Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

வண்ணம் தேடும் வானம்

வண்ணம் 33

கபிலன் அவர் நெட்வொர்க்கில் இருக்கும் ஆட்களை எல்லாம் அழைத்து வீட்டில் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார்.வக்கீல் அழைத்து அவர் லாஜிஸ்டிக் நிறுவனத்தை பெயர் மாற்றம் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.

அன்று வீட்டில்  தடபுடலாக காலை சிற்றுண்டி மதிய சாப்பாடு எல்லாம்  தயாரானது. மருமகளை புடவையில் வர சொன்னவர் அன்று வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோருக்கும் சாப்பாடு போட்டு யாரென பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பரிசு மருமகள் கையால் கொடுத்தார். தங்க நாணயம், வெள்ளி குத்துவிளக்கு வெள்ளி காயின் பட்டுப்புடவை என நிறைய கொடுத்துக் கொண்டே இருந்தார். மதிய சாப்பாட்டு முடிந்த பின்பு கும்பலாக இன்னும் பல பேரை உட்கார வைத்து “இனி நான் இந்த கட்டப்பஞ்சாயத்து, காண்ட்ராக்ட் எடுப்பதிலிருந்து எல்லாம்  விலகிக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார். அவருடைய லாஜிஸ்டிக் நிறுவனத்தை இவ்வளவு நாள் அவருக்கு உதவியாக இருந்தவர் மகனுக்கு மாற்றி கொடுத்து ‘இனி இது உன் தொழில்’ என்று கொடுத்துவிட்டு இனி யாருமே சிரஞ்சீவியை தொந்தரவு செய்யக்கூடாது. பண உதவி என்றேனும் தேவைப்பட்டால் வீட்டுக்கு வரலாம் மத்தபடி பஞ்சாயத்து செய்யவெல்லாம் தன்மகனை அழைக்கக்கூடாது என்றார்.இனி எதுவென்றாலும் அவருடன்  இத்தனை நாள் வேலை பார்த்தவர்களை சந்தித்து கொள்ளுமாறு சொன்னார். எல்லோரும் அதிர்ச்சியாக ‘எனக்கு லங்க்ஸ்ல பிரச்சனை இருக்கு நான் இனி ரெஸ்ட்ல இருக்கிறதுதான் எனக்கு தேவை அதனால இந்த முடிவுக்கு வந்திருக்கேன் நீங்களும் எல்லாரும் இதுக்கு ஒத்துழைக்கணும்’கையெடுத்து கும்பிட்டு மருமகளை அறிமுகம் செய்து வைத்தார்.

கபிலனுக்கு அவர் தொழிலில் மிகவும் சக்தி வாய்ந்த விஷயம் என்றால் அது விசுவாசம் மட்டுமே. அந்த விசுவாசத்தில் மட்டுமே கபிலன் தொழிலை நடத்தினார் எனலாம். அதை பணம் பொருள் நகை கொடுத்து எல்லாம் விலைக்கு வாங்க முடியாது என்றாலும் அவர் சுற்றத்தை ஆறுதல் படுத்த உதவியது.இனி சிரஞ்சீவிக்கு அவன் மனைவிக்கும் நான் கட்டித் தரப் போற ஹாஸ்பிடல்லும் சிரஞ்சீவியின் தனிப்பட்ட முறையில் அவன் வைத்திருக்கும் சீரியல் தயாரிப்பு கம்பெனியும் மட்டும்தான் என்று சொல்லிவிட்டு அதிகாரமாய் தொழிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். 

