Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

தேவை... பாவை பார்வை...

தேவை… பாவை பார்வை – 6

தேவை… பாவை பார்வை – 6

பிரகதீஷின் அறையில் விமல் உள்ளே வந்து அமர்ந்து அவனையே  முறைத்து பார்க்க,

அமர்ந்திருந்த அவனை பிரகதீஷ் ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு, “சொல்லு விமல்… என்ன வேணும்?… நான் இப்போ கொஞ்சம் பிஸி…” என்று சொல்லிவிட்டு கருமமே கண்ணாக தன் வேலையில் முழுக,

“கல்நெஞ்சக்காரன்… ஒருத்தவன் வந்து உக்காந்திருக்கேன்… என்ன விஷயம்னு கேக்காம… அவன் வேலையை பாக்குறான் பாரு…” என்று பிரகதீஷின் காதில் விழுவதற்க்காக சத்தமாக பேச,



Advertisement

“நீ வந்து உக்காந்த உடனே, சார்கிட்ட என்னனு கேக்கணுமோ?… கொஞ்ச நேரம் சும்மா இரு… முடிச்சிட்டு வரேன்…” என்று சொல்லிவிட்டு அவன் வேலையில் மும்மரமாகினான்.

“இவனையெல்லாம் பிரெண்ட்ன்னு வச்சிருக்கேன் பாரு நானு… உங்க கூட நானும் ஜாயின் பண்ணிக்கலாமான்னு இவன் கேக்கும் போது… வேண்டாம்னு சொல்லி அப்போவே கட் பண்ணிருந்தா இப்போ எனக்கு இந்த நிலைமை தேவையா?…” என்று அவனுக்கு அவனே கேட்டுக்கொண்டு, தன் போனை பார்த்துக்கொண்டிருந்தான்.

சரியாக பத்து நிமிடம் சென்று,

Advertisement

“சொல்லுடா… எதுக்கு வந்திருக்க?…” என்று விமலிடம் கேட்க,

Advertisement

“என்கூட மது பேசமாட்டுறா… நான் என்ன சொன்னாலும் நம்ப மாட்டுறா… எல்லாம் உன்னால தான்…” என்றான் முறைப்பாக,

“உன் பெஸ்ட் பிரெண்ட் பேசலைனா, அதுக்கு நான் எப்படி காரணமாவேன் சொல்லு…” என்று கூலாக,

“அடப்பாவி… எவ்வளோ கேசுவலா பேசுற…” என்று வாயை பிளக்க,

Advertisement

“இதை சொல்லத்தான் இப்போ வந்தியா?…” என்று விமலிடம் கேட்க,

“அவ என்ட கேக்குறா… நேத்து வந்த பிரெண்ட்க்காக, இவ்வளோ நாள் உன்கூட இருந்த பிரெண்டை நீ விட்டுட்டன்னு சொல்லுறா… போடா… எல்லாம் உன்னால தான்…” என்று சோகமாக சொல்ல,

“பிரெண்ட்ல்ல என்ன புதுசு?, பழசு?… பிரெண்டுன்னா பிரெண்ட் தான்… இதுல அவ என்கிட்டே பேசமாடுறன்னு வந்து சின்ன பிள்ளை மாறி சொல்லுற…” என்று அவனை திட்ட,

“உன்னைய யாருடா, அன்னைக்கு என்கிட்டே அப்படி பண்ண சொன்னா…” என்று திரும்பி கேட்க,

அவன் சொல்லுவதற்கு பத்தி சொல்லாமல் “அவ பேசுலன்னா என்ன இப்போ?, அதுதான் நான் உங்கிட்ட பேசுறேன்ல…” என்று சொல்லி அவனை பார்க்க,

“போடா…” என்றான் சலிப்பாக,

“சரி… நான் ஒன்னு கேக்குறேன்… நீ பதில்சொல்லு…” என்று கேட்க,

“சொல்லு என்ன பதில் சொல்லணும் நான்?…”

