Skip to content
Post Views: 5,565
சாரல் – 25
நந்தா, “மாமா என்ன இது காபி பொண்ணு எடுத்துட்டு வராம, வேற யாரோ எடுத்து வராங்க…”
வேலன், “நீ கொஞ்ச நேரம் அடங்குடா மாப்பிளை…”
“அதுலாம் முடியாது, நான் கேக்குறேன் இருங்க…” என்று வாயை திறக்க,
Advertisement
“அடேய், அலம்பல் பண்ணாதடா… உனக்கு பொண்ணை தானே பாக்கணும்… வரும் இருடா…”
அங்கு அமர்ந்திருந்த பொண்ணின் சொந்தக்காரர், “என்ன சொல்லுறாங்க மாப்பிள்ளை தம்பி?…”
“அது” என்று பேச வர,
Advertisement
அவனின் கையை அழுத்திவிட்டு, “அது ஒன்னும் இல்லங்க, பொண்ணோட சொந்தங்களை பத்தி கேட்டாரு… சொல்லிட்டு இருந்தேன்…”
Advertisement
“நந்தா… கொஞ்சம் அமைதியா இரு…” என்று அவனின் அடுத்த பக்கத்திலிருந்த ராஜா சொல்ல,
“நீயென்டா சொல்ல மாட்ட, உனக்கு தான் அண்ணி வந்தாச்சுல… அப்பறம் நீ இப்படி சொல்ல தானே செய்வ…”
வேலன், “அடேய் மாப்பிள்ளை… அங்க பாரு, உங்க அப்பாவை, இங்கயே தான் பாத்துப்பாத்து பேசிட்டு இருக்காரு… கொஞ்சம் அடக்கி வாசி…”
Advertisement
“அவரு இப்போ என்னை பாக்குறது தான் முக்கியம்ன்ற மாறி பேசுறீங்க மிஸ்டர் மாமா… என்னை பொண்ணுதான் பாக்கணும்… அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க… இல்ல நானே பாத்துக்குறேன்…” என்று அந்த கூட்டத்தில் தன் அன்னையை தேட,
“என்ன எங்க அம்மாவை கூட காணும்…”
“மாப்பிள்ளை சார்… உங்க அம்மானு இல்ல, எந்த லேடீஸ்யும் இங்கில்லை… இது என்ன படத்துல வர்றது போலன்னு நினைச்சிட்டியா… நம்ம வீட்டு பொம்பளைங்க எல்லாம், பொண்ணுகூட அந்த ரூம்ல, பொண்ணு வீட்டு லேடிஸ்க்கூட பேசிட்டு இருப்பாங்க… ஆம்பளைங்க மட்டும் தான் இங்க ஹால்ல இருப்போம்… பொண்ணை கூட்டிட்டு வர சொல்லுப்பானு எந்த பெருசாவது சொல்லும்… அப்போதான் உன் மாமியாருக்கு சிக்னல் போயி, பொண்ணை உன் கண்ணுல காமிப்பாங்க…”
“நீயும் பெருசு தானே… அப்ப நீ பொண்ணை வெளில வர சொல்லு…”
“நான் எழுந்து போயி, உங்க அப்பா பக்கத்துல உக்கரப்போறேன், போடா…”
“அதுதான்… பெரிய மனுசனா லட்ஷணமா அவங்க கூட உக்காந்து சட்டுபுட்டு பொண்ணை வர சொல்லாம, இங்க மாப்பிள்ளை பக்கத்துல வந்து உக்காந்திருக்க… அங்க பாரு சின்ன மாமா, எப்படி சமத்தா பெருசுங்களோட இருக்காரு…”
“என் பக்கத்துலே இரு மாமானு… அப்போ நீ சொல்லவே இல்ல…”
“நானா… நான் எப்போ சொன்னேன்…” என்று பேச, ராஜாவோ… “அங்க பாருடா தம்பி, இவ்வளோ நேரம் பொண்ணை பாக்கணும் சொல்லிட்டு, பொண்ணு வரும் போது, என்னடா பேச்சு…”
“எல்லாம் இந்த பெருசால தான்டா…” என்று அதற்கும் பதில் கொடுத்துவிட்டு, அங்கே அவளை நிமிர்த்து பார்க்க, அவளோ அனைவருக்கும், பதுமையாய் வணக்கம் வைக்க, பின்னாலிருந்த, சித்தியோ அவளின் கையில் டைமென்ட் கற்கண்டை ஒரு கிண்ணத்தில் கொடுத்து ஹாலில் உள்ள அனைவருக்கும் கொடுக்க சொன்னார்.