புடவை கட்டிக்கொண்டு மாமனார் சொல்லும் வேலைகள் எல்லாம் பார்த்துக் கொண்டும் போவோர் வருவோர் ‘நல்லா இரு’ என்று அவளை வாழ்த்துவதை எல்லாம் கேட்க ஷிவானிக்கு வித்தியாசமாக இருந்தது. இப்படி பரஸ்பர அன்பை பரிமாறிக்கொள்ளும் உறவுகள் எல்லாம் அவள் மிகவும் குறைவாகத்தான் பார்த்திருக்கிறாள். இங்கு கும்பலாக வருபவர் எல்லாம் பேசுவதை பார்க்க அதிசயமாக இருந்தது. எல்லாவற்றையும் ஆர்வமாக இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள்.சிரஞ்சீவியிடம் கோபித்துக் கொண்டு பேசாமல் இருந்தாலும் சிரஞ்சீவி “கஷ்டமா இருக்கா ஹெல்ப் பண்ணவா” கேட்கும் போதெல்லாம் சின்ன புன்னகையில் “இல்லை எனக்கு இது புடிச்சிருக்கு பிடிச்சுதான் செய்றேன்” சொல்லிவிட்டு வேலைகளை தொடர்வாள். அதிரடியாக சிரஞ்சீவி செய்ததெல்லாம் பிடிக்கவில்லை ஆனாலும் அதில் கிடைத்திருக்கும் மாற்றங்கள் அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் ஆறவும் கைகளை மேலே கீழே எல்லாம் தூக்க முடிவதில் இயல்புக்கு திரும்பினாள். ஆனாலும் சிரஞ்சீவியின் கவனமெல்லாம் அவள் காயத்தின் மீதும் அவளுக்கு வலிக்காமல் இருப்பது பற்றியே இருந்தது. அந்த அக்கறை அவளுக்கு பிடித்திருந்தது.



Advertisement

கபிலனை கவனித்துக் கொண்டே சிரஞ்சீவி வாங்கிக் கொடுத்த கிளினிக்கை மேம்படுத்த வேலைகள் பார்க்க முடிவு செய்தாள். அந்த இரவு ‘உன்ன மன்னிச்சிட்டேனா தெரியல, ஆனா உன்கூட சேர்ந்து வாழ தோணுது. பட் ப்ளீஸ் உன் அதிரடி ஆட்டத்தை கொஞ்சம் அடக்கி வை’ என்று மிரட்டினாள்.சிரஞ்சீவி பதிலுக்கு சிரித்துக் கொண்டான்.

பூமி கல்யாணம் ரிசார்ட் ஒன்றில் நடக்க ஏற்பாடு ஆனது. தமயந்தி பூமிகா ஒப்பந்தம் போட்ட நாள் வரை எதையும் கண்டுகொள்ளாமல் வேலை வேலையென ஓடினாள்.டப்பிங் படங்களுக்கு தரமாக டப்பிங் செய்வதில் தொடங்கி ஹாலிவுட் படங்களை நம்மூரில் ரிலீஸ் செய்வது வரை எல்லாவற்றிலும் ஸ்கை புரொடக்சன் முதலாக நின்றது. பூமிகா தமயந்தி எங்கிருக்கிறாளோ அங்கே சென்று அடம்பிடித்து அழைத்துக்கொண்டு டிரஸ் வாங்கவும் பார்லர் போகவும் செல்வாள்.  “ரிசாட் குள்ள வந்த பின்னாடி ஆபீஸ் கால் எடு அப்பறம் இருக்கு உனக்கு” மிரட்டி வைத்தாள்.

அருண்,புவன் தொணதொணப்பில் எல்லோருக்கும் முன்னேயே ரிசாட் வந்து மற்ற ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தவன் முன்னே வந்து நின்றான் சிரஞ்சீவி “நீ யூகிச்சது கரெக்ட் மச்சான். ஸ்கை ப்ரொடக்ஷன் ஓனர் ஏக்தா நுபுர் இல்ல கல்யாண் சூர்யவர்தனன் தான்” என்றான். அருணுக்குள் ப்ரளயம் வெடித்தது. 