“எதுக்கு உன்கிட்ட பேசமாட்டேன்னு சொன்னா?… ரீசன் கேட்டியா?…” என்று அவன் வினவ,

“எல்லாம் கேட்டாச்சு…” என்று சொல்லிவிட்டு,

“எல்லாம் தெரிஞ்சி தானே பண்ணுன… அப்பறம் எதுக்கு ரீசன் கேக்குறன்னு சொல்லிட்டு போயிட்டா…” என்று மறுபடியும் சொல்லிவிட்டு அவனை பார்த்து,

“நானே எத்தனை தடவை உன்கிட்ட சொல்லு சொல்லுன்னு கேட்டு வாங்குனேன்… அவ எப்படி டக்குனு சொல்லிட்டு போயிட்டா பாரு” என்று வேறு சொல்ல,

“ஹா ஹா… எவ்வளோ நேக்கா சொல்லிருக்கா பாரேன்…” என்று சிரித்து சிலாகித்து பேச,

“அடேய்… நானே நொந்து போயி சொல்லிட்டு இருக்கேன்…” என்று சொல்ல,

“சரி சரி… அவ கடக்குறா விடு…”

“அப்போ அவ என்கிட்டே பேசவே மாட்டாளா?…” என்று கேட்க,

“எனக்கு எப்படி தெரியும்… நீ தானே அவளோட பெஸ்ட் பிரெண்ட்…”

“என்னமோ போடா… மது இங்க ஜாயின் பண்ணதுல இருந்து அவ்வளாவா யார்கிட்டயும் பேசி பார்த்தது இல்லடா… ஒரு ட்ரைனிங் நாங்க மூணு பேரும் அட்டென்ட் பண்ணுனோம்… அதுக்கு அப்பறம் தான் பிரெண்ட்ஸ் ஆனோம்…” என்று அவளிடம் பிரெண்ட் ஆனதை சொல்ல,

“அவ எப்படியும் இப்போதைக்கு பேச மாட்டா உன்கூட…” என்று பிரகதீஷ்  ஆருடம் சொல்ல,

“போடா டேய்… நான் உன் பிரெண்ட்ஷிப்பை இப்போயிருந்து கட் பண்ணுறேன்…” என்று எழுந்து செல்ல போக,

“போறதுக்கு முன்னாடி ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லிட்டு போகவா?…” என்று பிரகதீஷை பார்த்து கேட்க,

“என்ன பஞ்ச் சொல்ல போறியா?…” என்று இவன் திரும்பி வினவ,

“நீ அப்டினே வச்சிக்கோ…” என்று பதிலுரைத்து,

“இவ்வளோ நாளா அவ கூட பிரெண்ட் ஆஹ் இருக்கிறேன்… ஒரு தடவை கூட, என் கணவர் இப்படி சொல்வார், என் புருஷன்னு அப்படி பண்ணுவாருன்னு அவ வாயில இருந்து வந்து நான் கேட்டதே கிடையாது… அப்போ உன்னோட ஜாதகம் எப்படி இருக்குன்னு நீயே பாத்துக்கோ…” என்று அவன் அடிக்க வர்ரதுக்குள் வேகமாக அறையிலிருந்து ஓடிவிட்டான்.

– – – –

“வீக்கெண்ட் என்ன பிளான் மது…” என்று ரேகா கேஃபிடேரியா அமர்ந்து சமோசாவை முழுங்கி கொண்டே கேட்க,

பக்கத்தில் அமர்ந்திருந்த விமலோ, “இப்போ இது ரொம்ப அவசியமான கேள்வி பாரு…” என்று அவளை தீயாய் முறைக்க,

“ஒரு பிளானும் இல்ல ரேகா… எப்போதும் போல அம்மா கூட தான்… அவங்க பிரியப்பட்டா எங்கயாச்சும் அவங்களை கூட்டிட்டு போயிட்டு வருவேன்…” என்று சொல்லி முடித்து,

