக்கணுமா என்று யோசித்தான். பின் ரஞ்சனியிடம்

“சாரி ரஞ்சனி, என்னால குடிக்கிறதா விட முடியாது “.

“உன் மனச கஷ்டப்படுற மாதிரி ஏதாவது பேசிருந்தா சாரிமா “

“நீ கிளம்பி போமா, தேங்க்ஸ் மா நான் கூப்புடு இங்க வந்ததுக்கு “.
என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.

ரஞ்சனிக்கு மனசு மிகவும் கஷ்டமாக இருந்தது.இவளுக்கு கதிரவனை பிடிக்கும் தான் பஸ்ஸில் அவனை பார்த்த பொழுதே அவன் குணம், கோபம் இரண்டுமே பிடித்திருந்தது. ஆனால் அது காதல் என்று சொல்ல முடியாது.

நாட்கள் கடந்தன ஒரு மாதம் ஓடி விட்டது. இந்த ஒரு மாதத்தில் அனு கதிரவனை பார்க்கவே இல்லை, ஆனால் கதிரவன் அனுவை மறைந்திருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

“ஏன்டா அந்த பொண்ணு உங்கிட்ட பணம் காசு, வீடு வாசல் ஏதாவது கேட்டாளாடா இல்லைல, குடிக்குறத விட சொன்னா அவ்வளவு தான” என்றான் குரு.

“நீ சொன்னதையெல்லாம் வச்சி பார்த்தா அந்த பொண்ணு நல்லா பொண்ணாதான் தெரியுது,அந்த பொண்ண மிஸ் பண்ணிடாத கதிரவா ” என்றான் குரு.

” உனக்கு அந்த பொண்ணு மேல உள்ள காதலை விட சரக்கு தான் முக்கியமா நல்லா யோசிச்சு முடிவு பண்ணு “என்றான் குரு.

மறுநாள் காலையில் ரஞ்சனியை பாக்க சென்றான். அவளிடம் “உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிள்ளையார் கோவிலுக்கு வா ப்ளீஸ்” என்றான்

“என்ன விஷயமா பேசணும், இங்கையே சொல்லுங்க” என்றாள் ரஞ்சனி.

“வா மா ப்ளீஸ் ப்ளீஸ் “
ரஞ்சனி கோவிலுக்குள்ள சென்றால்.

“அன்னைக்கு சொன்னல நான் குடிக்குறத விட்டா என்னைய லவ் பண்ணுவேன், கல்யாணம் பணிப்பேன்னு சொன்னாலே அது உண்மையா என்றான் “

“இப்போ எதுக்கு அதை பத்தி பேசுறீங்க, அதான் அப்போவே முடியாதுனு சொல்லிட்டீங்கள்ல ” என்றாள் அனு கொஞ்சம் கோவமாக.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லு “

“சரி ஓகே நீங்க குடிக்குறத விட்டு வாங்க நான் உங்க லவ்வ ஏத்துக்குறேன் “

“என் கூட வா ரஞ்சனி “என்று அவள் கையை பிடித்து இழுத்து சென்று முருகன் சன்னதியில் நின்றான். பின்
ரஞ்சனியிடம்.

” இனிமேல் நான் குடிக்க மாட்டேன்,உன் மேல சாத்தியமா குடிக்க மாட்டேன்” என்று அவள் தலையில் கை வைத்து கூறினான் கதிரவன்.

“எனக்கு குடிய விட நீ தான் முக்கியம் ரஞ்சு, உன்னோட அன்பு, பாசம், காதல் எல்லாம் எனக்கு வேணும் மா, என்ன ஏத்துபியா “என்றான் கதிரவன்.

“ரஞ்சனி கண்கள் கலங்க ம்ம் என்று தலை அசைத்தால் “

“தேங்க்ஸ் ரஞ்சு, தேங்க்ஸ் யூ ஷோ மச் “என்றான் அவள் கைகளை பிடித்துக் கொண்டு.

அப்பொழுது ரேணுகா அங்கே வந்து ரஞ்சனி டைம் ஆச்சு காலேஜ்க்கு வா போலாம் என்றாள். ரஞ்சனி கதிரவனை பார்த்தால்.

“நீ கிளம்பிப் போ மா, இதுல என்னோட போன் நம்பர் இருக்கு நீ பிரியா இருக்கும் போது கால் பண்ணு” என்றான் கதிரவன்.

“உன்னோட போன்காக காத்துட்டு இருப்பேன் “என்றான்.

ரஞ்சனி தலை அசைத்து விட்டு கிளம்பி சென்றுவிட்டாள்.

அம்மா, அப்பாவிற்காக கூட மாறாதவன் ரஞ்சனியின் காதலுக்காக மாறி இருக்கிறான். இந்த மாற்றம் நிலையானாதா காலம் தான் பதில் கூற வேண்டும்.

என்னுடைய கதையின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றி ருக்கும் லைக் மற்றும் காமெண்ட் செய்த வாசகர் தெய்வங்கள் அனைவரும் நன்றி 🙏🙏🙏🙏🙏, தொடர்ந்து உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன். 🥰🥰🥰🥰🥰🥰.

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!