Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் – 29

அத்தியாயம்  – 29

அகிலன் ராமசந்திரனின் வீட்டுக்கு சென்று அனைவரிடமும் அனுவை பார்த்ததை பற்றிக் கூறினான்.பின் அவன் ரெகார்ட் செய்ததை போட்டுக் காட்டினான். அதை கேட்டு அனைவருமே வருத்தம் அடைந்தனர்.

“மாமா நாம அனுவை அவன்கிட்ட அனுப்பியிருக்க கூடாது மாமா “

 



Advertisement

“நீங்க எதையாவது பேசி அனுவை அவன விட்டு வர வச்சிருக்கணும், எப்படியோ போறான்னு விட்டுருக்க கூடாது மாமா. நாம இவளோ பேரு அவளுக்கு சொந்தம்னு இருக்கும் போது யாருமே இல்லாத அனாதை மாதிரி பஸ் ஸ்டாப்ல உக்காந்து அழுதுட்டு இருந்தா நம்ம அனு “

 

“அவ தப்பு பண்ணிட்டா தான் நான் இல்லனு சொல்லல என்ன தான் இருந்தாலும் அவ நம்ம பொண்ணு நாம அவகிட்ட பேசி அவனுக்கு டிவோர்ஸ் தர வச்சிருக்கலாம், ஆன நீங்க அவனுக்கே மறுபடியும் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்க “

Advertisement

 

Advertisement

“அந்த கதிரவன் மனுஷனே இல்லை மாமா,அனுவை அவ வீட்டுக்கு விட போயிருந்தேன். நாங்க போன கொஞ்ச நேரத்துலயே அவன் வீட்டுக்கு வந்துட்டான், வந்ததும் அனுவை என் கண்ணு முன்னாடியே அடிக்க ஆரம்பிச்சிட்டான் மாமா.

 

“நான் ஏன்டா இப்படி அடிக்குறானு கேட்டதுக்கு என் பொண்டாட்டிய நான் அடிக்குறேன் நீ யாருடா கேக்கணு சொல்லி என்னையும் வீட்டை விட்டு வெளிய அனுப்பிட்டான்”. என்னால அனு அங்க கஷ்ட படுறதா பாக்க முடியல மாமா என்று கூறி அழுதான் அகிலன்.

Advertisement

 

 

(அகிலனுக்கு அவன் காதலை விட அனுவின் சந்தோசமே முக்கியமாக எண்ணினான், அனு கதிருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து இருந்தால், கதிர் அனுவை அகிலை விட அன்பாகவும் பாசமாகவும் பார்த்து இருந்தால், கண்டிப்பாக அகிலன் அனுவை விட்டு ஒதுங்கி போய் இருப்பான் எங்கிருந்தாலும் வாழ்க என்று கூறி, ஆனால் இங்கு நடந்தது வேறாக இருக்கவே அனுவை கதிரிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று நினைத்தான் ).

 

“அகில் அழாதடா அவன் எங்க முன்னாடி வச்சிக் கூட அனுவை அடிச்சிருக்கடா, நாங்க ஏன் அடிக்குறானு கேட்டதுக்கும் என் பொண்டாட்டி நான் அடிக்குறேனு தெனாவட்டா சொல்லுறன்டா ” என்றான் கார்த்திக்.

 

“மாமா இப்படியே போன நம்ம அனுவை அடிச்சே கொன்னாலும் கொன்னுருவான் மாமா, எப்படியாவது அனுவை அவன் கிட்ட இருந்து காப்பாத்துங்க மாமா” என்று கூறி அழுதான்.

 

“என்ன என்னடா பண்ண சொல்லுற, அவளா தானடா அவன் வேணுன்னு சொல்லி போன, இப்போ இப்படி கஷ்ட படுறா ” என்றார் ராமசந்திரன் வேதனையுடன் 

 

“நீங்க அனு கிட்ட பேசுங்க மாமா, அவனை விட்டு வர சொல்லுங்க மாமா அனு உங்க பேச்சை கண்டிப்பா கேப்பா மாமா, காலைல அவ பேசுனது எல்லாம் கேட்டிங்கள “

 

“அனுவை கீதா வளைகாப்புக்கு வர சொல்லுறேன், நீங்க அவ கிட்ட பேசுங்க மாமா ப்ளீஸ் மாமா ” என்றான் அகில்.

