Skip to content
Post Views: 5,769
வீட்டில் நடந்த பிரச்சனையில் தன் பாரா முகம் வித்யாவின் மனதை புண்படுத்தி இருக்கும் என்று அவனுக்கு தோன்றவே இல்லை. முதல் நாள், அடுத்த நாள் மூன்றாவது நாள் அவள் வாயை திறக்கவே இல்லை. முதல் ஒரு நாள் அமைதியாக வந்தவனுக்கு இரண்டாம் நாள் வாயை மூடிக் கொண்டு வர முடியவில்லை.
“குட் மார்னிங் மேடம்”
“குட் மார்னிங்” முகம் பார்க்கவில்லை முகத்தை திருப்பிக் கொண்டாள் . ஏறி அமர்ந்ததும் காதில் ஹியர் போனை வைத்துக் கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டாள் .அவனிடம் பேச துடிக்கும் நாவை பாட்டில் கவனம் செலுத்தி மாற்றிக் கொண்டாள் .
“நாம ஏதாவது கேக்க போய் இவன் எதையாவது சொல்லுவான். எதுக்கு வம்பு” மனதில் கறுவினாள் .
Advertisement
அடுத்த நாளும் அதையே செய்தாள் .
பாப்பாவின் பள்ளி விழா வந்ததில் வீட்டினர் அனைவருமே ஓரளவு சமாதானமாகி இருந்தனர். தேவதையாக வந்த தங்கை மகளை விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொண்டான். அதே போன்ற உடையில் வந்து நின்ற வித்யாவின் முகம் எப்படி கண்ணில் வராமல் இருக்கும். அப்போதுதான் அவள் கடந்த இரு தினங்களாக தன்னிடம் பேசாமல் வருவது உறைத்தது .
“அசோ! மேடம் என் மேல கோபத்துல இருப்பாங்களோ? உடனே போன் பண்ணி சாரி கேட்டுடுவோம் “
Advertisement
மணியை பார்த்தான். இரவு எட்டு மணி. இப்போது அழைக்கலாமா வேண்டாமா ? யோசனையுடன் அழைத்து விட்டான்.
Advertisement
“ஹலோ!” எப்பவும் போன் பண்ண மாட்டானே? நாளைக்கு வர முடியாதுன்னு சொல்ல கால் பண்ணி இருப்பானோ? வித்யாவின் மனதில் நொடிக்குள் மனதில் ஆயிரம் சந்தேகங்கள்.
“மேடம்!” குரல் குழைந்தது .
“ம்! சொல்லுங்க. என்ன விஷயம்?”
Advertisement
அவள் மிரட்டலில் பயந்துவிட்டான் .
“ஒண்ணுமில்ல சும்மாதான்”
“என்ன சும்மா? காசு கொடுதுன்னு”
“சாரி மேடம்” போனை வைத்து விட்டான். வாயால் மூச்சை விட்டு தன்னை சரியாக்கி கொண்டான். குழந்தையின் புகைப்படங்களை அவளுக்கு அனுப்பி வைத்தான். தம்பஸ் அப் சிம்பல் வந்தது.
முதல் நாள் இரவில் சொல்ல முடியாததை அடுத்த நாள் சொன்னான்.
“நேத்து எதுக்கு கால் பண்ணீங்க?” அவள் முகம் கோபமாகத்தான் இருந்தது. காரணம் தெரியாதிருந்தால் பயந்திருப்பான். இப்போதுதான் காரணம் புரிந்து விட்டதே. இப்போது சிரிப்பு வந்தது காமெடி போலீசை பார்த்து.
“இல்ல! அன்னிக்கு அந்த புது ட்ரஸ்ல ரொம்ப அழகா இருந்தீங்க”
அவள் இறங்கி பணம் கொடுத்த போது சொன்னான்.
“ஓ ! அப்ப இப்ப அசிங்கமா இருக்கேனா?’
“மேடம் நீங்கல்லாம் சாமி சிலை மேடம். எப்படி இருந்தாலும் அழகு தான் மேடம்” அசால்ட்டாக சொல்லிக் கொண்டே அடுத்த சவாரிக்குப் போனான்.
“மனதில் ஏன் இந்த சந்தோஷம்?” வித்யாவுக்கு புரியவில்லை.
அவனுக்கும்தான் புரியவில்லை, அவளின் ஒற்றை புன்னகையில் நாள் அழகாக மாறுமா? நாள் மட்டுமல்ல. வாழ்க்கையும் மாறும் என்பதை புரிய வைப்பாள் அவன் தேவதை.
