செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -15
அத்தியாயம் – 15
கதிர் வேலுசாமிக்கு போன் செய்து “அப்பா நான் ரியல் எஸ்டேட் வேலை பாக்குறேனு உங்க கிட்ட சொன்னேல, இப்போ தனியா ஒரு ஆபிஸ் ஆரம்பிச்சி கொஞ்சம் பெருசா பண்ணலாம்னு நினைக்குறேன் அப்பா “
“நல்லா யோசனை தான் கதிரவா தைரியமா பண்ணுப்பா “
Advertisement
“நாம கடை குடோன் காலியதான இருக்கு அங்க நான் ஆபிஸ் ஓபன் பண்ணிக்கவா “.
Advertisement
“உனக்கு எது சரினு தோணுதோ அதை செய் தம்பி “என்றார் வேலுசாமி.
Advertisement
அப்பாவின் அனுமதி வாங்கிய மறுநாளே கடை வேலையை ஆரம்பித்து விட்டான்.
Advertisement
“அண்ணே ஆபிஸ்க்கு என்ன பேரு வைக்க போறீங்க, சொன்னிங் கன்னா நேம் போர்டு எழுத குடுத்துறலாம் “என்றான் கருப்பு.
“ரஞ்சு பேருல தான் வைக்கலாம்னு இருக்கேன் “
“என்ன அண்ணா விளையாடு றிங்களா, கல்யாணம் ஆன அப்பறம் வச்ச கூட பரவாயில்லை இப்போ அண்ணி பேர வச்ச தேவை இல்லாத பிரச்சனை தான் வரும் அண்ணா, அண்ணி கூட இதுக்கு ஒதுக்க மாட்டாங்க “.
“நீ சொல்லுறதும் சரி தான் கருப்பு, ஆன எனக்கு ரஞ்சனி பேரு தான் வைக்கணுன்னு ஆசையா இருக்கு “.
“அண்ணே பேசாம ஒரு ஜோசியர் கிட்ட போய் கடை திறக்க நாள்ல நாள் குறிச்சிட்டு அப்படியே என்ன பேரு வைக்கனு கேட்டுட்டு வரலாம் என்ன சொல்லுறீங்க “.
இருவரும் கிளம்பி ஜோசியரிடம் சென்றனர். அவரிடம் கதிர் தன் விருப்பத்தை கூறினான்.
“தம்பி அந்த பொண்ணு பேரு என்னபா,ரஞ்சனி ஐயா,உன் முழு பேரு என்ன பா,கதிரவன் சக்கரவர்த்தி “
“உன் பேருல முதல் ஆங்கில எழுத்து
K, அந்த பொண்ணோட பேருல முதல் எழுத்து R, ரெண்டையும் சேர்த்து KR பேரு ஆரம்பிப்பா அமோகமா இருக்கும் “.
கதிர் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆபிஸ் வேலைகளை செய்து கொண்டி ருந்தான். ஒரு வாரம் கழித்து வேலுசாமி, லட்சுமி, கனிமொழி, மகேஷ் ஆகியோர் கனடாவில் இருந்து வந்தனர்.கதிரை பார்த்ததும் லட்சுமி ஓடிவந்து கட்டி அனைத்து அழ ஆரம்பித்தார்.வேலுசாமி கூட மகனின் மாற்றத்தை நினைத்து மகிழ்ச்சி அடைந்தார்.
“என்னடா தம்பி அம்மா சமையல் சாப்பிடாம நீ ரொம்ப இழச்சி போய் இருப்பன்னு பார்த்த முன்னாடி விட இப்போ தான் நல்லா வெயிட் போட்டு பாக்குற மாதிரி இருக்குற “என்றாள் கனி.
“அக்கா முன்னாடிலாம் அதிகமா குடிப்பேன் சரியா சாப்பிட மாட்டேன், இப்போ குடிக்குறது இல்ல நல்லா சாப்பிடுறேன். அதான் கொஞ்சம் வெயிட் போட்டேன் “
“நான் ஒரு வேளை சாப்பிடலனாலும் அவ என்ன சும்மா விட மாட்டாளே ” என்றான் கதிர் மெதுவாக,
லட்சுமி, கனி அதை கவனிக்க வில்லை. வேலுசாமி அதை கேட்டு விட்டார். இருந்தும் கண்டு கொள்ளாமல் இருந்தார்.