 

“அனு வரட்டும் அகில், நான் கண்டிப்பா அவ கிட்ட பேசுறேன், அதுக்கு மேல அவ தலையெழுத்து படித்தான் நடக்கும்”.

 

“உன் அம்மா கிட்டயும் சொன்னே உன் அப்பாவை கல்யாணம் பண்ண வேண்டான்னு என் பேச்சை கேக்காம கல்யாணம் பண்ணி எவளோ கஷ்ட பட முடியுமா அவ்வளவையும் பட்டுட்டா, இப்போ அனு அவளும் கஷ்ட படுற “என்றார் ராமசந்திரன் கண்ணீருடன்.

 

“என் அம்மாக்கு ஆன மாதிரி நான் அனுக்கு ஆக விடமாட்டேன் மாமா ” என்றான் அகில்.

 

மறுநாள் காலை விடிந்ததில் இருந்து அனு கதிரிடம் பேசவே இல்லை, அவனும் எவ்வளவோ பேச முயற்சிதான் அனு அவனை திரும்பிக் கூட பார்க்க வில்லை.

“ரஞ்சு சாப்பிட வாடா நேத்து நைட் கூட நீ சாப்பிடவே இல்லை வா போய் சாப்பிடலாம் “என்றான்.

 

“எனக்கு வேண்டாம் பசிக்கல “

 

“என் மேல உள்ள கோவத்தை சாப்பாட்டுல காட்டாதமா ப்ளீஸ் வா, நான் நேத்து காலைல சாப்பிட்டது ரொம்ப பசிக்குது நீ இப்போ வரல நானும் சாப்பிட மாட்டேன் “என்றான் கதிர்.

 

கதிர் பசிக்குது என்றதுமே அனுவின் மனம் இலகி விட்டது. நேராக சென்று கதிருக்கு உணவை எடுத்து வைத்து விட்டு அவளும் உன்ன ஆரம்பித்தால் அப்பொழுது கதிர் உணவை எடுத்து அனுவிற்கு ஊட்ட அனு அதை வாங்க மறுத்தால் “ப்ளீஸ் செல்லம், சாப்பிடுடா நான் பண்ணது தப்பு தான் மன்னிச்சிரு “என்றான். அனுவும் அவனை மன்னித்து கதிர் ஊட்டி விட உண்டு முடித்தால்.

 

இருவரும் சந்தோசமாக இருப்பதை பார்த்த வடிவு, அனுவின் மனதை எப்படியாவது மாற்றி இங்கிருந்து அனுப்பி விட வேண்டும் என்று நினைத்து சுரேஷ்க்கு கால் செய்து நேற்று எடுத்த வீடியோவை பார்க்க வருவதாக கூறினார்.

 

அனுவும் அகிலனும் பேசும் வீடியோவில் ஒரு சில எடிட்டிங் வேலைகளை செய்ய வைத்தார். மேலும் அனு அகில் கட்டி பிடித்து இருப்பது போல் போட்டோ களையும் எடுத்துக் கொண்டார்.

 

“சுரேஷ் நீ அனு அகிலன் இரண்டு பேரையும் பின் தொடர்ந்து போய் போட்டோ வீடியோ எடுத்து வச்சிக்கோ நான் சொல்லுற அப்போ இதை கதிரவன் விட்டுக்கு அனுப்பி வச்சிரு “என்றார் வடிவு.

