Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் -19

அத்தியாயம் – 19

 அனு கோவமா அங்கிருந்து சென்றது கதிரை மனதளவில் மிகவும் பாதித்தது.அவள் கோவம் குறைந்து அவனிடம் வருவாளா இல்லை அவனை வெறுத்து அவனை விட்டு சென்று விடுவாளோ என்று எண்ணி பயப்பட ஆரம்பித்தான். எப்படியாவது அனுவை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்தான்.

 

“ரஞ்சனியிடம் நான் பேச வேண்டும் உன்னால் உதவி செய்ய முடியுமா” என்று கேட்டு ரேணுகா வின் போனிற்கு மெசேஜ் அனுப்பினான் கதிரவன்.



Advertisement

 

“சாரி அண்ணா நான் இப்போ தான் அவளோட வீட்டுல இருந்து வாரேன் மறுபடியும் போன ஏன் எதுக்குன்னு அம்மா கேப்பாங்க, நாளைக்கு நாங்க GTN காலேஜ்க்கு அப்ளிகேஷன் வாங்க போறோம் அப்போ வேணுனா அவளை பேச சொல்லுறேன் அண்ணா “என்றாள் ரேணுகா.

 

Advertisement

“ரஞ்சனி உன்கிட்ட என்ன பத்தி ஏதாவது சொன்னாலா மா “

Advertisement

 

“இல்லனா,நாங்க தனியா உக்காந்துலாம் பேசல அண்ணா பேசிருந்தா சொல்லிருப்பா, அவ ரொம்ப டல்லா இருந்தா ஏன்னு கேட்டதுக்கு தலைவலின்னு சொல்லிடா, அப்பறம் நான் அவளோட அப்பா அம்மா கிட்ட நாளைக்கு காலேஜ் போறத பத்தி பேசிட்டு வந்துட்டேன் “

 

Advertisement

“நீயும் அந்த காலேஜ்ல தான் சேர போறியா ரேணுகா “

 

“ஆமா அண்ணா, நான் ரஞ்சனி நர்மதா வெங்கட் இன்னும் எங்க பிரண்ட்ஸ் நிறைய பேரு அந்த காலேஜ்ல தான் சேர போறோம் ” என்றாள் ரேணுகா மகிழ்ச்சியாக.

 

“ஓ அப்படியா ரொம்ப சந்தோசம் மா, நீயும் ஹாஸ்டல்ல தான் சேர போறியா “

 

“ஆமா அண்ணா, டெய்லி எங்க ஊருல இருந்து உங்க ஊருக்கு வந்துட்டு போகிறதே ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா”

 

“டெய்லி பஸ்ல 45நிமிடம் அந்த கூடத்துல காலேஜ் பேக் வச்சிக்கிட்டு நின்னுகிட்டே போறதும் வரதும் ரொம்ப கஷ்டமா இருக்கு முதுகு, கால் எல்லாம் ரொம்ப வலிக்குது”.

 

“இதுல டெய்லி திண்டுக்கல் போய்ட்டு வர்றது ரொம்ப கஷ்டமா இருக்கும் அண்ணா அதான் ஹாஸ்டல்ல சேர போறோம், நர்மதா மட்டும் டெய்லி ஒட்டன்சாத்திரம்ல இருந்து காலேஜ் பஸ் வருவா “

 

“ஓகே ரேணுகா நாளைக்கு அவளை பேச சொல்லுமா “என்று கூறிவிட்டு வைத்து விட்டான்.

 

ரேணுகா சொன்ன பின்பு தான் கதிருக்கு புரிந்தது. அவர்கள் தினமும் பஸ்சில் கூட்டநெரிசலில் கஷ்டப் பட்டு வந்து போவதை பற்றி, இருந்தும் அவன் மனம் சமாதானம் அடையவில்லை அவள் ஹாஸ்டலில் தங்குவது குறித்து.