——————————-
காவல் நிலையம் பரபரப்பாக இருந்தது. மதுவும் அவளுடன் வேலைப் பார்ப்பவர்களும் இதோ அவசரமாக கிளம்பி விட்டார்கள். பெரியதாக எல்லாம் ஒன்றும் இல்லை. மந்திரிக்கு பந்தோபஸ்து.
எந்த மந்திரி?
தொழில் துறை மந்திரி.
தொழில் துறை மந்திரி எங்கே போகிறார்?
புது கார் தொழிற்சாலையை திறந்து வைக்க.
தொழிற்சாலை யாருடையது?
இதெல்லாம் ஒரு கேள்வியா?
தொழில் துறை மந்திரியின் மகனுடையது.
“டேய் உன் பையனோட கம்பனியை தொறக்க நீ போற. எதுக்கு டா எங்களை வெய்யிலில் நிக்க வைக்கற? இயற்கை உபாதைக்கு போக கூட வழி இல்லாமல் நின்றிருந்த பெண் காவலர்கள் தான் திட்டிக் கொண்டிருந்தார்கள். மனதிற்குள்.
” இவன் வந்தது கடைய தொறந்ததுக்கு அப்புறமாத்தான் நமக்கு வண்டி வரும்”
சில பெண் காவலர்கள் மனதிற்குள் புலம்பி இருந்த நேரம் மது வந்தாள்.
“மேடம் ப்ளீஸ் மேடம். எங்கையாவது போயே ஆகணும் மேடம். தாங்க முடியாது”
அடக்க முடியாத அவஸ்தையை வெளிப்படையாகவே சொன்னாள் அந்த பெண் காவலாளி.
குற்றவாளிகளுக்குத்தான் அவள் கடுமையானவள். உடன் வேலை செய்பவர்களுக்கு நல்ல தோழியாகவும், உடன் பிறந்தவளாகவும் தான் இருப்பாள். அதே சமயம் வேலைன்னா வேற மாதிரிதான்.
“டேட்ஸா “
“எஸ் மேடம்”
“ஓகே! ஒடனே வண்டிய வர சொல்லறேன்”
“காவலர்களுக்கான நடமாடும் கழிப்பிட வண்டி வந்தது. அப்போதுதான் பாவம் அந்த பெண்களுக்கும் மூச்சு வந்தது.
“முடியலைன்னா எங்கையாவது போய் உக்காரு. யாரவது கேட்டா மயக்கம் வந்துடுச்சுன்னு சொல்லு.
“எஸ் மேடம்” மனதார நன்றி உரைத்தாள் .
மந்திரியின் மகன் முன்பே வந்து விட்டார்.
“டேய் யாருடா நீ! என்ன கலருடா ? நான் தெரியறேனா? கூலர்ஸுக்குள் இருந்த கண்கள் கேட்டன. நீ மனசுல நினைச்சாலும் எனக்கு கேக்கும். காதுகள் சொல்லியது. இவனுக்கு நாந்தான் ஜோடி . கழுத்தின் செயின் சொன்னது. எனக்கென்ன குறைச்சல்? அரைக்கை வெள்ளை சட்டைக்குள் இருந்த ஏறி இறங்கிய புஜங்கள் கேட்டது. நா இல்லன்ன நீங்கல்லாம் ஒண்ணுமே இல்ல அவனின் உயரம் சொன்னது. உங்களுக்கும் சேர்த்து நான்தான் அப்பாடக்கரு. அவனின் குரல் சொன்னது.அங்கங்கே சில வெள்ளை முடி வந்திருந்தது. அதுவும் இத்தனை அழகாக இருக்குமா. மொத்தத்தில் பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நிமிடமாவது நின்று பார்த்து விட்டுத் தான் திரும்புவார்கள். அதிலும் பெண்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம்.
“உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள் நெஞ்சு சொல்கின்றது”
அவனை கதாநாயகனாகி, தானே நாயகி ஆகி டூயட் பாட ஆரம்பித்து விடுவார்கள்.
“மினிஸ்ட்டர் கிட்ட வந்துட்டாரு. எல்லாம் ரெடியா? என்ன போலீஸ் மேடம்? பந்தோபஸ்து எல்லாம் சரியா இருக்கா ?
“எஸ் சார். எல்லாமே சரியாத தான் இருக்கு”
“உங்க பேரு ?”