 

வடிவும் வேலைக்காரி சுமதியும் பேசிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டு அனு ஹாலுக்கு வந்தாள். அனு வந்ததை கவனிக்காதது போல் வடிவு சுமதியிடம் “சுமதி எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஒருத்திய அவ புருஷன் வீட்டை விட்டு வெளிய போகவே விடுறது இல்லையாம், அப்படி போக வேண்டி வந்தாலும் இவனும் கூடவே போறானாம் 

எதுனால அப்படி பண்ணுறான் சுமதி உனக்கு ஏதாவது தோணுதா “

 

“இதுல தோணுறதுக்கு என்ன அக்கா இருக்கு பொண்டாட்டிய வெளிய விட்டா எங்க அவ வேற எவன் கூடயாது ஓடி போயிருவாளோ நெனச்சி தான் வீட்டுக்குள்ளயே பூட்டி வச்சிருக்குறான் “

 

“அப்போ அந்த ஆளு அந்த பொண்ணை சந்தேகப் படுறானு சொல்லுறைய”

 

“ஆமா அக்கா “

 

“அன்னைக்கு ஒரு நாள் அந்த பொண்ணு ஒரு கல்யாண வீட்டுக்கு போய்ட்டு வர கொஞ்ச நேரம் ஆகிருச்சி அதுக்குள்ள அந்த பொண்ணு யாரு கூடயோ ஓடி போய்ட்டானு நினைச்சி ஊரு முழுக்க தேடிட்டு வாரான் அந்த பொண்ணு வீட்டுக்கு வந்ததும் அவளை அடிச்சி எங்கடி ஊர் சுத்திட்டு வாரன்னு சொல்லி அந்த பொண்ண பத்தி தப்பு தப்பா பேசுறான் “

 

“இதுக்கும் அந்த பொண்ணும் அந்த பையனும் காதல் கல்யாணம் பண்ணவங்க, கல்யாணம் ஆகி கூட நாலு மாசம் தான் ஆச்சு “

 

“ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள்னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க, மோகம் போனதும் அவனுக்கு அந்த பொண்ணு மேல சந்தேகம் வந்துருச்சி போல அக்கா “என்றாள் சுமதி.

 

“ஏன் சுமதி உன் புருஷன் உன்ன சந்தேகப்பட்டு அடிச்சா, திட்டுனா என்ன பண்ணுவ “என்றாள் வடிவு.

 

“உன்ன மாதிரி சந்தேக படுற புருஷன் கூட வாழுறதுக்கு நான் தனியாவே வாழ்ந்துட்டு போவேன்னு சொல்லி அவன் கட்டுன தாலிய கழட்டி அவன் முகத்துல எரிஞ்சிட்டு போயிட்டே இருப்பேன் “

 

“சபாஷ் சுமதி, பொண்ணுன்னு இருந்த உன்ன மாதிரி தான் இருக்கனும். ஆன நான் சொன்ன பொண்ணு அந்த பையனை விட்டு போகாம அவன் கூடவே தான் சுமதி இருக்குற “

 

“நிஜமாவா அக்கா சொல்லுற, அந்த பொண்ணுக்கு அவன் புருஷன் மேல அவளோ பாசமா “

 

“பாசம்ல ஏதுவும் இல்ல சுமதி அந்த பையன் கிட்ட நிறைய சொத்து இருக்கு, சொத்துக்கு ஆசை பட்டு இப்படி மானம் கேட்ட வாழ்க்கை வாழ்ந்துட்டு இருக்குற அந்த பொண்ணு”என்றாள் வடிவு 

 

“மானத்தை விட சொத்து முக்கியமா போச்சா அந்த பொண்ணு, அய்யே இப்படியுமா பொண்ணுங்க இருக்காங்க “என்றாள் சுமதி.

 

“அந்த பொண்ணு எப்படியோ பொழச்சிட்டு போகட்டும் நமக்கு என்ன வா போய் வேலைய பார்ப்போம் ” என்று கூறி அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர்.