 

எப்படியாவது அனுவிடம் பேசி அவளை GTN போகாமல் தடுக்க வேண்டும் என்று நினைத்தான்.

 

மறுநாள் காலையில் அனு அவளுடைய அம்மா, ரேணுகா, அவளது அம்மா ஆகிய நால்வரும் ஒட்டன்சாத்திரம் பஸ் ஸ்டாண்டில் திண்டுக்கல் பஸ் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்தனர். கதிர் அவர்களுக்கு எதிரில் வண்டியை நிறுத்தி விட்டு அதன் மேல் அமர்ந்து அனுவை பார்த்துக் கொண்டே இருந்தான்.

 

கதிர் தூரத்தில் வரும்போதே அனு பார்த்து விட்டாள். அவனுடைய கண்கள் சிவந்து வீங்கி இருந்தது. எரும நேத்து நைட் புள்ள தூங்கவே இல்லையா கண்ணு இப்படி இருக்கு என்று மனதிற்குள்ளேயே அவனை திட்டி கொண்டிருந் தாள்.இருந்தும் எதிரில் இருந்த கதிரை அவள் நிமிர்ந்துக் கூட பார்க்க வில்லை.

 

“அனு கதிரவன் அண்ணா அங்க நிக்கிறாங்க பாருடி “என்றாள் ரேணுகா.

 

“யாரு நின்னா எனக்கு என்னடி, பஸ் வந்துருச்சி வா போலாம்” என்று கூறி விட்டு அனு பஸ்சில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

 

கதிர் அனுவை பார்த்துக் கொண்டே இருக்க,அவள் அவனை திரும்பி பார்க்காமல் கண்ணாடியில் தெரிந்த அவன் பிம்பத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள்.

 

“அனு என்ன பாக்கக் கூட உனக்கு பிடிக்கலையா அந்த அளவுக்கு என்ன வெறுத்துடைய செல்லம் நீ” என்று எண்ணி மனதிற்குள்ளயே புலம்பிக் கொண்டிருந்தான்.

 

“ரேணுகா ப்ளீஸ் அனு கிட்ட நான் பேசணும் அவளை பேச சொல்லுமா ” என்று மெசேஜ் அனுப்பினான் ரேணுகாவிற்கு.

 

“காலேஜ்க்கு போய்ட்டு கால் பண்ணுறேன் அண்ணா “என்றாள் ரேணுகா.

 

அங்கு சென்றதும் அப்ளிகேஷன் வாங்கி விட்டு அம்மாக்கள் இருவரையும் ஒரு இடத்தில் உக்கார வைத்து விட்டு இவர்கள் இருவர் மட்டும் காலேஜை சுத்தி பார்த்துட்டு வருவதாக் கூறி சென்றனர்.

 

ரேணுகா கதிரவனுக்கு கால் செய்து அனுவிடம் பேச சொல்லி போனை குடுத்தால், அனு வாங்க மறுக்கவே கட்டாயப் படுத்தி கொடுத்தாள்.

 

போனை வாங்கிய அனு அவன் பேசுவதற்கு முன்பே “ஹலோ கதிர் நான் அப்ளிகேஷன் வாங்கிட்டேன், நான் இந்த காலேஜ்ல தான் படிப்பேன், ஹாஸ்டல்ல தான் தங்குவேன், இனிமேல் ரேணுகாவுக்கு போன் பண்ணி அவளை டிஸ்டர்ப் பண்ணாதீங்க ” என்று கூறிவிட்டு போனை வைத்து விட்டாள்.

 

கதிரிடம் பேசினால் கண்டிப்பா அவன் எதையாவது பேசி மனசை மாத்தி விடுவான் என்று எண்ணி தான் அனு கதிரை பேச விடாமல் செய்துவிட்டாள். கதிரிடம் இப்படி பேசியது அனுவிற்கு மிகவும் கஷ்டமா இருந்தது. “சாரி டா மாமு”

என்று மனதிற்கு கூறிக் கொண்டாள்.