கடைக்கு சென்ற வேலுசாமி அங்கு ஏற்பட்டுள்ள மாற்றத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். கருப்புவிடம் ரஞ்சனியை காட்டு மாறு கேட்க, “அண்ணிக்கு இப்போ செமஸ்டர் லீவு காலேஜ் திறந்த அப்பறம் காட்டுறேன் அப்பா ” என்றான் கருப்பு.
அனுவின் காலேஜ் திறந்து அனு காலேஜ்க்கு சென்றுக் கொண்டிருந்தாள். கதிர் அனுவிடம் கடை திறப்பு விழாவிற்கு வருமாறு அழைத்தான். கதிரின் குடும்ப உறுப்பினர்கள் இருப்பார்கள் என்பதால் அனு வர முடியாது என்று மறுத்து விட்டாள்.
“செல்லம் அது உன்னோட கடை டா அந்த கடை திறப்பு விழாக்கு நீ வரலைனா எப்படிடா “.
“சரி நான் வாரேன், ஆன அங்க என்ன தெரிஞ்ச மாதிரி நீ காட்டிக்க கூடாது. நான் கடைக்கு பென் வாங்குற மாதிரி வாரேன் சரியா “
“ஓகே டா செல்லம் நீ வந்தா மட்டும் போதும் “.
கடை திறப்புவிழா நல்லா படியாக நடந்து முடிந்தது. ரஞ்சனி ரேணுகா நர்மதாயுடன் கடைக்கு சென்றாள். அங்கு வேலுசாமி, லட்சுமி, கனி, மகேஷ் நால்வரும் இருந்தனர்.
ரஞ்சனி அங்கு சென்ற நேரம் கதிர் கடைக்கு உள்ளே இருந்தான். கருப்பு அவர்களை பார்த்ததும் உள்ளே சென்று கதிரை அழைத்து வந்தான். அனுவை பார்த்ததும் கதிரின் முகம் பிரகாசம் ஆனது.
“அண்ணா நியூ மாடல் பென் தாங்க அண்ணா “என்றாள் ரேணுகா கதிரிடம்.
கருப்பு மெதுவாக வேலுசாமி அருகில் சென்று அப்பா அண்ணே முகத்தை பாருங்க அண்ணிய பார்த்ததும் பிரகாசம் ஆகிருச்சி.
அண்ணியா யாருடா, அப்பா ரஞ்சனி அண்ணிபா அங்க இருக்காங்க பாருங்க.3 பொண்ணுக இருக்காங்க அதுல யாருடா. மஞ்ச கலர் டிரஸ் போட்டுருக்காங்களா அவங்க தான். வேலுசாமி ரஞ்சனியை பார்த்தார்.
ரஞ்சனி யாருக்கு தெரியாமல் கதிரின் கையில் விபூதி,குங்குமம் கொடுத்தாள். கடை திறப்புவிழா என்பதால் அனு கதிரின் பெயரில் அர்சனை செய்து பிரசாதத்தை கொடுத்தாள். பென் வாங்கி கொண்டு அங்கிருந்து சென்று விட்டாள்.
ஒரு வாரம் கழித்து கனிக்கு வளைகாப்பு நடந்தது.கனிக்கு தங்க வளையலை வாங்கி அணிவித்தான் கதிர். கதிரை வேலை இல்லாதவன், குடிகாரன் என்று கூறிய உறவினர்கள் முன்னிலையில் இன்று கதிர் செய்தது வேலுசாமி, லட்சுமி இருவருக்கும் பெருமையாக வும், மகிழ்ச்சியாவும் இருந்தது.
அனு கல்லூரில் இறுதியாண்டு என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தால், கதிரவனும் தொழிலில் கடினமாக உழைத்துக் கொண்டிருந்தான். இருவரும் காலை, மாலை பார்த்துக் கொண்டனர் அவ்வளவு தான், மதிய நேர தொலைப்பேசி உரையாடல் வெகுவாக குறைந்து போனது.
இருவரும் நேரில் சந்தித்து பேசி இத்துடன் 3மாதங்கள் ஆகி விட்டன. இதற்கு இடையில் கனிக்கு பெண் குழந்தை பிறந்து இருந்தது. கதிர் அனுவை பார்க்கு வருமாறு அழைத்தான்.