Advertisement

ஏக்தா நுபுர் நிறுவனம் பாலிவுட்டில் பெரிய நிறுவனம், அவர்களை எதிர்க்கவே முடியாது. அவர்களது நிறுவனம் தான் ஸ்கை புரொடக்ஷன் என்றால் கஷ்டமென்ற நினைப்பில் தயாரிப்பாளர் யூனியனிலும் ஸ்கை ப்ரொடக்ஷ்னை ஒன்று செய்யமுடியாமல் அமைதி காத்தனர். அருணுக்கு சமீபத்தில் ‘ஏன் தமயந்தி அருந்ததீ பிலிம் கார்ப்பரேஷன்ன இவ்வளவு ஆக்ரோஷ்மா எதிர்க்கிறா” என சந்தேகம் வலுக்க தொடங்கவும் அவளுக்கு பின்னால் இருந்து குத்தி கொடையும் ஆள் யாரென கண்டுபிடிக்க பார்த்தான். எப்படி விசாரித்தலும் ஏக்தா நுபுரிலேயே முடிய இவன் சந்தேகம் வலுக்க கபிலன் உதவியில் இப்போது அவன் உள்ளுணர்வு சொல்லும் விஷயம் உண்மை என அறிந்தான்.

Advertisement

கல்யாண் சூர்யவர்தனன் எவ்வளவு பெரிய சேடிஸ்ட் என அவனையும் அவன் அம்மாவை விடவும் யாராலும் அறிந்திருக்க முடியாது. பொத்தி பொத்தி வளர்த்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு போய் தயாரிப்பு நிறுவனம் பார்த்துக்கொள்ள சொல்லி தருகிறேன் என அவன் செய்த கொடுமைகள் ஏராளம். அருந்ததீக்கு ‘நாம் ஜெயித்துக்காட்டினால் மட்டுமே நம் உறவுகள் நம்மை ஏற்றுக்கொள்ளும், நம்மை மனித பிறவியாகவே பார்ப்பார்களென’ தீவிர நம்பிக்கை பிறந்ததே அவனால்தான். அருணுக்கும் அருந்ததீக்கும் சாப்பாடே அருந்ததீ தயாரிக்கும் படம் வெற்றிபெற்றால்தான் கிடைக்கும் இல்லை பட்டினிதான் என சாப்பாடு, தூக்கம் குளியல் என எல்லாவற்றிலுமே கொடுமை செய்திருக்கிறான். “அம்மா தோத்துட்டா அம்மாவை அம்மான்னு கூப்பிட கூடாது” என்று தினம் அவன் காதில் சொல்லுவான் படுபாவி. அருணுக்கு சாப்பாடும் தூக்கமும் வேண்டுமே அதற்கே அம்மாவை அவன் வாயாலே அம்மான்னு கூப்பிட மாட்டேன் என சொல்லியிருக்கிறான். அருந்ததீ பயந்து அழுவதை பார்த்திருக்கிறான். ஒரு கட்டத்தில் அருந்ததீ வீட்டிற்கே அவர்கள் திரும்பியபின் தான் நிம்மதி பிறந்தது. ஆனால் இங்கே வேறுவிதமாக நிம்மதி பறிபோனதுதான் ஆனால் அதை எதிர்கொள்ள துணிவு பிறந்திருந்தது. காரணம், தாத்தாவின் அன்பு விளையாட  அக்காக்களும் நண்பர்களும் கிடைத்தார்கள். சொந்தங்கள் சூழ்ந்து பயமென்ற உணர்வை போக்கியிருந்தது.ஆனால் அருந்ததீ சுத்தமாக மாறி போனார். விட்டுவந்த கணவனை பழிவாங்க முடிவு செய்தார் முட்டாள்தனமாக. ‘நான் யாரென காட்டுகிறேன் பார்’ என ஓடிக்கொண்டே இருக்கிறார். எதிலுமே வெற்றி இனிக்கவில்லை. பேராசை மட்டும் கூடிக்கொண்டே போகிறது. 

சிறுவயதிருந்து அவனை போலவே உள்ளுக்குள் பயத்திலும் நடுக்கத்திலும் உழலும் ஷிவானியை  காப்பற்ற அவனையும் அறியாமல் பொறுப்பேற்றுக்கொண்டான். வயது கூட கூட கபிலனின் அக்கறையிலும் ஆதரவிலும் நிறைய மாறினான். நிச்சயம் சிரஞ்சீவி கபிலன் பக்கம் இருந்தால் ஷிவானியும் அவனை போல உலகத்தை பார்ப்பாள் என நம்பிக்கை அவனுக்குள்.

 நெருங்கிய நண்பர்கள் மற்றும் சொந்தங்கள் சூழ பூமிகா ஒவ்வொரு வைபவத்திலும் ஒவ்வொரு விதமாக மின்னினாள்.