 

“அனு பேசி முடிச்சிடைய, உங்க சண்டையெல்லாம் முடிஞ்சதா” என்று கேட்டுக் கொண்டே அவள் அருகில் வந்தாள் ரேணுகா.

 

“பேசிட்டேன் ரேணு வா போலாம், அடுத்த வாரம் வந்து பீஸ் கட்டிருவோமா டி “என்றாள் அனு.

 

“அப்பா கிட்ட கேட்டுட்டு சொல்லுறேன் அனு “.

 

ஒரு வாரம் கழித்து அனு, ரேணு இருவரும் அவர்கள் பெற்றோருடன் வந்து காலேஜ் பீஸ், ஹாஸ்டல் பீஸ் அனைத்தையும் கட்டி விட்டு சென்றனர்.அனு கதிரை அன்று பஸ் ஸ்டாண்டில் பார்த்ததோடு சரி அதன் பின் பார்க்கவே இல்லை.

 

அன்று அனு பேசியதை கேட்ட பின்பு கதிரவனுக்கு உலகமே இருண்டது போல் இருந்தது. அனு அவனை விட்டு ஒரேடியா போய் விட்டாள் என்று நினைத்து ஒழுங்காக சாப்பிடாமல், தூங்காமல் எந்த வேலையும் செய்ய முடியாமல் பைத்தியம் பிடித்தது போல் இருந்தான்.

 

நாட்கள் கடந்தன. அனுவும் கதிரும் சந்தித்து இரண்டு மாதங்கள் ஆகி விட்டது. அடுத்த வாரம் GTN காலேஜில் தங்கி படிப்பதற்கு அனு செல்ல போகிறாள். வெங்கடின் மூலம் அனு ஒரு வாரத்தில் காலேஜ்க்கு போக போகிறாள் என்பதை கதிர் அறிந்துக் கொண்டான்.

 

காலேஜ்க்கு போவதற்குள் கதிரிடம் பேச வேண்டும் என்று நினைத்து ஒட்டன்சாத்திரத்துக்கு கிளம்பி சென்றால் வீட்டில் பொய் சொல்லி விட்டு. கருப்புக்கு போன் செய்து கதிர் கடையில் இருப்பதை உறுதி செய்துக் கொண்டு கடைக்கு சென்றாள்.

 

“கருப்பு உங்க அண்ணா எங்க இருக்காங்க “என்றாள் அனு.

 

“அண்ணே உள்ள தான் அண்ணி இருக்கங்க போங்க “என்றான் கருப்பு.

 

கதவை திறந்து உள்ளே சென்ற அனு கதிரை பார்த்தது அதிர்ச்சி அடைந்தாள்.இரண்டு மாதங்களாக அவன் ஒழுங்காக சாப்பிடாமல் சற்று உடல் மெலிந்து,சேவ் செய்யாமல் பெரிய தாடியுடன், மிகவும் சோர்ந்து போய் இருந்தான்.அனு கதிர் என்று அழைத்ததும் கதிர் நிமிர்ந்து பார்த்தான்.

 

அனு ஓடி சென்று கதிரை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள், “ஏன்டா மாமு நீ இப்படி இருக்குற “என்றாள் அவன் தோற்றத்தை சுட்டிக் காட்டி.

 

“செல்லம் வந்துட்டய்யா டி என்கிட்ட” என்று கூறி அவளை இறுக்கமா காட்டி பிடித்து அவள் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தான் அழுதுக்கொண்டே,

 

கதிரின் கண்ணிர் அனுவின் முகம் முழுவதும் பட்டு அபிஷேகம் செய்தது போல் ஈரமாக இருந்தது அவள் முகம்.

 

” மாமு ப்ளீஸ் அழாதடா நீ அழுகுறத பார்த்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குடா “

 

“கதிர் அழுவதை நிறுத்தாமல் அனுவின் கைகளில் முகத்தை புதைத்து அழுதுக் கொண்டே இருந்தான் “

 

“இப்படி அழுதுட்டே இருந்தா நான் கிளம்பி போயிருவேண்டா “என்று கூறி வெளிய செல்ல போனால்.