 

முதல் முறையாக அனு அழுவதை விட்டுவிட்டு யோசிக்க ஆரம்பித்தால், கொஞ்ச நாட்களாக கதிர் அவளிடம் நடந்துக் கொள்ளும் முறை மாறி இருக்கிறது.எப்பொழுதும் அவள் மீது கோவப்பட்டு அடித்து கொண்டே தான் இருக்கிறான். மேலும் இவளை வெளியே அனுப்பாமல் இருப்பது எதனால் ஒரு வேலை வடிவு சித்தி சொல்லுவது போல் சந்தேகப் படுறான என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.

 

அனு போன் அடிக்கும் சத்தம் கேட்டு அதை எடுத்தால் “ஹலோ அத்தான் சொல்லுங்க அத்தான் “

 

“குட்டிமா நான் மாமா கிட்ட பேசிட்டேன்டா, நீ வளைகாப்புக்கு வா அத்தை, மாமா எல்லாரும் உன்கிட்ட பேசுவாங்க “

 

“நிஜமாவா அத்தான் சொல்லுறீங்க அப்பா அம்மாக்கு என்மேல இருந்த கோவம் போயிருச்சா “

 

“அவங்களுக்கு உன் மேல கோவம்ல இல்லடா,வருத்தம் மட்டும் தான் இருக்கு அது மாற கொஞ்சம் நாள் ஆகும் நீ அடிக்கடி அவங்க கிட்ட பேசிட்டு இரு காலப்போக்குல எல்லாத்தையும் மறந்துருவாங்க சரியா “

 

“நான் வந்தா யாரும் என்ன திட்டமாட்டாங்கள, நான் வந்தா வள்ளிப்பாட்டி ஏதாவது சொல்லுவாங்க அத்தான் “என்றாள் அனு சோகமாக.

 

“அனு நான் இருக்கேன்ல டா, நான் பாத்துக்குறேன் உன்ன யாரும் ஏதுவும் சொல்லாம, நீ விசேஷத்துக்கு கண்டிப்பா வந்துருடா “என்றான் அகில்.

 

அகிலனிடம் பேசியது அனுவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த சந்தோசத்துடனே கீதாவிற்கு புடவை நகை அனைத்தையும் வாங்க வேண்டும் என்று எண்ணி லட்சுமியிடம் கடைக்கு போய்ட்டு வருதாக கூறி ஸ்கூடியை எடுத்துக் கொண்டு சென்றாள்.

 

அனுவின் மலர்ந்த முகத்தை பார்த்து லட்சுமிக்கு கூட மகிழ்ச்சியாக இருந்தது.”கடவுளே என் தங்கம் எப்பவும் சந்தோசமா இருக்கனும்பா ” என்று வேண்டிக் கொண்டார்.

 

கதிரவன் நகை கடையில் வேலையை முடித்து விட்டு ஜவுளிக்கடை கடைக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது அவன் அடியாள் ஒருவன் போன் செய்து அவனுக்கு போன் செய்து “அண்ணே அண்ணிய தூக்கிட்டு போய் கடைய எழுதி வாங்குறதுக்கு பெருமாள் பிளான் பண்ணிட்டான் அண்ணே, எங்க எப்படி தூக்க போறான்னு மட்டும் தெரியல”

 

“இரண்டு மூணு நாளைக்கு அண்ணிய வீட்டை விட்டு வெளிய வரமா பாத்துக்கோங்க “

 

“இன்னும் ஒரு வாரத்துக்குள்ள பெருமாள் சாமி பண்ண தப்பான வேலை எல்லாத்தையும் டிவி பேப்பர்னு எல்லாத்துலையும் போட்டு விட்டுருவோம்னே அது வரைக்கும் அண்ணி அவங்க கைல மாட்டாம பாத்துக்கோங்க “

 

“அனு வெளிய வரமா நான் பாத்துகுறேன் நீங்க பெருமாளுக்கு எதிரான ஆதாரத்தை மட்டும் வேகாம சேகரிங்க, அவன் எப்போ என் அனுவ என்ன பண்ணு வானோனு பயந்து பயந்து வாழ முடியலடா “என்று கூறிவிட்டு போன் வைத்து விட்டான்.