Advertisement

பூமிகா திருமணத்தில் அருணை பிடித்து ஷிவானி “ஏன்ண்ணா என் மேல கோவமா” கேட்டு விசாரித்தாள்.

அருண் “அப்படியெல்லாம் இல்ல”

“நான் சிரஞ்சீவி வீட்ல நிம்மதியா தூங்குறேன். ஒரு நாள் கூட கெட்ட கனவு இல்ல, பேனிக் அட்டாக் வரல என்ன பத்தி எதுவும் கவலை படாத நீ சிரஞ்சீவி கிட்ட பேசு ப்ளீஸ்… எனக்கு கஷ்டமா இருக்கு” சமாதனம் செய்ய முயற்சித்தாள் 

பதிலுக்கு அருண் “எனக்கொண்ணு சொல்லு ஷிவானி அவனை பிடிச்சிருக்கா அவன் கூட வாழ உனக்கு செட் ஆகுமா”

ஷிவானி யோசித்தவள் “பிடிச்ச்..சிருக்குதான்… சோ நீ என்னை பத்தி கவலைப்படாதேன்னு சொல்றேன்” 

ஷிவானி பின்னால் நின்றவன் சட்டென சிரஞ்சீவி ஷிவானியை தூக்கி சுற்றி “இத எங்ககிட்ட சொல்லமாட்டீங்களோ” கேட்க… அவன் தோளை அடித்தவள் “ஃபிராடுகளா” என திட்ட சிரஞ்சீவி “சாத்தியமா அது நான் இல்ல” என்றான்.

ஷிவானி நண்பர்கள் இருவரும் பேசட்டுமென விலகி செல்லவும் அருண் “ம்ம் வாழ்த்துக்கள் மச்சான்” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு “சிலநேரம் உனக்கும் மூளை வேலை பார்க்குது” என்று வம்பிழுத்தான். 

சிரஞ்சீவி “யாரு  ஃபிராடுன்னு தெரியாம போறா என் பொண்டாட்டி. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிச்சவன் நீ அது தெரியாம இந்த உலகம் என்னை சொல்லுது பாரேன்… என்ன சொல்றானுங்க உன் மாமனுங்க”

அருண் சிரித்தவன் “கடுப்புல இருக்கானுங்க… கபிலன் பையனை ஒன்னும் செய்யமுடியாதே… அம்மாவும் அத்தையும் தினம் உன்னை திட்டிட்டு இருக்காங்க” என்றவன்  கூடவே “பேர பசங்க பொறந்துட்டா சரியா போய்டும் நினைக்கிறேன்” என்றான் 

அந்நேரம் அங்கே வந்த தமயந்தி சிரஞ்சீவிக்கு வாழ்த்துக்கள் சொல்லவும் சிரஞ்சீவி “நன்றி நன்றி சீக்கிரம் நீங்களும் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு அருணை பார்த்து கண்ணடித்துவிட்டு  “பொண்டாட்டி கூப்பிட்றா” என்று விலகி ஓடினான். அருண் தமயந்தி இருவரும் ஒரே சமயத்தில் “கல்யாணம் ஆகிடுச்சாம்” என்று கிண்டல் செய்யவும் அவர்களுக்கே அதிசயம் ஆச்சரியம் பிறந்தது.

யாருமில்லாத தனிமை வெகுநாள் கழித்து 

தமயந்தி “நல்லா இருக்குல்ல எனக்கு ரொம்ப நாள் கழிச்சு ரிலாக்ஸா இருக்குற மாதிரி இருக்கு பூர்ணிமா கல்யாணத்துல இருந்த மாதிரி” 

அருணுக்கு மனதினுள் அவள் அவன் கன்னத்தை திருப்பி முத்தமிட்டது ஓட “ஆமா. நம்பவே முடியல நாமெல்லாம் மீட் பண்ணி இவ்வளவு வருஷம் ஆயிடுச்சிங்குறது”

