Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலாகுமோ உறவு

அத்தியாயம்3

அத்தியாயம் 3

அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்க செல்வம் திரும்பினான்.

பூக்களுக்கிடையே தோன்றிய தேவதை என தெரிந்தாள் அகல்யா.

செல்வத்திற்க்கு மெய் சிலர்த்தது அவளின் அழகு.



Advertisement

அருகில் வந்த அகல்யா “அம்மா உங்க கால்ல விழ சொன்னாங்க என காலில் விழுந்தாள்”.

“அச்சோ பார்மாலிட்டிஸ்லா வேணாங்க நீங்க போய் படுத்துக்கோங்க, நம்ம தூங்கலாம்”.

இருவரும் ஆளுக்கொரு புறம் திரும்பி படுத்துக்கொண்டனர்.

Advertisement

செல்வத்திற்க்கு துளி கூட தூக்கமில்லை.

Advertisement

“என்ன பண்ணிட்டோம் நம்மளே போய் தூங்குன்னு சொல்லிட்டோமே இப்ப என்ன பண்றது எதுவும் பேசல, சும்மா திரும்பி தூங்கிட்டாலுன்னு பார்போமா, இல்லை இல்லை லைட்டா கையை தொட ட்ரை பண்ணுவோமா அச்சோ கத்திட்டா அசிங்கமா போய்டும்,எதுவுமே பண்ணலனாலும் போச்சு தான் சரிடா செல்வம் பீல் பண்ணாத நம்ம ஸ்லோவாவே போவோம் அவசரபடக்கூடாது.”என அவன் மனதில்ஒரு பட்டிமன்றமே நடந்து கொண்டிருந்தது.

இவன் மனம் பாடாய் பட்டுக்கொண்டிருக்க அகல்யா மெதுவாக கேட்டாள்,”என்ன பதட்டமா இருக்கிங்களா???”

“ஆமா,பின்ன பர்ஸ்ட் நைட் ஆச்சே பதட்டம் இருக்காதா”

Advertisement

“எனக்கும் படபடப்பா தான் இருக்கு,சரி நான் ஒரு விஷயம் சொன்னா தப்பா நினைக்க மாட்டிங்களே?”

“கல்யாணம் பண்ணிட்டோம் எப்படியாச்சும் டைவர்ஸ் குடுங்கன்னு கேட்க போறிங்களா”

“இல்ல,தப்பா நினைக்க கூடாது!!!!!”

அப்படி இவ என்ன கேட்க போறா ஓடிப்போக போறேன்னு சொல்ல போறாளா போச்சு இவ அப்படி கேட்ட என்ன நான் பண்றது.

“எனக்கு ஒரு முத்தம் குடுக்கிறீங்களா!”

“என்ன சொன்ன எனக்கு கேட்கல அகல்யா புரியல சுத்தமா ஒரு முறை யறுபடியும் சொல்லு.”

அவன் சொல்லி முடிக்கும் முன் அகல்யாவின் இதழ்கள் செல்வத்தின் இதழோடு இணைந்தன…

செல்வம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

திருமணம் , ஆண் பெண் இருவரையும் இனைக்கும் அழகான பந்தம்,அகல்யாவும் செல்வமும் இப்போழுது கணவன் மனைவியாக வாழ தொடங்கியாயிற்று.அகல்யாவின் இந்த மனமாற்றம் எதனால்,அவளுக்கு ஏற்பட்டது சலனமா,ஈர்ப்பா இல்லை காதலா,எது என்று நீங்கள் யோசியுங்கள்.

விடியற்காலை, இளங்கதிர்கள் மேல்நோக்கி தெரியுமுன்னரே அகல்யா செல்வத்தை எழுப்பினாள்.

“செல்வம்,எழுந்திருங்க எல்லாரும் வற்றதுக்குள்ள அம்மா நம்மள குளிச்சிட சொன்னாங்க.”

அகல்யாவை இழுத்து இருக அனைத்தான் செல்வம்.

“ஏஏஏஏ!!!ப்ளீஸ்டி கொஞ்ச நேரம் ப்ளீஸ் என்னால இப்பக்கூட நம்ப முடியல மறுபடியும் நீ மாறிடுவியோன்னு பயமா இருக்கு.”