“நீ என்ன பண்ணலாம்னு இருக்க…” என்று ரேகாவிடம் மது கேட்க,

“நானா… என்ன பண்ணலாம்னு தான் யோசிச்சிட்டே இருக்கேன்…” என்று சலிப்பாக சொல்ல,

அங்கிருந்த விமலை கண்டுக்காமல் இருவரும் கண்டுகொள்ளாமல், அவர்கள் மட்டுமே பேச,

விமலோ இப்போது ஒரு முடிவுடன், “நானும் இங்க தான் இருக்கேன்… உங்களுக்கு தெரியுதா? இல்லையா?…” என்று இடையீட,

மதுவோ அவனை கண்டுகொள்ளாமல், ரேகாவிடம் “உனக்கு பிளான் ஏதும் இல்லனா… நாளைக்கு வீட்டுக்கு வாயேன்…” என்று அவளை அழைக்க,

ரேகா பதில் சொல்ல வரத்துக்குள்,

விமலோ முந்திக்கொண்டு “இங்க பாரு ரேக்ளா… மது என்கிட்ட பேச மாட்டுறான்னு, உங்கிட்ட சொன்னேன்ல… நீயும், நான் அவளை சமாதானம் படுத்துறேன்னு சொல்லிட்டு, இப்போ நான் இங்க உக்காந்திருக்குறது கூட தெரியாம, நீ மட்டும் அவளோட பேசிட்டு இருக்க…” என்று அவளிடம் கடுப்பாகி பேச,

அவளோ, “அதுக்கென்ன இப்போ… நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னைய விட்டுட்டு பேசுவீங்கள்ல, அது மாறி இப்போ என் டைம்…” என்று சொல்ல,

“அடிப்பாவி… எப்படில்லாம் பேசுற நீ?… அதுவும், இதுவும் ஒண்ணா?…” என்று அவளிடம் கேட்டுவிட்டு.

“இங்க பாரு மது, இந்த ரேக்ளாவை…” என்று மதுவிடம் விமல் புகார் வாசிக்க,

“எல்லாம் ஒன்னு தான்… எதுக்கு பேசமாட்டுறான்னு கேட்டதுக்கு, நீ எனக்கு என்ன சொன்ன?… அதை திரும்ப சொல்லு…” என்று அவளும் பேசிவிட்டு,

மதுவிடம் திரும்பி, “இவன் சொல்றதை நீயும் கேளு மது…” என்று அவளிடம் சொல்ல,

மதுவோ அவர்கள் இருவரையும் சுவாரசியமாக பார்க்க,

“என்ன சொன்னேன்?… உண்மையை தானே சொன்னேன்…” என்று சலிக்க,

“அந்த உண்மைதான் சொல்ல சொல்லுறேன்…” என்றால் இவளும் விடாமல்,

“உனக்கு எப்படியும் இப்போ புரியாது… எனக்கே எதுக்கு அவ பேசலன்னு சொல்றன்னு தெரியல… அதுனால, மதுகிட்ட பேச மட்டும் சொல்லுன்னு சொன்னேன்…” என்று சொல்லிவிட்டு அவளை பார்க்க,

அவளும், “புரியும்படி சொல்லாதது உன் தப்பு… பெருசா என்னைய சொல்லவந்துட்டான் இவன்… போடா…” என்று அவனை திட்டிவிட்டு,

“கேட்டியா மது… இவன் சொன்னதை… இவனுக்கே தெரியல… இதுல தெரியாத இவனுக்காக நான் எதுக்கு உனக்கிடா பேச சொல்லி சொல்லணும்?…” என்று அவளிடமும் சொல்லிவிட்டு,

“அதான்….நீதான் இவ்வளோ பேசுறல்ல, அப்போ நீயே அவளை உங்கிட்ட பேச வச்சிக்கோ…” என்று இடக்காக கூற,

மதுவோ இப்போது, விமலை சிரிப்பை அடக்கி கொண்டு பார்க்க,

அவனோ ரேகா சொல்வதை கேட்டு, நெஞ்சில் கைவைத்துக் கொண்டு, “என்னா…..துது நான் புரியும்படி ஆஹ் பேசலையா?…” என்று அதிர்ச்சியாகி மறுபடியும் கேட்க,