தமயந்தி “எனக்கும். பூமியை காலேஜ்ல மீட் பண்ணது…உன்ன ஷூட்டிங் செட்ல பார்த்ததும்…எம்பிஏ படிக்க ஜாயின் பண்ணது எல்லாமே என்னமோ நேத்து நடந்த மாதிரி இருக்கு இவ்ளோ சீக்கிரம் காலம் ஓடிருச்சுல்ல” 

நிமிர்ந்த பார்வையும்  தன்னம்பிக்கை நிறைந்த அணுகுமுறையுமென  மிளிர்பவளுக்குள் எங்கேயோ நடுக்கமும் தயக்கமும் நிறைந்த படபட தமயந்தியை கண்டான் அருண். “ம்ம் செட்ல நெருக்கத்துல நிக்கறப்ப உன்கிட்ட ஒரு சிட்ரஸ் வாசனை வரும் அது இன்னும் ஞாபகம் இருக்கு”

தமயந்தி அதிசயமாக பார்த்தவள் சத்தமாக “ஓ காட்… அது என் பவுடர் வாசனை… விளையாடிட்டு வரேன்ல வியர்வை வாசனை வர கூடாதுன்னு ஸ்கூல்ல இருந்து யூஸ் பண்றேன் அப்படியே பழகிட்டேன்… அதெல்லாம் உனக்கு தெரிஞ்சதா” 

அருண் “ம்ம் ரொம்ப நாள் கழிச்சு அந்த வாசனை நெருக்கத்துல வருதா அதான்” என்றான் உள்ளம் நடுங்க…உள்ளுக்குள் மனம் முரண்டு பிடித்தது ‘இப்போ நீ நெனைக்கிறத எல்லாம் கொட்ட போறியா இல்லையா’ கேட்டு பிராண்டியது.

நிச்சயம் முடிந்து மேடையில் பூமிகா “தம்மு எங்க” என்று கேட்க சிரஞ்சீவி
“என்ன இந்த திங்ஸ் தானே, நான் எடுத்துக் கொண்டு போய் வைக்கிறேன்” என்று முன்வந்தான்.

 பூமிகா “இல்ல இல்ல நெத்தில குங்குமம் அதிகமா இருக்கு அத தொடைக்கணும்” எனவும் புவன் “நான் தொடச்சி விடுறேன்” என்று முன்வந்தான். இதை பார்த்துக் கொண்டிருந்த ஷிவானி “அது என்னடா நீ இப்படி ஓடி ஓடி வேலை செய்ற, புவன்  தொடச்சு விடுறேன்ங்குறான் அருண் அண்ணா எங்க தமயந்தி எங்க” என்று கேட்க 

சிரஞ்சீவி “நீ போய் சேர்ல உட்காரு போ எந்த வேலையும் செய்யாத நான் பாத்துக்குறேன்” ஷிவானியையும் விரட்டினான். ஷிவானிக்கு ஓரளவு இவர்களுக்கு நடுவில் நடப்பது புரிந்தது. 

சிரஞ்சீவியை மடக்கி பிடித்து கேட்க ‘ ‘நண்பன் உனக்காக  என்ன செய்வான்? உனக்கு புடிச்ச பொண்ணு உனக்காக ஹோல்ட் பண்ணுவான்… என் நண்பன் எனக்கு பண்ணான் பதிலுக்கு நான் திருப்பி செய்றேன்’ 

‘அடப்பாவிகளா! நான்தான் ஏமாந்துட்டேனா’

சிரஞ்சீவி ‘ச்சச்ச  பேபி நீ ஏமாறலாம் இல்ல யூ ஆர் இன் குட் ஹேண்ட்ஸ்’ என்று அணைத்துக்கொள்ள ஷிவானி அவன் கணத்தில் உரசிக்கொண்டே “இந்த கரடியை என்னவிட்டா யாராலும் மேய்க்க முடியாது ஆமா ” என்றாள்.

அருணுடன் தமயந்தியின் பேச்சு நீண்டுக் கொண்டே சென்றது. 