“அப்படிலா இல்ல நான் தெளிவா தான் இருக்கேன் மாற மாட்டேன்.”

“சரி, தாலி கட்ற வரைக்கும் திரும்பி பார்க்கல ஸடானா முத்தம் கேட்கற,என்ன என்கூட தனியா இருக்கவே மனசு தடுமாறிடுச்சா!!”என கதோரமாய் கிசுகிசுத்தான் செல்வம்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை,நீங்க மொதல்ல போங்க குளிக்க அப்பறமா பேசலாம்.”

“சேச்ச… பேசறதா இனி பேசறதுக்கு வேளையே இங்க இல்லை,நீயே க்ரீன் ஸிக்னல் குடுத்துட்ட இனி நோ பேச்சு.”என சிரித்துக்கொண்டே சென்றான் செல்வம்.

புதுமணதம்பதிகள் மிகவும் ஆனந்தமாக இருந்தனர்.

அகல்யாவை லட்சுமி பின்வாசல் பக்கம் கூட்டி சென்று மெதுவாக கிசுகிசுத்தார், “என்ன நேத்து நல்லபடியா தான போச்சு.”

“அம்மா உனக்கு என்னமா பிரச்சனை இதெல்லாமா கேட்ப???”

“ஏஏஏஏ.. அம்மான்னா இதெல்லாமும்தான் கேட்கனும்,நீ சொல்லு”

“மா,நான் போறேன் உன் மாப்பிள கூப்பிட்றாரு”

அவள் உள்ளே வந்ததும் சங்கர் வந்தான் “என்னக்கா மாமா கரெக்ட் பண்டாரு போல!!!!!!!” என கண்ணடித்தான்.

“ஆமா ,ரொம்ப ஸுப்பரா பண்ணாறு ஏஏஏ நான் தான் உன் மாமாவ கரெக்ட் பண்ணிருக்கேன்.”

“எனக்கு புரியல.”

“உனக்கு ஒன்னும் புரிய தேவை இல்லை நீ போப்பா.”

“அகல்யா,அகல்யா” என குரல் கேட்க அகல்யா சங்கரை தல்லிவிட்டு தன் அரைக்கு ஓடினாள்.

சங்கருக்கு மிகுந்த ஆச்சரியம் “முன்னலாம் கல்யாணம்னு சொன்னாலே ஓடுவா இப்போ இப்படி ஓரே குரலுக்கு நாய்குட்டி மாதிரி ஓடுறா மாமா என்ன வசியம் பண்ணி இருப்பாரு தெரியலயே!!!! மாமா பலே ஆள்தான்,ம்ம்ம்…….!!!”என மனதுக்குள் நினைத்துக்கொண்டான்.

அகல்யா உள்ளே நுழைந்ததும் கதவுக்கு பின்னாலிருந்து அவளை கட்டியணைத்தான் செல்வம்.

அவனது சூடான மூச்சுக்காற்று அவளது செவிகளை சிவக்க வைத்தது.அவன் அணைப்பில் உணர்ந்த அந்த கதகதப்பு அவளுக்கு மெய் சிலிர்ப்பை தந்தது.

“ஏஏஏஏ என்னா இதுக்கே மேடம் முகமெல்லாம் செவந்து போச்சு உடம்பெல்லாம் சிலிர்த்துடுச்சு!!” என அவன் கேட்க

அகல்யா திரும்பி செல்வத்தை செல்லமாக முறைத்தாள்.

“ம்ம்ம்ம்….. இப்பக்கூட உன்ன நம்ப முடியலடி நீ பண்றது என்ன ஏத்துக்குறது எல்லாமே கனவு மாதிரி இருக்கு,ஏய் என்ன உண்மையா புடிச்சிருக்கா???”என செல்வம் கேட்டான்.

“இங்க வந்து உட்காருங்க பர்ஸ்ட்டு,”

“எனக்கு உங்களை உண்மையாவே புடிச்சிருக்கு,அதுல எந்த மாற்றமும் இல்ல,நான் இப்ப சொல்ற வார்த்தை என் உயிர் இருக்க வரைக்கும் இருக்கும்.” எனக்கூறி அவனை கட்டிலில் அமர்த்தி தன் மடிமீது செல்வத்தை படுக்க வைத்து அவன் தலையை கோதியவாரே அகல்யா பேசினாள்.