“அதுதானே இப்போ சொன்னேன்… எதுக்கு இப்போ அதிர்ச்சியாகி மறுபடியும் கேக்குற?…” என்று எரிச்சலாக பேச,

“ஹா ஹா…ரேகா… நீ சொல்லுறது கரெக்ட் தான்… அவன் உனக்கு புரியுற மாறித்தான் சொல்லணும்… அப்படி சொல்லாதது அவனோட தப்பு தான்…” என்று மது சிரிப்போடு கூற,

“நல்லா கேட்டுக்கோ விம்… மதுவும் அதே தான் சொல்லுறா…” என்று ரேகா, விமலிடம் பேச,

இம்முறை மது, விமலை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ரேகாவிடம் திரும்பி எதையோ சொல்லவர,

விமலோ, “இந்த மது எதுக்கு இப்போ இப்படி என்னைய பாத்தா?… இது சரியில்லையே…” என்று அவள் சொல்ல வருவதில் காதை வைக்க,

ரேகா… உன்கிட்ட விமல் சொன்னானா?,  உன்கிட்ட இன்னும் சொல்லாம அவன் ஒருவேலை பண்ணிட்டு இருக்கான்… அது என்னனா?… உன்னை அவன்….” என்று ஒரு மார்க்கமாக அவள் என்னவோ சொல்லவர,

சேரில் அமர்ந்திருந்த விமலோ, படாரென்று டேபிளின் மேல்ப் படுத்து, மதுவின் கையை பிடித்துக் கொண்டு, “தெய்வமே… உங்க கைய, காலா நினைச்சி கேக்குறேன்… அநியாயமா இந்த சின்ன பையனோட வாழ்க்கையில எரிய இருக்குற விளக்கை அணைச்சிட்டு போய்டாதீங்க… என்ன இருந்தாலும் நீங்க தான் என்னோட பெஸ்ட் பிரெண்ட்…” என்று அவன் டேபிளில் குப்புற படுத்துக்கொண்டு அவளின் கையை பிடித்து வேண்ட,

“அப்போ நான் சொல்லவேண்டாம்ன்னு சொல்லுறியா விமல்?…” என்று அப்பாவியாக கேட்க,

“தெய்வமே… நானே டீல் பண்ணிக்குறேன்… உங்களை இப்ப விட்டா, நீங்க கும்மி அடிச்சிடமாட்டீங்க?…” என்று உஷாராக சொல்ல,

அதற்குள் ரேகாவோ, மது சொல்லவந்த விடயத்தை மறந்து, “டேய் விம் என்ன பண்ணுற?..” என்று இவன் டேபிளின் மேல் பாய்ந்ததை கேட்க,

“இவ ஒருத்தி… ம்… வேண்டுதல்… கொஞ்ச நேரம் இரு…” என்று அவளிடம் பதிலளித்து, மதுவை பார்க்க,

மது ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்க்க,

இரு, ஒரு நிமிஷம் என்று சொல்லிவிட்டு டேபிளில் சம்மணமிட்டு அமர்ந்து, அவளை பார்த்து,

“நீ ஏதாவது வாயை திறந்து சொல்லுறியா என்கிட்ட இப்போவாச்சும்… முன்னாடி தான் எதுவும் சொல்லல… இப்பவும் சொல்லலைன்னா எப்படி?…” என்று கேள்வி கேட்க,

அவளோ, “அப்போ உனக்கு ஒண்ணுமே தெரியாது? அப்படித்தானே?” என்று திரும்பி கேட்க,

“விடு மது… உனக்கு எப்ப சொல்லணும்னு தோணுதோ சொல்லு… எப்படியும் நீ சொல்லப்போறது இல்ல” என்று சொல்லிய பின்பு,

“நான் அவன் இருக்குற பக்கம் கூட இனி போகல போதுமா?…” என்று அடித்துவிட,

“இதை என்னைய நம்ப சொல்லுறியா நீ…” என்று மது கேட்க,

ரேகாவோ, “நான் இதை தான் சொன்னேன்… என்னன்னு புரியுற மாறி பேசி தொலைக்கிறீங்களா லூசுங்களா…” என்று இருவரையும் திட்ட,

“அதுவா ரேக்ளா ரேஸ்…” என்று பேச வர,

“என்ன விமல், பனிஷ்மென்ட் ஆஹ்… டேபிள்ல உக்காந்திருதுக்க…” என்று கேட்டுக்கொண்டே வந்தான் பிரகதீஷ்.