அதை பார்த்த நந்தா, மாமனிடம்… “என்ன இருக்கு அந்த பௌல்ல…”
“உனக்கும் பொண்ணு கொடுக்கும் அப்போ பார்த்துக்கோடா…”
அவனிற்கு தர, “அதி என்னை பாரு எடுக்குறேன்…” என்று மெதுவாக கூற,
“அடேய் சீக்கரம் எடுடா…” என்று அவரே அவனின் கைக்கொண்டு கொஞ்சம் கற்கண்டை எடுக்க வைத்து, பொண்ணை அனுப்பி வைத்தார்.
“யோவ் மாமா… ஏன் இப்படி பண்ணுன…” என்று அவரை திட்ட,
“பொண்ணுலாம் அவளோ நேரலாம் உன்பக்கத்துல நிக்க கூடாது… இது கிராமம்டா ஏதாவது பேசுவாங்க… நீ கொஞ்ச நேரம் அடங்கி இரு…”
“நீ பெருசுன்னு நிரூபிச்சிட்டா பாத்தியா… கற்கண்டு குடுத்து ஏமாத்திட்டீங்க… நான் இதுலாம் ஒதுக்க மாட்டேன்…”
“இப்போவது இப்படியாது பண்ணுறாங்க… நான் உன் அத்தையை பொண்ணு பக்க போனபோது, வெறும் வணக்கம் சொல்லிட்டு உள்ள அனுப்பிட்டாங்க… உனக்கு பொண்ணு கற்கண்டாச்சும் கொடுக்க வந்துச்சேனு சந்தோசபட்டுக்கோ…”
“நீ சரிப்பட்டு வரமாட்ட… அண்ணா பெரியவனே… நான் பொண்ணுகூட பேசணும்னு கேளு…”
வேலன், “அடிங்க படவா… நீ பேசுனதே இல்ல பொண்ணுகிட்ட…”
பெண்ணின் சொந்தம், “மாப்பிள்ளை தம்பி என்ன, கேட்டுட்டு இருக்காரு… எங்க பொண்ணை பிடிச்சிருக்கான்னு சொல்லுறது…”
ராஜா, “அது வந்துங்க… பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை பேசணும்னு பிரியப்படுறார்… இப்போ இப்படி பொண்ணு பாக்குறப்போ பேசுறதுலாம் பழக்கம் ஆகிடுச்சு தானே…”
வீரபாண்டியன் அதிருப்தியான பார்வை ஒன்றை ராஜாவை நோக்கி வீச, சேகரோ தலையை மட்டும் ஆட்டிக்கொண்டார்.
“சரித்தான்… இதுக்கு தான் இவ்வளோ நேரம் பேசிட்டு இருந்திங்களா டாக்டர் தம்பி… நேராவே நீங்க கேட்ருக்கலாம்…”
அங்குள்ள அனைவரும் சிரிக்க, இவனும் பொதுவாக சிரித்து வைத்தான்.
இதுக்கு தான் சொன்னேன் என்ற பார்வை வேலன் பார்க்க, அவனோ அவரை கண்டுகொள்ளாமல் தன் அண்ணனிடம் திரும்பி, “சமத்து பெரியவன்டா…” என்று கொஞ்சினான்.
அதுதான் பையன் ரெண்டு வார்த்தை பேச ஆசை படுறாருல்ல, பொண்ணை அனுப்பி விடுங்க…மாப்பிளை தம்பி, நீங்க இவன் கூட பின்னாடி போங்க… பொண்ணு வரும்.