தமயந்தி “என்னால நம்பவே முடியல வாங்குன கடன் எல்லாம் முடிஞ்சிடுச்சு… அம்மா ரிலாக்ஸ்டா இருக்காங்க… தங்கச்சி எம்டி முடிக்க போறா… யாரோ ஒரு டாக்டர் குடும்பத்து பையன லவ் பண்றேன்னு சொல்றா கல்யாணம் பண்ணி வைக்கணும் அஞ்சு ஆறு வருஷத்துல நம்ம வாழ்க்கை இந்த அளவுக்கு மாறுமான்னு நினைச்சு கூட பாக்கல” என்றாள்

அருணும் ‘என் அப்பா அம்மா நான் சின்ன வயசுல இருக்க போதே பிரிஞ்சிட்டாங்க அண்டு உனக்கே தெரிஞ்சுருக்கும் அருந்ததீ ஃபிலிம் கார்ப்பரேஷன் மதனகோபால் எப்படின்னு… சோ அந்த வீடு எனக்கு நரகம். அந்த நரகத்திலிருந்து வெளியில வர்றதுக்கு ஏபி நார்மல்ல  மாடலிங் செய்தது, என் எம். பி.ஏ கிளாஸ் ரூம் நிறைய உதவிருக்கு’ என்றான். உள்ளுக்குள் ‘நீ நீ மட்டுமே உன்ன நெனச்சு உனக்கு ஏதுவா என் வீடு இருக்கனும் நெனச்சே வேலை பார்த்தேன்’ என்று சொல்லிக்கொண்டான் 

தமயந்தி அவனை  அதிசயமாக பார்த்தவள் கூடவே அவனுடைய சோகமான மனநிலையை  மாற்ற நினைத்தவள் “எங்க கதை டீம்ல பசங்க ஒரு கதை சொன்னாங்க அதுல அம்சமான வில்லன் கேரக்டருக்கு ஆள் தேடிட்டு இருக்காங்க என்ன கேட்டபோ நான் உன்னைத்தான் சொன்னேன். அந்த படம்  ட்ரை பண்ணி பாரு” என்றாள்

அருண் சிரித்தவன் “சரி நடிக்கிறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல ஆனா ப்ரொடக்ஷன் என் கம்பெனியில் தான் இருக்கணும்” என்றான்

தமயந்தியும் சிரித்துக்கொண்டே “இருக்கட்டுமே புரொடக்ஷன் நீயே எடுத்துக்கோ எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்க 

தமயந்தியின் பிஸ்னஸ் நுணுக்கம் அறிந்தவன் “சின்னதா விட்டுக் கொடுத்தா பெருசா ஏதோ இருக்கு… சொல்லுங்க மேடம் என்ன வேணும் திடீர்னு இப்படி தனிஞ்சு போறீங்களே”

“புரொடக்சன் எல்லாம் நீயே பாத்துக்கோ டிஸ்ட்ரிபியூஷன் மட்டும் எனக்கு கொடு அதுவே போதும் அதுலே  லாபம் பார்த்திடுவேன்” என்றாள் தமயந்தி .

சிரித்துக் கொண்டான் அருண்.

சுவாரஸ்யமாக பேச்சு சென்றுகொண்டே இருக்க பேச்சுப் போக்கில் தமயந்தி “எனக்கு ஒரு கனவு அடிக்கடி வரும் அது பொய்யா உண்மையான்னு எனக்கு சொல்லணும்” என்று கேட்டாள். அவனும் சரியென்று சொல்ல அந்த கனவை விவரித்தாள். அவள் அருண் கழுத்தை இழுத்து அவன் கன்னத்தை பிடித்து அவன் கன்னத்தில் முத்தமிட்டளாம். கேட்டதும் அருண் உதட்டை கடித்து சிரித்துக்கொண்டவன் உண்மையாக நடந்தது என்றான்.