 

“ரஞ்சுமா ப்ளீஸ் என்ன விட்டு போயிராத, நான் ஆழமா இருக்கேன்”.

 

“நீ ஏன்டா இப்படி மெலிஞ்சி போய் இருக்குற ஒழுங்கா சாப்பிடுறது இல்லையா,ஏன் சேவ் கூட பண்ணாம இருக்குற “

 

“நீயே என்ன விட்டு போன அப்பறம் நான் சாப்பிட்டு, சேவ் பண்ணி என்னடி பண்ண போறேன், இந்த இரண்டு மாசத்துல எத்தனை தடவை செத்து போயிரலாமானு கூட யோசிச்சிருக்கேன் தெரியுமா, நீ தாண்டி ஏன் உயிர் நீ இல்லாம என்னால இருக்க முடியாது ரஞ்சுமா “

 

“என்னது செத்துரலாம்னு நினைச்சியா, இரண்டு மாசம் தானடா உன்கிட்ட பேசமா இருந்தேன் அதுக்குள்ள நான் உன்ன கழட்டி விட்டுட்டு போய்ட்டேனு நீ முடிவே பண்ணிட்டியா டா ” என்றாள் கோவமாக.

 

“ரஞ்சு நீ கோவமா என்கிட்ட பேசாம போய்டியா அதுனால தான் “

 

“நான் உன்ன பாக்கமா பேசாம போய்ட்டா நமக்குள்ள எல்லாம் முடிஞ்சி போச்சுன்னு நினைப்பியா நீ”

 

“நல்லா கேட்டுக்கோ கதிர் நீயும் நானும், பாத்துக்காம பேசிக்கமா இரண்டு மாசமோ இல்ல, இரண்டு வருசமோ இல்ல, இருபது வருசமோ ஆனாலும் சரி நமக்கு ஏதுவும் மாறாது. இந்த ஜென்மத்துல நீ தான் ஏன் புருஷன் நான் தான் உன் பொண்டாட்டி இதை எப்பவும் மறக்காத “

 

“கொஞ்சமாச்சி என்ன நம்புடா, நான் உன்ன விட்டுட்டு எங்கடா போக போறேன்”.என்றாள் வருத்தத்துடன்.

 

“சாரி செல்லம் இனிமேல் அந்த மாதிரி யோசிக்க மாட்டேன், நீ வருதப் படாத “

 

“நான் இப்போ ஏன் MCA படிக்க போறேன் அதுவும் ஹாஸ்டல்ல தங்கினு உனக்கு தெரியுமா டா, நான் உன்ன விட்டு பிரிஞ்சி போயிராம இருக்கத்தான் “

 

கதிர் அனுவை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அகில் அத்தான் லீவுக்கு ஊருக்கு வரதுக்கு முன்னாடியே வள்ளிப் பாட்டி எனக்கும் அத்தானுக்கும் கல்யாணம் பண்ணுறத பத்தி அப்பா 

அம்மா கிட்ட பேசிருக்காங்க அம்மா அப்போவே சரினு சொல்லிட்டாங் களாம்.

 

அப்பா தான் இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்குல்ல முடியட்டும்னு சொல்லிருக்காங்க அதுக்கு வள்ளிப் பாட்டி “அகில் வரும் போது கல்யாணத்தை முடிச்சிருவோம் அப்பறம் அனு இங்க இருந்தே காலேஜ்க்கு போய்ட்டு வரட்டும், அவ படிச்சி முடிச்சதும் அகில் வந்து அவளை ஜெர்மனிக்கு கூட்டிடு போகட்டும் “

 

“அந்த ஒரு வருசத்துக்குள்ள அனுக்கு பாஸ்போர்ட், விசா எல்லாம் எடுத்துருவோம் ” என்றார் வள்ளி.