 

பின் விட்டுக்கு போன் செய்து அனு என்ன செய்துக் கொண்டிருக்கிறாள் என்று கேட்டான், வடிவு அனு கடைக்கு போயிருப்பதாக கூறினார்.

எங்கே பெருமாள் அனுவை கடத்தி விடுவானோ என்ற பயத்தை விட யாரைக் கேட்டு இவள் வெளியே சென்றாள் என்ற கோவமே அதிகமா இருந்தது .அந்த கோவத்துடனே கதிர் ஜவுளிக்கடைக்கு சென்றான்.

 

அங்கு அனு மிகவும் மகிழ்ச்சியுடன் கீதாவிற்கு பட்டுப்புடவையை எடுத்துக் கொண்டிருந்தாள். அதே கடையில் அனுவின் உறவுக்காரா பெண்கள் புடவை வாங்கிக் கொண்டிருந்தனர் அனு அவர்களை பார்க்கவில்லை ஆனால் அவர்கள் இவளை பார்த்து விட்டனர் இருந்தும் பேச வில்லை.

 

கடையில் வேலை செய்யும் பெண்களுடன் அனு பேசிக் கொண்டே புடவையை பார்த்துக் கொண்டிருந்தால். கதிர் வேகமா கடைக்குள் வந்து அனுவின் அருகில் சென்று அவள் தோள்த் தொட்டு திருப்பி ஓங்கி ஒரு அறை விட்டான். மதிய நேரம் என்பதால் கடையில் கூட்டம் அதிகம் இல்லை.

 

திடீரென்று விழுந்த அடியாள் அனு அதிர்ச்சி அடைந்து விட்டாள். “உன்ன வீட்டை விட்டு வெளிய வர கூடாதுனு சொல்லிருக்கேன்ல ஏன்டி வந்த, யாரை கேட்டு வந்த, உன்னால ஒழுங்கா வீட்டுக்குள்ள இருக்க முடியாத எப்போ பார்த்தாலும் வெளிய சுத்திட்டே இருக்குற “

 

“நீ எங்க போற, வாரன்னு பார்த்துட்டே இருக்குறது தான் என் வேலையா, கொஞ்ச நேரமாச்சி என்ன நிம்மதியா இருக்க விடுறியாடி நீ “

 

“சொல்லுடி ஏன்டி இங்க வந்த ” என்று அனுவின் தோள்களை பிடித்து உளுக்கினான்.கடையில் இருந்த அனைவரும் இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

அனுவிற்கு மிகவும் அவமானமாக இருந்தது. தோளில் இருந்து கதிரின் கைகளை தட்டிவிட்டு, கண்களால் கடையை சுற்றி காட்டினால், அதன் பின்தான் கதிருக்கு தான் கடையில் இருக்கிறோம் என்ற உணர்வே வந்தது. போய் கார்ல ஏறுடி என்று அனுவிற்கு மட்டும் கேட்குமாறு கோபத்துடன் சொன்னான்.

அனு அழுதுக் கொண்டே அங்கிருந்து ஓடி சென்று காரில் ஏறி அமர்ந்து கொண்டாள். வீட்டிற்கு சென்றதும் அனு அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள்.

கதிர் ஹாலிலேயே அமர்ந்து இருந்தார். “தம்பி என்னடா ஆச்சு எதுக்கு ரஞ்சனி அழுதுட்டு போறா என்னடா பண்ண அவளை “என்று லட்சுமி கேட்டுக் கொண்டிருக்கும் போதே.

“கதிரவா “என்று விட்டே அதிரும் அளவுக்கு கத்திக் கொண்டே அங்கு வந்தார் வேலுசாமி.அவரின் குரல் கேட்டு அறையில் இருந்த அனு கூட வெளியே வந்து விட்டாள்.

“எதுக்குடா ரஞ்சனிய கடையில அவளோ பேரு முன்னாடியும் வச்சி அடிச்ச “என்றார் வேலுசாமி.