அவந்தியை அனுப்பிவிட்டு, சற்று தொலைவில் ஒரு பெண் நிற்க,
நந்தா, “ஏங்க சொந்தக்காரங்களே, நான் உங்க வீட்டு பொண்ணை கடிச்சி சாப்டுட மாட்டேன்… நானே பேசிட்டு பத்திரமா அனுப்பி வைக்கிறேன்.”
“அவரோ அப்படிலாம் விடமாட்டோம் தம்பி… நான் வேணும்னா இன்னும் கொஞ்ச தூரம் தள்ளி நிக்கிறேன்…” என்று இன்னும் இரண்டடி தள்ளி நின்றார்.
இதுக்கு இவங்க தள்ளியே நின்றிருக்க வேண்டாம் என்று பேச, அங்கே அவந்தியோ அவனையே விழிகள் அகல பார்க்க,
“என்ன! இப்படி கண்ணாலே என்னை கபளீகரம் பண்ணிடலாம்னு இருக்கியா…” என்று கண்ணடிக்க,
அவள் கண்ணை சுருக்கி பார்க்க, “அதி… ரெண்டு வார்த்தை பேச சொல்லி தான் டைம் குடுத்துருக்காங்க… நீ பேசுற வரைக்கும் இப்படி தான்… விட மாட்டேன்…”
“நந்து….து…”
“நான் ஏதாவது பேசுனா… இதை தான் சொல்லுற நீயும்… அதுனால இது சேர்த்தி கிடையாது…”
அவளோ முயன்று முறைத்து பார்க்க,
“சரி… இப்போதைக்கு நீ பேச போறதில்ல, இந்தா நீ எனக்கு கொடுத்தல்ல, நான் இப்போ உனக்கு தரேன்…” என்று அவளின் கையில் கற்கண்டை திணிக்க,
“நந்து…என்ன?”
“நீ பேசவே வேணாம்… இதை நீ சாப்பிடு அது போதும்…”
அவனை கண்கள் சிரிக்க பார்க்க,
“இதுவேலைக்காகாது… நீ இப்படி பண்ணிட்டே இரு… அப்பறம் அங்க நிக்குற அக்கா, உன்னைய கூட்டிட்டு போய்டும்…”
“நந்து…” என்று இம்முறை சிரிக்க,
“சிரிக்குற நீ… சீக்கரம் சாப்பிடு…”
அவனை கேள்வியாக பார்த்துக்கொண்டே, அவன் கொடுத்த கற்கண்டை… ரெண்டு எடுத்து வாயில் போட, இதற்காகவே காத்திருந்தது போல், கண்ணிமைக்கும் நேரத்தில், அவளின் இதழில், தன் இதழொற்றிவிட்டு, அவள் நடந்ததை கிரஹிக்கும் முன்னே,
“நான் கொடுத்த இனிப்பை, எனக்கு கொடுக்காமயே நீயே சாப்டுட, அதான் எனக்கு நானே எடுத்துக்கிட்டேன்… நீ பொறுமையா அப்பறம் எனக்கு கொடு…” என்று கண்சிமிட்ட,
அவள் கன்னங்கள் சிவக்க, கீழே குனிந்து ” என்ன பண்றது உங்களை …” என்று முணுமுணுக்க,
“நீ என்ன வேணும்னாலும் பண்ணலாம்… ஐம் வைட்டிங்…” அவ்வளோ தான் டைம் போல அந்த அக்கா வராங்க… நாம நைட் பேசலாம் தங்கப் பொண்ணு… என்றுவிட்டு உள்ளே சென்றான்.