அவள் சொல்வதற்கு.ள் கூலர்ஸை விலக்கி அவள் காக்கி சட்டையில் எழுதி இருந்த பெயரை படித்துக் கொண்டான் கை தொட்டு. அத்தனைபேர் முன்பும் அவளுக்கு அவமானமாக இருந்தது. அவன் கை பட்ட இடம் உடல் எரிந்தது. ஒன்றும் செய்ய முடியாது. உதட்டை கடித்துக் கொண்டாள் . அவள் கடித்த இடத்தில் லேசாக ரத்தம் வந்தது . அதை பார்த்தவன் தன்னை அடக்கிக் கொண்டான். வேறு இடமாக இருந்திருந்தால் அதிபனே துடைத்திருப்பான்.
அதிபன்? மந்திரியின் மகன். மந்திரியின் அத்தனை சொத்துக்களுக்கும் ஒரே வாரிசு. என்னதான் பாக்க நான்றாக இருந்தாலும் அவன் முகத்தில் தெரியும் வன்மம்? சிலருக்கு மட்டுமே கண்டுபிடிக்க முடியும். சிலர் பார்த்து தெரிந்து கொள்வார்கள். சிலர் பழகித் தெரிந்து கொள்வார்கள். பழகி தெரிந்து கொண்டவர்களை விட பகைத்து தெரிந்து கொண்டவர்கள் ஏராளம்.அவன் கை வைக்காத இடமும் இல்லை, கால் வைக்காத பிஸினஸும் இல்லை. NUS சிலும், LBS சிலும் படித்தவன் ஆயிற்றே. பணம் பதவி, அறிவு அழகு அனைத்தும் இருந்தால்? மற்றவர்களின் பாடு? திண்டாட்டம்தான். இவனால் யார் வாழ்க்கை எல்லாம் அழிய போகிறதோ?
விதி…………..வலியது……………
——————————————————————
ஆர் கே குரூப் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ்
கீழ் சாதி பெண்ணை காதலித்ததால் வேண்டாதவனாகிப் போன ராஜன் சென்னையிலும் சிங்கப்பூரிலும் அன்றாட வாழ்க்கையில் அனைவருக்கும் மிகத் தேவையாகி போனார்.
உங்களுக்கு சுவையான சாப்பாடு புடிக்குன்னா இந்த பெயரை கேட்காம இருந்திருக்க மாட்டிங்க ..
ரேடியோவில் விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது.
ஊறுகாய் மட்டுமில்லாமல் இட்லி மாவு, தோசை மாவு, சர்பத் வகைகள், ஜாம் வகைகள், என்று பலவிதம். ஆர் கே இட்லி மாவு வாங்கி விட்டீர்களா? இதோ இன்ஸ்டன்ட் சட்னி மிக்ஸ். கொஞ்சமா தண்ணி விட்டு தாளிச்சு கொட்டினா போதும். எள்ளுன்னா எண்ணைய்யா நிக்கணும், எங்க பாட்டி சொல்லுவாங்க. இதோ ஆர் கே வோட எள்ளுப்பொடிய சாதத்துல போட்டு எண்ணெய் விட்டா எள்ளு சாதம் ரெடி. புளியோதரைன்னா அது அய்யங்கார் புளியோதரைதான். உங்களுக்கு நினச்ச நேரத்துல அய்யங்கார் புளியோதரை வேணுமா? இதோ கொஞ்சமா சூடான சாதத்துல கலந்து சாப்பிட்டா முடிஞ்சது . கூடவே ஒரு சுட்ட அப்பளம் வேணுமா? இதோ இருக்கே? வெள்ளை சர்க்கரை வேண்டாம் வேண்டாம். வேண்டவே வேணாம். இதோ இருக்கு ஆர் கே வின் நாட்டு சர்க்கரை.
நாவில் போட்டவுடன் கரைந்து போகும் கடலை உருண்டையை வயதானவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள்.
அவர்கள் உள்ளே நுழையாத உணவு பண்டங்கள் இல்லை என்னும் அளவிற்கு அவர்கள் உணவு பண்டங்களில் கால் பதித்திருந்தனர். அப்படி சொல்லலாமா? அல்லது அவர்களின் உணவு பொருள் நுழையாத சமையல் அறையே இல்லையென்று சொல்லி விடலாமா? எது இருந்தாலும் இல்லை என்றாலும் அவர்களின் பெருங்காயமாவது சமையல் அறையில் இருக்க வேண்டும். ஆர். கே குரூப்பின் ஒரே வாரிசு ரவி குமார். உண்மையில் இவன் ஒரே வாரிசு இல்லை. இவனுக்கு ஒரு அண்ணன் இருந்தான். சூர்யா. இரு மகன்களும் இருவரும் மேல் படிப்பை வெளி நாட்டில் முடித்திருந்தனர்.