“இது வரைக்கும் நல்லா தான்டா போச்சு…” என்று நினைத்துக்கொண்டே கலவரமாக அவனை பார்க்க,

அவனோ மதுவின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, “எதுக்கு மேன் என்னையவே இப்படி பாக்குற… நீ தானே வர சொன்ன…” என்று விமலை கோர்த்துவிட,

“அடேய்… உன்னயெல்லாம் என்ன செஞ்சா தகும்னே தெரியல ராசா… நான் உன்கூட பேசுன அன்னைலருந்து தாண்டா எனக்கு சனி ஆரம்பிச்சது…” என்று அவனை மனதில் கரித்துக்கொட்டி முறைத்து பார்க்க,

ரேகா, “டேய் விம்… எதுக்கு பிரகதீஷை முறைச்சி பாக்குற?…”

“இவளுக்கு நான் அவளை பாக்குறது மட்டும் தான் தெரியாது…” என்று அவளையும் முறைச்சி பார்க்க,

மதுவும் விமலையே பார்க்க,

“இப்படி எல்லாரும் என்னையே பார்த்தா… நான் என்னத்துக்கு ஆகுறது…” என்று மூவரையும் பார்த்து கடுப்பாக கேட்க,

மதுவோ ஒன்றும் சொல்லாமல், அவ்விடம் விட்டு எழப்போக, அவளை எழ விடாமல் கையைப்பற்றி உக்கார வைத்து,

அவளிடம் மெதுவாக, “இப்போ நீ எழுந்து போயி தேவையில்லாம சீன் ஆக்காத சொல்லிட்டேன்…” என்று சொல்ல,

அவன் சொல்லியதை கேட்டுவிட்டு அவனை பார்த்து முறைக்க,

“அதானே பாத்தேன்… என்னடா இன்னும் முறைக்கலையேன்னு… நல்லா முறைச்சி பாரு…” என்றும் சொல்லிவிட்டு மற்றவர்களிடம் கவனம் வைத்தான்.

விமலோ அப்பாவியாய் அவர்களை பார்க்க,

“அப்பறம் ரேகா… இன்னைக்கு எதுவும் ஆஃபர் பண்ணலையா எனக்கு?…” என்று பிரகதீஷ் கேட்க,

“என்ன வேணும் லீட்?… நாங்க முடிச்சாச்சு…” என்று சொல்ல,

“எனக்கு ஒரு காபி மட்டும் ப்ளீஸ்…” என்று அவளிடம் சொல்ல,

“ச்ச… அதுலாம் ஒன்னும் ப்ராப்லம் இல்ல லீட்…” என்று அவள் வாங்க செல்ல,

“ரேக்ளா… நில்லு நானும் வரேன்…” என்று விமலும் டேபிலிருந்து குதித்து அவலுடன் சென்றான்.

அவர்கள் சென்றவுடன், “இப்போ எதுக்கு நீ சீன் போடுற?… இது ஆபீஸ்… உனக்கு நியாபகமிருக்கட்டும்…”

மது அவனை கோவமாய் பார்க்க,

“நீ என்னைய பாக்குறது இருக்கட்டும்… நாம பேசணும்… உனக்கு எப்போ டைம் இருக்குனு, இன்னைக்கு நைட் முழுக்க யோசிச்சி, நாளைக்கு காலைல எப்போ மீட் பண்ணலாம்னு சொல்லு… நீ சொல்லலைன்னா, நான் சொல்லுவேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பாக்காமல் எழுந்து சென்றான்.

பார்வை வீசும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!