சங்கடமாகி போனது தமயந்திக்கு “ இப்படி எல்லாம் செஞ்சிருக்கேனா. அப்ப நீ என்ன ஜோக்கர் போல பார்த்துருக்க தானே இத்தனை நாள்”

அருண் சட்டென தீவிரமாக “நான் உன்னை எப்படி வேணா பார்த்துக்கலாம் ஜோக்கர்ரா மட்டும் நான் என்னைக்குமே உன்னை பார்த்ததில்லை. நீ ஒரு எம்பரர்,வீராங்கனை… உன்ன போல எதுவுமே தெரியாம ஒரு பீல்டுல நுழைஞ்சு அதுல ரொம்ப பெரிய மாற்றம் கொண்டுவரது எல்லாம் சாதாரணம் இல்ல. நான் என்னிக்குமே உன்ன குறைச்சு பார்த்ததே இல்ல தமயந்தி” என்றான் 

அருண் அவள் பெயரை சொன்னவிதம் எதோ செய்ய அவன் முகம் ஏறெடுத்து பார்க்க வெட்கப்பட்டாள். அருணுக்கும் கைகளும பரபரத்தது மனமோ இழுத்து அணைத்துக் கொள்ள ஏங்கி கூத்தாட மனதை அடக்கியவன் “போய் சீக்கிரம் தூங்கு அப்பதான் நாளைக்கு முகூர்த்தத்துக்கு எந்திரிக்க முடியும் ரொம்ப நேரம் ஆயிடுச்சு” என்று முடித்தான்.

 பூமிகா புவன் திருமணம் மனமகிழ்ச்சியுடன் நடந்தேறியது. திருமண வரவேற்பில் பிரபலங்கள், நகரத்தின் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என திரளாக கூடி விழாவை சிறப்பித்தார்கள். 

சிரஞ்சீவி “உன் மனச சொன்னியா இல்லையா…”  என்று பிடுங்கி எடுத்தான்

அருண் “பெருசா எதுவும் பேசலடா  சும்மா காலேஜ் டேஸ் எப்படி இருந்துச்சு ஸ்கூல் டேஸ் எப்படி இருந்துச்சு மட்டும்தான்  பேசினோம்”

சிரஞ்சீவி “ டேய் யப்பா அதெல்லாம் கல்யாணம் முடிச்சு கூட பேசிக்கலாம்டா கல்யாணம் பண்ணலாமான்னு  நேராக கேட்க வேண்டியதுதானே இல்ல சொல்லு பேசாம கடத்தி கூட்டிட்டு போய் தாலி கட்டிலாம்”

சிவானி சிரஞ்சீவி தலையில் அடித்தவள் “எல்லாரையும் உன்ன போலே நினைக்காத” என்றாள். சிரஞ்சீவி “ஆனா யூ சீ… இட் ஒர்க்ஸ் பேபி” என்றான் 

ஷிவானி “அருண் அண்ணா வா நாம நம்ம வீட்டுக்கு கிளம்பலாம் இவன் கூடலாம் முடியாது”

சிரஞ்சீவி “ஹே… நோ நோ நோ” என்று பரபரப்பானான் 

புவன் கிடைத்த நேரத்தில் “எனக்கென்னமோ கல்யாண் பத்தி நீ அவகிட்ட 

சொல்லாம விட்டா பிரச்சனை ஆகும் தோணுது மொத அதை சொல்லு” என்று சொல்லிவிட்டு அவனையே எடுத்துக்காட்டாக சொல்லி புரிய வைக்க முயற்சி செய்தான் “எனக்கு பூமி அவங்க அப்பா கிட்ட என்னைத்தான் கல்யாணம் செய்துப்பேன்னு பேச போனது அதுக்கு அவர் திருந்தலாம்ன்னு போனது, என்கிட்டே அவ ஆறுதல் எதிர்பார்த்தது எல்லாம் தெரியாமலே இருந்தது ரொம்ப கஷ்டமா இருந்தது. கண்டீப்பா தமயந்தி குணத்துக்கு அவ முகத்துக்கு நேர நீ நிலைமையை எடுத்து சொல்றது பெஸ்ட் மச்சான். அதை செய்யாம விட்டுடாத”என்றான்.

போன வாரம் வரை கூடவே  தொன தொனவென்று பேசி சுற்றிக் கொண்டிருந்த நண்பர்கள் இருவரும் சட்டென அவர்களுக்கென வாழக்கை பாதையில் நகரவும் 

அருணுக்குள் சின்னதாய் தனிமை எட்டிப் பார்த்தது. 

தானாக மனம் தமையந்தி பக்கம் சாய்ந்து கொண்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!