சூர்யாவும் ரவியும் இரட்டை குழந்தைகள். இருவருமே அநேக விஷயங்களில் நேர் எதிராகத் தான் இருந்தார்கள். அவர்கள் வளர்ந்தது என்னவோ சிங்கப்பூரில் தான். இருந்தாலும் அவர்கள் அன்னை இந்திய பாரம்பரியதிலேயே வளர்த்திருந்தார். ஏதோ சில சமயங்களில் பிள்ளைகளும் இந்தியா வந்திருக்கிறார்கள் . சூர்யாவுக்கு பிடித்த அளவு ஏனோ ரவிக்கு இந்தியாவை பிடிக்கவில்லை. அதிலும் வாடா மச்சான் வயசுக்கு வந்துட்ட பருவங்களில் சூர்யாவின் மனதை கொள்ளை கொண்டது இந்திய பெண்கள்தான். ரவியை பொறுத்த வரையில் பணம் வந்தது. அதனால் சொந்தமும் வந்தது என்றே நினைத்தான். அந்த பருவத்திலும் ரவியின் மனதில் யாராலும் உள்ளே நுழைய முடியவில்லை.இந்திய பெண்கள் மட்டும் இல்லை வெளி நாட்டு பெண்களும்தான். பெண்களை பொறுத்தவரை தேவையானது. பணம். மற்ற தேவையை தீர்த்துக் கொள்ள ஒரு ஆணின் உடல். பெண்களை பார்த்தாலே அவனுக்கு வெறுப்பாக வந்தது. கம்பீரமும் ஆளுமையும், பணமும், பணச் செழுமையும் இருக்கும் ஆண் மகனை யாருக்குத் தான் பிடிக்காது அல்லது எந்த பெண்கள்தான் சுற்றி வர மாட்டார்கள். அவன் மனதை கொள்ளை கொண்ட ஒரே பெண் அவன் அன்னை தான். அவளின் அழகையும் கம்பீரத்தையும் ஏன் பெண்மையையும் கூட அவன் எந்த பெண்ணிடமும் கண்டதில்லை. உண்மையானக் காதல் என்பதில் எல்லாம் அவனுக்கு மற்ற பெண்களிடம் நம்பிக்கையே வரவில்லை.(டேய் ! உன்னையும் தாடி வச்சு ஏங்க வைக்க ஒருத்தி வருவாடா. அது இந்த ஆத்தரோட சாபம்)
இதோ பெற்றவர்களுக்கு திருமணமாகி முப்பது வருடங்கள் ஆகி விட்டது. இன்னும் தந்தை இரவில் வீடு திரும்பும் வரையில் காத்திருந்து உணவு பரிமாறிவிட்டுதான் உறங்கச் செல்வார். அது இரவு மணி பதினொன்றோ, பன்னிரண்டோ அப்படிதான். தன் முகத்தை கண்டதும் முகத்தில் வரும் சிறு வெட்கத்தையும் முகச் சிவப்பையும் காண எந்த ஆண் மகனுக்குத்தான் மனம் ஏங்காது ? கணவன் மனைவிக்குள் இருக்கும் காதலுக்கு வயது உண்டா என்ன? இளமையில் காமத்தில் இருக்கும் காதல் வயது ஆக ஆக முதுமையின் முதிர்ச்சியை இன்னும் அதிகரிக்கத்தானே செய்யும். அந்த இயற்கையான ரசாயணத்திற்கு இவர்கள் ஒரு நல்ல உதாரணம்.
பெற்றோரை ரசித்து ரசித்து வளர்ந்தவர்கள் தான் சூர்யாவும் ரவியும். திடீரென்று ஒரு நாள் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் சூர்யாவின் அன்னை உறங்கி கொண்டிருக்கும் போதே இறந்து போய் இருந்தார். கார்டியாக் அரெஸ்ட்டாம். அழகான பெயரில் மருத்துவர்கள் சொன்னார்கள்.
வாரிய தலை கலையாமல் முன் உச்சியில் திலகமிட்டு, முகம் முழுக்க புன்னைகையுடன் கையில் இருந்து பையை வாங்கி “வாங்க” என்று இனிமையாய் அழைக்கும் மனைவி இனி இல்லை. சுட சுட சப்பாத்தியும் பட்டாணியும் உருளையும் சேர்த்து சப்ஜி செய்து பரிமாறியவள் எங்கே?
“இப்பதானே டீ சூர்யாவுக்கு சீக்கிரமா நல்ல பொண்ணா பாக்கணும். ஏற்கனவே ரொம்ப வயசாகிடுச்சுன்னு சொன்ன? எப்படி தனியா என் தலைலை பொறுப்பை குடுத்துட்டு போயிட்ட ?”