– – – – –
சமயலறையில் தண்ணி எடுப்பதற்காக வந்த பானுவின் பின்னே வந்த கலையரசியை பார்த்துவிட்டு, நீங்க ஏன் க்கா வந்திங்க?… நானே எடுத்துட்டு வந்திருப்பேன்ல…
கலையரசி, “இல்ல பரவால்ல… சும்மா தான் நானும் வந்தேன்…”
“என்ன க்கா… ஏதாவது என்கிட்டே சொல்லனுமா…” என்று பட்டென்று கேட்க,
சில நாழி, என்ன சொல்லவென்று புரியாமல் நின்று, “ஆமா, எல்லாம் இந்த நந்தாவை பத்தி தான்… அவன்”என்று சொல்ல ஆரம்பிக்க,
“க்கா…. நீங்களும் என்னைப்போல நெறைய நாடகம் பாக்குவீங்களா?”
“என்ன நாடகமா?… இவ என்ன சொல்லுறா?…” என்ற ரீதியில் அவர் பார்க்க,
“என்ன முழிக்குறீங்க… அதுல இப்படி தான் வில்லிலாம், இதுமாறி தனியா வந்து பொண்ணோட அம்மாகிட்ட நாசூக்கா பேசுறாப்போல பண்ணி கல்யாணத்த கலைச்சி விடுவாங்க… நீங்களும் அதுதான் பண்ண போறிங்களா?”
“அவரோ ஒன்றும் கூறாமல் வெடுக்கென்று, அங்கிருந்து சென்றார்…”
அவர் சென்றவுடன், கோமதி வந்து பானுவின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டார்.
“அட என்ன அண்ணி… இவளோ நேரம் அவங்க பண்ணினதை பாத்துட்டு தானே இருந்தேன்…”
“இல்ல… அவ உங்க பின்ன வர்றத பாத்து தான், என்ன கலகமூட்ட போராளோனு தான் வந்தேன்… இங்க வந்து நீங்க பேசினதை பார்த்ததும் தான் நிம்மதியாச்சி…”
“பாருங்களேன்… சில சமயம் நாடகம் பாக்குறது எவ்வளோ நல்லுதுனு…” என்று சொல்லி சிரிக்க, கோமதியும் அவருடன் இணைந்து சிரித்தார்.
“சரி வாங்க போவோம்… நம்ம இப்படி ஒத்துமையா சிரிக்குறத பாத்தா, அதுக்கு அப்பறம் நமக்குள்ள கலகத்தை ஏற்படுத்திடுவாங்க…” என்று அழைத்து சென்றார்.
அங்கே இருவரும் உள்ளே நுழைவதை பார்த்த புவனா, “என்ன அண்ணி, எங்க போயிருந்திங்க… அங்க ஹாலுக்கு வாங்க நீங்க… “
“என்ன அத்தாச்சி, என்ன விஷயம்…”
“நீங்க வந்து பாருங்க… நீங்களும் வாங்க அவந்தி அம்மா… என்று அழைத்து சென்றார்.
அங்கே கூடத்தில்,
“என்னங்க மாப்பிள்ளை, அது எப்படி சரியா வரும்… நம்மதுல்ல, நிச்சயம் பொண்ணு வீட்டுல சேர்ந்ததுல, அது நாங்க வைக்காம கல்யாணம் மட்டும் வச்சா, நல்ல இருக்காதே… சம்மந்தியும் இதே தானே சொல்லுறாங்க…”
“மாப்பிள்ளை, நீங்களே இவனுக்கு கொஞ்சம் புரியுற போல எடுத்து சொல்லுங்க…” என்றார் வீரபாண்டியன் வேலனிடம்,
அவர் நந்தாவை நான் சொல்லி நீ கேக்கபோறன்ற பார்வை அவனை பார்க்க, அவனோ இவரை பார்த்து இடவலமாக தலையாட்டி விட்டு பார்த்தான்.
பின்பு பெருமூச்சினை வெளியேற்றி, இருவரையும் பார்த்து… ஒரு நிமிஷம் நான் சொல்றதை, நல்லா கேட்டுட்டு அப்பறம் எனக்கு பதில் சொல்லுங்க என்றான்.