 

“இப்போ எதுக்கு இவளோ அவசரம் அனு படிப்பு முடிஞ்சதும் கல்யாணத்தை வச்சிக்கலாம்” என்றார் ராமசந்திரன். என்னோட கல்யாணத்தை பத்தி நடந்த பேசுவார்த்தைலாம் எனக்கு தெரியவே தெரியாது. ராஜி அத்தை வந்து அப்பா கிட்ட பேசுனா அப்போ தான் சுஜி என்கிட்ட சொன்ன.

 

கதிர் நான் மட்டும் இப்போ MCA படிக்கலைனா கண்டிப்பா எனக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. நான் வீட்டுல இருந்து டெய்லி காலேஜ்க்கு போய்ட்டு வந்துடு இருந்தாலும் சரி, “கல்யாணத்தை பண்ணிக்கிட்டு படினு” வள்ளி பாட்டி சொன்னாலும் சொல்லிருவாங்க.

 

அதுனால தான் நான் வீட்டுல அவங்க முன்னாடி இருக்க கூடாதுனு ஹாஸ்டல்க்கு போறேன்.இரண்டு வருஷம் கழிச்சி நீ வந்து அப்பா கிட்ட பொண்ணுக் கேக்கும் போது ஒரு வேளை அப்பா உன்னையும் அகில் அத்தானையும் ஒப்பிட்டு பார்த்த நீ அத்தான விட எதுலையும் குறைச்சலா இருக்க கூடாது.

 

இந்த இரண்டு வருஷத்தை பயன்படுத்தி உன்னால எந்த அளவுக்கு முன்னேற முடியுமோ அந்த அளவுக்கு முன்னேறி பெரிய ஆள வரணும். உன்ன வேண்டான்னு சொல்லுறதுக்கு எந்த காரணமும் கிடைக்க கூடாது என்னோட அப்பாக்கு,புரிஞ்சாத கதிர்.

 

“ம்ம் புரிஞ்சது ரஞ்சு,கண்டிப்பா என்னால முடிஞ்சா அளவுக்கு நான் முயற்சி பண்ணுறேன்டா “.

 

“கதிர் நான் அடுத்த வாரம் காலேஜ் கிளம்புறேன் அங்க போய்ட்டு உனக்கு அடிக்கடி கால் பண்ணுறேன் சரியா, நீ ஒழுங்கா சாப்பிடு உடம்பு பார்த்துக்கோ, நான் வந்து ரொம்ப நேரம் ஆச்சு கிளம்புறேன்டா”.

 

“வந்து கொஞ்ச நேரம் தானடி ஆகுது அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்லுற கொஞ்சமாது புருஷனை கவனிக்கிறைய நீ “என்று கூறி அனுவை கட்டி அணைத்து அவள் முகம் முழுவதும் முத்தம் கொடுத்தான்.

 

 பின் அவள் உதட்டில் தேன் குடித்துக் கொண்டே இருந்தான்.மெதுவா கீழ் இறங்கி கழுத்து காது என்று முத்தமழை பொலிந்துக் கொண்டே இருந்தான்.

 

இதற்கு மேல் சென்றாள் இருவருக்கும் கஷ்டம் என்பதை உணர்ந்த அனு அவனை வழுகட்டாயமாக விலகி வைத்தால்.

“செல்லம் ப்ளீஸ் டி இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் ப்ளீஸ் ப்ளீஸ் “

 

“மாமு சொன்னக் கேளுடா அப்பறம் உனக்கு தான்டா கஷ்டம் ” என்று கூறினாள். மேலும் சிறிது நேரம் அவனுடன் பேசிக்கொண்டு இருந்து விட்டு அங்கிருந்து கிளம்புச் சென்றாள்.

 

ஒரு வாரம் கழித்து அனு GTN காலேஜ்க்கு சென்றாள். கதிர் அவளை சிரித்த முகத்துடன் வழி அனுப்பி வைத்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!