ரஞ்சுவை பார்த்ததும் கண்கள் கலங்க “செல்லம் ஐ மிஸ் யூ ஷோ மச் டா “என்றான். அது பார்க்கு என்பதால் அனுவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு கூறினான். நானும் தான் மாமு உன்ன ரொம்ப மிஸ் பண்ணுனேன்.
இருவரும் மூன்று மாதங்கள் நடந்த விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர். கதிர் அனுவிற்காக வாங்கி வந்திருந்த டிரஸ்களை காட்டினான். எதுக்குடா இப்போ இத்தனை டிரஸ்.
“ஹலோ மேடம் இது இந்த வாரம் வாங்குன டிரஸ் மட்டும் தான், வீட்டுல இன்னும் நிறைய இருக்கு, பாதிக்கு மேல தட்சி வச்சிட்டேன் செல்வி அக்கா கிட்ட குடுத்து “.அனு கதிரை முறைத்து பார்த்தாள்.
“லூசு உன் முண்டகண்ண வச்சி முறைக்காம டிரஸ் எப்படி இருக்குனு சொல்லு “
“எல்லா டிரஸ்ஸும் நல்லா இருக்குடா”
“நிஜமா தான் சொல்லுறைய,எனக்கு திருப்தியா இல்ல, இதுவே நாலுக் கடை ஏறி இறங்கி எதுவும் பிடிக்கல, அந்த கடைல வேலை பார்த்த பையன பார்த்த பாவமா இருந்தது அதுனால அந்த கடைல இருந்தாதில்லையே நல்லா டிரஸ்ஸ பார்த்து எடுத்துட்டு வந்தேன் “.
“என் கதிர் இப்படிலாம் பண்ணுற நீ, பேசாம நீ ஒரு ஜவுளிக்கடை திறந்துரு அதான் புது டிசைன் வர வர எடுத்துட்டே இருக்கலாம் சரியா “
என்றாள் கிண்டலாக,
கதிர் அனு கூறியதை நினைத்து யோசித்துக் கொண்டே இருந்தான். நாமளே ஜவுளிக்கடை திறந்தால் என்ன என்று யோசித்து அதை செயல் படுத்த ஏற்பாடுகளை செய்தான்.
ரஞ்சனிக்கு செமஸ்டர் எக்ஸாம் நடந்துக் கொண்டிருந்தது.இந்த எக்ஸாம் முடிந்தாள் அடுத்து அடுத்த ஆறு மாதங்கள் ப்ராஜெக்ட் மட்டுமே இருந்தது அவள் கல்லூரி படிப்பு முடிய.தேர்வின் கடைசி நாள் அனு கதிரவனை பார்க்க வேண்டும் ஏற்று கூறி இருந்தால் சரியாக அதே நாள்ல ஒருவருக்கு நிலத்தை காட்ட சென்று விட்டான் கதிர். அனுவிற்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும் கதிரிடம் அதை காட்டுக் கொள்ளவில்லை.
“கதிர் நீங்க வேலைய கவனிங்க நாம காலேஜ் ஓபன் பண்ணுற அன்னைக்கு ஈவினிங் பார்க்குல மீட் பண்ணலாம் சரியா ” என்றாள்.
அனு கதிரவனை நினைத்து ஏங்க ஆரம்பித்தால், கதிர் அனுவின் நியாபகம் வரும் போது எல்லாம் சோர்ந்து விடாமல் இருக்க வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான். வரும் வருமானத்தை குறைந்த வட்டிக்கு மற்றவருக்கு கடனாக தர ஆரம்பித்தான்.
கல்லூரி திறந்த நாள் அன்று மாலை இருவரும் பார்க்கில் சந்தித்து பேசிக்கொண்டு இருந்தனர். வெகு நேரம் பேசிவிட்டு இருவரும் பிரிந்து சென்றனர். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்ததை. அகிலனின் அம்மா ராஜியின் தோழி பார்த்து விட்டார்.
அன்று இரவே ராஜியிடம் சென்று அனுவை போல் ஒரு பொண்ணை பார்க்கில் ஒரு பையனுடன் பார்த்ததாக கூறினார். ஒரு வேளை அது அனுவாக கூட இருக்கலாம் என்று கூறி விட்டு சென்றார்.
ராஜிக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த விஷயத்தை எப்படி அகிலிடம் கூறுவது என்று இரவு முழுவதும் யோசித்துக் கொண்டே இருந்தார். பின் உடனே அண்ணனிடம் பேசி அனு அகில் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று எண்ணினார்.