“அவ எதுக்கு என்கிட்ட சொல்லாம கடைக்கு வந்ததா “

“உன்கிட்ட சொல்லாம வந்தா அவளை அடிப்பியா, அவ என்ன உன் அடிமையா எங்க போனாலும் வந்தாலும் சொல்லிட்டு போக”என்றார் வேலுசாமி விம்பாக.

“ஆமா அவ என் அடிமை தான், நான் தான் அவளை வெளியே போக கூடாதுனு சொல்லிருக்கேன்ல அதையும் மீறி அவ ஏன் வெளிய போனா எனக்கு தெரிஞ்சே ஆகணும் சொல்ல சொல்லுங்க “

கதிர் அனுவை அடிமை என்று சொன்னதும் அனு மனதளவில் மிகவும் துவண்டு போனால், இருந்தும் கதிர் கேட்டக் கேள்விக்கு பதில் அளித்தால் “மாமா இரண்டு நாள் கழிச்சி கீதா அண்ணிக்கு வளைகாப்பு வச்சிருக்காங்க, நான் இங்க வந்த அப்பறம் ஏன் வீட்டுல வர முதல் விசேஷம் அதுனால அண்ணிக்கு புடவை நகை ஏதாவது வாங்கிலாம்னு தான் கடைக்கு போனேன் “என்றாள் அனு கண்ணீரை துடைத்துக் கொண்டே.

“விசேஷத்துக்கு உன்ன யாருடி கூப்புடாங்க, தேவை இல்லாம போய் அசிங்கப் பட்டு வராத “

“அகில் அத்தான் கூப்புட்டாங்க, அதான் போறேன் “

“நீ எந்த விசேஷத்துக்கும் போக வேண்டாம்,இந்த வீட்டை விட்டு என்கிட்ட சொல்லாம எங்கையும் நீ போக கூடாது புரிஞ்சாத “

“நான் விசேஷத்துக்கு போக தான் போறேன் “என்றாள் அனு கோவத்துடன்.

” விசேஷத்துக்கு போ, போய்ட்டு இங்க திரும்ப வராத, அங்கையே அப்படியே இருந்துக்கோ “என்றான் கதிர். அனு கதிரை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.

“போதும் நிறுத்துடா நீ பாட்டுக்கு பேசிட்டே போற, முதல்ல நீ கடைல வச்சி அனுவை அடிச்சிருக்க கூடாது டா. இனிமேல் அங்க வேலை செய்யுறவங்க அவளை எப்படிடா மதிப்பாங்க “

“அந்த கடை திறப்புவிழா அன்னைக்கு அந்த பொண்ண எவளோ மரியாதை யோட கூட்டிடு வந்தா, இன்னைக்கு அது அதனை கெடுத்து அந்த பொண்ண அசிங்க படுத்திட்டு வந்துருக்குற கதிரவா நீ “

“உனக்கு கல்யாணம் ஆகி முழுசா ஆறு மாசம் ஆகல அதுக்குள்ள அந்த பொண்ணு மேல இருந்த காதல் காணாம போச்சாடா”

“அந்த பொண்ணை அடிகிறதும், திட்டுறதும், மரியாதை இல்லாம நடத்துறதும் பாக்க நல்லவாடா இருக்கு, உன் கூட வாழனுன்னு அவ அம்மா அப்பாவை எல்லாம் விட்டுட்டு வந்தவடா அந்த பொண்ணு “

“ஏன்டா உன் கூட வந்தோம்னு நினைக்க வச்சிறாத “என்று கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

கதிர் அனுவிடம் “நீ விசேஷத்துக்கு போக கூடாது, போனா திரும்பி இங்க வரக் கூடாது, அப்பறம் உன் இஷ்டம் ” என்று கூறிவிட்டு (செல்லம் போயிராதடி அங்க ப்ளீஸ், இன்னும் கொஞ்ச நாள் தான் அந்த பெருமாளை ஒன்னும்இல்லாம பண்ணிட்டு நானே உன்ன உன் வீட்டுக்கு கூட்டிடு போறேன் டி )என்று மனதிற்குள் கூறிக் கொண்டிருந்தான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!