சேகர், “சொல்லுங்க மாப்பிள்ளை…”
வீரபாண்டியனோ, “நீ எப்படியும் நாங்க சொல்றத கேக்க கூடாதுனு முடிவு பண்ணிட்ட… என்ன சொல்ல போற இப்போ புதுசா…”
வேலன், “இருங்க மச்சான்… அவனோட வசதியையும் நாமா பாக்கணும்ல…”
உங்களுக்கே தெரியும், என்னோட வேலையை பத்தி… நிறைய லீவெல்லாம் தரமாட்டாங்க… இதுல நிச்சயமுக்குனு லீவு போட்டுட்டு வந்து, திரும்ப கல்யாணத்துக்குனு லீவு கேட்டா, ஒரு வாரம் கூட கிடைக்காது… இதுவே கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நிச்சயம் வச்சீங்கனா, ரெண்டுத்துக்கும் சேர்த்து ரெண்டு வாரம் கேட்டு, லீவு அப்ளை பண்ணிடுவேன்.
அவந்திக்கும் இப்படி இருந்தா, அவளும் என்னைப்போல லீவு எடுத்துக்க ஈசி ஆஹ் இருக்கும்… கல்யாணம் எங்களுக்கு தானே பண்ண போறீங்க, அப்போ எங்களோடதையும் பார்த்துட்டு தானே பண்ணனும்… நீங்க சொல்லுங்க மாமா…? என்று தன் மாமனாரை பார்க்க,
அவரும் யோசித்து விட்டு, “நீங்க சொல்றதும் புரியுது மாப்பிள்ளை…”
“அப்பறம் என்ன மாமா… அப்பா பாருங்க ,மாமாவே ஒத்துக்கிட்டாங்க… வேலா மாமா… நீங்க பேசுங்க அப்பாகிட்ட… நீங்க சொன்னா அப்பா கேப்பாங்க…” என்று அவரை பார்த்தான் நமட்டு சிரிப்புடன்,
ஒருவேளை இவன் சொல்றது போலதானோ என்று தீவிரமா அவனை பார்த்த வேலனோ, இறுதியில் அவனின் சிரிப்பை பார்த்து, “எமகாதகன்டா நீ …” என்று பார்த்து வைத்தார்.
அவனின் தந்தை யோசிப்பதை பார்த்து,
“வேணும்னா கல்யாணம் முடிஞ்சி ரெண்டு வீட்டு சார்பா, தனித்தனியா விருந்து போட்டுக்கலாம்… அப்போ கூட வரமுடியாத சொந்தங்கள் கலந்துப்பாங்க… இது சரியா வருமான்னு பாருங்க…”
சேகரோ, “சரிங்க மாப்பிள்ளை… எனக்கு ஒன்னும் இல்லை, சம்மந்தி சொல்லுற முடிவுல தான் இருக்கு… உங்க வசதிப்படியே பண்ணிக்கலாம்…”
“ரொம்ப நன்றிங்க மாமா… புரிஞ்சிக்கிட்டதுக்கு…”
“அப்பா… என்னப்பா… மாமாவே ஓகே சொல்லிட்டாங்க… என்னப்பா இன்னும் யோசிக்குறீங்க…”
“வேற வழி… அதுதான் சொல்லிட்டியே… சரிங்க சம்மந்தி… நிச்சயம் குறிக்க வந்த ஐயரை, அப்படியே அடுத்த மாசத்துல ஒரு நல்ல நாளா பாக்க சொல்லிடுங்க…” என்று முடித்தார்.
“எப்படியோ வெற்றிகரமா, சிறப்பா வாதாடி நேரடியா கல்யாணத்துக்கு நாள் குறிச்சி முடிச்சிட்டடா மாப்பிள்ளை… உன்னைய வக்கீலுக்கு படிக்கச் சொல்லிருக்கலாம்…”
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்ல, உன்னைய பேச சொன்னா… கடைசில நான் பேசி முடிச்சிருக்கேன்… இதுக்கு வீட்டுக்கு வந்து உங்களை சிறப்பா கவனிக்குறேன்…”
ஒரு மாதத்தில் திருமணம் என்று முடிவு செய்து புறப்பட்டனர்.
error: Content is protected !!