மறுநாள் மாலை ராமசந்திரன் வேலையில் இருந்து வரும் நேரம் அவரை பார்க்க வந்தார் ராஜி அங்கு வந்தார்.ராமசந்திரனிடம் “அண்ணே அகிலனுக்கு வயசாகிட்டே போது சீக்கரமா அனுவுக்கும் அவனுக்கு கல்யாணம் பண்ணிரலாம் அண்ணே”
“அனுக்கு கூட இப்போ படிப்பு முடிய போகுதுல அண்ணே “.
“ராமசந்திரா என்னபா அமைதியா இருக்குற நாம ஏற்கனவே பேசி வச்சிருந்தது தானாப்பா, அகிலனுக்கு அனுக்கும் கல்யாணத்தை பண்ணிரலாம் தம்பி நான் கண்ணைமூடுறதுக்குள்ள என் பேர புள்ளைங்க கல்யாணத்தை பார்த்து போயிறேன்பா “என்றார் வள்ளியம்மாள் வராத கண்ணீரை துடைத்துக் கொண்டு.
இவர்கள் பேசுவதை கேட்ட அனுவிற்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அழுகையாக வந்தது அதை அடக்கிக் கொண்டு பெரியவர்கள் பேசுவதை அறைக்கு உள்ளே இருந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
அனுவின் வீட்டில் இருந்த அனைவரும் சுஜி முதற்கொண்டு ராமசந்திரனிடம் அனு அகில் கல்யாணம் விரைவாக நடைபெற வேண்டும் என்று கூறினார்கள்.
ராமசந்திரன் இரண்டு நாட்கள் பொறுங்கள் யோசித்து கூறுவதாகக் கூறினார். அனுவிற்கு வாழ்க்கை இருண்டு போனது போல் இருந்தது.
இரவு முழுவதும் தூங்காமல் அழுதுக் கொண்டே இருந்தாள்.
மறுநாள் காலையில் எப்பவும் கிளம்பும் நேரத்திற்கு முன்னதாவே வீட்டிலிருந்து கிளம்பி விட்டாள் அனு. கதிரின் கடைக்கு சற்று தள்ளி இருந்த போன் கடையில் இருந்து கதிருக்கு போன் செய்தால்.
“ஹலோ கதிர்,நான் அனு பேசுறேன், நீ எங்க இருக்குற “
“ரஞ்சு என்ன இந்த டைம் கால் பன்னிருக்குற,நீ எப்பவும் வர பஸ்ல இன்னைக்கு வரலையா, நான் கடைல தான் இருக்கேன், நீ எங்க இருக்குற “
“கடைல வேற யாரும் இல்லைல, நீ மட்டும் தானா இருக்குற “
“நான் மட்டும் தான் இருக்கேன் ” என்று கதிர் கூறியதும் போனை வைத்து விட்டு அனு உடனே கடைக்கு சென்று கதிரின் கையை இழுத்துக் கொண்டு ஆபிஸ் அறைக்குள் சென்று கதிரை கட்டி பிடித்து அழுக ஆரம்பித்தால்
“செல்லம் என்னடா ஆச்சு ஏன்டா இப்படி அழுகுற,அழுக்காத ரஞ்சு, என்ன ஆச்சு சொல்லுடா “என்றான் கதிர் சற்று பதட்டத்துடன்.
“கதிர் எனக்கும், அகில் அத்தானுக்கு கல்யாணம் பண்ண போறாங்களாம்” என்று கூறி அனு மீண்டும் அழுக ஆரம்பித்தால்.
“என்ன டி சொல்லுற, நீ சொல்லுறது உண்மை தானா, என்ன தான் நடந்தது உன் வீட்டுல, ஒழுங்கா சொல்லுடி ” என்றான் கதிர்.
அனு வீட்டில் நடத்தவற்றை கதிரிடம் கூறினாள்.கதிர் சிறிது நேரம் யோசித்து விட்டு “இப்போ நீ என்ன பண்ண போற ரஞ்சு “.
“எனக்கு என்ன பண்ணனே தெரியல கதிர், ரொம்ப குழப்பமா இருக்கு “
“நான் சொல்லுறப் பேச்சை கேக்குறைய ரஞ்சு நீ “
“ம்ம் கேக்குறேன் கதிர் சொல்லு “
“நாம கல்யாணம் பன்னிக்கலாம் ரஞ்சு” என்றான் கதிர்.