ராஜன் மிகவும் இடிந்து போய் விட்டார். வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை. தான் செவ்வாய்ப்பேட்டையில் இரயில் ஏறியதும், பாட்டாபிராமில் அவளை பார்த்து மயங்கியதும் அந்தத் நாட்களுக்கு மனம் ஏங்கியது.
தினமும் குளித்து நெற்றி உச்சியில் குங்குமம் வாங்கி கொள்ளும் மனைவி இல்லை. எனக்கு இன்னிக்கு முள் முறுக்கு செஞ்சு தாடி! யார்கிட்ட கேட்பேன்? டிபன் பாக்ஸை திறந்தாலே மணக்க மணக்க வரும் சமையல் மட்டுமா ஸ்பெஷல்? அதில் “ஐ மிஸ் யூ” யார் எழுதி அனுப்பவார்கள்?
“இன்னிக்கு ஸ்பெஷல் கோதுமை அல்வா” அவர்களின் அந்தரங்க பாஷை. அவளின் ஒற்றை இதழ் முத்தம் இனி கிடைக்குமா? கூடலுக்கு பின் கணவனிடம் இருந்து உரிமையாக வாங்கி கொள்ளும் அழகான முத்தம். அவளின் சிறு மிரட்டல். இனி எப்போதுமே அவளின் கழுத்து வளைவில் முகம் புதைக்க முடியாது. கழுத்தின் வளைவில் வாசம் பிடித்தால் அத்தனை கவலைகளையும் எளிதாக கடந்து விட முடியுமே. காதல், காமம், கடமை , இன்பம், மகிழ்ச்சி எல்லாம் தந்தவள் இப்போது இனி எதற்கு என்று மறைந்து விட்டாள் . மனைவியின் முகத்தையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவருக்கு அன்றைய இரவில், இரவின் தனிமையில் தாள முடியாமல் போனது. மகன்கள் தோளில் தங்கினார்கள்தான். இருந்தாலும் அவருக்கு மனைவியைத் தவிர வேறு உலகம் அறியாதவர். நம்பிக்கையுடன் மனைவியின் கையை பிடித்து திருமணம் செய்த போதே தன் உலகத்தை அவள் கைக்குள் அடக்கிக் கொண்டவர். குலுங்கி குலுங்கி அழுதார். மனம் சமாதானம் அடையவில்லை.
அவள் ஒருத்தியின் இழப்பு அவர்கள் மூவருக்குமே பேரிடிதான். துக்கம் நடந்த வீட்டில் நல்லது நடக்க வேண்டும். மகனுக்கு சீக்கிரமே திருமணம் செய்து வைக்க வேண்டும். அவள் கனவை . நிறைவேற்ற வேண்டும். அவளை போலவே மகனுக்கு மனைவியாக தோழியாக, இவள் இடத்தை நிரப்பும் அன்னையாக ஒரு பெண்ணை அழைத்து வர வேண்டும்.
இந்நிலையில்தான் ராஜனின் அக்கா மகள் திருமணம் என்று அழைத்திருந்தார்கள். அக்கா, வெகு காலம் கழித்து பேசினாள். அதிலும் ராஜனின் நேரடி தொலைபேசி எண் கிடைக்காமல் அலுவலகத்துக்கு பேசி அதற்கு பிறகே உடன் பிறந்தவனிடம் பேச முடிந்தது. தந்தை ஒதுக்கி வைத்த பாவத்திற்கு மடியில் போட்டு தூக்கி வளர்த்தவளுக்கும் தொடர்பு இல்லாமல் போனது. தன் மகளின் திருமணத்திலாவது தம்பியை உடன் சேர்த்து கொள்ள வேண்டும் . தம்பி மனைவி அப்போது தான் இறந்து விட்டாள் என்ற செய்தியை கேட்ட போது மிகவும் வருத்தப் பட்டாள். அவளுக்கு யார் மீதும் எந்த வெறுப்பும் இல்லை.
பல வருடங்கள் கழித்து உடன் பிறந்தவள் குரல் கேட்டதில் அவருக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சிதான். தான் யாரும் இல்லாதவனாக உணரக் கூடாது என்று தன மனைவிதான் இந்த ஏற்ப்பாட்டை செய்திருப்பாள். மனைவியின் புகைப்படத்தை கையில் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.
இது என்ன விதமான காதல்? தனக்கும் தன் மனைவிக்கும் இப்படியான ஒரு ஆத்மார்த்தமான காதல் இருக்குமா? சூர்யாவின் மனம் ஏங்கியது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணிற்க்காக மனம் ஏங்கியது.
அவள் வருவாளா……
காத்திருப்போம்……
error: Content is protected !!