“மொதல்ல நீங்க பொண்ணு பார்க்க வரும்போதெல்லாம் சுத்தமா எனக்கு புடிக்கல,அப்பறமா நீங்க மெஸேஜ் அனுப்பிட்டே இருப்பீங்களா அப்பெல்லாம் கடுப்பா இருக்கும்,அப்புறம் செல்லம்,அழகி,அப்படி இப்படின்னு அனுப்புவீங்க அப்பேவே கொஞ்சம் ஓகே ஆனால் டபுள் மைன்ட் தான். சரி,நிச்சயதார்த்தம் நிருத்த சொன்னா என்ன பண்றீங்கன்னு பார்கலாம்னு நினைச்சேன், அப்ப நீங்க கேட்டிங்கல்ல, “நீ படிச்சவ தான எல்லாருக்கும் சொல்லி ஊரரிய ஆன அப்புறம் நிறுத்த சொல்ற என்ன நினைப்பாங்க எல்லாரும் உன் அப்பா அம்மா எப்படி பட்டவங்க அவங்கள போய் அசிங்க படுத்த நினைக்கர”,அப்படின்னு . அப்ப கோபம் தான் அப்பறமா யோசிச்சேன் ச்சே உங்களுக்கு தோனுனது எனக்கு தோனல நான் என்ன பத்தி மட்டும் தான் யோசிச்சேன் ஆனா நீங்க என் அப்பா அம்மா பத்தி யோசிச்சிங்க அங்க தான் நான் விழுந்துட்டேன்.

ஆனாலும் நீங்க எல்லாருமே நீங்களா முடிவு எடுத்துக்கிட்டது எனக்கு கொஞ்சம் கோபம் கல்யாணம் முடியர வரைக்கும் உங்கள பயத்துலையே வச்சிக்கனும்னு நினைச்சேன்.பர்ஸ்ட் நைட்டப்ப தான் உங்களுக்கு லவ் ஷாக் குடுக்கனும்னு நான் ப்ளான் பண்ணி தான் பண்ணேன்.என அகல்யா சிரித்தாள்.

அவள் பேசிமுடிக்கும்முன் அவளை தன் முகத்தினருகில் சாய்த்து முத்நமிட்டான்.

நம் வாழ்வின் முக்கியமான முடிவு திருமணம்,அனைவருக்கும் அதன் மீது ஒரு ஒரு கருத்து இருக்கும். பெறும்பாலானோருக்கு திருமணம் மீது அவநம்பிக்கை வெறுப்பு இருக்கிறது.முக்கியமாக பெற்றோரால் நிச்சியக்கபட்ட திருமணம் என்றாலே அது கட்டாய படுத்துதல் என பலரும் நினைக்கின்றனர். அதைப்பற்றி யோசிக்கும்போது தான் எனக்கு ஒரு சந்தேகம் தோன்றுகிறது , நமது பெற்றோர் நமக்கு கெடுதல் செய்ய போவது இல்லை,பிள்ளையை பெற்றாச்சு,அவங்க இஷ்டத்துக்கு இருந்துட்டு போகட்டும் நம்ம வாழ்க்கையை ஜாலியா அனுபவிப்போம்னு எந்த ஓரு தாய் தந்தையரும் விட்டு விட மாட்டார்கள்,தன்னைப்போல தன் பிள்ளை கஷ்ட படக்கூடாது என்று தான் எண்ணுவார்கள்,அப்படியாக இருக்கையில் திருமணம் மட்டும் என்ன விதிவிலக்கா.

காதலித்து திருமணம் செய்வது ஒரு பெரிய விஷயம்தான்,அதைவிட அழகான ஒன்று உண்டென்றால் பெரியோர்களால் நிச்சியக்கபட்டு பெற்றோறின் ஆசைக்காக கட்டுப்பட்டு,கட்டிய மனைவியை காதலிப்பதும்,அவளும் தன் மணாளனை நேசிப்பதும் அழகிலும் அழகு.

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!